Friday, June 30, 2017

பகவான் நாராயணன் ப்ருது மகாராஜாவிற்கு அருளிய உபதேசம்

பகவான் நாராயணன் ப்ருது மகாராஜாவிற்கு அருளிய உபதேசம்

மற்றப்பற்றுக்களை விட்டுவிட்டு ப்ருதுசரித த்தை நாள்தோறும் அன்புடன் கேட்கின்றவனும், சொல்கின்றவனும், பகவானிடம் மிகுந்த ஈடுபாட்டை அடைகிறான்.

v  அரசனே! உலகில் அறிவாளிகளும், ஸாதுக்கள் போன்ற மேலான மனிதர்களும் எந்தப் பிராணிகளிடத்திலும் பகைக் கொள்ள மாட்டார்கள்.  ஏனெனில் இந்த உடலானது ஜீவனல்ல என்று நன்கு உணர்ந்தவர்கள்
v  ஆகையால் இந்த உடலை அறியாமை, ஆசை, செயல் இவைகளால் உருவக்கப்பட்டு இருப்பதாக உணர்ந்த அறிவாளிகள் தங்கள் உடலின் மீது பற்றுதலே கொண்டு இருக்க மாட்டார்கள்.
v  இந்த உடலில் பற்றற்றவன் அதனால் உண்டாக்கப்பட்ட வீடு, மனைவி, மக்கள், செல்வம் இவைகளில் என்னுடையது என்ற அபிமானம் கொண்டிருக்க மாட்டார்கள்.
v  ஆத்மா ஒன்றாகவும், பரிசுத்தமானதாகவும், தானே விளங்கிக் கொண்டிருப்பதாகவும், குணங்களற்றதாகவும் ஆனால் அதேசமயம் அவைகளுக்கு ஆதாரமாகவும், எங்கும் வியாபித்திருப்பதும், மறைவற்றதாகவும், சாட்சி ஸ்வரூபமாகவும், உருவமற்றதாகவும், உடலைக் காட்டிலும் வேறானதாகவும் இருக்கிறது
v  எந்த மனிதன் இந்த ஆத்மாவை தானேதான் என்று அறிகிறானோ அவன் உடலுக்கு வரும் மாற்றங்களுடன் சம்பந்தப்படுவதில்லை.  அவன் என்னிடமே நிலைத்துவிட்டு இருப்பவன்
v  அரசே! யாரொருவன் ஆசையற்ற ஊக்கத்துடன் நாள்தோறும் என்னை தன்னுடைய கடமையை விடாமல் பூஜிக்கிறானோ அவனுடைய மனம் நாளடைவில் தெளிவு பெறுகின்றது
v  மனந்தெளிந்த அவன் நன்கு பெற்ற தெளிவான ஆத்ம ஞானத்தை அடைந்தவனாகி குணதோஷங்களை விட்டவனாகி என்னுடைய இருப்பிடமான மோட்சம் என்ற நிலையான மன அமைதியை அடைகிறான்
v  ஆத்மாவை மனம், புத்தி, புலன்களுக்கு தலைவன் போன்றதாகவும், எதனாலும் பாதிக்கப்படாமல் பற்றற்ற நிலையில் இருப்பவனாகவும், மாற்றங்கள் எதுவும் இல்லாதவனாகவும் உணர்கின்றானோ அவன் மேலான நிலையை அடைகிறான்

v  ஆத்மாவைக் காட்டிலும் வேறான மனம், புத்தி, புலன்கள், உடல் இவைகளுக்குதான் சம்சார பந்தத்தில் இருக்கும் நிலை. என்னிடம் பக்தி கொண்டிருக்கும் அறிவாளிகள் இன்ப-துன்பங்களால் மனமாற்றமடைவதில்லை.

No comments:

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...