ப்ரஶ்ண
உபநிஷத் – அத்தியாயம்-4
மனிதனின் மூன்று நிலைகள்
ஸ்வாமி குருபரானந்தா உபதேச
விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது – 20/04/2022
www.poornalayam.org
முகவுரை
இந்த
உலகத்தில் அனுபவிக்கும் அனைத்தும் நிலையானதல்ல என்ற அறிவும், மித்யா என்ற அறிவும்
நமக்கு வரவேண்டும்.
ஸ்லோகம்-01
அத2 ஹைனம் ஸௌர்யாயணீ கா3ர்க்3ய: பப்ரச்ச2 |
ப4கவன்னேதஸ்மின் புருஷே கானி ஸ்வபந்தி?
கான்யஸ்மின் ஜாக்3ரதி?
கதர ஏஷ தே3வ: ஸ்வப்னான் பஶ்யதி?
கஸ்யைதத்ஸுக2ம் ப4வதி ?
கஸ்மின் ஸர்வெ ஸம்ப்ரதிஷ்டி2தா ப4வந்தீதி || 1 ||
ஸௌர்யாயணி
என்கின்ற கா3ர்க்3யன் என்பவர் கீழ்கண்ட கேள்விகளை கேட்டார்:
ஜாத்ரதி – விழித்திருக்கிறது
பஶ்யதி - பார்க்கிறான்
ஸம்ப்ரதிஷ்டிதா – ஆதாரமாக இருக்கிறது
ஸ்லோகம்-02
தஸ்மை ஸ ஹோவாச |
யத2 கா3ர்க்ய மரீசயோSர்கஸ்யாஸ்தம் க2ச்ச2த:
ஸர்வா ஏதஸ்மின் தேஜோமண்டல ஏகீப4வந்தி |
தா: புன: புனருத3யத: ப்ரசரந்த்யேவம் ஹ ஐ
தத் ஸர்வம் பரெ தே3வே மனஸ்யேகீப4வதி |
தேன தர்ஹ்யேஷ புருஷோ ந ஶ்ருணோதி ந பஶ்யதி
ந ஜிக்3ரதி ந ரஸயதே ந ஸ்ப்ருஶதே நாபி4வத3தே நாத3த்3தே3
நானந்த3யதே ந விஸ்ருஜதே நேயாயதே ஸ்வபிதீத்யாசக்ஷேதே || 2 ||
கார்க்கியரிடம் பிப்பலாதர் கூறினார்.
“சூரியன் மறையும்போது எல்லா கிரணங்களும் சூரியனிடத்திலேயே ஒடுங்குகின்றன. அது உதிக்கும்போது எல்லா கிரணங்களும் மீண்டும்
வெளியே வந்து பரவுகின்றன. அதுபோல, ஒருவன்
தூங்கும்போது அவனது புலன்கள் அனைத்தும் தலைமை புலனான மனதில் ஒடுங்குகின்றன. அப்போது அவன் பார்ப்பதில்லை, கேட்பதில்லை,
முகர்வதில்லை, சுவைப்பதில்லை, உணர்வதில்லை, பேசுவதில்லை, எதையும் செய்வதில்லை,
சுகத்தை அனுபவிப்பதில்லை, எதையும் வெளிவிடுவதில்லை, நகர்வதில்லை. அப்போது இவன்
தூங்குகிறான் என்று கூறுகிறார்கள்.
ஸ்லோகம்-03
ப்ரணாக்3னய ஏவைதஸ்மின் புரே ஜாக்3ரதி |
கா3ர்ஹபத்யோ ஹ வா ஏஷோSபானோ வ்யானோSன்வாஹார்யபசனோ
யத்3கா3ர்ஹப்த்யாத் ப்ரணீயதே ப்ரணயனாதா3ஹவனீய: ப்ராண: || 3 ||
ஜீவன்
ஸ்தூல சரீரத்தில் அபிமானம் வைத்து இந்த உலகத்தை அனுபவிக்கும் போது விஸ்வன்
என்றும், சூட்சும சரீரத்தில் அபிமானம் வைத்து இந்த உலகத்தை அனுபவிக்கும் போது
தைஜஸன் என்றும், காரண சரீரத்தில் அபிமானம் வைத்து இந்த உலகத்தை அனுபவிக்கும்
போது பிராக்ஞன் என்றும் அழைக்கப்படுகிறான்.
மூன்று நிலைகளிலும் மாறாது இருக்கும் அறிவு ஸ்வரூவத்தை துரியன் என்று
அழைக்கப்படுகின்றது.
எவைகள் விழித்திருக்கின்றன என்ற கேள்விக்கு
பதில் ஐந்து வித பிராணன்களும், மனமும்தான் விழித்திருக்கின்றன. இந்த ஐந்து
பிராணன்களும் யாகம் செய்து கொண்டிருக்கின்றன.
பிராணன்கள் விதவிதமான அக்னிகளுக்கு உவமையாக கூறப்பட்டுள்ளன. மனமே எஜமானனாக இருக்கிறது. இஷ்ட பலனாக ஆழ்ந்த உறக்கம்
கருதப்படுகிறது. பிராணன் (வெளிவிடும்
காற்று) ஆஹவனீய அக்னி என்றும், அபானன் (உள்ளே இழுக்கும் காற்று) கார்ஹபத்ய அக்னி
என்றும், வியானன் அன்வாஹார்யபசனம் என்ற அக்னியாகவும், சமானன் யாகத்தை
செய்பவனாகவும் (ஹோதா), உதானன் இஷ்ட பலனாகவும் கருதப்படுகிறது. மனம் எஜமானனாக கற்பனை செய்யப்படுகிறது. ஆழ்ந்த உறக்கமே சுவர்க்கலோகமாக இருக்கிறது.
அக்னிஹோத்ரியானவன் எப்பொழுதும் பாதுகாக்க
வேண்டிய அக்னிக்கு கார்ஹபத்ய அக்னி என்று பெயர்.
இந்த அக்னியை இரண்டு நிலையில்தான் அணைக்க வேண்டும். அவைகள் ஒன்று அவன்
சந்நியாசம் எடுக்கும் போது, மற்றொன்று அவன் மரணத்தின் போது. மற்ற யாகங்களுக்கு
வேண்டிய அக்னியை இந்த கார்ஹபத்ய அக்னியிலிருந்துதான் எடுக்க வேண்டும். அதே உள்ளே
போகும் காற்றிலிருந்துதான் வெளியே விடும் காற்று எடுக்கப்படுகிறது.
ஸ்லோகத்தின் பொருள்:
இந்த சரீரத்தில் அக்னிக்கு ஒப்பிடப்படுகின்ற பிராணனே நாம் தூங்கும்போதும் விழித்துக் கொண்டிருக்கிறது. கார்ஹபத்ய அக்னி அபானனுக்கும், அன்வஹார்யபசன அக்னி வியானனுக்கும் ஒப்பிடப்படுகின்றது. கார்ஹபத்ய அக்னியிலிருந்து உருவாக்கப்பட்டது ஆஹவனீயம். எனவே பிராணனே ஆஹவனீயமாகும்.
ஸ்லோகம்-04
யது3ச்ச2வாஸனி:ஶ்வாஸௌ ஏதாவஹுதீ ஸமம் ஸ ஸமான: |
மனோ ஹ வாவ யஜமான் இஷ்டப2ல்மேவ உதான:
ஸ ஏனம் ஜயமானம் அஹரஹர்ப்3ரஹ்ம க3மயதி || 4 ||
உள்மூச்சு,
வெளிமூச்சு ஆகிய இரண்டு ஆஹுதிகளையும் சமமாக நடத்துவதால் அந்தப் பிராண சக்தி சமானன்
எனப்படுகின்றது. மனமே எஜமானனாக இருக்கின்றது.
யாகத்தின் மூலம் அடையும் பலனே உதானன்.
ஏனெனில் உதானனே இந்த எஜமானனை பிரம்மத்திடம் கொண்டுபோய் சேர்க்கின்றது. பிரம்மத்திடம் எடுத்துச் செல்வது என்பது ஆழ்ந்த
உறக்கத்திற்கு எடுத்துச் செல்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். ஆழ்ந்த உறக்கம்தான் பிரம்மத்தை அடைந்ததற்கு
சமமாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில்
காரண சரீரத்தில் மட்டும் அபிமானம் இருக்கும்.
இந்த
ஆழ்ந்த உறக்கத்தில் உண்மை நிலை (ஜீவத்வம்) வெளிப்படுவதில்லை. எனவே பிரம்ம பிராப்தி
என்று சொல்கிறோம். இந்த நிலையில் அறியாமை
இருந்து கொண்டிருப்பதால், விழித்ததும் மீண்டும் ஜீவத்வத்திற்கு வந்து விடுகிறான்.
ஆழ்ந்த உறக்கத்தில் காரண சரீரத்தை அடைந்திருக்கின்றான். காரண சரீரம் பிரம்மத்தை சார்ந்திருப்பதால்,
அவன் பிரம்மத்தை அடைந்ததாகும். உதாரணமாக வெயிலினால் பூமி சூடாக இருக்கும்போது
நிழலை நாடிச் செல்கிறோம். ஆனால் உஷ்ணமும்,
நிழலும் பூமியைத்தான் சார்ந்திருக்கின்றன.
அத2 ஹைனம் ஸௌர்யாயணீ கா3ர்க்3ய: பப்ரச்ச2 |
ப4கவன்னேதஸ்மின் புருஷே கானி ஸ்வபந்தி?
கான்யஸ்மின் ஜாக்3ரதி?
கதர ஏஷ தே3வ: ஸ்வப்னான் பஶ்யதி?
கஸ்யைதத்ஸுக2ம் ப4வதி ?
கஸ்மின் ஸர்வெ ஸம்ப்ரதிஷ்டி2தா ப4வந்தீதி || 1 ||
- பகவானே! கனவு காணும் போது எந்தெந்த
இந்திரியங்கள் உறங்குகின்றன, அதாவது செயல்படுவதில்லை ?
- எந்தெந்த இந்திரியங்கள் விழித்துக்
கொண்டிருக்கின்றன. தேகத்தை பாதுகாத்துக் கொள்ள எவையெவைகள் விழித்துக்
கொண்டிருக்கின்றன?
- கனவை பார்ப்பது யார்?
- ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள சுகமானது யாரை
சார்ந்தது?
- இவையனைத்துக்கும் ஆதாரமாக(ஸம்ப்ரதிஷ்டிதா)
இருப்பது எது?
ஜாத்ரதி – விழித்திருக்கிறது
பஶ்யதி - பார்க்கிறான்
ஸம்ப்ரதிஷ்டிதா – ஆதாரமாக இருக்கிறது
தஸ்மை ஸ ஹோவாச |
யத2 கா3ர்க்ய மரீசயோSர்கஸ்யாஸ்தம் க2ச்ச2த:
ஸர்வா ஏதஸ்மின் தேஜோமண்டல ஏகீப4வந்தி |
தா: புன: புனருத3யத: ப்ரசரந்த்யேவம் ஹ ஐ
தத் ஸர்வம் பரெ தே3வே மனஸ்யேகீப4வதி |
தேன தர்ஹ்யேஷ புருஷோ ந ஶ்ருணோதி ந பஶ்யதி
ந ஜிக்3ரதி ந ரஸயதே ந ஸ்ப்ருஶதே நாபி4வத3தே நாத3த்3தே3
நானந்த3யதே ந விஸ்ருஜதே நேயாயதே ஸ்வபிதீத்யாசக்ஷேதே || 2 ||
ப்ரணாக்3னய ஏவைதஸ்மின் புரே ஜாக்3ரதி |
கா3ர்ஹபத்யோ ஹ வா ஏஷோSபானோ வ்யானோSன்வாஹார்யபசனோ
யத்3கா3ர்ஹப்த்யாத் ப்ரணீயதே ப்ரணயனாதா3ஹவனீய: ப்ராண: || 3 ||
இந்த சரீரத்தில் அக்னிக்கு ஒப்பிடப்படுகின்ற பிராணனே நாம் தூங்கும்போதும் விழித்துக் கொண்டிருக்கிறது. கார்ஹபத்ய அக்னி அபானனுக்கும், அன்வஹார்யபசன அக்னி வியானனுக்கும் ஒப்பிடப்படுகின்றது. கார்ஹபத்ய அக்னியிலிருந்து உருவாக்கப்பட்டது ஆஹவனீயம். எனவே பிராணனே ஆஹவனீயமாகும்.
யது3ச்ச2வாஸனி:ஶ்வாஸௌ ஏதாவஹுதீ ஸமம் ஸ ஸமான: |
மனோ ஹ வாவ யஜமான் இஷ்டப2ல்மேவ உதான:
ஸ ஏனம் ஜயமானம் அஹரஹர்ப்3ரஹ்ம க3மயதி || 4 ||
ஸ்லோகம்-05
அன்னைஶ தே3வ: ஸ்வப்னே மஹிமானமனுப4வதி |
யத்3 த்3ருஷ்டம் த்3ருஷ்டமனுபஶ்யதி ஶ்ருதம் ஶ்ருதமேவார்த2மனுஶ்ருணோதி
தெஶாதி3க3ந்தரைஶ்ச ப்ரத்யனுபூ4தம் புன: புன: ப்ரத்யனுப4வதி த்3ருஷ்டம்
சாத்3ருஷ்டம் ச ஶ்ருதம் சாஶ்ருதம் சானுபூ4தம் சானனுபூ4தம் ச ஸச்சாஸச்ச
ஸர்வம் பஶ்யதி ஸர்வ: பஶ்யதி || 5 ||
கனவை பார்ப்பது யார்? அனுபவிப்பது யார்?
நம்முடைய மனம்தான் கனவை காண்கிறது. கனவில் இந்த மனம் தன்னுடைய பெருமையையே அனுபவிக்கின்றது. நம்முடைய மனதிலுள்ள ரகசியங்களை அனுபவிக்கும் கனவுகளாக வருகின்றது. மனமே மனதை கனவில் அனுபவிக்கின்றது. மனதில் பதிந்துள்ள எண்ணங்களே கனவுகளாக வருகின்றது. விழிப்பு நிலையில் எதையெல்லாம் பார்த்தானோ அதையேதான் கனவில் பார்க்கின்றான். எதையெல்லாம் கேட்டானோ அதையேதான் கேட்கின்றான். விதவிதமான இடங்களில், திசைகளில், வெவ்வேறு காலத்தில் எதை அனுபவித்தானோ அதையே அனுபவிக்கின்றான். எதை மற்ற இந்திரியங்களால் அனுபவித்தானோ அதையேதான் மீண்டும் மீண்டும் அனுபவிக்கின்றான். முற்பிறவிகளில் பார்த்ததைம் கேட்டதையே கனவில் அனுபவிக்கின்றான். இந்தப் பிறவியில் பார்த்ததையும், பார்க்காததையும் கனவில் பார்க்கின்றான். இந்தப்பிறவியில் கேட்டதையும், கேட்காததையும் அனுபவிக்கின்றான். ஸத்தையும், அஸத்தையும் பார்க்கின்றான். எல்லாவற்றையும் பார்க்கின்றான், அனைத்துமாக இருந்து கொண்டு பார்க்கின்றான். நம்முடைய கர்மபலன்கள்தான் நம்மை இந்த ஆழ்நிலை உறக்கத்திற்கு கொண்டு செல்கிறது. ஒரு பிராரப்த பலன் முடிந்து வேறொன்று ஆரம்பிக்கும் இடைவெளியில்தான் நாம் ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கின்றோம்.
ஸ்லோகம்-06
ஸ யதா3 தேஜஸாபி4பூ4தோ ப4வதி அன்னைஷ தேவ: ஸ்வப்னான்
ந பஶ்யத்யத2 ததை3தஸ்மின் ஶரீரே ஏதத்ஸுக2ம் ப4வதி || 6 ||
சுஷுப்தி சுகத்தை
அனுபவிப்பது யார்?
விழிப்பு, கனவு நிலையில் அனுபவிக்கும் சுகத்தில் துக்கமும் கலந்து இருக்கிறது. நம்முடைய மனதிலுள்ள வாஸனைகள் எல்லாம் சில வகையான நாடிகளுக்குள் இருக்கின்றது. மனமானது வாஸனைகள் இருக்கும் நாடிகளுக்குள் சென்று அங்குள்ள ஸம்ஸ்காரங்களை எடுத்து கொண்டு கனவு காண வைக்கிறது.
சுஷுப்தியில் இந்த
நாடிகளுக்குள் ஜீவன் செல்ல முடியாது.
அதனால் கனவை காண முடியாது. அவைகள்
மறைக்கப்பட்டு விடுகின்றன. அப்பொழுதுதான்
ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பான். அப்போது
அவனே பிராக்ஞன் என்று அழைக்கப்படுகிறான்.
கர்மபலன்கள் இல்லாமல் இருக்கும்போதுதான் இந்நிலை ஏற்படுகிறது. கர்மவினைதான் விஷயங்களைக் கொண்டு வந்து, நம்மை
அனுபவிக்க வைக்கின்றது. அதற்கேற்ற
உலகைப்படைத்து, உடலைப்படைத்து, சூழ்நிலைகளையும் ஏற்படுத்தி கொடுக்கிறது.
ஸ்லோக பொருள்:
எவனொருவனுக்கு அக்னியால் (பித்தத்தினால்) நாடிகள் மறைக்கப்படும்போது, அவனது மனமானது கனவை காண்பதில்லை. அந்த நிலையில் இந்த சரீரத்தில் சுஷுப்தி சுகத்தை அனுபவிக்கின்றான். ஆழ்ந்த உறக்கத்தை அனுபவிக்கும் சுகம். இந்த சுகத்தை பிரம்மானந்தத்திற்கு அருகில் உள்ளது போல கூறப்படுகிறது.
ஸ்லோகம்-07
ஸ யதா2 ஸோம்ய வ்யாம்ஸி வாஸோவ்ருக்ஷம் ஸ்ம்ப்ரதிஷ்டந்தி
ஏவம் ஹ வை தத் ஸர்வம் பர அத்மனி ஸம்ப்ரதிஷ்டதே || 7 ||
இவைகள் அனைத்தும் எதை ஆதாரமாக கொண்டுள்ளது?
பகலில் இரைத் தேடச் சென்ற பறவைகள் மாலையில் தங்கள் கூட்டை நாடுவது போல அவைகள் அனைத்தும் ஆத்ம தத்துவத்தில் ஒடுங்குகின்றன. நாம் பல இடங்களில் இருக்கும் போது சூழ்நிலைகளுக்கேற்ப நடந்து கொள்வோம். ஆனால் நம் வீட்டில்தான் நம்முடைய உண்மையான ஸ்வரூபத்தில், சௌகரியமாக இருப்போம். உலகத்திலுள்ள வேற்றுமைகள் எல்லாம் நீங்கி அமைதியாக இருக்குமிடம்தான் பரபிரம்மம். இந்த உதாரணத்தின் மூலம் அறிந்துக் கொள்ள வேண்டியது பர பிரம்மத்தில் ஒடுங்கும்போதுதான் நிரந்தரமான அமைதியுடன் இருக்க முடியும். கடலில் தோன்றி எழும் அலைகள் மீண்டும் கடலிலே கலந்துவிடுவது போல ஜீவாத்மா பரமாத்வாவிலிருந்து தோன்றி அதிலே கலந்துவிடுவதுதான் மோட்சம்.
ஸ்லோகம்-08
ப்ருதி2வீ ச ப்ருதி2வீமாத்ரா சாபஶ்சாபோமாத்ரா ச தேஜஶ்ச தே ஜோமாத்ரா ச
வாயுஶ்ச வாயுமாத்ரா சாகாஶஶ்சாகாஶாமாத்ரா ச கக்ஷுஶ்ச த்3ரஷ்டவ்யம் ச ஶ்ரோத்ரம் ச ஶ்ரோதவ்யம் ச க்4ராணம் ச க்4ராதவ்யம் ச த்வக்வ
ஸ்பர்ஶயித்வ்யம் ச வாக்ச வக்தவ்யம் ச ஹஸ்தௌ சாதா3த்வ்யம்
சோபஸ்த2ஶ்சனந்த3யிதவ்யம் ச பாயுஶ்ச விஸர்ஜயிதவ்யம் ச பாதௌ ச
க3ந்தவ்யம் ச மனஶ்ச மந்தவ்யம் ச பு3த்3தி4ஶ்ச போ3த்3த4வ்யம்
சாஹம்காரஶ்சாஹம்கர்தவ்யம் ச சித்தம் ச சேதயிதவ்யம் ச தேஜஶ்ச
வித்யோதயிதவ்யம் ச ப்ராணஶ்ச விதா4ரயிதவ்யம் ச || 8 ||
நாம் அனுபவிக்கின்ற
ஸ்தூல பூதங்களனைத்தும் முதலில் சூட்சும பூதங்களாக இருந்தன. இந்திரியங்கள் அனைத்தும் மற்றும் அவைகளில்
செயல்களும், அந்தக்கரணமும் அதனுடைய செயல்களும் ஆத்மாவிலேயே ஒடுங்குகின்றன
நிலமும், சூட்சும
நிலமும், நீரும், சூட்சும நீரும், நெருப்பும், சூட்சும நெருப்பும், வாயுவும்,
சூட்சும வாயுவும், ஆகாசமும், சூட்சும ஆகாசமும் இவைகள் அனைத்தும் பரமாத்மாவில்
ஒடுங்குகின்றன. கண், பார்க்கும் செயல்,
காது-கேட்கும் செயல், மூக்கு-நுகரும் செயல், நாக்கு, சுவைக்கும் செயல், தோல்,
தொட்டுணரும் செயல் அதாவது ஞானேந்திரியங்களும் அவைகளினுடைய செயல்களும், வாய்,
பேசும் செயல், கைகள்-அவை செய்யும் செயல்கள், கால்கள் – நடக்கும் செயல்கள்
குறி-இன்பத்தை கொடுக்கும் செயல்கள், குதம், கழிவுகளை வெளிப்படுத்தும் செயல்,
அதாவது கர்மேந்திரியங்களும் அவைகளின் செய்லகளும், மனமும், மனதால் நினைக்கப்படும்
எண்ணங்களும், புத்தியும், புத்தியால் அறிவை அடையும் செயலும், அகங்காரமும், நான்
என்ற உணர்வும், சித்தமும், எண்ணங்களை பதிய வைப்பதும், எண்ணங்களை மனதுக்கு
எடுத்துக் கொடுப்பதும், ஒளி, அந்த ஒளியால் விளக்கபடுவதும், பிராணன், ஒருங்கிணைக்கப்படுவது
என்ற அனைத்தும் ஆத்மாவிலேயே ஒடுங்குகின்றன.
ஸ்லோகம்-09
ஏஷ ஹி த்3ரஷ்டா ஸ்ப்ரஷ்டா ஶ்ரோதா க்4ராதா ரஸயிதா மந்தா
போத்3தா4 கர்தா விக்ஞானாத்மா புருஷ: |
ஸ பரேSக்ஷரே ஆத்மனி ஸம்ப்ரதிஷ்டதே || 9 ||
எவைகளெல்லாம்
அனுபவிக்கப்படுகின்றதோ அவைகள் நானல்ல என்று சுலபமாக அறிந்து கொள்கின்றோம், அதாவது
நமக்கு புறத்தே உள்ள அனைத்தும் நானல்ல என்று புரிந்து கொள்வதில் குழப்பம்
இருக்காது. ஆனால் இந்த தேகம் நானல்ல என்று
புரிந்து கொள்வதுதான் மிகவும் கடினம்.
ஜீவனைப் பற்றிய விசாரம் த்ருக்-த்ருஷய விவேகம் (பார்ப்பவன் –
பார்க்கப்படும் பொருள். இவையிரண்டும் வெவ்வேறாக இருக்கிறது என்று அறிந்து கொள்ள
வேண்டும்.
ஈசனைப் பற்றிய விசாரம் காரண-காரிய விவேகம்
த்ருக்-த்ருஷய
விவேகம்
பார்ப்பவன் – பார்க்கப்படும் பொருள். இவையிரண்டும் வெவ்வேறாக இருக்கிறது என்பதை அறிவோம். இந்த சரீரம் அறியப்படும் பொருள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்திரியங்கள், ப்ராணன்களும் அறியப்படுவதாக இருக்கிறது. தியானம் செய்வதற்கு மனமே கருவியாகவும், விஷயமாகவும் இருக்கிறது. எனவே மனதை இரண்டாக பிரித்து பழக வேண்டும். கட்டுபடுத்தப்பட்ட மனம், கட்டுபடுத்தபடாத மனம். இதே மாதிரி புத்தியையும் இரண்டாக பிரித்து அறிந்து கொள்கிறார்கள். அந்தகரணத்தில் இருக்கும் சிதாபாசத்தை பிரித்து பார்ப்பது கடினம். இதைத்தான் ஜீவன் என்று புரிந்து கொண்டு இருக்கின்றோம். இதுவே சுத்த சைதன்யத்தின் பிரதிபிம்பமாகும்.
மனதுடன் சேர்ந்த
சிதாபாசம்தான் ஜீவன். ஆனால் இதை
பிரதிபலிக்கின்ற சுத்த சைதன்யத்தை மறந்து விடுகின்றோம். நானே கர்த்தாவாகவும், போக்தாவாகவும்
இருக்கின்றேன் என்ற அறிவு நமது உடலையும், மனதையும் குறிக்கின்றது என்று அறிந்து
கொள்ள வேண்டும்.
நமக்குள்ளே இரண்டு
அறிபவன்கள் இருக்கின்றார்கள். இந்த இரண்டையும் பிரித்து பார்க்க வேண்டும். எது உண்மை என்று பிரித்துணர வேண்டும். எந்த ஒன்று மாற்றமடையாமல் அறிபவனை அறிந்து
கொண்டிருக்கிற தத்துவமானதாக இருக்கின்றதோ அதையே ஆத்மாவாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஆத்மா நிர்விகார த்ரஷ்டா, சிதாபாசன் சவிகார த்ரஷ்டா, இது பரபிரம்மத்தை
சார்ந்து இருக்கின்றது. (உ-ம்) பரமாத்மா சூரியன் என்றால், நீரில் தெரியும் சூரிய
பிம்பம் ஜீவன் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஸ்லோக
விளக்கம்:
இந்த சிதாபாசன் (ஜீவன்) உணர்ச்சியுடையவன், கேட்பவன், சுவைப்பவன், நுகர்ந்து பார்ப்பவன், சிந்திப்பவன், மனதில் குழப்பமுடையவன், உறுதி செய்பவன், செயல் செய்பவன் (அகங்காரம்) எல்லாவற்றையும் அறிந்து கொண்டு வாழும் ஜீவன்கள் (மனிதர்கள்) இவைகள் சேதனமானது, அறிவுடையது. இந்த அறிவுடைய ஜீவன்தான் மேலான, அழியாத பிரம்மனாக இருக்கின்றான்.
நான் பார்ப்பவன்
அல்ல, கேட்பவன் அல்ல, சிந்திப்பவன் அல்ல, இவைகளுக்கு எல்லாம் ஆதாரமாக இருப்பவன்.
இவைகள் இப்படி அறிவு ஸ்வரூபமாக இருப்பதற்கு காரணமாக இருப்பவன். நான் பார்ப்பவனும் அல்ல, பார்க்கப்படும்
பொருளும் அல்ல என்ற அறிவை அடைய வேண்டும்.
ஒரு பொருளின் இருப்பை
சொல்ல வேண்டுமென்றால், அதைப் பற்றிய அறிவு இருக்க வேண்டும், எனவே இந்த உலகத்தில் இருக்கின்ற அனைத்துக்கும்,
மூலக்காரணமாக இருக்கின்றேன். இந்த ஸ்லோகத்தில் ஜீவன் என்பது வாக்கியார்த்தம், ஆத்மன்
என்பது லட்சியார்த்தம். ஜீவ-பிரஹ்ம ஐக்கியம் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றது.
ஸ்லோகம்-10
பரமேவாக்ஷரம் ப்ரதிபத்3யதே ஸ யோ ஹவை தத3ச்சா2யம் அஶரீரம்
அலோஹிதம் ஶுப்4ரமக்ஷரம் சேத3யதெ யஸ்து ஸோம்ய ஸ ஸர்வக்ஞ:
ஸர்வோ ப4வதி ததே3ஷ ஶ்லோக: || 10 ||
பரமேவ
அக்ஷரம் ப்ரதிபத்3யதே –
மேலானதும், அழியாததுமான அபேதத்தை அடைகின்றான்.
சிதாபாசத்திற்கு வந்து போவதெல்லாம் என்னைச் சார்ந்தது அல்ல என்ற அறிவை
அடைந்திட வேண்டும். இவனே ஞானி.
ஸஹ யஹ வை – எவன் பிரம்மத்தை அடைந்தவனோ, அவனுக்கு
தத்3 அச்சா2யம் –அவித்யா என்ற இருளற்றது, அக்ஞானம் அற்றது
அஶரீரம் – சரீரமற்றது ( இது அக்ஞானமற்றது, மூன்று சரீரங்கள் அற்றது )
அலோஹிதம் - தர்மங்களற்றது, குணங்களற்றது. இந்த உடலும் நானல்ல, அதைச் சார்ந்த தர்மங்களும் நானல்ல.
ஶுப்4ரம் அக்ஷரம் – தூய்மையானது, அழியாதது.
வேத3யதே யஸ்து – இப்படி யார் அறிகிறார்களோ
ஸஹ ஸர்வஞஹ - இப்படி அக்ஷரத்தை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவனாகின்றான்.
நம்முடைய
புத்தி எப்பொழுதும் அதை தெரிந்து கொள்ள வேண்டும், இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று
அலை பாய்ந்து கொண்டிருக்கும். இவன் எல்லாம் அறிந்தவனாகி விட்டதால், புத்தி அமைதி அடைகின்றது. பிறகு அடைந்த அறிவில்
நிறைவடைந்தவனாகின்றான்.
ஸர்வோ
ப4வதி - இவனே அனைத்துமாகின்றான். அனைத்து ஜீவராசிகளிலும் தன்னையே பார்த்துக்
கொண்டு இருக்கின்றான். இதுபற்றி மேலும் விளக்குவதற்கு கீழே மந்திரம்
கொடுக்கப்பட்டிருக்கின்றது.
ஸ்லோகம்-11
விக்ஞானாத்மா ஸஹ தே3வைஶ்ச ஸர்வை: ப்ராணா பூ4தானி
ஸம்ப்ரதிஷ்டந்தி யத்ர தத3க்ஷரம் சேத3யதே யஸ்து ஸோம்ய
ஸ ஸர்வக்ஞ: ஸர்வமேவ ஆவிவேஶேதி || 11 ||
அனைத்து
இந்திரியங்களுடன் (விக்ஞானாத்மா) ஜீவாத்மா (சிதாபாcaத்துடன் இருக்கும் ஜீவன்) பிராணன்கள், 5 ஸ்தூல பூதங்கள், 5 சூட்சும
பூதங்கள் இவைகள் எந்த பிரம்மனிடத்தில் சார்ந்துள்ளதோ அதுவே அந்த அழியாத ஒன்றை யார்
அறிகின்றார்களோ, அவன் அனைத்தையும் அறிகின்றான், அனைத்தையும் வியாபிக்கின்றான் (ஆவிவேஶேதி)
யத்3 த்3ருஷ்டம் த்3ருஷ்டமனுபஶ்யதி ஶ்ருதம் ஶ்ருதமேவார்த2மனுஶ்ருணோதி
தெஶாதி3க3ந்தரைஶ்ச ப்ரத்யனுபூ4தம் புன: புன: ப்ரத்யனுப4வதி த்3ருஷ்டம்
சாத்3ருஷ்டம் ச ஶ்ருதம் சாஶ்ருதம் சானுபூ4தம் சானனுபூ4தம் ச ஸச்சாஸச்ச
ஸர்வம் பஶ்யதி ஸர்வ: பஶ்யதி || 5 ||
நம்முடைய மனம்தான் கனவை காண்கிறது. கனவில் இந்த மனம் தன்னுடைய பெருமையையே அனுபவிக்கின்றது. நம்முடைய மனதிலுள்ள ரகசியங்களை அனுபவிக்கும் கனவுகளாக வருகின்றது. மனமே மனதை கனவில் அனுபவிக்கின்றது. மனதில் பதிந்துள்ள எண்ணங்களே கனவுகளாக வருகின்றது. விழிப்பு நிலையில் எதையெல்லாம் பார்த்தானோ அதையேதான் கனவில் பார்க்கின்றான். எதையெல்லாம் கேட்டானோ அதையேதான் கேட்கின்றான். விதவிதமான இடங்களில், திசைகளில், வெவ்வேறு காலத்தில் எதை அனுபவித்தானோ அதையே அனுபவிக்கின்றான். எதை மற்ற இந்திரியங்களால் அனுபவித்தானோ அதையேதான் மீண்டும் மீண்டும் அனுபவிக்கின்றான். முற்பிறவிகளில் பார்த்ததைம் கேட்டதையே கனவில் அனுபவிக்கின்றான். இந்தப் பிறவியில் பார்த்ததையும், பார்க்காததையும் கனவில் பார்க்கின்றான். இந்தப்பிறவியில் கேட்டதையும், கேட்காததையும் அனுபவிக்கின்றான். ஸத்தையும், அஸத்தையும் பார்க்கின்றான். எல்லாவற்றையும் பார்க்கின்றான், அனைத்துமாக இருந்து கொண்டு பார்க்கின்றான். நம்முடைய கர்மபலன்கள்தான் நம்மை இந்த ஆழ்நிலை உறக்கத்திற்கு கொண்டு செல்கிறது. ஒரு பிராரப்த பலன் முடிந்து வேறொன்று ஆரம்பிக்கும் இடைவெளியில்தான் நாம் ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கின்றோம்.
ஸ யதா3 தேஜஸாபி4பூ4தோ ப4வதி அன்னைஷ தேவ: ஸ்வப்னான்
ந பஶ்யத்யத2 ததை3தஸ்மின் ஶரீரே ஏதத்ஸுக2ம் ப4வதி || 6 ||
விழிப்பு, கனவு நிலையில் அனுபவிக்கும் சுகத்தில் துக்கமும் கலந்து இருக்கிறது. நம்முடைய மனதிலுள்ள வாஸனைகள் எல்லாம் சில வகையான நாடிகளுக்குள் இருக்கின்றது. மனமானது வாஸனைகள் இருக்கும் நாடிகளுக்குள் சென்று அங்குள்ள ஸம்ஸ்காரங்களை எடுத்து கொண்டு கனவு காண வைக்கிறது.
எவனொருவனுக்கு அக்னியால் (பித்தத்தினால்) நாடிகள் மறைக்கப்படும்போது, அவனது மனமானது கனவை காண்பதில்லை. அந்த நிலையில் இந்த சரீரத்தில் சுஷுப்தி சுகத்தை அனுபவிக்கின்றான். ஆழ்ந்த உறக்கத்தை அனுபவிக்கும் சுகம். இந்த சுகத்தை பிரம்மானந்தத்திற்கு அருகில் உள்ளது போல கூறப்படுகிறது.
ஸ யதா2 ஸோம்ய வ்யாம்ஸி வாஸோவ்ருக்ஷம் ஸ்ம்ப்ரதிஷ்டந்தி
ஏவம் ஹ வை தத் ஸர்வம் பர அத்மனி ஸம்ப்ரதிஷ்டதே || 7 ||
பகலில் இரைத் தேடச் சென்ற பறவைகள் மாலையில் தங்கள் கூட்டை நாடுவது போல அவைகள் அனைத்தும் ஆத்ம தத்துவத்தில் ஒடுங்குகின்றன. நாம் பல இடங்களில் இருக்கும் போது சூழ்நிலைகளுக்கேற்ப நடந்து கொள்வோம். ஆனால் நம் வீட்டில்தான் நம்முடைய உண்மையான ஸ்வரூபத்தில், சௌகரியமாக இருப்போம். உலகத்திலுள்ள வேற்றுமைகள் எல்லாம் நீங்கி அமைதியாக இருக்குமிடம்தான் பரபிரம்மம். இந்த உதாரணத்தின் மூலம் அறிந்துக் கொள்ள வேண்டியது பர பிரம்மத்தில் ஒடுங்கும்போதுதான் நிரந்தரமான அமைதியுடன் இருக்க முடியும். கடலில் தோன்றி எழும் அலைகள் மீண்டும் கடலிலே கலந்துவிடுவது போல ஜீவாத்மா பரமாத்வாவிலிருந்து தோன்றி அதிலே கலந்துவிடுவதுதான் மோட்சம்.
ப்ருதி2வீ ச ப்ருதி2வீமாத்ரா சாபஶ்சாபோமாத்ரா ச தேஜஶ்ச தே ஜோமாத்ரா ச
வாயுஶ்ச வாயுமாத்ரா சாகாஶஶ்சாகாஶாமாத்ரா ச கக்ஷுஶ்ச த்3ரஷ்டவ்யம் ச ஶ்ரோத்ரம் ச ஶ்ரோதவ்யம் ச க்4ராணம் ச க்4ராதவ்யம் ச த்வக்வ
ஸ்பர்ஶயித்வ்யம் ச வாக்ச வக்தவ்யம் ச ஹஸ்தௌ சாதா3த்வ்யம்
சோபஸ்த2ஶ்சனந்த3யிதவ்யம் ச பாயுஶ்ச விஸர்ஜயிதவ்யம் ச பாதௌ ச
க3ந்தவ்யம் ச மனஶ்ச மந்தவ்யம் ச பு3த்3தி4ஶ்ச போ3த்3த4வ்யம்
சாஹம்காரஶ்சாஹம்கர்தவ்யம் ச சித்தம் ச சேதயிதவ்யம் ச தேஜஶ்ச
வித்யோதயிதவ்யம் ச ப்ராணஶ்ச விதா4ரயிதவ்யம் ச || 8 ||
ஏஷ ஹி த்3ரஷ்டா ஸ்ப்ரஷ்டா ஶ்ரோதா க்4ராதா ரஸயிதா மந்தா
போத்3தா4 கர்தா விக்ஞானாத்மா புருஷ: |
ஸ பரேSக்ஷரே ஆத்மனி ஸம்ப்ரதிஷ்டதே || 9 ||
ஈசனைப் பற்றிய விசாரம் காரண-காரிய விவேகம்
பார்ப்பவன் – பார்க்கப்படும் பொருள். இவையிரண்டும் வெவ்வேறாக இருக்கிறது என்பதை அறிவோம். இந்த சரீரம் அறியப்படும் பொருள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்திரியங்கள், ப்ராணன்களும் அறியப்படுவதாக இருக்கிறது. தியானம் செய்வதற்கு மனமே கருவியாகவும், விஷயமாகவும் இருக்கிறது. எனவே மனதை இரண்டாக பிரித்து பழக வேண்டும். கட்டுபடுத்தப்பட்ட மனம், கட்டுபடுத்தபடாத மனம். இதே மாதிரி புத்தியையும் இரண்டாக பிரித்து அறிந்து கொள்கிறார்கள். அந்தகரணத்தில் இருக்கும் சிதாபாசத்தை பிரித்து பார்ப்பது கடினம். இதைத்தான் ஜீவன் என்று புரிந்து கொண்டு இருக்கின்றோம். இதுவே சுத்த சைதன்யத்தின் பிரதிபிம்பமாகும்.
இந்த சிதாபாசன் (ஜீவன்) உணர்ச்சியுடையவன், கேட்பவன், சுவைப்பவன், நுகர்ந்து பார்ப்பவன், சிந்திப்பவன், மனதில் குழப்பமுடையவன், உறுதி செய்பவன், செயல் செய்பவன் (அகங்காரம்) எல்லாவற்றையும் அறிந்து கொண்டு வாழும் ஜீவன்கள் (மனிதர்கள்) இவைகள் சேதனமானது, அறிவுடையது. இந்த அறிவுடைய ஜீவன்தான் மேலான, அழியாத பிரம்மனாக இருக்கின்றான்.
பரமேவாக்ஷரம் ப்ரதிபத்3யதே ஸ யோ ஹவை தத3ச்சா2யம் அஶரீரம்
அலோஹிதம் ஶுப்4ரமக்ஷரம் சேத3யதெ யஸ்து ஸோம்ய ஸ ஸர்வக்ஞ:
ஸர்வோ ப4வதி ததே3ஷ ஶ்லோக: || 10 ||
ஸஹ யஹ வை – எவன் பிரம்மத்தை அடைந்தவனோ, அவனுக்கு
தத்3 அச்சா2யம் –அவித்யா என்ற இருளற்றது, அக்ஞானம் அற்றது
அஶரீரம் – சரீரமற்றது ( இது அக்ஞானமற்றது, மூன்று சரீரங்கள் அற்றது )
அலோஹிதம் - தர்மங்களற்றது, குணங்களற்றது. இந்த உடலும் நானல்ல, அதைச் சார்ந்த தர்மங்களும் நானல்ல.
ஶுப்4ரம் அக்ஷரம் – தூய்மையானது, அழியாதது.
வேத3யதே யஸ்து – இப்படி யார் அறிகிறார்களோ
ஸஹ ஸர்வஞஹ - இப்படி அக்ஷரத்தை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவனாகின்றான்.
விக்ஞானாத்மா ஸஹ தே3வைஶ்ச ஸர்வை: ப்ராணா பூ4தானி
ஸம்ப்ரதிஷ்டந்தி யத்ர தத3க்ஷரம் சேத3யதே யஸ்து ஸோம்ய
ஸ ஸர்வக்ஞ: ஸர்வமேவ ஆவிவேஶேதி || 11 ||
சுருக்கம்
01 மூன்று
நிலைகள் எவையென்று கூறப்படுகிறது
04-06 கனவு
நிலை, தூக்க நிலை இவைகள் விளக்கப்படுகிறது
07-09 ஆத்மாவைப்
பற்றிய விளக்கம்
10-11 ஆத்மாவின்
பெருமையை கூறுகின்றது
----oo000oo----
No comments:
Post a Comment