பகவான் ரிஷபதேவரின்
(நாராயண அவதாரம்) உபதேசம்
·
பெரியோர்களுக்கு
சேவை செய்பவன், அமைதியான சஞ்சலமற்ற மனதை உடையவன், ராக-துவேஷம் இல்லாதவன்,
எல்லோரிடமும் சமபாவனையோடு இருப்பவனும், எல்லோருக்கும் நன்மையை நினைப்பவன், தர்ம
வழியில் நடப்பவனும், இத்தகைய குணங்களை இயல்பாக உடையவனே பெரியோனாக கருதப்படுவான்
·
முக்கியமாக
யார் உலகில் சரீன போஷனை சம்பந்தமான பேச்சுக்களையுடைய மக்களிடத்திலும், மனைவி,
மக்கள், வீடு, நிலம் போன்றவைகளிலும் பற்றற்றவனாக இருந்து கொண்டும்,
உடலாரோக்கியத்திற்கு தேவையானவற்றை மட்டும் வைத்துக் கொண்டு சர்வேஸ்வரனான
என்னிடத்தில் செலுத்தும் அன்பையே, பக்தியையே சிறந்த புருஷார்த்தமாக
நினைக்கிறார்களோ அவர்களே பெரியோர்கள்
·
எவ்வளவு
காலம் ஆத்ம தத்துவ விசாரம் செய்து அதை அடைய முயற்சிக்கவில்லையோ அவ்வளவு காலம்
அறியாமையால் உண்டான தேஹேந்திரியங்களில் ஆத்மா என்ற தவறான அறிவால் அதை
அடையமுடியாமல் போய்விடுகிறது. எவ்வளவு
காலம் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றானோ அவ்வளவு காலம் செயல் செய்வதையே
இயல்பாக கொண்டுவிடுகிறான். இதனால் சரீர
பந்தம் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது.
·
எவ்வளவு
காலம் வாசுதேவனாகிய என்னிடத்தில் பக்தி ஏற்படவில்லையோ அவ்வளவு காலம் சரீரம்
எடுப்பதிலிருந்து விடுபட மாட்டான்.
சம்சாரத்திலே உழன்று கொண்டு இருப்பான்
·
மக்களுக்கு,
வீடு, நிலம், மனைவி, கணவன், மக்கள், உறவினர்கள், செல்வம் இவைகளின் நிமித்தமாக
நான், என்னுடையது என்று மதிமயக்கம் ஏற்படுகிறது
·
எப்பொழுது
கர்மாக்களால் நன்றாக் கட்டப்பட்ட இருதய முடிச்சுக்கள் அவிழ்க்கப்படுகிறதோ, அப்போது
அனர்த்த காரணமான அகங்காரத்தை விட்டுவிட்டு ஜீவன் முக்தியை அடைகிறான்.
·
குருவிடத்திலும்,
என்னிடத்திலும் கொண்ட அன்பினாலும், செய்கின்ற சேவையாலும், விஷய போகத்தில் உள்ள
ஆசைகளை நீக்குவதாலும் சுக-துக்கம் போன்ற இருமைகளை சகித்துக் கொள்ளும் சக்தியாலும்
பிறவியெடுப்பதனால் வெறும் துக்கம்தான், சம்சாரம்தான் என்பதை அறிவதாலும்,
ஆத்ம-அனாத்மா இவைகளை பிரித்தறியும் விவேகத்தினாலும், விரதம், உபவாசம், ஆகார நியமம்
போன்ற தவங்களை மேற்கொள்வதாலும், காம்யமாக செய்கின்ற கர்மங்களை விட்டுவிட்டு, நித்ய
கர்மங்களை ஈஸ்வர அர்ப்பண புத்தியோடு செய்வதாலும், எப்பொழுது என் அவதாரக் கதைகளைக் கேட்பதாலும்,
என் பக்தர்களின் ஸத் சங்கத்தினாலும், என் குணங்களைப் போற்றிபாடுவதாலும், எல்லா உயிர்களிடத்திலும்
பகையுணர்வு இல்லாமலும், சமமாக பாவிப்பதாலும், மன அமைதியுடன் இருப்பதாலும், நான், என்னுடையது
என்ற அகங்காரம் நிங்குவதாலும், ஆத்மாவைப் பற்றிய வேதாந்த விசாரத்தை செய்கின்ற ஞானயோகத்தினாலும்,
மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருப்பதாலும், பிராணாயாமத்தாலும், தாரணையாலும், தியானத்தாலும்,
பிராணன், மனம், புத்தியை முறையே நன்கு வசப்படுத்தி வைத்து இருப்பதாலும், பிரம்மச்சர்யத்தை
நன்கு கடைப்பிடிப்பதாலும், எப்பொழுதும் கவனமாக செய்ய வேண்டிய செயல்களை முழு கவனத்துடன்
செய்வதாலும், வீண்வார்த்தைகளை பேசாமல் இருப்பதாலும், என் ஸ்வரூபத்தை அறியக்கூடிய ஆத்மஞானயோகத்தை
நன்றாக கடைப்பிடித்து அடைந்த அறிவாலும், அதேசமயம் பக்தியோகத்தினால் பகவானையும் எப்பொழுதும்
தியானம் செய்வதாலும் சம்சார காரணத்தை நீக்கிவிடலாம்
No comments:
Post a Comment