அய்தரேய உபநிஷத்
ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது – 31/03/2022
www.poornalayam.org
ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது – 31/03/2022
www.poornalayam.org
முகவுரை
இது வைராக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், சம்சாரத்திலிருக்கும் அவஸ்தைகளை விளக்குகிறது.
இது வைராக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், சம்சாரத்திலிருக்கும் அவஸ்தைகளை விளக்குகிறது.
சங்கரரின் முகவுரை
இரண்டு விஷயங்களை நமக்கு
நன்கு விளக்குகிறார். அவைகள் ஞானமும், சந்நியாசமுமாகும். சகுண பிரம்ம உபாஸனையின் பலன் அந்த தேவதையாகவே ஆகி விடுதலாகும். தேவதைகளும் சம்சாரத்துக்குள் இருக்கிறார்கள். சம்சார
அவஸ்தையை அனுபவிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
ஞானம்: அது
கொடுக்கும் பலன் அடிப்படையில் மூன்று விதமாக இருப்பதால், மூன்றாக பிரிக்கப்படுகிறது. அவைகள்
1. கர்ம ஸாதனம்,
2. கர்மனாஸக வர்த்தமானம்,
3. கேவல ஞானம்.
1. கர்ம சாதனம்:
இந்த ஞானம் கர்மத்தின்
மூலமாகத்தான் பலனைக் கொடுக்கும் ஆகவே இது கர்ம பிரதானம். ஆரோக்கியம் என்ற பலனை அடைய வேண்டுமானல் என்ன
வகையான உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என்ற ஞானத்தை அடைய வேண்டும். இந்த ஞானம் பிறகு செயலாக உருவாகி அதை செய்யும்
போதுதான் ஆரோக்கியம் என்ற பலனை அடைய முடியும். முழு கர்ம காண்டமே இந்த ஞான சாதனமாகத்தான் இருக்கின்றது.
2. கர்மனாஸக வர்த்தமானம்:
கர்மத்துடன்
சேர்ந்திருக்கின்ற ஞானம். இதில் ஞானமும், கர்மமும்
சமபங்கு முக்கியத்துவம் உள்ளது.
(உ-ம்) தியானம், ஜபம். தியானம் செய்வது ஒரு கர்மம் அதே சமயத்தில் அந்த தேவதையின் ஸ்வரூப
ஞானத்தை தொடர்ந்து நினைத்தல், ஞான ஆவிருத்திகள். இங்கு ஞானமும் கர்மமும் சேர்ந்து செயல்படுகிறது. ஞான கர்ம சமுச்சயம்தான் அனைத்து உபாஸனைகளும், தியானமும்.
2. கர்மனாஸக வர்த்தமானம்:
3.கேவல ஞானம் (அகர்ம சம்பந்தி ஞானம்):
ஆத்மஞானம்தான் இங்கு
பிரதானம். கர்மத்தை முழுவதுமாக விட்டுவிட வேண்டும். ஞானம் அதனுடைய பலனை கொடுக்க எந்த கர்மத்தையும்
சார்ந்திருப்பதில்லை. இதற்கு பத்தாவது மனிதனைப் பற்றிய ஞானம் உதாரணமாக
இருக்கிறது. இந்த மூன்றாவது வகையான ஞானத்தைத்தான் உபநிஷத் கொடுக்கிறது. பிரம்ம ஞானம் அகர்மஸம்பந்தி – பிரம்ம ஞானத்தின் பலன் கர்மத்தை
சார்ந்திருப்பதில்லை.
கேள்வி: கர்மகாண்டத்தில்
பேசப்பட்ட கர்மங்கள் உபாஸனைகளுக்கு தொடர்ந்து இந்த ஞானம் பேசப்பட்டிருப்பதால், அதைச் செய்தவன்தான் இதற்கு அதிகாரியாகிறான் இல்லையா?
பதில்: கர்மகாண்டத்திற்கு பிறகு ஞானம் என்ற புதிய தலைப்பு கொடுத்து
வருவதனால் இதன் தன்மை வேறு என்று புரிந்து கொள்ள வேண்டும்.
கேள்வி: உபாஸனையிலும், யாகத்திலும் ஆத்மாவைப்பற்றி சொல்லியிருப்பதால், ஆத்மாவைப் பற்றி புதிய கருத்தானது ஞான காண்டத்தில்
சொல்லப்பட்டிருக்கிறது. கர்ம-காண்டத்தில் ஒருவகையிலும், ஞான காண்டத்தில் ஒரு வகையிலும் தியானிக்க வேண்டும்.
பதில்: பிரம்மமானது கர்மத்தோடு ஒட்டாது, நிர்குணமாக
இருப்பதால் இந்த பிரம்மஞானம் புதிய ஞானமாகும். கர்மகாண்டத்தில் சகுண பிரம்மமானது உபதேசிக்கப்பட்டிருக்கிறது.
கேள்வி: இதற்கு
அதிகாரி யார்? கர்மத்தை செய்து கொண்டிருப்பவன் தான் ஞான
காண்டத்திற்கு அதிகாரியாவான்.
பதில்: ஒருவன் கர்மத்தில் ஈடுபடுவதற்கு காரணம், அவன் மனதிலுள்ள திடமான, உறுதியான
ஆசைதான். அதுவே செயலாக உருவெடுத்து கர்மத்தில் ஈடுபடுத்தும். ஒருவனுக்கு வைராக்கியம் வந்து விட்டால் இகலோக, பரலோக
இன்பத்தை அடைய வேண்டும் என்ற ஆசை முற்றிலுமாக நீங்கிவிடும். அவனால் கர்மத்தில் ஈடுபட முடியாது, அவனுக்கு தேவையுமிருக்காது. இந்த நிலையை அடைந்தவன் சந்நியாசம் எடுத்துக் கொள்வதற்கு
தகுதியுடையவனாக இருக்கிறான். இதற்கு விவிதிஷா சந்நியாசம் என்று
பெயர். ஞானத்தை அடைந்தவன் எடுத்துக்கொள்ளும் சந்நியாசம் வித்வத்
சந்நியாசம் என்று பெயர்.
கேள்வி: கர்ம
காண்டத்தில் சொல்வதை ஏன் செய்யக்கூடாது?
பதில் வேதம் இந்த பலன் வேண்டுமென்றால் இந்தக் கர்மத்தை
செய் என்றுதான் உரைத்திருக்கிறது. எனவே வேதம் எல்லோரையும் கர்மத்தை செய்ய
சொல்லவில்லை. ஞானி தன்னை ஈஸ்வரனாக பாவிப்பதால், வேதங்கள் என்னிடம் இருந்து வெளிப்பட்டது. அதனால் அதற்கு நான் கட்டுப்பட வேண்டிய
அவசியமில்லை என்று நினைக்கிறான். வேதம் எப்பொழுதும் முரண்பாடில்லாமல் பேசும். இதைச் செய் என்று சிலரையும், இதைச்
செய்யாதே என்று வேறு சிலரையும் பார்த்து சொல்கிறது.
சாந்தி பாடம்
ஓம் வாங் மே மனஸி ப்ரதிஷ்டிதா
மனோ மே வாசி ப்ரதிஷ்டிதமாவிரார்விம் ஐதி4
வேத3ஸ்ய ம ஆணிஸ்த2:
ஶ்ருதம் மே மா ப்ராஹஸீரனேன்னதி4தேனாஹோராத்ரான்
ஸந்த3தா4ம்ய ரிதம் வதி3ஷ்யாமி ஸத்யம் வதி3ஷ்யாமி
தன்மாமவது தத்3வக்தாரமவத்வ்வது மாம்வது வக்த்தாரமவது வக்த்தாரம் |
ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:
பொருள் விளக்கம்:
வாங் மே மனஸி ப்ரதிஷ்டிதா – என்னுடைய வாக்கானது மனதில் நிலைபெறட்டும். என்னுடைய இந்திரியங்கள் என் கட்டுபாட்டுக்குள்
இருக்கட்டும். அறிவால்
மனம் விரும்பியது வாக்கில் வெளிவரட்டும்.
இது தமஹ என்ற சாதனையை குறிக்கிறது.
மனோ மே வாசி ப்ரதிஷ்டிதம் – என்னுடைய மனமானது என் கட்டுப்பாட்டுக்குள்
இருக்கட்டும். வாக்கு எதை படிக்கிறதோ அதை என் மனம்
கிரகிக்கட்டும், அதுவே என் மனதில் நிலைக்கட்டும். மனமும் வாக்கும் ஒன்றுக்கொன்று அனுக்கிரகம் செய்து கொள்ளட்டும். இது சமஹ என்ற சாதனையை குறிக்கிறது.
ஓம் வாங் மே மனஸி ப்ரதிஷ்டிதா
மனோ மே வாசி ப்ரதிஷ்டிதமாவிரார்விம் ஐதி4
வேத3ஸ்ய ம ஆணிஸ்த2:
ஶ்ருதம் மே மா ப்ராஹஸீரனேன்னதி4தேனாஹோராத்ரான்
ஸந்த3தா4ம்ய ரிதம் வதி3ஷ்யாமி ஸத்யம் வதி3ஷ்யாமி
தன்மாமவது தத்3வக்தாரமவத்வ்வது மாம்வது வக்த்தாரமவது வக்த்தாரம் |
ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:
பொருள் விளக்கம்:
ஆவிஹி – இறைவா! ஸ்வயம்
ப்ரகாச சைதன்ய ஸ்வரூபமான இறைவா!
மே ஆவிஹி ஏதி – எனக்கு நீ வெளிப்படுவீராக, எனக்கு
நன்கு விளங்குபவராக இருப்பாயாக!
வேத3ஸ்ய - உன்னைப்பற்றிய சரியான அறிவை அடைய உதவி செய்ய வேண்டும். அதாவது வேதத்தின் சரியான பொருளை புரிந்து
கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்ற என்னிடம்
ஆணிஸ்த2: - வாக்கும் மனமும் இரண்டும்
ஒன்று சேர்ந்து சரியான பொருளை கொண்டுவரும் திறனுடையவைகளாக இருக்கட்டும்.
ஶ்ருதம் மே – என்னால் கேட்கப்பட்டது
ப்ராஹஸீத: – என்னிடத்திலே இருக்கட்டும், என்னை விட்டு
வெளியே போகாதிருக்கட்டும். கேட்டது, புரிந்தது
அனைத்தும் என்னிடத்திலேயே நிற்கட்டும்.
அனேன அதி4தன ஓஹோராத்ரான் – உபநிஷத்தை படிக்கும்போது பகலும், இரவும்
ஸந்த3தா4ம் – பொருந்தி இருப்பேனாக, கவனம் முழுவதும்
உபநிஷத் உபதேசத்திலேயே நிற்கட்டும்.
ரிதம் வதி3ஷ்யாமி – உபநிஷத்தினால் அடைந்த பாரமார்த்திக
சத்யமான ஞானத்தையே பேசுபவனாக இருப்பேனாக, உபநிஷத்தின் மூலமாக அடைந்த அறிவின்படி
செயல்பட வேண்டும்.
ஸத்யம் வதி3ஷ்யாமி – வியாவகார சத்யமான வாய்மையுடன்
வாழ வேண்டும். உண்மைப் பேசுபவனாக, தர்மப்படி வாழ்பவனாக இருப்பேனாக.
சத்யம்
என்பது சரியாக புரிந்து கொள்வதை உரைத்தல்.
தன்மாமவது – இறைவன் என்னை காப்பாற்றட்டும் (உடல் நலம்,
நல்ல சூழ்நிலைகளை கொடுத்தல்)
தத்3வக்தா2ரமவது – இறைவன் எனது குருவையும்
காப்பாற்றட்டும்.
அவது மாம் – குருவின் உபதேசத்தை புரிந்து கொள்ளும் சக்தியை
இறைவன் கொடுப்பாராக
அவது வக்த்தாரம், அவது வக்த்தாரம் – குருவுக்கு உபநிஷத்தை சிஷ்யனுக்கு புரியும்படி சொல்லும் சக்தியை கொடுப்பாராக!
அவது வக்த்தாரம், அவது வக்த்தாரம் – குருவுக்கு உபநிஷத்தை சிஷ்யனுக்கு புரியும்படி சொல்லும் சக்தியை கொடுப்பாராக!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி - 1
அத்தியாயம்-01
அத்யாரோபம்-அபவாதம்
இதில்
அத்யாரோபம், அபவாதம் இவைகளைப் பற்றி
விளக்கப்படுகிறது. சம்சார வர்ணனையும், உலகம் மித்யா, அநித்யம், அசாத்தியம் என்று விளக்கப்படுகிறது. இவையெல்லாம் நமக்கு வைராக்கியம்
வருவதற்கு உதவி செய்கிறது.
ஸ்லோகம்-1
ஓம்
ஆத்மா வா இத3மேக ஏவாக்3ர ஆஸீத் |
நான்யத் கிஞ்சனமிஷத் |
ஸ ஈக்ஷ்த லோகான்னு ஸ்ருஜா இதி ||
ஓம்
ஆத்மா வா இத3மேக ஏவாக்3ர ஆஸீத் |
நான்யத் கிஞ்சனமிஷத் |
ஸ ஈக்ஷ்த லோகான்னு ஸ்ருஜா இதி ||
ஆத்மா வா இத3ம் – ஆத்மா என்ற சொல் ஜீவனுடைய உண்மையான ஸ்வரூபத்தை குறிக்கிறது. நான்
என்று சொல்வதையும் குறிக்கிறது. தூய்மையான அறிவு ஸ்வரூபம். நித்திய ஸத் சித் ஸ்வரூபம்.
இத3ம் – அனைத்து அனாத்மாக்களையும் சேர்த்து குறிக்கிறது. நாம் அனுபவிக்கும், பார்க்கும் பொருட்களனைத்தும் இந்த உலகம், இதையே ஆத்மா என்றும் அழைக்கலாம். ஏனென்றால் இந்த உலகம் ஆத்மாவையே சார்ந்து இருக்கிறது. அதாவது ஆத்மாவே பலவாக காட்சியளிக்கிறது. இது ஆத்மாவை சாராமலிருந்தால் இவ்வாறு சொல்ல முடியாது. இதன் இருப்பு ஆத்மாவிடமிருந்து வந்தால்தான் இரண்டும் சமம் என்று சொல்ல முடியும். உதாரணமாக களிமண், பானை இரண்டும் சமம் என்று சொல்லலாம். ஏனென்றால் பானையானது களிமண்ணிலிருந்து தோன்றியதால், அதை சார்ந்திருப்பதால் நம்மால் சமப்படுத்த முடிகிறது. இதிலிருந்து நான் மட்டும்தான் இருக்கின்றேன் என்று புரிந்து கொள்ளலாம். இந்த உலகம் தூய்மையான சைதன்யத்தின் மீது நாம, ரூபங்களாக ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. எனவே உலகம் மித்யா என்று தெரிய வருகிறது. இவ்வாறு ஆத்மா ஸத்யம், ஜகத் மித்யா என்ற மகாவாக்கியத்தை புரிந்து கொள்ளலாம். இந்த ஆத்மாவை பிரக்ஞானம் என்றும் அழைக்கப்படுகிறது.

இதம் என்ற சொல்லின் விசாரம்:
காரண பிரபஞ்சமான மாயையானது வெளித்தோற்றத்திற்கு வராத நிலையை குறிக்கிறது. காரிய பிரபஞ்சமான வெளித்தோற்றத்திற்கு வந்த மாயையானது, நம்மால் அனுபவிப்பதற்கு விஷயமாக இருக்கிறது. இதுவே காரண-காரிய பிரபஞ்ச தத்துவமாகும்.
இந்த உலகத்தை உண்மையாக கருதினால், ஆத்மாவுக்கு என்ன குறை வந்து விடும். நமக்கு (ஜீவனுக்கு) என்ன குறை வந்து விடும். ஆத்மாவில் தோன்றும் குறையானது, உலகத்தில் ஏற்படும் மாற்றங்கள் போல ஆத்மாவிலும் மாற்றங்கள் ஏற்படும். தர்ம-அதர்ம விஷயங்கள் எல்லாம் ஆத்மாவிற்கு சென்று விடும். சம்சாரித்வம் வந்து விடும். ஜீவனுக்கு வரும் குறையானது மோட்சத்தை அடைய முடியும் என்ற நிலை ஏற்படாது (அனிர்மோக்ஷ பிரசங்கஹ). இந்த உலகம் உண்மையென்றாகி விட்டால் மோட்சம் என்பது சம்பவிக்காது.

உபநிஷத் ஜகத் மித்யா என்று எப்படி உபதேசிக்கிறது?
இந்த ஜகத்தை உபநிஷத் நீக்குவதால் அது மித்யாவாகிறது. “ஆத்மா வா இதம்” என்று சொல்லும் போது உலகத்தில் தோன்றுவதெல்லாம் ஆத்மாதான் என்று கூறுவதன் மூலம் இந்த ஜகத் நீக்கப்படுகிறது. ஸ்ருஷ்டி விதவிதமாக பேசப்படுவதால் அதற்கு முக்கியத்துவம் கிடையாது. அதனால்தான் அதில் சத்யத்துவம் கிடையாது. இதிலிருந்து ஸ்ருஷ்டியைக் கூறி பின்பு அதை நீக்குகிறது.
ஆத்மா என்ற சொல்லின் விசாரம்:
இது நான்கு விதத்தில் விளக்கபடுகிறது. அவைகள்
1.
ஆப்னோதி இதி ஆத்மா – அனைத்தையும்
வியாபித்திருப்பது, எங்கும் இருப்பது. ஸத் ஸ்வரூபமாக வியாபித்திருக்கிறது. இருத்தல்
ஸ்வரூபமாக வியாபித்திருக்கிறது.
2.
ஆதந்தே ஆத்மா (ஸர்வாதாரஹ) – எல்லாவற்றிற்கும்
ஆதாரமாக இருப்பது, எல்லாவற்றையும் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையது.
3.
அத்தி(eat) இதி
ஆத்மா – அனைத்தையும் அனுபவிப்பதாக இருப்பது; ஞான
ஸ்வரூபம்
4.
அததி – நித்யஹ – என்றும்
இருப்பது., நிலையாக இருப்பது
5.
விவகார விசிஷ்ட ஆத்மா – நிர்விவகார
ஆத்மா. விவகாரம் மூன்று வகையானது, அவைகள் ஜாக்ரத், ஸ்வப்ன, சுஷுப்தி. ஜாக்ரத் அவஸ்தையில் உபாதியின் துணைக்கொண்டு அனைத்து
விவகாரங்களையும் செய்து கொண்டு அனுபவித்துக் கொண்டிருப்பது. கனவில்
எல்லா பதார்த்தங்களையும் தன்னிடத்திலே வைத்துக் கொண்டு அனுபவிக்கிறது. சுஷுப்தியில் ஆத்மா பிரம்மத்தில் லயமடைகிறது. உணர்வு
ரூபமாக அழியாமல், நித்யமாக இருக்கின்ற நானே அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கின்ற
பிரம்மன்.
ஏக: ஏவ அக்3ர ஆஸீத் |
நான்யத் கிஞ்சனமிஷத் |
ஆத்மா ஒன்றுதான், அது மட்டும்தான் இருக்கிறது, அதுதான் முதலில் இருந்தது. அதைத் தவிர்த்து வேறெதுவுமில்லை. நாம் அனுபவிக்கும் பொருட்களெல்லாம் அவயவங்களுடன் இருக்கிறது.
ஏக: - ஒன்றுதான், அவயவங்களற்றது.
ஏவ - அது மட்டும்தான் இருக்கிறது, வேறொன்றும் கிடையாது.
அக்3ர ஆஸீத் - உலகம் வெளிப்படாதபோது உள்ள நிலை. மாயையுடன் அது மட்டும்தான் முதலில் இருந்தது.
ந அன்யத் கிஞ்சன மிஷத் – இதைத் தவிர்த்து வேறொன்றும் கிடையாது. உலகமானது காரணமாக இருக்கும்போது அது மாயை, வெளி வந்தவுடன் அது மித்யாவாக காட்சியளிக்கிறது. ஸ்ருஷ்டிக்கு முன்பு மாயை என்ற சக்தியுடன் ஆத்மா மட்டும்தான் முதலில் இருந்தது.
ஸ ஈக்ஷ்த – ஈஸ்வரன் நினைத்தார்
லோகான்னு ஸ்ருஜா இதி – இந்த உலகங்களை படைப்பேனாக என்று இவ்விதம் நினைத்தார்.

இவ்வாறாக உபநிஷத்
ஸ்ருஷ்டியை உண்மையென்று ஏற்றுக்கொண்டு அதைப்பற்றி பேசி பின்னர் அது உண்மையில்லை
என்று நீக்குகிறது.
ஸ்லோகம்-2
ஸ இமாம்லோகான்ஸ்ருஜத |
அம்போ4 மரீஸீர்மரமாபோதோம்ப: பரேணதி3வம் த3யௌ:
ப்ரதிஷ்டாந்தரிக்ஷம் மரீஸய: ப்ருதி2வீ
மரோ யா அத4ஸ்தாத்தா ஆப: ||
அம்பஹ – சுவஹ, மஹஹ, ஜனஹ, தபஹ, சத்யஹ என்கின்ற ஏழு மேலுலகங்கள்
மரீஹீ – மரம், புவஹ - பூலோகம்; ஆபஹ என்கின்ற – கீழுள்ள ஏழு உலகங்கள்,
இவ்வாறாக ஈஸ்வரன் பதினான்கு உலகங்களையும் முதலில் படைத்தார். இவைகள் கிரமமாக படைக்கப்பட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும். அவைகள் அம்பஹ, மரீஸீ, மரம், ஆபஹ என்ற நான்கு பிரிவாக கூறப்பட்டுள்ளது.
அதோ அம்பஹ பரேண திவம்: சொர்க்கலோகத்திற்கு மேலேயுள்ள உலகங்கள் அம்பஹ என்று கூறுகிறது.
த்யௌ ப்ரதிஷ்டா- சுவர்க்க லோகம் அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கிறது
அந்தரிக்ஷம் மரீஸய – அந்தரக்ஷம் என்று அழைக்கப்படும் புவலோகம்
ப்ருத்வீமரோ – இது பூலோகத்தை குறிக்கிறது.
யாஹா அத4ஸ்தா தாஹா ஆபஹ : கீழேயுள்ள ஏழு உலகங்களை அப என்று குறிக்கிறது.
ஸ்லோகம்-3
ஸ ஈக்ஷா தேமே நு லோகா லோகபாலான்னு ஸ்ரு இதி |
ஸோÅத்3ப4ய ஏவ புருஷம் ஸமுத்3த்4ருத்யாமூர்ச2யத் ||
ஸஹ ஈக்ஷா – மீண்டும் அவர் சிந்தித்தார்.
இமே லோகஹா – இந்த உலகங்கள் என்னால் படைக்கப்பட்டது.
லோகபாலன் ஸ்ருஜா இதி – இனி உலகை பாதுகாக்கின்ற தேவதைகளை படைக்க வேண்டும்.
ஸ அத்3ப4ய ஏவ புருஷம் – அவர் பஞ்ச பூதங்களை எடுத்து ஒரு மனித உருவமுடைய
அமூர்ச2யத் – தேவதையை படைத்தார், அதற்கு பெயர் விராட்.

ஸ்லோகம்-4
தமப்4யத்பத்தஸ்யாபி4தப்தஸ்ய முக2ம் நிரபி4த்3யத யதா2Åண்ட3ம் |
முகா2த்3வாக்3வாசோக்Åனிர்னாஸிகே நிரபி4த்3யேதாம்
நாஸிகாப்4யாம்
ப்ராண: ப்ராணாத்3வாயுரக்ஷிணீ நிரபி4த்3யேதாமக்ஷிப்4யாம்
சக்ஷுஶ்சக்ஷுஷா ஆதி3த்ய: கர்ணௌ நிரபி4த்3யேதாம் கர்ணாப்4யாம்
ஶ்ரோத்ரம் ஶ்ரோத்ராத்3திஶஸ்த்வங் நிரபி4த்3யத த்வசோ லோமானிலோமப்4ய
ஓஷதி4வனஸ்பதயோ ஹ்ருதயம் நிராபி4த்3யத ஹ்ருத3யான்மனோ
மனஸ்ஶ்சந்த்ரமா நாபி4ர்நிரபி4த்4யத நாப்4யா அபனோÅபானான்ம்ருத்யு:
ஶிஶ்னம் நிரபி4த்3யத ஶிஶ்னாத்3ரேஹோ ரேதஸ ஆப:
||
இந்த மந்திரத்தில் மூன்று தத்துவங்கள் கோளகம், இந்திரியம், தேவதா கூறப்பட்டுள்ளது.
தம் அப்4யதமத் – விராட் உருவத்தை பார்த்து ஆலோசித்தார்.
முக2ம் நிரபி4த்3யத் – வாய் திறந்தது.
தமப்4யத்பத்தஸ்யாபி4தப்தஸ்ய முக2ம் நிரபி4த்3யத யதா2Åண்ட3ம் |
சக்ஷுஶ்சக்ஷுஷா ஆதி3த்ய: கர்ணௌ நிரபி4த்3யேதாம் கர்ணாப்4யாம்
ஶ்ரோத்ரம் ஶ்ரோத்ராத்3திஶஸ்த்வங் நிரபி4த்3யத த்வசோ லோமானிலோமப்4ய
ஓஷதி4வனஸ்பதயோ ஹ்ருதயம் நிராபி4த்3யத ஹ்ருத3யான்மனோ
மனஸ்ஶ்சந்த்ரமா நாபி4ர்நிரபி4த்4யத நாப்4யா அபனோÅபானான்ம்ருத்யு:
இந்த மந்திரத்தில் மூன்று தத்துவங்கள் கோளகம், இந்திரியம், தேவதா கூறப்பட்டுள்ளது.
தம் அப்4யதமத் – விராட் உருவத்தை பார்த்து ஆலோசித்தார்.
முக2ம் நிரபி4த்3யத் – வாய் திறந்தது.
கோளகம்
|
இந்திரியம்
|
தேவதை
|
முகம்
|
வாக்கு
|
அக்னி
|
மூக்கு
|
பிராணன்(நுகரும் சக்தி)
|
வாயு
|
கண்கள்
|
சக்ஷூ(பார்க்கும் சக்தி)
|
ஆதித்யன்
|
காது
|
கேட்கும்
சக்தி
|
திசை
தெய்வங்கள்
|
தோல்
|
தொட்டுணரும்
சக்தி
|
ஔஷதி
வனஸ்பதா
|
ஹ்ருதயம்
|
மனம்
|
சந்திரன்
|
தொப்புள்
|
அபாணன்
|
ம்ருத்யு
|
சிறுநீர்
கழிக்கும் இடம்
|
ரேதஹ
|
ஆபஹ
|
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அத்தியாயம்-02 :
தேவதைகளும் சம்சாரியே
தேவதைகளும் சம்சாரியே
ஸ்லோகம்-1
தா ஏதா த்3வதா: ஸ்ருஷ்டா அஸ்மின்மஹத்யர்ணவ் ப்ராப்தன |
தமஶனாயபிபாஸாப்4யாமன்வவார்ஜத் |
தா ஏனமப்3ருவன்னாயதனம் ந: ப்ரஜானீஹியஸ்மின் ப்ரதிஷ்டிதா அன்னமதா3மேதி ||
தா ஏதா த்3வதா: ஸ்ருஷ்டா அஸ்மின்மஹத்யர்ணவ் ப்ராப்தன |
தமஶனாயபிபாஸாப்4யாமன்வவார்ஜத் |
தா ஏனமப்3ருவன்னாயதனம் ந: ப்ரஜானீஹியஸ்மின் ப்ரதிஷ்டிதா அன்னமதா3மேதி ||
தேவதைகளும் சம்சாரிகள்
என்று வர்ணிக்கப்படுகிறது.
தா ஏதா த்3வதா: ஸ்ருஷ்டா – எல்லா தேவதைகளும், ஜீவர்களும் படைக்கப்பட்டு விட்டது.
அஸ்மின்மஹத்யர்ணவ் ப்ராப்தன – இந்த சம்சாரமே மிகப்பெரிய கடலாக வர்ணிக்கப்படுகிறது. இந்த சம்சாரம் துயரமென்னும் நீரால் நிரம்பியிருக்கிறது. இந்த பெரிய கடலில் எல்லா தேவதைகளும்
வீழ்ந்திருக்கிறார்கள்.
சம்சாரம் என்ற சொல்லின்
பொருளானது நன்கு அங்குமிங்கும் அலைகின்றார்கள்(சம்யக்
தரதி) என்பதாகும். மனதில் அனுபவிக்கின்ற நிறைவின்மை. இந்த நிறைவின்மையானது ஆசை, பொறாமை, கோபம் போன்ற தீயகுணங்களாக வெளிப்படும். ஆத்மஞானத்தினால் மட்டும்தான் நிலையாக நிறைவின்மையை
நீக்க முடியும். மனநிறைவை தர முடியும். மனதிற்கு வரும் பசி-தாகம்தான் ஆசைகள். அது மரணம் வரையில் தொடர்ந்து கொண்டிருக்கும். நான் மனமல்ல என்ற ஞானம் அடையும் வரை இந்த
நிறைவின்மை தொடரும். இதை அபூரணம் ( ஆசைàசெயல்àபாவ-புண்ணியங்கள் ) என்று குறிப்பிடலாம். அபூரணத்தின் வெளிப்பாடு ஆசை, இந்த ஆசை உறுதியடையும்போது செயலாக வெளிப்பட்டு த்ருஷ்ட-அதிருஷ்ட பலன்களை கொடுக்கின்றது. கண்ணுக்கு தெரிந்த-தெரியாத பலன்கள் என்பது இதுதான். பாவ-புண்ணியங்களை இன்ப-துன்பங்களை
அனுபவித்துத்தான் கழிக்க முடியும். இதை அனுபவிப்பதற்கு ஸ்தூல சரீரம் தேவை. ஜீவர்கள் ஏற்கனவே இருக்கும் பாவ-புண்ணியங்களை கழிப்பதற்கு பதிலாக மேலும் புதிய பாவ-புண்ணியங்களை சேர்த்துக் கொள்கின்றார்கள். ஜீவன் இப்படி ஒரு சூழலில் சிக்கி அலைவதுதான்
சம்சாரம். இந்த நிலை ஜீவனின் ஸ்வரூபமா என்றால், கிடையாது ஏனென்றால் இது ஸ்வரூபமாக இருந்தால் சம்சார சூழலிலிருந்து
விடுதலையடைய முடியாது. எனவே சம்சாரம் ஜீவனின் ஸ்வருபம் கிடையாது. ஆனால் தன்னைப்பற்றிய உண்மை ஸ்வரூபத்தை
அறியாததினால் அவன் சம்சாரத்தில் சிக்கி அலைகின்றான். எனவே இந்த அறியாமையை நீக்க உதவுவதுதான் உபநிஷத்தின் நோக்கம்.
தமஶனாயபிபாஸாப்4யாம- பசி-தாகத்துடன் (சம்சாரம்)
அன்வவார்ஜத் - கொடுத்தார்கள்.
மனதிற்கு ஞானேந்திரியங்கள்
வழியாக விஷயங்களை உணவாக கொடுத்து பசியை அடக்குகிறோம். வயிற்றுப்பசியை ஸ்தூல உணவை கொடுத்து அடக்குகிறோம். பசி-தாகம் மனதின் நிறைவின்மை
ஆகியவகளை எந்தப்பொருளினாலும் நீக்க முடியாது. பசி-தாகத்தை கொடுத்தவுடன் ஜீவர்கள் அதை போக்குவதற்கு
ஸ்தூல உடலை கேட்கின்றார்கள்.
தா ஏனமப்3ருவன் - ஜீவர்கள் ஈஸ்வரனிடம் இவ்விதம் பேசினார்கள்.
ஆயதனம் ந ப்ரஜானீஹி - எங்களுக்கு ஒரு இருப்பிடம் (சரீரம்) கொடுங்கள்.
யஸ்மின் ப்ரதிஷ்டிதா
அன்னமதா3மேதி – எந்த உடலில் இருந்து அன்னத்தை சாப்பிட்டு பசி-தாகத்தை போக்கி கொள்ள முடியுமோ அதை எங்களுக்கு கொடுங்கள். இவ்வாறு ஜீவர்களுக்கு இந்த பசி-தாகம் மூலம் சம்சாரம் வந்து
விட்டது.
ஸ்லோகம்-2 & 3
தாப்4யோ கா3மானயத்தா அப்3ருவன்ன வை நோऽயமலமிதி |
தாப்4யோऽஶ்வமானயத்தா அப்3ருவன்ன வை நோऽயமலமிதி || 2 ||
தாப்4ய: புருஷமானயத்தா
அப்3ருவன் ஸுக்ருதம் ப3தேதி புருஷோ வாவ
ஸுக்ருதம் |
தா அப்3ரவித்3யதா2யதனம்
ப்ரவிஶதேதி || 3 ||
தாப்4யோ கா3மானயத்தா அப்3ருவன்ன வை நோऽயமலமிதி |
தாப்4யோ கா3மானயத்தா ஜீவர்களுக்கு இருப்பிடமாக
சரீரமாக பசுவை கொண்டு வந்து காட்டப்பட்டது
வை நோऽயமலமிதி இது எங்களுக்கு
போதாது.
தாப்4யோऽஶ்வமானயத்தா இப்பொழுது குதிரையை காட்டப்பட்டது
வை நோऽயமலமிதி இதுவும் எங்களுக்கு
போதாது என்று கூறினார்கள்.
தாப்4ய: புருஷமானயத்தா பிறகு மனித சரீரத்தை காட்டபட்டது.
தா அப்3ருவன் ஸுக்ருதம் நன்றாக உருவாக்கப்பட்ட
சரீரம் என்று கூறினார்கள்.
தா அப்3ரவித்3யதா2யதனம் ப்ரவிஶதேதி ஈஸ்வரன் அந்த தேவதைகளிடம்
உங்களுக்குரிய இருப்பிடத்தில் சென்று வசியுங்கள் என்று கூறினார்.
மனித
சரீரம் உயர்ந்தது என்று சொல்வதற்கு காரணம் இதிலிருந்து கொண்டுதான் பாவ-புண்ணியங்களை
கர்மத்தை செய்வதினாலும், மோட்சத்தை அடைவதற்கு காரணமாகவும் இருக்கிறது.
ஸ்லோகம்-4
அக்3னிர்வாக்3பூ4த்வா முக2ம் ப்ராவிஶத்3வாயு: ப்ராணோ பூ4த்வா
ப்ராவிஶதா3தி3த்யஸ்சக்ஷுர்பூ4த்வாக்ஷிணீ ப்ரவிஶத்3திஶ:
ஶ்ரோத்ரம் பூ4த்வா கர்ணௌ ப்ரவிஶன்னோஷதி4வனஸ்பதயோ
லோமானி பூ4த்வா த்வசம் ப்ரவிஶம்ஸ்சந்த்3ரமா மனோ பூ4த்வா
ஹ்ருத3யம் ப்ரவிஶன்ம்ருத்யுரபானோ பூ4த்வா நாபி4ம் ப்ரவிஶாதா3போ
ரேதோ பூ4த்வா ஶிஶ்னம் ப்ரவிஶன் ||

அக்னியானது
வாயில் சென்று அமர்ந்து பேசும் சக்தியாக இருக்கிறது. வாயு மூக்கில் இருந்து கொண்டு
நுகரும் சக்தியாக இருக்கிறது. சூரியன் கண்களில் இருந்து கொண்டு பார்க்கும் சக்தியாக இருக்கிறது. திசைகள் காதில் இருந்து கொண்டு கேட்கும்
சக்தியாக இருக்கிறது. மூலிகைகளும் தாவரங்களும் தோலில் இருந்து கொண்டு தொட்டுணரும் சக்தியாக இருக்கிறது. இவ்வாறாக எல்லா இந்திரியங்களும் அவரவர்குரிய
இருப்பிடத்திற்கு சென்று அமர்ந்து கொள்கிறார்கள்.
ஸ்லோகம்-5
தமஶனாயாபிபாஸே அப்3ரூஹாமாவாப்4யாமபி4ப்ரஜானீஹீதி
தே அப்3ரவீதே3தாஸ்வேவ வாம் தே3வதாஸ்வாப4ஜாம்யேதாஸு
பா4கி3ன்யௌ கரோமீதி |
தஸ்மாத்3யஸ்யை கஸ்யை ச தே3வதாயை ஹவிர்க்3ருஹயதே
பா4வின்யாவேவஸ்யாமஶனாயாபிபாஸே ப4வத் ||

சம்சாரம்
என்பது பசி-தாகம். இது இந்திரியங்களைச்
சார்ந்து இருக்கின்றது. எனவே மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த பசி-தாகம் எங்களுக்கும் தங்குவதற்கு இடம் கொடுப்பதற்கு ஆலோசனை செய்யுங்கள் என்று
ஈஸ்வரனிடம் வேண்டின. உங்களிருவரையும் இந்த தேவதைகளுக்குள்ளேயே இருக்கும்படி செய்கிறேன். நீங்கள் இப்படி அங்கமாக இருப்பதால்
அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவுகளை அனுபவிப்பதே நீங்கள்தான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அத்தியாயம்-03
ஸ்ருஷ்டியின் தன்மை
இதில் ஐந்து கருத்துக்கள் பேசப்படுகின்றன. அவைகள்
1.
போக்ய ஸ்ருஷ்டி
2. விஷய ஸ்ருஷ்டி
3. அபவாதம்
4. பிரவேச ஸ்ருஷ்டி
5. ஆத்ம ஞானம்
ஸ்லோகம்-1
ஸ ஈக்ஶேதேமே நு லோகஶ்ச லோகபாலாஶ்சன்னம்ஏப்4ய: ஸ்ருஹா இதி ||
ஈஸ்வரன்
ஆலோசித்தார் என்னால் உலகம் படைக்கப்பட்டுவிட்டது.
உலகத்தை பாதுகாப்பதற்கு தேவதைகளும் படைக்கப்பட்டு விட்டது. இப்பொழுது இவர்கள் உண்பதற்கு உணவை தோற்றுவிக்க
வேண்டும்.
2. விஷய ஸ்ருஷ்டி
3. அபவாதம்
4. பிரவேச ஸ்ருஷ்டி
5. ஆத்ம ஞானம்
ஸ ஈக்ஶேதேமே நு லோகஶ்ச லோகபாலாஶ்சன்னம்ஏப்4ய: ஸ்ருஹா இதி ||
ஸோऽபோऽப்4யதபத்தாப்4யோऽபிதப்தாப்4யோ ஸூர்திரஜாயத |
ஸ்லோகம்-3
த்தே3னத்ஸ்ருஷ்டம் பராऽங்ஜ்யஜிகா4ம்ஸத்வாசாऽஜிக்4ருக்ஶத்
தன்னாஶக்னோத்3வாசா க்3ரஹீதும் |
ஸ யத்3தை4னத்3வாசாऽப்ரஹைஷ்யத3பி4வ்யாஹ்ருத்ய
ஹைவான்னமத்ரப்ஸ்யத் ||
த்தே3னத்ஸ்ருஷ்டம் பராऽங்ஜ்யஜிகா4ம்ஸத்வாசாऽஜிக்4ருக்ஶத்
ஸ யத்3தை4னத்3வாசாऽப்ரஹைஷ்யத3பி4வ்யாஹ்ருத்ய
நாம்
உண்ணும் உணவை முயற்சி செய்துதான் அடைய வேண்டும்.
யாருக்கு எந்த வகையான பசி எடுக்கிறதோ அதற்கு தகுந்த இந்திரியத்தை
பயன்படுத்தி அடைய வேண்டும்.
த்தே3னத்ஸ்ருஷ்டம் இவ்வாறு உணவு படைக்கப்பட்டது
பராऽங்ஜ்யஜிகா4ம்ஸத் அதை சாப்பிட போடும்போது அது ஓட ஆரம்பித்தது
தத்3 வாசாऽஜிக்4ருக்ஶத்
பேசி அதை பிடிக்க என்று முயற்சி செய்தான்.
இப்படி
பேச்சினால் அவனால் கிரகிக்க முடிந்து இருந்தால் இவன் அதை பேசுவதனாலே திருப்தியடைந்து
விடுவான். அப்படி முடியாததால் இவனுக்கு திருப்தி
வரவில்லை.
ஸ்லோகம்-4 பிராணன் இது நுகர்வதாலேயே
உணவை அடைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.
ஸ்லோகம்-5 கண்ணானது பார்வையாலே உணவை அடைய முயற்சி
செய்து தோல்வி அடைந்தது.
ஸ்லோகம்-6 காதானது கேட்பதாலேயே உணவை அடைய முயற்சி
செய்து தோல்வி அடைந்தது.
ஸ்லோகம்-7 தோலானது தொட்டுணர்ந்தே உணவை அடைய
முயற்சி செய்து தோல்வி அடைந்தது.
ஸ்லோகம்-8 மனமானது எண்ணங்களாலே உணவை அடைய
முயற்சி செய்து தோல்வி அடைந்தது.
ஸ்லோகம்-9 சிறுநீரகமானது கழிவை அகற்றுவதாலேயே
உணவை அடைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.
ஸ்லோகம்-10
தத3பானேனாநிக்4ருக்ஷத ததா3வயத் ஸைஷோऽன்னஸ்ய க்3ரஹோ
யத்3வயுரனாயுர்வா
ஏஷ யத்3வாயு: ||
கடைசியில்
உணவை எடுத்து வாயினுள்ளே போடுகிறார்கள். இப்படி உணவை பிடித்து விட்டார்கள். அபான பிராணன் மூலம் உணவை சாப்பிட்டு
புரிந்து கொண்டார்கள்.
ஸ்லோகம்-11
ஸ்
ஈக்ஷ்த கத2ம் ந்வித3ம் ஸ்யாதி3தி ஸ ஈக்ஷ்த கதரேண ப்ரபத்3யா இதி |
ஸ
ஈக்ஷ்த யதி3
வாசாऽபி4வ்யாஹ்ருதம் யதி3
ப்ராணேனாபி4ப்ராணிதம்
சக்ஷுஷா த்3ருஷ்டம் ய்த ஶ்ரோத்ரேண ஶ்ருதம் யதி3
த்வசா ஸ்ப்ருஷ்டம்
யதி3 மனஸா த்4யாதம் யத்3யபானேனாப்4யபானிதம்
யதி3 ஶிஶ்னேன விஸ்ருஷ்டமத2கோऽஹமிதி ||
இதில்
மூன்று கருத்துக்கள் அடங்கியுள்ளது.
1.
பரமாத்மா ஜீவாத்மாவில் பிரவேசம்
2. எந்த வழியாக உள்ளே நுழையலாம் என்று யோசிக்கிறார்.
3.
ஜீவனுக்கு ஆத்மஞானம் வேண்டுமென்றால் எப்படி சிந்திக்க வேண்டும்.
2. எந்த வழியாக உள்ளே நுழையலாம் என்று யோசிக்கிறார்.
கஹ அஹம் இதி – நான் யார் என்று சிந்திக்க வேண்டும்.
நாம்
எப்பொழுதும் வெளி விஷயங்களைத்தான் சிந்தித்து கொண்டிருக்கிறோம். ஆனால் நான் யார்? இப்படி சிந்திப்பவன்
யார்? என்று யோசிக்க
வேண்டும். எந்த அறிவை
பயன்படுத்தி வெளி விஷயங்களை பார்த்துக் கொண்டிருக்கின்ற நாம் இவ்வாறு பார்ப்பவன் யார்
என்று விசாரம் செய்ய வேண்டும் என்றால் நம் மனதைக் கொண்டேதான் இவ்வாறு நம்மை விசாரிக்க
வேண்டும்.. இந்த விசாரத்தை
எப்படி செய்ய வேண்டும் என்று உபநிஷத் இங்கே விளக்கியிருக்கிறது.
· நம் இந்திரியங்கள்
யாரோ ஒருவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இயங்குகிறது.
· இந்திரியங்கள் தன்னிச்சையாக
செயல்பட்டால் நான் யார் என்ற கேள்வி எழும்.
· இந்தக் கேள்வியிலிருந்து
நான்தான் இவைகளை கட்டுப்படுத்துகிறேன் என்ற அறிவு கிடைக்கும்
· இந்திரியங்களுக்கு
நான்தான் தலைவன்.
நான் வேறு, இந்திரியங்கள் வேறு, அவைகள் எனக்காக வேலை செய்கிறது என்ற மனப்பான்மையுடன் விவகாரம் செய்தல்
· இந்திரியங்களுக்கு
இந்திரியமாக இருக்கிறேன்.
ஈஸ்வரன் – ஜீவன் இந்த மாதிரி சிந்திக்க வேண்டும்
என்று நினைத்தார். ஒருவேளை வாயானது அது இஷ்டத்திற்கு பேசிக்கொண்டிருந்தால்,
காதானது அது இஷ்டத்திற்கு கேட்டுக் கொண்டிருந்தால், தோலானது அது விருப்பத்திற்கு தொடு உணர்வை அனுபவித்துக் கொண்டிருந்தால்,
மனமானது அதுபாட்டுக்கு சிந்தித்துகொண்டிருந்தால், பிறகு நான் யார்? என்ற கேள்விக்கு இவ்வாறு சிந்திக்க வேண்டும். இந்திரியங்கள்
மனதின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது, மனது வேறொருவரின் கட்டுக்குள்
இருக்கிறது. அந்த வேறொருவர்
நான்தான், நான் சேதன ஸ்வரூபமானவன், நித்யமானவன்
என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஸ்லோகம்-12
ஸ ஏதமேவ ஸீமானம் விதா3ர்யைதயா த்3வாரா ப்ராபத்3யத் |
ஸைஷா வித்3ருதிர்னாம த்3வாஸ்ததே3தன்னாந்த3னம் |
தஸ்ய த்ரய ஆவஸதா2ஸ்த்ரய: ஸ்வப்னா
அயமாவஸதோ2ऽயமாவஸதோ2ऽயமாவஸத2 இதி ||
ஸஹ - ஈஸ்வரன்,
ஏதம் ஏவ ஸீமானம் விதா3ர்ய - தலை
உச்சியில் ஓட்டையை போட்டு
ஏதயா த்3வாரா - அந்த துவாரம் வழியாக
ப்ராபத்3யத் - நுழைந்தார்.
ஸ: ஏஷ த்3வா - இந்த கதவுக்கு
வித்3ருதி: நாம - வித்ருதி என்ற பெயரும் உண்டு.
நாந்த3னம் - நாந்தனம் என்றும்
அழைப்பதுண்டு,
இது மகிழ்ச்சியை தரும் வழியாகும்.
தஸ்ய - ஈஸ்வரனுடைய
த்ரய ஆவஸதா2: - மூன்று விதமான இருப்பிடங்கள் (வலது கண், மனம், ஹ்ருதயம்)
த்ரய: ஸ்வப்னா: - மூன்று விதமான கனவு நிலைகள் (விழிப்பு
நிலை, கனவு நிலை, ஆழ்நிலை உறக்கம்)
அயம் - இந்த ஒன்றானது (வலது கண்
முதலாவது)
ஆவஸத2: - இருப்பிடம், மனதானது
இரண்டாவது இருப்பிடம், இருதயமானது மூன்றாவது இருப்பிடம்.
ஈஸ்வரன்
ஜீவனுக்குள் எப்படி நுழைய வேண்டும் என்று யோசித்தார், தலை உச்சி
(பிரம்ம அந்திரம்) வழியாக போகலாமா அல்லது அடிப்பாதம்
வழியாக போகலாம என்று யோசித்தப் பின்னர், தலையுச்சி வழியாகவே பிரவேசிக்கலாம்
என்று முடிவெடுத்து அதன் வழியாக உள்ளே நுழைந்தார். ஜீவன் உடலில் சிதாபாசனாக தோன்றினார். ஈஸ்வரன் உள்ளே நுழைந்த கதவுக்கு
(வழிக்கு) வித்ருதி என்று பெயர். நாந்தனம் என்றும் அழைப்பதுண்டு.
அந்த
ஜீவனுக்கு மூன்று இடங்கள் அளித்து மூன்று விதமான அவஸ்தைகள் மூலமாக உலகத்தை அனுபவித்துக்
கொண்டிருக்கட்டும்.
ஜாக்ரத் அவஸ்தையில் கண்ணை இருப்பிடமாக கொண்டு விவகாரம் செய்கின்றான்.
கனவு நிலையில் தொண்டையில் உள்ள கண்ட ஸ்தானம், ஆழ்ந்த
உறக்கத்தில் இதயத்தில் இருக்கின்றான்.
ஜீவன் மூன்று விதமான கனவு நிலையில் இருக்கின்றான். அவைகள் ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி.
ஸ ஏதமேவ ஸீமானம் விதா3ர்யைதயா த்3வாரா ப்ராபத்3யத் |
ஸைஷா வித்3ருதிர்னாம த்3வாஸ்ததே3தன்னாந்த3னம் |
தஸ்ய த்ரய ஆவஸதா2ஸ்த்ரய: ஸ்வப்னா
அயமாவஸதோ2ऽயமாவஸதோ2ऽயமாவஸத2 இதி ||
ஏதயா த்3வாரா - அந்த துவாரம் வழியாக
ப்ராபத்3யத் - நுழைந்தார்.
வித்3ருதி: நாம - வித்ருதி என்ற பெயரும் உண்டு.
த்ரய ஆவஸதா2: - மூன்று விதமான இருப்பிடங்கள் (வலது கண், மனம், ஹ்ருதயம்)
ஜாக்ரத்
அவஸ்தையை எப்படி கனவு என்று எடுத்துக் கொள்ள முடியும்?
கனவில்
பார்க்கும் அனைத்தும் அநித்யமானவைகள் அதே போல ஜாக்ரத் நிலையில் பார்க்கும் அனைத்தும்
அநித்யமானவைதான். எனவே இரண்டும் கனவு நிலையென்று எடுத்துக்
கொள்ளலாம்.
ஸ்லோகம்-13
ஸ ஜாதோ பூ4தான்யபி4வ்யைக்2யத் கிமிஹான்யம் வ்வதி4ஷதி3தி |
ஸ ஏதமேவ புருஷம் ப்3ரஹ்ம தத்மமபஶ்யதி3த3மத3ர்ஶமிம்தீ ||
ஸ ஜாதோ பூ4தான்யபி4வ்யைக்2யத் கிமிஹான்யம் வ்வதி4ஷதி3தி |
ஸ ஜாதோ பூ4தான்யபி4வ்யைக்2யத் - பரமாத்மா இப்போது ஜீவ ரூபமாக சம்சாரத்தில் இருக்கிறார். ஜீவனாக வெளிப்பட்டிருக்கிறார்.
பூதானி - இந்த அனைத்து ஜீவராசிகளை குறித்து
அபி4வ்யைக்2யத்– குரு,
சாஸ்திரங்களின் துணைக் கொண்டு ஆராய்ச்சி செய்தார்.
கிமிஹான்யம் வ்வதி4ஷதி3தி - இந்த உலகத்தில் எனக்கு (பிரம்மத்திற்கு) வேறாக எதை சொல்ல முடியும் என்ற கேட்டால், நானே அனைத்துமாக
இருக்கிறேன் என்று அறிந்து கொண்ட பிறகு நான் தெரிந்து கொள்வதற்கு வேறொன்றுமில்லை.
ஸ ஏதமேவ புருஷம் - இந்த ஜீவனையே பிரம்மன்
அபஶ்யத் - என்று அறிந்தான்.
தத் மம - இந்த பிரம்ம லட்சணமானது.
ஸர்வக3தம் - எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கின்ற பிரம்மனாகவே
அறிந்து கொண்டான்.
இத3ர்ஶமிம்தீ - இவ்விதமாக பிரம்மத்தை (ஞானியானவன்)
அறிந்துக் கொண்டான்
அபஶ்யத் - என்று அறிந்தான்.
ஸ்லோகம்-14
தஸ்மாதி3த3ந்த்3ரோ நாமேத3ந்த்3ரோ ஹ வை நாம |
ஹமிதந்த்3ரம் ஸந்தமித3ந்த்3ரோ இத்யாசக்ஷதே பரோக்ஷேண |
பரோக்ஷப்ரியா இவ ஹி தே3வா ||
தஸ்மாத்3 - ஆகவே, ஜீவன் பிரம்மத்தை அபரோக்ஷமாக அறிந்த பிறகு,
இத3ந்த்3ர - பிரம்மத்திற்கு இன்னொரு பெயர் இத3ந்த்3ர ஆகும்.
இதை
அபரோக்ஷமாக அறிவதனால்தான் பிரம்மத்திற்கு இந்த பெயர் வந்தது. இதை இத3ந்த்3ர என்று மறைமுகமாக என்று
அழைப்பதுண்டு. ஞானிகளும், தேவர்களும் தங்களை
மறைத்துக் கொள்வதில்தான் விருப்பம் உடையவர்களாக இருக்கிறார்கள். எல்லோருக்கும் தெரியக் கூடியதாக இருந்தாலும் ஜீவர்களுக்கு தெரியாமல்தான் இருக்கின்றார்கள். ஞானத்தை அடைந்தவனுக்கு அபரோக்ஷமாகவும், ஞானத்தை அடையாமல் அறிந்தவனுக்கு பரோக்ஷமாகவும்
இருக்கிறது இந்த பிரம்மன். இது புலன்களால் அறிய முடியாததாக இருக்கிறது. ஞானிகள் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.
தஸ்மாதி3த3ந்த்3ரோ நாமேத3ந்த்3ரோ ஹ வை நாம |
ஹமிதந்த்3ரம் ஸந்தமித3ந்த்3ரோ இத்யாசக்ஷதே பரோக்ஷேண |
பரோக்ஷப்ரியா இவ ஹி தே3வா ||
தஸ்மாத்3 - ஆகவே, ஜீவன் பிரம்மத்தை அபரோக்ஷமாக அறிந்த பிறகு,
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி -
2
அத்தியாயம்-1
ஸ்லோகம்-1
புருஷே ஹ வ அயமாதி3தோ க3ர்போ4 யதே3தத்3ரேத: |
ததே3தத்ஸர்வேப்4யோऽங்க3ப்4யஸ்தேஜ:
ஸம்பூ4தமாத்மன்யேவாऽऽத்மானம் பி3ப4ர்தி தத்3யதா3 ஸ்த்ரியாம்
ஸிஞ்சத்யதை2னஜ்ஜனயதி தத3ஸ்ய ப்ரத2மம் ஜன்ம ||
புருஷே ஹ வ அயமாதி3தோ க3ர்போ4 யதே3தத்3ரேத: |
ததே3தத்ஸர்வேப்4யோऽங்க3ப்4யஸ்தேஜ:
ஸம்பூ4தமாத்மன்யேவாऽऽத்மானம் பி3ப4ர்தி தத்3யதா3 ஸ்த்ரியாம்
ஸிஞ்சத்யதை2னஜ்ஜனயதி தத3ஸ்ய ப்ரத2மம் ஜன்ம ||
இந்த
ஜீவன் முதலில் தந்தையின் உடலை இருப்பிடமாக கொண்டிருக்கிறது. தந்தையின் விந்தில் இருக்கிறது. இந்த விந்தானது உடலினுடைய எல்லா அங்கங்களின்
ஒட்டு மொத்த சாராம்சமாக இருக்கிறது.
தந்தை தன் குழந்தையைப் பார்க்கும்போது தன்னையே பார்ப்பது போன்ற
உணர்வுடன் பார்க்கின்றான். நான் இறந்தாலும் தன் குழந்தையின் உடலில் இருப்பேன் என்று நம்பி கொண்டு தன்னைத்தானே
பாதுகாத்துக் கொள்வதைப் போன்று தன் குழந்தையை பாதுகாக்கின்றான். ஆணினுடைய விந்திலிருந்து பெண்ணின்
கர்ப்பத்திற்குள் செல்கின்றது, இதுதான் அவனுடைய முதல் ஜென்மம்.
ஸ்லோகம்-2
தத்ஸித்ரயா ஆத்ம்பூ4யம் க3ச்ச2தி யதா2 ஸ்வமங்க3ம் ததா2 |
தஸ்மாதே3னாம் ந ஹினஸ்தி |
ஸாऽஸ்யைதமாத்மானமத்ர க3தம் பா4வயதி ||
தத்ஸித்ரயா ஆத்ம்பூ4யம் க3ச்ச2தி யதா2 ஸ்வமங்க3ம் ததா2 |
தஸ்மாதே3னாம் ந ஹினஸ்தி |
ஸாऽஸ்யைதமாத்மானமத்ர க3தம் பா4வயதி ||
தாயின்
கருப்பைக்குள் சென்ற ஜீவனானது அவளது அங்கமாகவே மாறிவிடும். அதனால் இந்தத்தாய்க்கு எந்த தீங்கும்
செய்வதில்லை. தன்னிடத்தில்
வந்த அந்த ஜீவனை தாய் மிகவும் போற்றி பாதுகாக்கின்றாள்.
ஸ்லோகம்-3
ஸா பா4வயித்ரீ பா4வயிதவ்யா ப4வதி |
தம் ஸ்த்ரீ க3ர்த2ம் பி3ப4ர்தி |
ஸோऽக்3ர ஏவ குமாரம் ஜன்மனோऽக்3ரேऽதி4பா4வயதி |
ஸ யத்குமாரம் ஜன்மனோக்3ரேதி4பா4வயத்யாத்மானமேவ
தத்3பா4வயத்யேஷாம் லோகானாம் ஸந்தத்ய |
ஏவம் ஸந்ததா ஹீமே லோகாஸ்தத3ஸ்ய த்3விதீயம் ஜன்ம ||
பா4வயிதவ்யா
ப4வதி ஸா பா4வயித்ரீ - தாய் குழந்தையை பாதுகாக்கும்போது அவளை மற்றவர்கள்
பாதுகாக்க வேண்டும்.
தம்
ஸ்த்ரீ க3ர்த2ம் பி3ப4ர்தி - பிறப்பதற்கு முன் அவள்தான் குழந்தையை பாதுகாக்கின்றாள்.
ஸோऽக்3ர
ஏவ குமாரம் ஜன்மனோऽக்3ரேऽதி4பா4வயதி - பிறப்பதற்கு முன் தாயை கவனிக்க வேண்டும். குழந்தை பிறந்ததும் அந்தக் குழந்தையை
பாதுகாக்க வேண்டும்.
அவர்
தன்னுடைய குழந்தையை பிறப்பதற்கு முன்னும் பின்னும் அதை நன்கு கவனிப்பதற்குக் காரணம்
அவர் தன்னையே அந்த குழந்தையினிடத்தில் பார்ப்பதால் தன்னையே கவனிப்பதற்கு சமமானதாக இருக்கிறது. இந்த உலகத்தில்
தன்னுடைய சந்ததியானது தொடர்ந்திருப்பதற்காக இவ்வாறு தந்தை தன் குழந்தை பாதுகாக்கிறார். ஜீவன் தாயின் கர்ப்பதிலிருந்து உலகத்தில்
வருவது இரண்டாவது ஜென்மம்.
ஸ்லோகம்-4
ஸோऽஸ்யாயமாத்மா புஷ்யேப்4ய: கர்மப்4ய: ப்ரதிதீ4யதே |
அதா2ஸ்யாயமிதர ஆத்மா க்ருதக்ருத்யோ வயோக3த: ப்ரைதி |
ஸ இத: ப்ரயன்னேவபுனர்ஜாயதே தத3ஸ்ய த்ருதீயம் ஜன்ம ||
ஸஹ அஸ்யாயமாத்மா - தன்னுடைய ஸ்வரூபமாக மகனை கருதுகிறார் தந்தை
புஷ்யேப்4ய: கர்மப்4ய: ப்ரதிதீ4யதே - தார்மீக முறையில் வளர்க்க வேண்டும். தர்மத்தின்படி வாழும் வகையில் வளர்க்க வேண்டும்
அயம் இதர: ஆத்மா அஸ்ய - இந்த மகனுக்கு தந்தையானவர்
க்ருதக்ருத்யோ – இந்த உலகத்தில் கடவுளுக்கு, ரிஷிகளுக்கு, தேவதைகளுக்கு செய்ய வேண்டிய மூன்று கடமைகளிலிருந்து விடுபடுகின்றார்,
தன்னுடைய ஸ்வரூபமாக பாவிக்கும் மகனை புண்ணிய கர்மத்தை அவன் செய்யும் விதத்தில் வளர்க்க வேண்டும். தார்மீக முறையில் வளர்க்க வேண்டும். தர்மத்தின்படி வாழும் வகையில் வளர்க்க வேண்டும். அவனும் அதேமாதிரி வளரத்-தொடங்கினான், தந்தை சொன்னபடி இந்த உலகில் தர்மப்படி வாழ்ந்து வயதானபிறகு இறந்துவிடுகின்றான். இது இவனுக்கு மூன்றாவது ஜென்மம்.
ஸ்லோகம்-5
க3ர்பே4 நு ஸன்னன்வேஷாமவேத3மஹம் தேவானாம்
ஜனிமானி விஶ்வாஸதம் மா புர ஆயஸீரக்ஷன்னத4: ஶ்யேனோ ஜவஸா நிரதீ3யமிதி |
க3ர்ப4 ஏவைதச்ச2யானோ வாமதே3வ ஏவமுவாச ||
ஆத்ம ஞானத்தை அடைந்த ரிஷி ஒருவரால் இவ்வாறு சொல்லப்பட்டது.
கர்ப்பதிலிருக்கும்
போதே நான் என்னை அறிந்து கொண்டேன். அனைத்து
தேவர்களின் பிறப்பையும், தேவ ரகசியத்தையும் (ஆத்ம ஞானம்) அறிந்து கொண்டேன். இதை அடைவதற்கு முன் 100 இரும்புக்கதவுக்குள்
அடைப்பட்டுக் கொண்டிருந்தேன். பருந்தானது கூண்டிலிருந்து வெளியேறுவது
போல நான் மாயை என்ற வலையிலிருந்து வெளியேறிவிட்டேன் என்று வாமதேவர் என்ற ஞானி தான்
கர்ப்பத்திலிருக்கும்போதே இந்த ஞானத்தை அடைந்துவிட்டதை கூறியிருக்கிறார்.
ஸ்லோகம்-6
ஸ ஏவம் வித்3வான்ஸ்மாச்ச2ரீரபே4தா3தூ3ர்த்4வ உத்க்ரம்யாமுஷ்மின்
ஸ்வர்கே3Åலோகே ஸர்வான் காமானாப்த்வாம்ருத: ஸமப4வத் ஸமப4வத் ||
யாரொருவன் வாமதேவர் அறிந்தது போல ஆத்மஞானத்தை அடைகிறானோ அவன் இந்த சரீரத்திலிருந்து கொண்டே மனநிறைவைப் பெற்று மரணமற்ற நிலையை அடைவான்.
க3ர்பே4 நு ஸன்னன்வேஷாமவேத3மஹம் தேவானாம்
ஜனிமானி விஶ்வாஸதம் மா புர ஆயஸீரக்ஷன்னத4: ஶ்யேனோ ஜவஸா நிரதீ3யமிதி |
க3ர்ப4 ஏவைதச்ச2யானோ வாமதே3வ ஏவமுவாச ||
ஆத்ம ஞானத்தை அடைந்த ரிஷி ஒருவரால் இவ்வாறு சொல்லப்பட்டது.
ஸ்லோகம்-6
ஸ ஏவம் வித்3வான்ஸ்மாச்ச2ரீரபே4தா3தூ3ர்த்4வ உத்க்ரம்யாமுஷ்மின்
ஸ்வர்கே3Åலோகே ஸர்வான் காமானாப்த்வாம்ருத: ஸமப4வத் ஸமப4வத் ||
யாரொருவன் வாமதேவர் அறிந்தது போல ஆத்மஞானத்தை அடைகிறானோ அவன் இந்த சரீரத்திலிருந்து கொண்டே மனநிறைவைப் பெற்று மரணமற்ற நிலையை அடைவான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி-3
அத்தியாயம்-1
ஸ்லோகம்-1
கோÅயமாத்மேதி வயம்ருபாஸ்மஹே கதர: ஸ ஆத்மா |
யேன வாபஶ்யதி யேன வா ஶ்ருணோதி யேன வா க்3ந்தா4னாஜிக்4ரதி
யேன வா வாசம் வ்யாகரோதி யேன வா ஸ்வாது3 சாஸ்வாது3 விஜானாதி
கோÅயமாத்மேதி வயம்ருபாஸ்மஹே கதர: ஸ ஆத்மா |
யேன வா வாசம் வ்யாகரோதி யேன வா ஸ்வாது3 சாஸ்வாது3 விஜானாதி
கோÅயமாத்மேதி – யார் இந்த
ஆத்மா?
வயம்ருபாஸ்மஹே –
நாம் தினந்தோறும் பயன்படுத்தும் சொல் “நான்”
கதர:
ஸ ஆத்மா –
எப்படிபட்டது இது? நிர்குண சைதன்யமா அல்லது சகுண
சைதன்யமா?
ஸ்தூல, சூட்சும
சரீரங்களை விசாரம் செய்து இவைகள் ஆத்மா அல்ல என்ற முடிவுக்கு வருகின்றார்கள்.
யேன வாபஶ்யதி யேன வா ஶ்ருணோதி –
எந்த இந்திரியத்தால் பேசுகிறோமோ, கேட்கிறோமோ,
வாசனையை நுகர்கின்றோமோ இவைகள் ஆத்மா என்று விசாரம் செய்து இல்லை என்ற
முடிவுக்கு வருகிறார்கள்.
· இந்த சூட்சும சரீரம்
மாற்றத்தை அடைவதால் அது ஆத்மா அல்ல என்று தெளிவடையலாம். காலம் செல்ல செல்ல பார்க்கும் சக்தி,
கேட்கும் சக்தி போன்ற இந்திரியங்களின் சக்திகள் குறைந்து கொண்டே போவதால்,
இவைகள் மாற்றத்திற்கு உள்ளாகின்றது
· இதுவே நமக்கு விஷயமாக
உள்ளது. ஏதாவது ஒரு பொருளை காட்டி இது தெரிகிறதா
என்று கேட்டால், தெரிகிறது என்று கூறுவோம். எனவே பொருளும் தெரிகிறது அதை கண்ணால் அறிந்து கொண்டேன் என்று இந்திரியத்தின்
செயலையும் தெரிந்து கொள்கிறோம். ஆனால் இந்திரியங்களின் விஷயங்களாகி வேறொருவன் அதைப் கவனிக்கின்றான்.
· கரணமாக இருப்பதால், இதை பயன்படுத்தி
வேறொருவன் பயனடைகின்றான்.
மேற்கூறிய
காரணங்களால் சூட்சும சரீரங்கள் ஆத்மாவல்ல என்று உறுதி செய்யப்படுகிறது.
யதே3தத்3 ஹ்ருத3யம் மனஶ்சைதத் |
ஸம்ஞானமாக்3ஞானம் ப்ரக்3ஞானம் மேதா4
த்3ருஷ்டித்4ருதிர்மதிர்மனீஷா ஜூதி: ஸம்கல்ப:
ரிதுரஸு: ஸாமோ வஶ இதி |
ஸர்வாண்யேவைதானி ப்ரக்3ஞானஸ்ய நாமதே4யானி ப4வந்தி ||
இந்த
மனமும் (சித்தம், அகங்காரம், மனம்)
புத்தியும் ஆத்மா அல்ல.
ஆத்மா என்பது சேதன ஸ்வரூபம், அறிவு ஸ்வரூபம்,
உணர்வு ஸ்வரூபம். நம்மிடத்தே எழுகின்ற எண்ணங்களுக்கு பின்னால் இந்த சைதன்யம் இருக்கிறது. எண்ணங்களுக்கு விஷயமாக இருக்கும்
பொருட்களால்தான் எண்ணங்கள் பலவாக இருக்கின்றது. ஆனால் இதையெல்லாம் அறிந்து கொண்டிருப்பது
ஒரே ஒரு சைதன்யம்தான். நமது மனதில் வருகின்ற எண்ணங்களுக்கு சைதன்யத்திற்கு கொடுக்கப்படுகின்ற பெயர்கள்.
சம்ஞானம் சாதாரண மனிதர்களிடத்திலே தோன்றும் எண்ணம், நான் இருக்கிறேன்
என்ற அறிவு.
ஆஞானம் யோகிகளிடத்தில் இருக்கின்ற ஞானம்.
மனிதர்களிடத்திலே இல்லாத ஞானம்.
விக்ஞானம் கலைஞானம், பிரக்ஞானம், புரிய வேண்டியதை
அந்த நேரத்தில் புரிந்து கொள்ளும் திறமை.
மேதா4 – வாஸனைகள்; எண்ணப்பதிவுகள்
த்3ருஷ்டி – இந்திரியங்களால் அடையப்படும் ஞானம்
த்3ருத்ஹி – துணிவை கொடுக்கின்ற உறுதியான ஞானம்
மதிஹி – யோசிக்கும் திறமை (மனனம்)
மணிஷா – நாம் சுதந்திரமாக இருத்தல்
ஜூதிஹி – மனதினால் வலி வேதனைகளை அனுபவித்தல்
ஸ்மிருதி – எண்ணிப்பார்த்தல்
சங்கல்பஹ – உறுதி செய்தல்
க்ருதஹ – தீர்மானித்தல்
அஷூ – எச்சரித்தல்
காமோ – ஆசை வயப்படுதல்
இப்படி
பலவிதமான எண்ணங்கள் நம்மிடத்தே இருக்கின்றது. இவைகளெல்லம் சைதன்யத்திற்கு கொடுக்கப்பட்ட பெயர்களாகும்.
ஸ்லோகம்-3
ஏஷ ப்3ரஹ்மைஷ இந்த்3ர ஏஷ ப்ரஜாபதிரேகே3 ஸர்வே தே3வா இமானி ச
பஞ்சமஹபூ4தானி
ப்ருதி2வீ வாயுரகாஶ ஆபோ ஜ்யோதீஷீத்யேதானிமானி ச
க்ஷுத்3ரமிஶ்ராணீவ |
பீ3ஜானீதராணி சாண்டஜானி ச ஜாருஜானி ச ஸ்வேத3ஜானி ச
சோத்3பி4ஜ்ஜனி சாஶ்வா கா3வ: புருஷா ஹஸ்தினோ
யத்கிசானே
ப்ரதித3ம் ப்ராணி ஜ~க3மம் ச ப்ரத்ரி ச யச்ச ஸ்தா2வரம் ஸர்வம்
தத்ப்ரக்3ஞானேத்ரம் ப்ரக்3ஞானேத்ரோ லோக: ப்ரக்3ஞா ப்ரதிஷ்டா
ப்ரக்3ஞானம் ப்3ரஹ்ம ||
ஏஷ ப்3ரஹ்மைஷ இந்த்3ர ஏஷ ப்ரஜாபதிரேகே3 ஸர்வே தே3வா இமானி ச
க்ஷுத்3ரமிஶ்ராணீவ |
பீ3ஜானீதராணி சாண்டஜானி ச ஜாருஜானி ச ஸ்வேத3ஜானி ச
ப்ரதித3ம் ப்ராணி ஜ~க3மம் ச ப்ரத்ரி ச யச்ச ஸ்தா2வரம் ஸர்வம்
தத்ப்ரக்3ஞானேத்ரம் ப்ரக்3ஞானேத்ரோ லோக: ப்ரக்3ஞா ப்ரதிஷ்டா
ப்ரக்3ஞானம் ப்3ரஹ்ம ||
எல்லா ஜீவராசிகளும் சைதன்ய ஸ்வரூபமாகவே இருக்கின்றது.
ஸ்லோகம்-4
ஸ
ஏதேன ப்ரக்3ஞேனாத்மனாஸ்மால்லோகாது3த்க்ரம்யாமுஷ்மின்ஸ்வர்கே3
லோகே
ஸர்வான்காமானாப்த்வாம்ருத: ஸமப4வத்ஸமப4வத் ||
இந்த
பிரஹ்ம ஞானத்தின் பலன் இந்த மந்திரத்தில் சொல்லப்படுகிறது.
தான்
எந்த அறிவை அடைந்தானோ அதிலேயே நிலைபெற்று இருக்கின்றான். பிராரப்தம்
முடிந்தவுடன் இந்த உடலை விட்டு விட்டு எல்லா ஆசைகளையும் அடைந்தவனாக தன்னிடத்திலே இருக்கிறான்,
மரணமற்றவனாக உயர்ந்து விடுகிறான்.
ஓம் தத் ஸத்!!!
No comments:
Post a Comment