மாண்டூக்ய உபநிஷத் - பகுதி-1
ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது –
03/04/2022
முகவுரை
வேதம் என்பது ஆத்ம ஞானத்தை அடைய உதவும் பிரமாணமாக கருதப்படுகின்றது. இது இரண்டு விதமான ஞானத்தை கொடுக்கின்றது. அவைகள்
1. கர்மத்தை, தர்மத்தைப் பற்றிய ஞானம்,
2. பிரம்ம ஞானம்
ஆகியவைகளாகும்.
வேதம் என்பது ஆத்ம ஞானத்தை அடைய உதவும் பிரமாணமாக கருதப்படுகின்றது. இது இரண்டு விதமான ஞானத்தை கொடுக்கின்றது. அவைகள்
1. கர்மத்தை, தர்மத்தைப் பற்றிய ஞானம்,
2. பிரம்ம ஞானம்
ஆகியவைகளாகும்.
கர்மமானது மூன்று வகையாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவைகள்
- காயிகம்- உடலினால் செய்யப்படுவது,
- வாசகம்- வாக்கினால்
செய்யப்படுவது,
- மானஸம் – மனதினால் செய்யப்படுவது. மனதினால் செய்யப்படும் செயலானது உபாஸனை, தியானம் ஆகியவைகளாகும்.
இதே புண்ணியத்திற்கு வேறு சில பலனைக் கொடுக்கும் தகுதியும் உண்டு. சிலருக்கு போகத்தினால் தன்னை திருப்திபடுத்த
முடியாது எனவே இவைகள் மீது வைராக்கியம் எற்படுகின்றது. தர்மவழியில் வாழ்ந்து வந்தாலும் அதனால்
விளையும் புண்ணியத்தினால் வரும் போகத்தை விரும்புவதில்லை. இந்த விவேகம், வைராக்கியம் வளர்வதற்கு
புண்ணியம் உதவுகின்றது. கர்மத்தை யோகமாக
செய்யும்போது மனதில் தூய்மையேற்பட்டு இந்த விவேகம், வைராக்கியம் வளர்வதற்கு
உதவுகின்றது. ஒரு சிறிய வாயுவானது
தீயை வளர்வதற்கும், அதை அழிப்பதற்கும் உதவுவது போல புண்ணியம் கொடுக்கும்
போகத்தை அனுபவித்தால், விவேக, வைராக்கியம் மறைந்து விடும். ஆனால் அனுபவிக்காமல் விட்டுவிட்டால் அது முழு
மனநிறைவை அடைவதற்கும், சம்சாரத்திலிருந்து விடுதலை அடைவதற்கும் குருவை
நாடி பிரம்ம ஞானத்தை அடையவும் முயற்சியை மேற்கொள்ள வைக்கும். வேதாந்த உபதேசத்தை பெற குருவை அணுகுவான்.
கர்மத்தை உபதேசிக்கும் வேதாந்தத்தின் முதற்பகுதி கர்ம காண்டம் என்றும், ஆத்ம ஞானத்தை உபதேசிக்கும் கடைசிப்பகுதி ஞான
காண்டம் என்றும் கூறப்படுகின்றது. கர்ம காண்டத்தின் மூலம்
விவேக, வைராக்கியம், முமுக்ஷுத்வம் அடைந்தவுடன் அதனுடைய வேலை முடிந்து விடுகின்றது.
பிரம்ம ஞானம்:
வேதத்தின் ஞான காண்டம் பிரம்ம ஞானத்தை அடைய உபதேசிக்கிறது. பிரம்மம் என்பது என்றும் இருக்கின்ற பூரணமான ஒரு தத்துவம். இந்த உபதேசத்தை குருவின் மூலமாக கேட்டறிந்து பிரம்மஞானத்தை அடைந்து விடவேண்டு.ம். இதுவரை அறிவைத்தான் அடைந்து இருக்கின்றான். பிரம்மத்தை அறிவதும், அடைவதும் ஒரே சமயத்தில் நடக்கின்றது.. பிரம்மன் எங்கும் இருப்பதால் அதை அடைய தேவை இல்லை. அதுவே நான்தான் என்று அறிந்தாலே போதும்.

பிரம்ம ஞானத்தை எப்படி அடைய முடியும் என்று வினவினால் அதை அடைய உதவும்
பிரமாணத்தின் மூலமாகத்தான் அடைய முடியும் என்பதே பதிலாகும். எந்த ஒன்றை அறிய வேண்டுமானாலும் அதை அறிய
உதவுகின்ற கருவியை பயன்படுத்த வேண்டும். ஒரு பொருளை பார்க்க
வேண்டுமானால் கண்ணைத்தான் பயன்படுத்த வேண்டும். அதேபோல பரம்பொருளை
அறிவதற்கு அதை உபதேசிக்கக்கூடிய பிரமாணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த பிரமாணம் வேதாந்தம்தான். இதை உபநிஷத் என்றும் அழைப்பர். இது ஒரு சப்த பிரமாணம்.
சப்த பிரமானம்:
சப்தமானது அர்த்தத்தை கொடுத்தால் அதற்கு சப்த பிரமாணம். இந்த பிரமாணத்தை லௌகீக சப்தபிரமாணம், வைதீக சப்த பிரமாணம் என்று இதை இருவகையாக
கூறுவர். நம்முடைய அன்றாட
வாழ்க்கையில் நாம் பேசுகின்ற வார்த்தைகளால் அடைய உதவும் சப்த பிரமாணங்கள். லௌகீக சப்தபிரமாணமாகும். வேதத்தின் சப்த பிரமாணத்தின் மூலமாக அடைகின்ற
சப்த பிரமாணமானது வைதீக சப்த பிரமாணகும். இதன் மூலமாகவும் அறிவானது
அடையப்படுகின்றது. இந்த அறிவே பிரம்ம
ஞானம். இந்த சப்த பிரமாணம்
எந்த இடத்தில் நமக்கு துணைப்புரியும் என்று விசாரம் செய்யப்படுகின்றது.; ஒரு வாக்கியத்தை உச்சரித்து அடையும் அறிவுக்கு
சப்த பிரமாணம். தெரிந்த விஷயத்தில்தன் இந்த பிரமாணத்தினுடைய பயன் அடையப்படும். உதாரணமாக ராமன் காட்டிற்கு சென்றார். இந்த வாக்கியத்திலுள்ள அனைத்து சொற்களினுடைய
அர்த்தம் நமக்கு தெரிந்திருப்பதால் அந்த வாக்கியம் நமக்கு அறிவை கொடுக்கின்றது. நமக்கு புரியாத மொழியிலுள்ள வாக்கியத்தை
உச்சரிப்பதால் எந்த அறிவும் நமக்கு ஏற்படாது. எனவே சப்த பிரமாணம்
தெரிந்த விஷயத்தைத்தான் புரிய வைக்கும். இதை வேறு பிரமாணத்தினாலும் சரிபார்த்து கொள்ள
முடியும். சப்தமானது செயல்பட
காரணங்களாக இருப்பவைகளை ஐந்து விதமாக பிரித்திருக்கின்றனர். அவைகள்
- திரவியம் - அனுபவிக்கப்படுகின்ற பொருள்
- குணம் - அந்தப்பொருளின் தன்மை, நிறம் போன்றவை
- செயல் - அது செயல்படும் விதம்
- ஜாதி - பொதுவான பிரிவு
- சம்பந்தம் - ஏதாவது ஒரு உறவை கொண்டிருப்பது.
ஆகியவைகளாகும். சப்தத்தினால் ஒன்றை
விவரிக்க வேண்டுமென்றால் மேலே கூறப்பட்டுள்ள ஐந்தில் ஒன்றாவது அதற்கு இருக்க
வேண்டும்.
1. திரவியம் - நம் அனுபவத்தில்
பார்க்கப்படும் பொருள். புலன்களால் அனுபவிக்கப்படுகின்ற ஒரு பொருள்
அல்லது விஷயமாக இருக்க வேண்டும்.
2. குணம்
- திரவியத்தினுடைய நிறம், உருவத்தின் அளவு போன்ற தன்மைகளை கூறுதல். உதாரணமாக நீலமலர், சிறிய பானை.
3. க்ரியா
- திரவியத்தின் செயல்பாட்டை குறிப்பது. (உ-ம்) கையை ஆட்டிக்கொண்டு பேசுபவர், அவன் சமையல்காரன், காரோட்டி
4. ஜாதி
- பிரிவு, மனிதன், விலங்கு
5. சம்பந்தம் - பொருள்களுக்குமிடையே
உள்ள உறவுமுறை, உறவை சொல்லி ஒன்றை புரியவைத்தல். (உ-ம்) பசுவை போல, அவருடைய மகன்
சப்த பிரமாணம் எப்படி பிரம்மத்தை விளக்க முடியும் என்று கேள்வியெழும்போது இதை விளக்குவதற்கு
சப்தபிரமாணம் மூன்று வகையான நெருக்கடியை சந்திக்கின்றது. அவைகள்
1.
சாதகனுக்கு பிரம்மத்தைப்பற்றிய அறிவு இல்லாமல் இருப்பது, தெரியாத விஷயமாக இருப்பது
2.
சப்த பிரமாணம் அறிவைக் கொடுக்க வேண்டுமென்றால் மேற்கூறிய
ஐந்து நிபந்தனைகளுக்குட்பட்ட ஏதாவது ஒரு வகையை பிரம்மம் சார்ந்திருக்க வேண்டும். பிரம்மன் திரவியமில்லை, குணங்களற்றது, செயலற்றது, ஒன்றாக இருப்பதால் எந்த பிரிவும் இதற்கு கிடையாது, எதனோடும் உறவற்றது. எனவே சப்த பிரமாணத்தினால் பிரம்மத்தை
விளக்குவதில் இந்த நெருக்கடிக்குள்ளாகின்றது. பிரமேயம் என்பது வரையறுக்கப்பட்டதாக
இருக்கும்.
3.
சப்த பிரமானம் பிரம்மத்தை விளக்கிவிட்டால் அது பிரமேயமாகி
விடும். அபூர்ணமாகி விடும். அப்படி விளக்க முடியாவிட்டால் அதை பிரமாணமாக
கூற முடியாது,
இந்த நெருக்கடியை உபநிஷத் எப்படி சமாளிக்கின்றது என்பது விளக்கப்படுகின்றது;.
1.
பிரம்மன் தெரியாததாகவும் இருக்கின்றது அதேசமயம்
தெரிந்ததாகவும் இருக்கின்றது. உதாரணமாக பத்தாவது மனிதனை
தேடிக்கொண்டிருப்பதால் அந்த பத்தாவது மனிதன் தெரியாதவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான். கயிற்றில் தோன்றும் பாம்பில் கயிறானது
தெரிந்தும் தெரியாததாக இருக்கின்றது. அதேபோல இந்த
பிரம்மமானது ஆத்மாவாக நான் என்று குறிப்பிடப்படுகின்றது. இந்த விஷயத்தின் நான் என்ற சப்தம் ஆத்மாவை
அறியாமல், உடலை அறிகின்றது. சப்த பிரமாணத்தினால் தவறாக புரிந்ததை நீக்கி
தெரிந்ததை விளக்குகின்றது
2. பிரம்மன் சப்த பிரமாணம் செயல்படக்கூடிய ஐந்து நிபந்தனைகளைத்தாண்டி
இருக்கின்றது. இந்த பிரமாணம்
பிரம்மத்தை நேரிடையாக விளக்கவில்லை. விருத்தி என்பது ஒரு விஷயத்தை பற்றிய அறிவை
கொடுக்கும் ஒரு வழியாகும். இது இரண்டு வகையாக இருக்கின்றது. 1. அபிதா விருத்தி – படிக்கும்
வாக்கியத்திலிருந்து நேரிடையாக அடையும் அறிவு (உ-ம்) நீர் கொண்டு வா,
2. லக்ஷணா விருத்தி – வாக்கியமானது மறைமுகமாக
அறிவை கொடுப்பது. (உ-ம்) கிரிக்கெட் விளையாட இந்தியா இலங்கை செல்கிறது. இந்த வாக்கியத்தில் இந்தியா என்பது இந்திய
கிரிக்கெட் அணியை குறிக்கின்றது. இங்கு நேரிடையாக பொருள் கொள்ளாமல், அதற்கு சம்பந்தபட்ட சரியான பொருளை எடுத்துக்
கொள்கிறோம். வாச்யார்த்தம் என்பது வாக்கியம் நேரிடையாக பொருளைக்
கொடுப்பது. இது எங்கு
செயல்படவில்லையோ அந்த இடத்தில் லட்சியார்தத்தை பயன்படுத்தி பொருளை புரிந்து
கொள்ளலாம். இந்த லட்சியார்த்தம் மூன்று வகையாக இருக்கின்றது. அவைகள்
a. ஜகல் லக்ஷணம் – கங்கையில் கிராமம்
இருக்கின்றது என்ற வாக்கியத்தை படிக்கும் போது கங்கை என்ற சொல்லை விட்டு விட்டு
கங்கை கரையை எடுத்துக் கொண்டு பொருள் புரிந்து கொள்கின்றோம்.
b. அஜகல் லக்ஷணம் – சிவப்பு ஒடுகின்றது என்ற வாக்கியத்தில் குதிரை
என்ற சொல்லை சேர்த்துக் கொண்டு சிவப்பு குதிரை ஒடுகின்றது என்று புரிந்து
கொள்கின்றோம்
c. ஜகலஜகல் லக்ஷணம் (அ) பாகத்யாக லக்ஷணம். – ஐந்து வயதில் பார்த்த
ஒருவரை 20 வயதில் பார்க்கும் போது
அவன் தான் இவன் என்று கூறும் போது வயதை விட்டுவிட்டு உடலை மட்டும் எடுத்துக் கொண்டு
புரிந்து கொள்கின்றோம்.
உபநிஷத் பிரம்மத்தை
விளக்குவதற்கு லட்சியார்தத்தைதான் பயன்படுத்துகின்றது. உபநிஷத் நம்மைப்பார்த்து “நீ அதுவாக இருக்கிறாய்” என்று சொல்லும்போது இதில் நீ என்பது
ஜீவாத்மாவையும், அது என்பது பரமாத்மாவையும் என்று சொல்கின்றது. இதில் ஜீவனிடத்தில் உள்ள மூன்று சரீரங்களை
நீக்கி விட்டு சாட்சியாக இருக்கின்ற சுத்த சைதன்யத்தை எடுத்துக்கொண்டு, ஈஸ்வரனிடத்தில் உள்ள மூன்று பிரபஞ்சங்களையும்
நீக்கி விட்டு சாட்சியாக இருக்கின்ற சைதன்யத்தை எடுத்துக் கொண்டு ஐக்கியத்தை நிலை
நாட்டுகின்றது. இங்கு லட்சியார்தத்தின் மூலமாகத்தான்
விளக்குகின்றது.
3. பிரம்மன் சப்த பிரமாணத்தால் விளக்கப்பட்டு
விட்டால் அது பிரமேயமாகி விடும். அது வரையறைக்குட்பட்ட
பொருளாகி விடும், அநித்யமான வஸ்துவாகி விடும். உபநிஷத் நீ பிரம்மத்தை இது என்று தெரிந்து கொள்
என்று சொல்லவில்லை, அதாவது பிரமேயமாக சொல்லவில்லை ஆனால் பிரமாதாவாக
சொல்கின்றது. அறியப்படும் பொருளாக
உபதேசிக்கவில்லை. பிரமாதா என்று சொன்னாலும் அதுவும் வரையறைக்கு
உட்பட்டதாகின்றது. அதனால் பிரமாதாவும்
இல்லை என்று நிஷேதம் செய்கின்றது. இதனால் பிரம்மன் அறிவு
ஸ்வரூபம் என்றும், அறியப்படும் பொருளில்லை என்று சொல்லும்போது அறிபவனும்
இல்லையென்று ஆகின்றது, பிறகு அறிவு ஸ்வரூபம்
மட்டும் எஞ்சியிருக்கின்றது, இதுவே பிரம்மன் என்று புரிய வைக்கின்றது.
உபநிஷத் முகவுரை:
இந்த உபநிஷத் அதர்வன வேதத்தைச் சார்ந்தது. இதற்கு மாண்டூக்ய உபநிஷத் என்று பெயர். இது பன்னிரண்டு மந்திரங்களைக் கொண்டது. ஆனால் கௌடபாதர் (ஆதிசங்கரரின் குருவான கோவிந்தபாதருடைய குரு) இதற்கு ஸ்லோக வடிவில் விளக்கத்தை எழுதியிருக்கின்றார். 225 ஸ்லோகங்களில் நான்கு அத்தியாயமாக பிரித்து விளக்கம் எழுதியிருக்கின்றார்.

அத்தியாயம்-01 ஆகம பிரகரணம் – ஆகமம் என்பதற்கு வேதம்
என்ற வேறு பெயரும் உண்டு. இது பரம்பரையாக
சொல்லபட்டு வந்திருக்கின்றது. உபநிஷத் மந்திரமும்
அதன் விளக்கமும் சேர்ந்து வரும் 29 ஸ்லோகங்களை கொண்டது.
அத்தியாயம்-02 வைத்திய பிரகரணம் – இதில் இந்த பிரபஞ்சம்
பொய் என்று நிலை நாட்டுகின்றார்.
அத்தியாயம்-03 அத்வைத பிரகரணம் – பிரம்மன் ஒன்றுதான்
என்பதை நிலை நாட்டுகின்றார்.
அத்தியாயம்-04 அலாதிசாந்தி பிரகரணம் – அத்வைதத்திற்கு எதிராக
உள்ள கருத்துக்களை எடுத்துக் கொண்டு அவைகளை நிராகரிக்கின்றார். பிரம்மன் சத்யம், ஜகத் மித்யா என்று நிலை நாட்டுகின்றார்.
சாந்தி பாடம்:
மிக உயர்ந்த ஒன்றை அடைய முயற்சிக்கும்போது மிக அதிகமான தடைகள் வரும் இந்த
தடைகள் விலகுவதற்கு சாந்தி பாடங்கள் படிக்கப்படுவதுண்டு. யாருமே மற்றவர்கள் சுதந்திரமாக இருப்பதை
சகித்துக் கொள்ள மாட்டார்கள். நம்மைச் சார்ந்து
இருப்பவர்கள் நம்மை விட்டுப் போவதை விரும்பமாட்டார்கள். தேவர்களுக்கு மனிதன் ஒருவன் ஞானம் அடைந்து
விட்டால் அவனிடமிருந்து வரும் பலன் நின்று விடும். இந்திரியங்களுக்கு
ஞானம் வந்தவுடன் போகத்தை அனுபவிக்கும் விஷயங்கள் கிடைக்காது எனவே அவைகள் தடைகளை
ஏற்படுத்தும். எனவே தடைகள்
நம்மிடமேயிருந்து வரும்.
·
தேவர்களே நல்லதையே, வேதாந்தத்தையே எங்கள்
காதுகளால் கேட்போமாக, எவைகள் எல்லாம் எங்கள் காதுகளினால்
கேட்கப்படுகின்றதோ அவைகள் நல்லவைகளாக இருக்கட்டும்.
·
கண்களினால் நல்லதையே பார்ப்போமாக.
·
இவைகளிரண்டும் நல்ல ஆரோக்கியமான உறுதியான மனதை அடைவதற்கு
வேண்டுகிறார்கள். நம்முடைய மனதிற்கு
இந்திரியங்கள் வழியாக எதைக் கொடுக்கின்றோமோ அதைப்பொறுத்துதான் அதனுடைய நிலையும்
அமையும், அதாவது அது அமைதியுடனும், சஞ்சலமின்றியும் உறுதியுடனும் இருக்கும் வகையில் விஷயங்கள் இருக்க வேண்டும்.
·
கர்மேந்திரியங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
·
நாங்கள் உங்களை போற்றிக்கொண்டு இருப்பவர்களாக இருக்க
வேண்டும். வேத மந்திரங்களால்
ஸ்துதி செய்து கொண்டிருக்க வேண்டும். உறுதியான உடலுடன்
இருக்க வேண்டும். பிராரப்தத்தை மீறி
துர்மரணம் ஏற்படக்கூடாது
·
இறைவனால் கொடுக்கப்பட்ட முழு ஆயுளுடன் வாழ்வோமாக. இங்கே
சிஷ்யர்கள் ஸ்தூல, சூட்சும சரீரத்தின் ஆரோக்கியத்தை
வேண்டுகிறார்கள். உடலும் மனமும்
எடுத்துக் கொண்ட இலட்சியத்தை அடைவதற்கு உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும்.
·
ஓங்கி உயர்ந்த புகழுடைய இந்திரதேவன் சிஷ்யர்களான எங்களுக்கு
மங்கலத்தை வழங்கட்டும்.
·
அனைத்தையும் அறிகின்ற சூரியபகவான் எங்களுக்கு மங்கலத்தை
கொடுக்கட்டும்
·
தடையின்றி வானில் பறக்கின்ற கருடபகவான் போல தடையின்றி
எங்கள் இலட்சியத்தை அடைவதற்கு அருள் புரியட்டும்.
·
புத்திக்கு அதிஷ்டான தேவதையாக இருக்கின்ற பிருகஸ்பதி
எங்களுக்கு நன்மையை கொடுக்கட்டும், புத்திக் கூர்மையை
கொடுக்கட்டும்.
ஸ்லோகம் - 1
விசாரம்:
இதில் ஓங்கார விசாரம் செய்யப்படும் என்று உறுதிக் கூறுகின்றது. வேதாந்தத்தின் ஸாரம் பிரம்ம ஸத்யம், ஜகத் மித்யா என்பதேயாகும். பிரம்மத்தை தவிர வேறொன்றுமில்லை இதுவே
அத்வைதமாக இருக்கின்றது. நாம் த்வைதத்தை
அனுபவிக்கக் காரணம் என்ன என்று வினவினால் நம்முடைய அறியாமையினால் தான் தவறுதலாக
இருமையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம் என்பது பதிலாகும். வஸ்து ஒன்று பார்வை இரண்டு விதமாக இருக்கின்றது. ஞானியின் பார்வையில் பிரம்மம் மட்டும்தான்
தெரிகின்றது, அக்ஞானியின் பார்வையில் இருமை தெரிகின்றது. இந்த உலகம் தெரிகின்றது. இதில் எது உண்மையானது?
1. பிரம்மனை மட்டும் பார்ப்பதால் அவன் அடைவது முழு
மனநிறைவு. ஜகத்தை மட்டும் பார்ப்பதால் பயமும், துயரமும் அனுபவிக்கின்றோம், சம்சாரத்தை அனுபவிக்கின்றோம்.
2. எது நீக்கப்படுகின்றதோ அது பொய்யான பார்வை, எது தொடர்ந்து இருக்கின்றதோ அதுதான் உண்மையான
பார்வை. க யிற்றில் பாம்பை ஒருவர் பார்க்கின்றார், வேறு ஒருவர் கயிற்றை மட்டும்
பார்க்கிறார். அறிவினால் பாம்பை பொய்
என்று நீக்கிவிட்டால் அங்கு கயிறு மட்டும் தெரியும். அதுபோல ஆத்ம ஞானம்
வந்தவுடன் பார்த்து கொண்டிருக்கும் ஜகத் பொய்யென்று உணர்ந்து, பிரம்மனே உண்மையென்று அறிகின்றான்
3. அறியாமையில் இருக்கும்போது பிரம்மத்தை
பார்க்கின்றானா இல்லையா என்று வினவினால் இரண்டு பார்வையும் இருக்கின்றது. அறியாமையில் பூரண ஞானத்தோடு ஜகத்தை
பார்க்காததால் அது இருப்பதாக உணர்கின்றோம்.
4. தவறான ஞானத்திலிருந்து சரியான ஞானத்திற்கு
எப்படி செல்ல முடியும். பாம்பிடம் இருந்துதான்
விசாரத்தை ஆரம்பிக்க வேண்டும். எதை தவறாக பார்த்து
கொண்டு இருக்கின்றோமோ அதை விசாரம் செய்தால் உண்மையானதை அறிந்து கொள்ளலாம். இயற்கை நியதிப்படி அதிஷ்டானம் இல்லாமல் தவறு நடக்காது. அதாவது கயிறு இல்லாமல் பாம்பை பார்க்க முடியாது. அதிஷ்டானமும், அத்யாஸமும் பிரிக்க
முடியாது. இந்த நியதிப்படி ஜகத்
என்ற பிராந்தி திருஷ்டிக்கு ஆதாரமாக பிரம்மன் இருக்கின்றது. எனவே நமது விசாரத்தை ஜகத்திலிருந்துதான்
ஆரம்பிக்க வேண்டும். பானையை பார்க்கும்போது
களிமண்ணைத்தான் பார்க்கின்றோம். ஆனால் நாம் நாம-ரூபங்களைத்தான் உண்மையென்று பார்க்கின்றோம். ஜகத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும்
பிரம்மத்தை அறிவதற்கு இந்த ஜகத்தை விசாரம் செய்தால்தான் பிரம்ம சத்யம் என்ற அறிவை
அடைய முடியும். ஓங்கார விசாரத்தினால்
பிரம்மத்தை அறிய முடியும் என்று கூறுவதன் மூலம் ஒங்காரம் ஜகத்தை குறிக்கின்றது. இதிலிருந்து ஜகத்தும், ஓங்காரமும் ஒன்று என்று புரிந்து கொள்ளலாம்.
ஓங்காரமே ஜகத் என்று எவ்வாறு கூறப்படுகின்றது?
இந்த ஜகத்தை நாம் இரண்டு கோணத்தில் பார்க்கலாம்.
1. பதார்த்த பிரபஞ்சம்,
2. பத பிரபஞ்சம்.
பதார்த்த பிரபஞ்சம் என்பது பார்க்கும் அனைத்து பொருட்களையும் இது குறிக்கின்றது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது. இந்த உலகத்தில் எவ்வளவு பொருட்களிருக்கின்றதோ அவ்வளவு பெயர்கள் (பதங்கள்) இருக்கும். பதத்துக்கும் பதார்தத்துக்கும் உள்ள சம்பந்தம் நாம-நாமி சம்பந்தம் என்று அழைக்கப்படுகின்றது. அபிதான (நாம) – அபிதேயம்(நாமி) என்றும் அழைக்கப்படுகின்றது. ஆனால் வெவ்வேறாக இருக்கின்றது. நெருப்பு என்று சொன்னால் வாயை சுட்டு விடாது.
இரண்டும் ஒன்றுதான் என்று நிச்சயிக்க போகின்றோம். பதார்த்த பிரபஞ்சம் என்பது இல்லை வெறும் பதம் மட்டும்தான் இருக்கின்றது என்று நிரூபிக்கப் போகின்றோம். (உ-ம்) ஒரு கிலோ தங்கத்தில் 20 விதவிதமான ஆபரணங்கள் செய்யப்படுகின்றன. முதலில் தங்கம் என்ற சொல் மட்டும் இருந்தது. அதிலிருந்து 20 ஆபரணங்கள் செய்த பிறகு 20 நாமங்கள் வந்து விட்டன, 20 பதார்த்தங்கள் வந்து விட்டன. தங்கத்தில் 20 நாமங்களும், 20 உருவங்களும் கொடுக்கப்பட்டன. ஒரு பதார்த்தமான தங்கமானது நாம-ரூபங்களுடன் சேர்ந்து காட்சியளிக்கும் போது 20 பதங்களும், 20 பதார்த்தங்களும் இருந்தாலும் அவைகள் இரண்டும் ஒன்றுதான். காரியமாக இருக்கும் பொருட்கள் அனைத்தும் நாம-ரூபங்களுக்கு வேறல்ல ஒன்றுதான் என்ற ஐக்கியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். காரியமான பதார்த்தம் பதத்திற்கு வேறில்லை. காரணத்திலிருந்து படைக்கப்பட்டது வெறும் பெயர் மட்டும்தான். ஒரு பொருளை காரியம் என்று நிரூபித்து விட்டால் அப்போது காரியம் வெறும் பதம்தான் என்று நிரூபிக்கபட்டதாகிறது. இந்த ஜகத் பிரம்மத்திடமிருந்து தோன்றியது என்று உபநிஷத் ஜகத்தை அறிமுகப்படுத்துகின்றது; இந்த ஜகத் காரியம் என்று சொல்வதால் இது பத-பிரபஞ்சமாகவும், பதார்த்த-பிரபஞ்சமாகவும் இருக்கின்றது. இந்த ஜகத்திலுள்ள அனைத்தும் வெறும் பதங்கள்தான் என்று நிரூபிக்கபட்டுவிட்டது.
பதபிரபஞ்சம்:
எல்லா பதங்களுக்கும் உபாதானமாக இருப்பது ‘அ’ என்ற சப்தம். இதுவே மற்ற சப்தங்களுக்கு மூலமாக இருக்கின்றது. ‘ம்’ என்ற சப்தம் எல்லா சப்தங்களுக்கும் முடிவாக காரணமாகின்றது. ‘உ’ என்ற சப்தம் எல்லா சப்தங்களையும் சேர்த்து எடுத்துக் கொள்ளப்படுகின்றது. இந்த மூன்று சப்தங்களும் சேர்ந்து ஓம் என்று உருவாகின்றன. இது பதபிரபஞ்சத்திற்கு உபாதான காரணமாக இருப்பதால் ஓம் என்ற சொல்லும் அனைத்து பத பிரபஞ்சங்களும் ஒன்றுதான். இதுவே ஓம் என்ற சொல் பதார்த்த பிரபஞ்சத்துடன் ஐக்கியமாகின்றது. பதார்த்த பிரபஞ்சமே ஜகத் என்று குறிப்பதால் ஓங்கார விசாரமும், ஜகத் விசாரமும் ஒன்றுதான் என்று புரிந்து கொள்ளலாம். ஓம் என்ற சொல்லும் ஜகத் என்ற சொல்லும் ஒன்றுதான். எனவே ஓங்கார விசாரத்தினாலும் பிரம்மத்தையே அடையலாம்.
மந்திர விளக்கம்:
ஓம் என்கின்ற இந்த எழுத்து (அழியாத பிரம்மன்) நம்மால் பார்க்கப்படுகின்ற இவைகள் அனைத்தும் (பதார்த்த பிரபஞ்சம்) ஓங்காரத்தினுடைய விளக்கம் ஆரம்பிக்கபடுகின்றது. ஓம் என்ற சொல் தியானம், விசாரம் என்ற விஷயங்களுக்கும் பயன்படுத்தபடுகின்றது. விசாரம் செய்வதன் மூலம் பிரம்மத்தை நாம் அடைகின்றோம். ஒங்காரம் பிரம்மத்திற்கு அருகில் இருக்கிறது. பிரபஞ்சத்தை அடைய உதவும் தெளிவான முழுமையான விசாரம்.
கடந்த காலத்தில் இருந்த அனைத்தும், இப்பொழுது இருக்கின்ற அனைத்தும் இனி வரப் போகின்ற அனைத்தும் ஓம் என்ற எழுத்து மட்டும்தான். எந்தவொன்று மூன்று காலத்திற்கும் வேறாக இருக்கின்றதோ, கடந்து இருக்கின்றதோ (இது மாயையை குறிக்கின்றது) அதுவும் ஓங்காரம்தான். மாயையிலிருந்து தோன்றியது காலமும், தேசமும், ஈஸ்வரன்தான் ஓங்காரம். ஓம் என்பது காரண காரிய பிரபஞ்சங்களை குறிக்கின்ற தத்துவம்.
ஸ்லோகம்-2
இது பதார்த்த பிரதானமாக கொண்ட மந்திரம். பதார்த்தம் என்பது வெறும் உருவம். இது அருவமான பிரம்மத்தில் ஏற்றி வைத்து விசாரம் செய்யப்படுகின்றது. பதமும், பதார்த்தமும் ஒன்றுதான் என்ற ஐக்கியத்தை விசாரம் செய்து உறுதி செய்யப்பட்டதால் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு பிரம்மத்தை அடையலாம். நாமமும், உருவமும் பிரிக்க முடியாதது. வட்ட வடிவமான வளையல் என்ற பெயருடைய தங்க நகையை வேறொரு உருவமாக மாற்றி அமைத்தால், வளையல் என்ற சப்தம் மறைந்து விடுகின்றது. வேறொரு நாம ரூபம் தோன்றி விடுகின்றது. இவை இரண்டும் ஒன்றாக இருப்பதால் இதிலிருந்து ஏதாவது ஒன்றை பிரம்மத்தில் ஒடுக்கி விட்டால் போதும் நாம் நிர்குண பிரம்மத்தை அடைந்து விடலாம். இந்த ஸ்லோகத்தில் அனைத்து பதங்களும் பதார்தத்தில் ஒடுக்கப்படுகின்றது).

ஆத்மாவும் ஜகத்தும் ஒன்றுதான் என்று ஐக்கியப்படுத்துகின்றது. எனவே ஜகத்தை விசாரம் செய்வது ஆத்மாவை விசாரம்
செய்வதற்கு சமமாகும். இவைகள் அனைத்தும்
பிரம்மன் என்றும், பிரம்மனும் ஆத்மாவும்
ஒன்று என்று சொன்னால், ஆத்மாவே அனைத்தும்
என்று புரிந்து கொள்ளலாம்.
இந்த ஸ்லோகத்தில் மூன்று விதமான கருத்துக்கள் இருக்கின்றது. அவைகள்
1. ஸர்வம் ஹ்யேதத் பிரஹ்ம
2. அயம் ஆத்மா பிரஹ்ம
3. ஸோ அயமாத்மா சதுஷ்பாத்
1. ஸர்வம் ஹி ஏதத் பிரஹ்ம – அனைத்தும் உண்மையில் இந்த பிரம்மனே. அனைத்தும் என்பது காரண, காரிய பிரபஞ்சம் இரண்டையும் குறிக்கின்றது. முதல் ஸ்லோகத்தில் கூறிய ஸர்வம் என்ன
சொல்கின்றதோ அதையே இங்கும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வாக்கியம் ஜகத்தும், பிரம்மனும் ஒன்று என்று கூறுகின்றது. ஜகத்தானது இந்த பிரம்மத்திடம் ஏற்றி
வைக்கப்பட்டுள்ளது. களிமண்ணால்
செய்யப்பட்ட விதவிதமான பானைகள் உண்மையில் வெறும் நாம-ரூபங்களோ. ஆனால் இவைகள்
களிமண்ணின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது. அதுபோல இந்த நாம-ரூபமான ஜகத் பிரம்மத்தின் மீது ஏற்றி
வைக்கப்பட்டிருக்கின்றது. மாயைக்கும், அதிலிருந்து வெளிவந்த அனைத்துக்கும் பிரம்மமே
ஆதாரமாக இருக்கிறது. பிரம்மன் காரண காரிய பிரபஞ்சத்திற்கும் ஆதாரமாக
இருக்கின்றது.
2. அயம் ஆத்மா பிரஹ்மன் – இந்த ஆத்மாதான் பிரம்மன். முதல் பகுதியில் கூறப்பட்ட அந்த பிரம்மன்தான்
இந்த ஆத்மாவாக இருக்கின்றது. இது ஒரு மகாவாக்கியம். இங்கு ஆத்மா என்பது ‘நான்’ என்ற சொல்லினுடைய
உண்மையான பொருள். இந்த என்ற சொல் ஜீவனை
சுட்டிக்காட்டி சொல்வதாக இருக்கின்றது. நானே இந்த பிரம்மனாக
இருக்கின்றேன். நானே இவைகள்
அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றேன். ரிக் வேதத்திலுள்ள
அய்த்தரேய உபநிஷத்தில் “பிரக்ஞானம் பிரம்ம” என்பதும், யஜூர் வேதத்திலுள்ள
ப்ருஹதாரண்ய உபநிஷத்தில் “அஹம் பிரஹ்மாஸ்மி” என்ற வாக்கியமும், சாம வேதத்திலுள்ள சாந்தோக்ய உபநிஷத்தில் உள்ள :”தத்துவமஸி” என்ற வாக்கியமும்
அதர்வன வேதத்திலுள்ள மாண்டுக்ய உபநிஷத்தில் உள்ள “அயம் ஆத்மா பிரஹ்ம” என்ற வாக்கியமும் மகாவாக்கியங்களாகும். இந்த நான்கு வாக்கியங்கள் மட்டுமல்ல எவ்வளவு உபநிஷத்துக்கள்
உள்ளனவோ அவ்வளவு மகாவாக்கியங்கள் உள்ளது. பிரதிக்ஞா மகாவாக்கியம் என்பது உபநிஷத்தின்
ஆரம்பத்தில் சொல்லப்படும் வாக்கியம். பிறகு அதை விசாரம்
செய்து நிரூபிக்கின்றது.
3. ஸோ அயமாத்மா சதுஷ்டாத்: இதில் ஆத்மாவைப்பற்றிய விசாரம்
செய்யப்படுகின்றது. எப்பொழுதெல்லாம் நான் என்று சொல்லுகிறோமோ அப்போது
நாம் எதைக் குறிக்கின்றோம் என்றால் ஆத்மாவோடு சேர்த்து அனாத்மாவான மூன்று
சரீரங்களைத்தான். அதாவது பிரம்மனோடு ஜகத்தையும் சேர்த்து புரிந்து கொண்டு
இருக்கின்றோம். உண்மையில் ஆத்மாவையும் அனாத்மாவையும்
பிரித்து புரிந்து கொள்ள வேண்டும். எனவே இவையிரண்டையும் சேர்த்து விசாரம் செய்ய
வேண்டும். நாம் எவ்வாறு புரிந்து
கொண்டிருக்கின்றோமோ அதிலிருந்துதான் உபநிஷத் விசாரத்தை ஆரம்பிக்கின்றது.
ஆத்மா-அனாத்மா விசாரம்:
ஸஹ அயம் ஆத்மா – அந்த இந்த ஆத்மா. இதில் அந்த என்ற சொல் பிரம்மத்தை குறிக்கின்றது. பிரம்மனே இந்த ஆத்மா என்று பொருள்
கொள்ளப்படுகின்றது.
சதுஷ்பாத் – நான்கு பாதங்களுடன் (பகுதிகளை) கூடியது. அறியாமையில் ஜீவன் ஆத்மாவை எப்படி தவறாக
புரிந்து கொண்டிருக்கின்றானோ அதன் அடிப்படையில் நான்கு பாதங்களாக உபநிஷத்
பிரித்துள்ளது. இதில் மூன்று பாதங்கள்
ஆத்மா மீது ஏற்றி வைக்கப்பட்ட ஜகத், நான்காவது அதிஷ்டானமாக இருக்கின்ற ஆத்மா. விவகாரத்திற்கு நம்முடைய வசதிக்காக ஒன்றை நாம்
பிரிக்கின்றோம். அதுபோல பிரிக்க முடியாத ஆத்மாவை நான்காக
பிரித்து விசாரம் செய்யப்படுகின்றது.
ஸ்லோகம் – 3
அவஸ்தாத்ரயம் மூலம் ஆத்ம விசாரம் செய்யப்படுகின்றது. ஆத்மாவை நான்காக பிரித்து,. அதில் முதல் பாதம் இதில் கூறப்படுகின்றது. அவஸ்தாத்ரயம் மூலம் ஆத்மாவின் முதல் மூன்று பாதங்களை விளக்குகிறது. நான்காவது பாதத்தில் அதை விசாரம் செய்கின்றது. இந்த ஜகத்தை மூன்று அவஸ்தைகளுக்குள் அடக்கப்படுகிறது எனவே அவஸ்தாத்ரய விசாரமும், ஜகத் விசாரமும் ஒன்றாகின்றது. நான்காவது பாதம் மூன்று அவஸ்தைகளுக்கும், ஜகத்துக்கும் அதிஷ்டானமாக எது இருக்கின்றதோ அதை பற்றிய விசாரம்.

ஜகத்தானது காரண பிரபஞ்சம், சூட்சும பிரபஞ்சம், ஸ்தூல பிரபஞ்சம் என்று மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றது. உலகத்தில் நாம் பார்த்து அனுபவிக்கும் பிரபஞ்சம் ஸ்தூல
பிரபஞ்சம். இது சூட்சும பிரபஞ்சத்திலிருந்து தோன்றியிருக்கின்றது; காரண பிரபஞ்சம் மாயையை குறிக்கின்றது. ஸ்தூல பிரபஞ்சம் ஜாக்ரத் பிரபஞ்சம் என்றும்
அழைக்கப்படுகின்றது ஸ்தூல பிரபஞ்சம் ஜாக்ரத் அவஸ்தையில் அனுபவிக்கப்படுகின்றது. நாம் விழித்துக் கொண்டிருக்கும்போது
அனுபவிக்கும் பிரபஞ்சமே ஸ்தூல பிரபஞ்சம். கனவில் அனுபவிக்கும்
விஷயங்கள் அனைத்தும் சூட்சுமாக இருக்கிறது எனவே அதை சூட்சும பிரபஞ்சம் என்று
அழைக்கப்படுகின்றது. ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவிக்கும் பிரபஞ்சம்
காரண பிரபஞ்சம்
ஆத்மாவுக்குத்தான் இந்த விழிப்பு நிலை என்று கூறப்படுகின்றது. ஆத்மா அப்பொழுது தன்னுடைய அபிமானத்தை ஸ்தூல சரீரத்தில் வைக்கும்போது விழிப்பு நிலையில் இருக்கின்றது. விழிப்பு பிரபஞ்சத்தை அனுபவிக்கின்றது. சூட்சும சரீரத்தில் அபிமானிக்கும் போது சூட்சும பிரபஞ்சத்தை அனுபவிக்கின்றது; காரண சரீரத்தில் அபிமானிக்கும்போது காரண பிரபஞ்சத்தை அனுபவிக்கின்றது. நான்தான் இந்த ஆத்மா என்று புரிந்து கொண்டு இந்த விசாரத்தை செய்ய வேண்டும்.
ஜாக்ரத் பிரபஞ்சம் மூன்றாக பிரிக்கப்படுகின்றது. அவைகள்
1. அனுபவிப்பவன்,
2. அனுபவிக்க உதவும் கருவி,
3. அனுபவிக்கப்படும் பொருள்.
ஆகியவைகளாகும்.
ஜாக்ரத் பிரமேயம் பார்த்து அனுபவிக்கும் பொருட்கள், ஜாக்ரத் பிரமாணம் ஞானேந்திரியங்கள், ஜாக்ரத் பிரமாதா என்பவன், மனதில் பிரதிபலிக்கும் ஆத்மாவுடன் (சிதாபாசம்) கூடிய மனம். ஆத்மாவும், ஜாக்ரத் பிரமாதாவும், ஞானேந்திரியங்களான பிரமாணமும் சேர்ந்து விஸ்வன் என்று அழைக்கப்படுகின்றது. ஆத்மாவையும், அனைத்து ஜாக்ரத் பிரபஞ்சமும் சேர்ந்து விராட் என்று அழைக்கப்படுகின்றது. இந்த விஸ்வன், விராட் என்ற இரண்டிலும் ஆத்மா என்பது பொதுவாக இருக்கின்றது. விஸ்வன் தனிப்பட்ட ஜீவனையும், விராட் சமஷ்டி சரீரத்தைக் குறிக்கின்றது. விஸ்வன் மூன்று சரீரத்திலும் அபிமானம் வைத்திருப்பதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. ஆத்மாவில் முதல் பாதத்தில் விஸ்வன், விராட் என்ற இரண்டை எடுத்துக் கொண்டு விசாரம் செய்யப்படுகின்றது. விஸ்வனை மட்டும் எடுத்துக் கொண்டால் ஒரு விஸ்வனுக்கு ஒரு ஆத்மா என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டும் எனவே இரண்டும் சேர்ந்து எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
அவஸ்தாத்ரய விசாரம், த்வம் பத விசாரத்திற்காக உதவுகின்றது. இது ஆத்ம ஸ்வரூபத்தை அறிய உதவுகின்றது. ஆனால் இந்த உபநிஷத்தில் இந்த விசாரம் ஜீவ-பிரம்ம ஐக்கியத்தை புரிந்து கொள்ள பயன்படுத்தபடுகின்றது. இந்த விசாரத்தில் மூன்று சரீரத்திற்கு அப்பாற்பட்டதும், மூன்று பிரபஞ்சத்திற்கும் அப்பாற்பட்டதுமான பிரம்ம தத்துவத்தை எடுத்துக் காட்டப்படுகின்றது
ஜாக்ரத் ஸ்தானஹ:
விஸ்வனும், விராட்டும் ஜாக்ரத் அவஸ்தையே இருப்பிடமாகக் கொண்டது. ஆத்மா. ஸ்தூல சரீரத்தை உபாதியாக கொண்டது. ஆத்மா என்பது இறுதியான பொருள். இது ஸ்தூல சரீரத்தை அபிமானிக்கும் போது ஜாக்ரத் அவஸ்தையில் இருக்கின்றது. ஒரு உடலை எடுத்துக்கொண்டு ஸ்தூல சரீரத்தை அபிமானிக்கும் போது அதற்கு விஸ்வன் என்றும், ஸ்தூல பிரபஞ்சத்தை அபிமானிக்கும்போது அதுவே விராட் என்றும் அழைக்கப்படுகிறது.
ப3ஹிஷ்ப்ரக்ஞஹ:
இது விஸ்வனைக் குறிக்கின்றது, வெளி விஷயமான அறிவை உடையவன் என்ற அர்தத்தைக் கொண்டது. ஆத்மா வெளியே உள்ள விஷயங்களை அறிந்தவனாக இருக்கின்றது. இங்கு வெளியே என்பது ஸ்தூல சரீரத்திற்கு வெளியே என்று எடுத்துக்கொள்ள வேண்டும். நம் மனதிலுள்ள எண்ணங்களைத்தான் நாம் பார்க்கின்றோம், அனுபவிக்கின்றோம். உண்மையில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் விஷயங்களை, உலகத்தை அனுபவிக்கவில்லை. எனவே உலகம் ஒன்றாக இருந்தாலும் வெவ்வேறு அனுபவங்களை ஜீவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே சைதன்யம் எப்பொழுதும் உள்ளே இருந்து கொண்டு மனதில் உள்ள விருத்திகள் மூலமாக அனுபவத்தை உண்டாக்குகின்றது.. எந்தவொரு எண்ணமானது வெளி விஷயங்களிலிருந்து உண்டானதோ அதை பிரகாசப்படுத்திக்கொண்டு இருக்கின்றது. விராட்டிற்கு இந்த நிலை ஏற்படாது. ஏனென்றால் அனைத்து ஸ்தூல சரீரங்களும் ஒன்றேதான் ஸ்தூல பிரபஞ்சம் முழுவதும் அவரது சரீரம்.
ஏகோனவிம்ஷதிமுக: (ஏகம் + ஊனம் + விம்ஷதி + முக)
இருபதில் ஒன்று குறைந்த(பத்தொன்பது ) துவாரங்களை உடையது இந்த ஆத்மா. அவைகள் ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து பிராணன்கள், சித்தம், மனம், புத்தி, அகங்காரம் ஆகியவைகளாகும். இவைகள் சூட்சும சரீரத்தின் அங்கங்களாகும். இவைகளின் வழியாக வெளி விஷயங்களை எண்ணங்களாக மாற்றி பிரகாசப்படுத்திக் கொண்டிருக்கின்றது. உண்மையில் ஞானேந்திரியங்களின் வழியாகத்தான் எண்ணங்கள் தோன்றுகின்றன. மற்றவைகள் இந்த இந்திரியங்களுக்கு உதவியாக இருப்பதால் இவைகளையும் துவாரங்களாக குறிப்பிடப்படுகின்றது.

ஸ்தூல பு4க்3: ஸ்தூலமான பொருட்களை
அனுபவிப்பவன், உலகத்தை அனுபவிப்பவன்.
நான் (ஆத்மா) வெளி விஷயங்களை
பத்தொன்பது துவாரங்களின் வழியாக அனுபவிக்கின்றேன். இந்த நிலையில் அறிவும்
வெளியே இருப்பதை அறிய வைக்கின்றது. எந்தவொரு சைதன்ய
ஸ்வரூபம் அனைத்து ஸ்தூல ஜீவ சரீரங்களையும் நான் என்று அபிமானிக்கின்றதோ அதற்கு
விராட் என்று பெயர். எனவே அவருக்கு சம்சாரம் என்பதே கிடையாது. இந்த விராட்டை மனித உருவமாக கற்பணை செய்து அதற்கு ஏழு
அங்கங்கள் ( ஸப்தாங்கஹ ) இருப்பதாக கூறப்படுகின்றது. அதாவது அனைத்து ஸ்தூல பிரபஞ்சத்தையே விராட்டின்
உடலாக கற்பனை செய்யபடுகின்றது. விராட்டின் ஏழு அங்கங்களானது,
1. தலை - சொர்க்க லோகம்
2. கண்கள் - சூரியன்
3. வாய் - அக்னி
4. பிராணன் - வாயு
5. மூத்ரஸ்தானம் - கடல் ( Kidney
Bladder )
6. மத்ய உடல் - ஆகாசம்
7. கால்கள்
- நிலம்
வைஸ்வாநரன்: இது விராட்டை குறிக்கின்றது. விராட்டை தியானம் செய்வதற்கு அக்னியை ஆலம்பனமாக கொண்டிருக்கின்றோம். அனைத்து மனிதர்களையும் விதவிதமாக இழுத்துக் கொண்டு செல்கின்றான். அவரவர் கர்ம பலனுக்கேற்ப அந்தந்த சூழ்நிலைக்கு கொண்டு செல்பவர். ஜீவர்களின் பாவ-புண்ணியத்திற்கேற்ப கர்ம பலனை கொடுப்பவர். அவர் சர்வேஸ்வரனாகவும் இருப்பதால் இது சாத்தியமாகின்றது. இவர் உலகமாகவும், மனிதர்களாகவும் இருக்கின்றார். அதாவது அனைத்துமாக இருக்கின்றார். அனைத்து ஜீவராசிகளில் சரீரத்திற்கு ஆதாரமாக இருக்கிறார்.
பிரதம பாதஹ: இதுதான் ஆத்மாவினுடைய முதல் பாதம். விஸ்வம்-விராட் சேர்ந்த தத்துவம். நாம் நம்முடைய ஸ்தூல சரீரத்தை அபிமானத்தை விட்டுவிடும் போது இந்த ஸ்தூல பிரபஞ்சத்தையே விலக்கி விடுகின்றோம்.
ஸ்லோகம் – 4
ஆத்மாவினுடைய இரண்டாம் பாதம் இதில் விளக்கப்படுகின்றது. கனவு-பிரபஞ்சம்: கனவு-பிரமாதா, கனவு-பிரமானம், கனவு-பிரமேயம். கனவு உலகத்தை அறிபவன், அறிய உதவும் கருவி, அறியப்படும் விஷயம். ஆத்மாவோடு சூட்சும பிரமாதா சேர்ந்தால் அதற்கு தைஜசன் என்று பெயர். ஆத்மாவோடு சமஷ்டி கனவு பிரபஞ்சம் சூட்சும பிரபஞ்சத்தோடு சேர்ந்தால் அதற்கு ஹிரண்யகர்ப்பன் என்று பெயர்.
ஸ்வப்ன ஸ்தானஹ – இது தைஜசனையும் ஹிரண்யகர்ப்பனையும் குறிக்கின்றது. தைஜசன் சூட்சும சரீரத்தை உபாதியாக கொண்டது. ஹிரண்யகர்ப்பன் அனைத்து சூட்சும சரீரத்தையும் உபாதியாக கொண்டது.
அந்த ப்ரக்ஞஹ: ஜென்ம-ஜென்மாந்திரமாக அனுபவிக்கப்பட்ட ஸம்ஸ்காரங்கள் அந்தக்கரணத்தில் இருக்கின்றது. அவைகள்தான் கனவு பிரபஞ்சத்தை தோற்றுவிக்கின்றது அதைத்தான் அனுபவிக்கின்றோம். கனவுலகிலும் இந்திரியங்கள் படைக்கப்படுகின்றன இவைகள் மூலம்தான் நம்மால் கனவுலகத்தை அனுபவிக்க முடியும். கனவில் தோன்றிய பொருட்கள், எண்ணங்களால் உற்பத்தியாகவில்லை. உள்ளேயிருக்கின்ற ஸம்ஸ்காரத்தினால் தோற்றுவிக்கப்பட்டு அறிவை அடைவதால் அதற்கு அந்தபிரக்ஞன் என்று கூறப்படுகின்றது.
ஸப்தாங்கஹ: ஏழு அங்கங்களையுடைய ஹிரண்யகர்ப்பன், சூட்சும சரீரங்களை அங்கங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏ கோனவிம்ஷதிமுக: கனவுலக விஷயங்களை அனுபவிக்க 19 இந்திரியங்கள் உடையதாக இருக்கின்றது.
ப்ரவி-வித-புக்: சூட்சுமமான விஷயத்தை அனுபவிப்பவன். (பிரவி விக்தம் – வேறொன்று)
தைஜஸஹ – ஞானத்தை பிரதானமாக உடையவன் – சூட்சும சரீரத்தின் அபிமானமுள்ள ஆத்மாவிற்கு இந்த பெயர். இது ஆத்மாவின் இரண்டாவது பாதமாகும். ஆத்ம ஜோதியின் உதவியால் கனவுலகிலுள்ள பொருட்களெல்லாம் பார்க்கப்படுகின்றது. அதே ஆத்மஜோதியின் உதவியால்தான் விழிப்பு நிலை பிரபஞ்ச பொருட்களையும் நாம் பார்க்கின்றோம்.
ஸ்லோகம் – 5
ஆத்மாவில் மூன்றாவது பாதம் இதில் விளக்கப்பட்டுள்ளது. இதில் வியஷ்டியை மட்டும் எடுத்துக் கொண்டு சொல்லப்படுகின்றது. காரண சரீரத்தில் அபிமானம் வைக்கும்போது அனுபவிக்கின்ற ஆழ்ந்த உறக்க நிலையை சுஷூப்தி அவஸ்தா என்று அழைக்கப்படுகின்றது. இதிலும் ஆத்மா சாட்சியாக இருக்கின்றது.
ஆத்மாவும் காரண பிரபஞ்சம் சேர்ந்து பிராக்ஞன் என்று அழைக்கப்படுகின்றது. வெளி பிரபஞ்சமும், சூட்சும பிரபஞ்சமும் இல்லாமலிருந்தால்தான் ஆழ்ந்த உறக்கம். அதனோடு ஆத்மாவை பற்றி அறியாமையும் சேர்ந்து இருக்கும்.
ஆத்ம அக்ஞானம் + வெளி உலகத்தை அனுபவித்தல் = ஜாக்ரத் அவஸ்தா
ஆத்ம அக்ஞானம் + சூட்சும உலகத்தை அனுபவித்தல் = ஸ்வப்ன அவஸ்தா
ஆத்ம அக்ஞானம் + எந்த பிரபஞ்சமும் இல்லாத நிலை = சுஷுப்தி அவஸ்தா
இதில் ஆழ்ந்த உறக்கத்தின் லட்சணம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. எந்த காலத்தில், எந்த இடத்தில் உறங்கிக்கொண்டிருந்தாலும் இந்திரியங்களை தனக்குள் ஒடுக்கியிருப்பவன். எந்த ஒன்றிலும் ஆசை கொள்வதில்லை. ஆசை வயப்படுத்துகின்ற ஜாக்ரத் அவஸ்தையில் உள்ள பொருட்கள் எதிலும் ஆசை கொள்வதில்லை. இதில் ஜாக்ரத் அவஸ்தை நிஷேதம் செய்யப்பட்டு விட்டது. எந்தவிதமான கனவும் பார்ப்பதில்லை. அதுதான் சுஷுப்தி அவஸ்தை. இது காரண சரீரத்தை உபாதியாக கொண்டது.
ஆழ்ந்த உறக்கத்தில் ஸ்தூல, சூட்சும பிரபஞ்சம் காரண பிரபஞ்சத்தில் ஒடுங்கி விடுகின்றது. இதேபோல இந்த இரண்டு சமஷ்டி பிரபஞ்சங்களும் காரண பிரபஞ்சத்தில் ஒடுங்கி விடுகின்றது. இந்த அவஸ்தையில் இருமைகளை இழக்காமல் ஒன்றாகிவிட்டிருக்கும். இவைகள் அந்தந்த அவஸ்தையை அனுபவிக்கும்போது வெளிப்பட்டுவிடும். இந்த காரண சரீரத்தில் அபிமானம் வைக்கும் ஆத்மாவை ஒன்றாக இருப்பவன் என்று அழைக்கப்படுகின்றது.
ஜாக்ரத் அவஸ்தையில் ஸ்தூல பொருட்கள், விருத்திகளாக இருக்கின்றன. கனவு அவஸ்தைல் எவ்வளவு பொருட்கள் தோன்றுகின்றனவோ அவ்வளவு எண்ணங்கள் இருக்கின்றன. இந்த இரண்டு ஞானங்களும் உறக்கத்தில் குவிந்து இருக்கின்றன. நிர்விசேஷ ஞானங்களாகிவிட்டன. உதாரணமாக அறையில் உள்ள பொருட்கள் இருளில் ஒன்றாகி விடுகின்றது. வெளிச்சம் வந்ததும் அவைகள் தத்தம் நிலைக்கு வந்து விடுகின்றன. அதுபோல காரண சரீரத்தில் இருக்கின்ற இருள் போன்ற அக்ஞானம் இருப்பதால் எல்லா பிரபஞ்சங்களும் மறைக்கப்பட்டு விட்டன.
ஆனந்தமய: இந்த நிலையில் ஆனந்தம் அதிகமாக இருக்கின்றது. காரண அவஸ்தையில் மனம் ஒடுங்கியிருப்பதால் ஆனந்தம் அதிகமாக இருக்கின்றது. மற்ற இருநிலைகளிலும் மனம் இரு பிரபஞ்சங்களில் உள்ள விஷயங்களில் சென்று விடுகின்றது.
ஹி ஆனந்தபுக் – பிராக்ஞன் ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான்.
சேதோமுகஹ – ஜாக்ரத், ஸ்வப்ன அவஸ்தகளின் வாசல்.
விழிப்பு நிலையிலிருந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுதான் கனவு நிலைக்கு செல்வான். அதேபோல கனவு நிலையிலிருந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுதான் விழிப்பு நிலைக்கு வருவான். இதிலிருந்து ஆழ்ந்த உறக்கம் இரு அவஸ்தகளுக்கும் வாசலாக இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.
ப்ராக்ஞன்: - இந்த ப்ராக்ஞன் அறியாமையில் இருக்கின்றான். காரண நிலையில் சமஷ்டி-வியஷ்டி பேதத்தை சொல்ல முடியாது. இரண்டும் ஒன்றாக இருக்கின்றது. எனவே ஈஸ்வரனாகவே கருதப்படுகின்றான். உதாரணமாக இருள் சூழ்ந்த வனத்தில் சமஷ்டி-வியஷ்டி என்ற வேறுபாடே கிடையாது. எல்லா தனி மரங்களும் இருளால் மறைக்கப்பட்டுள்ளதால், வியஷ்டியும் சமஷ்டியும் ஒன்றாகின்றது. பிராக்ஞன் பிரம்மத்தில் ஒடுங்கியிருப்பதாக சொல்லப்படுகின்றது. எனவே இந்த நிலையில்தான் அவனை எல்லாம் அறிந்தவன் என்று கூறப்படுகின்றது.
த்ருதீய பாதம் – இதுதான் ஆத்மாவின் மூன்றாம் பாதம். எதனால் ஒரு இடத்தை அடைவதற்கு உதவுகின்றதோ அதற்கு பாதம் என்று பெயர்.
ஸ்லோகம் – 6
இதில் ஈஸ்வரனின் லக்ஷணம் கூறப்படுகிறது. காரண பிரபஞ்சத்தில் வேறுபாடு தெரியாத நிலையானது விதைக்குள் இருக்கும் மரத்தின் முழு உருவம் தெரியாத நிலைக்கு ஒப்பிட்டுப் பார்த்து புரிந்து கொள்ள உதவுகின்றது.
ஏஷ ஸர்வேஷ்வரஹ – இந்த பிராக்ஞன்தான்
அனைத்து உலகங்களுக்கும் தலைவனாக இருக்கின்றான்.
ஏஷ ஸர்வக்ஞஹ – அனைத்தையும் அறிபவர்.
ஏஷ அந்தர்யாமி – உள்ளேயிருந்து கொண்டு அனைத்தையும் கட்டுபடுத்துபவர், அனைத்தையும் வியாபித்திருப்பவர், அனைத்துக்கும் இருத்தல் என்ற நிலையை கொடுப்பவர்.
ஏஷ ஸர்வஸ்ய யோனிஹி – அனைத்திற்கும் உபாதான காரணமாக இருப்பவர்.
ப்ரபவ அப்யயஹ ஹி பூதானாம் – எல்லா ஜீவராசிகளுடைய பிறப்பு-இறப்பிற்கும் காரணமாக இருப்பவர்.

எது உற்பத்திக்கும், இருப்புக்கும் (ஸ்திதி), அழிவுக்கும் காரணமாக இருக்கின்றதோ, அதுவே உபாதான காரணமாக இருக்கின்றது. நிமித்த காரணம் வெறும் உற்பத்திக்கு மட்டும்
காரணமாக இருக்கின்றது.
----000-----
No comments:
Post a Comment