Saturday, June 10, 2017

பகவான் நாராயணன் ஆத்மஞான உபதேசம் - ஶ்ரீமத்பாகவத புராணம்

நாராயண பகவானின் உபதேசம்

நானே எல்லா ஜீவராசிகளுக்கும், அனுபவிக்கப்படும் பொருளாகவும், அனுபவிக்கும் ஜீவனாகவும் இருக்கின்றேன். அவைகளை பிரகாசப்படுத்துபவராகவும், அவைகளுக்கு காரணமாகவும் இருக்கிறேன்.  நானே சப்த பிரம்மனாகவும், அதை உண்டாக்கும் காரண பிரம்மமாகவும் இருக்கின்றேன். 

என்னிடத்திலே போக்கியமும், போக்தாவாக இருக்கும் தன்மையும் அறியாமையால் கருதப்படுவதாக புரிந்து கொள்ள வேண்டும்.

எவ்விதம் தூங்கும் மனிதன் தன்னிடத்திலே பற்பல உலகத்திலுள்ள பொருட்களை பார்க்கின்றானோ, அனுபவிக்கின்றானோ அவனே விழித்தவுடன் தன்னை உறங்கியவனாக கருதுகிறான்.

இவ்வாறு கனவு, விழிப்புநிலை இவையிரண்டிலும் ஜீவன் அனுபவிப்பவைகள் எல்லாம் புத்தியினுடைய எண்ணங்கள். இவைகள் ஆத்மாவினுடையதாக மாயையின் சக்தியால கற்பணையாக எண்ணப்படுகிற்து. இந்த உண்மையை அறிந்து கொண்டு அவைகளை பார்த்துக் கொண்டிருக்கும் சாட்சியாக இருக்கும் ஆத்மாவை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவிக்கும் சுகமானது ப்ரமாத்மாவாகிய, பிரம்மமான நானே என்று என்னை அறிந்துக் கொள்.

விழிப்புநிலை, உறக்கநிலை அனுபவங்களை அறிய வைப்பது அந்த பரப்பிரம்மம்தான் என்பதை அறிந்து கொள்வாயாக.

ஆத்ம ஞானத்தை அடைய உதவும் மனிதப்பிறவியில் அதை அறியாத மனிதனால் எதிலும் சாந்தியை, நிலையான மன அமைதியை அடைய முடியாது


என்னுடைய பக்தனாக இருந்து கொண்டு ஆத்மஞானத்தை அடைந்து நிலையான சுகத்தை அடைவாயாக.  ஞானயோகத்தை பின்பற்றுபவர்கள் ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை அறிந்துணர்ந்து நிலையான சுகத்தை அடையலாம்.

No comments:

மூதுரை

மூதுரை கடவுள் வாழ்த்து வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள் நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையா...