மாண்டூக்ய உபநிஷத் - பகுதி-3
ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது –
07/04/2022
www.poornalayam.org
ஸ்லோகம் – 8
காரியம் என்பது நாம ரூபத்துடன் கூடிய அதிஷ்டானம். நாம என்பது பதம், ரூபம் என்பது பதார்த்தம், பத பிரபஞ்சமும், பதார்த்த பிரபஞ்சமும் ஒன்றுதான் என்று நிரூபிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நாமமும்-ரூபமும் ஒன்றுதான் நிலைநாட்டப்பட்டது. . நாமத்தை சொல்லும் போது அதன் ரூபத்தில் இதை ஒடுக்குகின்றோம். ஓங்கார விசாரம் பதத்தை பிரதானமாக கொண்ட அனைத்து பிரபஞ்சத்தை பற்றிய விசாரம். அனைத்து பதங்களும் ‘ஓம்’ என்ற சொல்லோடு ஐக்கியப்படுத்தப்படுகின்றது. நம் கண்முன்னே இருக்கும் ஜகத்தை இதிலுள்ள பதார்த்தங்கள் அனைத்தும் பதங்களில் ஒடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பதங்களுக்கும் ‘அ’ உபாதான காரணமாக இருக்கின்றது. மற்ற சப்தங்கள் இதை ஆதாரமாக கொண்டிருக்கின்றது. அவைகளை ‘உ’ என்ற எழுத்தால் குறிப்பிடப்படுகின்றது. பின்பு அனைத்து சப்தங்களும் ‘ம்’ என்ற சப்தத்தில் லயமடைகின்றது. இதன் அடிப்படையில் பார்த்தால் ஓம் என்பது ஜகத்தைக் குறிக்கின்றது. ஓம் என்ற சொல் ஜகத்தைக் குறித்தால் அதற்கு அதிஷ்டானமான பிரம்மமும் இதனுடன் இருக்கின்றது.

ஸஹ அயம் ஆத்மா – நம்மால் விசாரம்
செய்யப்பட்ட இந்த ஆத்மா, அனாத்மாதான் ஓம் என்ற சொல்லால்
குறிக்கப்படுகின்றது. ஓங்காரம் இரண்டு
ஸ்வரூபமாக இருக்கின்றது. அவைகள்
1.
ஓம் என்ற சொல் ஒரு எழுத்தாக எடுத்துக் கொள்கின்றோம்.
2. அ, உ, ம் என்று மூன்றாகவும்
எடுத்துக் கொள்ளலாம்.
மாத்திரை என்பது ஒரு எழுத்தை உச்சரிக்கும் கால அளவு, அமாத்திரம் என்பது சப்தமற்ற நிலை. அத்யக்ஷரம், அதிமாத்ரம் இவைகள்
ஓங்காரத்தை விளக்குகின்றது. அத்யக்ஷரம் என்பது ஒரு
எழுத்தாக இருக்கின்ற ஓங்காரம். இதுவே ஆத்மா, அதிமாத்ரம் என்பது நான்கு மாத்திரைகளாக தனித்தனிப்பாகங்களாக
இருக்கின்ற ஓங்காரம். இதுவும் ஆத்மா. இதேபோல ஆத்மாவை மூன்றாகவும், நான்கு பாகங்களாகவும் நம்மால் பார்க்கப்பட்டது. இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும்போது ஒரு ஆத்மா
அத்யக்ஷரம் என்ற ஓரெழுத்து ஓங்காரத்தை குறிக்கின்றது. நான்கு பாதங்களுடைய ஆத்மா நான்கு மாத்திரைகளுடைய
ஓங்காரத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றது. ஆத்மாவின் நான்கு
பாகங்கள் எந்த வரிசையில் இருக்கின்றதோ அதே வரிசையில் நான்கு மாத்திரைகள சேர்த்து
பார்க்க வேண்டும். முதல் பாதம் – அகாரம், இரண்டாவது பாதம் – உகாரம், மூன்றாவது பாதம் – மகாரம், நான்காவது பாதம் – அமாத்திரம்.
பாதாஹா மாத்ராஹா - ஆத்மாவின் நான்கு பாதங்களே
நான்கு மாத்திரைகள்.
மாத்ரா ச பாதாஹ – ஓங்காரத்தின் நான்கு மாத்திரைகளும் நான்கு பாதங்கள்
இவ்வாறூ கூறுவதன் காரணம் அந்த வரிசைப்படி ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
அகார, உகார, மகார இதி – அ, உ, ம் என்ற மாத்திரைகள்.
மாத்ரா ச பாதாஹ – ஓங்காரத்தின் நான்கு மாத்திரைகளும் நான்கு பாதங்கள்
இவ்வாறூ கூறுவதன் காரணம் அந்த வரிசைப்படி ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
அகார, உகார, மகார இதி – அ, உ, ம் என்ற மாத்திரைகள்.
ஸ்லோகம்-09
இதில் முதல் மாத்திரையும், ஆத்மாவின் முதல்
பாதமும் ஒன்று என்று கூறப்படுகின்றது.
இதனாl இரண்டு பலன் கிடைக்கின்றது. avaikaL,
1. ஓங்காரத்தினுடைய
விசாரம்,
2. நான்காவது மாத்திரையான
அமாத்ராவை அறிவது.
ஓங்காரத்திலுள்ள ‘அ’ என்ற எழுத்து ஜாக்ரத்
பிரபஞ்சத்தை ஒடுக்கியிருக்கிறது. ‘உ’ என்ற எழுத்து கனவு பிரபஞ்சத்தை ஒடுக்கி
இருக்கின்றது. ‘ம்’ என்ற எழுத்து ஆழ்நிலை உறக்கdதிலுள்ள சப்த பீஜத்தை குறிக்கின்றது. இதில் அகாரத்தை
ஆலம்பனமாகக் கொண்டு வைஷ்வாநரனை தேவதையாக சொல்கின்றது. இந்த இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை, இப்படி தியானிப்பதால் அடையும் பலன்
கூறப்படுகிறது. இந்த பலன் இருவகையானது. அவைகள்,
1. நிஷ்காம பலன் – சித்தஸுத்தி அடையலாம்.
2. சகாம பலன்.
ஆகியவைகளாகும்.
அகாரஹ பிரதமா மாத்ரா – இவர்தான் ஒங்காரத்தின் முதல் மாத்திரையான அகாரமாக இருக்கின்றார். இது வைஷ்வாநரனை தியானிப்பதற்கு ஆலம்பனம் என்று கூறுகின்றது.
ஆப்தே – ( வியாபித்து இருத்தல் ), வியாபித்து இருக்கின்ற காரணத்தால்
ஆதிமத்வா – ( முதலில் இருப்பது ), முதலில் இருக்கின்ற காரணத்தால்
இந்த இரண்டு காரணத்தினால் வைஷ்வாநரனும், அகாரமும் ஒன்று என்று
புரிந்து கொள்ள வேண்டும். இவையிரண்டும் சமமாக கருதப்படுகின்றது.
·
எது உபாதான காரணமாக இருக்கின்றதோ அதுதான் எல்லா
காரியங்களிலும் வியாபித்திருக்கும். அனைத்து சொற்களுக்கும்
உபாதான காரணமாக இருப்பதால் அதற்கு வியாபித்திருக்கும் குணம் இருக்கின்றது. எழுத்துக்களில் முதலில் இருப்பது அதேபோல
வைஷ்வாநரன் என்கின்ற ஈஸ்வரன் ஸ்தூல பிரபஞ்ச முழுவதையும் வியாபித்திருக்கின்றார்.
எனவே இவருக்கும் வியாபித்திருக்கும் குணம் இருக்கிறது.
·
லய கிரமத்தில் எது கடைசியாக தோன்றியதோ அதுதான் முதலில்
அபவாதம் செய்வோம். எனவே விராட்தான் இந்த
வகையில் முதலில் இருப்பவர்.
சகாம பலன்
ஆப்னோதி ஹ வை ஸர்வான் காமான் – ஆசைப்படுகின்ற அனைத்து பொருட்களையும் அடைந்து விடுவான். எல்லா ஆசைகளும் நிறைவேறுகின்றன.
ஆதிஷ பவதி – எல்லா விஷயத்திலும் முதன்மையாக இருப்பான்.
யஹ ஏவம் வேத3 – எவனொருவன் இங்கு சொல்லியபடி இந்த உபாஸனையை செய்கின்றானோ அவன் மேலே கூறிய பலன்களை அடைகின்றான்.
ஸ்லோகம்-10
ஸ்வப்ன ஸ்தானஹ தைஜஸஹ - கனவு நிலையை உடைய ஆத்மாவாகிய தைஜஸனாகவும், சூட்சும பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக உள்ள ஹிரண்யகர்ப்பனையும் இதில் குறிப்பிடப்படுகின்றது.
உகாரே த்வீதியா மாத்ர – ஓம் என்ற சொல்லிலுள்ள இரண்டாவது மாத்திரை உகாரம், இது ஹிரண்யகர்ப்பனோடு ஒப்பிடப்படுகின்றது. உகாரத்தை ஆலம்பனமாக கொண்டு ஹிரண்யகர்ப்பனை தியானம் செய்ய வேண்டும்.
உத்கர்ஷாத் – மேலானதாக இருக்கின்றதால், உயர்ந்ததாக இருப்பதனால். இதில் ஹிரண்யகர்ப்பன் விராட்டை விட உயர்ந்தவர், ஏனென்றால் விராட் அவரிடம்தான் ஒடுங்குகின்றார். அதேபோல உகாரமும் அனைத்து சப்தங்களுக்குள்ளும் உயர்ந்ததாக இருக்கின்றது. ஏனென்றால் எல்லா சப்தங்களையும் குறிக்கின்றதாக இருக்கின்றது, இந்த காரணத்தால் இரண்டும் (ஹிரண்யகர்ப்பன், உகாரம்) சமமாக கருதப்படுகின்றது.
உப4யத்வாத் – இடையில் இருத்தல், ஹிரண்யகர்ப்பன் விராட்டிற்கும், அந்தர்யாமிக்கும் இடையில் இருக்கின்றார். உகாரம் அகாரத்திற்கும், மகாரத்திற்கும் இடையில் இருக்கின்றது. இந்த காரணத்தாலும் இரண்டும் சமமாக கருதப்படுகின்றது.
உத்கர்ஷதி ஹ வை ஞான ஸந்ததிம் – அறிவுள்ள பரம்பரையை
வளர்ப்பான்.
ஸமானஹ ச பவதி – நண்பர்களையும், பகைவனையும் சமமாக நோக்கும் மனதை அடைவான்.
ந அஸ்ய அப்ரஹ்மவித் குலே பவதி – இந்த உபாஸகனுடைய குருகுல பரம்பரையில் பிரம்ம ஞானத்தை அடையாதவர்கள் இருக்க மாட்டார்கள்.
யஹ ஏவம் வேத3 – யார் இந்த மாதிரி உபாஸிக்கின்றார்களோ அவர்கள் மேலே கூறப்பட்ட பலன்களை அடைவார்கள்.

ஸுஷுப்த ஸ்தானஹ ப்ராக்ஞஹ மகார த்ருதீயா மாத்ரா – ஆழ்நிலை உறக்கத்தில் உள்ள வியஷ்டியில் ஆத்மா பிராக்ஞன், சமஷ்டியில் அந்தர்யாமி, இவரை ஓம் என்ற சொல்லில் உள்ள மூன்றாவது மாத்திரையான மகாரத்தோடு ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றது.
அபிதேஹ – லயம் ஸ்தானமாக இருக்கின்ற காரணத்தினால், அந்தர்யாமியானவன் விராட்டும், ஹிரண்யகர்ப்பனும் லயம் அடைவதற்கு இருப்பிடமாக இருக்கின்றார். அதேபோல பிராக்ஞனிடம் விஸ்வனும், தைஜஸனும் லயம் அடைவதற்கு இருப்பிடமாக இருக்கின்றார். அகாரமும், உகாரமும் மகாரத்தில் ஒடுங்குவதற்கு இருப்பிடமாக இருக்கின்றது.
மினோதி ஹ வா இதம் ஸர்வம் - இவைகள் அனைத்தையும் சரியாக புரிந்து கொண்டவன், உலகத்தை சரியாக புரிந்து கொள்ளும் திறமையை உடையவனாக இருப்பான்.
அபீதிஸ்ச ப4வதி - மேலும் இறந்த பிறகு மீண்டும் பிறக்காமல் பிரகிருதியில் மாயையுடன் லயத்தில் இருப்பான். அடுத்த ஸ்ருஷ்டியின்போதுதான் பிறப்பான்
யஹ ஏவம் வேத3 – இவ்வாறு யாரொருவன் உபாஸிக்கின்றானோ அவனடையும் பலன்கள் மேலே கூறப்பட்டுள்ளன.
விஸ்வஸ்ய அத்வ்விவக்ஷ்யாம் – விஸ்வனை, வைஷ்வாநரனை அகாரம் என்ற சப்தமாக பாவிக்கும் போது
மாத்ரா ஸம்ப்ரதிபத்தௌ - முதல் மாத்திரையை ஆத்மாவின் முதல் பாதமாக புரிந்து கொண்டு ஒப்பிடும்போது
ஆதி சாமான்யம் உத்கடம்- அகாரத்திற்கும் – விஸ்வ-வைஷ்வாநரனுக்கும் முதலாக இருக்கும் நிலை ஒற்றுமையாக இருப்பது தெளிவாக தெரிகின்றது.
ஆப்தி சாமான்யம் ஏவ ச ஸ்யாத் – வியாபித்தல் என்ற ஒற்றுமையும் தெளிவாக தெரிகிறது.
தைஜஸ்ய உத்வ விக்ஞானே – தைஜஸன், ஹிரண்யகர்ப்பன் உகாரமாக இருக்கின்றதால்
மாத்ரா ஸம்ப்ராபத்தௌ – இரண்டாவது மாத்திரையை, இரண்டாவது பாதத்திற்கு சமமாக எடுத்துக் கொள்ளும்போது
உத்க்ர்ஷம் த்ருஷ்யதே ஸ்பூடம் – உகாரமும், ஹிரண்யகர்ப்பனும் உயர்ந்ததாக இருப்பது தெளிவாக தெரிகின்றது.
உபயத்வம் ததாவிதம் – இரண்டும் இடையில் இருக்கின்றது என்பது நன்றாக தெரிகின்றது.
இந்த இரண்டு காரணங்களினால் இரண்டுமே ஒன்றாக கருதப்படுகின்றது.
மகார பாவே ப்ராக்ஞஸ்ய – பிராக்ஞனை மகாரமாக பாவிக்கும்போது
மாத்ர ஸம்ப்ரதிபத்தௌ – மூன்றாவது மாத்திரையும், மூன்றாவது பாதமும் ஒன்றேன பார்க்கும்போது
மானஸா மான்ய உத்கடம் – தானியங்களை அளக்கும் பாத்திரம் போல இரண்டும் இருப்பது தெளிவாக தெரிகின்றது’
லய ஸாமான்யமேவ ச - இரண்டும் மற்ற இரண்டிற்கும் லயமடைவதற்கான இருப்பிடமாக இருக்கின்றது.
த்ரிஷு தாமஸு – மூன்று அவஸ்தைகளிலும்
யத் துல்யம் ஸாமான்யம் வேதி நிஸ்சிதஹ – சரியான ஒற்றுமையை எவனொருவன் நிச்சயமாக அறிகின்றானோ
ஸஹ பூஜ்யஹ – அவன் வணங்கதக்கவன்
ஸர்வ பூதானாம் வந்த்யதே – எல்லா ஜீவராசிகளாலும் வணங்கதக்கவன்
மஹா முனிஹி – அவரே ஒரு பெரிய முனிவராக இருக்கின்றார்.
அகாரஹ விஸ்வம் நயதே - அகாரமானது உபாஸகனை இறந்த பிறகு வைஷ்வாநரனிடம் சென்று சேர்ந்து விடும்.
உகார ச அபி தைஜஸம் – உகாரமானது உபாஸகனை இறந்த பிறகு ஹிரண்யகர்ப்பனிடம் கொண்டு சேர்க்கின்றது
மகாரஹ புன பிராக்ஞன் - மகாரமானது அவனை இறந்த பிறகு அந்தர்யாமியிடம் கொண்டு சேர்க்கின்றது
ந அமாத்ரே வித்யதே கதி – ஓங்காரத்தின் நான்காவது மாத்திரையான அமாத்ரத்தில் எதாவது ஓரிடத்தில் கொண்டு சேர்க்கும் நிலை கிடையாது.
ஸ்லோகம்-12
ஓங்காரத்தின் நான்காவது மாத்திரை (அமாத்திரை) மாத்திரயற்றதாகும், இதையும் ஆத்மாவின் நான்காவது பாதமாகிய
துரீயத்தையும் சமpபடுத்திப் பார்க்கப்படுகிறது. அமாத்ரா என்பது அசப்தத்தை குறிக்கின்றது. இந்த அசப்தம் ( வாக்கினாலும், மனதினாலும் ) என்பது அமைதி இதை
துரீயத்துடன் ஒப்பிடப்படுகின்றது. எல்லா சப்தங்களுக்கும்
ஆதாரமாக இருக்கின்றது அசப்தம். எல்லா சப்தங்களும்
ஒடுங்குவதற்கும், தோன்றுவதற்கும் காரணமாக இருப்பது இந்த அசப்தம். இவ்வாறு அசப்தம் அதிஷ்டானமாக இருப்பது போல
துரீயமும் அதிஷ்டனாமாக இருக்கின்றது. அமாத்ரம் நான்காவது
மாத்திரையல்ல, ஆனால் அப்படி எடுத்துக் கொள்ள வேண்டும். வாயால் பேசினாலும், மனதில் எதையாவது நினைத்துக் கொண்டிருந்தாலும்
அது சப்தமாகத்தான் கருதப்படுகின்றது. இந்த இரண்டு
விதத்திலும் அமைதியாக இருப்பதைத்தான் அசப்தம் என்று கூறப்படுகின்றது. இதை மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றது. அவைகள்,
1. வந்து செல்வது,
2. அபாவமாக இருப்பது ( இல்லாத தன்மை )
3. இருமை ஸ்வரூபம் சப்தத்திற்கு விரோதமாக இருக்கின்றது.
சப்தத்திற்கு மூன்று நிலைகள் உண்டு. அவைகள்,
1. ஸ்தூல அவஸ்தை, இதை கலா என்று
அழைக்கப்படுகின்றது, இது வாக்கு என்கின்ற கர்மேந்திரியத்தால் உருவாக்கப்படுவது.
2. சூட்சும அவஸ்தை, இதை நாதம் என்ற சொல்வதுண்டு, நாம் சொல்ல நினைக்கின்ற சொல்லின் விருத்தியே (எண்ணங்கள்), மனதில் எழும் எண்ணங்கள்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும், அதற்கு காரணம்
அவரவர்களிடத்தே உள்ள ஸம்ஸ்காரங்கள் வெவ்வேறாக இருப்பதுதான்.
3. காரண அவஸ்தை இதை பிந்து என்றும்
சொல்லப்படுகின்றது.
காஷ்ட மௌனம் என்பது வாயால் பேசாதிருத்தல், மனதில் எதையும்
சிந்திக்காதிருத்தல், சூட்சுமமான அமைதி மனதில் இருக்கும். இந்த நிலையில் காரண அவஸ்தையில் இருக்கின்றோம், அறியாமையில்தான் இருக்கின்றோம். அமைதியான மனதினைக் கொண்டு நான் சைதன்ய ஸ்வரூபம், என்றுமே அசப்த ஸ்வரூபம் என்று நினைக்க வேண்டும். இதனால் வெளியிலுள்ள சப்தத்தினாலும், அசப்தத்தினாலும் பாதிக்கப்படாமல் இருக்கின்றோம். இதுவே மோட்சத்தை அடைந்த நிலை. நான் சப்தம்-அசப்தம் இவைகளை
பார்த்துக் கொண்டிருக்கும் சாட்சி ஸ்வரூபம், அசப்த ஸ்வரூபம். வாக்கினாலும், மனதினாலும் மௌனமாக
இருப்பதை முயற்சியால் அடைந்தாலும், அவைகளுக்கு பீஜமான காரண
அவஸ்தையில் இருக்கின்றதால், மீண்டும் சிறிது நாள் கழித்து அமைதியிலிருந்து
வெளிவந்தவுடன் சப்தம் போடத் தொடங்கி விடும். ஏனென்றால் மீண்டும்
இந்திரியங்களில் அபிமானம் இருந்து கொண்டிருக்கின்றது.
அமாத்ரவா சதுர்த4ஹ – ஓங்காரத்தின் அமாத்ர ஸ்வரூபம், ஆத்மாவின் நான்காவது பாதமான துரீயமாக இருக்கின்றது.
ஓம் என்ற சொல்லின் வாச்யார்த்தம் அக்ஷரமாக இருக்கின்றது. லட்சியார்த்தமாக அமாத்ர ஸ்வரூபத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். துரீயனானது விஸ்வன், தைஜஸன், பிராக்ஞன் இவர்களுக்குள்ளும் இருக்கின்றது, தனியாக வெளியேயும் இருக்கின்றது; அதேபோல அமாத்ரமான அசப்தம் அனைத்து சப்தங்களுக்கு ஆதாரமாகவும் இருக்கின்றது, அதற்கு அப்பாலும் இருக்கின்றது. இதிலிருந்து இரண்டும் (துரீயன், அமாத்ரா) சமமாக கருத முடிகின்றது.
பிரபஞ்சோபஶமம் - சப்த ரூபமான பிரபஞ்சத்தின் ஆதாரம். சப்தம் இல்லாத இடம்.
ஶிவஹ - அனர்த்தம்
அபாவஹ – துக்கம் இல்லாதது, மங்கலமானது, ஆனந்த ஸ்வரூபமானது
அத்வைதஹ – இருமையற்றது. பிரபஞ்சங்கள் இல்லாமல் போய்விட்டதால் இந்த நிலை.
ஏவம் ஒங்காரஹ ஆத்மா ஏவ – இவ்விதம் ஓங்காரம் ஆத்மாதான் என்று விளக்கப்பட்டு இருக்கின்றது.
ஆத்மனா ஆத்மானம் ஸம்விஶதி – தன்னால் தன்னை அடைகின்றான்
யஹ ஏவம் வேத – எவனொருவன் இவ்விதம் அறிகின்றானோ அவன் தன்னையே அடைகின்றான்.
இதில் நிதித்யாஸனம் என்ற சாதனத்தைப் பற்றி கூறுகின்றார்.
ஓங்காரம் பாதஶோ வித்யாத் – ஓங்காரத்தை ஆத்மாவின் பாதங்களாக தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
பாதா மாத்ரா ந ஸம்ஶயஹ – ஆத்மாவின் பாதங்கள்தான் மாத்திரைகளாக சந்தேகமின்றி புரிந்து கொள்ள வேண்டும்.
ஓங்காரம் பாதஶோ ஞாத்வா - ஓங்காரத்தை ஆத்மாவின் பாதங்களாக அறிந்த பிறகு
ந கிஞ்சித் அபி சிந்தயேத் – வேறெதையும் நினைத்துக் கொண்டிருக்கக்கூடாது. எதையும் நினைக்கக்கூடாது என்பது எந்த பலனையும் எதிர்ப்பார்க்கக்கூடாது என்று குறிப்பிடபடுகின்றது. த்ருஷ்ட பலன், அத்ருஷ்ட பலன் எதையும் எதிர்ப்பார்க்கக்கூடாது. அடைந்த இந்த அறிவிலே நிலைத்து நிற்க வேண்டும்.
யுஞ்ஜித ப்ரணவே சேதஹ – ப்ரணவ தத்துவத்தில் நம்முடைய மனதை பொருத்த வேண்டும். அனாத்மா விஷயங்களில் விழுந்து இருக்கும் மனதை ப்ரணவ தத்துவத்தில் நிறுத்தி பழக வேண்டும்.
ப்ரணவோ ப்ரஹ்ம – ப்ரணவம்தான் பிரம்மன், ப்ரணவம் என்பது ஓங்காரத்தை குறிக்கின்றது
நிர்பயம் – பயமற்ற ஸ்வரூபமாக இருக்கின்ற பிரம்மன்
ப்ரணவே நித்ய யுக்தஸ்ய – ப்ரணவத்தில் எப்பொழுதும் மனதை பொருத்தியிருப்பவனுக்கு
ந பயம் வித்யதே க்வசித் – எதைக்குறித்தும் பயம் கொள்வதில்லை.
ப்ரணவ - எதனால் (ஓங்காரம்) பிரம்மமானது நன்கு புகழப்படுகின்றதோ அதுவே ப்ரணவம். ஓங்காரம் சகுண பிரம்மத்தையும், நிர்குண பிரம்மத்தையும் குறிக்கின்றது. தியானதிற்குரியதாக இருப்பது சகுண பிரம்மத்தை குறிக்கும். ஞானத்தை அடைவதற்கு உதவியாக இருப்பது நிர்குண பிரம்மத்தை குறிக்கும்.
ப்ரணவ ச பர ஸ்ம்ருதஹ - பிரணவம் பர பிரம்மத்தையும் குறிக்கின்றது என்று உபநிஷத்தின் மூலம் நினைத்துப்பார்க்கலாம்.
அபூர்வஹ – காரணமற்றது, அதற்கு காரணம் கிடையாது.
அனந்தரம் – அதற்குள்ளே ஒன்றும் கிடையாது
அபாஹ்யஹ – அதற்கு வெளியேயும் ஒன்றும் கிடையாது
அனபரஹ – அதனிடமிருந்து எதுவும் தோன்றவில்லை.
ப்ரணவஹ அவ்யயஹ – ப்ரணவத்தோடு ஒப்பிடுகின்ற பிரம்மமானது அழிவற்றது
காரிகை-27
ஸர்வஸ்ய ப்ரணவ ஹி ஆதி - அனைத்திற்கும் காரணமாக முதலில் இருப்பவர் ப்ரணவம்
மத்யம் அந்தம் ததைவ ச - இடையிலேயும், முடிவிலேயும் காரணமாக இருப்பது ப்ரணவம்
ஏவம் ஹி ப்ரணவம் ஞாத்வா - இவ்விதம் ப்ரணவத்தை அறிந்து கொண்டால்
வ்யஶ்னுதே தத் அனந்தரம் - அதை அப்போதே அடைகின்றான். (அறிதலே அடைதல்)

ஓங்கார லட்சணமும், அதன் பலனும் கூறப்படுகின்றது. ஜீவ-ஈஸ்வர ஐக்கியமும் கூறப்படுகின்றது.
ப்ரணவம் ஹி ஈஸ்வரன் வித்யாதி - ப்ரணவத்தை ஈஸ்வரனாக உறுதியாக அறிந்து கொள்ள வேண்டும்.
ஸர்வஸ்ய ஹ்ருதி ஸம்ஸ்திதம் – எல்லா ஜீவராசிகளின் மனதிலும் சாட்சியாக இருப்பதாகவும் அறிந்து கொள்ள வேண்டும்.
ஸர்வ வ்யாபினம் ஓங்காரம் – ஓங்காரமே அனைத்தையும் வியாபித்திருக்கின்றது
தீரஹ மத்வா ச ஶோசதி – விவேகியானவன் இதை அறிந்திருப்பதால் துயரத்தை அடைவதில்லை.
ஞானத்தின் பலனானது துக்க நிவிருத்தி, பய நிவிருத்தி என்று அறிந்து கொள்ள வேண்டும்.
அமாத்ரஹ – ஓங்காரம் அமாத்திரைகளற்றதாக இருக்கின்றது. இது அசப்த ஸ்வரூபமாகவும், ஸத்யமாகவும் இருக்கின்றது.
அனந்த மாத்ரஹ – எண்ணிக்கையற்ற மாத்திரைகளை உடைய ஸ்வரூபமாகவும் இருக்கின்றது. அதாவது அனைத்து சப்தங்களின் ஸ்வரூபமாகவும் இருக்கின்றது. இது மித்யா என்று அறிந்து கொள்ள வேண்டும்.
த்வைதஸ்ய உபஶமஹ – இந்த ஓங்காரம் இருமைகள் இல்லாத இடமாக இருக்கின்றது. த்வைதங்கள் லயமடைகின்ற ஸ்தானமாக இருக்கின்றது. அனைத்து சப்தங்களும் ஒடுங்குகின்ற இடமாகவும் இருக்கின்றது.
ஶிவஹ – மங்கலமாகவும் இருக்கின்றது, அசப்தமாக இருப்பதே மங்கலம்.
ஓங்கார விதிதோயேன – யாரால் ஓங்காரத்தை இவ்விதம் அறிந்திருக்கின்றாரோ
ஸஹ முனிஹி – அவரே முனிவர்
ந இதர ஜனஹ – மற்றவர்களெல்லாம் முனிவர்களல்ல.
உபநிஷத் சுருக்கம்
மந்திரம்-1
ஓம் என்ற அக்ஷரம் அனைத்துமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அனைத்தும் ஓம் என்று சொல்லப்பட்டதால் அதைப்பற்றிய விசாரம் செய்யப்படும் என்று உறுதி கூறப்பட்டது. ஸர்வம் என்பதை காரிய பிரபஞ்சம், காரண பிரபஞ்சம் ( மாயா ) என்று விளக்கப்பட்டது. ஓம் என்ற சொல்லின் வாச்யார்த்தம்தான் ஸர்வம் என்று குறிப்பிடுகின்றது. காரிய-காரண ரூபமாக இருத்தல், லட்சியார்த்தம் அதற்கு அதிஷ்டானமாக இருக்கும் நிலையை குறிக்கின்றது.

மந்திரம்-2
ஆத்மாவே இவைகள் அனைத்தும் என்று சொல்லப்பட்டு அதைப் பற்றிய விசாரம் செய்யப்படும் என்று உறுதி கூறப்பட்டது. மகாவாக்கியம் பிரதிக்ஞா ரூபத்தில் வந்திருக்கின்றது. அயம் ஆத்மா பிரம்ம – இந்த ஆத்மாதான் பிரம்மமாகவே இருக்கின்றது. இந்த ஆத்மா நான்கு விதமாக பிரித்து விசாரம் செய்யப்பட்டுள்ளது.
மந்திரம்-3-6
இவைகளில் ஆத்ம விசாரம் செய்யப்பட்டது. இதில் அவஸ்தா த்ரய விவேகம் என்ற முறையில் ஆத்ம விசாரம் செய்யப்பட்டது. மூன்று அவஸ்தைகளை அனுபவிக்கின்ற ஆத்மா மூன்று பாதங்களாக உடையது. நான்காவது பாதமாக துரீயம் என்று அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் பாதம் சைதன்யம் ஸ்தூல பிரபஞ்சம், ஸ்தூல சரீரம் இவைகள் சேர்ந்தது, இரண்டாவது பாதம் சைதன்யம் சூட்சும பிரபஞ்சம், சூட்சும சரீரம் இவைகள் மூன்றும் சேர்ந்தது, மூன்றாவது பாதமானது சைதன்யம், காரண சரீரம், காரண பிரபஞ்சம் இவை மூன்றும் சேர்ந்தது என்று எடுத்துக் கொள்ளப்பட்டது. நான் என்பது எப்போதும் ஆத்மாவையே குறிக்கின்றது. நான் ஸ்தூல சரீரத்தின் துணைக்கொண்டு ஸ்தூல பிரபஞ்சத்தை விழிப்பு நிலையிலே அனுபவித்துக் கொண்டிருப்பவன். அதேபோல கனவு, உறக்கம் இவைகளிலும் இருக்கின்றேன். காரண அவஸ்தையில் அறியாமையும் இருக்கின்றது, சுகமும் இருக்கின்றது. இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது சைதன்யம் என்று ஒன்றுதான் மூன்று நிலைகளிலும் மாறாமல் தொடர்ந்து இருக்கின்றது. அனாத்மா இரண்டாக பிரிக்கப்படுகின்றது. ஸ்தூல சரீரமும், ஸ்தூல பிரபஞ்சமும் பஞ்ச பூதங்களினால் உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான். ஸ்தூல சரீரத்தின் நான் என்ற அபிமானம் வைத்திருக்கின்றோம். இதன் அடிப்படையில் அனுபவிப்பவன், அனுபவிக்கப்படும் பொருள் என்று பிரிக்கப்படுகின்றது. ஸ்தூல சரீரம் – அனுபவிப்பவன், ஸ்தூல பிரபஞ்சம் – அனுபவிக்கப்படும் பொருளாக கூறப்பட்டது. சைதன்யத்தின் உபாதியாக இருக்கும் அனாத்மா அனுபவிப்பவன் (விஸ்வன், தைஜஸன், பிராக்ஞன்) என்ற நிலையும், அனுபவிக்கப்படும் பொருளாக ஸ்தூல, சூட்சும பிரபஞ்சங்கள் என்ற நிலையும் இருப்பதால், அனாத்மா இரண்டாக இருப்பது போல் தோன்றுகிறது.
மந்திரம்-7
காரண பிரபஞ்சத்திற்கு அதிஷ்டானமாக இருக்கின்ற ஈஸ்வர தத்துவம் விவரிக்கப்பட்டது. சமஷ்டியில் வைஷ்வாநரன், ஹிரண்யகர்ப்பன், அந்தர்யாமி என்று ஒப்பிடப்பட்டது. விஸ்வனாகிய அனாத்மாவை நான் என்று தவறாக ஏற்றி வைத்திருப்பதால் விஸ்வனாக இருக்கின்றாய், அதேபோல தைஜஸனுக்கும், பிராக்ஞனுக்கும் பொருந்தும். எனவே இந்த அனாத்மாவை நீக்கிவிட்டால் சைதன்ய தத்துவமாக இருக்கின்றாய். மூன்று நிலைகளில் சைதன்யத்தின் மீது எவைகளெல்லாம் ஏற்றி வைக்கப்பட்டதோ அவைகள் எல்லாம் நீக்கி, நீ ஆத்ம ஸ்வரூபம்தான் என்று உரைக்கின்றது. மூன்று சரீரங்களை நீக்கிவிட்டது. நீ வெளி விஷயங்களை அனுபவிப்பவன் அல்ல என்று சுட்டிக்காட்டி அவைகளை நீக்க வேண்டும் என்று உபதேசிக்கின்றது.

ஸ்தூல சரீரம் பார்க்கின்றதாகவும், பார்க்கப்படுபவதாகவும்
இருக்கின்றது. அதனால் இது நீயல்ல
என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றது. ஆத்மா பார்ப்பவனும் அல்ல, பார்க்கப்படுபவனும் அல்ல என்று புரிந்து கொள்ள
என்று வலியுறுத்துகின்றது. எனவே உன்னை அத்வைத
சைதன்ய ஸ்வரூபம் என்று அறிந்து கொள் என்று உபதேசிக்கின்றது.
மந்திரம்-8 (ஓங்கார விசாரம்)
ஒங்கார விசாரமும், ஆத்மா விசாரமும் ஒன்றுதான். நமது பார்வையில் உள்ள வேறுபாட்டின் காரணமாக வேறு விதத்தில் ஓங்கார விசாரம் என்ற முறையில் செய்யப்படுகின்றது. உலகத்தை சப்தமாக உருவகப்படுத்தி நாமத்தை பிரதானமாகக் கொண்டு இவைகளுக்கு அதிஷ்டானமாக இருக்கின்ற ஆத்மா உணர்த்தப்படுகின்றது. ஓம் என்பது சப்த ரூபம், இது அ, உ, ம என்று பிரித்து மூன்று சரீர, பிரபஞ்சங்களுக்கு ஒப்பிட்டு, ஆத்மாவின் மூன்று பாதங்களுக்கும் ஒப்பிட்டு நான்காவதாக அமாத்ரா, அசப்தமாக கூறி அதை துரீயத்திற்கு ஒப்பிட்டு விளக்கி ஆத்மாவுடன் சமப்படுத்தப்பட்டது. ஆத்மா அசப்த ஸ்வரூபம் என்று விளக்கப்பட்டது.

காரிகை சுருக்கம்
·
மூன்று அவஸ்தைகளிலும் தொடர்ந்து இருப்பது ஆத்மா ஒன்றுதான்
·
வியஷ்டி,சமஷ்டி உபாஸனைக்காக
விஸ்வ, தைஜஸன் இருப்பிடத்தைப் பற்றி பேசப்பட்டது
·
விஸ்வனும், தைஜசனும் கர்த்தாவாகவும், போக்தாவாகவுமாக இருக்கின்றார்கள், ஆனால் பிராக்ஞன் போக்தாவாக மட்டும்
இருக்கின்றான்.
·
இந்த மூன்றையும் தெரிந்து கொண்டாலே அதிக சுகங்களை அடையலாம்.
·
துரீயமானது துயரங்களற்றது, சம்சாரம் இல்லாத இடம்
என்று கூறினார்.
·
விஸ்வன், தைஜஸன், பிராக்ஞன் இவைகளை ஒன்றையொன்று ஒப்பிட்டு
விளக்கம் அளிக்கப்பட்டது
·
காரியம் – அத்யாஸம் – ஏற்றி வைக்கப்பட்டது, காரணம் – அக்ஞானம். விஸ்வனும், தைஜஸனும் காரண-காரியத்துடன் இருக்கின்றார்கள். ஆனால் பிராக்ஞன் காரணத்துடன் மட்டும்
இருக்கின்றார். துரியம் இரண்டுமே
இல்லாதவன். அன்யதா கிரகணம் – வேறு விதமாக புரிந்து கொள்வது, அகிரகணம் – புரிந்து
கொள்ளாதிருத்தல்
·
துரீயத்தை அறிவினால்தான் அடையமுடியும் என்று கூறினார்
·
பிரபஞ்சம் மித்யா என்றும் விளக்கப்பட்ட்து
·
உபநிஷத் உபதேசத்திற்காகத்தான் இருமைகளை பயன்படுத்தி
இருக்கின்றது. குரு-சிஷ்யன், ஜகத் என்ற இருமைகள்.
·
நிதித்யாஸனம் என்ற சாதனத்தையும் கூறியுள்ளார்.
·
ஆத்மாவின் நான்கு பாதங்களையும், நான்கு மாத்திரைகளாக நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்,
வேறெதையும் நினைக்க கூடாது
·
பிரம்மன் நிர்பயமாக இருப்பது, எனவே நாம் அதை
அடைந்தால் அபயத்தை அடைவோம் என்றும் கூறப்பட்டது
·
அமாத்ர அனந்தமாத்ர – சப்தமும், அசப்தமும் ஒங்காரம்
·
இருமைகள் இல்லாதன் நிலை ஶிவம், ஶாந்தம்
·
இதையறிந்தவந்தான் முனிவன் என்றும் கூறினார்.
----oo000oo----
No comments:
Post a Comment