நைஷ்கர்ம்ய சித்தி
அத்தியாயம்-2
வேதாந்த சிரவணத்தின் மூலம்
அழிக்கப்பட்ட அக்ஞானமானது திரும்பவும் வராது. ஞானம் அடைந்து அதில்
நிலைபெற்றுவிட்டால் அதுதான் இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கும். இந்தக் கருத்தை
மனதில் நன்கு நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த நூலில் சொல்லப்பட்ட
கருத்துக்களை மனதில் நன்கு பதியவைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வரும் எந்த
சூழ்நிலைகளையும் இந்த கருத்தின் துணைக் கொண்டு துணிவுடன் எதிர்கொண்டு வெற்றி
பெறவேண்டும். முழுமனதுடன் இந்தக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வது என்பது கடினமாகவே
இருக்கும். ஆனால் இந்தக் கருத்துக்களை நன்கு வாழ்க்கையில்
பயன்படுத்துவதற்கேற்றவாறு மனதை உறுதிப்படுத்த வேண்டும். இனிமேல் இந்த நூலில் கூறப்பட்ட
வழிமுறைகளின்படி என் வாழ்க்கையை நடத்திச் செல்வேன் என்று மனதுக்குள் நிச்சயம்
செய்து கொள்ளவேண்டும். இதை தொடர்ந்து செயல்படுத்துவதில் முழுமுயற்சியுடன் ஈடுபட
வேண்டும்.
ஞானயோக பாதையில் பயணிப்பதற்கு முன்பு இந்த மனநிலையை அடைந்துவிட வேண்டும். வேதாந்த உபதேசத்தில் முழு நம்பிக்கையுடன் முயற்சியை தொடர வேண்டும். இல்லையென்றால். எவ்வளவு நாட்கள் படித்தாலும், ஏதாவதொரு வகையில் மனதில் அதிருப்தி இருந்து கொண்டிருக்கும். அதாவது வேதாந்த கருத்து என் அனுபவத்திற்கு வரவில்லை, இன்னும் ஆத்மசாட்சாத்காரம் ஏற்படவில்லை, அதைப் பற்றிய முழுஅறிவை அடைய முடியவில்லை போன்ற பலவிதமான ஆதங்கங்கள் இருந்து கொண்டிருக்கும். வேதாந்த சிரவணமே சாதகர்களுக்கு இக்கட்டான சூழ்நிலையிலும் உதவிகரமாக இருக்கும்.
அவநம்பிக்கையானது சில சமயங்களில் தனக்குத்தானே சமாதானம் செய்து கொள்ள வைக்கும். வேதாந்த உபதேசத்தை விரும்புகிறேன் என்றும், உபநிஷத்தும் அதை உபதேசக்கும் குருவும் ஆச்சரியப்படும் வகையில் இருக்கிறார்கள் என்றும் சமாதானம் செய்து கொள்வார்கள். ஆனால் தனது வாழ்க்கையில் வேதாந்த கருத்துக்களை பயன்படுத்த துணிவற்றவர்களாக இருப்பார்கள். வேதாந்தம் படிப்பதற்கு மட்டும்தான், வாழ்க்கை துணைக்கு இறைவன்தான் என்ற கொள்கையோடு இருந்து கொண்டிருப்பார்கள். இவ்வாறு இருப்பவர்களை கர்மயோகி என்றுதான் சொல்ல வேண்டும். இவர்கள் ஞானயோக சாதகர்கள் அல்ல. கர்மயோகி வாழ்க்கையை இறைவன் துணைக்கொண்டுதான் நடத்திக் கொண்டிருப்பான். ஞானயோகி இறைவனின் உபதேசங்களின் துணைக் கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பான். கர்மயோகி இறைவனை மட்டும்தான் நம்பிக் கொண்டிருப்பான். ஞானயோகி இறைவன் மீது ஆழ்ந்த நம்பிக்கையுடனும், அவர் உபதேசங்களின்படி தன் வாழ்க்கை முறையை மாற்றி செயல்பட்டுக் கொண்டிருப்பான். கர்மயோகி வாழ்க்கையை இறைவனை நம்பித்தான் நடத்திக் கொண்டிருப்பான். தனக்கு வரும் கஷ்ட-நஷ்டங்களை போக்கிக் கொள்வதற்கு இறைவனின் துணையை, நாடுவான். ஆனால் ஞானயோகி வாழ்க்கையை வேதாந்த உபதேசத்தின்படி நடத்திக் கொண்டிருப்பான். வேதாந்தத்தை படிப்பதனால் மட்டும் ஒருவன் ஞானயோகியாகி விடமுடியாது. படித்ததை செயல்படுத்த வேண்டும் என்ற நிச்சயபுத்தியுடன் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பவன்தான் ஞானயோகி. ஞானயோகம் மட்டும்தான் சம்சாரத்திலிருந்த விடுதலையை பெற்றுத்தரும் என்பதால் ஞானயோக பாதையை தேர்ந்தெடுத்து அதன்படி வாழ்க்கையை நடத்திக் கொண்டு வரவேண்டும். கர்மயோகத்தின் மூலம் மனத்தூய்மையை அடைந்துவிடலாம். நம் மனம் தூய்மையை அடைந்து விட்டது என்பதற்கு அடையாளம், புலனுகர் போகப் பொருட்களில் வைராக்கியத்தை அடைதலேயாகும். அதாவது தன்னிடத்திலுள்ள பொருட்கள், செல்வம், உறவு இவைகள் அனைத்தின் மீதும் பற்றற்று இருக்கும் நிலையே வைராக்கியம். இவைகள் நம்மைவிட்டு சென்று விட்டால் வருத்தமோ, நம்மிடத்தில் இருப்பதால் மகிழ்ச்சியோ கொள்ளாத மனம்தான் தூய்மையை அடைந்துவிட்ட மனம் என்று நிச்சயம் செய்து கொள்ளலாம்.
ஆசிரியர் வைராக்கியத்திற்கு
அவருடைய பாணியில் விளக்குகிறார். வைராக்கியம் உடைய மனதில் இரண்டு வகையான
நல்லொழுக்கங்கள் இருக்கும். அவைகள்,
- புலனுகர்
போகப்பொருட்கள், மற்ற மனிதர்கள்
போன்றவைகளின் பிடியிலிருந்து விடுபட்டிருத்தல். ஆசையும், கோபமும் இவைகளின்
பிடியில் இருக்கின்ற மனதில்தான்
தோன்றும். எனக்கு இன்பத்தை கொடுக்கக்கூடியவைகள் என்று ஏற்கனவே மனதில் ஆசையை தேக்கி
வைத்திருந்தாலோ, அவைகளை
அடையமுடியவில்லை என்ற கோபத்திலோ, ஏக்கத்திலோ இருக்கும் மனமானது வேதாந்த உபதேசத்திற்கு உகந்ததல்ல. மனத்தூய்மை
என்பது மனதில் எதையாவது அடையவேண்டும் என்ற ஆசை இல்லாத நிலையையே குறிக்கிறது.
- ஆத்மஞானத்தை அடைய
வேண்டும் என்று தீராத விருப்பம் கொண்ட மனதாக இருக்க வேண்டும். மனம் தானாக வேதாந்த
உபதேசத்தை கேட்க ஆவல் கொள்ளவேண்டும்.
ஞானயோக சாதகர்கள்
எட்டுநிலைகளை கடந்துதான் தனது இறுதி லட்சியமான மோட்சத்தை அடையமுடியும். ஏதாவது ஒரு
நிலையில் தவறு நேர்ந்தால் அதை சரிசெய்துவிட்டுத்தான் அடுத்த நிலைக்கு செல்ல
வேண்டும்.
- சம்சார வைராக்கியம் - மோட்சம் என்பது சம்சாரத்திலிருந்து விடுதலை
அடைவதுதான். மோட்சத்தை அடைவதற்கு ஒரேவழி சம்சாரத்தின் மீது வைராக்கியத்தை அடைவதுதான்.
- சம்சார நிவிருத்தி இச்சா - சம்சாரத்தை
நீக்கிவிட வேண்டும் என்ற ஆசையை உபரம என்று கூறுவர். பகவான் உலகத்திலுள்ள எல்லா
பொருட்களும் இன்பத்தை தருவதாகவும், துன்பத்தை தருவதாகவும் படைத்திருக்கிறார். இன்பத்தை தரும் பொருளை கண்டவுடன்
வைராக்கியம் சென்றுவிடும்; துன்பத்தை தரும் பொருளை கண்டவுடன் வைராக்கியம் வந்துவிடும். பொருட்கள், மனிதர்கள் இவைகளிடமிருந்து இன்பத்தை அடைய வேண்டும் என்ற பற்றை
நீக்கிவிடுவதே வைராக்கியம். இந்த வைராக்கியத்தை வளர்த்துக் கொள்வதே மோட்சம் அடைவதற்கான விருப்பத்தைக் கொடுக்கும்.
- மோட்ச பிராப்தி இச்சா - மோட்சத்தின் மீது
தீவிரமான ஆசை (முமுக்ஷுத்வம்).
- குரு பிராப்தி - மோட்சத்தை கொடுக்கும்
வேதாந்தத்தை உபதேசிக்கும் சரியான குருவை அடைதல்.
- வாக்கிய சிரவணம் - குரு உபதேசம் மூலம் வேதாந்த சிரவணம்.
மகாவாக்கிய விசாரம் ஆகியவற்றை செய்தல்.
- பதார்த்த விசாரம் - மகாவாக்கியத்திலுள்ள ஒவ்வொரு சொல்லையும்
விசாரம் செய்தல். தத் என்ற சொல் பரமாத்மாவை குறிக்கிறது என்றும், த்வம் என்ற சொல் ஜீவாத்மாவை குறிக்கிறது என்றும் நன்குணர்ந்து கொள்ளுதல்.
- அன்வய வியதிரேக விசாரம் - த்வம் என்ற சொல்
ஜீவாத்மாவைக் குறிக்கிறது என்பதை நிச்சயம் செய்ய சாஸ்திரம் அன்வய
வ்யதிரேக விசாரம் என்கின்ற வழிமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று
சொல்லுகிறது.
- வாக்கியார்த்த போதனம்/ஐக்கிய ஞானம் - மகாவாக்கிய சிரவணமே ஆத்மஞானத்தைக் கொடுத்துவிடும். மேற்கூறிய ஏழு நிலைகளை கடந்துவிட்டால் சிரவணத்தின் மூலமே மோட்சத்தை அடைந்து விடலாம்.
இந்த அன்வய வியதிரேக
விசாரம் ஆத்ம விசாரம் செய்வதற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதை சரியாக
பயன்படுத்திவிட்டால் அபரோக்ஷ ஞானத்தை அப்போதே அடைந்துவிடலாம். ஆத்ம தத்துவத்தை
விழிப்பு நிலையில் மட்டும்தான் விசாரம் செய்து புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால்
விழிப்புநிலையில்தான் குரு உபதேசம் மற்றும், சாஸ்திர உபதேசங்களை கேட்க முடியும், சிந்திக்க முடியும். சமாதி நிலையில் ஆத்மஞானத்தை
உணரலாம் ஆனால் அடைய முடியாது.
வேதாந்தம் இந்த உடலை
தேவாலயம் என்று வர்ணிக்கிறது. எனவே அதை மதிக்க வேண்டும், போற்றி பாதுகாக்க
வேண்டும். சில இடங்களில் இதே உடலின் உண்மை ஸ்வரூபத்தைக்கூறும் போது அதைப்பற்றி
எதிர்மறையான கருத்துக்களையும் கூறியிருக்கிறது. உடலின் மீது அதிக பற்று
வைக்கக்கூடாது என்று வலியுறுத்துவதற்காக இவ்வாறு கூறியிருக்கிறது. இந்த உடலை
வெறுக்கவும் கூடாது, விரும்பவும் கூடாது. உடலை வைத்துக் கொண்டுதான் அதன் மீதுள்ள அபிமானத்தை
நீக்கவேண்டும் என்று வேதாந்தம் உபதேசிக்கிறது. இந்த உடலின் மீதுள்ள பற்றை
நீக்கிவிட்டால், உடலைச் சார்ந்து
வரும் ஆசை, கோபங்கள் அனைத்தும்
சென்றுவிடும். எதுவும் மனதை அலைகழிக்காது.
ஓவ்வொருவரும் தீவிரமாகவும், நெருக்கமாகவும்
பலவிதமான உணர்ச்சிகளை அனுபவிக்கின்றோம்.
இதுவே சம்சாரத்திற்கு காரணமாக இருக்கின்றது. அதாவது பயம், கோபம், கவலைகள் போன்ற
உணர்ச்சிகளை தனக்கு மட்டுமே தெரிகின்ற வகையில்
அனுபவிக்கின்றோம். இந்த உணர்ச்சிகளை அனுபவிக்கின்ற விஷயத்தையே
பகுத்தறியும் முறையாக எடுத்துக் கொண்டு விளக்குகிறார் ஆசிரியர். இதற்கு
தர்க்கத்தில் உள்ள அடிப்படையான விதிகளை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
முதல் விதி: ஒரு பொருளையும் அதனுடைய குணங்களையும் தனியாக பிரிக்க முடியாது. இவையிரண்டும் பிரிக்கமுடியாமல் இணைந்தேயிருக்கும். இந்த இணைப்பையே தர்க்க சாஸ்திரத்தில் சமவாய சம்பந்தம் (அ) பிரிக்கமுடியாக சம்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக நிறம், உயரம் போன்றவைகள் தனித்து இருக்கமுடியாது. அப்படி பிரிக்க முடிந்தால் அவைகளை பார்க்க முடியாது. இதுவே பரதந்திரம் அதாவது தன் இருப்புக்கு எதாவது ஒன்றைச் சார்ந்துதான் இருக்க முடியும். எனவே பொருளும் அதன் குணங்களும் பிரிக்கமுடியாமல் இணைந்தேயிருக்கும்.
இரண்டாவது விதி: எந்தப்பொருளை அனுபவிக்கின்றமோ அந்தப் பொருளையும், அதனுடைய குணங்களையும் சேர்த்தே அனுபவிப்போம். அதாவது பொருளை அனுபவிப்பது என்பது அதனுடைய குணங்களையும் அனுபவிப்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது. ஒரு குணத்தை அனுபவிக்கும் போது அது சார்ந்திருக்கின்ற பொருளையும் நாம் அனுபவிக்கின்றோம்.
மூன்றாவது விதி: ஒரு பொருளும் அதனுடைய குணங்களையும் அனுபவிக்கப்படும் போது அதை அனுபவிப்பவன் ஒருவன் இருக்க வேண்டும். அவன் இவைகளிரண்டிலிருந்தும் வேறுபட்டவனாக இருக்க வேண்டும்.
நான்காவது விதி-அனுபவிக்கப்படும் குணங்கள் அனைத்தும் அனுபவிக்கின்ற பொருளை சார்ந்துதான் இருக்குமேயொழிய அனுபவிப்பனை சார்ந்திருக்காது.
மேற்கூறிய விதிகளை வைத்துப் பார்க்கும்போது கவலை, வருத்தம் ஆகிய உணர்ச்சிகள் என்னைச் சார்ந்தவையல்ல என்றும் அவைகள் மனதினுடைய குணங்களாகும், மனதைச் சார்ந்தவைகளாகும் என்றும். இந்த உணர்ச்சிகள் தனித்து கிடையாது மனதைச் சார்ந்துதான் இருக்கமுடியும் என்றும் புரிந்;து கொள்வோம்.. ஏனென்றால் இந்த உணர்ச்சிகளை நம்மால் உருவமாக பார்க்கமுடியாது. எனவே இவைகளுக்கென்று தனித்து இருப்பு கிடையாது. எதையாவது ஒன்றைச் சார்ந்துதான் இருக்க வேண்டும். இவைகள் மனதைச் சார்ந்தவைகள் என்று நாம் நன்கு அறிவோம். நான் இவைகளிலிருந்து தனித்து இருப்பவன் என்ற உண்மை நிலைநாட்டப்படுகிறது.
அனுபவிக்கப்படுகின்ற
உணர்ச்சிகள் மனதினுடைய தன்மைகளாகும். எனவே உணர்ச்சிகளை அனுபவிக்கின்ற போது
மனதை நாம் அனுபவிக்கின்றோம். இதிலிருந்து மனம் ஒரு பொருளாகவும், அதிலெழுகின்ற
உணர்ச்சிகள் அனைத்தும் அதனுடைய குணங்களாகவும் புரிந்து கொள்ளலாம். எனவே இவையிரண்டும் சேர்ந்தே அனுபவிக்கின்;ற பொருளாகத்தான்
இருக்கின்றது.
ஆகவே நான் மனதும் அல்ல உணர்ச்சிகளும் அல்ல. இவைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற சாட்சியே நான். இவை இரண்டிற்கும் வேறுபட்டவன். எந்த உணர்ச்சிகளும் என்னைச் சார்ந்ததல்ல. வருத்தம், துன்பம், கவலைகள் இப்படிபட்ட எந்த உணர்ச்சிகளும் என்னிடத்தில் இல்லை, அவைகளால் பாதிக்கப்படவும் இல்லை. மோட்சத்தை அடைய இந்தவிதமான உணர்ச்சிகளை நீக்கிவிடவேண்டும்.
ஆகவே நான் மனதும் அல்ல உணர்ச்சிகளும் அல்ல. இவைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற சாட்சியே நான். இவை இரண்டிற்கும் வேறுபட்டவன். எந்த உணர்ச்சிகளும் என்னைச் சார்ந்ததல்ல. வருத்தம், துன்பம், கவலைகள் இப்படிபட்ட எந்த உணர்ச்சிகளும் என்னிடத்தில் இல்லை, அவைகளால் பாதிக்கப்படவும் இல்லை. மோட்சத்தை அடைய இந்தவிதமான உணர்ச்சிகளை நீக்கிவிடவேண்டும்.
துயரத்தை தருகின்ற சூழ்நிலைகள் எது வந்தாலும் அவைகள் என்னைச் சார்ந்ததல்ல என்று இயல்பாகவே நினைக்கின்ற மனதை அடைய வேண்டும்.. எல்லா உணர்ச்சிகளையும் கீழ்கண்டவாறு நான்கு வகையாக பிரித்து விடலாம்.
- ஆத்மாவின் மற்றொரு பகுதி
அனுபவிப்பவனாக இருக்கலாம். இது நிச்சயமாக இருக்கமுடியாது.
- அனாத்மா அனுபவிப்பவனாக
இருக்கலாம் என்று சொன்னால், அனாத்மா உணர்வற்ற ஜடமானது எனவே அதனால் அனுபவிப்பவனாக இருக்கமுடியாது.
- வேறொரு ஆத்மா அனுபவிப்பவனாக இருக்கலாம் என்று வாதிக்கலாம். இதுவும் சாத்தியாமாகாது. ஒரு ஆத்மா வேறொரு ஆத்மாவை அனுபவிக்கிறது என்று சொல்லும் போது முதல் ஆத்மா வேறொரு சூட்சும உடலைத்தான் அனுபவிக்க முடியும், இரண்டாவது ஆத்மாவை அனுபவிக்க முடியாது. ஏனென்றால் ஆத்மா ஒன்றுதான், அது இரண்டாக இருக்கமுடியாது. அனைத்து ஜீவராசிகளில் உணர்வுமயமாக இருக்கின்ற ஆத்மா ஒன்றாகத்தான் இருக்கிறது. பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையில் கூறும்போது எல்லா உடல்களிலும் இருக்கின்ற சைதன்யமாக, உணர்வுமயமாக என்னை அறிந்து கொள் என்ற உபதேசத்தை இங்கு நினைத்துப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.
பதில்: நான்
என்ற சொல்லை உடல், மனம் போன்ற அனாத்மாவை குறிப்பிடும்போதும் பயன்படுத்துகிறாய். அகங்காரம்
ஆத்மாவோடு சேர்ந்திருக்கிறது என்று சொன்னால், அகங்காரம் அனாத்மாவோடும் சேர்ந்திருக்கிறது என்றும் வைத்துக் கொள்ளலாம். எனவே
ஒரு நிலையான முடிவுக்கு வரமுடியாது.
ஆசிரியர் இனி சூட்சும சரீர விவேகத்தைப் பற்றி விளக்குகிறார். முதலில்
சூட்சும சரீரத்தை சார்ந்த அனைத்து
உணர்ச்சிகளையும் எடுத்துக் கொள்கிறார். இவைகள் நம்மால்
அனுபவிக்கக்கூடியவைகளாகும். அனுபவிக்கக்கூடிய இந்த அனைத்து வகையான உணர்வுகளும் ஏதோ
ஒன்றை சார்ந்ததாக இருக்க வேண்டும். அதுவும் நம்மால் அனுபவிக்கக்கூடிய ஒன்றாக இருக்க
வேண்டும். ஏனென்றால் உணர்ச்சிகள் சார்ந்திருக்கின்ற பொருளை அனுபவிக்காமல்
உணர்ச்சிகளை நாம் அனுபவிக்க முடியாது.. இந்த உணர்ச்சிகள் சார்ந்திருக்கின்ற
அனாத்மாவானது மனமாகும் இதுவே சூட்சும சரீரமாகும். ஆதலால்
எல்லாவிதமான உணர்ச்சிகளும், அதனுடைய இருப்பிடமும் மனமாகும் என்ற முடிவுக்கு நம்மால்
வரமுடியும். இவைகள் அனைத்தும் அனுபவிக்கக்கூடியவைகளாக இருப்பதால் இவைகளை
அனுபவிப்பவன் தனியாக இருக்க வேண்டும்.
நான் என்ற அகங்காரமும், என்னுடையது என்கின்ற
மமகாரமும் மனதைச் சார்ந்து இருக்கின்ற தன்மைகளாகும். ஏனெனில் இவைகளை நாம் தெளிவாக
அனுபவிக்கின்றோம், வெளிப்படுத்துகிறோம். மகாவாக்கியம் அகங்காரத்தை ஆத்மாவின் குணமாக சொல்லவில்லை.
இரண்டு உதாரணங்கள்
கொடுக்கப்படுகின்றன. ஒருவன் இந்த நாட்டிற்கு யார் அரசன் என்று கேட்கும்போது இந்த
நாட்டிற்கு அரசன் ராமன் என்று பதில் கிடைக்கிறது. இந்த இரண்டு வாக்கியங்களில் உள்ள
ராமன், அரசன் என்ற இரண்டு பெயர்ச்சொற்களும்
செயல் செய்பவனை குறிக்கிறது. இரண்டும் ஒருவரையே குறிக்கிறது. இந்த வாக்கியத்தை சாமானாதிகரண்ய வாக்கியம் என்று அழைக்கப்படும்.
இந்த சாமானாதிகரணம் எதை சுட்டிக்காட்டுகிறதென்றால், ராமன் என்பவன் அரசன்
என்ற பதவியை சேர்த்துக் கூறுகிறது. ராமன் என்பவன் ஏற்கனவே தெரியப்பட்டவனாக இருந்தாலும் அவன் அரசனாக இருக்கிறான்
என்பதை இந்த சாமான்யாதிகரண வாக்கியம் மூலமாக தெரியவருகிறது. எனவே இது ஐக்கிய
சாமானாதிகரணம் என்று அழைக்கப்படுகிறது.
இரண்டாவது உதாரணமான கயிறு-பாம்பு வாக்கியத்தில் மங்கலான ஒளியில் கயிறானது பாம்பு போல தோற்றமளித்து பயத்தை
ஏற்படுத்துகிறது. ஆனால் பார்த்துக் கொண்டிருக்கின்ற பாம்பானது உண்மையில் கயிறாகும்
என்று ஒருவர் சொல்லும் போது பயம் நீங்கிவிடுகிறது. இதில் பாம்பும், கயிறும் பெயர்ச்சொற்கள்
வினையோடு தொடர்புடையதாக இருக்கிறது. ஆதலால் இவை சாமான்யாதிகரண்ய வாக்கியங்களாக
இருந்தாலும் இதில் ஒரு பெயர்ச்சொல் பொய்யாக தோற்றமளிக்கும் மற்றொன்றை நீக்குகிறது.
ஆதலால் இந்த வகையை நீக்குகின்ற சாமான்யாதிகரண வாக்கியம் என்று அழைக்கப்படுகிறது.
எனவே சாமான்யாதிகரண வாக்கியத்தை
பார்க்கும்போது அது எந்த வகையானது என்பதை சரியாக ஆராய்ந்து புரிந்து
கொள்ளவேண்டும்.
- உபாஸனாயாம் சாமானாதிகரண்யம் இதில் ஒப்புமையானது வேண்டுமென்றே மிகைப்படுத்தப்பட்டு
சொல்லப்படுகிறது. உதாரணமாக அவன் நெருப்பாக இருக்கிறான் என்ற வாக்கியத்தில்
நெருப்பும், மனிதனும் ஒன்றுபடுத்தி
பேசப்படுகிறது. ஆனால் இவ்வாறு உண்மையில் இருக்கமுடியாது. உபநிஷத் பஞ்சாக்னி
வித்யாவைப் பற்றி சொல்லும்போது மனிதனை நெருப்பு தத்துவமாக தியானிக்க வேண்டும்
என்று குறிப்பிடுகின்றது.
- பா4தாயாம்
சாமானாதிகரண்யம்: இதில் ஒன்றை
குறிக்கின்ற இரண்டு சொற்களில் ஒன்று வேறொன்றை நீக்குகிறது.
மங்கலான வெளிச்சத்தில் தூணை திருடனாக ஒருவன் நினைத்து பயந்து கொண்டிருக்கும்போது, வேறொருவன் அந்த
திருடன் மனிதனல்ல, வெறும் தூண்தான் என்று திருடனை நீக்குகிறான். எனவே இந்த வகையான வாக்கியங்களை
இவ்வாறு அழைக்கப்படுகிறது.
- ஐக்கிய சாமானாதிகரண்யம்: இதில் இரண்டு சொற்கள் குறிப்பிடுகின்ற பொருள்
சமப்படுத்தப்படுகிறது. இதற்கு உதாரண வாக்கியம் அந்த தேவதத்தனே இவன் என்பது. அதாவது
25வருடங்களுக்கு
முன்னர் பார்த்த தேவதத்தன்தான் நாம் பார்க்கும் உடல் வளர்ச்சியடைந்திருக்கும் இந்த
இளைஞன். இது போன்ற வாக்கியம்தான் தத் த்வம் அஸி என்கின்ற வாக்கியமும் ஆகும். இங்கே
ஐக்கியம் முக்கியமாக இருப்பதால். இதற்கு முக்கிய சாமானாதிகரண்யம் என்றும்
அழைக்கப்படுகிறது.
- விசேஷண-விசேஷ்ய பா4வ சாமானாதிகரண்யம் - இதில் ஒரு பொருளும் அதனுடைய குணங்களும் ஒன்றுசேர்த்து கூறப்படுகிறது. நீலத்தாமரை என்று கூறும்போது நீலம், தாமரை என்ற இரண்டு சொற்களும் ஒன்றையே குறிக்கிறது. இது ஐக்கியமல்ல தாமரையையும் அதன் குணமான நீலநிறத்தையும்தான் ஒன்றிணைத்திருக்கிறோம்.
அத்வைதியின் பதில்: அத்வைத
மோட்சத்தை அடையும் போது பொய்யான நான் என்ற அகங்காரம்தான் நீக்கப்படுகிறது.
உண்மையான நான் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும். இந்த மோட்ச நிலையில் ஞானி
அகங்காரம் நீங்கப்பெற்று அதனால் வருகின்ற சம்சார பிரச்சனைகள் முற்றிலுமாக
நீங்கப்பெற்று முடிவில்லாத ஆனந்தத்தை அனுபவிக்கிறான். சம்சாரம் முற்றிலுமாக
அழிக்கப்பட்டு என்றென்றும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றான். எனவே ஆனந்தத்தை
அனுபவிப்பதற்கு அகங்காரம் தேவையில்லை.
பூர்வ
பட்சியின் கேள்வி:
அகங்காரம் இல்லாது போகட்டும், ஆனால் அது ஆத்மாவின் உள்ளார்ந்த இயல்பாக இருக்கட்டுமே. ஆத்மாவின் உள்ளார்ந்த இயல்பாக இருக்கின்ற அகங்காரம் மோட்சத்தை அடைந்தவுடன் சென்றுவிடும் என்று ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது? அதாவது சம்சாரத்தை அனுபவிக்கும் போது அகங்காரம் இருக்கும், மோட்ச காலத்தில் சென்றுவிடட்டும்.
அத்வைதியின் பதில்: அகங்காரம் ஆத்மாவின் உள்ளார்ந்த இயல்பாக
இருந்தால், அது மோட்ச
காலத்திலும் தொடர்ந்திருக்கும்.
பூர்வபட்சியின் கேள்வி:
மாம்பழம் காயாக இருக்கும்போது கடினமாகவும், பச்சை நிறமாகவும், இனிப்பற்றதாகவும், குறிப்பிட்ட வாசனையை உடையாதாகவும் இருக்கின்றது. இந்த சப்தம், தொடுஉணர்ச்சி, உருவம், சுவை, நிறம் எல்லா குணங்களும் அதனிடத்தில் இயல்பாகவே இருக்கின்றது. ஆனால் இதுவே பழமாக கனிந்துவிட்டால் மேற்சொன்ன எல்லா குணங்களும் மாறிவிடுகின்றன. காயாக இருக்கும்போது இருந்த இயல்பான குணங்கள் அனைத்தும் நீங்கி கனியாக மாறும்போது வேறு புதிய இயல்பான குணங்கள் வந்து சேர்ந்துவிடுகின்றது. இதிலிருந்து சுபாவமாக இருக்கின்ற குணங்களும் நீங்கிவிடும் என்ற ஒரு பொதுவான விதியை அடையலாம். ஆத்மா சம்சாரியாக இருக்கும் போது அகங்கார தர்மத்தை தனது இயல்பான குணமாக கொண்டிருக்கும். இந்த நிலையை மாங்காயைப் போன்று எடுத்துக் கொள்ளலாம். ஆத்மா மாம்பழம் போன்று மோட்ச காலத்தில் சம்சார தர்மங்களான அகங்காரம், மமகாரம் அனைத்தும் நீங்கியவையாக இருக்கட்டும்.
ஆசாரியாரின் பதில்:
ஒரு பொருளின் இயல்பான தர்மங்கள் நீங்கி வேறு புதிய தர்மங்கள் இயல்பானதாக ஆகிவிட்டால் அந்தப் பொருளும் வேறொரு புதிய பொருளாக மாறிவிடும். இதுவொரு பொது விதியாகும். அதுபோல அகங்காரம் ஆத்மாவின் இயல்பான குணமாக கொஞ்ச காலம் இருந்துவிட்டு அதற்கு பதிலாக வேறொரு புதிய இயல்பான குணம் அதில் சேர்ந்து விட்டால் ஆத்மாவும் மாற்றத்தை அடைந்துவிடும். ஆனால் வேதசாஸ்திரம் ஆத்மா மாற்றமடையாதது, என்றென்றும் இருப்பது என்று உபதேசிக்கிறது. ஆத்மாவானது வெளித்தோற்றத்திற்கு வராதது, நினைத்துப் பார்க்கக்கூட முடியாதது, மாற்றமுடியாதது, என்றும் இருப்பது, எங்கும் வியாபித்து இருப்பது, அசைவற்றது, பிறப்பற்றது. எனவே ஆத்மாவினுடைய உணர்வுமயமானது (சைதன்யமானது) மாறக்கூடிய குணத்தை கொண்டதல்ல. உண்மையில் ஆத்மாவானது உணர்வுமயமானது, அறிவுமயமானது.
மாம்பழமானது காயாக
இருக்கும் போது சில குணங்களை இயல்பாக கொண்டிருக்கும், பழமாக மாற்றமடையும்
போது புதிய குணங்கள் பழைய குணங்களை நீக்கிவிட்டு வந்து சேர்ந்துவிடும். அதேபோல
மனித உடலும் தொடர்ந்து பழைய குணங்களானது நீங்கப்பெற்று புதிய குணங்களை அடைகின்றது.
எனவே இதை மாற்றத்திற்குள்ளாகின்ற பொருளாக (பரிணாமி
திரவியம்) கருதப்படுகிறது. உணர்வமயமாக இருக்கின்ற உடலானது ஜடமாக மாறிவிடலாம்.
அதேசமயம் நாம் குறிப்பிடுகின்ற பிரம்மம் எல்லாவிதமான மாற்றங்களிலிருந்தும்
விடுபட்டதாக இருக்கின்றது. சாட்சியாக இருக்கும் ஆத்மா எப்போதும் அறிவு ஸ்வரூபத்தை
இழந்துவிடாது. ஆழ்ந்த உறக்கத்திலும், விதேக முக்தி நிலையிலும் ஆத்மா அறிவுமயமாகவே இருக்கிறது. இந்த குணம் ஆத்மாவின்
இயல்பான குணமாகும். இந்தக்குணம் எந்தக்காலத்திலும் நீங்குவதில்லை. ஆத்மா தன்னுடைய இயல்பான அறிவு ஸ்வரூபத்தை இழக்காது.
மேலும் அகங்காரம் வந்துப்
போகின்ற நிலையை உடையது. ஆழ்ந்த உறக்கத்தில் அகங்காரமும் இல்லை, மமகாரமும்
இல்லை. நம்முடைய அனுபவமே இதைக்
காட்டிக்கொடுக்கிறது. உணர்வுமயமாக இருக்கின்ற ஆத்மாவினிடத்தில் வந்து போகின்ற நிலை
கிடையாது. அது
நிலையானது என்று கூறப்படுகிறது. எந்தவொன்று வந்து-போகின்ற தன்மையை உடையதாக
இருக்கிறதோ அது அழிவிற்கு உட்பட்டதாகவே இருக்கும். ஆத்மா வந்து-போகின்ற தன்மையயை உடைய
அகங்காரத்தை இயல்பான குணமாக கொண்டிருந்தால் ஆத்மாவும் மாற்றத்திற்கு உள்ளானதாகவே இருக்கும்.
ஆத்மாவுக்கும்
உணர்வுமயத்திற்கும் என்ன உறவு இருக்கிறது. பலர் உணர்வுமயம் ஆத்மாவினுடைய குணமாகும்
என்ற முடிவுடன் இருக்கிறார்கள். அத்தைவ தத்துவம் இது தவறு என்று கூறுகிறது.
உணர்வமயமானது அதனுடைய குணம் என்று சொல்லும்போது அது நிலையற்றதாக, வந்து-போகின்ற
தன்மையுடையதாக ஆகிவிடும். ஆதலால் ஆத்மாவினிடத்தில் உணர்வு என்ற குணம் கிடையாது.
ஆனால் அதுவே உணர்வுமயமாக, அறிவு ஸ்வரூபமாக இருக்கிறது.
எந்தவொரு குணமும்
வந்து-போகின்ற தன்மையையுடையது. எனவே அது சார்ந்திருக்கும் பொருளையும்
மாற்றத்திற்குள்ளாக்குகிறது. உணர்வுமயமும் ஆத்மாவின் குணமாக கருதினால், ஆத்மாவும்
மாற்றத்திற்குள்ளாகிவிடும்.
பூர்வபட்சி
கேள்வி:. அப்படித்தான்
இருக்கட்டுமே, ஆத்மா நிலையற்றதாக
இருக்கட்டும் என்று சொல்கிறான். உடல் இறந்தபின் அகங்காரமும் வீழ்ந்துவிடும் என்பது தவறான கருத்தாகும்.
அகங்காரம் சம்சாரத்திற்கு காரணமாக இருந்தாலும் மனிதன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு
உதவி செய்கிறது. எனவே ஆத்மா நிலையற்றதாக இருந்தாலும் அகங்காரம் ஆத்மாவின் இயல்பான
குணமாக இருக்கிறது.
ஆசாரியாரின் பதில்: அகங்காரம் அனாத்மாவின் குணமாகத்தான் இருக்கமுடியும். அகங்காரம் ஆத்மாவின்
இயல்பான குணமாக வைத்துக்கொண்டால் ஜீவன்முக்தியின் போது ஆத்மாவுடன் அகங்காரமும்
தொடர்ந்து இருக்கும். அகங்காரம் இருந்தால் கர்மம் செய்ய தூண்டிக் கொண்டிருக்கும், சம்சாரமும் தொடர்ந்து
இருக்கும். ஆதலால் அகங்காரம் ஆத்மாவின்
இயல்பான குணமாக இருக்கமுடியாது.
அகங்காரம்
மாற்றத்திற்குள்ளாவது என்பது நமது அனுபவத்திலே நாம் அறிந்து உள்ளோம். சாட்சியாக உள்ள ஆத்மாவோ
மாற்றத்திற்குட்படாதது என்பதும் நமது அனுபவம் மூலமாக
நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆத்மாவின் மாற்றமடையாத தன்மை நேரிடையாக
தெரிகிறது. அதனால் அது எப்பொழுதும் இருந்து கொண்டிருப்பது.
இதிலிருந்து ஆத்மா நிலையற்றதாக உன்னால் எடுத்துக் கொள்ளமுடியாது. நான் என்ற சொல்
பயன்படுத்தும் போது சில நேரங்களில் அகங்காரத்தையும், மற்ற நேரங்களில்
ஆத்மாவையும் குறிப்பிடப்படுகிறது. அதனால் மிகவும் கவனமாக இதை புரிந்து கொள்ள
வேண்டும்.
நான் மகிழ்ச்சியாக
இருக்கிறேன், வருத்தமாக
இருக்கிறேன், எனக்கு இத்தனை
வயதாகிறது, எனக்கு இந்த ஆசை, கோபம் இருக்கிறது
என்று சொல்லும் போது பயன்படுத்துகின்ற நான் இப்பொழுது அனுபவிக்கின்ற நான் என்பதைக்
குறிக்கிறது. இந்த சொல் குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட
உணர்ச்சிகள், பண்புகள் கொண்டதாக
இருக்கிறது. இந்த அகங்கார நான்தான் அனுபவிக்கின்ற நான் என்று
அழைக்கப்படுகிறது.
கடந்த காலத்தில் நடந்த
அனுபவத்தைக் குறிப்பிடும்போது நான் அந்த விழாவில் கலந்து கொண்டு பரபரப்பான
அனுபவத்தையடைந்தேன் என்று சொல்லும்போது கடந்தகாலத்தில் நடந்த விழா நடந்த
இடத்தையும், அப்போது அனுபவித்த
உணர்ச்சியையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நான் என்ற சொல்லை நினைத்துப் பார்க்கின்ற
நான் என்று அழைக்கலாம். இதுவும் அகங்காரத்தைச் சேர்ந்ததுதான்.
இந்த நிகழ்கால நான்
என்பதும், கடந்தகால நான் என்பதும்
அகங்காரத்தையே குறிக்கிறது. ஆனால் இரண்டுக்குமிடையே காலம், இடம், உணர்வுகள் வேறுபட்டு
இருக்கின்றன.
ஓவ்வொரு அங்கீகாரத்திலும்
நாம் கடந்தகாலத்தையும், நிகழ்காலத்தையும் சமன்படுத்திவிடுகிறோம். இப்போது உன்னை அடையாளம் கண்டு
கொண்டேன் என்று ஒருவனைப் பார்த்து சொல்லும்போது சில வருடங்களுக்குமுன் பார்த்து
பழகியவனையே இப்போது பார்க்கும்போது அவனே இவன் என்று அடையாளம் கண்டுகொண்டு
சமன்படுத்தி விடுகிறோம். ஒருவனை முதல்தடவையாக இப்போதுதான் பார்க்கின்றேன் என்ற
வைத்துக் கொண்டால் நான் அவனை அடையாளம் கண்டு கொண்டேன் என்ற சொல்லை
பயன்படுத்தமுடியாது. அடையாளம் கண்டு கொள்ளுதல் என்பது வேதாந்தத்தில் மிகமுக்கியமான
ஒன்றாகும். ஏனென்றால் இதன் மூலம்தான் சாட்சிஸ்வரூபமான ஆத்மாவை நிரூபிக்க முடியும்.
கால, தேச, பண்புகள்
வேறுபட்டிருப்பதால் கடந்தகால அகங்காரத்தையும், நிகழ்கால அகங்காரத்தையும் சமன்படுத்த முடியாது.
வேதாந்த இதற்கு ஒரு வழி சொல்கிறது. எப்பொழுதாவது தன்னெதிரே இருப்பவன் தனது படைய
நண்பன் என்று அடையாளம் கண்டு கொள்ளும்போது அவனிடத்தில் பல வேற்றுமைகள் (உடல்
தோற்றம், வயது, நிறம்)
இருந்தபோதிலும் அவைகளை மனதளவில் நீக்கிவிட்டு அடையாளம் கண்டுகொள்கிறோம்.
அவனிடத்தில் பொதுவான காரணிகளை வைத்துக் கொண்டு அவனே இவன் என்று புரிந்துகொள்கிறோம்.
அதே மாதிரி கடந்தகால
அகங்காரத்தையும், நிகழ்கால
அகங்காரத்தையும் சமன்படுத்தும்போது அவைகளிடத்தில் வேறுபட்டிருக்கும் காலம், தேசம், பண்புகள் ஆகியவைகளை
நீக்கிவிட்டு பொதுவாக உள்ள, மாறுபடாமல் இருக்கின்ற
சாட்சி ஸ்வரூபத்தை மட்டும் பார்க்கவேண்டும். உடல், மனம், உணர்ச்சிகள்
மாற்றத்தை அடைந்தாலும் ஆத்மா மட்டும் என்றும் மாறாமல் இருக்கின்றது. இதை அடையாளம்
கண்டுகொண்ட நான் என்றும் அகங்காரத்தை அனுபவிக்கின்ற நான், நினைத்துப்
பார்க்கின்ற நான் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.
நான் என்ற சொல் பயன்படுத்தும்போது
அது ஆத்மாவையோ, அகங்காரத்தையோ
குறிக்கலாம். அடையாளம் கண்டுகொள்கின்ற நான் என்ற குறிப்பது ஆத்மா என்றும், அனுபவிக்கின்ற நான்
குறிப்பது ஆத்மாவின் பிரதிபிம்பம் என்றும் புரிந்து கொள்ளவேண்டும். இவையிரண்டும்
கலந்து இருக்கிறது. உண்மையான ஆத்மா எங்கும் வியாபித்திருக்கிறது. பிரதிபிம்ப ஆத்மா
உடலால் வரையறுக்கப்பட்டுள்ளது. இரண்டும் உடலை வியாபித்திருந்தாலும் இவைகளை பிரித்து
காட்டமுடியாது. மனதினால் மட்டும்தான் அதை பிரித்தறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.
குருவானவர் புத்திகொண்டு எப்படி பிரிக்க வேண்டும் என்றுதான் உபதேசம் செய்வார், ஆனால் சீடனானவன் தன்
புத்தியை பயன்படுத்தி முழுமுயற்சியுடன் அவற்றை பிரித்தறிந்து புரிந்து கொள்ளவேண்டும்.
இதை எப்படி பிரித்தறிய
முடியும் என்பது விளக்கப்படுகிறது. இவன் என் நண்பன் என்ற சொல்லும்போது இப்போது
அனுபவத்திற்கு வந்துள்ளவனை குறிக்கிறோம். பல வருடங்களுக்கு முன்பு பார்த்த அவனே
இந்த நண்பன் என்று சொல்லும் போது நினைத்துப்பார்க்கின்ற நண்பன். அப்போது
சிறுவனாகவும், உடல் மெலிந்தவனாக
இருந்தவன். ஆனால் இப்போது பார்க்கின்றவன் இளைஞனாகவும், உடல்பருத்தும்
இருக்கின்றான். அடையாளம் கண்டு கொண்டுவிட்;ட நண்பனுக்கு எந்தவிதமான குணங்களும் கிடையாது. அப்படி எதாவது இருப்பதாக
இருந்தால் இவ்வாறு சமன் படுத்தமுடியாது.
அதுபோல அடையாளம் கண்டுகொண்ட
நான் எவ்வித குணமும் அற்றது. இதைத்தான் ஒருவன் நானே பிரம்மனாக இருக்கிறேன் என்று
சொல்ல முடியும். பாக-தியாக-லட்சணை மூலம் அனைத்து
குணங்களையும் நீக்கிவிட்டு நான் குணங்களற்ற பிரம்மன் என்று சொல்லமுடியும். அகங்கார-நான்-விவேகம்
மிகவும் எச்சரிக்கையாக விசாரம் செய்ய வேண்டும். அதனால் இந்த கருத்தை விரிவாக
விளக்கப் போகிறேன் என்று ஆசாரியார் கூறுகிறார்.
ஆதலால் அனுபவிக்கின்ற
நானும், நினைத்துப்பார்க்கின்ற
நானும் அகங்காரம்தான், இவையிரண்டும் அனாத்மாக்களாகும். அனுபவிக்கின்ற நான் இப்போது அனுபவிக்கின்ற
சம்சாரத்தையும், நினைத்துப்பார்க்கின்ற
நான் கடந்தகால சம்சாரத்தையும் குறிக்கின்றது. இவைகள் அனாத்மாக்களாகும். இவைகள்
அடையாளம் கண்டுகொண்டுள்ள நான் என்ற சொல்லைக் குறிக்கவில்லை.
சாட்சியான ஆத்மா கடந்தகால
சம்சாரம், நிகழ்கார சம்சாரம்
எதுவுமற்றது. சம்சாரம் வந்து-போகின்ற அகங்காரத்தை சார்ந்தது. ஆனால் நான்
ஆத்மா(அடையாளம் கண்டு கொண்டுள்ள நான்) கடந்தகால அகங்காரத்தின் பின்னாலும், நிகழ்கார
அகங்காரத்திற்கும் பின்னாலும் இருக்கிறது. எவ்வாறு வௌ;ளைத்திரையில
விதவிதமான காட்சிகள்; ஒடிக்கொண்டிருந்தாலும் திரையானது பாதிக்கப்படாமல் இருக்கிறதோ அதுபோல ஆத்மாவும்
எதனாலும் பாதிக்கப்படாமல் இருக்கிறது.
இந்த அறிவை அடைந்துவிட்டால்
எனக்கு முக்தி கிடைத்துவிடுமா? என்ற கேட்கலாம். ஆனால் நான் நித்ய முக்தன் என்று புரிந்து கொண்டால் அந்த
நிலையே மோட்சமாகும். அகங்காரம் மட்டும்தான் ஒருவனை பந்தப்படுத்திக்
கொண்டிருக்கும். சாட்சி சைதன்யம் எந்த சூழ்நிலையிலும் பந்தப்படுத்தாது. அகங்காரம்
எப்பொழுதுமே சம்சாரியாக வைத்துக் கொண்டிருக்கும். சாட்சி சைதன்யம்
சம்சாரத்திலிருந்த விடுவித்துவிடும். எனவே சாதகன் நானே சாட்சி சைதன்யமான ஆத்மா
என்று நன்றாக புரிந்து கொண்டால் அந்த நிலையை தவிர வேறெதுவும் முக்தியை தராது.
எப்படி அகங்காரத்தை ஒரு
பொருளாக வகைப்படுத்த முடியும்? ஆசாரியாரின் பதில்: பானையை ஒரு பொருளாக பிரமாணத்தைக் கொண்டு பார்க்கிறோமோ
அதேபோன்று அகங்காரத்தையும் எதாவது ஒரு பிரமாணத்தைக் கொண்டு ஒரு பொருளாக பார்க்க
முடியும்.
ஆசாரியார்
ஆத்மா-அகங்காரத்தின் வேறுபாட்டை புரிய வைப்பதற்கு தனிக்கவனம் கொடுத்து
விளக்குகிறார். எங்கேயெல்லாம் ஆத்மா இருக்கின்றதோ அங்கேயெல்லாம் அகங்காரமும்
இருக்கின்றது. ஆத்மா அறிவு ஸ்வரூபமாக இருக்கின்றது. அகங்காரம் அதன் பிரதிபிம்பமாக
இருக்கிறது. எனவே சித்தையும், சிதாபாஸத்தையும் மிகவும் கவனமாக பிரித்து அறிந்து கொள்ள வேண்டும்.
இவையிரண்டையும் பௌதீக ரிதியாக
பிரிக்க முடியாது. எல்லா அவஸ்தைகளிலும் இவையிரண்டும் இருந்து கொண்டிருக்கும். ஆகவே
இந்த பிரித்தல் அறிவைக் கொண்டுதான் செய்ய வேண்டும். இதை ஆசாரியார் பலவிதமான விவாதங்களின் மூலம் புரியவைக்கிறார்.
இந்தப்பகுதியில் அகங்காரம் சூட்சுமசரீரத்தின்
குணமாகும் ஆத்மாவைச் சார்ந்ததல்ல என்பதை நிலை நாட்டுகிறார்.
ஏற்கனவே இரண்டு விவாதங்கள்
மூலம் நிலைநாட்டியிருக்கிறார். முதலாவது (த்ருஷ்யத்வாத்3) இது பார்க்கக்கூடியது, பொருளாக
அனுபவிக்கக்கூடியது என்பதாகும். பொதுவான விதியான அனுபவிக்கப்பட்ட குணமானது ஏற்கனவே
அனுபவிக்கப்பட்ட பொருளைச் சேர்ந்ததாக இருக்கும், அனுபவிப்பவனை சார்ந்ததாக இருக்காது.
இரண்டாவது விவாதமானது (அனிர்மோட்ச
ப்ரஸயங்கஹ) அகங்காரம் ஆத்மாவைச் சார்ந்ததாக இருந்தால் மோட்சத்தை அடைவது என்பது
முடியாததாக இருக்கும். ஏனென்றால் இந்த நிலையில் ஆத்மா இருக்கின்ற வரையில்
அகங்காரமும் இருந்து கொண்டு இருக்கும், அகங்காரம் இருக்கும் வரையில் செயல்படும் தன்மையும் தொடர்ந்து கொண்டிருக்கும், செயல் செய்து
கொண்டிருக்கும் வரையில் சம்சாரமும் தொடர்ந்து கொண்டிருக்கும். எனவே அகங்காரம்
ஆத்மாவைச் சார்ந்ததாக இருந்தால் மோட்சத்தை அடையவே முடியாது.
இப்போது மூன்றாவது
விவாதத்தை கூறுகிறார். அகங்காரம் பிரமாணம் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம் ஆத்மாவானது எந்த பிரமாணத்தாலும் நிரூபிக்கப்படவில்லை. அகங்காரம்
பிரமாணத்தின் மூலம் அறியப்படுவது, ஆத்மா தானே பிரகாசித்துக் கொண்டிருக்கிறது, எந்தப் பிரமாணமும் அதன் இருப்பை அறிவதற்கு
தேவையில்லை. எனவே இவையிரண்டும் முற்றிலுமாக வேறுபட்டு இருப்பதால் அகங்காரம் ஆத்மாவைச்
சார்ந்ததல்ல என்பது உறுதியாகிறது.
அகங்காரத்தை அறிய உதவும்
பிரமாணங்களில் மூன்று கீழே கொடுக்கப்பட்டு உள்ளது:
மேற்கூறிய பிரமாணங்கள்
மூலம் அகங்காரமானது அறியப்படுகிறது. ஆனால் ஆத்மாவை எந்தப் பிரமாணம் கொண்டும் அறிய
முடியாது.
ஏனென்றால் அது தன்னைத் தானே பிரகாசித்துக் கொண்டு இருக்கிறது. ஆத்மா சுயமாக தெரிந்து கொண்டிருக்கிறது.
ஆத்மாவை எந்தப்
பிரமாணத்தைக் கொண்டும் அறிய முடியாதென்றால் அதை எப்படி அறிந்து கொள்வது என்று
கேட்க தோன்றும்., அது தன்னைத் தானே
காட்டிக் கொண்டிருக்கிறது. தன்னைத்தானே நிரூபித்துக் கொண்டிருக்கிறது என்று
சொல்லப்படுகிறது. எனவே அகங்காரமும், ஆத்மாவும் முற்றிலுமாக வேறுபட்டதாகும். ஆதலால் அகங்காரம் ஆத்மாவைச்
சார்ந்ததல்ல.
நான்காவது விவாதமானது, அகங்காரமும், ஆத்மாவும்
முற்றிலுமாக வேறுபட்ட இயல்புகளை உடையது. இந்த ஒரு காரணத்தாலேயே இவையிரண்டும்
வெவ்வேறு என்பது நிரூபணமாகிறது. எனவே இவையிரண்டையும் கலந்து புரிந்து கொள்ளக்
கூடாது.
ஆத்மா எப்பொழுதம் அறிபவனாக
இருக்கிறது. அது ஒருபோதும் அறியப்படும் பொருளாக இல்லை. அகங்காரம் எப்போதும் அறியப்படும் பொருளாகவே
இருக்கிறது, அறிபவனாக ஒருபோதும் இருக்காது. இவையிரண்டும் நமக்கு வெகு அருகிலேதான்
இருக்கிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால் இதுவே நம்மை குழப்பி
விடக்கூடாது. மேலும் மோட்சம் என்பது ஒருவன் எப்படி தன்னைத்தானே பார்த்துக்
கொள்கிறான் என்பதிலிருந்து தீர்மானிக்கப்படுகிறது. வாழ்க்கையில் தன்னுடைய உடல்நிலை, குடும்பம், பணி போன்றவற்றில்
சந்திக்கின்ற நெருக்கடியான நிலையில் ஒருவன் எப்படி நடந்து கொள்கிறான், எப்படி அதை
அணுகுகிறான் என்பதிலிருந்து அவன் தன்னை ஆத்மாவாக கருதிக் கொண்டிருக்கின்றனா அல்லது
அகங்காரத்தின் வசத்தில் இருக்கின்றானா என்பதை உறுதி செய்யலாம். நெருக்கடியான
நேரத்தில் ஒருவன் தன்னை ஆத்மாவென்று இயல்பாக நடந்து கொள்ளும் போதும், எந்தவித
உணர்ச்சிக்கும் ஆளாகாமல் நடந்து கொண்டிருந்தால் அந்த சாதகன் நிச்சயம் வேதாந்த
பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறான் என்று உறுதியாக சொல்லலாம். இந்த ஆத்மா-அகங்கார-விவேக
விசாரம் மிகவும் முக்கியமானது. என்று ஆசாரியார் வலியுறுத்துகிறார்.
ஆத்மாவானது என்றுமுள்ளது
என்று கூறும்போது, இந்த உலகத்தில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்பு எப்படி அது இல்லாமல் போனது என்ற
சந்தேகம் விக்ஞானிகளிடத்தில் எழலாம். ஆத்மா உயிர்கள் தோன்றுவதற்கு முன்பே
இருந்துக் கொண்டுதான் இருக்கிறது என்று வேதாந்தம் சொல்கிறது. ஜீவராசிகள் தோன்றிக்
கொண்டிருக்கும் போது அவைகளுடன் சேர்ந்து வரவில்லை. ஒரு உயிர் தோன்றும் போது ஆத்மாவானது
அதனுடன் வெளிப்படுகிறது. ஆத்மா வெளிப்படும் போது உயிர்கள் தோன்றுகின்றன. எனவே
உயிர்கள் தோன்றுவதற்கு முன்பே ஆத்மா இருந்துகொண்டுதான் இருந்தது. பிராரப்த
கர்மபலன் வெளிப்படும்போது உயிர்கள் தோன்றுகிறது.
அதனால் மிகவும் முக்கியமாக
கவனிக்க வேண்டியது இதுவாகும். நிதித்யாஸனத்தின் ஒருபகுதியாக இருக்க வேண்டியது நான், அனுபவிப்பவன்
உண்மையானவன் என்பதும், அனுபவிக்கப்படுகின்ற இந்த இருமை பிரபஞ்சம் மித்யா என்பதுமாகும். ஜகத், மனம், உடல் இவை மூன்றும்
அடங்கியுள்ள இருமை பிரபஞ்சம் மித்யாவாகும். மித்யா என்ற சொல் இரண்டு முக்கியமான
செய்திகளை குறிக்கிறது. முதலாவது புரிந்து கொள்ளமுடியாதது, தர்க்கரீதியாகவும் விளக்கமுடியாதது.
இரண்டாவது நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது. மித்யா உலகத்தில் நடப்பவைகளால்
உண்மையான நான் பாதிக்கப்படுவதில்லை. இதை மனதில் நன்கு புரிந்து கொண்டால் வாழ்கின்ற
வாழ்க்கை சுகமாக இருக்கும். இல்லையென்றால் போராட்டமாகத்தான் இருக்கும். ஆத்மாவைப்
பற்றிய அறியாமையுடன் இருக்கும் வரையில் இந்த இருமை பிரபஞ்சம் அனுபவத்தில் இருந்து
கொண்டுதான் இருக்கும். ஆத்மாவை நன்கு உணர்ந்துவிட்டால் இந்த இருமை பிரபஞ்சமும்
ஆத்மாவுக்குள் சுருங்கிவிடும்.
தர்க்கரீதியாக இதை விளக்குவது மிகவும்
கடினம். எனவே வேதாந்த சாஸ்திரம் மாயாவென்றும், அனீர்வசனீயம் என்றும்
இந்த ஜகத்தை விவரிக்கிறது.
மற்ற தத்துவவாதிகள் இதை எதிர்க்கிறார்கள். வேதாந்திகளால் இதை விளக்க முடியாததால்
இவ்வாறு அழைக்கிறார்கள் என்று குறை கூறுகிறார்கள். ஆனால் மாயா என்பது மிகமுக்கியான
சொல்லாகும். இதிலிருந்து வேதாந்தமும் இதை விளக்கமுடியாது என்று ஒத்துக்கொள்கிறது.
அகங்காரம் இல்லாது போகட்டும், ஆனால் அது ஆத்மாவின் உள்ளார்ந்த இயல்பாக இருக்கட்டுமே. ஆத்மாவின் உள்ளார்ந்த இயல்பாக இருக்கின்ற அகங்காரம் மோட்சத்தை அடைந்தவுடன் சென்றுவிடும் என்று ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது? அதாவது சம்சாரத்தை அனுபவிக்கும் போது அகங்காரம் இருக்கும், மோட்ச காலத்தில் சென்றுவிடட்டும்.
மாம்பழம் காயாக இருக்கும்போது கடினமாகவும், பச்சை நிறமாகவும், இனிப்பற்றதாகவும், குறிப்பிட்ட வாசனையை உடையாதாகவும் இருக்கின்றது. இந்த சப்தம், தொடுஉணர்ச்சி, உருவம், சுவை, நிறம் எல்லா குணங்களும் அதனிடத்தில் இயல்பாகவே இருக்கின்றது. ஆனால் இதுவே பழமாக கனிந்துவிட்டால் மேற்சொன்ன எல்லா குணங்களும் மாறிவிடுகின்றன. காயாக இருக்கும்போது இருந்த இயல்பான குணங்கள் அனைத்தும் நீங்கி கனியாக மாறும்போது வேறு புதிய இயல்பான குணங்கள் வந்து சேர்ந்துவிடுகின்றது. இதிலிருந்து சுபாவமாக இருக்கின்ற குணங்களும் நீங்கிவிடும் என்ற ஒரு பொதுவான விதியை அடையலாம். ஆத்மா சம்சாரியாக இருக்கும் போது அகங்கார தர்மத்தை தனது இயல்பான குணமாக கொண்டிருக்கும். இந்த நிலையை மாங்காயைப் போன்று எடுத்துக் கொள்ளலாம். ஆத்மா மாம்பழம் போன்று மோட்ச காலத்தில் சம்சார தர்மங்களான அகங்காரம், மமகாரம் அனைத்தும் நீங்கியவையாக இருக்கட்டும்.
ஒரு பொருளின் இயல்பான தர்மங்கள் நீங்கி வேறு புதிய தர்மங்கள் இயல்பானதாக ஆகிவிட்டால் அந்தப் பொருளும் வேறொரு புதிய பொருளாக மாறிவிடும். இதுவொரு பொது விதியாகும். அதுபோல அகங்காரம் ஆத்மாவின் இயல்பான குணமாக கொஞ்ச காலம் இருந்துவிட்டு அதற்கு பதிலாக வேறொரு புதிய இயல்பான குணம் அதில் சேர்ந்து விட்டால் ஆத்மாவும் மாற்றத்தை அடைந்துவிடும். ஆனால் வேதசாஸ்திரம் ஆத்மா மாற்றமடையாதது, என்றென்றும் இருப்பது என்று உபதேசிக்கிறது. ஆத்மாவானது வெளித்தோற்றத்திற்கு வராதது, நினைத்துப் பார்க்கக்கூட முடியாதது, மாற்றமுடியாதது, என்றும் இருப்பது, எங்கும் வியாபித்து இருப்பது, அசைவற்றது, பிறப்பற்றது. எனவே ஆத்மாவினுடைய உணர்வுமயமானது (சைதன்யமானது) மாறக்கூடிய குணத்தை கொண்டதல்ல. உண்மையில் ஆத்மாவானது உணர்வுமயமானது, அறிவுமயமானது.
- ப்ரத்யக்ஷம்: அகங்காரம் நான் என்ற எண்ணம் மூலம்
வெளிப்படுகிறது. விழிப்பு நிலையிலும், கனவு நிலையிலும் நான் என்று எண்ணம் இருக்கிறது. ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில் இந்த
நான் என்ற எண்ணம் இல்லை. எனவே அகங்காரமும் இல்லை. எனவே நான் என்கின்ற எண்ணம்தான்
முதல் பிரமாணம்
- அனுமானம்: அகங்காரம் பிரமாதாவாக இருக்கின்றது. எல்லா
பிரமாணங்களையும் இயக்குகின்ற, அறிகின்ற தத்துவமாக இருக்கிறது. பிரத்யக்ஷம், அனுமானம், சாஸ்திரம், அர்த்தாபத்தி போன்ற
பிரமாணங்களையும்
இயக்குகின்றதாக அகங்காரம் இருக்கிறது. எல்லா பிரமாணங்களும் அறிய உதவும் கருவிகளாக
பிரமாதாவான அகங்காரத்தால் இயக்கப்படுகிறது. எனவே பிரமாதாவை பிரமாணங்களின்
செயல்பாட்டை வைத்து ஊகித்துக் கொள்ளலாம். ஓடிக்கொண்டிருக்கும் காரைப் பார்த்தவுடன்
அதை ஓட்டுகின்ற ஓட்டுனரை நாம் ஊகித்துக் கொள்வதைப் போல இதை புரிந்து கொள்ள
வேண்டும். ஆகவே அனுமான பிரமாணம் அகங்காரத்தை காட்டிக் கொடுக்கின்ற இரண்டாவது
பிரமாணம்.
- ஸ்ருதி: இது அகங்காரத்தைக் காட்டிக்கொடுக்கின்ற மூன்றாவது பிரமாணமாகும். உபநிஷத் சொல்கிறது, படைக்கும் கடவுளான பிரம்மா நான் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியிருக்கிறார். அதற்குப் பிறகு அவரால் படைக்கப்பட்ட மனிதர்கள் அதே சொல்லை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து அகங்காரத்தை நான் சொல் குறிப்பிடுவதை புரிந்து கொள்ள வேண்டும்.
எல்லோருக்கும் நன்கு விளங்குகின்ற இருமை பிரபஞ்சத்தை பொய்யான தோற்றம் என்று கூறப்படுகிறது. ஜகத் மித்யா என்ற கருத்து புரிந்து கொள்வதற்கு, ஏற்றுக் கொள்வதற்கு மிகவும் கடினமானது. அதேசமயம் பலரால் பிரம்மம் சத்யமானது என்ற கருத்து மிக எளிதில் ஒத்துக் கொள்ளப்படுகிறது. அறிவுபூர்வமாக சிந்திக்கும் போது அனுபவத்திற்குள்ள ஜகத் எப்படி அது மித்யாவாகும் என்ற சந்தேகம் நிச்சயமாக வரும். உணர்ச்சிவசப்படும் போது அனுபவிக்கின்ற இன்பமும், துன்பமும் உண்மையாக இருக்கின்ற போது அவைகளும் மித்யாவென்று சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. பௌத்தமதத்தின் ஒருபிரிவு மித்யா என்கின்ற கருத்தை ஒத்துக் கொள்கிறார்கள்.
த்வைத பிரபஞ்சம் மித்யா என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இதை பார்ப்பவனுக்கும் வேறாகவும், பார்ப்பவனைப் போன்றுமுள்ளது, விளக்கபட முடியாததாக இருக்கிறது. இதை விரிவாக சிந்திக்கும் போது நமக்கு பல சிக்கல்கள் சந்திக்க வேண்டியதாக இருக்கிறது. சங்கராச்சாரியார் விவேகசூடாமணியில் கூறியிருப்பது: இந்த மாயா இருக்கிறது என்றோ, இல்லையென்றோ அல்லது இரண்டுமற்றது என்றோ சொற்களால் விவரிக்க முடியாத தத்துவமாகும் என்பதாகும்.
இந்த ஜகத்
பார்ப்பவனிடமிருந்து(ஆத்மாவிடமிருந்து) வேறுபட்டது என்று சொல்ல முடியமா? என்ற கேள்விக்கு
வேதாந்தத்தின் பதில்: நம்மால் ஜகத்தானது ஆத்மாவிலிருந்து வேறுபட்டு சுதந்திரமாக
இருக்கிறது என்று நிரூபிக்கமுடியாது.
ஏனென்றால் ஒன்றின் இருப்பானது யாரோ ஒருவனால், ஏதோவொரு இடத்தில், ஏதோவொரு சமயத்தில் அறியப்படும்போது மட்டும்தான்
நிரூபிக்கப்படுகிறது. வானத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னிக்
கொண்டிருக்கிறது. அவைகளை நம்மால் பார்க்கமுடியாவிட்டாலும் வேறு யாரோவொருவரால்
தொலைநோக்கியின் மூலம் அறியப்பட்டிருப்பதால் அதன் இருப்பை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
இதிலிருந்து நாம் அறிந்துக் கொள்ளவேண்டியது, எதுவும் இருக்கமுடியும், ஆனால் அதைப்பற்றி யாரோவொருவனால் அறியப்பட்டிருக்க வேண்டும்.
இப்படியிருக்கும்போது அந்தப் பொருள் பார்ப்பவனிடமிருந்து தனித்து இருக்கமுடியாது.
அதனால் எதுவும் பார்ப்பவனிடமிருந்து தனித்து இருக்கலாம் என்று சொல்லமுடியாது.
இதிலிருந்து முடிவுக்கு வரவேண்டியது, இந்த உலகம் பார்ப்பவனிடமிருந்து தனித்து இருக்கமுடியாது, பார்ப்பவனைப்
போன்றும் இருக்கமுடியாது.
கயிற்றில் தெரியும் பாம்பு அதிலிருந்து வேறானது ஆனால் கயிற்றிலிருந்து தனியாக தோன்ற முடியாது. கனவு அதைக் காண்பவனிடமிருந்து வேறாகும். ஆனால் காண்பவனைச் சார்ந்துதான் இருக்கும். அவனில்லாமல் கனவு தோன்ற முடியாது. அதேபோல கானல்நீர் வறண்டநிலத்திற்கும் வேறானது ஆனால் அந்தநிலம் இல்லாமல் அது தோன்றமுடியாது.. அதேபோல அனாத்மா பிரபஞ்சம் என்னிடமிருந்து, ஆத்மாவிடமிருந்து வேறாக இருந்தாலும் அதுவாக சுயமாக இருக்க முடியாது, என்னிடமிருந்து (ஆத்மாவிடமிருந்து) தனித்தும் இருக்க முடியாது. அத்வைத சாதகர்கள் அனாத்மா ஆத்மாவிடமிருந்து வேறாக தோன்றினாலும் அதனால் ஆத்மாவை விட்டு தனித்து இருக்கமுடியாது, சுயமாகவும் இருக்க முடியாது. எந்தவொன்று இந்த நிலையில் இருக்கின்றதோ அதை மித்யா என்று அழைக்கப்படுகிறது.. எனவே இந்த உலகம் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அனாத்மாவானது ஆத்மாவை
ஒத்ததாக இல்லையென்று சொல்கிறோம். ஏனென்றால்; 1. அனாத்மா ஜடமானது, ஆத்மா உணர்வுமயமானது. 2.அனாத்மா
மாற்றத்திற்குள்ளாவது, ஆத்மாவானது மாற்றமடையாதது. 3.அனாத்மா அங்கங்களை உடையது, ஆத்மா எந்த அங்கங்களுமற்றது. இவ்வாறு இயல்பாகவே அவைகளின் ஸ்வரூபங்கள்
வேறுபட்டு இருப்பதால் அவைகள் ஒரேமாதிரியானதாக இருக்கமுடியாது. உண்மையிலே இந்த ஜகத்
ஆத்மாவும், நாம-ரூபங்களும்
சேர்ந்தவையாகும். ஆதலால் நான் மனமும் அல்ல என்று புரிந்து கொள்ளலாம். இந்த
ஜகத்திற்கு சத்யத்வத்தை கொடுக்கும் போதுதான் அதனால் பாதிக்கப்படுவோம். அதையே
மித்யா என்று நன்கு புரிந்து கொண்டால் அதனால் எந்த பாதிப்பும் அடையமாட்டோம்.
எப்படி மனமானது பிரச்சனைகளை
உருவாக்குகின்றது?
ஆத்மா தெளிவாக எழுவாய் (சப்ஜெக்ட்)
என்று தெரிகிறது. இந்த உலகமும் தெளிவாக பயனிலை என்று தெரிகிறது. ஆத்மா ஒருபோதும் பயனிலையாக இருப்பதில்லை; உலகமும் ஒருபோதும்
எழுவாயாக இருப்பதில்லை. மனமானது இவையிரண்டையும் ஒன்றுபோல பயன்படுத்துவதால்
பிரச்சனைகள் எழுகிறது. இதை இரண்டுவிதமாக விளக்கப்படுகிறது.
முதலாவது மனதில் ஆத்மாவும், ஜகத்தும் பிரதிபலிக்கின்றன. ஆத்மா மனதில் பிரதிபலிப்பதை சிதாபாஸன் என்று அழைக்கப்படுகிறது. வெளியுலகம் மனதில் பிரதிபலிப்பதைளே எண்ணங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு பொருளும் மனதில் அந்தப்பொருளுக்கு பொருத்தமான எண்ணத்தை தோற்றுவிக்கிறது. இதற்கு விஷய ஆகார விருத்தி என்று காட்டப்படுகிறது.
ஸ்ரீசங்கர பகவத்பாதா தன்னுடைய உபதேச சாஹஸ்ரி என்று நூலில் புத்தி ஆரூட பிரகரணத்தில் இதை அற்புதமாக விளக்கியிருக்கிறார். நாம் ஒருவரை பார்க்கும் போது அவருடைய உருவம் எண்ணங்களாக மனதில் தோற்றுவிக்கப்படுகிறது. ஆகார விருத்தியானது மனிதன், ஆண், பெண், நாற்காலி போன்றவைகளாக நம் மனதில் நுழைகிறது. இந்த விருத்தி பார்க்கப்படும் பொருளின் பிரதிபிம்பமாக மனதில் தோன்றுகிறது. இவ்வாறு மனமானது ஆத்மா, அனாத்மா இவைகளின் பிரதிபிம்பங்களை சுமந்து கொண்டிருக்கிறது.
ஆத்ம பிரதிபிம்பம்
(சிதாபாஸன்), அனாத்மா பிரதிபிம்பம்
(எண்ணங்கள்-விருத்தி) இவைகள் மனதில் மிகவும் நெருக்கமாக இணைந்திருக்கிறது. இந்தக்
காரணத்தால் இவையிரண்டிற்கும் சம்பந்தம் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம்.
உண்மையில் ஆத்மா சத்யம், அனாத்மா மித்யா; ஆத்மா எதனோடும் ஒட்டாத அறிவு ஸ்வரூபம், அனாத்மா ஜடமானது. எனவே இவையிரண்டிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது ஆனால்
இவையிரண்டும் ஒரே மனதில் இருப்பதால் இவைகளுக்குள் சம்பந்தம் இருப்பது போல தெரிகிறது. இவைகளிரண்டிற்குமிடையே
அனுபவிப்பவன்-அனுபவிக்கப்படும் பொருள் என்ற சம்பந்தம் பொய்யாக கற்பிக்கப்படுகிறது.
உதாரணமாக புகழ்மிக்க ஒருவரின் புகைப்படத்துடன்
தன்னுடைய புகைப்படத்தையும் போட்டோஷாப் மென்பொருள் மூலம் இணைத்து அவருடன் ஒன்று
சேர்ந்து எடுத்தது போல உள்ள புகைப்படத்தைப்; பார்க்கும்போது
உண்மையில் இவர் அவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்று
நினைக்கத் தோன்றும். அந்தப் பிரபலமானவர்தான் ஆத்மா, புகைப்படத்தை உருவாக்கியவர் இந்த ஜகத், போட்டோஷாப்
மென்பொருள்தான் மனம். ஆத்மாவுக்கும் (பிரபலமானவருக்கும்), ஜகத்துக்கும் (போட்டோ
உருவாக்கியவருக்கும்) எந்தவிதமான சம்பந்தம் இல்லாதபோதும் மனம் என்கின்ற போட்டோஷாப்பில் இருவருக்கும்
சம்பந்தம் இருப்பதுபோல காணப்படுவதைப் பார்த்து நான் அனுபவிப்பவன், உலகம்
அனுபவிக்கப்படும் பொருள் என்ற பொய்யான முடிவுக்கு வருகின்றோம். இதன் விளைவாக பல பிரச்சனைகளை அனுபவிக்கின்றோம்.
பிரச்சனை மனதில்தான் இருக்கிறது என்று ஆசாரியார் கூறுகிறார். ஏனென்றால் மனமானது இவையிரண்டையும் பயன்படுத்திக்
கொண்டிருக்கும் சக்தியுடையதாக இருக்கிறது. பகவான் போட்டோகிராபராக இருந்து கொண்டு
இந்த சாத்தியத்தை உருவாக்கி இருக்கிறார். மனம் ஆத்மாவையும், அனாத்மாவையும் ஒன்றாக
வைத்துக் கொள்ள சக்தியுடன் இருந்து கொண்டிருப்பதால் குழப்பத்தை ஏற்படுத்தி
உண்மையான ஆத்மாவைக் குறித்த மாயையை தோற்றுவிக்கிறது. உண்மையில் ஆத்மாவிற்கும், உலகுக்கும்
எந்தவிதமான சம்பந்தம் இல்லாதபோதும் மனம் எனக்கும் (ஆத்மாவிற்கும்), உலகத்திற்கும் சம்பந்தம்
இருப்பதாக நினைக்க வைக்கின்றது. இதன் விளைவாக பல உறவுகளால் தாக்கப்பட்டு மன
உளைச்சலை அடைகின்றோம்.
இரண்டாவது வகையான பிரச்சனை.
உண்மையில் நான் பார்ப்பவன், மனம் அனுபவிக்கப்படும் பொருளாக இருக்கிறது. ஆத்மா எழுவாயாகவும், மனம் பயனிலையாகவும்
இருக்கிறது. ஆனால் ஆத்மா மனதை கவனிக்கும்போது தன்னையும் மனதில்
பிரதிபலிக்கின்றதால் ஜடமான மனமானது உணர்வுமயமானதாக மாறிவிடுகிறது. இதனால் மனமானது
இந்த உலகத்தை கவனிக்கும் சக்தியை பெறுகிறது. இந்த நிலையில் மனம் எழுவாயாகிறது, உலகம் பயனிலையாகிறது
(அனுபவிக்கப்படும் பொருளாகிறது).
இவ்வாறு மனம் ஆத்மாவிற்கும்
உலகத்திறிகும் இடையே இருப்பதால் அது எழுவாயாகவும், பயனிலையாகவும் இருக்கும் நிலை ஏற்படுகிறது. ஆத்ம
நிலையில் இருந்து பார்க்கும்போது அது பயனிலையாகவும், உலகத்தின் பார்வையில் அதுவே எழுவாயாகவும்
இருக்கிறது.
ஒரு உதாரணத்தின் மூலமாக இதை
புரிந்து கொள்ளலாம். பௌர்ணமியன்று நிலவின் வெளிச்சம் மிகவும் அதிகமாக இருக்கும்.
இந்த வெளிச்சம் நிலவின் உண்மையான வெளிச்சமல்ல. அது ஒளிரும் சக்தியை சூரியனிடமிருந்து
பெறுகிறது. சூரிய ஒளியானது நிலவின் மீதுபடுகின்றது அதுவே பூமிக்கு திருப்பி
அனுப்பப்படுகிறது. நம்முடைய கேள்வி நிலவு எழுவாயா இருக்கிறதா அல்லது பயனிலையாக
இருக்கின்றதா என்பதாகும். இதற்கான பதில் சொல்வதற்கு முன் எந்த கோணத்திலிருந்து
இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். சூரியன் என்ற
கோணத்திலிருந்த பார்த்தால் நிலவு ஒளியூட்டப்படுகின்ற
பயனிலையாகும். பூமியின் கோணத்திலிருந்து
பார்க்கும் போது அதுவே எழுவாயாக இருக்கிறது. இதேப்போன்ற நிலைதான் மனதிற்கும்
இருக்கின்றது. மனமே பார்ப்பவனாகவும், பார்க்கப்படும் பொருளாகவும் இருக்கிறது. மனம் ஆத்மாவின் பிரதிபலிப்பினால்
பார்ப்பவனாக இருக்கிறது. ஆனால் ஆத்மா இயல்பாக பார்ப்பவனாக இருந்து
கொண்டிருக்கிறது. இவ்வாறு உடலுக்குள் இரண்டு பார்வையாளர்கள் இருக்கிறார்கள்.
ஆசாரியார் குறிப்பிட்டு
காட்டுவது, எல்லாவகையான பிரச்சனைகளுக்கும்
மனமே காரணமாக இருக்கின்றது. ஏனென்றால் இது எப்போதும்
பார்வையாளனாகவே இருக்கின்ற ஆத்மாவிற்கும், எப்போதும் பார்க்கப்படும் பொருளாக இருக்கின்ற வெளி உலகத்திற்கும் இடையே
இருக்கின்றது.
ஆத்மாவைப்பற்றியும், உலகத்தைப்பற்றியும் நன்றாகவும்,தெளிவாகவும் விளக்கப்பட்டது. ஆத்மா எப்போதும் பார்ப்பவனாகவே இருக்கின்றது. வெளியேயுள்ள ஜடமான உலகம் பார்க்கப்படுகின்ற பொருளாகவே இருக்கின்றது. ஆனால் மனமானது இவையிரண்டிற்கும் இடையே இருப்பதால் பார்ப்பவனாகவும், பார்க்கப்படும் பொருளாகவும் இருக்கிறது.
இந்த இருவகைப்பட்ட மனமானது அகங்காரம் தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது. இந்த அகங்காரமானது இரண்டாம் நிலை ஆத்மாவாக கருதப்படுகிறது. இதுவே சம்சாரத்திற்கு காரணமாகிறது. ஆதலால் இந்த அகங்காரத்தை நன்கு புரிந்து கொண்டு அதை முறையாக அகற்ற வேண்டும். இல்லையென்றால் சம்சாரத்தை நீக்கிக் கொள்ளமுடியாது.
மனம் எவ்வாறு இந்த இரட்டை
நிலையை அனுபவிக்கிறது என்ற கேள்வி எழுகிறது.; உண்மையில உலத்தில் உள்ள மற்ற பெர்ருட்களைப் போல மனமும் பார்க்கப்படுகின்ற பொருளாகத்தான், அனுபவிக்கின்ற
பொருளாகத்தான் இருக்கின்றது. ஆத்மாவிற்கு மனம் ஒரு பார்க்கப்படும், அனுபவிக்கப்படும்
பொருளாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் மனம் இன்னொரு நிலையையும் அனுபவிக்கிறது.
மனம் ஆத்மாவின் அருகில்
இருப்பதால் அது அனுபவத்திற்கு வருகிறது. மேலும் மனதிற்கு ஆத்மாவை பிரதிபலிக்கின்ற
சக்தியிருப்பதால் அது எப்போதும் ஆத்ம பிரதிபிம்பத்துடன் கூடியதாக இருக்கிறது.
இதற்கு சிதாபாஸம் என்று பெயர். இந்த சிதாபாஸத்தின் உதவியால்தான் மனம் உணர்வுமயமாக இயங்குகிறது.
அதனால் அது பார்ப்பவனாகவும் இருக்கிறது. உதாரணமாக நிலவிற்கு தானாக ஒளிரும்
தன்மையில்லை இருந்தாலும் தன்னிடத்தில் பிரதிபலிக்கின்ற சூரிய ஒளியைக் கொண்டு
ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. அதைப்போல மனம் தன்னிடத்தில் பிரதிபலிக்கின்ற ஆத்மாவின் உணர்வுமயத்தினால் பார்ப்பவனைப்
போலவும் செயல்படுகிறது. மனதின் இந்த நிலையையே அகங்காரம் என்று அழைக்கப்படுகிறது.
மனம் ஐம்புலன்களின் வழியாக உலகத்தை அனுபவிக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு மனித உடலுக்குள்ளும்
இரண்டு பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். ஒன்று முதன்மையான பார்ப்பவன், இவன் எங்கும்
வியாபித்திருக்கும் ஆத்மாவாகும். இரண்டாவது பார்ப்பவன் உடலுக்குள்ளே இருப்பவன், இவனே உள்ளேயுள்ள போலி
அகங்காரம். இந்த அகங்காரம் ஆத்மா கோணத்தில் பார்க்கப்படும் பொருளாகவும், உலகத்தின் கோணத்தில்
பார்ப்பவனாகவும் இருக்கிறது.
அகங்காரத்தை தெரிந்தே பயன்படுத்திக் கொண்டிருந்தால் அது வரமாகும். இது தற்காலிகமான வியவகார கருவியாக பயன்படுத்தப்படுகின்றது. இது போலியான பார்ப்பவன் என்று உறுதியான அறிவுடன் பயன்படுத்துபவனே ஜீவன் முக்தனாவான். எல்லா செயல்களை செய்வதற்கும், வேதாந்தம் படிப்பதற்கும் கூட அகங்காரம் தேவைப்படுகிறது. அகங்காரத்தை தவறாக புரிந்து கொண்டு செயல்களை செய்து கொண்டிருப்பது சம்சாரமாகும்.
ஒருவன் மற்றவர்களை எடைப்போட்டு கொண்டிருக்கிறான் என்று கற்பனை செய்வோம். அவனிடத்தில் இருக்கின்ற ஆசை-கோபம் இவைகளின் அடிப்படையில்தான் இதை செய்வான்.. நம்மை மற்றவர்கள் எப்போதும் எடைப் போட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். இதை நம்மால் தடுத்து நிறுத்தமுடியாது. மற்றவர்களை நிறை-குறைகளை தீர்மானிப்பது மனிதனின் இயல்பான குணமாகும். மற்றவர்கள் நம்மை இப்படிபட்டவன் என்று முத்திரை குத்தி வைத்திருப்பார்கள். நாம் இவைகளால் பாதிக்காதவாறு நம் மனதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அகங்காரத்தை தெரிந்தே பயன்படுத்திக் கொண்டிருந்தால் அது வரமாகும். இது தற்காலிகமான வியவகார கருவியாக பயன்படுத்தப்படுகின்றது. இது போலியான பார்ப்பவன் என்று உறுதியான அறிவுடன் பயன்படுத்துபவனே ஜீவன் முக்தனாவான். எல்லா செயல்களை செய்வதற்கும், வேதாந்தம் படிப்பதற்கும் கூட அகங்காரம் தேவைப்படுகிறது. அகங்காரத்தை தவறாக புரிந்து கொண்டு செயல்களை செய்து கொண்டிருப்பது சம்சாரமாகும்.
ஒருவன் மற்றவர்களை எடைப்போட்டு கொண்டிருக்கிறான் என்று கற்பனை செய்வோம். அவனிடத்தில் இருக்கின்ற ஆசை-கோபம் இவைகளின் அடிப்படையில்தான் இதை செய்வான்.. நம்மை மற்றவர்கள் எப்போதும் எடைப் போட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். இதை நம்மால் தடுத்து நிறுத்தமுடியாது. மற்றவர்களை நிறை-குறைகளை தீர்மானிப்பது மனிதனின் இயல்பான குணமாகும். மற்றவர்கள் நம்மை இப்படிபட்டவன் என்று முத்திரை குத்தி வைத்திருப்பார்கள். நாம் இவைகளால் பாதிக்காதவாறு நம் மனதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
உயர்நிலை வேதாந்த சாதகன்
கூட சில நேரங்களில் இவ்வாறு கூறுவான். நான் பிரம்மன் என்று நன்றாக தெரிகிறது.
ஆனால் என்னிடத்தில் அதற்கு மாறான எண்ணங்கள், உணர்ச்சிகள் இருந்து கொண்டிருக்கிறது. அவைகளை நீக்குவதற்கு என்னிடத்தில் உள்ள
வாசனைகளை அழித்துவிட வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் இதுவொரு தவறான
கருத்தாகும். விபரீத பாவனையும், வாசனைகளும்
அந்தக்கரணத்தைச் சார்ந்தவையாகும். இந்த சாதகன் பிரம்மன் என்று தன்னை நினைக்கும் போது
அந்தக்கரணத்தை நீக்கிவிடுகிறான். இப்படியிருக்கும் போது எப்படி வாசனைகளை அழிக்க
வேண்டும், எப்படி விபரீத பாவனைகளை நீக்க
வேண்டும் என்று நினைக்க முடியும்? இப்படிபட்ட கருத்தையுடையவனுக்கு வேதாந்த உபதேசம் நன்கு புரியவில்லை என்று தெரிகிறது.
எனவே இந்த சாதகன் இன்னும் வேதாந்த சிரவணம், மனனம், நிதித்யாஸனத்தை
தீவிரமாக பயிற்சி செய்ய வேண்டும்.
அகங்காரம்தான் அனைத்துவகையான பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது. இங்கே அகங்காரம் என்று அழைப்பது சிதாபாஸத்துடன் கூடிய மனதைத்தான். இங்கே அகங்காரம் பார்க்கப்படும் பொருளாக குறிக்கின்றது நான் என்ற எண்ணத்தைதான். மனம்தான் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கின்றது. அதற்கான காரணத்தை ஆசாரியாக கொடுக்கிறார்.
அகங்காரம்தான் அனைத்துவகையான பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது. இங்கே அகங்காரம் என்று அழைப்பது சிதாபாஸத்துடன் கூடிய மனதைத்தான். இங்கே அகங்காரம் பார்க்கப்படும் பொருளாக குறிக்கின்றது நான் என்ற எண்ணத்தைதான். மனம்தான் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கின்றது. அதற்கான காரணத்தை ஆசாரியாக கொடுக்கிறார்.
உலகம் எப்போதும் பார்க்கப்படுகின்ற பொருளாக இருக்கிறது. ஆத்மா எப்போதும்
பார்க்கின்ற சாட்சியாகவே இருக்கிறது. ஆனால் மனம் இரண்டுக்கும் இடையே இருப்பதால்
பார்ப்பவனாகவும், பார்க்கப்படுகின்ற
பொருளாகவும் இருக்கிறது. ஆத்மநிலையிலிருந்து பார்த்தால் அது பார்க்கப்படுகின்ற
பொருளாகவும், உலகத்தின்
பார்வையிலிருந்து அது பார்ப்பவனாக இருக்கிறது. இதனால்தான் நமக்கு குழப்பம்
வருகிறது. ஒருவனுக்குள் இரண்டு பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். ஒன்று உண்மையான
ஆத்மா, மற்றொன்று ஆத்மாவின்
அருகில் இருந்து கொண்டு அதனுதவியால் பார்ப்பவனாக இருக்கிறது. பாலில்
கலந்துவிட்ட நீரானது எப்படி அதன் நிறத்தை பெறுகிறதோ அதேபோன்று ஆத்மாவின் மிக
அருகிலிருப்பதால் ஆத்மாவின் இயல்பான தன்மையை மனம் அடைகிறது. மனதின் தன்மைகள்
ஆத்மாவிடம் மாற்றிவிடப்படுகிறது. வரையறையுடன் கூடிய மனதின் இயல்பானது வரையறையற்ற
ஆத்மாவுக்கு மாற்றப்படுகிறது. மாற்றத்தையடைகின்ற மனதின் இயல்பானது மாற்றத்தையே
அடையாத ஆத்மாவிடம் மாற்றப்படுகிறது. த்வைத புத்தியை உடைய மனதின் இந்த குணமானது
ஆத்மாவிடம் மாற்றப்படுகிறது. இந்த வகையான மாற்றங்களினால் உண்மையான ஆத்மா
மறைக்கப்படுகிறது. திரைப்படம் பார்க்கும்போது எப்படி வெள்ளித்திரை
மறைக்கப்படுகிறதோ அதுபோல ஆத்மாவானது மறைக்கப்படுகிறது.
நீரில் தெரிகின்ற சூரியபிம்பத்தைப்
பார்க்கும் போது உண்மையான சூரியனை மறந்து விடுகிறோம். நீரின் குணங்களை அந்த சூரியபிம்பத்தில்
ஏற்றி வைத்துவிடுகிறோம். ஆசாரியார் மூன்று குணங்களை உதாரணமாக கூறுகிறார். அவைகள்
அசைவு, வடிவம், இடம் ஆகியவைகளாகும். சூரியபிம்பம் தெரிகின்ற நீரிருக்கும்
பாத்திரத்தின் அசைவு, உருவம் மற்றும் இடம் சூரியனிடத்தில் மாற்றப்படுகிறது. அதேபோல மனதின் குணங்கள்
ஆத்மாவிடத்தில் மாற்றப்படுகிறது.
இந்தக்காரணத்தால் மனதை
நாசம் செய்துவிட வேண்டும் என்பது உபதேசம் அல்ல. அகங்காரத்தை(மனதை) அழிக்கத்
தேவையில்லை. இது நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வதைப் போன்றதாகும். மனதை
வைத்துக்கொண்டே அதனுடைய குணங்கள் என்னுடையதல்ல, அதனுடைய தர்மங்கள் என்னுடையதல்ல என்று புரிந்து
கொள்ள வேண்டும். இந்த அறிவையே ஆத்ம-அனாத்ம விவேகமாகும் என்று கூறப்படுகிறது..
வரம்பற்ற ஆத்மாவினிடத்தில்
எவ்வாறு வரம்புக்குட்பட்ட மனதின் குணங்கள் மாற்ற முடியும் என்ற சந்தேகம் வரும். ஆத்மா
ஏற்கனவே வரம்பற்றதாக இருக்கிறது. மனம் வரம்புக்குட்பட்ட குணத்தை மாற்றுகிறது.
எப்படி இரண்டு எதிர்மறையான குணங்கள் ஒரேபொருளிடத்தில் இருக்கமுடியும் என்ற
சந்தேகமும், அத்வைதமும், த்வைதமும் எப்படி
ஆத்மாவிடத்தில் இருக்க முடியும் என்ற சந்தேகமும் எழுகின்றது.
எதிர்மறையான பண்புகள்
ஒரேயிடத்தில் இருக்க முடியாது என்ற பொது விதியிருக்கிறது. ஆனால் ஆத்மாவிடத்தில் அத்வைதமும், த்வைதமும் எப்படி இருக்க முடியுமென்றால் ஒன்று சத்யமாகவும் மற்றொன்று மித்யாவாகவும் இருக்கும்
நிலையில் இது சாத்தியமாகிறது. உலர்ந்த மண்ணில் கானல் நீரை பார்க்கும் போது எப்படி
ஈரமற்ற மணலில் ஈரமான நீர் காட்சியளிக்கிறது என்று ஆராய்ந்து பார்க்கும் போது
ஈரமற்ற மணலில் ஈரமான நீர் பொய்யாக காட்சியளிக்கிறது என்ற உண்மையை அடைவோம். அதேபோல வரையறையற்ற
ஆத்மாவினிடத்தில் வரையறைக்குட்பட்ட மனதின் குணங்களும் மித்யாவாக இருக்கலாம் என்ற
உண்மையை புரிந்து கொள்ளலாம். உண்மையில் மனதின் குணங்கள் ஆத்மாவுக்கு
மாற்றப்படவில்லை மாயையின் சக்தியால் அவ்வாறு நடக்கிறது. ஆத்மா கற்பனையான
வரம்பையும், த்வைதத்தையும்
பெற்றுக்கொள்கிறது.
மித்யாவின் இயல்பான
குணத்தின் அடிப்படையில் மனதின் குணங்கள் ஆத்மாவில் கற்பனையாக ஏற்றவைக்கப்பட்டிருக்கிறது. ஒரே மனிதன்
ஒருவனுக்கு நண்பனாகவும், வேறொருவனுக்கு எதிரியாகவும் இருக்கலாம். எவ்வாறு ஒரு மனிதனிடத்தில்
எதிர்மறையான இரண்டு குணங்கள் இருக்கமுடியும் என்ற கேள்வி வருகிறது. இரண்டு
குணங்களும் அந்த மனிதனின் இயல்பான குணங்கள் அல்ல. அவையிரண்டும் மற்றவர்களால் அவன்
மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. அவைகள் மற்றவர்களின் மனகணிப்புக்களாகும்.
அதனால் இரண்டும் ஒரே மனிதனிடத்தில் இருக்கலாம்.
அதேப்போன்று ஆத்மாவினிடத்தில் எந்த குணங்களும் கிடையாது. அதில் இருப்பது போல தோன்றுவதற்கு காரணம் அகங்காரத்தின் குணங்களான ஆசை, கோபம், பொறாமை போன்றவைகள் பொய்யாக ஆத்மாவில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. குழப்பத்துடன் இருக்கும் மனதை பத்தனென்றும் ஆத்மஞானத்தை அடைந்துவிட்ட மனதை முக்தனென்றும் அழைக்கப்படுகிறது. ஆத்மா பத்தாவுமல்ல, முக்தாவுமல்ல.
அடுத்ததாக ஆசாரியார் சாதகனை இரட்டை வடிவ கருத்துக்கு அழைத்து செல்கிறார். ஏனென்றால் இதன் மூலம் ஒருவனுடைய அனைத்து பிரச்சனைகளும் முடிவடைந்து விடும். இந்த இரட்டைவடிவ கருத்து என்பது, நான் சாட்சி ஸ்வரூபமான ஆத்மா, என்னால் பார்க்கப்படுபவைகளெல்லாம் அனாத்மா என்று உறுதியான நம்பிக்கை. இரட்டை என்பது ஆத்மாவையும், அனாத்மாவையும் குறிக்கின்றது. இந்த உடல், உலகம், மனம் இவைகளை உள்ளடக்கியது முழு அனாத்மா பிரபஞ்சம். இது வ்யாவஹாரிக சத்யமாகும்.
இந்த முழு பிரபஞ்சமும் மூன்று கூறுகளின் வடிவமாக உள்ளது. அவைகள் பலவிதமான பொருட்களாக இருக்கிறது. இவைகளின் மூலம் செயல் செய்வதற்கும், செயல் செய்வதற்கு உதவும் உபகரணங்களாகவும் இருக்கிறது. காரகம் என்பது செயல் செய்வதற்கு உதவி செய்கின்ற கருவிகளை ஒன்று சேர்த்து கூறுகின்ற சொல்லாகும். நமது உடல் செயல் செய்வதற்கு உதவியாக இருப்பதால் அதை காரகம் என்று அழைக்கலாம். மனம், இந்திரியங்கள் கூட காரகம் என்று அழைக்கலாம்.
இந்த காரகங்கள் ஒன்று
சேரும்போது விதவிதமான காரியங்கள் நடைபெறுகின்றன. இவைகள் மனதாலோ, உடலாலோ, வார்த்தையாலோ
செய்யப்படலாம். இதன் மூலம் விதவிதமான பயன்களை அடைந்திடலாம். இந்த உடலை அடைந்திருப்பது பூர்வஜன்ம பலனால்தான். இந்த உடலும் ஒரு காரகம். ஓவ்வொரு பொருளும்
காரகமாகவும் இருக்கும், பலனாகவும் இருக்கும். தோன்றிக் கொண்டிருக்கும் இந்த முழு பிரபஞ்சமும்; கிரியா-காரக-பிரமாதா என்று
அழைக்கப்படுகிறது. இது செயலோடு சம்பந்தப்பட்ட காரணிகள், செயல்கள் மற்றும்
செயலினால் விளையும் பலன்கள்.
இந்த தன்மைகளை உடைய
ஆத்மாவின் கோணத்தில் ஜகத் மித்யாவாக இருக்கிறது. இந்த உலகம் உண்மையா அல்லது பொய்யா
என்ற கேள்விக்கு நேரிடையாக பதில் சொல்ல முடியாது. இது ஆத்மாவின் பார்வையிலா அல்லது மனதின்
பார்வையிலா என்ற கேள்வியின் பதிலைப் பொருத்து இதற்கான பதில் அமையும். மனதின் பார்வையில்
இந்த உலகம் சத்யம்; ஆத்மாவின் பார்வையில் இந்த உலகம் மித்யாவாகும். உடலை வைத்துப் பார்க்கும்
போதும் இந்த உலகம் சத்யமாகும். ஏனென்றால் உலகத்தில் நடக்கின்ற நிகழ்வுகள்
உடலைப் பாதிக்கின்றது. இவைகள் மனதையும் பாதிப்பதால் மனதின் பார்வையிலிருந்தும் உலகம்
உண்மையாக இருக்கின்றது. ஆத்மஞானத்தை அடையாத நிலையில், அதாவது
ஜீவ-ஜகத்-ஈஸ்வரன் என்ற முக்கோண வடிவ அறிவோடு இருக்கும் போது இந்த உலகம் உண்மையாக
இருக்கும், ஆத்மா-அனாத்மா என்ற
இரட்டை வடிவ அறிவோடு இருக்கும் போது உலகம் மித்யாவாக இருக்கிறது.
இது மித்யாவாக இருப்பதற்கு
காரணம் இது மாயையினால் உருவாக்கப்பட்டது. இது சமஷ்டி நிலையில் அறியாமையோடு
இருக்கும்போது மாயையினால் உருவாக்கப்பட்டதாகும். அறியாமைதான்
இந்த பிரபஞ்சத்தை தோன்றச் செய்கிறது அதனால் இது மித்யா. பயனுள்ள இந்த உலகம் எப்படி
மித்யா என்று கூறமுடியும்? இதற்கான பதில் மாண்டூக்ய உபநிஷத் காரிகையில் கௌடபாதாச்சாரியார் விரிவாக
உதாரணத்துடன் விளக்கம் கொடுத்திருக்கிறார். கனவு காண்கின்றவனுக்கு கனவு உண்மைப்
போலவேயிருக்கும். அதுபோல அறியாமையோடு இருப்பவனுக்கு இந்த உலகம் சத்யமாக தோன்றும்.
ஆனால் ஆத்மஞானம் அடைந்துவிட்டால் உலகம் மித்யாவாக தோன்றும்.
இதிலிருந்து நான் ஆத்மா
சத்யம்; அனாத்மா (மனதும்
சேர்ந்தது) மித்யா என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆதலால் நான் எதனோடும்
சம்பந்தமற்று இருப்பதால் என்னை அனாத்மா எந்த வகையிலும் பாதிக்காது.
எனவே சில சாதகர்கள் சொல்கின்ற கருத்தான, நான் ஆத்மாவை புரிந்து கொண்டேன், ஆனால் என்னிடத்தில் இருக்கின்ற விபரீத பாவனைகளை, வாசனைகளை நெடுநாட்கள் நிதித்யாஸனம் செய்து போக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறுவது தவறானதாகும். இவர்கள் உண்மையில் ஆத்மாவை புரிந்து கொண்டிருந்தால், ஆத்மாவினிடத்தில் வாசனைகள் எதுவும் கிடையாது என்றும் தெரிந்திருக்கும். இருந்தாலும் இந்த வாசனைகளை நீக்கிக் கொள்வதற்கு தவம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். மனதில் வாசனைகள் இருக்கிறது. ஆனால் மனமோ, அதிலிருக்கின்ற வாசனைகளோ ஆத்மாவைத் தொடுவதில்லை. இதை உணர்ந்து கொண்டு, மனதிலிருக்கின்ற வாசனைகள் ஆத்மாவான என்னைத் தொடுவதில்லை என்று தியானம் செய்ய வேண்டுமே தவிர வாசனைகள் அழிந்து போகவேண்டும் என்று தியானிக்க கூடாது.
எனவே சில சாதகர்கள் சொல்கின்ற கருத்தான, நான் ஆத்மாவை புரிந்து கொண்டேன், ஆனால் என்னிடத்தில் இருக்கின்ற விபரீத பாவனைகளை, வாசனைகளை நெடுநாட்கள் நிதித்யாஸனம் செய்து போக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறுவது தவறானதாகும். இவர்கள் உண்மையில் ஆத்மாவை புரிந்து கொண்டிருந்தால், ஆத்மாவினிடத்தில் வாசனைகள் எதுவும் கிடையாது என்றும் தெரிந்திருக்கும். இருந்தாலும் இந்த வாசனைகளை நீக்கிக் கொள்வதற்கு தவம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். மனதில் வாசனைகள் இருக்கிறது. ஆனால் மனமோ, அதிலிருக்கின்ற வாசனைகளோ ஆத்மாவைத் தொடுவதில்லை. இதை உணர்ந்து கொண்டு, மனதிலிருக்கின்ற வாசனைகள் ஆத்மாவான என்னைத் தொடுவதில்லை என்று தியானம் செய்ய வேண்டுமே தவிர வாசனைகள் அழிந்து போகவேண்டும் என்று தியானிக்க கூடாது.
உதாரணமாக
உடலாரோக்கியத்தோடுள்ள ஒருவர் உடல்நலக்கோளாறு ஒன்றைப் பற்றி படிக்கிறார். பிறகு அது
நமக்கு இருக்குமோ என்ற பயம் அவரைத் தொற்றிக் கொள்கிறது. பயமே அது உண்மையில்
இருப்பது போல அவருக்குத் தோற்றுவிக்கிறது. பயத்தினுடைய தன்மையே இல்லாததை இருப்பது
போல நினைத்துக் கொண்டு இருக்கச் செய்வது. அதிக
பயம் மேலும் இல்லாததை இருப்பது போல
காட்டுவதை உறுதி செய்யும். நாளடைவில் அந்த பயமே இல்லாததை இருப்பதாக்கிவிடும்.
அதேபோல நமக்கு வெளியேயுள்ள உலகம் உண்மையில் இல்லை. ஆனால் நமக்கு வெளியே உலகம்
இருக்கிறது என்ற உறுதியான எண்ணமே அதற்கு இருப்பபைக் கொடுத்துவிடுகிறது. அதனால்
துன்பத்தை அடைகிறோம். இந்த நிலையில் நாம் குருவைப் பார்த்து, குருவே! தகித்துக்
கொண்டிருக்கும் இந்தச் சம்சார நெருப்பிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று
வேண்டுகிறோம். இதுதான் சம்சாரம் என்பது.
இந்த உண்மை நம்பமுடியாததாக இருக்கிறது, ஆனால் ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். என்னுடைய வாசனைகள் மூலம் நான் கனவுலகத்தை படைக்கிறேன், அதற்கு இருப்பைக் கொடுக்கிறேன், சத்யத்வத்தை கொடுக்கிறேன். பிறகு கனவில் நிகழும் சம்பவங்களால் துன்பத்தை அடைகிறோம். அதனால் கடவுளிடம் இந்த மாதிரியான பயங்கரமான கனவுகள் எதுவும் வரவேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறோம்.
இந்த உண்மை நம்பமுடியாததாக இருக்கிறது, ஆனால் ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். என்னுடைய வாசனைகள் மூலம் நான் கனவுலகத்தை படைக்கிறேன், அதற்கு இருப்பைக் கொடுக்கிறேன், சத்யத்வத்தை கொடுக்கிறேன். பிறகு கனவில் நிகழும் சம்பவங்களால் துன்பத்தை அடைகிறோம். அதனால் கடவுளிடம் இந்த மாதிரியான பயங்கரமான கனவுகள் எதுவும் வரவேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறோம்.
ஒருவன் இல்லாத பிரச்சனைகளுக்கு வைதீகம், லௌகீகம், வேதாந்தம் ஆகியவைகளின் மூலம் பரிகாரம் தேடி அலைகிறான். ஆத்மாவை நன்கு புரிந்து கொண்டிருந்தும், என்னைத் தவிர இரண்டாவது ஒன்றுமில்லை என்று நன்கு புரிந்திருந்தாலும் பரிகாரத்தை நாடிச்செல்கிறான். மனதின் பார்வையில் த்வைதம் இருக்கிறது, உலகமும் இருக்கிறது. ஆத்மாவின் பார்வையிலிருந்து பார்க்கும் போது மனமும் இல்லை, உலகமும் இல்லை.
அகங்காரத்தை அழிக்கத்
தேவையில்லை; அதன் இயல்பான
தன்மைகளை நன்கு புரிந்து கொண்டு, அதை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதை மட்டும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
அகங்காரம் என்பது நாடகத்தில் போடப்படும் வெறும் வேஷம் என்று புரிந்து கொள்ள
வேண்டும். உண்மையில் நான் சாட்சி ஸ்வரூபமான ஆத்மா என்றும் உணர்ந்து கொள்ள
வேண்டும். சாட்சி நிலையில் அகங்கார வேஷத்துடன் வாழும் போது வாழ்க்கை நல்ல
பொழுதுபோக்காக இருக்கும். சாட்சி ஸ்வரூபத்தை மறந்து அகங்காரத்துடன் வாழும் போது
அதே வாழ்க்கை போராட்டமாக இருக்கும்.
நம் வாழ்க்கையில் நடக்கின்ற
விஷயங்களை திரைப்படம் பார்ப்பதைப் போல பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
திரைப்படத்தில் தோன்றும் காட்சிகள், சம்பவங்கள் அனைத்தும் வெறும் காட்சியாக பார்த்துக் கொண்டிருப்பதைப் போல
பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அந்த நேரத்தில் உணர்ச்சிவசப்படலாம் ஆனால் அவைகளும்
என்னைச் சார்ந்ததல்ல என்ற ஆத்மபாவத்துடன் இருக்கவேண்டும்.
மனம் சிதாபாஸத்துடன்
இருந்தால் அதற்கு இந்த உலகத்தை பிரகாசிக்கும் சக்தியை பெறுகிறது. வேதாந்தத்தின்
உபதேசத்தின்படி அனுபவிக்கப்படுகின்ற இந்த உலகத்திற்கு ஆனந்தத்தை கொடுக்கும் சக்தி
கிடையாது. அதை ஆத்மாவிலிருந்து
மட்டும்தான் பெறமுடியும். ஆத்மாவில் உள்ள உண்மையான ஆனந்தம்தான் உலகப்போகப்
பொருட்களில் பிரதிபலித்து அனுபவத்திற்கு வருகிறது. ஒவ்வொரு மனிதனும் சுகத்தைத்
தருகின்ற பொருட்களை நாடித்தான் சென்று கொண்டு இருக்கின்றான். அந்தப் பொருட்களில்
உள்ள ஆனந்தம் நிலைக்கண்ணாடியில் தோன்றும் பிரதிபிம்பம் போல ஆத்மாவிலுள்ள
ஆனந்தத்தின் பிரதிபிம்பமாகும். ஆனால்
அந்தப் பொருட்களில்தான் சுகம் இருக்கிறது என்ற தவறாக நினைத்துக் கொள்கிறார்கள்.
எல்லா சுகமும், மகிழ்ச்சியும்
ஆத்மாவின் இயல்பான தன்மையின் வெளிப்பாடேயாகும்.
சம்சாரியாக இருக்கின்ற
மனிதர்கள் நான்கு தவறுகளை செய்கிறார்கள். அவைகளாவது போக்தாவாக இருப்பது, போக்ய சம்பந்தம்
வைத்துக்கொள்வது, சம்பந்தம் வைத்துக்
கொண்டிருக்கும் அந்த போக்ய பொருட்கள்தான் மகிழ்ச்சியை கொடுக்கிறது என்று நினைத்துக் கொண்டு அந்த சம்பந்தத்தை
நிலைநிறுத்திக் கொள்ள போராடுவது ஆகிய நான்கு பெரிய தவறுகளை மனிதர்கள் செய்கிறார்கள். அகங்காரத்தை
நானாக நினைப்பதால்தான் இந்த தவறு நடைபெறுகிறது.
அக்ஞானியான சம்சாரி, நான்தான் அகங்காரம் என்று நினைத்துக் கொண்டு தன்னுடைய மனைவியை நோக்கும் போது அவளே ஆனந்தத்தின் ஊற்று என்று நினைத்துக் கொள்கிறான். வில்போன்ற அழகிய புருவத்தையும், கூர்மையான மூக்கையும், அழகான கண்களையும், மயக்கும் புன்னகையைக் கண்டும் இவ்வாறு அவன் நினைக்கின்றான். மனைவிதான் ஆனந்தத்தை தரும் ஆதாரம் என்று உறுதியாக நம்புகிறான். இது உண்மையல்ல. ஏனென்றால் மனைவி என்பவள் அனாத்மா. அனாத்மாவில் தனக்கென்று சொந்தமாக ஆனந்தம் என்பதே கிடையாது.
ஆத்மாவிற்கும், அவித்யாவிற்கும்
எந்தவிதமான தொடர்பும் கிடையாது. ஏனென்றால் ஆத்மா பாரமார்திக சத்யமாகவும், அவித்யா வியாவாஹாரிக
சத்யமாகவும் இருக்கிறது. இரண்டிற்கும் உள்ள சத்யத்வத்தின் அளவு வேறுபடுகிறது.
ஆத்மா உயர்ந்த உண்மைநிலையையும், மாயா தாழ்ந்த உண்மைநிலையையும் உடையது.
அவித்யா என்று
அழைக்கப்படுகின்ற மாயாதான் ஜகத் முழுவதையும், கனவுநிலை பிரபஞ்சத்தையும் தோற்றுவிக்கிறது. மனமும் மாயையின் காரியம்தான். எனவே
இவைகள் யாவும் வியாவஹாரிக சத்யமாகும்.
ஆசாரியார் கூறுகிறார், யாரெல்லாம் சந்நியாசம் எடுத்துக் கொள்ள வேண்டும்
என்று நினைக்கிறார்களோ அவர்களெல்லாம் அக்ஞானிகள்தான். சந்நியாசம் என்பது இருப்பதைத் தியாகம் செய்வதுதான். ஓன்றுமேயில்லாத சந்நியாசத்தில் தியாகம் செய்வதற்கு ஒன்றுமேயில்லை. நான் யாரோடும், எதனோடும் சம்பந்தமற்றவன், எனக்கு தாய், தந்தை, உறவுகள் போன்ற
எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்ற
உறுதியான மனதை உடையவன்தான் சந்நியாசி. ஆத்மஞானத்தை அடைந்தவன்
எங்கிருந்தாலும் அவன் சந்நியாசிதான்.
மனமானது வெளியுலகத்தோடு
ஐம்புலன்களின் மூலம் தொடர்பு கொள்கிறது. இறைவன் ஐம்புலன்களையும் போகத்தை நாடி
வெளியே செல்கின்ற தன்மையுடன் படைத்துவிட்டான். அதனால் எல்லோரும் வெளியுலகத்தை
நாடியே செல்கின்றனர். மனம் பார்ப்பவனாகவும், உலகம் பார்க்கப்படும் பொருளாகவும் உள்ள சம்பந்தத்தை மனம் அடைந்திருக்கிறது.
ஆத்மாவுக்கும் மனதுக்கும்
இடையே பார்ப்பவன்-பார்க்கப்படும் பொருள் என்ற சம்பந்தமும், மனதிற்கும்
உலகத்திற்கும் இடையே இதே சம்பந்தமும் இருக்கிறது. ஆனால் ஆத்மாவிற்கும்
உலகத்திற்கும் எந்தவிதமான நேரிடையான
சம்பந்தமும் கிடையாது. மனம்தான் இவையிரண்டிற்கும் மறைமுகமான
சம்பந்தத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக மனைவியின் தாய்-தந்தையர்கள் கணவனுடன்
சம்பந்தம் ஏற்படுவதைப் போல இதை புரிந்துகொள்ள வேண்டும். விழிப்புலக, கனவுலக பிரபஞ்சங்களை
ஆத்மாவுடன் மறைமுகமாக இணைக்கின்ற காரணியாக இருக்கின்ற மனம் செயல்பட்டுக்
கொண்டிருப்பதால் இவைகள் அனுபவத்திற்கு வருகின்றது. அதனால் சம்சாரத்தை அனுபவித்துக்
கொண்டு இருக்கிறோம். ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில் மனமும் ஒடுங்கிவிடுவதால் அந்த
இணைப்பு துண்டிக்கப்படுகிறது. எனவே ஆனந்தத்தை தவிர வேறெதுவும் அனுபவத்திற்கு
வருவதில்லை.
கேள்வி: நான் பிரம்மமாக இருக்கிறேன் என்ற
மகாவாக்கியத்தை எப்படி புரிந்து கொள்ள முடியும்? நான் பிரம்மத்தின் இயல்புக்கு நேரெதிராக
இருக்கிறேன். எனவே எப்படி இரண்டையும் ஒன்று என்று சொல்ல முடியும்?
பதில்: நான் என்ற மகாவாக்கியத்தில் உள்ள சொல் ஆத்மாவைத்தான் குறிக்கிறது
என்பதை நிலைநாட்ட வேண்டும். ஆசிரியர் இதை மூன்றுவிதமாக நிலைநாட்ட விரும்பகிறார். பிரசித்த விருத்தி
(முக்கிய விருத்தி), லட்சணா விருத்தி, குண விருத்தி என்று மூன்று முறைகள் மூலம் விளக்குகிறார்.
சூடேற்றப்பட்ட இரும்பு
குண்டை ஒருவன் தொட்டுவிட்டு இரும்புகுண்டு என் கையைச் சுட்டுவிட்டது என்று
கூறுகிறான். உண்மையில் இரும்புக்கு சுடுகின்ற குணம் கிடையாது. நாம் இந்த
வாக்கியத்திலிருந்து புரிந்து கொள்வது இரும்புக்குண்டில் உள்ள சூடானது என் கையைச்
சுட்டுவிட்டது என்பதாகும். இதில் நெருப்பானது தன் இயல்பான சுடுகின்ற குணத்தை
தற்காலிகமாக இரும்புக்குண்டில் ஏற்றி வைத்திருக்கிறது. எனவே இரும்புகுண்டு சுடுகின்ற தன்மையை
தற்காலிகமாக பெற்றிருப்பதால், அதை தொட்டால் சுடுகிறது.
நான் என்ற சொல் முதன்மையாக உடல்-மனம் சேர்ந்த
தொகுப்பைக் குறிக்கிறது. ஆனால் ஞானி சொல்லும்போது அது உடலையோ, மனதையோ குறிக்கவில்லை
பிரம்மத்தைத்தான் குறிக்கிறது. இவைகள்
வரம்பிற்குட்டவைகள், பிரம்மம் எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கும் வரம்பிற்குட்படாதது. ஆதலால் நான் என்ற சொல் உடலுக்குள் உள்ள
ஏதோவொன்றைத்தான் குறிப்பிடுகிறது. அது உடலும் அல்ல, மனமும் அல்ல. அது உடல்-மன தொகுப்பினால்
வரையறுக்கப்படாதது. எனவே நான் பிரம்மமாக இருக்கிறேன் என்ற மகாவாக்கியத்தில் உள்ள
நான் என்ற சொல் ஜகத் லட்சணை மூலம் உடலை நீக்குகிறது, மனதை நீக்குகிறது. சிதாபாஸனைக் கூட இந்த லட்சணை
மூலம் நீக்கப்படுகிறது. அறிவுஸ்வரூபமாகவுள்ள பிரம்மத்தை மட்டும்தான் நான் என்ற
சொல் குறிக்கிறது.
ஆழ்ந்த உறக்கத்திலிருந்த
விழித்தெழுந்த ஒருவன் நான் நன்றாக உறங்கினேன், எதையும் அனுபவிக்கவில்லை என்று சொல்லும் போது
நான் என்று சொல் அகங்காரத்தையோ, மனதையோ, சிதாபாஸத்தையோ
குறிக்கவில்லை. ஏனென்றால் அவைகள் ஒடுங்கிய நிலையில் இருப்பதால் அந்தசமயம்
இருந்திருக்கிறது.
சுருக்கமான ஆசாரியாரின்
கருத்து பின்வருமாறு:
நான் என்ற சொல் சுத்த சைதன்யத்தை குறிக்கிறது. எப்படி சூடான இரும்புகுண்டில் சூடானது இருக்கிறதோ அது போலவே இந்த உடலுக்குள் சைதன்யம் இருக்கிறது. நான் என்று சொல்லும்போது இரும்பை நீக்கிவிட்டு சூடுதன்மையை கூறுவது போல உடல்-மனத்தொகுப்பை விட்டுவிட்டு சைதன்யத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் எந்தவிதமான கஷ்டமோ அல்லது தர்க்கரீதியான தவறோ கிடையாது.
நான் என்ற சொல் சாதாரணமாக
பிரம்மத்தைக் குறிக்காது, அது சிதாபாஸத்தோடு கூடிய மனதைத்தான் குறிக்கும். சிங்கத்தை முழுவதுமாக மாணவனோடு ஒப்பிட்டு
பார்க்க முடியாததை போல நான் சொல் ஆத்மாவை குறிப்பதற்கு பயன்படுத்த முடியாது. ஆனால் சிங்கம் போன்ற மாணவன் என்ற வாக்கியத்தில்
சிங்கம் என்ற சொல் மாணவனை குறிப்பிடும் போது அதனுடைய கம்பீரத்தை குறிப்பிடுவதற்கு
பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல நான் என்ற
சொல் ஆத்மாவை குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று
புரிந்து கொள்ள வேண்டும். இந்த புரிதல் வேறொரு சந்தேகத்தை
எழுப்புகிறது. சிங்கத்தை போன்று வீரம், கம்பீரமாகவும் இருக்கின்ற குணத்தை மாணவனுக்கு
ஒப்பிடுவது போல ஆத்மாவிற்கும் மனதிற்கும் இடையே என்ன வகையான பொதுவான குணங்கள்
இருக்கிறது? ஆசாரியார் அவற்றை
பட்டியலிடுகிறார்.
இவையிரண்டும் உடலுக்குள்
இருக்கிறது. சூட்சுமமாக இருக்கிறது. கண்ணுக்கு தெரியாததாக இருக்கிறது. மனது
தன்னைத்தானே அறிந்து கொள்ளமுடியாது. புலன்களுக்கும் எட்டாததாக இருக்கிறது. எனவே இவைகள் மிகவும்
சூட்சுமமானது. இதனால் விக்ஞானிகள் மனதின் இருப்பை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.
மூளைக்கும் வேறாக மனதை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் சாஸ்திரம் மனம் மூளையைக்
குறிக்கவில்லை என்றும் அதுவொரு தத்துவம் உடலும், மூளையும் அழிந்தாலும்
அது இருந்து கொண்டிருக்கும். சாஸ்திரம்
மேலும் சொல்கிறது மனம் பயணம் செய்யக்கூடியது, ஆனால் விக்ஞானம் மனம் இறந்த உடலைவிட்டு செல்கிறது என்பதை ஏற்றுக்
கொள்வதில்லை.. இதிலிருந்து மனம் ஆராய்ச்சி செய்வதற்கும் அப்பாற்பட்டது என்று
நிலைநாட்டப்படுகிறது. அதேபோல ஆத்மாவும் இருக்கிறது. எனவே இவையிரண்டும்
மிகவும்சூட்சுமமாக கருதப்படுகிறது.
மூன்றாவது ஒற்றுமையானது
இரண்டும் எப்பொழுதும்
உணர்வுமயமாக இருக்கிறது. மனம் இந்த உணர்வுமயத்தை ஆத்மாவிடமிருந்து
கடன்வாங்கியிருக்கிறது, ஆத்மா என்றும் உணர்வுமயமாகவே இருக்கிறது. இது ஒன்று மட்டும்தான இரண்டிற்கும்
இடையே உள்ள வேற்றுமையாகும்.
ஆசாரியார் சுட்டிக்
காட்டுவது நாம் இந்த நான் என்று சொல்லை உடலின் உறுப்புக்களுக்கும்
பயன்படுத்துகிறோம் என்பதாகும். நான் எழுதுகிறேன் என்ற வாக்கியத்தில் நான் என்ற
சொல் உடலைக் குறிக்கவில்லை; கையைத்தான் குறிக்கிறோம். இது நாம் நான் சொல்லை உடலின் எந்த உறுப்புக்கும்
பயன்படுத்துவதை காட்டுகிறது. மிகவும் அரிதாக பஞ்சகோசங்களுடன் கூடிய உடலுக்கு நான் என்ற சொல்லை
பயன்படுத்துகிறோம். சில சமயம் ஆத்மாவை குறிப்பிடுவதற்கும்
பயன்படுத்துகிறோம்.
நான் என்ற சொல் சைதன்ய
தத்துவத்தை வெளிப்படுத்துகிறது. இந்த தத்துவம் உடலினுடைய காரியமோ, உறுப்போ அல்லது
அதனிலிருந்து தோன்றிய ஒரு வஸ்துவோ கிடையாது. இது உடலினால் வரையறுக்கப்படாதது. எனவே
இதை பிரம்மன் என்று கூறுகிறோம். இது தேச, காலத்தாலும் வரையறுக்க முடியாதது. இது ஆனந்த ஸ்வரூபம். அஹம் பிரம்மாஸ்மி என்ற
மகாவாக்கியத்தில் உள்ள அஹம் என்று சொல் இதைத்தான் குறிக்கிறது.
ஆத்மாவை ஆனந்த ஸ்வரூபம்
என்று சொல்லம்போது ஐந்தவகையான இயல்பான தன்மைகளை குறிக்கின்றது.. அவைகளாவது
ஆவல் மேலிட சீடன் குருவைப்
பார்த்து, இந்த விவரிக்க முடியாத பிம்பானந்தம்
எங்கேயிருக்கிறது என்று கேட்கிறான். குருவும் நீதான் அந்த வரம்பற்ற உண்மையான
ஆனந்தம் என்று கூறுகிறார்.
எனவே சிலர் நான்
மகிழ்ச்சியற்று இருக்கிறேன் என்று சொல்லும்போது வெளிப்படாத ஆனந்தத்தைதான்
குறிக்கிறது. நான் ஆனந்தமாக இருக்கிறேன் ஆனால் மனம் அதை பிரதிபலிக்கும் கருவியாக
இல்லாமல் இருக்கிறது.. ஆதலால் குழப்பமான மனதில் ஆனந்தம் வெளிப்படுவதில்லை.
அப்படியிருந்த போதும் நான் ஆனந்த ஸ்வரூபமாகவே இருக்கிறேன்.
ஆத்மாதான் ஆனந்தம்
என்பதற்கு என்ன சான்று என்ற கேட்கும்போது, இதற்கான தனி சான்றே தேவையில்லை ஏனென்றால் அதனுடைய இருப்பு எப்போதும்
வெளிப்படையானது. சைதன்யம் எப்போதும் வெளிப்படையானது. சைதன்யமே ஆனந்தமாக
இருக்கின்றது. இதுவொன்றே ஆனந்தத்தின் இருப்புக்கு சான்றாகும். இந்த ஆனந்தத்தை
அனுபவிக்க முடியாது ஏனென்றால் அனுபவிப்பவனே ஆனந்த ஸ்வரூபமாக இருக்கின்றான்.
இந்த பிரம்மானந்தாவானது
மகாவாக்கியத்தின் மூலமாக தெரியவருகிறது. அஹம் பிரம்மாஸ்மி என்ற மகாவாக்கியத்தில்
உள்ள அஹம் என்ற சொல் அகங்காரத்தை குறிக்கவில்லை, ஆத்மாவைத்தான்
குறிக்கின்றது. சுத்த சைதன்யம் எப்போதும், எங்கும் வியாபித்திருக்கிறது. அதை
செயல்படுத்த முடியாதது. எனவே அதை உபதேசிக்கவும் முடியாது, விவரிக்கவும் முடியாது, விளக்கவும்
முடியாது, ஆத்மா செயலெதும்
செய்யாதது. ஆதலால் வேதாந்தம் கற்பிக்கும்போது அதை விளக்குவதற்காக முதலில் ஆத்மா
மனதால் மூடப்பட்டிருக்கிறது என்று சொல்லும்போது அதை சொல்லிக் கொடுப்பதற்கு உதவியாக
இருக்கும். இதைப்புரிந்து கொண்ட பிறகு ஆத்மா மனதால் மூடப்பட்டதல்ல என்று
உபதேசிக்கும் போது சீடனால் புரிந்து கொள்ள முடியும். எங்கும் வியாபித்திருக்கும்
ஆகாசத்தை விளக்கும் போது ஒரு அறைக்குள் உள்ள ஆகாசம் எப்படி பயன்படுகிறதோ அதேமாதிரி ஆத்மாவை புரிய
வைப்பதற்கு முதலில் மனதால் மூடப்பட்டிருக்கிறது என்று முதலில் கற்பிக்கப்படுகிறது.
வேதாந்த உபதேசத்தின்
முதல்படி நீதான் பார்ப்பவனாக இருக்கின்ற ஆத்மா மற்ற அனைத்தும் பார்க்கப்படுகின்ற
அனாத்மா என்று கற்பிக்கப்படுகிறது. முதலில் ஆத்ம-அனாத்மா விவேகத்தை
பார்ப்பவன்-பார்க்கப்படும் பொருள், அனுபவிப்பவன்-
அனுபவிக்கப்படும் பொருள் என்று கூறி விளக்கப்படுகிறது. இந்த முறையில்
கற்பிக்கும்போது மனம், ஜகத், உடல் ஆகிய அனைத்தும்
நீக்கப்படுகிறது. இதனால் ஒரு பிரச்சனை வருகிறது. ஆத்மா அனுபவிப்பவன் என்று
சொல்லும்போது அது அனுபவித்தல் என்ற செயலை செய்வதாக நினைக்கத் தோன்றும்.
ஆத்மா அனுபவிப்பவன் என்று புரிந்து
கொள்ளும்போது அது அனுபவித்தல் என்ற செயலை மறைமுகமாக செய்வதாக தோன்றும். பொதுவாக
ஏதாவது ஒரு செயல் செய்யும்போது அது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அப்படி பார்க்கும்
போது ஆத்மாவில் ஏதோவொரு மாற்றம் ஏற்பட்டிருக்கும். அந்த மாற்றத்தை பார்ப்பவன் யார் என்று கேள்விக்கு
பதில் சொல்லமுடியாது. இது மேலும் குழப்பத்தில்தான் ஆழ்த்தும் தெளிவு கிடைக்காது.
ஆதலால் இரண்டாவது நிலையில் அனுபவிப்பவன் (த்ரஷ்டா) என்பது நீக்கப்படுகிறது.
முதலில் அனுபவிப்பவன் என்று
அறிமுகப்படுத்தி பின்னர் அதில் சீடனுக்கு சந்தேகம் வரும்போது அதை நீக்கி சாட்சி
ஸ்வரூபம் என்று புரியவைப்பார் குரு. சாட்சி என்று சொல்லும்போது முன்பு வந்த
சந்தேகம் நீங்கிவிடும். ஏனென்றால் சாட்சி எந்த செயலும் செய்யாது. ஆதலால் சாட்சி
என்ற சொல் மாற்றமடையாத பார்ப்பவன் என்று சுட்டிக்காட்டுமே தவிர அனுபவிப்பவன் என்ற
பொருளை நீக்கிவிடும். எனவே சுத்த சைதன்ய தத்துவத்தின் பார்வையில் அனைத்தும்
அறியப்படும் ஆனால் அது அறிபவன் அல்ல என்று இப்போது நன்கு புரியும். ஆதலால் அறிதல்
என்ற செயல் ஆத்மாவின் ஒரு பகுதியாக இருந்தாலும் அதன் இருப்பில் அனைத்தும்
அறியப்படுகிறது. சங்கராச்சாரியார் மிக அருமையாக நெருப்பு என்ற உதாரணம் மூலம் இதை
புரிய வைக்கிறார். நாம் நெருப்பு காகிதத்தை எரிக்கிறது என்று சொல்லும்போது எரித்தல்
என்ற வினையை பயன்படுத்துகிறோம். நெருப்பு அந்த செயலை செய்வது போல இருந்தாலும்
உண்மையில் அது அந்த செயலை செய்வதில்லை. எந்த ஒரு செயலுக்கும் தொடக்கமும் முடிவும்
இருக்கும் ஆனால் எரித்தல் என்பது நெருப்பின் சுபாவமாக இருப்பதால் அதன் இருப்பினால்
பேப்பர் எரிக்கப்படுகிறது. இந்த உதாரணத்தில் பேப்பரின் கோணத்திலிருந்து பார்க்கும்போது நெருப்பு எரிப்பவனாக
இருந்தாலும் அந்த செயல் நடக்கவில்லை. அதேபோல சுத்த சைதன்யம் அனுபவிப்பனாக
இருந்தாலும் அனுபவித்தல் என்ற செயல் நடைபெறவில்லை என்று புரிந்து கொள்ளலாம்.
சைதன்யம் எதையும்
அனுபவிக்கவில்லை. ஆனால் அதன்
இருப்பில் மனமானது அறியப்படுகிறது. எண்ணங்கள், உலகம் இவையாவும்
அறியப்படுகிறது. அதனால் இதை சாட்சி என்ற மற்றொரு பெயரால் அழைக்கப்படுகிறது. முன்பு
ஆத்மா பார்ப்பவனாகவும், அனாத்மா பார்க்கப்படும் பொருளாகவும் குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில் ஆத்மா
சாட்சி என்றும், அனாத்மாவை சாட்சியம்
என்றும் அழைக்கப்படுகிறது. த்ருக்-த்ருஷ்ய-விவேகம்
என்பது சாட்சி-சாட்சிய-விவேகம் என்று இப்போது அழைக்கப்படுகிறது.
நான் யார் என்று கேள்விக்கு
அறிபவன் அல்லது அனுபவிப்பவன் அல்ல என்றும், என்னுடைய இருப்பில் அனைத்தும் அறியப்படுகிறது என்று புரிந்து கொள்ளப்படும்.
இதுவரை அகங்காரம் போன்றவைகள் அனாத்மாவின் குணங்கள் என்றும் அகங்காரம் ஆத்மாவின் குணமல்ல என்று கற்பிக்கப்பட்டது.
இந்த அகங்காரமானது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்ற உருவில் வெளிப்படுகிறது.
அன்வயம் என்பது தொடர்ச்சி, வியதிரேகம் என்பது
தொடர்ச்சி இல்லாதது. தொடர்ச்சி என்பது பார்ப்பவனையும், தொடர்ச்சி நிறுத்தப்படுவது
பார்க்கப்படும் பொருளையும் குறிக்கிறது. இந்த நான் என்ற சொல் அனுபவிப்பவனாக
இருக்கும் போது அன்வயம் என்றும், அனுபவிக்கப்படும் பொருளாக இருக்கும்போது வியதிரேகம் என்றும் குறிக்கிறது. இந்த முறையை பயன்படுத்தி அகங்காரத்தை தனியாக பிரித்தெடுக்க
வேண்டும்.
நான் என்ற சொல் சுத்த சைதன்யத்தை குறிக்கிறது. எப்படி சூடான இரும்புகுண்டில் சூடானது இருக்கிறதோ அது போலவே இந்த உடலுக்குள் சைதன்யம் இருக்கிறது. நான் என்று சொல்லும்போது இரும்பை நீக்கிவிட்டு சூடுதன்மையை கூறுவது போல உடல்-மனத்தொகுப்பை விட்டுவிட்டு சைதன்யத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் எந்தவிதமான கஷ்டமோ அல்லது தர்க்கரீதியான தவறோ கிடையாது.
- ஆனந்தமானது மனதினுடைய
ஒரு பகுதியோ, தன்மையோ அல்லது
அதனிடமிருந்து வெளிப்படுகின்ற பொருளோ அல்ல.
- ஆனந்தம் என்பது
எதையும் சார்ந்திராதது. மோத, பிரமோத விருத்திகளில் ஊடுருவி இருக்கிறது. அதனிடமிருந்து வெளிப்படுகிறது.
- ஆனந்தம் மனதின்
வரம்பிற்குட்படாதது
- மனம் அழிந்தாலும்
ஆனந்தம் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும்
- மனம் இல்லாத போது இதை அனுபவிக்கமுடியாது, அடையாளம் காண முடியாது.
ஆத்மாவை அனுபவிப்பனாக
எடுத்துக் கொள்ளும்போது அனுபவித்தல் என்ற சொல் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால்
இது வரம்பிற்குட்படாத, எங்கும் வியாபித்துள்ள தத்துவமாக இருக்கிறது எனவே இது அனுபவிப்பவனாக
இருக்கமுடியாது. ஆனால் புத்தியினால் வரையறுக்கப்பட்டுள்ள ஆத்மாவை அனுபவிப்பவனாக
கூறலாம்.
ஆதலால் ஆசாரியார்
கூறுகிறார், புத்தியினால்
வரையறுக்கப்பட்டுள்ள ஆத்மாவை அனுபவிப்பவன் என்று சொல்லலாம். இதில் மனமானது
செயல்படுகின்ற கருவியாக இருக்கிறது. அறியாமையில் இருக்கின்ற மனம் கருவியாக
இருக்கிறது. அறியாமை என்பது மாயையின் தாமஸ குணத்தைச் சார்ந்தது. ஆத்மஞானம் அடைந்த
பின்னர் இந்த மனம் நீக்கப்படுவதால் அனுபவிப்பவனும் சென்று விடுகின்றது. இறுதியாக
ஆத்மாவினிடத்தில் எந்த
குணமும் கிடையாது என்று அறிந்து கொள்வோம். புத்தியால் மூடப்பட்டுள்ள ஆத்மாவைப்
பற்றி ஏன் விவரிக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
இந்த சுத்த சைதன்யத்தை, எங்கும்
வியாபித்துள்ள ஆத்மாவை வாக்கால் கற்பிக்க முடியாது. ஆகாசத்தை எப்படி வார்த்தையால்
விவரிக்க
முடியாதோ அதுபோல ஆத்மாவையும் வார்த்தையால் விளக்கமுடியாது. ஆதலால் ஆகாசத்தை
வரையறுத்துள்ள வீடு, அறை போன்றவற்றின் துணைக் கொண்டுதான் ஆகாசத்தை விளக்க முடியும். அதுபோல
பார்ப்பவன் என்பவன் மூடப்பட்டுள்ள ஆத்மா என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
எனவே ஆத்மாவை கற்பிக்கவும்
முடியாது, பார்க்கவும்
முடியாது. அதனால் புத்தியினுள்ளே மூடப்பட்ட
ஆத்மாவை அனுபவிப்பவனாக கற்பிக்கப்படுகிறது. இந்த கற்பிக்கும் முறையில் ஒரு
பிரச்சனை இருக்கிறது. ஆத்மாவை பார்ப்பவன் என்று சொல்லும்போது அது பார்த்தல் என்ற
செயல் செய்வதாக தோன்றுகிறது. எனவே வேறுமுறையை பின்பற்ற விரும்புகிறார். எனவே
சாட்சி என்ற நிலையை கொடுக்கிறார். ஆனால் இதிலும் மற்றொரு பிரச்சனை இருக்கிறது.
சாட்சி என்று சொல்லும் போது அது எந்த செயலும் செய்யாததால்
மாற்றத்திற்குள்ளாகாமல் இருக்கிறது. ஆனால் மாற்றமடையாத சாட்சி சாட்சியத்துடன்
சம்பந்தப்படுத்தப்படுகிறது. எனவே சாட்சியானது ஆத்மாவாக
இருக்கமுடியாது. மேலும் சாட்சியும் வரம்பிற்குட்பட்டதாக இருக்கிறது. அதனால்
த்வைதம் வந்துவிடுகிறது. ஆதலால் சாட்சி என்ற சொல்லையும் நீக்கவேண்டும். இந்த
முறையில் அத்வைதமகரந்தா என்ற நூலில் ஆத்மாவானது புரிய வைக்கப்படுகிறது.
இந்தப் பகுதியில் ஆசாரியார்
ஆத்மா பார்ப்பவன் என்ற நிலையை விட்டுவிட்டு சாட்சி என்ற நிலையை வைத்துக்
கொள்கிறார். ஆத்மா மாற்றத்தை அடையாததது என்ற தன்மை வலியுயுறுத்துவதற்காக இந்த
நிலைப்பாட்டை எடுக்கிறார். மேலும் சாட்சி என்ற நிலையும் பொய்யானது, தற்காலிகமானது.
சாட்சி பாவத்தை தற்காலிகமாக ஆத்மாவின் மீது ஏற்றி வைக்கிறார்.
கேள்வி: அஹம் என்ற சொல் அனாத்மாவை குறித்தால் எப்படி
மகாவாக்கியமான அஹம் பிரம்மாஸ்மி என்பதை நிரூபிக்க முடியும். எவ்வாறு ஜடமான, மித்யாவான அனாத்மாவை
ஆத்மாவோடு சமப்படுத்த முடியும்?
பதில்: நான் என்ற சொல் பொதுவாக அகங்காரத்தை
குறித்தாலும் பேசுகின்ற இடத்தைப் பொறுத்து சைதன்யத்தையும் குறிப்பதாக அறிகிறோம்.
வரையறுக்கப்படாத ஆத்மாவை நான் என்று லட்சணையின் மூலமாகவோ, உட்குறிப்பின்
மூலமாகவோ குறிப்பிடுகிறோம். உதாரணமாக நான் நன்கு உறங்கினேன் என்ற வாக்கியத்தில்
நான் என்பது சைதன்யத்தை குறிக்கிறது.
ஆசாரியார் தனது வாதத்தை
வேறு இரண்டு முறைகளாலும் உறுதி செய்கிறார். அவைகள் குண விருத்தி முறை, முக்கிய விருத்தி
முறை என்பதாகும். இதில் முக்கிய விருத்தி என்பது நேரிடையான முறையாகும். இந்த முறையை பயன்படுத்துவதற்கு நான் என்ற
சொல் பொதுவாக அகங்காரத்தை குறித்தாலும், அகங்காரத்தோடு கூடிய ஆத்மாவையும் குறிக்கிறது.
ஆதலால் அகங்காரத்தை உள்ளும், புறமும் வியாபித்திருக்கின்ற ஆத்மாவையும் அஹம் என்ற சொல்லுக்கு பொருளாக
எடுத்துக் கொள்ளலாம்.
கேள்வி: அஹம் பிரம்மாஸ்மி என்ற மகாவாக்கியத்தில் உள்ள
அஹம் என்ற சொல் அகங்காரத்தை குறிக்கவில்லை, பிரம்மத்தைத்தான் குறிக்கிறது என்று கூறுகிறீர்கள். மறைமுகமாக நான் என்ற சொல்
மூலமாக சுட்டிக் காட்டப்படுகின்ற பிரம்மம் என்பது என்ன என்று விளக்குங்கள் என்று
பூர்வபட்சி கேட்கிறான்.
பதில்: பிரம்மம் என்பது அறிவு தத்துவம். அது உடலின் ஒரு
பகுதியோ அல்லது அதிலிருந்து வெளிவந்த ஒரு பொருளோ கிடையாது. இது உடலால்
வரையறுக்கப்படாதது. மேலும் இது தேச, காலத்தினாலும் வரையறுக்கப்படாதது. உடல் அழிந்தாலும் அது தொடர்ந்த இருந்து
கொண்டிருக்கும். அதனால் இதை பிரம்மம் என்று கூறப்படுகிறது. இதைத்தான்
மகாவாக்கியாமான அஹம் பிரம்மாஸ்மி என்ற வாக்கியத்தில் உள்ள அஹம் என்ற சொல்லால்
குறிப்பிடப்படுகிறது. ஐந்துவகையான தத்துவங்கள் ஆத்மாவிற்கும், ஸத்திற்கும், ஆனந்தத்திற்கும், அறிவுமயத்திற்கும்(சித்)
பொருந்துகிறது.
பிரம்மம் ஆனந்தம் என்று
குறிப்பிடும்போது அது கீழ்கண்ட ஐந்து வகையான தத்துவங்களுக்கு பொருத்தப்படுகிறது.
பிரம்மம் என்பது சுத்த
சைதன்யம் அல்லது ஆனந்தம் என்றும் கூறப்படுகிறது.. படைப்பில் உருவாக்கப்பட்டுள்ள
எதனிடத்திலும் ஆனந்தம் கிடையாது. ஏனென்றால் அவைகள் உணர்வற்றதாக இருக்கின்றது.
அதனால் அவைகளால் சுகத்தை தரமுடியாது. ஆனந்தம் என்ற வஸ்து பிரபஞ்சத்தையும், தேசத்தையும், காலத்தையும்
கடந்திருக்கிறது. அதுவே மனதில் பிரதிபலிக்கும் போது மனதில் அந்த உணர்ச்சியை
அனுபவிக்கின்றோம். மனதில் எழுகின்ற ஆனந்தம் பிரம்மானந்தத்தின்
பிரதிபிம்பானந்தமாகும். பிம்பானந்தத்தை பூமா என்று அழைக்கப்படுகிறது அதை எப்போதும்
அனுபவிக்க முடியாது. ஏனென்றால் அதுவாகவே நான் இருக்கும்போது எப்படி அனுபவிக்க
முடியும்.
கேள்வி: அனுபவிக்க முடியாத அந்த பிம்பானந்தம் எங்கே
இருக்கிறது?
பதில்: நீதான் அந்த வரையற்ற பூரண ஆனந்தம். முகம் பார்க்கும்
கண்ணாடியில் நம் முகத்தின் பிரதிபிம்பத்தைப் பார்க்கலாம், ஆனால் பிம்பமான நம்
முகத்தை பார்க்கமுடியாது. அதேபோல மனதில் பிரதிபலிக்கின்ற ஆனந்தத்தை அனுபவிக்கலாம்
ஆனால் பிம்பானந்தத்தை அனுபவிக்கமுடியாது. பூரண ஆனந்தம் பல பகுதிகளாக பிரிக்க
முடியாது. என்னுடைய ஆனந்தம், உன்னுடைய ஆனந்தம் என்று பிரிவுகள் இல்லாதது. அந்த ஆனந்தத்தை எப்படி அனுபவிக்க
முடியும் என்ற கேள்வியே தவறாகும். ஆனந்தத்தை அனுபவிக்கும் நேரத்தில் அது பூரணானந்தம் அல்ல என்று உணர்ந்து கொள்ள
வேண்டும். ஏனென்றால் அந்த ஆனந்தம் ஏதாவது ஒரு பொருளை அனுபவிக்கும் போதோ, படைப்பினுடைய ஒரு
தன்மை என்றாகிவிடும். உண்மையில் பிரம்மானந்தம் அனுபவத்திற்கும், விவகாரத்திற்கும்
அப்பாற்பட்டது.
எனவே யாராவது நான் மகிழ்ச்சியற்று
இருக்கிறேன் என்று சொல்லும்போது இந்த மகிழ்ச்சியற்ற தன்மை வெளிப்படாத ஆனந்தத்தை
குறிக்கிறது. நான் ஆனந்தமாக இருப்பதற்கேற்றவாறு மனமானது பிரம்மானந்தத்தை
வெளிப்படுத்துகின்ற வகையில் கருவியாக இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.
சஞ்சலமான மனதில், குழப்பமான மனதில்
பிரம்மானந்தம் வெளிப்படுவதில்லை. மனம் எவ்வாறு இருந்தாலும் நான் என்றென்றும் ஆனந்த ஸ்வரூபம் என்று புரிந்து
கொள்ள வேண்டும்.
ஆனந்தம்தான் ஆத்மா
என்பதற்கு என்ன சான்று?
பூரண
ஆனந்தமானது சுத்த சைதன்யமாக தானே பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் ஸத்துதான்
சித்தாகும், சித்துதான் ஆனந்தமாகும். எனவே ஆனந்தத்தை தனியாக நிரூபிக்க அவசியமில்லை.
எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சைதன்யம்தான் ஆனந்தமிருப்பதற்கான
அத்தாட்சியாக இருக்கிறது. கடோபநிஷத்தில் நசிகேதன் எமதர்மராஜவிடம் பிரம்மானந்தத்தை
எப்படி நான் அடையாளம் தெரிந்து கொள்வது, அது எப்படி அனுபவிக்கப்படுகிறது என்று கேட்கிறான். எமதர்மராஜாவின் பதிலானது, ஆனந்தத்தை அனுபவிக்க
முடியாது என்பதாகும். ஏனென்றால் அனுபவிப்பவனே ஆனந்த
ஸ்வரூபமாக இருக்கிறான். எனவே ஆனந்தம் எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
இந்த பிரம்மானந்தமே மகாவாக்கியத்தின் மூலமாக வெளிப்படுத்தப்-படுகிறது. அஹம்
பிரம்மாஸ்மி என்ற மகாவாக்கியத்தில் உள்ள அஹம் அகங்காரத்தை குறிக்கவில்லை, ஆத்மாவை குறிக்கிறது.
ஆத்மா எங்கும் வியாபித்திருப்பது, எப்போதும் இருப்பது, செயலெதுவும் செய்யாமல் இருப்பதாகும். ஆத்மாவை நேரிடையாக கற்பிக்கவும் முடியாமல் இருக்கின்றது. எனவே
மனதிற்குள் பிரதிபலிக்கின்ற ஆத்மாவைப் பற்றி முதலில் சொல்லப்படுகிறது. இதை புரிந்து
கொண்ட பிறகுதான் சீடன் ஆத்மாவை புரிந்து
கொள்ள முடியும். மனதில் பிரதிபலிக்கின்ற ஆத்மாதான்
அனுபவிப்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறது.
- ஆனந்தம் மனதின் காரியமோ, ஒரு பகுதியோ அல்லது
அதிலிருந்து உருவாக்கப்பட்டதோ கிடையாது.
- ஆனந்தம் தனித்துவமான
வஸ்துவாகும். இது மோத எண்ணங்களையும், பிரமோதம் என்ற எண்ணங்களையும் வியாபித்து இருக்கிறது, அவைகளில்
வெளிப்படுகிறது.
- ஆனந்தம் மனதால்
வரையறுக்கப்படாதது
- ஆனந்தம் மனம்
அழிந்தாலும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும்
- ஆனந்தம் மனதின் இல்லாமையில் அனுபவிக்க முடியாதது.
குரு சீடனிடம் நீதான் ஆத்மா, அதுவே பார்ப்பவனாக
இருக்கிறது. மற்ற அனைத்தும் அனாத்மா (பார்க்கப்படும் பொருள்) என்று
உபதேசிக்கிறார். இவ்வாறு முதல் நிலையில் ஆத்ம-அனாத்ம-விவேகம் என்பது அனுபவிப்பவன்-
அனுபவிக்கின்ற பொருள் என்றமுறையில் போதிக்கப்படுகிறது. இந்த ஜகத், உடல், மனம் மற்றும்
எண்ணங்கள் யாவும் அனாத்மா. ஆனால் நீயோ பார்ப்பவன் என்று உபதேசிக்கிறார். இதுதான்
முதல் நிலை உபதேசம். இதையே த்ருக்-த்ருஷ்ய-விவேகம் என்று அழைக்கப்படுகிறது.
நான் ஆகாசத்தைப்போன்ற
சைதன்யம் என்பதுதான் உண்மை. ஆகாசம் எங்கும் வியாபித்திருப்பதைப் போல நானும்
எங்கும் வியாபித்திருக்கிறேன். இயல்பாகவே
அறிவு ஸ்வரூபமாக இருக்கிறேன். எல்லா படைப்புக்களும் என்னிடத்திலேதான்
இருக்கின்றன. மனமும் என்னால் தோற்றுவிக்கப்பட்டது. இது மிகவும் சூட்சுமமானது.
சைதன்யத்தின் உதவியால் மனம் எண்ணங்களை தோற்றுவிக்கின்ற சக்தியை உடையதாக
இருக்கிறது. மின்சாரகருவிகளுக்கு செயல்படும் திறனை கொடுக்கின்ற மின்சாரத்தைப் போல
இது இருக்கின்றது. ஆத்மாவின் இருப்பால் மனதிற்கு உணர்வுமயமாக செயல்படும் சக்தியும், ஆசை, கோபம், பற்று, பொறாமை போன்ற உணர்ச்சிகளை
தோற்றுவிக்கின்ற சக்தியையும் பெற்றிருக்கிறது. மனம் இருப்பதை இந்த அனுபவங்களால்
உணரப்படுகிறது. இதனால் ஆத்மா தற்காலிகமாக அனுபவிப்பவன் என்ற நிலையை அடைகிறது.
ஆனால் ஆத்மா செயலெதுவும் செய்வதில்லை. ஏனென்றால் ஆத்மாவின் உதவியால் மனம்தான்
அனுபவிக்கிறது, எண்ணங்களை
தோற்றுவிக்கிறது.
ஆத்மாவின் இருப்பினால் மனம்
அனுபவமும், உணர்வும் அடைந்த
பிறகு ஐந்து புலன்கள் உதவியோடு உலகத்தை அனுபவிப்பவன் என்ற தகுதியை அடைகிறது.
ஆத்மாவின் இருப்பினால் மனம் இரண்டாம்நிலை அனுபவிப்பவன் என்ற தகுதியை அடைகிறது.
இந்த நிலையையே அகங்காரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டாம்நிலை அனுபவிப்பவனாக
இருந்துகொண்டு மனம் எவ்வாறு செயல்படுகிறது என்று பார்க்கும்போது மனதிலுள்ள எண்ணங்கள் மாற்றமடைவதன் மூலமாக சத்தத்தை உணர்வதற்கு சப்த
விருத்தியெழுகிறது. ஒரு பொருளின் உருவத்தை அனுபவிப்பதற்கு உருவ எண்ணங்கள் உருவாகிறது.
இவ்வாறு மனதில் மாற்றங்களெழுந்து அனுபவங்கள் உண்டாகிறது. மனமானது ஆத்மாவுக்கு மிக
அருகில் இருப்பதால்தான் நான் என்று சொல்லும்போது மனதையும் சேர்த்துக் கொள்கிறோம்.
நான் என்ற சொல் மாற்றமடையாத சாட்சி ஸ்வரூபமான ஆத்மாவுடன் அகங்காரத்தையும் சேர்த்து
குறிக்கிறோம்.
நான் என்று சொல்
அகங்காரத்தையும், ஆத்மாவையும் சேர்த்து
குறித்தாலும் முதன்மை அனுபவிப்பவன் பார்க்கப்படுவதில்லை அல்லது இருப்பதாக
எடுத்துக் கொள்கிறோம். உதாரணமாக ஒரு பொருளைப் பார்க்கும்போது அதற்கு இடம்
கொடுத்துள்ள ஆகாசத்தை நாம் பார்ப்பதில்லை. மாற்றமடையாத ஆகாசமும், மாற்றத்திற்குள்ள
பொருளும் ஒன்றாக சேர்ந்துதான் இருக்கிறது. ஆனால் பார்ப்பவன் ஆகாசத்தை
பார்ப்பதில்லை. அதுபோல நான் என்ற சொல் பயன்படுத்தும்போது ஆத்மாவை குறிக்கவில்லை, அகங்காரத்தைத்தான்
குறிக்கிறோம்
இரண்டாம் நிலை நான் என்ற
சொல் குறிக்கின்ற மனமானது முதல் நிலை நான் என்ற சொல் குறிக்கின்ற ஆத்மாவுக்கு
போக்தா என்ற நிலை ஏற்படுகிறது. இரயிலில் செல்லும்போது சாலையோர மரங்கள் பின்னோக்கி
செல்வதுபோல தவறாக நினைக்கவைக்கிறது மனம். அதேபோன்று இரயில் சேரும் இடத்தை அடைந்த
போது, சேருமிடம்
வந்துவிட்டது என்று தவறாக கூறுகிறோம். உண்மையில் ரயில்தான் சேருமிடத்தை
வந்துவிட்டது. அதேபோல ஆத்மாவிடத்தில் துயரம், கோபம் போன்ற எந்த உணர்ச்சிகளும் இல்லை. ஆகையால் அவைகளை போக்கிக் கொள்வதற்கு
எந்த முயற்சியும் நான் எடுக்கத் தேவையில்லை. உண்மையில் அவைகள் மனதில்தான்
உருவெடுக்கிறது. நான் எப்போதும் அடைந்திருக்கின்ற மோட்ச ஸ்வரூபமாக இருக்கிறேன்.
அகங்காரம் என்பது
மாற்றமடையக்கூடிய இரண்டாம் நிலை உலகத்தை அனுபவிப்பனாக இருக்கின்றது. நாம் நான் என்ற சொல்லை
அகங்காரத்தையும், ஆத்மாவையும் கலந்தே
பயன்படுத்துகிறோம். இதனால் அகங்காரத்தின் மாற்றத்தை ஆத்மாவில் ஏற்றி வைக்கும்
மிகப்பெரிய தவறை செய்கிறோம். நான் வருத்தத்துடன்
இருக்கிறேன், மனசஞ்சலத்துடன்
இருக்கிறேன், மகிழ்ச்சியாக
இருக்கிறேன், அமைதியாக இருக்கிறேன்
என்று கூறும்போது இந்த குணங்கள் ஆத்மாவை குறிக்கவில்லை. ஏனென்றால் ஆத்மா எந்த
குணங்களுமற்றது, இரண்டற்றது, சாந்த ஸ்வரூபமானது
என்றும் இருக்கும் தன்மைகள் கொண்டவை. இவைகள் வந்து-போகின்ற தன்மையுடையதால் இவைகள்
அகங்காரத்தைச் சார்ந்தவை. அதனால் இரண்டாம்நிலை நான் என்ற சொல் குறிக்கின்ற மனம்
வேண்டுமானால் அமைதிக்கு தியானம் செய்யலாம். தியானம் செய்வதால் அந்த நிலையில்
மட்டும்தான் மனம் அமைதியாக இருக்கும். தியானத்தை விட்டு வெளியே வந்தவுடன் மீண்டும்
பழைய வாசனைகளால் சஞ்சலத்துடனே இருக்கும். இவ்வாற அடைகின்ற அமைதியையே பாரமார்த்திக அமைதியாக
எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆத்மஞானத்தின் அடைகின்ற அமைதியே நிரந்தரமான
அமைதியாகும்.
படகில் சென்று
கொண்டிருக்கும் போது ஆற்றோரம் உள்ள மரங்கள் பின்னோக்கி செல்வது போல தோன்றுவதற்கு
காரணம் படகின் ஓட்டம் மரங்களில் ஏற்றி வைக்கப்படுவதனாலாகும். அதேபோல ராக, துவேஷம், காமம், க்ரோதம் போன்ற
உணர்ச்சிகள் அகங்காரத்தை சேர்ந்தவைகள். இவைகள் நிலையற்றவை. ஆனால் இவைகள் தவறாக
ஆத்மாவின் மேல் ஏற்றி வைக்கப்படுகிறது..ஆத்மா இவைகள் எதுவும் இல்லாததாக இருக்கிறது. இன்னொரு உதாரணம்
ஒளிரும் இரத்தினம் தானாக எதுவும் செய்வதில்லை அதன் இயல்பான ஒளிரும் தன்மையை வைத்தே
அதை ஒளிர்கின்ற ரத்தினம் என்று அழைக்கிறோம். இருளிலிருந்த ஒரு பொருளை ரத்தினக்கல்
அருகே கொண்டு வரும்போது அதிலிருந்து வருகின்ற ஒளிரும் தன்மையானது அந்த பொருளை
காட்டிக் கொடுக்கின்றது. ஆனால் ரத்தினக்கல் ஒன்றும் செய்வது கிடையாது. அதனால்
ரத்தினக்கல்லை பிரகாசிக்கின்ற கல் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்பு எதையும்
பிரகாசிக்காத கல்லாக இருக்கிறது என்று கூறுவோம். எந்தவிதமான மாற்றமும் அடையாமலே
அந்தக்கல்லானது அதன் நிலையிலிருந்து மாறுபடுகிறது.
நான் மனதை அனுபவிக்கிறேன்
என்று சொல்லும்போது உண்மையில் ஆத்மா அனுபவிக்கவில்லை. ஆத்மா மனதில் சிதாபாஸனாக
பிரதிபலிக்கும்போது மனமே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இந்த நிலையில்தான்
ஆத்மா அனுபவிப்பவன் என்று சொல்லப்படுகிறது. மனம் அனுபவிக்கப்படும் பொருள் என்ற
தகுதியை அடைகிறது, உலகத்தை
அனுபவிப்பவனாக இருக்கும் தகுதியை அடைகிறது. இவ்வாறு ஆத்மாவின் இருப்பில் மனம்
அனுபவிப்பவனாகவும், அனுபவிக்கப்படும்
பொருளாகவும் இருக்கிறது. மனதின் இந்த நிலையையே அகங்காரம் என்று அழைக்கப்படுகிறது.
சாட்சியான ஆத்மாவின் இருப்பால் மனம் உணர்வுடன் இருக்கிறது. இந்த மனதையே அகங்காரம் என்று அழைக்கப்படுகிறது. ஆத்மா அந்த மனதில் பிரதிபலிக்கின்றது. அந்த பிரதிபிம்ப ஆத்மாவைத்தான் சிதாபாஸம் என்றழைக்கப்படுகிறது. சிதாபாஸத்துடன் கூடிய மனதையே பிரமாதா, அகங்காரம் என்று அழைக்கப்படுகிறது.
- ஆகாசத்தைப் போல
சைதன்யமும் அசங்க ஸ்வரூபம், எதனோடும் உறவற்றது.
மேசை மேல் உள்ள புத்தகத்தை எடுத்து வேறிடத்தில் வைத்தால் அதனோடு சேர்ந்து ஆகாசமும்
வேறிடத்தில் சென்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கிறதில்லை. அதனால் புத்தகத்திலிருக்கும் ஆகாசமும் அது பிடித்திருக்கும் ஆகாசமும் ஒன்றுக்கொன்று
சம்பந்தமற்றவைகள். இதேபோல இந்த உலகம் சைதன்யத்தில் இருக்கிறது
- ஆத்மா காரணம்; ஜகத் காரியம். காரியத்தினால் காரணத்துடன் தொடர்பு கொள்ளமுடியாது ஏனெனில் காரியம் காரணத்திலிருந்து வேறுபடாதது.. உதாரணமாக களிமண் பானையுடன் தொடர்பு கொள்ள முடியாது. ஏனென்றால் பானை என்ற ஒன்றேயில்லை. அதேபோல சைதன்யத்துடன் உலகம் தொடர்பு கொள்ள முடியாது ஏனென்றால் உலகம் என்பது சைதன்யத்திற்கு வேறாக கிடையாது. அதனால் சைதன்யத்திற்கு உலகத்தோடு தொடர்பு இருக்கலாம் என்ற பிரச்சனையே கிடையாது. சாதகன் கேட்காலம், ஆத்மா உலகத்தோடு கொள்ள முடியாமல் இருக்கலாம் ஆனால் மனது உலகத்தோடு தொடர்பு கொள்ள முடிகிறது. உலகம் என்று சொல்லும் போது மனமும் அதில் அடங்கிவிடுவதால் இந்த கேள்வி அர்த்தமற்றது. இந்த வெளியுலகம் புலன்கள் வழியே மனதுக்குள் பிரவேசிக்கிறது. அதேமாதிரி மனமும் உலகத்திலுள்ள பொருட்களை எண்ணங்களாக கொண்டிருக்கிறது. உதாரணமாக பானையை பார்க்கும் போது பானையின் எண்ணம் மனதில் பதிகிறது.
---0000---
No comments:
Post a Comment