நைஷ்கர்ம்ய சித்தி
அத்தியாயம்-3-பகுதி-1
Edited on 16-08-2024
முகவுரை
மூலாவித்யா அனைத்து அனாத்ம பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது. இது இல்லாமல் ஜட அனாத்மாவுக்கும், சேதன கூடஸ்த ஆத்மாவுக்கும் இடையே உறவு எதுவும் கூறமுடியாது. ஆத்ம உயர்நிலை சத்யத்வத்தையும், அனாத்மா கீழ்நிலை சத்யத்வத்தையும் உடையது. இரண்டு வெவ்வேறு சத்யத்வ நிலைகளையுடைய இவைகளிடையே எந்த உறவும் இருக்காது. மேலும் ஆத்மா எதனோடும் உறவில்லாதது, தனித்திருப்பது என்று உபநிஷத் தெளிவாக கூறியிருக்கிறது. எனவே இவையிரண்டிற்கும் எந்த உறவும் சாத்தியமில்லை. ஆனால் நாம் இவையிரண்டிற்குமிடையே உறவு இருப்பதை பார்க்கிறோம், அனுபவிக்கிறோம். எப்படி இந்த உறவு வெளிப்படுகிறது என்பதை பார்ப்போம்.
நான் ஆணாகவிருக்கிறேன் என்ற வாக்கியத்தில் உள்ள நான் ஆத்மாவைக் குறிக்கிறது. ஆனால் ஆண் என்ற சொல் உடம்பைக் குறிக்கிறது. ஆத்மாவுக்கு எந்த பாலினமும் கிடையாது. உடல் சம்பந்தமில்லாமல் இவ்வாறு ஒருவன் கூற முடியாது. தேகம் என்ற அனாத்மா நான் என்று ஆத்மாவுடன் சம்பந்தப்படுகிறது. இன்னொரு உதாரணம். நீண்டகாலமாக வேதாந்தத்தை நன்கு கற்ற மாணவனும் அறியாமையினால் தான் மோட்சம் அடைவதற்கு தன்னிடத்தில் உள்ள விபரீத பாவனைகளை நீக்கவேண்டும் என்று நினைப்பதின் மூலமாக நான் என்ற ஆத்மாவுக்கும், மனதில் உள்ள விபரீத பாவனைகள் குறிக்கின்ற அனாத்மாவுக்கும் சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறான்.
அறியாமைதான் தர்க்கரீதியாக சாத்தியமற்ற ஏதோவொன்றை அனுபவத்திற்கு இருக்கிறது என்று நினைக்க வைக்கிறது. எனக்கும் உடலுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென்றாலும் இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பதற்கு காரணம் மனம்தான். அக்ஞானியான சம்சாரி ஏராளமான மனதர்களிடமும், பொருட்களிடத்திலும் ஆழமான உறவை உருவாக்கியிருக்கிறான். மேலும் அந்த உறவிலிருந்து விடுபடுவதற்கும் சிக்கலிருக்கிறது. உடலுடனும், குடும்பத்துடனும் உள்ள சம்பந்தம் மிகவும் சக்தியுடையது. குரு மூலமாக தான் அசங்க ஆத்ம ஸ்வருபம், நித்ய முக்தன் என்ற உபதேசம் பெற்றிருந்தாலும் தன் குடும்பத்தில் பிரச்சனைகள் வரும்போது பெற்ற உபதேசத்தை மறந்து துயரப்படுகிறான்.
அறியாமை மூலம்தான் நியாயமற்ற சம்பந்தங்களைக் கொண்டுவர முடியும் என்று ஆசாரியார் கூறியிருந்தார். இப்போது அவரே ஒரு விதிவிலக்கை எடுத்துக் காட்டுகிறார். அறியாமையை தவிர இன்னொரு சூழ்நிலையிலும் நியாயமற்ற சம்பந்தத்தை கொண்டுவர முடியும் என்று கூறுகிறார். உதாரணமாக உபாஸனையின் போது உபாஸகள் ஒரு ஜடப்பொருளை ஆலம்பனமாக எடுத்துக் கொண்டு அதில் சேதனமான கடவுளை ஏற்றி வைக்கிறான். லிங்கத்தின் மீது சிவபெருமானை ஏற்றிவைப்பது போன்றதாகும். ஜடமான ஒன்றின்மீது உணர்வுடைய ஒன்றை ஏற்றி வைக்க சாத்தியமில்லை. இதைத் தெரிந்தே உபாஸகன் பூஜையின் போது சாத்தியமற்ற சம்பந்தத்தை வேண்டுமென்றே ஜடமான லிங்கத்தில் சேதனமான சிவபெருமானை ஏற்றி வைத்து பூஜை செய்கிறான். இந்த விஷயத்தில் அறியாமை காரணமல்ல. சாஸ்திர விதியை பின்பற்றி இவ்வாறு செய்கிறான்.
இவ்வாறு சாத்தியமற்ற சம்பந்தம் இரண்டு காரணங்களால் ஏற்படுத்தப்படுகிறது. ஒன்று அறியாமை, மற்றொன்று சாஸ்திர விதி. அறியாமையினால் ஏற்படுத்தப்படும் இந்த சம்பந்தத்தை அத்யாஸம் என்று அழைக்கப்படுகிறது. இன்னொன்று விதி-ஜனித சம்பந்தம் உபாசனையின் போது ஏற்படுத்தப்படுகிறது.
ஆத்ம-அனாத்ம சம்பந்தத்திற்கு காரணம் மூலாவித்யாவாகும். மூலாவித்யா இருக்கும் வரையில் ஆத்ம-அனாத்ம சம்பந்தம் தொடர்ந்து கொண்டிருக்கும். இந்த சம்பந்தத்தினால் ஜீவனாகவே இருக்கமுடியும். ஜீவனாக இருப்பதால் இந்த உலகம் சத்யமாகவே காணப்படும். உலகம் சத்யமாக இருப்பதால் சம்சாரத்திலிருந்து விடுபட முடியாது.
ஜீவனாக இருக்கும்வரையில் இந்த உலகம் சத்யமாக தெரிந்து கொண்டிருக்கும். ஆதலால் ஜீவத்வம் சென்றுவிடவேண்டும், ஜீவ-ஈஸ்வர-ஜகத் என்று மூன்று வடிவமைப்பை நீக்கிவிட வேண்டும். சாதகன் ஆத்மத்வத்திற்கு வந்துவிட வேண்டும். மனதளவில் குடும்பத்திலிருந்தும், தன்னுடலில் இருந்தும், மனதில் இருந்தும், மனதில் உள்ள குழப்பங்களிலிருந்தும் நீங்கியிருத்தல் என்பது சாத்தியமாகும். அக்ஞானம் நீங்கினால்தான் இந்த நிலையை அடைய முடியும். அக்ஞானம் நீங்குவதற்கு சக்தி வாய்ந்த ஆவரண சக்தியை நீக்க வேண்டும். வேதாந்தத்தை முறைப்படி உபதேசமாக பெற்று, நன்கு புரிந்து கொண்டால்தான் இந்த சக்தியை அழிக்கமுடியும். விக்ஷேப சக்திமட்டும் உள்ள அக்ஞானம் ஒரு வரப்பிரசாதமாகும். ஏனென்றால் சாதகன் இந்த பிரபஞ்சத்தை விக்ஷேப சக்தியின் காரியமாகத்தான் பார்ப்பான். ஆதலால் மித்யாவான பிரபஞ்சம் நீங்காமல் தொடர்ந்து தோன்றிக் கொண்டிருக்கும் என்ற அறிவுடன் இருப்பான்.
நான் அறியாமையுடன் இருக்கிறேன் என்று சொல்வதற்கு மனம் இருக்க வேண்டும். ஆனால் அறியாமையின் இருப்பிடம் மனமல்ல. ஒரு உதாரணத்துடன் இதை புரிந்து கொள்ளலாம். பானையில் நீர் இருக்கிறது என்ற வாக்கியத்தில் பானை நீரை தாங்கியிருக்கவில்லை. அந்த நீர் இருக்க போதிய இடம் இருப்பதற்கு காரணமாகவுள்ள பானைக்குள் இருக்கும் ஆசாகம்தான் நீரைத் தாங்கியிருக்கிறது. அதேபோல மனம் அறியாமையை காட்டிக் கொடுக்கவில்லை. ஆத்மாதான் மனதுக்குள் உள்ள அறியாமையை காட்டிக் கொடுக்கிறது. மனதால் சூழப்பட்டுள்ள சித்தானது உண்மையில் இந்த அறியாமையை காட்டிக் கொடுக்கிறது.. இந்த சித் உபாஹித சைதன்யம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சித்துதான் சாட்சி சைதன்யம் என்கின்ற அசலான அறிவு ஸ்வரூபம்.
ஆசாரியார் மூலாவித்யாவானது நான் என்ற உணர்வுள்ள இடத்தில் அமைந்துள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார், சாந்தோக்ய உபநிஷத்தில் நாரதர் பூமாவித்யா என்ற அத்தியாயத்தில் கூறியுள்ள, ”பகவானே நான் ஆத்மாவை அறிந்தவன் அல்ல” என்ற வாக்கியமும் இந்த கருத்தை ஆதரிக்கிறது. ஆதலால் ஆத்மாவில் அறியாமை இருப்பதால் ஆத்மாவும் பார்ப்பதற்கு சம்சாரியாக தோன்றும். அதேசமயம் ஆத்மா சுதந்திரமானது என்ற அறிவும், அறியாமை ஆத்மாவை இருப்பிடமாக கொண்டுள்ளது என்ற அறிவும் நமக்குள் ஏற்படுகிறது. இவ்வாறு பாரமார்த்திக சத்ய ஆத்மா வியவஹாரிக சத்யமான அறியாமையோடு இணைந்திருப்பது போல தோன்றுகிறது. மேலும் நான் என்கின்ற பாரமார்த்திக சத்யமான ஆத்மா வியவஹாரிக சத்யமாக இருக்கின்ற ஆத்மஞானத்தால் உணரப்படுகிறது. இதுதான் வேதாந்தத்தின் சாரம்.
பூர்வபக்ஷி கேள்வி1:
ஆத்மா அத்வைதம் என்று சொல்கிறீர்கள். ஆத்மாவைத் தவிர வேறெதுவும் இல்லை என்றும், அது ஒன்றுதான் இருக்கிறது என்றும் சொல்கிறீர்கள். பிறகு அறியாமை என்ற ஒன்றிருக்கிறது அதுதான் உலகத்தை வெளிப்படுத்துகிறது என்றும் ;சொல்கிறீர்கள். இதனால் இரண்டு வஸ்துக்கள் இருப்பதை நீங்களே ஏற்றுக்கொள்கிறீர்கள். பிறகு எப்படி ஆத்மா அத்வைதமாக இருக்கிறது என்று கூறுகிறீர்கள்?
பூர்வபக்ஷி கேள்வி2:
ஆத்மா உணர்வுடையது, அறிவை அடைவதற்கு ஆதாரமாக இருக்கிறது என்று நீங்களே சொல்கிறீர்கள். ஆத்மா அறிவை கொடுக்குமென்றால் அதில் அறியாமை எப்படி இருக்க முடியும்? அறியாமைக்கு இருப்பிடமாக எப்படி இருக்க முடியும்? ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு விஷயங்கள் எப்படி ஒன்றாக இணைந்திருக்க முடியும்?
ஆசாரியார் பதில்:
இருளும், ஒளியும் அவற்றின் எதிர் இயல்புகளால் இணைந்திருக்க முடியாது. ஆனால் இரண்டு விஷயங்கள் வெவ்வேறு சத்யத்வ நிலைகளோடு இருந்தால் இது சாத்தியாமாகும். உதாரணமாக காய்ந்த நிலமும், கானல் நீரும் சேர்ந்திருக்கலாம். உண்மையில் இந்த காய்ந்த தரையில்தான் கானல்நீரையே காணமுடியும். இதில் காய்ந்த தரை வியவஹாரிக சத்யமாகவும், கானல்நீர் பிராதிபாஸிக சத்யமாகவும் இருக்கிறது. இவையிரண்டும் வெவ்வேறு சத்யத்வ நிலையில் இருப்பதால் இவைகள் இணைந்திருக்கிறது. இன்னொரு உதாரணத்தில் அழுக்கடைந்த சாக்கடை நீர் தூய்மையான வெண்மையான திரையில் திரைப்பட காட்சியாக காட்டப்படுகிறது. இதில் வெள்ளித்திரை வியவஹாரிக சத்யம், அழுக்கடைந்த ஆறு பிராதிபாஸிக சத்யமாக இருக்கிறது. அதனால் இந்த இணைப்பு சாத்தியமாகிறது. இன்னொரு உதாரணத்தில் இருட்டறையில் தூங்கிக்கொண்டிருக்கின்ற ஒருவன் கனவில் வெளிச்சமான பகலில் நடைபெறும் காட்சிகளைக் கண்டு கொண்டிருக்கிறான். இருட்டறையில் உள்ள இருளும், கனவில் உள்ள வெளிச்சமும் இணைந்திருக்கும் நிலையை காணலாம்.
மேற்கூறிய் உதாரணங்களில் காட்டப்பட்டுள்ள முறையில் ஆத்மாவும், மூலாவித்யாவும் இணைந்து இருக்கலாம். ஆனால் இவையிரண்டும் வெவ்வேறு சத்யத்வ நிலைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். வேதாந்தம் தெளிவாக உறுதிபடுத்துகிறது, அவித்யாவும் மித்யா, அதனால் அது கீழான சத்யத்வ நிலையை கொண்டதாகவுள்ள வியவஹாரிக சத்யமாகும். அதேசமயம் ஆத்மா பாரமார்த்திக சத்யமாகும். ஆதலால் ஆத்மாவும், மூலாவித்யாவும் இணைந்து இருக்கிறது.
இவையிரண்டும் சேர்ந்தில்லாவிட்டால் அறியாமையின் இருப்பை நிரூபிக்க முடியாது.. ஏனென்றால் நம் அறியாமையை நம்மாலே சொல்ல முடிகிறது. நம்மிடத்தில் உள்ள அறியாமையை உணர்ந்துள்ளோம். எனக்கு சீனமொழி தெரியாது என்ற அறியாமையை உணர்த்துவது ஆத்மாதான். ஆதலால் இவையிரண்டும் சேர்ந்திருப்பதால் பிரச்சனையெதுவும் கிடையாது.
ஆத்மா மூலாவித்யாவின் இருப்பிடம் என்று கூறினால் தர்க்கரீதியான பல பிரச்சனைகள் வரலாம். அதாவது இதை ஏற்றுக் கொண்டால் ஆசாரியார் கூறியுள்ள அத்வைத தத்துவமானது துறக்கப்படுகிறது. உலகத்தை நீக்கி விட்டீர்கள், ஆனால் மூலாவித்யாவை (மாயையை) வைத்துக் கொண்டீர்கள். எனவே இரண்டாவதாக ஒன்றை இருப்பதாக சொல்வதனால் த்வைத தோஷம் வந்துவிடுகிறது என்று பூர்வ பக்ஷி கூறுகிறான்.
பூர்வ பக்ஷியின் இரண்டாவது கேள்வி: ஆத்மா ஆதாரம் என்றும், மூலாவித்யா அதை சார்ந்திருப்பது என்றும் கூறுகிறீர்கள். இது இரண்டிற்குமிடையே சம்பந்தத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் ஆத்மா அஸங்க ஸ்வரூபமாக இருக்கின்றது என்றும் சொல்கிறீர்கள். எனவே அஸங்கமான ஆத்மா எப்படி மூலாவித்யாவுடன் சம்பந்தம் இருப்பதாக சொல்ல முடியும்?
பூர்வ பக்ஷியின் மூன்றாவது கேள்வி: ஆத்மா பிரகாச ஸ்வரூபம் என்று கூறுகிறீர்கள். மூலாவித்யா பிரகாசமற்றது. ஒளிமயமான ஆத்மாவுக்கும் இருள்மயமான மூலாவித்யாவும் எப்படி சேர்ந்திருக்க முடியும்?
இவை மூன்று கருத்தைகளிலிருந்து ஆத்மா மூலாவித்யாவின் இருப்பிடமாக இருக்க முடியாது என்று உறுதியாகிறது.
மேற்கூறியு பூர்வபக்ஷியின் கருத்துக்கள் அனைத்தும் மூலாவித்யாவின் விளைவாகும். மூலாவித்யா இந்த மாதிரியான தர்க்கரீதியான முரண்பாடுகளை ஏற்படுத்தும் திறன் கொண்டது. உண்மையில் மூலாவித்யாவிற்கு இந்த முரண்பாடுகள் அனைத்தும் இயற்கையான முடிவுகள். ஆனால் சரியான புரிதலுடன் பார்த்தால் இவை முரண்பாடுகள் என்ற உண்மை உணரப்படும். இவ்வாறு த்வைதத்தை ஏற்படுத்தும் மூலாவித்யா அத்வைதத்தை நீக்க முடியாது. ஏனென்றால் இது மித்யா, இது ஏற்படுத்தும் த்வைத பார்வையும் மித்யா. உதாரணமாக ஒருவன் பத்து நிலைக்கண்ணாடிகள் உள்ள அறையில் நின்று கொண்டிருக்கிறான். இந்த பத்து நிலைக்கண்ணாடிகளில் அவனுடைய உருவம் தெரிகிறது. இந்த உருவங்கள் கீழான சத்யத்வத்தை உடையது. அவனுடைய பல பிரதிபிம்பங்கள் பார்த்தாலும் தான் ஒருவன்தான் என்ற அத்வைதத்தை பாதிக்காது. அதேபோல மித்யா மூலாவித்யா மித்யா த்வைதத்தை உருவாக்கினாலும் ஆத்மாவின் இருமையற்ற தன்மையை பாதிக்காது.
முதல் கேள்விக்கான பதில்: ஆத்மா சத்யம், இரண்டாவதாக சொல்லப்பட்ட மூலாவித்யா மித்யாவாக இருப்பதால் ஆத்மாவின் இருமையற்ற தன்மையை பாதிக்காது. எனவே த்வைத தோஷம் வராது.
இரண்டாவது கேள்விக்கான பதில்: ஆத்மா மூலாவித்யாவுடன் கூடிய சம்பந்தம் ஏற்றுக் கொள்ளமுடியாதது. மூலாவித்யா மித்யாவாக இருப்பதால் ஆத்மாவுடன் கொண்டிருக்கும் சம்பந்தமும் மித்யா. எனவே ஆத்மா அஸங்கமாகவே இருக்கிறது. உதாரணமாக காய்ந்த நிலத்தில் கானல்நீர் தெரிந்தாலும் நிலம் காய்ந்ததாகவே இருக்கும். எனவே இரண்டாவது கேள்வியில் உள்ள கருத்தும் அறியாமையின் விளைவாகும். எனவே இரண்டாவது வாதமும் நீக்கப்படுகிறது.
மூன்றாவது கேள்விக்கான பதில்: ஒளிமயமான ஆத்மாவும், இருள்மயமான மூலாவித்யாவும் சேர்ந்திருக்க முடியாது. ஆனால் மூலாவித்யாவின் இயல்பான தன்மையை வைத்துப் பார்க்கும்போது இப்படிபட்ட முரண்பாடுகள் ஏற்படலாம். அறியாமையின் விளைவாகத்தான் பூர்வபக்ஷிக்கு இந்த சந்தேகம் வந்திருக்கிறது. முன்பே காட்டப்பட்ட உதாரணத்தில் இருளில் தூங்கிக் கொண்டிருப்பவன் கனவில் வெளிச்சமான சூரியஒளியை காண்கிறான். இந்த உதாரணத்தில் ப்ராதிபாஸிக சூரியவொளி வியவஹாரிக இருட்டறையில் சேர்ந்து இருக்கமுடிகிறது. இவையிரண்டிற்கும் இடையே உள்ள வெவ்வேறான சத்யத்வத்தினால் இது நிகழ முடிகிறது.
நன்கு தெரிந்த கயிறு-பாம்பு உதாரணத்தில், கயிறு அதில் தோன்றுகின்ற பாம்பிற்கு ஆதாரமாக இருக்கிறது என்றும் சொல்லலாம், ஆதாரமாக இல்லையென்றும் சொல்லலாம். உண்மையில் பாம்பு வெறும் தோற்றம்தான். எனவே இல்லாத பாம்புக்கு கயிறு எப்படி ஆதாரமாக இருக்கமுடியும். ஆதலால் கயிறு பாம்புக்கு ஆதாரமாக இல்லை. ஆனால் பாம்பு தோன்றுவதற்கு ஆதாரமாகவும் இருக்கிறது. இந்தக் கருத்து பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறியுள்ள ”இந்த உலகம் என்னிடத்தில் இருக்கிறது” கருத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.
சுத்த சைதன்யம் (Pure Consciouness) என்ன என்பதை கீழே விளக்கப்பட்டுள்ளது.
- இது எதனுடைய காரியமுமல்ல, எதனுடைய ஒரு பகுதியும் அல்ல, எதற்கும் சொந்தமானதுமல்ல. ஆகாசத்தின் தன்மையையும் உடையதல்ல. ஏனென்றால் ஆகாசம் இதற்கு பின்னால் தோன்றியது.
- இது சுதந்திரமான வஸ்து, அது எங்கும் வியாபித்திருப்பது, இதற்கு பின்னால் தோன்றிய நாம-ரூபங்களுக்கு இருப்பை வழங்கியிருக்கிறது.
- இது எந்தப் பொருளாலும், கால-தேசத்தாலும் வரையறுக்கப்படாதது
- கால-தேசங்கள் உட்பட முழு பிரபஞ்சமும் அழிந்து போனாலும் இது தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும்.;
- ஆனால் இருந்து கொண்டிருக்கும் இது எந்த வியவகாரத்திற்கும் கிடைக்காது. ஏனென்றால் விவகாரம் செய்வதற்கு நாம-ரூபங்கள் தேவைப்படுகின்றது.
மனனம், நிதித்யாஸனம் ஆகிய ஞானயோக சாதனங்களின் நோக்கம் என்ன என்ற கேள்வியெழுகிறது. நானே சைதன்யமாக இருக்கும்போது இந்த சாதனங்கள் சைதன்யத்தை அடைவதற்காக இல்லை என்று தெரிகிறது. இவைகள் நாம் நீண்ட காலமாக உடலையும், மனதையும் நான் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் போக்கை உடைப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. மோட்சம் என்பது ஏதோவொன்றை எதிர்காலத்தில் அடையக்கூடியது என்பது தவறான முடிவு. நீண்ட காலம் சிரவணத்திற்கு பிறகும் இந்த முடிவு மாறாமல் அப்படியே இருக்கும் நிலையில் நான் எப்போதும் ஆத்மாவாகவே இருக்கிறேன் என்ற அறிவை அடைவதே மோட்சமாகும். பகலில் சூரிய வெளிச்சம் எப்போதும் உணரப்படுகிறது. அதை அறிவதற்கு எந்த செயலும் செய்யத் தேவையில்லை. அது காட்டிக் கொடுக்கின்ற பொருட்களைக்கொண்டு வெளிச்சம் அனுபவத்திற்கு வருகிறது. அதேபோல பிரம்மன் எப்போதும் நான் என்ற அனுபவித்தில் இருக்கிறது. எல்லோரும் பிரம்மத்தை எல்லா நேரங்களிலும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆத்மா எப்போதும் அனுபவத்திற்கு இருக்கின்ற சைதன்யம். இதை அடைவதற்காக எதையும் செய்யத் தேவையில்லை.
வேதாந்தம் ஆத்ம அனுபவத்தை அடைவதற்காக உபதேசிப்பதில்லை. பொதுவாக ஆத்ம அனுபவத்துடன் மூன்று சரீர அனுபவங்களும் சேர்ந்திருக்கிறது. சத்யமான பிரம்மத்துடன் மித்யாவான உடலும், மனமும் சேர்ந்து அனுபவிக்கப்படுகிறது. வேதாந்தத்தின் நோக்கம் நமக்கு ஆத்ம அனுபவத்தை கொடுப்பதல்ல. ஆனால் அனைத்து அனுபவங்களும் உடலைச் சார்ந்ததாகும் என்ற அறிவைக் கொடுப்பதுதான். இந்த அறிவை அடைந்தால் நான் என்ற சொல்லுடன் உடலைக் குறிக்கின்ற எந்த அடைமொழியையும் பயன்படுத்தமாட்டோம்.
மகாவாக்கியமானது நாம் மிகவும் பொதுவாக அனுபவிக்கின்ற உணர்ச்சிகளான இன்பம்,துன்பம்,பயம்,கவலை,மனவேதனை போன்றவற்றை அனுபவிக்கின்ற விதத்தை மாற்றிவிடுகிறது. ஆகவே மகாவாக்கியத்தின் பொருளை நன்கு புரிந்துகொண்டவர்கள், நான் கவலையாக இருக்கிறேன், துன்பப்படுகிறேன் என்று சொல்லமாட்டார்கள். நான் அந்த மனதில் அனுபவிக்கின்ற உணர்ச்சிகளை பிரகாசிக்கிறேன் என்பதுதான் உண்மையான கூற்றாகும். உதாரணமாக விக்ஞானி சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் நீக்கமாட்டான். ஆனால் இதை வைத்துக்கொண்டு சூரியன் பூமியை சுற்றிவருகிறது என்று சொல்லமாட்டான். இதேபோல வேதாந்தி மனதில் எழுகின்ற உணர்ச்சிகளை அறிவான், ஆனால் அவைகள் என்னைச் சார்ந்ததல்ல என்ற அறிவோடு இருப்பான்.
சுத்த சைதன்யத்தைப் பற்றி இரண்டு தவறான கருத்துக்கள் இருக்கிறது. முதலாவது நான் வரையறுக்கப்பட்ட வஸ்து. இரண்டாவது இது பரமாத்மா, அதை அடைந்திட வேண்டும் என்பதாகும். மகாவாக்கியம் இந்த இரண்டு கருத்துக்களையும் உடைத்தெறிகிறது. தத் என்ற சொல் என்னை (ஆத்மாவை) குறிக்கும்போது முதல் கருத்து நீக்கப்படுகிறது. த்வம் என்ற சொல் குறிக்கின்ற பரமாத்மாவை அடையத் தேவையில்லை. ஏனென்றால் இரண்டும் ஒன்றேதான் என்று குறிக்கின்ற சொல் அஸி. இரண்டும் பிரம்மத்தையே குறிக்கின்றது. நானே பிரம்மனாக இருக்கிறேன் என்ற அறிவை அடைய வேண்டுமேயொழிய பரமாத்மாவை அடைய வேண்டும் என்ற அறிவானது இரண்டாவது கருத்தை நீக்கிவிடுகிறது. நான்தான் சுத்த சைதன்யம் என்று தெரிந்தவுடன் நான் ஞான வியவகாரத்திலோ, கர்மவிவகாரத்திலோ பங்கேற்பதில்லை என்று அறிவு அடைந்திட வேண்டும். விடாமுயற்சியுடன் கூடிய் ஞானயோக சாதகன் இந்த உபதேசத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
ஆசாரியார் மகாவாக்கியத்தை மூன்று படிகளாக உபதேசித்து புரிய வைக்கிறார். அவைகள்
முதல்படி சம்பந்தத்தை புரிய வைத்தல் - சாமானாதிகரண்யம்
இரண்டாவது படி விசேஷண, விசேஷயம் இவைகளுக்கிடையே உள்ள
சம்பந்தத்ததை புரியவைத்தல்
மூன்றாவது படி லக்ஷ்ய-லக்ஷண சம்பந்தத்தை புரிய வைத்தல்
நான் இருத்தல்-நனவு(Existing Consciousness) ஊடகம், இதில் முழு வாழ்க்கை நாடகம் நாள்தோறும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் என்னிடத்தில் எதுவும் நடக்கவில்லை. நான் எப்போதும் சுதந்திரமானவன். இந்த நாடகம் தடுத்து நிறுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியாததாகும். அவற்றில் சிலவற்றை மாற்றவோ, தடுத்து நிறுத்தவோ என்னால் முடியும், ஆனால் மற்ற அனைத்தும் மாற்றமில்லாமல் போய்க்கொண்டிருக்கும், அவைகள் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ இருந்தாலும் அவைகளைப்பற்றி எடைபோடாமல் கவனித்துக் கொண்டு இருக்க வேண்டும். இதுதான் மோட்ச நிலையாகும். இந்த நாடகத்தைப்பற்றி மட்டுமே அறிந்திருக்க முடியும். ஆனால் அதில் பங்கேற்காததால் அதனால் பாதிக்கப்படாமல் இருப்போம். இந்த உண்மையை அறிதலே அறிவாகும். இந்த அறிவே நம்மை சம்சாரத்திலிருந்து விடுவித்து விடும்.
நம்மால் சில உணர்ச்சிகளை தடுத்துநிறுத்த முடியாது. ஆனால் அவைகளை ஒரு பார்வையாளனாக கவனித்துக் கொண்டிருக்கமுடியும். நான் இருத்தல்-நனவு ஊடகம் என்றும், மொத்த அனாத்மாவின் வரையறுக்கப்பட முடியாத பகுதியாகும் என்ற அறிவுடனும் இருந்தால் மனதில் எழும் உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம். அந்த உணர்ச்சிகளால் நிகழும் நிகழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கமாட்டோம். ஏனென்றால் நமக்கு இரண்டுமே அனாத்மா என்று தெரியும். இந்த அறிவானது சாகும் தறுவாயில் வந்தாலும் அது நமக்கு முக்தியை கொடுத்துவிடும்.
சாமானாதிகரண்யம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களுக்கு இடையே உள்ள சம்பந்தத்தை குறிப்பதாகும். இரண்டு சொற்களும் ஒரே பொருளை குறிக்கும் போது அவைகள் இரண்டிற்கும் சாமானாதிகரண்ய சம்பந்தம் இருக்கிறது. உதாரணமாக விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் உள்ள அனைத்து சொற்களும் பகவான் விஷ்ணு ஒருவரையே குறிக்கிறது. ஒவ்வொரு சொல்லும் அதற்கேற்ற பொருளைத்தான் குறிக்கும் இந்த சம்பந்தத்திற்கு வையதிகரண்யம் என்று பெயர்.
மகாவாக்கியத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்வதற்கு முன் முதலில் மாணவன் இதில் வையாதிகரண்யம் இருக்கிறதா அல்லது சாமானாதிகரண்யம் இருக்கிறதா என்று கவனிக்க வேணடும். நாம் முதலில் இந்த வாக்கியத்தில் உள்ள தத், த்வம் இரண்டிற்குமிடையே சாமானாதிகரண்யம் சம்பந்தம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இவையிரண்டும் வெவ்வேறு சொற்கள் ஆனால் ஒரேப்பொருளை குறிக்கிறது.
வேதாந்த சாதகனுக்கு இந்த நம்பிக்கை இருக்கவேண்டும். நான் சுதந்திரமான இருத்தல்-நனவு இதில்தான் எல்லா இந்த உடல்களும் இருக்கின்றன. அதனால் அவைகள் தொடர்ந்து இருக்குமா அல்லது இருக்காதா என்று ஏன் கவலைப்பட வேண்டும். இந்த சூட்சும உடல் வேறொரு ஸ்தூல உடலை எடுத்துக் கொள்ளுமா இல்லையா என்று ஏன் கவலைப்பட வேண்டும். என்னைப் பொறுத்த வரையில் அனைத்து அனாத்மாக்களும் அனாத்மா சம்பந்தமான விஷயங்கள் அனைத்தும் முக்கியத்துவம் இல்லாததாகும். வேதாந்தத்தை நன்கு புரிந்து கொண்டவனுக்கு இந்த வகையான சந்தேகங்கள், பயங்கள், கேள்விகள் அனைத்தும் தன்னுடைய இயல்புக்கு பொருந்தாதவைகளாக இருக்கும். அனாத்மா அளவில் எது நடந்தாலும் எனக்கு கவலையில்லை என்ற மனநிலையில் இருப்பான்.
மகாவாக்கியத்திலுள்ள இரண்டாவது சம்பந்தம் விசேஷன-விசேஷ்ய சம்பந்தமாகும். கீதா தியான ஸ்லோகத்திலுள்ள சில சொற்கள் வெவ்வேறு பண்புக்கூறுகளை உடையதாக இருந்தாலும் பகவான் கிருஷ்ணனையே குறிக்கிறது.. அவரைப்பற்றிய பெருமைகளை, பண்புகளைக் கூறுகின்ற ஒவ்வொரு சொல்லும் விசேஷணம் என்றும் அவைகளைக் கொண்ட பகவான் கிருஷ்ணன் விசேஷ்யம் என்றும் கூறப்படுகிறது. இவையிரண்டுக்குமிடையே உள்ள சம்பந்தமே விசேஷண-விசேஷய சம்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.
சொற்களுக்கு இடையே உள்ள உறவு குறிப்பதை சாமானாதிகரண்யம் என்று அழைக்கப்படுகிறது. விசேஷண-விசேஷய சம்பந்தம் சொற்கள் குறிக்கின்ற அர்த்தங்களுக்கிடையே உள்ள உறவைக் குறிப்பதை விசேஷண-விசேஷய சம்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.
இதே முறையில் இருத்தல், உணர்வு என்கின்ற இவையிரண்டும் ஆத்மாவுடைய அத்தியாவசியமான அம்சங்கள். ஆகவே இவைகள் ஆத்மாவுக்கு மட்டும் பொருந்துகின்றது. ஒரே ஆத்மாவே ஜீவாத்மா என்றும், பரமாத்மா என்றும் இருக்கின்ற தகுதியை உடையதாக இருக்கிறது. ஜீவத்வம், பரமாத்மாத்வம் ஆகியவைகள் அவைகளுடைய தன்மைகளாகவோ அல்லது ஒரே தத்துவத்தின் அம்சங்களாகவோ இருக்கின்றது. பரமாத்மா நிலை த்வம் என்ற பதத்தையும், ஜீவாத்மா நிலை தத் என்ற பதத்தையும் குறிக்கின்ற ஒரே உண்மை தத்துவத்தை குறிக்கின்றது. அதுவே ஆத்மாவாகும். இந்த சம்பந்தமே விசேஷண-விசேஷய சம்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.
மூன்றாவது சம்பந்தமான லட்சிய-லட்சண-சம்பந்தம் இனி விளக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் சிக்கல்கள் இருக்கும். சில பண்புகள் பரஸ்பர முரண்பாடாக இருக்கும்போது அந்த நற்பண்புகள் ஒரே பொருளில் இணைந்திருக்க முடியாது. உண்மையில் தர்க்கரீதியாக பார்க்கும்போது முரண்பாடுள்ள அம்சங்கள் ஒரே இடத்தில் சேர்ந்திருக்க முடியாது. ஆதலால், இந்த சூழ்நிலையில், சில விசேஷனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருப்பதால் சேர்ந்திருக்க முடியாது. இது சாதகர்களுக்கு குழப்பத்தைக் கொடுக்கும். இதற்கு எப்படி விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற வழியை கண்டுபிடிக்க வேண்டும்.
இந்த நிலைமைக்கு தீர்வு என்பது முரண்பாடான சில பண்புகளை அகற்றுவதாகும். இதனால் தர்க்கரீதியான சிக்கல் இருக்காது. முரண்பாடான பண்புகளை அகற்றுவதே சாதகனின் மூன்றாவது படியாகும். தத் த்வம் அஸி என்ற மகாவாக்கியத்தில் ஜீவாத்மா, பரமாத்மா ஆகிய இரண்டும் ஒரே ஆத்மாவின் இரண்டு நிலைகளாக காட்டப்படுகிறது.. அதாவது ஜீவாத்மாவின் தன்மைகளும், பரமாத்மாவின் தன்மைகளும் ஒரே ஆத்மாவில் சேர்ந்திருப்பது தெரியவருகிறது.
ஆனால் பிரச்சனை என்னவென்றால் இவ்விரண்டுக்குமிடையே குறைந்தது சில பண்புக்கூறுகள் பரஸ்பரம் முரண்பட்டிருக்கின்றன. இதில் முதன்மையான முரண்பாடுடைய பண்புக்கூறகளாவது ஜீவாத்மா வரையறுக்கப்பட்ட அறிவு, வரையறுக்கப்பட்ட சக்தி, குறைந்த காலமிருப்பது ஆகிய தன்மைகள் உடையது, இதற்கு மாறாக பரமாத்மா சர்வசக்தி, அனைத்தும் அறிபவர், எங்கும் இருப்பவர், என்றும் இருப்பவர் ஆகிய தன்மைகளை உடையவர். இந்த முரண்பாடுகள் அனைத்தும் அனாத்மாவை சேர்ந்ததாக இருப்பதால் அவைகளை நீக்கிவிட வேண்டும்.
ஜீவாத்மாவிலிருந்து முரண்பாடுடைய பண்புகளை நீக்கிவிட்டால், ஸ்தூல, சூட்சும, காரண சரீரம் முதலான அனாத்மாவை சேர்ந்த ஜீவத்வம் சென்று விடும். ஜீவ என்ற அடைமொழி சென்றுவிடும். இதனால் துக்கம் என்ற அடைமொழியும் சென்றுவிடும். ஜீவத்வம் சென்றுவிட்டால், உணர்வு தத்துவம் மட்டுமே இருக்கும். இதேமுறையில் பரமாத்மாவில் உள்ள முரண்பாடுடைய பண்புகளை நீக்கிவிட்டால் உணர்வு தத்துவம் மட்டுமே இருக்கும். இதனால் ஜீவ-ஈஸ்வர ஐக்கியம் சாத்தியமாகும். இரண்டும் ஒன்றே என்ற உண்மை புரிந்துவிடும். நானே ஆத்மா என்ற உறுதியான நம்பிக்கை ஏற்படும்.
பூர்வபட்சி கேள்வி: சாதன-சதுஷ்டய-சம்பத்தி, சிரவண, மனன, நிதித்யாசனம் போன்றவைகள் விதிகளா, இல்லையா, அதாவது ஞானயோகத்தில் விதிகள் என்று எதாவது இருக்கிறதா, இல்லையா?
பதில்: இதற்கு இரண்டு பகுதியாக விடையிருக்கிறது. ஞானயோக மட்டுமே இரண்டாக பிரிக்கப்படுகிறது. இரண்டு வெவ்வேறு வகையான பதில்கள் கொடுக்கப்படுகிறது.
முதல் பதில்: அறிவை பொறுத்த வரையில், அதற்கென்ற எந்த கட்டளையும் கிடையாது, ஏனென்றால் அறிவு என்பது செயல் அல்ல. தெரிதல் என்பது எந்த கர்ம பலனையும் கொடுப்பதில்லை. ஆதலால் அறிவானது கர்மத்தின் கீழ் வருவதில்லை. அதனால் ஞானம் என்பது கர்மம் அல்ல. எதாவது செயல் செய்வதற்குத்தான் விதிகள் இருக்கலாம். கர்மத்தில்தான் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உண்டு. அதனால் எந்த இடத்தில் விருப்பம் அல்லது வாய்ப்பு இருக்கின்றதோ அங்கேதான் கட்டளை இருக்க வாய்ப்பிருக்கிறது. அதேசமயம் அந்த கட்டளையை மதிக்கலாம் அல்லது புறக்கணிக்கலாம். அதனால் செய்ய வேண்டியவை (அ) செய்யக் கூடாதது என்பது ஞானத்தை அடையும் விஷயத்தில் சாத்தியம் கிடையாது. அதேநேரத்தில் கர்மயோகத்தில் அவைகள் சாத்தியமாக இருக்கிறது.
ஞானயோக பாதையை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால், அதனோடு தொடர்புடைய கர்மயோகம், உபாஸனா யோகம், சாதன-சதுஷ்டய-சம்பத்தியை அடைதல், சிரவண, மனனம், நிதித்யாசனம் போன்ற அனைத்து சாதனங்களும் ஞானயோகத்துடன் இணைந்திருக்கிறது. ஆனால் அடையவேண்டிய இறுதி லட்சியம் அஹம் பிரம்ம அஸ்மி என்ற ஞானநிஷ்டையாகும்.
எந்தவொரு ஒரு குறிக்கோளை அடைவதற்கும் அதற்கென்று குறிப்பிடப்பட்டுள்ள நியமங்களை மனவொருமுகப்பாடுடன், அர்ப்பணிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும். இந்த அர்ப்பணிப்பு மிகமிக முக்கியமானது. எவ்வளவுக்கெவ்வளவு அர்ப்பணிப்புடன் செய்கின்றோமா அந்தளவுக்கு அடையவேண்டிய லட்சியத்தை அடைகின்ற காலம் இருக்கும்.
எந்தவொரு குறிக்கோளை அடைவதற்கும் தேவையான அர்ப்பணிப்பு மூன்று காரணிகளை உடையதாக இருக்கிறது. அவைகள் நிச்சயம், சங்கல்பம், அப்யாஸயம் என்பதாகும். சாதகன் ஜீவ-ஈஸ்வர இரட்டை வடிவ தத்துவத்தை பின்பற்ற முடிவெடுத்தால், அதை நிச்சயம் செய்து கொள்ள வேண்டும். இனிமேல் நான் என்னை ஆத்மாவென்றே பார்ப்பேன் என்பது சங்கல்பம். அதற்கு பிறகு சாதகன் எந்த நிலையிலும் தன் நலனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதை விட்டுவிட வேண்டும். இதைத்தான் விடாமுயற்சியுடன் செய்து கொண்டு வரவேண்டும்.
இதுவரை கூறப்பட்டுள்ள கருத்துக்களின் சாரமானது என்னவென்றால் அறிவை அடைவதற்கு எந்த விதியும் இல்லை. ஆனால் அதற்கு தேவையான சாதனங்கள் செய்வதற்கு விதிகளை பின்பற்ற வேண்டும். இன்னொரு முக்கியமான கருத்து. ஞானயோகத்தில் முறையாக நுழைவதற்கான சந்நியாச ஆசிரமத்தினால் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு.
ஞானயோக சாதகன் சம, தம, உபரதி, திதிக்ஷா, ஶ்ரத்தா ஆகிய தகுதிகளை அடைந்திட வேண்டும்.
சமஹ - மனக்கட்டுப்பாடு, அலைபாய்ந்து கொண்டிருக்கின்ற மனதை
அமைதிபடுத்த வேண்டும்.
தமஹ - புலன்களை கட்டுப்படுத்துதல், அமைதிபடுத்தி வைத்தல்
உபரதி - உடமைகள், உறவுகள், கடமைகள், செயல்பாடுகள் ஆகியவற்றை
வெகுவாக குறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது முழுவதுமாக
விட்டுவிடவேண்டும். இவைகள் மனதை ஆக்கிரமித்துக்
கொண்டிருக்கும். இந்த நிலையில் மனமானது வேதாந்தத்தைக்
கருத்துக்களை கிரகித்துக் கொள்ளும் சக்தியுடன் இருக்காது.
திதிக்ஷா - சகிப்புத்தன்மை, பொறுத்துக் கொள்ளும் பண்பு
ஶ்ரத்₃தா - உபநிஷத் பிரமாணத்தில் முழுமையான, உறுதியான நம்பிக்கை
இவ்வாறு மேலே குறிப்பிட்டுள்ள தகுதிகளை தீவிரமாகவும், விடாமுயற்சியுடனும் கடைப்பிடித்தால் அந்த சாதகன் ஆத்மாவாக தன்னை அறிந்திடுவான்,
வேதாந்த சிரவணத்தின் போது அனாத்மாவான குடும்பத்தை வெகுதூரம் தள்ளி வைத்திட வேண்டும். இல்லையென்றால் நானே ஆத்மாவாக இருக்கிறேன் என்ற மகாவாக்கியம் வேலை செய்யாது. குடும்பத்தையும், நெருங்கிய உறவுகளைப் பற்றி எண்ணங்களே மேலோங்கி இருக்கும். ஆதலால் குடும்பம், சொத்து, உடல். மனம் போன்ற அனாத்மாக்களை தள்ளி வைத்திட வேண்டும். மனதில் எப்பொழுதும் தீர்க்க முடியாத பிரச்சனைகளுடன்தான் இருந்து கொண்டிருக்கும். அதனால் மனதை ஒதுக்கி வைத்திட வேண்டும்.
வேதாந்தத்தின் முக்கிய உபதேசம் அனாத்மாவை பொய்யென்று அறிதலும், பிரம்ம சத்தியம், ஜகத் மித்யா என்பதுதாகும். அனாத்மாவை பொய்யென்ற அறிவில் நிலை பெறுவதும், நானே பிரம்மன் என்ற திடஅறிவை அடைவதும் ஞானயோக சாதகனின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
த்வம் பதார்த்த அறிவே ஆத்ம-அனாத்மா-விவேகம் என்ற அழைக்கப்படுகிறது. இந்த அறிவின் மூலம் சாதகன் தானே சாட்சி சைதன்யம் என்ற அறிவும், அனுபவத்திலிருக்கின்ற உடல், மனம், உலகம் போன்ற மற்ற அனைத்தும் அனாத்மா என்ற அறிவும் அடைதல் வேண்டும். தன்னை ஆத்மா என்று பிரித்தறிந்த நிலையில் சாதகன் ஆத்ம-அனாத்ம-விவேகத்தின் முதல்படியை கடந்துவிடுகிறான்.
ஜீவாத்மா-பரமாத்மா ஐக்கியத்தின் போது அனாத்மா பொய்யென்றாகி விடுகிறது. அனாத்மா மித்யாவென்ற அறிவை அடைவதுதான் மகாவாக்கிய விசாரத்தின் முக்கியமான படியாகும். ஆத்ம-அனாத்ம-விவேகத்தின்போது நாம் ஆத்மாவையும், அனாத்மாவையும் பிரிப்பதுமட்டும் செய்யப்படுகிறது, அனாத்மா மித்யாவென்ற அறிவை அடைவதில்லை. அனாத்மா மித்யாவென்ற அறிவை அடைவதுதான் முக்கியமான படியாகும். இதுவே ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை கூறுவதற்கு முக்கியமாக இருக்கிறது. இதற்கப்புறம்தான் நான் பிரம்மமாக இருக்கிறேன் என்பது உணரப்படும்.
அனாத்மா காரியமாக இருப்பதால் அது மித்யாவாகும். ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றிணைந்து ஒரு ஆத்மாவாக மாறவேண்டும், அனாத்மாவை மித்யாவாக்க வேண்டும். அப்போதுதான் அத்வைத சித்தி சாத்தியமாகும். இதைத்தான் ஆசாரியார் நிலைநாட்டியிருக்கிறார். முக்கோண வடிவ ஜீவ-ஈஸ்வர-ஜகத் என்பது ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்துடன், அனாத்மா மித்யா என்ற அறிவை அடைந்ததும், இரட்டை வடிவ நான் சத்தியம், ஜகத் மித்யா என்பதை அடையமுடியும். ஜகத் மித்யா என்ற அறிவை அடையாமல் இரட்டைவடிவ நிலை வேலை செய்யாது. நான் சாட்சி சைதன்யம் அனுபவிப்பவன், உடல், மனம், குடும்பம், சொத்து போன்ற அனாத்மாவை அனுபவிக்கிறேன் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். இதுதான் அத்வைதத்தின் அணுகுமுறையாகும்.
நான் சந்நியாசி என்று யார் கூறினாலும் அவர் அறியாமையில் இருக்கிறார் என்று அஷ்டவக்ர கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது. சந்நியாசி நான் உலகத்தை துறந்து விட்டேன் என்று சொல்கிறார். இல்லாத உலகத்தை எப்படி துறக்கமுடியும். மேலும் துறப்பவன், துறக்கக்கூடிய பொருள் என்ற இருமையும் வந்து விடுகிறது. எனவே இவர் இன்னும் அறியாமையில் இருக்கிறார் என்று தெளிவாகிறது.
ஆசாரியார் அத்வைதத்தை இடைவிடாமல் போதித்துக் கொண்டிருக்கிறார் ஆதலால் ஆத்ம-அனாத்ம விவேகமும் அறியாமையின் விளைவேயாகும் என்று பார்க்கிறார். மகாவாக்கியம் ஆத்ம-அனாத்ம விவேகத்தையும் நீக்குவதற்கு உதவி செய்கிறது என்று கூறுகிறார். ஆதலால் மகாவாக்கியம் அத்வைத ஆத்மஞானத்தை கொடுத்து ஆத்மா, அனாத்மா என்கின்ற இருமையை நீக்குவதற்கு உதவிசெய்கிறது.
பூர்வபக்ஷியின் கேள்வி: அவித்யா என்பது இருளைப் போன்ற அறிவின் இல்லாமையே என்பதாகும். ஆதலால் மூலாவித்யா என்பது இல்லாத ஒன்றாகும். எனவே இதை மகாவாக்கியத்தின் மூலமாக நீக்கவேண்டிய அவசியமில்லை. மேலும் அதைப் பற்றி பேசவே தேவையற்றதாகும்.
இருள் என்பது இருக்கின்ற ஒன்றா அல்லாத இல்லாத ஒன்றா என்று கேள்வியெழுகிறது. இருள் என்பது வெளிச்சத்தின் இல்லாமை என்பது பூர்வபக்ஷியின் கருத்து. இல்லாமை என்பது இருக்காதவொன்றை குறிக்கிறது. ஆனால் வேதாந்தம் இருள் என்பது வெளிச்சமின்மை கிடையாது, வெளிச்சத்துக்கு எதிரான ஒன்றாகும் என்று கூறுகிறது.
நிர்விகல்ப சமாதியில் மித்யா ஞானம் கிடையாது. ஆனால் ஆத்ம அக்ஞானம் உண்டு. இந்த அக்ஞானம் மித்யா ஞானத்திற்கும் வேறானது. இந்த அக்ஞானம் பிரம்மத்தை பற்றிய அறியாமையாகும். இந்த அவித்யாவையே மூலாவித்யா என்று அழைக்கப்படுகிறது.
மகாவாக்கிய விசாரத்தின் மூலமாக சாதகன் மித்யா ஞானத்தை நீக்க முயற்சிக்கவில்லை, மூலாவித்யாவை நீக்குவதில்தான் தீவிரமாக இருக்கின்றான். மூலாவித்யாவை நீக்கிவிட்டால் அதோடு சேர்ந்து மித்யா ஞானமும் நீக்கப்பட்டுவிடும். எனவே மூலாவித்யா இருக்கிறது, அது மித்யா ஞானத்திற்கும் வேறானது. மகாவாக்கிய விசாரம் மூலாவித்யாவை நீக்கிவிடுகிறது.
காரண அவஸ்தை அறியாமையால் மூடப்பட்ட ஸத் என்று அழைக்கப்படுகிறது. மேலும் அது உணர்வுமயமாக இருப்பதால்தான் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கிறது. இதுவே ஜாக்ரத் அவஸ்தையில் இரண்டுவிதமாக இருக்கிறது. ஒன்று அனுபவிக்கப்படுகின்ற உணர்வுமயம், மற்றொன்று அரிதாக அனுபவத்திற்கு வருகின்ற சுத்த சைதன்ய உணர்வுமயம். திரிபுடியின் மூலமாக அடையப்படுகின்ற அனுபவத்தில் இந்த இரண்டுவிதமும் அனுபவிக்கப்படுகிறது. உதாரணமாக பானை பற்றிய அறிவில் சைதன்யம் பானையோடு இணைந்திருக்கிறது. அதேபோல மனிதனைப் பற்றிய அறிவில் இந்த இரண்டு சைதன்யமும் இணைந்திருக்கிறது.
காட்டில் வாழ்கின்ற மான்கள் சிங்கத்தின் கர்ஜனையை கேட்டவுடன் அதன் காதுகள் விறைப்புடன் மேலெழுந்து நிற்கும். எந்த திசையிலிருந்த இந்த கர்ஜனை வருகிறது என்ற கவலையுடன் சுற்றும் முற்றும் பார்க்கிறது. ஆனால் சிங்கத்தின் கர்ஜனையானது இயற்கையாகவே எந்த திசையிலிருந்து வருகிறது என்பதை யூகிக்க முடியாத வகையில் இருக்கிறது. எனவே சில நேரங்களில் அது இருக்கும் திசை நோக்கியே மான்கள் ஓடிச்சென்று இரையாகிவிடுகிறது. மான்கள் காதுகள் ஆபத்தான ஒலியை கேட்கும்போது தூக்கி நிறுத்துகிறதோ அதுபோல மனிதர்களுக்கும் தன்னைச் சுற்றி நடக்கின்ற ஆபத்தான சம்பவங்களின் போதும் பயங்கலந்த பதட்டம் தோன்றி மனதை வாட்டும். இந்த நேரத்தில்தான் சைதன்யம் வெளிப்படுகின்றது. இந்த சைதன்யத்தை நிர்விகல்ப சைதன்யமாகும்.
ஆழ்ந்த உறக்கத்தில் மூலாவித்யாவினால் மூடப்பட்ட பிரம்மத்தை சாமான்ய ஸத்தா என்ற வடிவத்தில் அனுபவிக்கிறோம். பிரம்மத்தின் இருப்பை மட்டும் உணர்கிறோம். ஆனால் விழிப்பு நிலையில் சில விசேஷ சமயங்களில் சாமான்ய சித்தை (சைதன்யத்தை) அனுபவிக்கிறோம். ஆனால் அறிவாக மாறுவதில்லை. உண்மையான உபதேசத்தை கேட்கும்போது மட்டுமே இது குறிப்பிட்ட விழிப்புணர்வாக மாறும். அதை தேடுபவருக்கு முக்கியமான தகவல்களை தெரிவிக்கும். இதன்மூலம் விழிப்புணர்வு சப்த ஞானமாக மாறி பிரம்மஞானமாக ஏற்படும்.
வேதாந்தத்தின் குறிக்கோள் பிரம்மஞானத்தை அடைவதுதான். பிரம்ம அனுபவம் மிகவும் சுலபமானது. சாமான்ய ஸத் அனுபவத்தை பெற உறங்க வேண்டும். சாமான்ய சைதன்ய அனுபவத்திற்கு எதையாவது அனுபவிக்கும் போது மிகவும் கவனம் செலுத்தி பார்க்க வேண்டும். நான் முழுகவனத்தை செலுத்துகிறேன் என்று சொல்லும்போது முழு சைதன்யத்தை குறிக்கிறது. ஏனெனில் அந்த நேரத்தில் தன்னை ஒருநபராக அறிந்திருக்கவில்லை.
மூலாவித்யாவை நீக்குவது என்பது ஆவரண சக்தியை நீக்குவதும், விக்ஷேப சக்தயை பொய்யாக்குவதாகும். விக்ஷேப சக்தியை நீக்கிவிட்டால் உலகம் மறைந்து விடும். இவ்வாறு மூலாவித்யாவை நீக்கிவிட்டால் உலகம் பொய்யாக தோன்றிக் கொண்டிருக்கும், ஆவரண சக்தி மறைந்து விட்டிருக்கும். இந்த நிலையே சம்சார விடுதலையாகும். இந்த விடுதலையை மகாவாக்கிய விசாரத்தின் மூலமாக அடைந்த அறிவினால் அடையப்படும்.
நிதித்யாஸனம் மோட்சத்தை அடைவதற்கோ, ஆத்மஞானத்தை அடைவதற்கோ செய்யப்படுவதில்லை. சாதகனிடத்திலிருக்கின்ற முப்பரிமான வடிவத்தை நீக்குவதற்காக செய்யப்படுகின்றது. வேதாந்த சாதகன் தன்னுடைய அன்றாட செயல்பாடுகளுக்கிடையே இருந்தாலும் முப்பரிமான வடிவத்திற்கு நழுவி சென்று விடமாட்டேன் என்று சபதம் எடுக்க வேண்டும். இருந்தாலும் நழுவி சென்று விடாமல் இருப்பதற்காக உபயோகப்படுத்துகின்ற சாதனமே நிதித்யாஸனமாகும். இந்த சாதனம் மூலம் சம்சார விடுதலையேற்படாது. மகாவாக்கிய விசாரத்தின் மூலமாகத்தான் ஆத்மஞானம் ஏற்படுமேயொழிய வேறெந்த சாதனத்தாலும் சம்சார விடுதலையை அடையமுடியாது.
கேள்வி: ஒரு வாக்கியம் பல அர்த்தங்களைக் கொடுக்கலாம் அல்லது ஒன்றையும் அதன் பல அம்சங்களையும் வெளிப்படுத்தலாம். பிரம்மன் எப்படி விளக்கப்படுகிறது?
பதில்: பிரம்மன் எந்தத்தன்மைகளும் இல்லாதவொன்றாக வரையறுக்கப்-படுகிறது. எந்தத்தன்மைகளுமற்ற ஒன்றை எந்த வாக்கியமும் விளக்க முடியாது. கர்மகாண்ட வாக்கியமோ, ஞானகாண்ட வாக்கியமோ விளக்க முடியாது. கேனோ உபநிஷத்தில் சீடன் குருவிடம், நான் பிரம்மத்தை அறிந்திருக்கிறேன் என்று நினைக்கவில்லை, பிரம்மத்தை அறியாமலும் இல்லை என்று கூறுகிறான். இதிலிருந்து பிரம்மத்தை வாக்கிய உபதேசத்தால் விளக்க முடியாது என்று விளங்குகிறது.
தத்-த்வம்-அஸி என்ற மகாவாக்கியத்தில் ஜீவாத்மாவிடத்திலுள்ள அம்சங்களை த்வம் என்ற சொல் குறிக்கின்ற பொருளிலிருந்தும், பரமாத்மாவிடத்து உள்ள உபாதிகளை தத் என்ற சொல் குறிக்கின்ற பொருளிலிருந்தும் நீக்கிவிட்டால் உபாதிகளற்ற பிரம்மமே மிஞ்சி நிற்கும்.
விசிஷ்டாத்வைதம் நிர்குண வஸ்துவை ஏற்றுக் கொள்வதில்லை. எல்லா குணங்களையும் நீக்கிவிட்டால் ஒன்றும் மிஞ்சி நிற்காது என்பது அந்த தத்துவத்தின் வாதமாகும்.
இந்த வாதத்திற்கு வித்யாரணய சுவாமிகள் பதில் கொடுத்திருக்கிறார். ஒரு அறைக்குள் நுழையும்போது அதனுள்ளே உள்ள காற்று உட்பட அனைத்தும் நீக்கிவிட்டால் இப்போது அறைக்குள் என்ன இருக்கிறது என்ற கேள்வி கேட்கும் போது ஒன்றுமில்லை என்று சொல்வோம். ஒன்றுமில்லை என்ற சொல்லும் போது அங்கு ஆகாசம் மட்டுமே இருக்கிறது என்றும் அதுதான் நீக்கிய பொருட்கள் அனைத்திற்கும் இடம் கொடுத்திருக்கிறது என்று புரிந்து கொள்கிறோம். சூட்சமமான ஆகாசம் ஒன்றிருக்கிறது என்று அறியப்படுகிறது. அதேபோல ஜீவன், ஈஸ்வரன் ஆகியவர்களிடத்திலுள்ள உபாதிகளை நீக்கியப்பிறகு சுத்த சைதன்யம் மட்டும் எஞ்சி நிற்கிறது. அதுவே ஒரு வஸ்துவாக அறியப்படுகிறது.
வேதாந்தமும் இந்த இல்லாதைவொன்ற அறிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. இந்த இல்லாதவொன்றுதான் அடையப்படவேண்டிய உண்மையாகும். இதையறிந்துக் கொண்டுவிட்டால் சம்சாரத்திலிருந்து விடுதலை பெற்றுவிடுவோம். இதையே ஆத்மாவென்றும், சைதன்யமென்றும் அழைக்கப்படுகிறது. இந்த சைதன்யம் மகாவாக்கிய சிரவணத்தின் போதே வெளிப்பட்டுவிடும்.. ஜீவ-ஈஸ்வர உபாதிகளை நீக்கிவிடும் போது இந்த ஞானம் அடையப்படுகிறது. எனவே அத்வைத ஞானத்தை அடைவதற்கு நிர்விகல்ப சமாதியோ, எந்தவித தவமோ, தியானமோ தேவையில்லை.
மகாவாக்கியத்தின் விசாரத்திற்கு பிறகு நான் சம்சாரி, துக்கப்படுபவன் என்று எப்போதும் சொல்லவே கூடாது. இந்த அணுகுமறையே இரட்டைவடிவ நிலை என்று அழைக்கப்படுகிறது.
சாந்தோக்ய உபநிஷத், பரமாத்மா உன்னருகே இல்லை, உன்னுள்ளேயும் இல்லை, அதுவாகவே நீ இருக்கிறாய் என்று உபதேசிக்கிறது.
மூன்று படிகளான சாமாதிமகரண்ய சம்பந்தம், விசேஷண-விசேஷ்ய சம்பந்தம், லக்ஷண-லக்ஷ்ய சம்பந்தம் ஆகியவற்றை கவனமாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இவைகள் விரிவாக வேதாந்த சாரம் என்னும் நூலில் உதாரணத்துடன் விளக்கப்பட்டிருக்கிறது.
சொற்களுக்கிடையே உள்ள உறவைக் குறிப்பது சாமானாதிகரண்யம் என்று அழைக்கப்படுகிறது. விசேஷன-விசேஷ்யம் என்பது வாக்கியத்தில் உள்ள சொற்களின் அர்த்தங்களுக்கிடையே உள்ள உறவைக் குறிக்கிறது. லட்சிய-லட்சண உறவு என்பது வாக்கியத்தின் வாக்கியார்த்தத்திற்கும், லட்சியார்த்தத்திற்கும் இடையே உள்ள உறவைக் குறிக்கிறது.
உதாரணமாக (5 +3) = (9-1) என்ற சொல்லும்போது கணித ஆசிரியர் மாணவனிடம் எதிர்பார்ப்பது அதற்கான விடையான 8 என்பதாகும். இங்கே தெரிகின்ற பகுதியில் இருந்து தெரியாத பகுதியை அறிந்து கொள்வது போல ஜீவாத்மா, பரமாத்மா ஆகியவைகளுக்கிடையே தெரிகின்ற வாக்கியார்த்மான உபாதிகளை விட்டுவிட்டு தெரியாத பிரம்ம தத்துவத்தை அறிந்து கொள்வதே லட்சியார்த்தமாகும். இவ்வாறு வாக்கியார்தத்தை விட்டுவிட்டு லட்சியார்தத்தை எடுத்துக் கொள்ளும்போது இந்த இரண்டிற்குமிடையே சம்பந்தம் இருக்க வேண்டும். மகாவாக்கிய விசாரத்தில் வாச்யார்த்த ஜீவாத்மாவை விட்டுவிட்டு லட்சியார்த்த ஆத்மாவை எடுத்துக் கொள்கிறோம். எந்தக் குணங்களும் இல்லாத ஆத்மாவை லட்சியார்த்தத்தின் மூலமாக உணர்ந்து கொள்ள வேண்டும். இதேபோல வாச்சியார்த்த பரமாத்மாவை விட்டுவிட்டு லட்சியார்த்த ஆத்மாவை உணர்ந்து கொள்ள வேண்டும். வாச்யார்த்தம் முதன்மைப் பொருளைக் குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.. லட்சியார்த்தம் இரண்டாவதுப் பொருளைக் குறிக்கிறது. இரண்டாம் அர்த்தமான லட்சியார்த்தம் ஆத்மாவானது முதன்மை அர்த்தத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் குணங்களுடைய ஜீவாத்மா, பரமாத்மா ஆகியோரிடமிருந்து குணங்களற்ற ஆத்மாவை அடையமுடியும்.
கேள்வி: மகாவாக்கிய லட்சியார்தத்தின் மூலம் பிரம்மத்தை அடைய முடியாது. ஏனெனில் வாச்யார்தத்தை அடைவதற்கு, அது வாச்யார்தத்துடன் இணைத்து பார்க்க வேண்டும். பிரம்மன் எதனோடும் உறவற்றது, குணங்களற்றது என்று சொல்லும் போது எப்படி லட்சியார்த்தமான இது வாச்யார்தத்துடன் உறவு வைக்க முடியும். அப்படி லட்சியார்த்த உறவு இருக்கிறது என்று சொன்னால் அது குணங்களற்றதாக இருக்க முடியாது. பிரம்மன் குணங்களற்றது என்றும், லட்சியார்த்தம் என்று கூறினால் அதை விளக்கவும்.
பதில்: அதிஷ்டானமாக இருக்கின்ற நிர்குண பிரம்மத்திற்கும், சகுண பரமாத்மாவிற்கும் இடையே விசித்திரமான ஒரு உறவு இருக்கிறது. இந்த உறவை புரிந்து கொண்டால் திருப்தியுடன் லட்சியார்தத்தை ஏற்றுக் கொள்ளலாம்.
மகாவாக்கியம் உணர்த்துவது மனம் த்வம் பத வாச்யார்த்தம், ஆத்மா லட்சியார்த்தமாகும். வாச்யார்தத்திலிருந்து ஆத்மாவிற்கு செல்லவேண்டும் என்பதை சாதகன் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த பயணம் அகங்காரத்திலிருந்து சாட்சி சைதன்யத்தையும், சிதாபாஸத்திலிருந்து சித்திற்கும் செல்வதாக இருக்கவேண்டும்.
ஆசாரியார் சுட்டிக்காட்டுவது, மனதிற்கு உணர்வமயமாக இயங்குவதற்கான இயல்பான தகுதி கிடையாது. ஆத்மாவின் உதவியால் இது அறிவுபூர்வமாக, உணர்வுமயமாக இயங்குகிறது. மனம் அறியப்படுகின்ற பொருளாக மட்டும் இல்லாமல், ஜாகரத் அவஸ்தையில் தோன்றியும், ஆழ்ந்த உறக்கத்தில் மறைந்தும் காணப்படுகிறது. இன்னொரு உண்மை மனம் ஒரு ஜடமான வஸ்து, பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டது. ஆத்மாவின் பிரதிபலிப்பான சிதாபாஸத்தின் உதவியால் அது உணர்வுமயமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆத்மாவைப் போல தோன்றிக் கொண்டிருக்கிறது.
ஆத்மா-அகங்காரத்திற்கும் இடையே உள்ள உறவு செயல்-விளைவு உறவாகும். எனவே மனம் வாச்யார்த்தமாகவும், மனதை இயங்கவைக்கின்ற ஆத்மா லட்சியார்த்மாகவும் இருக்கமுடிகிறது.
ஆத்மாவை காரணம் என்று சொல்லும் போது அது எந்த செயலும் செய்யாமல் தன்னுடைய இருப்பினாலே பொய்யான ஆத்மாவை உருவாக்குகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். ஆத்மாவின் இருப்பினாலே மனமானது பொய்யான நானாக செயல்படுகிறது. இதனால் ஆத்மா விவர்த்த காரணம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆதலால்; சாதகன் அகங்காரத்திலிருந்து மாறாத கூடஸ்தனை அறிந்து கொள்ள வேண்டும். பாக-தியாக லட்சணை பயன்படுத்தி அகங்காரத்தை நீக்கிவிட வேண்டும்.
ஸதாத்மா என்ற சொல்லை இரண்டு வழிகளில் பிரிக்கலாம். ஒன்று ஸதா+ஆத்மா ஆகும். இதன் அர்த்தம் உண்மையான-நான். இது மூன்று அவஸ்தைகளிலும் தொடர்ந்து இருக்கும். பொய்யான-நான் ஆழ்ந்த உறக்கத்தில் மறைந்துவிடும் மற்ற இரண்டு அவஸ்தைகளில் இருக்கும். இரண்டாவது பிரிவு ஸத் + ஆத்மா ஆகும். இதுதான் மிகவும் விரும்பத்தக்கதாகும்.
ஆத்மாவின் மாறான தன்மை அதனுடைய இயல்பாகும். மேலும் இது எந்த நிபந்தனைகளுக்கும் உட்பட்டதல்ல. அதாவது இதனுடைய இருப்புக்கு எதனையும் சார்ந்திருப்பதில்லை. சூடான நீரில் உள்ள சூடானது நிபந்தனைக்குட்பட்டது. அதாவது அது சூடாக இருப்பதற்கு நெருப்பின் சூட்டை பெற்றிருக்கிறது. ஆனால் நெருப்பிறகு சூடுத்தன்மை இயல்பானதாகும். ஆத்மாவிற்கு உணர்வுமயமும், இருத்தலும் இயல்பான தன்மைகளாகும். இவைகள் இயல்பான தன்மைகள் அல்ல. இவைகளை ஆத்மாவிடமிருந்து பெற்ற உணர்வுமயமாக, அறிவுமயமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
பொய்யான-நான் வாச்யார்த்தம், உண்மையான-நான் லட்சியார்த்தம். இந்த இவையிரண்டுக்குமிடையெ காரிய-காரண சம்பந்தம் இருக்கிறது. பொய்யான-நான் உண்மையான-நான் என்கின்ற ஆத்மாவால் உருவாக்கப்படுகிறது. பொய்யான-நான் லட்சணம், உண்மையான-நான் லட்சியம் என்று அழைக்கப்படுகிறது. அதனால் இவையிரண்டுக்குமிடைய லட்சிய-லட்சண சம்பந்தமும் இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.
பின்வரும் எளிய ஒப்புமை வாச்யார்த்தத்திற்கும், லட்சியார்த்தத்திற்கும் இடையிலான சம்பந்தத்தை எளிதில் புரிந்து கொள்ள உதவும். நாம் நிலைக்கண்ணாடியின் முன் நின்றுகொண்டு நம் முகத்தை பார்க்கிறோம். உண்மையில் நம் முகத்தை நம்மாலே பார்க்கமுடியாது. நாம் கண்ணாடிமுன் நின்றாலே போதும் அதனால் நம் முகத்தை காட்டிக் கொடுக்க முடியும். இதன்மூலம் பொய்யான முகத்தை நாம் பார்க்க முடிகிறது. பிம்பமுகத்தை நான் என்று நாம் கூறுகிறோம். அதற்கு பொய்யான இருப்பை நாம்தான் கொடுக்கிறோம். பிம்பமுகத்தை பார்த்தாலும் அது நம்முடைய உண்மையான முகம் என்று புரிந்து கொள்கிறோம். பிம்பமுகத்திற்கு பொட்டு வைப்பதுபோல இருந்தாலும் நம் முகத்திற்குத்தான் பொட்டு வைக்கிறோம்.
கண்ணாடியில் தெரிகின்ற நம் முகத்தை வாச்யார்த்தமாகவும், உண்மையான முகத்தை லட்சியார்த்தமாகவும் பொருட்படுத்துகிறோம். பொய்யான முகத்தைப் பார்த்துக் கொண்டே உண்மையான முகத்தினுடைய அபரோக்ஷ ஞானம் ஏற்படுகிறது. அதுபோல சாதாரண பேச்சு வழக்கில் ஒருவர் நான் என்ற சொல்லை பயன்படுத்தும்போது பொதுவாக மாற்றத்தையுடைய பொய்யான-நான் மட்டுமே குறிப்பிடுகிறார். உதாரணமாக எனக்கு வயதாகிறது என்ற வாக்கியத்தில் உள்ள பெயர்ச்சொல் மாற்றத்தையுடைய அகங்காரத்தை குறிக்கிறது. ஆனால் உபநிஷத் தத்-த்வம்-அஸி என்று சொல்லும்போது சாதகன் மாறாத ஆத்மாவை புரிந்து கொள்கிறான். மாற்றத்தையுடைய உணர்வமயம் காரியம், மாறாத உணர்வுமயம் காரணம் என்று மறைமுகமாக தெரிய வருகிறது.
மகாவாக்கிய சிரவணத்தின் போதே மாற்றத்தையுடைய உணர்வுமயத்தில் இருந்து மாறாத உணர்வமயத்திற்கு மாறிவிட வேண்டும் என்று ஆசாரியார் அறிவுறுத்துகிறார்
ஆத்மா உணர்வுமயத்தையும், இருத்தலையம் கொண்டிருக்கிறது. மனமும் இதையே கொண்டிருக்கிறது. மனதின் இருத்தலுக்கும், ஆத்மாவின் இருத்தலுக்கும் என்ன வேறுபாடு? மனதின் உணர்வுமயத்திற்கும், ஆத்மாவின் உணர்வுமயத்திற்கும் என்ன வேறுபாடு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
ஆசாரியார் இதை விளக்குகிறார். மனதிலுள்ள உணர்வையும், இருத்தலையும் ஆத்மாவின் உணர்வும், இருத்தலும் உருவாக்குகிறது. அவைகள் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. ஒன்று மனதைச் சார்ந்தது. மற்றொன்று ஆத்மாவைச் சார்ந்தது. இந்த வேறுபாட்டைச் சாதகன் நன்கு உணர்ந்து விட்டால், அவனால் வாச்யார்த்தத்திலிருந்து லட்சியார்த்தத்திற்கு நம்பிக்கையுடனும், தடையில்லாமலும் செல்ல முடியும். அதேபோல லட்சியார்தத்தில் இருந்து வாச்யார்த்தத்திற்கு செல்ல முடியும். சம்சார சம்பந்த விவகாரங்களோ, அனுபவங்களோ எதிர்நோக்கும் போது பொய்யான நானிலிருந்து உண்மையான நானுக்கு செல்ல முடியும். சம்சார விடுதலைக்கு வேறெந்த வழியும் கிடையாது. பொய்யான நான் எப்பொழுதும் நம்மை சம்சாரத்தில் வைத்திருக்கும். உண்மையான நான் சம்சாரத்தைக் கொடுக்காது.
ஆசாரியார் சொல்ல விரும்புவது, மனம் மட்டுமே பொய்யான நானாக உலக விவகாரங்களில் ஈடுபடும்போது செயல்படுகிறது. மனம் இவ்வாறு நானாக (ஆத்மாவாக) செயல்பட தகுதியற்றது என்று இரணடு காரணங்களைக் கொண்டு புரிந்து கொள்ளலாம். ஒன்று இயல்பாகவே இது ஜடமானது. மற்றொன்று இது அனுபவிக்கப்படும் பொருளாக இருக்கின்றது. ஆத்மாவின் உதவியினால் மனம் உணர்வுமயமாக, ஆத்மாவைப்போல நான் என்ற அகங்காரத்தோடு உலக விவகாரங்களில் செயல்படுகிறது.
ஆத்மாவும் அகங்காரமும் காரிய-காரண சம்பந்தத்துடன் கூடியது என்று ஆசாரியார் நிலைநாட்ட முயற்சிக்கிறார். இப்படி நிலைநாட்டிவிட்டால், பொய்யான-நான் என்கின்ற அகங்காரமே காரியமாக இருந்து கொண்டு உலகவிவகாரங்களில் செயல்படுகிறது இதையே வேதாந்தம் உண்மையான காரண நான்(ஆத்மா) என்று உபதேசிக்கிறது. நன்கு வேதாந்தம் படித்த சாதகன் நான் என்ற சொல் எப்போது பொய்யான நானாக இருக்கிறது என்றும், எப்போது உண்மையான நானாக இருக்கிறது என்றும் வேறுபடுத்திப் பார்க்கும் அறிவை அடைந்திருக்க வேண்டும்.
ஆத்மா இரண்டு முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது. அவைகள் உணர்வுமயம்(கூடஸ்த போதம்), இருத்தல்(பிரத்யக்ஷயம்) ஆகும். ஆத்மா தனது உணர்வுமயத்தையும், இருத்தலையும் ஜடமான மனதிற்கு கொடுத்து தன்னை மாதிரி செயல்படவைக்கிறது.
ஆத்மாவின் குணங்களாக கூறப்பட்டவைகளை பாரமார்த்திகம் என்றும், மனதின் குணங்களை வ்யாவஹாரிகம் என்று அழைக்கப்படும். ஆதலால் ஆத்மா பாரமார்த்திக போத்ருதா, பாரமார்த்திக ப்ரத்யகதா ஆகியவற்றை உடையது என்றும், மனம் வ்யாவஹாரிக போத்ருதா, வ்யவஹாரிக ப்ரத்யக்தா ஆகியவற்றை உடையது என்றும் கூறப்படுகிறது.
இனி ஆத்மாவைச் சார்ந்த பாரமார்த்திக போத்ருதா, ப்ரத்யகதா ஆகியவற்றிற்கும் மனதைச் சார்ந்த வ்யாவஹாரிக போத்ருதா, ப்ரத்யக்தா ஆகியவற்றிற்கும் என்ன வேறுபாடு என்று விளக்கப்படுகிறது.
மனதைச் சார்ந்த அனுபவ உணர்வு மாற்றத்திற்குட்பட்டது. வேதாந்த வகுப்பின் தொடக்கத்தில் மனம் பிரகாசமாக இருக்கும். அதனால் உணர்வும் பிரகாசமாக இருக்கும். நேரம் செல்ல செல்ல மனம் சோர்வடைந்திடும், உணர்வும் சோர்வடைந்து விடும். இந்த அனுபவ உணர்வே பானையைப் பற்றிய அறிவு, மரத்தைப் பற்றிய அறிவு போன்ற அறிவுகளாக இருக்கிறது.
மனதின் அனுபவ-நான்; என்பது மனம் அனுபவ செயல்பாட்டின் போது நான் என்ற வார்த்தையின் பொருளாக இருப்பதை தவிர வேறில்லை. அனுபவத்தைக் கொடுக்கின்ற செயல்களில் ஈடுபடும்போது குறிக்கப்படுகின்ற நான் என்ற சொல் ஆத்மாவை குறிக்கவில்லை, மனதிலுள்ள அனுபவ-நான் என்ற சொல்லின் பொருளைக் குறிக்கின்றது. அனுபவ உணர்வும், அனுபவ-நான் என்ற சொல்லும் பிரிக்கமுடியாத மனதின் குணங்களாக இருக்கிறது.
ஆத்மாவுக்கும் உணர்வுக்கும் இடையேயும், ஆத்மாவுக்கும் இருத்தலுக்கும் இடையேயும் பொருள்-குணங்கள் சம்பந்தம் கிடையாது. ஆனால் மனம், உணர்வு இவைகளுக்குமிடையேயும், மனம், இருத்தல் ஆகிய இவைகளுக்குமிடையேயும் பொருள்-குணங்கள் சம்பந்தம் இருக்கிறது
த்வம்-பத வாச்யார்தமான அகங்காரம் என்கின்ற மனம் இருத்தல் மற்றும் உணர்வை உடையது. சாட்சியான ஆத்மாவிடத்திலும் உணர்வு, இருத்தல் என்பது இருக்கிறது. ஆனால் மனம் என்பது பொருளாகவும், உணர்வு, இருத்தல் ஆகியவைகள் அதனுடைய குணங்களாகவும் இருக்கிறது. ஆத்மாவிடத்தில் இந்த பொருள்-குணங்கள் சம்பந்தம் இல்லாததால் ஆத்மாவே உணர்வாகவும், இருத்தலாகவும் இருக்கிறது. எனவே மூன்றும் ஒன்iறையே குறிக்கிறது. இவைகளை ஆத்மாவிடத்திலிருந்து பிரித்து பார்க்க முடியாது.
ஒரு பொருளிடத்திலிருந்து அதனுடைய குணங்களை கீழ்கண்ட வகையில் பிரித்து பார்க்கலாம். 1. பொருள் அதன் நிறம், 2. பொருள் அதன் வடிவம், 3. பொருள் அதன் மணம் ஆகியவைகளாகும். ஆனால் சாட்சி ஆத்மாவுக்கும் அதனுடைய குணங்களான உணர்வு,இருத்தல் ஆகியவற்றிற்குமிடையே பிரித்தல் என்பது முடியவே முடியாது.
அகங்காரத்தையும், ஆத்மாவையும் பிரித்துவிடலாம். ஜாக்ரத் அவஸ்தையில் அகங்காரம் செயல்பட்டுக்கொண்டு விழித்துக் கொண்டிருக்கும். அகங்காரத்தின் முதன்மையான செயல் உலகத்தின் இருப்பைக் காட்டிக் கொண்டிருக்கும். அகங்காரம் ஒடுங்கிய நிலையில் த்வைதம் மறைந்துவிடும், உலகமும் மறைந்து விடும். மனதை வாட்டிக் கொண்டிருக்கும் பிரச்சனைகளும் ஒடுங்கிவிடும்.
சம்சார விடுதலைக்கு அகங்காரத்தை பொய்யாக்கிவிடுவதே இறுதி தீர்வாகும். ஆழ்ந்த உறக்கத்தில் அகங்காரம் தற்காலிகமாக ஒடுங்கிவிடுவதால் அமைதியை அனுபவிக்கிறோம். அதேமாதிரி நிர்விகல்ப சமாதியிலும் அகங்காரத்தை ஒடுக்கி விடுவதால் மனவமைதியை அனுபவிக்கிறோம். சமாதி கலைந்ததும் மீண்டும் அகங்காரம் வந்துவிடுவதால் சம்சாரத்தை அனுபவிக்கிறோம். வேதாந்தத்தில் மட்டும் மகாவாக்கிய விசாரத்தின் மூலம் சாதகன் புரிந்து கொள்வது, அகங்காரம் என்பது எனக்கு வேறாகவுள்ள ஒன்று என்றும், மூலாவித்யாவின் காரியம் என்றும், பொய்யானவொன்று என்றும், மூன்று காலங்களிலும் எந்த தொந்தரவும் கொடுக்காதது என்றும் புரிந்து கொள்கிறான். இவ்வாறு அகங்காரத்தை பொய்யாக்கி விடுவதே நிலையான தீர்வாகும். இது என்னுடைய ஒரு பகுதி கிடையாது என்றும் புரிந்து கொள்கிறான்.
ஜாகரத் அவஸ்தையின் போது அகங்காரத்தை பயன்படுத்துவதால் சம்சாரத் தொல்லைகளான பயம், கவலை, துன்பங்களை அனுபவிக்கின்றோம். எனவே அகங்காரத்திலிருந்த விடுபட உறக்கத்திற்கு செல்கிறோம். அகங்காரம் என்பது மித்யா என்ற புரிந்து கொள்வது மிக முக்கியமானதாகும். இதனால் அகங்காத்தோடு தொடர்பு கொண்டாலும் அதனால் பாதிக்கப்படமாட்டோம். இதை உணர்ந்து கொள்வதே மோட்சமாகும். ஆதலால் பொய்யான அகங்காரத்தோடு பொய்யான உறவு கொள்வதனால் எந்த பாதிப்பும் அடையமாட்டோம். நான் மூன்று காலங்களிலும், அவஸ்தைகளிலும் சுதந்திரமாக இருப்பவன்.
நான் மோட்சத்தை எதிர்நோக்கவில்லை என்ற நிலையே வெற்றிகரமான முடிவாகும். அகங்காரம் வாசனைகளையும், விருப்பத்தையும் அடிப்படையாக கொண்ட எண்ணங்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றை உடையாதாகும். இந்த வகையான அகங்காரம் தொடர்ந்திருக்கட்டும். அவைகளில் சில நிர்வகிக்கலாம், குறைக்கலாம், பல நிர்வகிக்கவும் முடியாது, குறைக்கவும் முடியாது. ஆனால் இதனால் எனக்கு ஒன்றும் கவலையில்லை. நான் இவைகளை பார்த்துக் கொண்டிருக்கின்ற சாட்சியாக இருக்கிறேன்.
சாதகன் வெற்றிகரமான முக்கோண வடிவமைப்பை (ஜீவ-ஈஸ்வர-ஜகத்) விட்டு வெளி வந்து விடவேண்டும். இந்த அமைப்பில் அகங்காரம் உண்மைப் போல ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும். இந்த நிலையில் எல்லா துன்பங்களை போக்கிக் கொள்வதற்கு ஈஸ்வரனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருப்போம். எனவே சாதகன் அகங்காரம் பொய்யென்று விடாமுயற்சியுடன் நினைவில் கொண்டுவர வேண்டும். இதனால் சம்சாரத்திலிருந்து விடுபட்டு அதையே பொழுதுபோக்காக பார்த்துக் கொண்டிருப்போம்.
மனதைக் கொண்டுதான் நான் பிரம்மன் என்று உணர்ந்து கொள்ள முடியும். எனவே மனதை அழிக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. உண்மையில் சாதகன் எல்லா நேரங்களிலும் முதன்மையான உணர்வான ஆத்மாவுடன் இரண்டாவதாக இருக்கின்ற உணர்வுமயமான மனதோடு இணைந்தே ஜாக்ரத் அவஸ்தையில் செயல்படுகிறான். ஆழ்ந்த உறக்கத்தில் முதன்மை உணர்வுமயமான ஆத்மாவுடன் மட்டும்தான் இருக்கிறான். மனதை பயன்படுத்துவதில் எந்த தொந்தரவும் கிடையாது. இது மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும். வேதாந்த உபதேசத்தைக் கேட்பதிலும், புரிந்து கொள்வதிலும் மனம் தேவைப்படுகிறது. ஆதலால் வேதாந்தம் மனதை நீக்கவில்லை. எனவே அகங்காரத்தை நீக்காமல் அதை கருவியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு பொருளின் மாறாத, பொதுவான தன்மையையே சாமான்ய தர்மம் என்றும், மாற்றங்களை உடைய அம்சங்களை விசேஷ தர்மங்கள் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு தர்மங்களையும் சேர்ந்திருப்பது லட்சணம் எனப்படுகிறது. இதிலிருந்து ஆசாரியார் சொல்ல விரும்புவது இரண்டாம் உணர்வுமயமமானது மாற்றங்களை உடைய அகங்காரமே என்றும், பரிணாமி-நான் என்றும், மாறுகின்ற பொருளாக இருக்கிறது என்றும் அறிந்து கொள்ள முடிகிறது.
சாஸ்திரத்தில் அங்கீகாரம் செய்யும்முறை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. வேதாந்தம் படிக்கின்றவர்கள் இந்த செயல்முறையை புரிந்து கொள்ள வேண்டும். இந்த செயல்முறை மூன்று நிலைகளை உடையது. ஒரு பொருளை முதன்முறையாக பார்க்கும்போது அந்த நிலையை அறிவை அடைதல் என்று அழைக்கப்படுகிறது. இது பிரத்யக்ஷ பிரமாணத்தின் மூலமாக அடையப்படுகிறது. இரண்டாம் நிலையானது, அந்தப்பொருள் சென்றுவிட்டாலும் அதைப்பற்றிய நினைவு இருப்பது. மூன்றாம் நிலையென்பது முன்பு பார்த்த அந்தப் பொருளை மீண்டும் பார்க்கும்போது அதை அங்கீகாரம் செய்வதாகும்.
உதாரணமாக ஒருவரை இவர்தான் ராமன் என்று நமக்கு அறிமுகப்படுத்தும் போது நாம் அவரைப்பற்றித் தொpந்து கொள்கிறோம். இதுவே அந்த நபர் ராமன் என்பவர் என்ற அறிவானது ஏற்படுகிறது. அவர் சென்றுவிட்ட பிறகும் அவரைப்பற்றிய ஞாபகம் மனதில் இருக்கின்றது. அதே நபரை மீண்டும் சந்திக்கும்போது நம்மால் இவர் ராமன் என்று அங்கீகாரம் செய்ய முடிகிறது. இந்த நிலையில் மாறாத சாமான்ய தர்மத்தையும், மாறுகின்ற விசேஷ தர்மத்தையும் மனதில் கொண்டுவந்து அவரேதான் இவர் என்று தெரிந்து கொள்கிறோம். சமஸ்கிருதத்தில் அறிவாற்றல் என்பதை பிரத்யக்ஷம் என்றும், நினைவில் வைத்துக் கொள்ளுதல் என்பதை ஸ்ம்ருதி என்றும், அங்கீகாரம் என்பதை பிரத்யபிக்ஞானம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு பிரத்யபிக்ஞானத்திலும் பிரத்யக்ஷம், ஞாபகம் இரண்டு கூறுகள் உள்ளன. பிரத்யபிக்ஞானத்தால் வெளிப்படுத்தப்படும் யாவும் மாறுகின்ற வஸ்து என்று கூறப்படுகிறது.
வேதாந்தத்தின் முக்கிய கருத்து: ஆத்மா சாமான்ய, விசேஷ தர்மங்களுக்கு அப்பாற்பட்டது என்பதாகும். சாமான்யம் என்பது பொதுவானது என்றும், விசேஷம் என்பது குறிப்பிடப்படுவது என்றும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டும் பிரிக்கமுடியாத உறவை கொண்டிருக்கிறது. விசேஷ அம்சம் மாற்றத்திற்குட்படும் போது சாமான்ய தர்மமும் அந்த மாற்றத்தால் பாதிக்கப்படுகிறது. சாமான்ய தர்மத்தின் தொடர்ச்சி இருந்து கொண்டிருந்தாலும் அது மாற்றத்தினால் பாதிக்கப்படுகிறது. ஏனெனில் அது மாறுகின்ற விசேஷ தர்மத்துடன் சம்பந்தம் வைத்திருக்கிறது.
இந்த நிலையில், ஒரு வஸ்து(மேட்டர் மாறாத நித்தியமான என்ற ஒன்று, மாறுகின்ற நித்தியமான என்ற மற்றொன்று என்று இரண்டு வகை இருக்கிறது என்று தெரிந்து கொண்டாலே போதும். இந்த வஸ்து மாறிக்கொண்டும், தொடர்ந்து இருந்து கொண்டுமிருக்கிறது. ஆனால் ஆத்மா மாறாமல் தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கிறது. ஆத்மாவிடம் சாமான்ய, விசேஷ தர்மங்கள் இல்லை.
அகங்காரத்தை அல்லது மனதைக் குறிக்கின்ற த்வம்பத வாச்யார்த்தத்திற்கும், லட்சியார்த்தத்திற்குமிடையே உள்ள வேறுபாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன”
1. ஆத்மா முதன்மையான நான் ஆகும், மனம் இரண்டாவது நான் ஆகும்.
2. ஆத்மா இயல்பான உணர்வுமயமானது, மனம் அதை ஆத்மாவிடமிருந்து பெறுகிறது.
3. ஆத்மா மனதை பார்க்கிறது, மனம் உலகத்தைப் பார்க்கிறது.
4. ஆத்மா நிலையான பார்ப்பவனாக இருக்கிறது, மனம் தற்காலிகமான பார்ப்பவனாக இருக்கிறது.
5. ஆத்மா மாறாத பார்ப்பவன், மனம் மாற்றத்தையுடைய பார்ப்பவன்
6. ஆத்மா செயலெதுவும் செய்யாமலே தன்னுடைய இருப்பாலே பார்ப்பவனாக இருக்கிறது, மனம் பார்ப்பவனாக இருப்பதற்கு உணர்வு தேவைப்படுகிறது.
இவைகளே முக்கியமான த்வம்-பத வாச்யார்த்தம், த்வம்-பத லட்சியார்த்தம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளாகும்.
மனம் மாற்றத்திற்குட்பட்டதால் அதை பரிணாமி என்று அழைக்கப்படுகிறது.
ஆத்மா மாற்றத்திற்குட்படாததாக இருப்பதால் அதை கூடஸ்தன் என்று அழைக்கப்படுகிறது. ஆசாரியார் இங்கே பரிணாமி மனதிற்கும், கூடஸ்தன் ஆத்மாவிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை எடுத்துக் காட்டுகிறார்.
எந்தவொரு மாற்றத்திற்கும் இரண்டு விஷயங்கள் தேவைப்படுகிறது. ஒன்று மாற்றத்தின் இருப்பிடமாகும். மற்றொன்று மாற்றத்தின் சாட்சியாகும். இந்த இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன என்பதை பார்ப்போம்.
மாற்றத்தின் இருப்பிடம் என்பது மாற்றத்தை வைத்திருப்பவர் மற்றும் மாற்றத்தால் பாதிக்கப்படுகின்ற வஸ்தாகும். மாற்றங்களை பார்த்துக் கொண்டிருக்கின்ற சாட்சி மாற்றங்களால் பாதிக்கப்படாததாக இருக்கின்றது. மனம் மாற்றங்களைக் கொண்டது, மாற்றங்களின் இருப்பிடமாக இருக்கின்றது, மாற்றங்களால் பாதிக்கப்படுகின்றது. மாறாக ஆத்மா மாற்றங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற சாட்சியாக இருக்கிறது. ஆத்மா மாற்றங்களை உடையதுமல்ல, மாற்றங்களால் பாதிக்கப்படுவதுமல்ல. மனம் பரிணாமி என்றும் ஆத்மா கூடஸ்தன் என்றும் அழைக்கப்படுகிறது. மாற்றத்தையும், மாற்றத்தை பார்ப்பவனையும் புரிந்து கொள்வது பிரத்யபிக்ஞானம் என்ற பிரமாணத்தால்தான். மாற்றத்தின் இருப்பிற்கும், மாற்றத்தை பார்ப்பவனுக்கும் இடையே உள்ள வேறுபாடு இருப்பிடம் என்பது மாற்றத்தையுடையதையும், அதனால் பாதிக்கப்படுவதாகும்; சாட்சி மாற்றத்தை உடையதுமல்ல, அதனால் பாதிக்கப்படுவதுமல்ல.
நான் மாற்றத்திற்குட்பட்டவன், மாற்றத்தின் இருப்பிடம், மாற்றத்தால் பாதிக்கப்படுபவன் என்று குறிப்பிடும்போதெல்லாம், நான் என்ற சொல் பரிணாமி அகங்காரத்தை, உடலை, மனதைக் குறிக்கின்றது. நான் சாட்சி மட்டும்தான், மாற்றத்திற்குட்பட்டவன் அல்ல என்றும், மாற்றங்களால் பாதிக்கப்படுபவன் அல்ல என்று குறிப்பிடும்போது நான் என்ற சொல் ஆத்மாவைக் குறிக்கின்றது. மனம் சாமான்யம், அது விசேஷத்தைக் கொண்டிருக்கிறது, விசேஷத்தால் பாதிக்கப்படுகிறது. மாறாக ஆத்மா விசேஷமும் அல்ல, சாமான்யமும் அல்ல. ஆத்மாவின் சுருக்கமான விளக்கம், அது நிஷ்சாமான்யமும் அல்ல தொடர் சாட்சியாக இருப்பதாகும். அது எந்த விசேஷத்தையும் கொண்டிருப்பதில்லை.
பானையில் உள்ள ஆகாசம் பானை மாற்றமடைந்தாலும், இருக்கிறது. ஆகாசம் மாற்றத்திற்கு உட்பட்டதல்ல. பானை மாற்றத்திற்குட்பட்டது ஆனால் பானைக்குள் இருக்கின்ற ஆகாசம் பானை அழிந்தாலும் இருந்து கொண்டிருக்கிறது. இதேபோல ஆத்மா மாற்றத்தின் இருப்பிடமாக இல்லை.
ஆனால் மாற்றங்களுக்கிடையே இருக்கிறது. மனம் மாற்றங்களின் இருப்பிடமாகவும், மாற்றங்களுக்குமிடையேயும் இருந்து கொண்டிருக்கிறது,
ஆத்மாவிற்கும், மனதிற்கும் இடையே உள்ள வேறுபாடு மேலும் விளக்கப்படுகிறது. நான் உணர்ச்சி வசப்படுகிறேன் என்று சொல்லும்போது இரண்டாவது உணர்வுமயமான மனதைதான் குறிப்பிடுகிறோம். அதேசமயம் நான் பிரம்மனாக இருக்கிறேன் என்று சொல்லும்போது ஆத்மாவை குறிக்கிறோம். இதிலிருந்து இருத்தல் என்பது ஆத்மாவுக்கும் செல்கிறது, மனதுக்கும் செல்கிறது. அதேபோல உணர்வு என்பது ஆத்மாவுக்கும் செல்கிறது, மனதுக்கும் செல்கிறது.
உணர்வும், இருத்தலும் இரண்டிலும் இருக்கும் போது இவையிரண்டிற்கும் என்ன வேறுபாடு என்ற சந்தேகம் எழுகிறது. ஆத்மாவின் இருத்தலுக்கும், மனதின் இருத்தலுக்கும் என்ன வேறுபாடு. ஆத்மாவின் உணர்வுக்கும், மனதின் உணர்வுக்கும் என்ன வேறுபாடு என்ற சந்தேகமும் எழுகிறது.
ஆசாரியார் இந்த இரண்டு உணர்வுகள், இரண்டு இருத்தல் ஆகியவைகளின் தனித்துவமான அம்சங்களைப் பற்றி விளக்குகிறார். பௌதிக உடற்கோணத்தில் இருந்து மனமானது நான் என்றும், மனதின் கோணத்திலிருந்து உடலை நான் என்றும் அழைக்கப்படுகிறது. மனம் பார்க்கப்படும் பொருளாக இருக்கும்போது அது நான் என்ற சொல்லை குறிக்காது. ஆத்மாவைதான் நான் என்ற சொல் குறிக்கும். உடலைக் குறிக்கும்போதுதான் மனம் நான் என்ற சொல்லுக்கு பொருளாக இருக்கும்.
உலகத்தின் பார்வையிலிருந்தும், உடலின் பார்வையிலிருந்தும் மனம் பார்ப்பவனாக இருக்கிறது. ஆனால் ஆத்மா எல்லா நேரங்களிலும் பார்ப்பவனாகவே இருக்கிறது, பார்க்கப்படும் பொருளாக இல்லை. ஆத்மாவின் இருத்தல் முழுமையானது, மனதின் இருத்தலானது வேறொன்றின் அடிப்படையில் நான் என்ற சொல் குறிக்கின்ற பொருளாகிறது. ஆத்மாவின் உணர்வுமயம் இயல்பானது, மனதின் உணர்வுமயம் ஆத்மாவின் உதவியால் கிடைக்கிறது. ஆத்மாவின் விழிப்புணர்வு அதனுடைய இயல்பாகும். மனதின் விழிப்புணர்வுக்கு எல்லா நேரங்களிலும் எண்ணங்களின் மாற்றம் தேவைப்படுகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் எண்ணங்கள் ஒடுங்கி விடுவதால் உலகத்தைப்பற்றிய உணர்வும், தன்னைப் பற்றிய உணர்வும் இல்லாமல் இருக்கிறது. மனதிற்கும், உணர்வுக்கும் இடையே பொருள்-குணங்கள் என்ற உறவு இருக்கிறது. ஆனால் ஆத்மாவிற்கும், உணர்வுக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை. ஆதலால் ஆத்மாவின் உணர்வு அதனுடைய குணமும் அல்ல, அதனிடத்தில் உள்ள செயல்முறையும் அல்ல. இதிலிருந்து உணர்வுமயமானது ஆத்மாவின் இயல்பாகும் என்று ஆசாரியார் சுட்டிக் காட்டுகிறார். ஆத்மா எந்த செயல்முறையும் இல்லாமல் உணரப்படுகிறது. மனம் செயல்முறைகளின் மூலமாக உணரப்படுகிறது. இதுவே ஆத்மாவின் உணர்விற்கும், மனதின் உணர்விற்கும் இடையே உள்ள வேற்றுமையாகும்.
ஆத்மாவும் மனமும் நெருக்கமாக இருக்கின்றது. நான் என்ற சொல்லை பயன்படுத்தும் போது அதில் ஆத்மாவும், மனமும் கலந்திருக்கிறது. இதனால் அறியாமையில் இருப்பவனால் இந்த இரண்டிற்குமிடையே உள்ள தனித்துவத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் இந்த கலவையில் மேலான உயர்ந்த பகுதியையும், கீழான மித்யா பகுதியையும் உணர்ந்து கொள்ள முடியவில்லை. ஆதலால் அன்யோன்ய அத்யாஸம் நடந்துவிடுகிறது.
உலக விவகாரத்தின் போது அகங்காரத்தை பயன்படுத்தலாம். ஆனால் செயலெதும் செய்யாத போது நாம் சாட்சி ஸ்வரூபமாக இருக்க வேண்டும். சாட்சியை மையமாக கொண்டிருக்கின்ற எண்ணங்களும், மனதை மையமாக கொண்டிருக்கின்ற எண்ணங்களும் மனதுக்குள்தான் செல்லமுடியும். எனவே எல்லாவகையான எண்ணங்களுக்கும் இருப்பிடமாக இருப்பது மனம்தான். எந்த வகையான எண்ணம் மனதை ஆதிக்கம் செலுத்துகின்றதோ அதுதான் ஒருவனை சம்சாரியா அல்லது முக்தனா என்று தீர்மானிக்கிறது. யாரொருவன் உலக விவகாரங்களை நடத்துவதற்காக அகங்காரத்தை மையமாகக் கொண்ட எண்ணங்களை கையாள்கிறானோ அவனே அறிவாளி. அகங்காரத்தை மையமாகக் கொண்ட எண்ணங்கள் ஒருவனுடைய மனதை எல்லா நேரங்களிலும் தொந்தரவு செய்தால், அழைக்கழித்தால் அவன் சம்சாரத்தில் இருக்கிறான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
வேதாந்தத்தின் நோக்கம் சாதகனுடைய மனமானது சாட்சி மையமாகக் கொண்ட எண்ணங்களால் ஆட்கொள்ளப்படவேண்டும் என்பதாகும். ஆனால் ஆத்மாவுக்கும், மனதிற்கும் உண்மையான தொடர்பு கிடையாது. மனதை வெளியுலக விவகாரங்களுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். இதை நன்கு புரிந்து கொண்டால் வாழ்க்கையானது பாரமாக இருக்காது. அதற்கு மாறாக மனதுடன் தீவிரமான உறவு கொண்டிருந்தால் வாழ்க்கை துயரகரமாக இருக்கும். மனம் முக்கோணவடிவ தொகுப்புடன் இருப்பதால் அது எப்பொழுதும் பிரச்சனைகளுடனே இருந்து கொண்டு இருக்கும்.
மேற்குறிப்பிட்ட கருத்தையே பகவான் ஆதிசங்கரர் தனது நிர்வாண சதகம், 3வது ஸ்லோகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த கருத்து நிதித்யாசனத்துக்கு மிகவும் உகந்ததாகும். என்னிடத்தில் விருப்பு-வெறுப்பு கிடையாது, என்னிடத்தில் பேராசை, ஆணவம், பொறாமை போன்ற உணர்ச்சிகள் எதுவும் கிடையாது. நான் எப்போதும் ஆசை, கோபம் போன்ற தீயகுணங்களிலிருந்து விடுபட்டவனாக இருக்கிறேன். ஏனெனில் நான், சாட்சி சைதன்யம், மனதுடன் எந்த நேரத்திலும் தொடர்பற்றவனாக இருக்கிறேன். இதனால் மனதில் எழுகின்ற உணர்ச்சிகள் என்னைப் பாதிக்காது. இந்த மாதிரி நிதித்யாசனத்தில் நினைத்துக் கொண்டிருந்தால் சம்சாரத்திலிருந்து விடுதலை அடைந்திடலாம்.
மோட்சத்தை அடைந்து விட்டால் மனதிலிருக்கும் பயத்திலிருந்து விடுதலை அடைந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருப்போம். இந்த சிந்தனை தவறானது. ஏனென்றால் மனதுக்குள் பயம் வருவதை தடுக்கமுடியாது. அதனால் கவலையும்படக்கூடாது. ஆதலால் மனதில் வருகின்ற பயத்தை நீக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. ஆனால் மனதையே நீக்க வேண்டும். மனதில் எந்தவிதமான பயம் வந்தாலும் அவைகள் என்னைச் சார்ந்ததல்ல என்று நினைப்பதால் அதனால் பாதிக்கபடமாட்டோம். மோட்சம் என்பது பயத்தை நீக்குவதல்ல, மனம் என்னைச் சார்ந்ததல்ல என்று அதை நீக்குவதுதான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அனாத்மாவை சார்ந்தவைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
1. முழுவுலகமே அனாத்மாவுக்குள் சேர்க்கப்படுகிறது.
2. உடைமைகள் அனைத்தும் அனாத்மாவுக்குள் வருகிறது
3. தொழில், பெரும்பதவி,புகழ் ஆகியவைகளும் அனாத்மாவுக்குள் வருகிறது
4. குடும்பம் அனாத்மாவாகும்
5. உடலும், மனமும் அனாத்மாவின் பகுதிகளாகும்.
சாதகன் மேற்கூறிய அனாத்மாக்களிலிருந்து தன்னை பிரித்துப் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். மனம் நானல்ல, என்னுடையதுமல்ல என்று உறுதியான நம்பிக்கையிருக்க வேண்டும். மனம் நான்தான் என்பது அகங்காரத்தையும், மனம் என்னுடையது என்பது மமகாரத்தையும் குறிக்கிறது.. இந்த புரிதலை மனதைக் கொண்டே அடையவேண்டும். மனதைக் கொண்டே தன்னை அகங்காரத்திலிருந்து பிரித்துப் பார்த்து புரிந்து கொள்ளவேண்டும். உட்புற சந்நியாசம் என்பது அனைத்து அகங்காரத்தையும் துறந்து விடுதலாகும். இதையே பயிற்சி செய்து அடைந்திட வேண்டும். அப்போதுதான் மகாவாக்கியம் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
இருதய அறுவைசிகிச்சை நிபுணரான மூத்த மருத்துவர் வருவதற்கு முன்பு அந்த அறுவை சிகிச்கை செய்வதற்கான முன்னேற்பாடுகளை அவரது உதவியாளர்கள் செய்து விடுவார்கள். அவர் வந்து அறுவைசிகிச்சையை செய்துவிட்டு சென்று விடுவார். அவரது உதவியாளர்கள் அறுவை சிகிச்சையின் முடிக்கின்ற செயல்களை செய்வார்கள். அதுபோல மகாவாக்கியமானது அறுவை சிகிச்சை நிபுணர், அவர் வருவதற்கு முன்பு மனம் நான் ஆத்மா என்ற நிலையில் எந்த சஞ்சலமில்லாமல் தனியாக, அமைதியாக இருக்க வேண்டும். அதாவது சாட்சி நிலையில் மனம் இருக்க வேண்டும். இந்த நிலையில் மகாவாக்கியத்தை விசாரம் செய்யும் போது ஆத்ம அறிவோடு சேர்ந்திருக்கும் மூலாவித்யாவை அழித்துவிடும். மூலாவித்யா நீக்கப்படும்போது அறியாமையால் வரையறுக்கப்பட்டிருக்கும் சாட்சி சைதன்யம் சென்றுவிடும். போதுமான அளவுக்கு முன்னேறி இருக்கின்ற சாதகன் ஆத்மாவைப் பற்றி சரியாக புரிந்து கொண்டிருந்தாலும், நான் உடலல்ல, மனமல்ல, இவைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற சாட்சி என்று சரியாக புரிந்து கொண்டு இருந்தாலும் சாட்சி சைதன்யத்தை தனக்குள்ளே வரையறுக்கப்பட்டதாகவே இருப்பதான அறியாமையில் இருப்பார்கள்.
மகாவாக்கியம் இந்த தவறான கருத்தை நீக்கிவிடும். ஜீவனிடத்தில் இருப்பதாக புரிந்துகொண்ட சாட்சியே சர்வ சாட்சி என்று புரியவைத்துவிடும். நான் என்கின்ற ஜீவாத்மாவே த்வம்-பத லட்சியார்த்தமும், பரமாத்மாவான தத் பத லட்சியார்த்தமும் ஒன்றே என்று புரிந்துவிடும். இது அறியாமை நீங்கியபின் அடையப்படுகின்றது.
இத்துடன் சாமானாதிகரண்ய சம்பந்தம் என்கின்ற முதல்படியின் விளக்கம் முடிந்துவிட்டது. இது மகாவாக்கியத்தை புரிந்து கொள்வதற்கான மூன்று படிகளில் முதலாவதாகும். மூன்றுபடிகளும் முக்கியமானவைகளாக இருப்பதால் ஒவ்வொன்றையும் விளக்கமாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஆசாரியார் இப்போது இரண்டாம்படியான விசேஷன-விசேஷ்ய சம்பந்தத்தைப் பற்றி விளக்கப் போகிறார். முதல்படியை நன்றாக புரிந்து கொண்டப் பிறகுதான் இந்த படிக்கு வரவேண்டும் என்று ஆசாரியார் சுட்டிக்காட்டுகிறார்.
இரண்டாம் படிக்கு வந்த பின்னர் த்வம், தத் என்ற இரண்டு சொற்களின் முதன்மையான அர்த்தத்தைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அவைகளின் லட்சியார்த்தத்திற்கு தாவக்கூடாது. இந்த படியில் வாச்யார்த்தத்தை மட்டும் எடுத்துக் கொண்டு விசாரம் செய்ய வேண்டும். இந்த வாச்யார்த்தத்தில் சித், சிதாபாசம் இவையிரண்டும் சேர்ந்திருக்கும். சித் நிர்குண பிரம்மத்தையும், சிதாபாசம் சகுண பிரம்மத்தையும் குறிக்கிறது. சித் பாரமார்த்திக சத்யம், சிதாபாசம் வியாவஹாரிக சத்யம். இவைகளைத்தான் முதன்மையான அர்த்தமாக இந்த படியில் எடுத்துக் கொள்ள வேண்டும். கடையில் வாழைப்பழம் வாங்கும் போது தோலோடு சேர்ந்த பழத்தைத்தான் வாங்குகிறோம். அதேபோல ஜீவாத்மாவில் ஆத்மாவும் (நிர்குண, பாரமார்த்திக சித் பகுதியும்) ஜீவனும்(சகுண, வயாவஹாரிக சிதாபாஸ பகுதியம்) சேர்ந்திருக்கிறது என்பதையே த்வம் பதத்தின் முதன்மையான அர்த்தமாக எடுத்துக் கொள்ளவேண்டும். அதேபோல தத் பதத்தின் முதன்மை அர்த்தமாக பரமாத்மா(நிர்குண சித்), சிதாபாஸம்(சகுண சித்) இரண்டும் சேர்ந்த கலவையைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஜீவாத்மா கலவைக்கும், பரமாத்மா கலவைக்கும் இடையே உள்ள உறவையே விசேஷண-விசேஷ்ய சம்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. விசேஷணம் என்பது தகுதியுடையவர் என்றும், விசேஷ்யம் என்பது தகுதி என்றும் பொருட்படுத்தலாம். ஜீவாத்மா பரமாத்வாக தகுதியாகிறது, ஜீவாத்மா பரமாத்மாவுக்கு தகுதியை மாற்றுகிறது என்று ஒருவகையாகவும், பரமாத்மா ஜீவாத்மாவை தகுதிப்படுத்துகிறது, பரமாத்மா தன்னுடைய தகுதியை ஜீவாத்மாவுக்கு மாற்றுகிறது என்று வேறொரு வகையாகவும் இந்த சம்பந்தத்தை பொருட்படுத்தலாம். இறுதியில் நாம் ஜீவாத்மா-பரமாத்மாவும் சேர்ந்த கலவையை பெறுகிறோம். இவையிரண்டும் ஒன்று சேர்ந்து தங்களுடைய தகுதிகளை மாற்றிக் கொள்கிறது. இதுதான் இரண்டாம் படியை சாதகன் கடந்து செல்ல வேண்டும்.
முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது சித் பற்றிய விளக்கம். பரமாத்மாவின் நிர்குண, பாரமார்த்திக சித் தத்துவம், ஜீவாத்மாவின் சித் தத்துவத்தையும் நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் தேவையில்லாத சிதாபாஸ தத்துவமும் சேர்ந்து புரிந்து கொண்டிருப்போம்.
ஜீவாத்மாவிலுள்ள சிதாபாசம் வரம்பிற்குட்பட்டது, பாமாத்மாவின் சிதாபாசம் எங்கேயோ உள்ளது, இந்த சிதாபாசம் தேவையற்றதாக இருந்தாலும் சிரவணத்தின் போது புத்திக்குள் சென்றுவிடுகிறது. அத்விதீய ஆத்மாதான் நமது அடையப் போகின்ற குறிக்கோளின் பகுதியாகும். பரோக்ஷ ஈஸ்வர சிதாபாசம், ஜீவாத்மாவின் சத்விதீய சிதாபாசம் ஆகிய இரண்டும் நமது குறிக்கோளை அடைய உதவுகின்ற அறிவல்ல என்பதை சாதகன் உணர்ந்து கொள்ள வேண்டும்.
வேதாந்தத்தின் நோக்கம் சாதகனின் மனதிலிருக்கின்ற பயத்தை நீக்குவதாகும். இது இகலோக, பரலோக பயத்தை நீக்கிவிடுகிறது. சகுண சிதாபாசன் இருக்கும் வரைக்கும் பயம் இருந்துகொண்டிருக்கும். முக்கோண வடிவ தொகுப்பில் இருக்கும் வரைக்கும் ஈஸ்வரன் எங்கேயோ இருக்கிறார், நான் இங்கே இருக்கிறேன். மேலும் உலகம் என்று ஒன்றும் இருக்கிறது, அது என்னை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது என்ற கருத்துடன் இருப்பான் சாதகன்.
சாதகன் ஜீவ சிதாபாஸனையும், ஈஸ்வர சிதாபாஸனையும் ஒதுக்கிவிட வேண்டும். இந்த முக்கோண் வடிவ தொகுப்பைக் கடந்துவிட வேண்டும். சாதகனிடத்தில் நிர்குண நான் மட்டும்தான் இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். ஜீவ-ஈஸ்வர-ஜகத் ஆகியவைகள் மித்யா நாம-ரூபங்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். இவைகள் இருந்தாலும் எனக்கு ஒரு பாதகமுமில்லை, பொழுதுபோக்கு விஷயமாகத்தான் அவைகள் இருக்கும்.
கேள்வி: சம்பந்தம் என்று சொன்னால் அது இரண்டு பொருட்களுக்கு இடையேதான் இருக்கமுடியும்.. எனவே நீங்கள் தனித்துவமான லட்சியம், தனித்துவமான லட்சணம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்கிறீர்கள். இவையிரண்டுக்கும் இடையே உறவு இருப்பதாகவும் சொல்கிறீர்கள். இப்படியிருக்கும் போது நீங்கள் எப்படி ஏகாத்மா என்று சொல்லமுடியும்? நீங்கள் லட்சிய-லட்சண சம்பந்தத்தை பற்றி பேசுவதால் ஏகத்வமே சாத்தியமில்லை.
பதில்: நாங்கள் இரண்டு பொருட்களுக்குமிடையே உள்ள உறவைப் பற்றி பேசினாலும் அவைகளில் ஒன்று மித்யாவாகவும், வேறொன்று சத்யமாகவும் இருக்கிறது. வாச்யார்த்த ஜோடி, சகுண ஜீவாத்மா-பரமாத்மா ஜோடி மித்யாவாக இருக்கிறது. லட்சியார்த்த நிர்குண ஏகாத்மா சத்யமாக இருக்கிறது. இறுதியில் ஒரு சத்திய வஸ்து மட்டுமே இருப்பதாக நாங்கள் கூறுவதால், மித்யா வஸ்துவுக்கும், சத்ய வஸ்துவுக்கும் இடையே சம்பந்தமானது அத்வைதத்துக்கு எதிராக இருக்காது.
கேள்வி: சத்தியத்திற்கும் மித்யாவிற்கும் இடையே ஒரு உறவு எவ்வாறு இருக்க முடியும், ஏனென்றால் ஒரே யதார்த்தின் வரிசையை சேர்ந்த இரண்டு வஸ்துவுக்கு இடையில் மட்டுமே உறவு சாத்தியமாகும்.
பதில்: மித்யாவுக்கும் சத்தியத்துக்கும் இடையே ஒருபோதும் உண்மையான உறவு இருக்க முடியாது. ஆனால் அவைகளுக்கிடையே உண்மையான உறவு எதுவும் இல்லையென்றாலும் சத்தியத்தை வெளிப்படுத்துகின்ற விவரிக்க முடியாத உறவு அவைகளுக்கு இடையே உள்ளது. மேலும் ஒரு விசித்திரமான சூழ்நிலை காரணமாக மித்யா சத்தியத்தை வெளிப்படுத்த முடியும். மித்யா எங்கிருந்தாலும் சத்யமும் மித்யாவின் இருப்புக்கு ஆதாரமாக இருப்பதும் அங்கேயிருக்கும். உதாரணமாக மித்யாவான பாம்பின் இருப்புக்கு சத்யமான கயிறு ஆதாரமாக இருக்கின்றது. மித்யாவான பாம்பு சத்யமான கயிற்றை வெளிப்படுத்துகிறது. கயிற்றைப் பார்த்து பயந்து கொண்டிருக்கும் ஒருவனுடைய பயத்தைப் போக்குவதற்கு முதலில் அந்தப் பாம்பை ஒத்துக்கொண்டு பிறகு அது பொய்யானது என்றும், நீ பார்த்துக் கொண்டிருப்பது கயிறுதான் என்று சொல்லி பயத்தை நீக்குகிறோம். பயத்தை நீக்குபவன் கண்களுக்கு பாம்பு தெரியவில்லை, இருந்தாலும் அது இருப்பதாக ஓத்துக் கொண்டு பிறகுதான் அது கயிறு என்ற சத்திய வஸ்து என்று சொல்லி பயத்தை நீக்குகிறான். இந்த பொய்யான பாம்பிற்கும், சத்தியமான கயிறுக்கும் இடையேயுள்ள உறவுதான் உபலட்சணம். இந்த உதாரணத்தின் மூலம் பொய்யான உலகத்தைக் காட்டி சத்தியமான பிரம்மத்தை சீடனுக்கு புரிய வைக்கிறார். இந்த வகையில் வாச்யார்த்தம் லட்சணமாகவும், லட்சியார்த்தம் லட்சியமாகவும் புரிந்து கொள்ள வேண்டும். பொய்யான பாம்பு சத்தியமான கயிறை வெளிப்படுத்துவதை போல பொய்யான உலகம் சத்தியமான நிர்குண ஏகாத்மாவை வெளிப்படுத்துகிறது.
இவையிரண்டிற்குமிடையே உள்ள உறவை உபலட்சண-உபலட்சிய-சம்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. நான் என்ற சொல்லின் வாச்யார்த்தம் ஜீவாத்மாவாகும். இதனுடன் வாச்யார்த்த பரமாத்மாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாச்யார்த்தத்தை பொய்யாக்குதல் என்பதை பா3த3ஹ என்று அழைக்கப்படும்.
சகுண ஜீவாத்மா-பரமாத்மா ஜோடி வெளிப்படுத்துபவர் என்று சொல்லப்படுகிறது. நிர்குண ஏகாத்மா வெளிப்படுவது என்று சொல்லப்படுகிறது. அத்வைத தத்துவத்தில் சகுண ஜீவ-பரமாதமா மித்யாவென்றும், நிர்குண ஏகாத்மா சத்யம் என்று கருதப்படுகிறது.
சாதகன் அன்வய-வியதிரேக முறையில் தன்னை உடல்-மனத் தொகுப்பாக எண்ணிக் கொண்டிருப்பதை நீக்கிக் கொள்ள வேண்டும். அதாவது தன்னிடத்தில் உள்ள அகங்காரத்தையும், மமகாரத்தையும் சேர்த்து உடைமைகளையும், பதவியையும், குடும்பத்தையும், உடலையும், மனதையும் தன்னைச் சார்ந்ததாக கருதக்கூடாது. நான் என்று சொல்லும் போது மேற்கூறிய அனாத்மாக்கள் எதுவும் அதில் இருக்கக்கூடாது.
சாதகன் மகாவாக்கிய விசாரத்தின் போது நான் பிரம்மனாக இருக்கிறேன் என்று படிக்கும்போது தவிர்க்க முடியாமல் அனாத்ம எண்ணங்களான குடும்பம், பதவி, உடைமைகள் போன்றவை தொந்தரவு கொடுக்கும் போது அவைகளை அன்வய வியதிரேக முறையில் விரட்டியடிக்க வேண்டும்.
இந்த ஐந்து அனாத்மாக்களின் மீதுள்ள அபிமானத்தை எப்படி வெல்ல முடியும் என்று கேள்வி எழலாம். இரண்டு முறையில் அபிமானத்தை கண்டுபிடிக்க முடியும். ஒன்று அபிமானம் எவ்வளக்கெவ்வளவு இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மனம் பதட்டத்துடன் இருக்கும். இரண்டாவது கடவுளிடம் வேண்டுவது. அபிமானத்தை விட்டுவிடுவது என்பது கவலைகளையும், சிறப்பு பிரார்த்தனைகளையும் விட்டுவிடுவதாகும்.
இந்த ஐந்து அனாதமாக்களையும் ஒரேநேரத்தில் நிராகரிக்க முடியாது. வெளியே உள்ள அனாத்மாக்களான உடைமைகள், பதவி ஆகியவைகள் வலுவற்றது. ஆனால் குடும்பம், உடல், மனம் ஆகியவைகள் மிகவும் பலம் வாய்ந்தது. ஆதலால் சாதகன் முதலில் வெளியேயுள்ள உடைமைகள், பதவி ஆகியவைகளில் இருந்து அபிமானத்தை எடுக்கும் முயற்சியை முதலில் ஆரம்பிக்க வேண்டும். பிறகு கடினமான அனாத்மாக்களான குடும்பம், உடல், மனம் ஆகியவற்றிலிருந்து அபிமானத்தை எடுத்துவிட முயற்சிக்க வேண்டும். இவ்வாறு படிப்படியாக மனதிலிருந்து இவைகளில் வைத்திருக்கும் அபிமானத்தை எடுத்துவிட வேண்டும். இந்த நிலையில் மகாவாக்கியத்தின் உபதேசம் புரியும். அதனால் தன்னைப் பற்றிய உண்மையை உணர முடியும். இது உடனடியாக நடைபெறாது, படிப்படியாகத்தான் குறிக்கோளை அடைய முடியும்.
கைவல்ய உபநிஷத் உபதேசிக்கிறது: கர்மத்தினால் ஒருவன் மோட்சத்தை அடைய முடியாது, செல்வத்தினாலோ, புத்திரனாலோ மோட்சத்தை அடைய முடியாது. தியாகத்தினால் மட்டும்தான் மோட்சத்தை அடையமுடியும். சந்நியாச ஆசிரமத்திற்கு சென்றுவிட்டாலே மோட்சத்தை அடையலாம் என்பதும் தவறாகும். குடும்பத்தையும், உடைமைகளையும், பதவியையும் தியாகம் செய்துவிட்டு சந்நியாசம் எடுத்துக் கொள்வதாலே மோட்சத்தை அடைய முடியாது. சந்நியாச ஆசிரமத்திற்கு செல்லும் போது உடலோடும், மனதோடும் செல்வார்கள். உடல் மீதுள்ள பற்றை விட்டுவிட்டு, உடலை மறந்து தியானத்தில் ஈடுபடலாம். ஆனால் மனம் அந்த நிலையிலும் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கும். அதனால் அனாத்மாக்கள் எல்லாவற்றையும் மனதளவில் துறந்துவிட வேண்டும். இந்த நிலையில் உள்ள சந்நியாசம்தான் சம்சார விடுதலையைக் கொடுக்கும். சந்நியாசம் இல்லாமல் ஞானம் ஒருபோதும் தனியாக வேலை செய்யாது. சந்நியாசம் என்ற வார்த்தையின் பொருளே அபிமானத்தை தியாகம் செய்வது என்பதாகும்.
சாதகன் ஒவ்வொரு பதட்ட சூழ்நிலையையும் சந்நியாசத்தை பயிற்சி செய்யக்கூடிய வாய்ப்பாக கருதி அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பதட்டம் வரும்போது அபிமானம் இருப்பதைக் காட்டிக் கொடுக்கிறது. இந்த நிலையில் கவலைப்படுவதை விட்டுவிட்டு அபிமானத்திலிருந்து மீண்டு வரவேண்டும். அபிமானத்தை விடுவது என்பது கடமைகளை விட்டுவிடுவதல்ல. கடமையை செய்வது அபிமானமல்ல,
கவலைப்படுவதுதான் அபிமானம். கடமைகளை செய்வதால் சம்சாரம் வராது. அபிமானத்தினால் வருவதுதான் சம்சாரம். கவலைப்படுவது என்பது விசேஷ அத்யாஸம், கடமையை செய்வது என்பது சாமான்ய அத்யாஸம். சாதகன் இந்த விசேஷ அத்யாஸத்தைத்தான் விட்டுவிடவேண்டும். அனாத்மாவின் மீதுள்ள அபிமானத்தை விடும்போதுதான் ஜீவாத்மா பரமாத்மாவோடு இணைந்து ஐக்கியமாக முடியும். இரண்டும் ஒன்றே என்ற அறிவை அடையமுடியும்.
பார்த்துக் கொண்டிருக்கின்ற பிரபஞ்சத்தை அனாத்மாவாக பார்க்க வேண்டும். இதை எப்படி அடைய முடியும் என்பதை படிப்படியாக விளக்கப்படுகிறது
பார்த்துக் கொண்டிருக்கின்ற பிரபஞ்சத்தை அனாத்மாவாக பார்க்க வேண்டும். இதை எப்படி அடைய முடியும் என்பதை படிப்படியாக விளக்கப்படுகிறது
- இந்த அனைத்து பிரபஞ்சமும் மூலாவித்யாவிலிருந்து தோன்றியிருக்கிறது
- 2மூலாவித்யா (அ) மாயா என்பது ஜட ஸ்வரூபம், அசேதன ஸ்வரூபம்.
- மாயா ஜடமாக இருப்பதால் இதிலிருந்து தோன்றியிருக்கும் பிரபஞ்சமும் ஜடமானது.
- அனைத்து பிரபஞ்சமும் ஜடமாக இருப்பதால் அதிலுள்ள ஐந்து அனாத்மாக்களும் அசேதனமானதாகும். உடலும், மனமும் ஜடமானதாகும்
- அனைத்து பிரபஞ்சமும் அனாத்மாவாகும். எனவே இது சேதனமான ஆத்மாவாக இருக்கமுடியாது.
- ஆதலால் உடலும், மனமும் ஆத்மா என்று நினைப்பது அறியாமையாகும். இந்த அறியாமையே அவித்யாவின் முதல் அடுக்காக கருதப்படுகிறது.
- மகாவாக்கியம் சரியாக புரிந்து கொள்ள வேண்டுமானால். உடல்-மனத் தொகுப்பை அனாத்மாவாக அறிந்து கொள்ள வேண்டும். இந்த அறிவினால் அவித்யாவின் முதல் அடுக்கு நீக்கப்படுகிறது. இந்த அடுக்கு முக்கியமாக இருப்பதால் சந்நியாசம் கட்டாயம் என்று சொல்லப்படுகிறது.
அத்வைத வேதாந்தத்தில் தன்னைப் பற்றிய அறியாமையே மூலாவித்யா என்று அழைக்கப்படுகிறது. ஆத்மாவைத் தவிர மற்றவைகளின் அறியாமையை ஸ்தூல அவித்யா என்று அழைக்கப்படுகிறது. பஞ்சகோசங்கள் அனைத்தும் ஜட ஸ்வரூபம், அவைகளில் நான், என்னுடையது என்ற புத்தி அறியாமையினால் வருகிறது. ஜட பஞ்சகோசங்கள் சேதன நானாக இருக்க முடியாது. எனவே த்வம்-பத விசாரத்தின் போது சாதகன் இந்த முதல் அடுக்காக இருக்கின்ற அவித்யாவை நீக்க வேண்டும்.
அவித்யாவின் முதல் அடுக்கு ஜகத்தை அனாத்மா என்று அறிந்து கொள்வது. இப்போது ஜகத், குடும்பம், பஞ்ச கோசங்கள் எல்லாம் அனாத்மா என்று சொல்லாதே என்று எச்சரிக்கிறார். ஏனென்றால் ஆத்மாவிலிருந்து வேறுபட்டவை அனாத்மா என்று சொன்னால் இரண்டு வஸ்துக்கள் இருப்பதாகிவிடும். எனவே த்வைதத்தை நீ ஒத்துக் கொள்கிறாய். உலகத்திடமிருந்து வேறானவன் நான் என்று சொல்லும்போது ஆத்மா; வரையறுக்கப்பட்டதாகிவிடுகிறது. உலகத்தை விட சிறியதாக ஆத்மா தோன்றிவிடுகிறது. நான் இந்த உலகத்தில் நடக்கின்ற விவகாரத்தால் துன்பப்படுகிறேன். எனவே இந்த உலகத்திலிருந்து தப்பித்து சென்றுவிட வேண்டும் என்ற எண்ணிவிடுகிறோம்.
உலகம் அனாத்மா என்ற பார்வையும், மோட்சத்தை அடைய வேண்டுமானால் உலகத்திலிருந்த தப்பித்து சென்றுவிட வேண்டும் என்ற பார்வையும் ஆகிய இரண்டும் அறியாமையிலிருப்பவனைச் சார்ந்தது. உலகம் ஆத்மாவும் அல்ல, அனாத்மாவும் அல்ல. ஏனென்றால் ஆத்மாவைத் தவிர இரண்டாவதாக ஒன்றுமில்லை. இதனால் ஆசாரியார் பார்த்துக் கொண்டிருக்கின்ற உலகத்தை அனாத்மாவாக கருதுவது அறியாமையாகும் என்று கூறுகிறார். இதுதான் அறியாமையின் இரண்டாவது அடுக்கு. இதைத்தான் நீக்க வேண்டும்.
இவ்வாறு உலகத்தை ஆத்மாவாகவோ, அனாத்மாவாகவோ பார்ப்பது அறியாமை என்றால் உலகம் எந்தவகையைச் சார்ந்தது என்ற கேள்வி எழுகிறது. ஆசாரியாரின் பதிலானது, ஆத்மா-அனாத்மா இவைகளுக்கும் அப்பாற்பட்ட வேறொன்றாக பார்ப்பது என்பதுதான். அதாவது அது இருக்கின்றது என்று சொல்ல முடியாது; இல்லை என்றும் சொல்ல முடியாததாக இருக்கின்றது. இந்த நிலையையே மித்யத்வ தரிசனம் என்று கூறப்படுகிறது.
பார்த்துக் கொண்டிருக்கின்ற உலகமானது ஆத்மாவும் அல்ல, அனாத்மாவும் அல்ல. அது மித்யாவாகும், சத்யமானதல்ல, இல்லாததது போன்றதாகும். உலகத்தை மித்யாவாக பார்ப்பதே ஞானமாகும். திரைப்படத்தைப் போல இந்த அனைத்து பிரபஞ்சமும் மித்யாவாகும். நம்முடைய உண்மையான ஸ்வரூபத்தைப் புரிந்து கொண்டால் வாழ்க்கை ஒரு பொழுதுபோக்காக அமையும். இல்லாவிட்டால் வாழ்கின்ற வாழ்க்கை போராட்டமாகவே இருக்கும். இந்த உலகம் மித்யாவென்றால் நான் யார் என்ற கேள்வி எழுகிறது.
நான் பார்க்கப்படுகின்ற பிரபஞ்சத்தை பார்ப்பவன். நான் உலகத்தை திரைப்படமாக பார்க்கின்ற பார்வையாளன். இந்த உலகம் மித்யாவாக இருக்க வேண்டுமானால் அதற்கு ஆதாரமாக வேறு எதாவது ஒன்றிருக்க வேண்டும். அதை பார்த்துக் கொண்டிருக்கின்ற நானே அதனுடைய ஆதாரம். ஆதலால் உலகத்திலிருந்து தப்பித்து போக விரும்ப மாட்டேன் என்ற உறுதியை அடைய வேண்டும்.
மோட்சத்தை அடைய விரும்பும் சாதகன் உலகத்திலிருந்து தப்பித்து போக வேண்டும் என்றும், மீண்டும் உலகத்தில் வந்து பிறக்கக்கூடாது என்றும் பிரார்த்தனை செய்யக்கூடாது. ஏனென்றால் நானே இந்த உலகத்துக்கு ஆதாரமாகவும், அதைப் பார்த்துக் கொண்டிருப்பவனாகவும் இருக்கிறேன். நானே இந்த மித்ய பிரபஞ்சத்தை படைத்தவன். நானே சாட்சி சைத்னயம். இந்த உலகம் எனக்கு பொழுதுபோக்காக இருக்கும் போது அதைப் பற்றி நான் ஏன் கவலைப்படவேண்டும். இந்த மனநிலையே அறியாமையின் இரண்டாவது அடுக்கை நீக்கிய நிலையாகும்.
அறியாமையின் இரண்டு அடுக்குகளும் நீங்கிய பின் இந்த உலகம் ஆத்மாவும் அல்ல, அனாத்மாவும் அல்ல என்றும் மித்யாவான நாம-ரூபங்கள் என்ற பார்வையோடு பார்க்கப்படும். நான் மட்டும்தான் எல்லாவிடத்திலும் இருக்கிறேன், இந்த நாம-ரூபங்களுக்கு இருத்தலைக் கொடுப்பவனாக இருக்கிறேன் என்ற அறிவுடன் இருப்போம். கைவல்ய உபநிஷத் மிக அழகாக இந்த கருத்தைக் கூறுகிறது. நான் பிரம்மன் என்று உணர்ந்தவுடன் அதுவே விழிப்பு நிலை உலகத்தையும், கனவுலகத்தையும், ஆழ்ந்த உறக்கவுலகத்தையும் பிரகாசிக்கிறது. அதுவே எல்லாகட்டுக்களிலிருந்தும் நம்மை விடுவிக்கிறது.
ஆசாரியார் சுட்டிக்காட்டுவது, மகாவாக்கியம் விசாரம் இரண்டுபடிகளாக செய்ய வேண்டும் என்பதாகும். முதல்படி த்வம் பதார்த்த விசாரம், இதை அன்வய வியதிரேக முறையை பயன்படுத்தி செய்யவேண்டும். இரண்டாம்படி தத் பத ஐக்கிய விசாரமாகும். இப்படி இரண்டுபடிகளாக செய்யும்போது அறியாமையில் உள்ள இரண்டு அடுக்குகள் சென்றுவிடும். இந்த முறையானது வேதாந்த சாஸ்திரத்தில் இந்த முறையில் உபதேசிக்கவில்லை. இது ஆசாரியாரின் தனித்துவமான கருத்து.
அறியாமையின் முதலடுக்கு தோன்றிக்கொண்டிருக்கின்ற பிரபஞ்சத்தை தவறான மனநிலையோடு பார்ப்பதாகும்.. பார்க்கப்படுகின்ற பிரபஞ்சம் என்பது உடல்-மனத் தொகுப்பை சேர்த்துக் குறிக்கின்றது. ஆதலால் உடல்-மனத் தொகுப்பையே ஆத்மா என்று நினைத்துக் கொண்டிருப்பது முதல்நிலை அறியாமையாகும். த்வம் பதார்த்த விசாரததின் மூலமாக முழு பிரபஞ்சத்தையே என்னிடமிருந்து வேறானது என்று நீக்கிவிடலாம். நான் இந்த உலகமல்ல ஏனென்றால் அது அனுபவிக்கப்படுகின்ற பொருளாக இருக்கின்றது. நான் உடலும் அல்ல, மனமும் அல்ல என்று உறுதியாக நினைக்கும்போது உடலும், மனமும் நீக்கப்படுகிறது. இந்த முறையில் முழுபிரபஞ்சமே அனாத்மாவுக்குள் அடங்கிவிடுகிறது. இவ்வாறு பிரபஞ்சத்தை ஆத்மா என்று நினைத்துக் கொண்டிருந்தது அனாத்மா என்று அறியப்படுகிறது. இதுதான் முதல் விசாரம்.
உலகத்தை அனாத்மா என்று பார்ப்பதும் ஒருவகையான அறியாமைதான். அனாத்மா என்று எதையாவது சொல்லும்போது இருமை வந்துவிடுகிறது. இருமை வந்துவிட்டால் துயரமும் வந்துவிடுகிறது. துயரம் இருக்கும்வரையில் மோட்சம் என்பது கிடையாது. மோட்சம் என்பது உலகத்தை விட்டு ஓடிவிடுவதோ அல்லது அதிலிருந்து தப்பித்துவிடுவதோ கிடையாது. ஆதலால் அனாத்மா என்பதே இருக்கக்கூடாது. தத் பதவிசாரத்தின் முடிவில் உலகத்தை நீக்கும்போது அனாத்மா என்பதே இருக்காது, ஆத்மா மட்டும்தான் இருக்கும்.
அனுபவித்துக் கொண்டிருக்கின்ற உலகம் ஆத்மாவும இல்லை, அனாத்மாவும் இல்லையென்றால், அதனுடைய இயல்பான தன்மைதான் என்ன என்ற கேள்வி எழுகிறது. இதற்கு வேதாந்தம் அளிக்கின்ற பதில், இது ஆத்மாவுமல்ல, அனாத்மாவும் அல்ல இவையிரண்டிற்கும் வேறுபட்ட வகையைச் சார்ந்தது. இதையே ஸத்-அஸத்-விலக்ஷணம் என்று கூறப்படுகிறது.
ஆதலால் இரண்டாவது படியை கடக்கும்போது தத்-பதவிசாரமானது உலகம் ஸத்-அஸத்-விலக்ஷணம் என்ற அறிவை அடைவோம். அதாவது உலகம் மித்யா என்ற அறிவை அடைவோம். ஒரு பொருள் பார்ப்பதற்கு இருப்பதுபோல் தெரியும், ஆனால் ஆராய்ந்து பார்க்கும்போது மறைந்துவிடும். உலகமும் இந்த வகைக்குள்தான் வருகிறது.
மகாவாக்கிய விசாரத்தின் முடிவில், அனைத்து பிரபஞ்சமானது மித்யா என்ற வகையை சார்ந்தது என்ற அறிவை அடைவோம். திருஷ்ய பிரபஞ்சத்திற்குள் உடைமைகள், சொத்துக்கள், தொழில், குடும்பம், உடல், மனசஞ்சலம் ஆகியவைகளும் அடங்கும். சாதகன் இதைப் புரிந்து கொண்டு, அனைத்து திருஷ்ய பிரபஞ்சத்தை திரைப்படம் பார்ப்பது போல் அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும். திரைப்படத்திற்கு ஆதாரமாக வெண்திரையிருப்பது போல, திருஷ்ய பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக இருப்பது நானிருக்கிறேன் என்று புரிந்து கொள்ள வேண்டும். இதனால் உலக விஷயங்கள் துயரமாக இருந்தாலும், இன்பமாக இருந்தாலும் அதனால் பாதிக்கபடாமல் அவைகளை பொழுதுபோக்காக இரசித்துக் கொண்டிருக்கலாம். இங்கே நான் என்று குறிப்பிடுவது உடலோ, மனமோ அல்ல என்பதை உறுதியாக புரிந்து கொண்டிருக்க வேண்டும். நானே ஆத்மா என்ற உணர்வுடன் இருக்க வேண்டும். இந்த நிலையே சம்சாரத்திலிருந்து விடுபடுவதற்கு உதவி செய்யும். ஆதலால் அனுபவிக்கப்படும் அனைத்தும் மித்யாவாகும். அவைகளுக்கு ஆதாரமாக இருப்பது நான்தான் என்று உறுதியான நம்பிக்கைதான் அறியாமையின் இரண்டாம் அடுக்கை நீக்கவிடும்.
இவ்வாறு அறிவுள்ள சாதகன் மேற்கூறிய உபதேசத்தை கிரகித்துக் கொண்டால் அவனே அத்வைத ஆத்மாவாக இருந்து கொண்டிருப்பான். இந்த நிலையே தத் த்வம் அஸி என்ற வாக்கியத்திலிருந்து அறிந்து கொள்ள வேண்டும்.
சாதாரணமாக ஒரு வாக்கியத்தில் பல சொற்கள் இருப்பதால் அந்த வாக்கியம் பல அர்த்தங்களை வெளிப்படுத்தலாம். அத்தகைய வார்த்தைகளை த்வைத அர்த்த-போதக வாக்கியம் என்று அழைக்கப்டுகிறது. இரண்டாவது சாத்தியமானது ஒரு வாக்கியத்தில் பல சொற்கள் இருப்பதால் அது ஒரு சொல்லின் பல அம்சங்களை வெளிப்படுத்தலாம். உதாரணமாக தசரத மைந்தன், சீதாபதி, அயோத்தி இளவரசன் இராமன் வருகிறார் என்ற வாக்கியத்தில் முதல் மூன்று சொற்கள் இராமன் என்ற சொல்லின் அம்சங்களை குறிக்கிறது. எனவே இந்த வாக்கியம் அத்வைதத்தை வெளிப்படுத்துகிறது. இந்த வாக்கியம் ஒரு பொருளையும் அதனுடைய அம்சங்களையும் வெளிப்படுத்துகிறது. எனவே இதை விசிஷ்டாத்வைத போதக வாக்கியம் என்று அழைக்கப்படுகிறது.
சாதாரணமாக எல்லா வாக்கியங்களும் த்வைத பதார்த்தத்தையோ அல்லது விசிஷ்டாத்வைத பதார்த்தத்தையோ வெளிப்படுத்தும். ஆனால் தத் த்வம் அஸி என்ற வாக்கியம் தனித்துவமான வாக்கியமாகும். இது மேற்சொன்ன இரண்டு வகையான வாக்கியார்த்தத்தையும் குறிக்காமல், நிர்விசிஷ்ட அத்வைதம் என்ற வகையில் அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது. இந்த வாக்கியத்தை நிர்விசேஷ அர்த்த போதக வாக்கியம் என்று அழைக்கப்படுகிறது.
மகாவாக்கியம் எவ்வாறு நிர்விசேஷ அத்வைதத்தை வெளிப்படுத்துகிறது என்று கேள்வி எழுகிறது. த்வம் என்ற சொல் சவிசேஷ ஜீவாத்மாவையும், தத் என்ற சொல் சவிசேஷ சகுண பராமாத்வையும் வெளிப்படுத்துகிறது. ஆனால் அஸி என்ற சொல் தனித்துவமான பொருளைக் கொடுக்கிறது. சகுண ஜீவாத்மா, சகுண பரமாத்மா இரண்டையும் சேர்க்கும்போது இவையிரண்டின் அம்சங்கள் அனைத்தும் விலக்கப்படுகிறது. அதனால் நிர்விசேஷ அத்வைத வஸ்து மட்டும் எஞ்சி நிற்கிறது. இதையே அவ்யாக்யர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
மகாவாக்கியமானது வேதாந்த உபதேசத்தின் மிகவும் தனித்துவமான வாக்கியமாகும். இது ஆத்மாவை வெளிக்காட்டுகிறது. ஆத்மா ஒரு பொருளாக இல்லை, செயலெதுவும் செய்வதில்லை, எதனோடும் உறவுடையது இல்லை. இத்தகைய ஆத்மாவை மகாவாக்கியம் புரியவைக்கிறது. ஆத்மாவை ஒரு பொருளாக இது விளங்க வைக்கவில்லை. ஏனென்றால் நீயே ஆத்மாவாக இருக்கிறாய். இந்த அறிவே அபரோக்ஷ ஞானமாகும். பரோக்ஷ ஞானம் வெகு தொலைவில் உள்ள ஒன்றைப்பற்றிய அறிவோ அல்லது மறைமுகமாகவுள்ள ஒன்றைப் பற்றிய அறிவை குறிக்கிறது. அதேசமயம் மிகஅருகில் உள்ளதும், நேரிடையாக தெரிவதும் உள்ள ஒன்றைப் பற்றிய அறிவை பிரத்யக்ஷ ஞானம் என்றும் அழைக்கப்படும். உடலைப் பற்றிய அறிவும், மனதைப் பற்றிய அறிவும் பிரத்யக்ஷ ஞானமாகும். மனதில் ஏற்படும் ஒவ்வொரு எணணமும் பிரத்யக்ஷ ஞானமாகும்.
பிரத்யக்ஷ ஞானம் இந்திரிய பிரத்யக்ஷ ஞானம், சாட்சி பிரத்யக்ஷ ஞானம் என்று இருவகையாக இருக்கிறது. புலன்களால் அறியப்படும் அறிவை இந்திரிய பிரத்யக்ஷ ஞானமென்றும், சாட்சியால் அறியப்படுகின்ற மனம், உடல் போன்ற அறிவை சாட்சி பிரத்யக்ஷ ஞானமென்றும் அழைக்கப்படுகிறது. மனம், உடல் போன்றவை மிக அருகில் இருப்பதால் கண்கள் மூடியிருந்தாலும் அவைகளைப் பற்றி அறிவு ஏற்படுகிறது.
ஆத்மாவைப் பற்றிய அறிவை அபரோக்ஷ ஞானம் என்று கூறப்படுகிறது. அபரோக்ஷம் என்ற சொல்லின் பொருள் ஆத்மாவை நான் என்று உணர்தலேயாகும். அத்வைத வேதாந்தத்தின் உபதேசத்தின்படி ஆத்மஞானம் எப்போதுமே அபரோக்ஷ ஞானமாகும்.
சைதன்யம் எல்லா நேரங்களிலும் அபரோக்ஷமாக இருந்தாலும் தேக அபிமானத்தால் ஆத்மா பரோக்ஷம் போல தவறாக கருதப்படுகிறது. பல சாதகர்கள் ஆத்ம அபரோக்ஷ ஞானத்திற்காக காத்திருக்கிறார்கள். ஆத்மா எப்போதும் அபரோக்ஷமாக இருந்தாலும் இந்த தவறை செய்கிறார்கள். ஆத்மா எப்போதும் அனுபவத்திற்கு இருந்தாலும் அறியாமையால் அது எங்கேயோ கண்ணுக்கு தெரியாத வெகு தூரத்தில் இருக்கிறது என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள்.
வேதாந்த சாதகர்கள் என்ன கற்றுக் கொள்ள வேண்டும் எதை நம்ப வேண்டும் என்பது கூறப்படுகிறது.
- சைதன்யம் காரியமோ அல்லது சொத்தோ அல்ல,
- சைதன்யம் என்றென்றும் அனுபவத்தில் இருக்கின்றது,
- அதை புதியதாக வேறொரு இடத்திலிருந்து பெற வேண்டியதில்லை.
- ஆனால் தேக அபிமானத்தால் பிரம்மன் எங்கேயோ வெகுதொலைவில் இருக்கிறது என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள்.
அபரோக்ஷ ஞானம் என்பது ஆத்மாவுடன் இணைத்து நான் ஆத்மா என்றும், உடலுடன் இணைத்து தவறாக அதை ஆத்மா என்று அறியாமையில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள். மஞ்சள் காமாலை நோயில் இருப்பவர்களுக்க பார்ப்பவைகள் அனைத்தும் மஞ்சளாக தெரிவது போல ஆத்மா உணர்வுமயமாக எப்போதும் மிக அருகிலே இருந்து கொண்டிருந்தாலும் அது வெகு தொலைவில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சில சாதகர்கள் தியானம் செய்து பிரம்மத்தை அடைந்து விடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். விசிஷ்டாத்வைதிகள் வைகுண்டத்தில் பிரம்மத்தை அடையலாம் என்று சிலர் நம்புகிறார்கள். இவ்வாறு பிரம்மத்தை வெகு தொலைவில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் என்று சொல்லும் போது இரண்டு விஷயங்கள் ஒரே நேரத்தில் வெளியாகிறது. ஒன்று ஆத்மா சாட்சியாகவும், எதனோடோ கலந்ததுமாக வெளியாகிறது. உதாரணமாக வெளிச்சத்தில் நீட்டிய கையை பார்க்கும் போது உள்;ளங்கையை பார்க்கிறோம். ஆனால் அதை காட்டிக்கொடுக்கின்ற வெளிச்சத்தின் இருப்பை கவனிப்பதில்லை. அதேபோல நான் இருக்கிறேன் என்று சொல்லும் போது சாட்சியும் தெளிவாக தெரிகிறது, சாட்சி காட்டிக் கொடுக்கின்ற உடலும், மனமும் தெளிவாக தெரிகிறது. ஆனால் உடலும், மனமும் உணரப்படுகின்ற இந்த வாக்கியத்தில் சாட்சி சைதன்யத்தை உணர்வதில்லை. த்வம் பத விசாரத்தின் குறிக்கோள் உணர்வு பூர்வமாக தலைகீழாக செய்வதாகும். அதாவது சாட்சி காட்டிக்கொடுக்கின்ற உடல்-மன தொகுப்பை நீக்கிவிட்டு உணர்வமயமான சாட்சி சைதன்யத்தை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் முரண்பாடாக உடல்-மன தொகுப்பை நீக்கி நான் உணர்வுமயமானவன் என்ற அறிவை அடைவதற்கு இந்த தொகுப்பைத்தான் பயன்படுத்த வேண்டியதாக இருக்கிறது. ஏனென்றால் சாட்சி உடல்-மன தொகுப்பை நீக்காது. இவ்வாறு மனதை பயன்படுத்தி நான் சாட்சி சைதன்யம் என்ற அறிவை, மனதை நீக்கியே அடைய வேண்டும். இந்த த்வம் பதார்த்த விசாரத்தின் சூட்சுமமான பகுதியை வெற்றிகரமாக ஒரு சாதகன் செய்துவிட்டால், பிறகு அவன் கீழ்கண்ட கருத்தைப் புரிந்து கொண்டவனாக கூறிக்கொள்ளலாம். நான் காரியமோ அல்லது உடல்-மன தொகுப்பின் உடைமையோ அல்ல என்றும், எண்ணங்களின் ஒரு பகுதியோ அல்லது எண்ணங்களின் உடைமையோ அல்ல என்றும், நான் உடலால் வரையறுக்கப்பட்டபவன் அல்ல என்றும், இந்த உடலை விட்டு பிரிந்தாலும் நான் தொடர்ந்து இருந்து கொண்டேயிருப்பேன் என்றும் புரிந்து கொண்டிருப்பான்.
இவ்வாறு சாட்சி சைதன்யம் உடல்-மன தொகுப்பிலிருந்து தனித்திருப்பது என்ற அறிவை தவம்பத விசாரத்தின் மூலம் ஒரு சாதகன் அடைந்தால் அவனால் அஹம் பிரம்ம அஸ்மி என்று மிகவும் எளிதாக கூறிக்கொள்ளமுடியும் என்று ஆசாரியார் உறுதியுடன் கூறுகிறார்.
ஆனால் பிரச்சனை என்னவென்றால் இந்த நிலையில் பல சாதகர்கள் உடல்-மன தொகுப்பைத்தான் நான் என்று எடுத்துக் கொள்கிறார்கள், சாட்சி சைதன்யத்தின் இருப்பை விட்டுவிடுகிறார்கள். ஏனென்றால் உடல்-மன தொகுப்பு பிரதானமாக தெரிந்து கொண்டிருப்பதால் இந்த தவறான கருத்தை கொண்டிருப்பார்கள். இவ்வாறு சாட்சி சைதன்யத்தை நான் என்ற சொல்லில் இருப்பதை கவனிக்காமல் விட்டுவிட்டால் வேறெங்கேயும் அதை அடையாளம் காணமுடியாது.
அடுத்த தலைப்பின் சாரம் மகாவாக்கியம் நேரிடையாக பிரம்ம ஞானத்தை ஒரு நிபந்தனையுடன் கொடுக்கும். அந்த நிபந்தனையாவது அந்த வாக்கியத்திலுள்ள ஒவ்வொரு சொல்லின் பொருளை சிரவணத்தின்போதே முழமையாக புரிந்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது மகாவாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் சரியாக புரிந்து கொண்டால், அதுவே நேரிடையாக அபரோக்ஷ ஞானத்தைக் கொடுத்துவிடும்.
சாதகன் தனியாக த்வம்பத விசாரத்தையும், தத்பத விசாரத்தையும் கண்டிப்பாக செய்ய வேண்டும். ஆண்டுகள் பலவானாலும் முயற்சியை கைவிடக்கூடாது. விடாமுயற்சியுடன் விசாரம் செய்து இவையிரண்டும் உருவமற்றது என்றும், அவைகள் ஸத், சித் பகுதியை மட்டும் குறிக்கிறது என்றும் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் இரண்டின் ஐக்கியமும் அர்த்தமுள்ளதாக இருக்கும். நானே உணர்வுமயமான சைதன்யம் என்ற அறிவு திடமாகும். கைவல்ய உபநிஷத்தில் சொல்லப்பட்டது போல என்னிடத்திலிருந்ததான் அனைத்தும் தோன்றியது. என்னிடத்திலேதான் தோன்றி அனைத்தும் லயமடைகிறது. நானே பிரம்மமாக இருக்கிறேன் என்று அறிவு உணர்வுபூர்வமாக இருக்கவேண்டும்.
ஆசாரியார் தொகுத்து கூறுவது, நன்கு மனதை பக்குவபடுத்திய சாதகனுக்கு மகா வாக்கியம் நேரிடையாக அபரோக்ஷ ஞானத்தை கொடுக்கும். மகாவாக்கியம் மட்டும்தான் அபரோக்ஷ ஞானத்தை கொடுக்கமுடியும். எவ்வளவுதான் தியானம், தவம் செய்தாலும் இதை அடைய முடியாது.
நைஷ்கர்ம்ய சித்தியின் கருத்து:
சிறிது வளர்ந்த பின்பு அன்வய வ்யதிரேக முறையை தெரியாமலே பயன்படுத்தி பேசப்படும் வார்த்தைகளில் உள்ள வினைசொல், பெயர்ச்சொல் ஆகியவற்றை புரிந்து கொள்கிறது. இதை எப்படி புரிந்து கொள்கிறது என்பதைப் பார்ப்போம். தந்தை நான்கு கட்டளை வாக்கியத்தை தாயிடம் கூறுகிறார். பசுவை கொண்டுவா, பசுவை குளிப்பாட்டு, பசுவுக்கு உணவு கொடு, பசுவை கட்டிவை ஆகியவை அந்த நான்கு கட்டளை வாக்கியங்கள். இந்த நான்கு கட்டளைகளில் பசு என்ற பெயர்ச்சொல் மாறாமல் இருக்கிறது. வினைச்சொற்கள் மாறியிருக்கிறது. மாறாமல் வருகின்ற பெயர்ச்சொல்லை குழந்தை புரிந்துக் கொள்கிறது.
இன்னொரு சந்தர்ப்பத்தில் அதே தந்தை தன்னுடைய தாயிடம் வேறு நான்கு கட்டளை வாக்கியங்களை கூறுகிறார். அவைகள் மேசையை கொண்டுவா, புத்தகத்தை கொண்டுவா, பேனாவை கொண்டுவா, மூக்குக்கண்ணாடியை கொண்டுவா ஆகும். இந்த நான்கு வாக்கியத்தில் மாறாமல் இருப்பது கொண்டுவா என்ற வினைச்சொல்லாகும். இதன் மூலம் குழந்தை அந்த சொல்லையும் அதன் பொருளையும் புரிந்து கொள்கிறது.
இந்த முறையே அன்வய வியதிரேக முறையாகும். தந்தைக்கும் (உத்தம விருத்த), தாயிக்கும் (மத்திம விருத்த) நடந்த விவகாரமே ஆவாப-உதவாப-வ்யவஹாரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையில் வெவ்வேறு சொற்கள் அறிமுகம் செய்து பிறகு நீக்கப்படுகிறது ஆனால் மாறாத ஒரு சொல் மட்டும் நீக்கப்படாமல் அப்படியே இருக்கிறது.
நான் என்று சொல்லும் போது இரண்டு விஷயங்கள் ஒரே நேரத்தில் வெளியாகிறது. ஒன்று ஆத்மா சாட்சியாகவும், எதனோடோ கலந்ததுமாக வெளியாகிறது. உதாரணமாக வெளிச்சத்தில் நீட்டிய கையை பார்க்கும் போது உள்;ளங்கையை பார்க்கிறோம். ஆனால் அதை காட்டிக்கொடுக்கின்ற வெளிச்சத்தின் இருப்பை கவனிப்பதில்லை. அதேபோல நான் இருக்கிறேன் என்று சொல்லும் போது சாட்சியும் தெளிவாக தெரிகிறது, சாட்சி காட்டிக் கொடுக்கின்ற உடலும், மனமும் தெளிவாக தெரிகிறது. ஆனால் உடலும், மனமும் உணரப்படுகின்ற இந்த வாக்கியத்தில் சாட்சி சைதன்யத்தை உணர்வதில்லை. த்வம் பத விசாரத்தின் குறிக்கோள் உணர்வு பூர்வமாக தலைகீழாக செய்வதாகும். அதாவது சாட்சி காட்டிக்கொடுக்கின்ற உடல்-மன தொகுப்பை நீக்கிவிட்டு உணர்வமயமான சாட்சி சைதன்யத்தை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் முரண்பாடாக உடல்-மன தொகுப்பை நீக்கி நான் உணர்வுமயமானவன் என்ற அறிவை அடைவதற்கு இந்த தொகுப்பைத்தான் பயன்படுத்த வேண்டியதாக இருக்கிறது. ஏனென்றால் சாட்சி உடல்-மன தொகுப்பை நீக்காது. இவ்வாறு மனதை பயன்படுத்தி நான் சாட்சி சைதன்யம் என்ற அறிவை, மனதை நீக்கியே அடைய வேண்டும். இந்த த்வம் பதார்த்த விசாரத்தின் சூட்சுமமான பகுதியை வெற்றிகரமாக ஒரு சாதகன் செய்துவிட்டால், பிறகு அவன் கீழ்கண்ட கருத்தைப் புரிந்து கொண்டவனாக கூறிக்கொள்ளலாம். நான் காரியமோ அல்லது உடல்-மன தொகுப்பின் உடைமையோ அல்ல என்றும், எண்ணங்களின் ஒரு பகுதியோ அல்லது எண்ணங்களின் உடைமையோ அல்ல என்றும், நான் உடலால் வரையறுக்கப்பட்டபவன் அல்ல என்றும், இந்த உடலை விட்டு பிரிந்தாலும் நான் தொடர்ந்து இருந்து கொண்டேயிருப்பேன் என்றும் புரிந்து கொண்டிருப்பான்.
இவ்வாறு சாட்சி சைதன்யம் உடல்-மன தொகுப்பிலிருந்து தனித்திருப்பது என்ற அறிவை தவம்பத விசாரத்தின் மூலம் ஒரு சாதகன் அடைந்தால் அவனால் அஹம் பிரம்ம அஸ்மி என்று மிகவும் எளிதாக கூறிக்கொள்ளமுடியும் என்று ஆசாரியார் உறுதியுடன் கூறுகிறார்.
ஆனால் பிரச்சனை என்னவென்றால் இந்த நிலையில் பல சாதகர்கள் உடல்-மன தொகுப்பைத்தான் நான் என்று எடுத்துக் கொள்கிறார்கள், சாட்சி சைதன்யத்தின் இருப்பை விட்டுவிடுகிறார்கள். ஏனென்றால் உடல்-மன தொகுப்பு பிரதானமாக தெரிந்து கொண்டிருப்பதால் இந்த தவறான கருத்தை கொண்டிருப்பார்கள். இவ்வாறு சாட்சி சைதன்யத்தை நான் என்ற சொல்லில் இருப்பதை கவனிக்காமல் விட்டுவிட்டால் வேறெங்கேயும் அதை அடையாளம் காணமுடியாது.
அடுத்த தலைப்பின் சாரம் மகாவாக்கியம் நேரிடையாக பிரம்ம ஞானத்தை ஒரு நிபந்தனையுடன் கொடுக்கும். அந்த நிபந்தனையாவது அந்த வாக்கியத்திலுள்ள ஒவ்வொரு சொல்லின் பொருளை சிரவணத்தின்போதே முழமையாக புரிந்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது மகாவாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் சரியாக புரிந்து கொண்டால், அதுவே நேரிடையாக அபரோக்ஷ ஞானத்தைக் கொடுத்துவிடும்.
சாதகன் தனியாக த்வம்பத விசாரத்தையும், தத்பத விசாரத்தையும் கண்டிப்பாக செய்ய வேண்டும். ஆண்டுகள் பலவானாலும் முயற்சியை கைவிடக்கூடாது. விடாமுயற்சியுடன் விசாரம் செய்து இவையிரண்டும் உருவமற்றது என்றும், அவைகள் ஸத், சித் பகுதியை மட்டும் குறிக்கிறது என்றும் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் இரண்டின் ஐக்கியமும் அர்த்தமுள்ளதாக இருக்கும். நானே உணர்வுமயமான சைதன்யம் என்ற அறிவு திடமாகும். கைவல்ய உபநிஷத்தில் சொல்லப்பட்டது போல என்னிடத்திலிருந்ததான் அனைத்தும் தோன்றியது. என்னிடத்திலேதான் தோன்றி அனைத்தும் லயமடைகிறது. நானே பிரம்மமாக இருக்கிறேன் என்று அறிவு உணர்வுபூர்வமாக இருக்கவேண்டும்.
ஆசாரியார் தொகுத்து கூறுவது, நன்கு மனதை பக்குவபடுத்திய சாதகனுக்கு மகா வாக்கியம் நேரிடையாக அபரோக்ஷ ஞானத்தை கொடுக்கும். மகாவாக்கியம் மட்டும்தான் அபரோக்ஷ ஞானத்தை கொடுக்கமுடியும். எவ்வளவுதான் தியானம், தவம் செய்தாலும் இதை அடைய முடியாது.
நைஷ்கர்ம்ய சித்தியின் கருத்து:
- மகாவாக்கியத்தை முழுகவனத்துடன் கேட்கும்போதே அபரோக்ஷ ஞானத்தை அடைந்துவிடலாம்..
- மகாவாக்கியமானது சிரவணத்தின் போதும் அபரோக்ஷ ஞானத்தை கொடுக்கும்
- மகாவாக்கியம் மட்டும்தான் அபரோக்ஷ ஞானத்தை கொடுக்கும்.
- மகாவாக்கிய சிரவணம் அபரோக்ஷ ஞானத்தை கொடுக்கவில்லையென்றால் தியானம் அபரோக்ஷ ஞானத்தை கொடுக்காது.
- ஆசாரியார் சுருக்கமாக சப்தபிரமாணம் என்ற தலைப்பின் கீழே சில கருத்துக்களை கூறுகிறார்.
சிறிது வளர்ந்த பின்பு அன்வய வ்யதிரேக முறையை தெரியாமலே பயன்படுத்தி பேசப்படும் வார்த்தைகளில் உள்ள வினைசொல், பெயர்ச்சொல் ஆகியவற்றை புரிந்து கொள்கிறது. இதை எப்படி புரிந்து கொள்கிறது என்பதைப் பார்ப்போம். தந்தை நான்கு கட்டளை வாக்கியத்தை தாயிடம் கூறுகிறார். பசுவை கொண்டுவா, பசுவை குளிப்பாட்டு, பசுவுக்கு உணவு கொடு, பசுவை கட்டிவை ஆகியவை அந்த நான்கு கட்டளை வாக்கியங்கள். இந்த நான்கு கட்டளைகளில் பசு என்ற பெயர்ச்சொல் மாறாமல் இருக்கிறது. வினைச்சொற்கள் மாறியிருக்கிறது. மாறாமல் வருகின்ற பெயர்ச்சொல்லை குழந்தை புரிந்துக் கொள்கிறது.
இன்னொரு சந்தர்ப்பத்தில் அதே தந்தை தன்னுடைய தாயிடம் வேறு நான்கு கட்டளை வாக்கியங்களை கூறுகிறார். அவைகள் மேசையை கொண்டுவா, புத்தகத்தை கொண்டுவா, பேனாவை கொண்டுவா, மூக்குக்கண்ணாடியை கொண்டுவா ஆகும். இந்த நான்கு வாக்கியத்தில் மாறாமல் இருப்பது கொண்டுவா என்ற வினைச்சொல்லாகும். இதன் மூலம் குழந்தை அந்த சொல்லையும் அதன் பொருளையும் புரிந்து கொள்கிறது.
இந்த முறையே அன்வய வியதிரேக முறையாகும். தந்தைக்கும் (உத்தம விருத்த), தாயிக்கும் (மத்திம விருத்த) நடந்த விவகாரமே ஆவாப-உதவாப-வ்யவஹாரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையில் வெவ்வேறு சொற்கள் அறிமுகம் செய்து பிறகு நீக்கப்படுகிறது ஆனால் மாறாத ஒரு சொல் மட்டும் நீக்கப்படாமல் அப்படியே இருக்கிறது.
இங்கே ஆசாரியார் அன்வயவியதிரேகம், வாக்கிய விசாரம் ஆகியவற்றின் முக்கியதுவத்தை பற்றி கூறுகிறார். அன்வயவியதிரேக முறையானது மிகவும் முக்கியமான பயிற்சியாகும். இது பஞ்சகோசத்திலிருந்தும், மூன்று சரீரத்திலிருந்தும் சாட்சி சைதன்யத்தை பிரித்தெடுத்து புரிந்து கொள்ளப் பயன்படுத்தப்படுகிறது. அனாத்மாவிலிருந்து ஆத்மா பிரித்தெடுத்து புரிந்துக் கொள்ளவும் இந்த முறை பயன்படுகிறது. இந்த முறையே மகாவாக்கிய விசாரம் செய்வதற்கு மிக முக்கியமானது, இதன் மூலம் ஆத்மாவையும், பிரம்மத்தையும் ஐக்கியபடுத்தி புரிந்து கொள்ள வேண்டும்.
முதல்படியான அன்வய வியதிரேக படியில் மூன்று உடல்களிலிருந்த ஆத்மாவை பிரித்தறிய வேண்டும். அர்ஜுனா! உடல் ஷேத்திரம் என்று தெரிந்து கொள். இந்த உடலுக்குள் இருக்கும் உணர்வுமயம் உடலை அறிகிறது. இந்த உணர்வுமயத்தை ஷேத்திரக்ஞன் என்று அழைக்கிறார்கள். இதுவே அன்வயவியதிரேக முறை பகவான் கிருஷ்ணனால் சொல்லப்பட்டிருக்கிறது.
அன்வய வியதிரேகம் இல்லாமல் வாக்கிய விசாரம் செய்ய முடியாது. சாட்சி, பிரம்மன் இவைகளின் ஐக்கியமானது இந்த முறையை பயன்படுத்தாமல் வெற்றிகரமாக செய்ய முடியாது. அதேசமயத்தில் மகாவாக்கிய விசாரமில்லாமல் அன்வய வியதிரேக சாதனம் முழுமை அடையாது. எனவே இரண்டிற்கும் சமமான முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும். அவைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தாமல் வரிசைக்கிரமத்தில் பயன்படுத்த வேண்டும். இந்த வரிசைகிரமமானது அன்வய வியதிரேகம் முதல்படி, மகாவாக்கிய விசாரம் இரண்டாவது படியாகும். முதல்படி விசாரத்தின் முடிவில் சாதகன் வெற்றிகரமாக தன்னை அனாத்மாவிலிருந்து பிரித்திட வேண்டும். பிறகுதான் அடுத்தபடியான மகாவாக்கிய விசாரத்திற்கு செல்ல வேண்டும். இவ்வாறு செய்தால் மகாவாக்கிய விசாரம் வெற்றியை உடனடியாக கொடுத்துவிடும்.
பஞ்ச அனாத்மா துறத்தலானது அன்வய வியதிரேக சாதனத்தை வெற்றிகரமாக செய்ததினால் அடையப்பபடுகின்றது. இதையே சங்கரர் சந்நியாசம் என்று அழைக்கிறார். சங்கரர் வெளிப்புற சந்நியாஸத்தை வலியுறுத்துகிறார். ஞானயோக சாதகன் இந்தவகையான சந்நியாசத்தை எடுக்காவிட்டாலும், மகாவாக்கிய விசாரத்தின் பலனை அடைவதற்கு உட்புற சந்நியாசத்தை கடைபிடிக்க வேண்டும்.
சாதகன் ஒருவன் நான் ஆத்மா என்றும், அனைத்து திருஷ்ய பிரபஞ்சமும் அனாத்மா என்றும், அனாத்மாக்கள் அனைத்தும் மித்யா என்ற அறிவு முதிர்ச்சியை அடைந்த பிறது அத்தோடு நிறுத்திவிட்டால் தன்முன்னே தோன்றிக் கொண்டிருக்கும் அனாத்மாவை கண்டு பயப்படுவான். எனவே கடவுளிடம் இந்த உலகத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு உதவுமாறு வேண்டுவான். இந்த பிறவியே கடைசியாக இருக்க வேண்டும் என்றும் வேண்டுவான்.
எனவே அனாத்மாக்கள் பொய்யென்ற அறிவை அடைந்தால் மட்டுமே உலகத்தைக் கண்டு பயந்து ஓடத் தேவையில்லை. ஆத்ம-அனாத்ம விவேகத்துடன் இந்த உலகம் மித்யா, ஆத்மா சத்யம் என்ற உறுதியான நம்பிக்கையுடன் கூடிய அறிவுடன் மகாவாக்கிய விசாரத்தை நன்றாக, விடாமுயற்சியுடன் செய்திருந்தால்தான் அனாத்மா பொய்யென்ற அறிவு ஏற்பட முடியும். ஜகத் மித்யா என்ற அறிவுதான் மிகமுக்கியமாக அடைய வேண்டியதாக இருக்கிறது.
ஆதலால், ஆசாரியார் மனதின் அனாத்மத்வ இயல்பை உணர்ந்தாக வேண்டும். பஞ்ச அனாத்மாக்களான சொத்து, தொழில், குடும்பம், உடல், மனம் இவைகளை மிகவும் சுலபமாக அனாத்மாக்கள் என்ற அறிவை பகுத்தறிவு கொண்டு அறியலாம். ஆனால் அன்வய வியதிரேக முறையை பயன்படுத்தி அடைய முடியாது. ஜகத் மித்யா என்ற உறுதியான அறிவை அடைகின்ற வரையில் மகாவாக்கிய சிரவணம், மகாவாக்கிய மனனம், மகாவாக்கிய நிதித்யாஸனம் செய்து கொண்டுவர வேண்டும்.
மகாவாக்கிய விசாரம் எப்படி அனாத்மாவை பொய்யென்ற அறிவை கொடுக்கும் என்ற முக்கியமான சந்தேகம் எழலாம். மகாவாக்கியம் நேரிடையாக அனாத்மாவை பற்றி பேசவில்லை, ஜீவ-ஈஸ்வர ஐக்கிய மட்டும்தான் பேசுகிறது. இது நான் ஆத்மா என்ற அறிவைத்தான் கொடுக்கும், அனாத்மாவை பொய்யென்ற அறிவை எப்படி கொடுக்கிறது.
இந்த சந்தேகத்திற்கான பதில்: தத்பத விசாரத்தின் போது பிரம்மன் காரணமாக இருப்பதால் சத்யமாக இருக்கிறது. காரியமான ஜகத் அனாத்மாவாக இருப்பதால் அது மித்யாவென்றும் நிலைநாட்டப்படுகிறது. இந்த அறிவை மகாவாக்கியத்தின் மூலம் அடையும் அறிவோடு இணைத்துப் பார்த்து நான் சத்யம், ஜகத் மித்யா என்ற அறிவை அடையவேண்டும். உபநிஷத் உபதேசத்தை நினைவுபடுத்திக் கொண்டு மகாவாக்கிய விசாரத்தின் மூலம் அடையும் அறிவையும் கொண்டு இந்த அறிவை நிச்சயம் அடைந்து விடலாம். ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தின் மூலமாக மட்டும்தான் அனாத்ம மித்யத்வத்தை நிலைநாட்ட முடியும்.
மகாவாக்கியத்தின் மீது முழுநம்பிக்கை வைப்பது மிகமுக்கியம் என்பது விளக்கப்படுகிறது. சிரத்தையில்லாமல் மகாவாக்கியத்தை விசாரம் செய்தால் ஒரு பலனும் கிடைக்காது. மகாவாக்கியம் சில உண்மைகளை விளக்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும். எனவே சாஸ்திரத்தில் சிரத்தையிருந்தால் மகாவாக்கியம் முழமையான, இறுதியான அறிவை கொடுத்துவிடும். மகாவாக்கிய உபதேசத்தை புரிந்து கொள்வதே தன்னை உணர்தலாகும்.
சாஸ்திர பிரமாணத்தை மறுப்பதற்கு எந்தக் காரணமும் கிடையாது. புரிந்து கொள்வதற்கு தடைகள் இருக்கலாம் அதனால் அதனிடத்தில் சிரத்தை இல்லாமல் போகலாம். அந்த தடைகளை நீக்கி சாஸ்திரத்தில் சிரத்தை வைக்காமல் இருப்பதற்கு எந்த காரணமும் கிடையாது என்பதை ஆசாரியார் விளக்குகிறார். சாஸ்திரத்தில் சிரத்தை வைக்கமுடியாமல் இருப்பதற்கு சில தடைகள் இருக்கின்றது. முதல் தடையானது ஒரு பிரமாணம் காட்டும் பொருளையே வேறொரு பிரமாணமும் காட்டுவது. இரண்டாவது தடை, : ஒரு பிரமாணத்தின் மூலம் அடைகின்ற அறிவானது வேறொரு பிரமாணம் தவறு என்று காட்டும்போது முதல் பிரமாணத்தின் மீதுள்ள நம்பிக்கை சென்று விடுகிறது.
எனவே சாதகன் நன்கு புரிந்து கொள்ள வேண்டியது சிரத்தை மகாவாக்கிய விசாரத்தி;ன போது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது என்றும் அசிரத்தையானது மகாவாக்கிய விசாரத்தின் பலனை அடைவதற்கு தடையாக இருக்கின்றது என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆசாரியார் சிரத்தையை ஆதாரம் என்ற பெயரிலும், அசிரத்தையை அனாதாரம் என்ற பெயரிலும் விளக்குகிறார். சிரத்தையானது மகாவாக்கியத்தில் இரண்டு ஆரோக்கியமான அணுகுமுறைகளைக் குறிக்கிறது. அவைகள் ஒன்று மாணவனின் மகாவாக்கியத்தை அணுகுமுறையாகும், இன்னொன்று மகாவாக்கியத்திலிருந்து புரிந்து கொண்டதை குறித்த அணுகுமுறை என்பதாகும்.
முதலாவது அணுகுமுறையில் மகாவாக்கியம்தான் அஹம் பிரம்மாஸ்மி என்ற முடிவை அடைவதற்கு ஒரேயொரு சரியான மூலமாகும். பிறகு ஆரோக்கியமான அணுகுமுறையான மகாவாக்கியத்தை சரியாக புரிந்து கொள்வதே இறுதியான, நேரிடையான அஹம் பிரம்மாஸ்மி என்ற அறிவாகும். இதைத் தவிர தன்னுடைய உண்மையான தன்மையை உணர்வதற்கு வேறெந்த வழியும் கிடையாது என்ற உறுதியான நம்பிக்கைக் கொண்டிருக்க வேண்டும்.
மகாவாக்கியமே ஆத்மஞானத்தை கொடுத்துவிடும் என்றால் நிதித்யாசனம் என்ற சாதனம் எதற்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்ற சந்தேகம் வரலாம். இந்த சாதனம் ஒருவனுடைய பழக்க-வழக்க சிந்தனைகளை மாற்றுகின்ற நோக்கத்திற்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறதே தவிர எந்த விசித்திரமான அனுபவத்தையும் உருவாக்கும் நோக்கதிற்காக அல்ல. பழகிய சிந்தனையான முக்கோண தொகுப்பான ஜீவ-ஈஸ்வர-ஜகத்திலிருந்து இரட்டை தொகுப்பிற்கு மாறுவதற்கு மகாவாக்கியத்தின் புரிதல் அவசியமாகும். இந்த இரட்டை தொகுப்பிற்கு மர்ற உதவுவதே நிதித்யாசனத்தின் நோக்கமாகும்.
மகாவாக்கியத்தில் கீழ்கண்ட நான்கு வகையான குறைகள் இருந்தால் அந்த வாக்கியத்திற்கு மதிப்பே கிடையாது. இந்தக் குறைகளே இல்லாத மகாவாக்கியம் சரியான, இறுதியான அறிவைக்கொடுக்கக்கூடியது என்பதை யார் ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். மகாவாக்கியம் என்றும் இருக்கின்ற ஆத்மாவை பற்றி பேசும்போது அதன் உபதேசத்தை ஏற்றுக் கொள்வதற்கு என்ன தடையிருக்கிறது. அதன் உபதேசத்தில் சிரத்தை வைப்பதற்கு என்ன தடை இருக்கிறது என்று ஆசாரியார் வியக்கிறார்.
சிரத்தையுள்ளவன் அறிவை உடனே பெறுகிறான்; அசிரத்தையுடையவன் தியானத்தை மேற்கொள்கிறான். எவ்வளவு நாட்கள் தியானம் செய்தாலும் அதனால் எந்த பயனும் அடைவதில்லை.
ஒருவன் இரட்டைதொகுப்பிற்கு வருவதும், வராமல் போவதும் அவனிடத்தில் உள்ள சிரத்தையைப் பொறுத்திருக்கிறது. சம்சார விடுதலை இரட்டை தொகுப்பைச் சார்ந்து இருக்கிறது. சம்சாரத்திலிருந்து விடுதலை அடைவதற்கான பாதையானது வரிசைக் கிரமமாக கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
- மகாவாக்கியத்தில் சிரத்தையோடு இருத்தல்
- சிரத்தையானது மகாவாக்கிய அறிவை ஆத்மஞானமாக்குகிறது.
- ஆத்மஞானம் மகாவாக்கிய உபதேசமே இறுதியானது, உண்மையானது என்ற செய்தியை கொடுக்கிறது
- மகாவாக்கியத்தில் உள்ள உண்மைத்தன்மை இரட்டை-தொகுப்பை சாத்தியமக்குகிறது
- இரட்டை தொகுப்பானது சம்சார விடுதலையை கொடுக்கிறது.
ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை உணர்வதற்கு இரண்டு பிரமாணங்கள் இருக்கின்றன என்றும் அதில் ஒன்று அறிவைக் கொடுக்கின்றது, இன்னொன்று விடுதலையை கொடுக்கின்றது என்றும் கருதுவது தவறானதாகும். மகாவாக்கியம் தத்துவார்த்த அறிவை மட்டும் கொடுக்கிறது. தியானமானது இந்த அறிவினால் சம்சார விடுதலையானது அடைய உதவுகிறது. உண்மையில் மகாவாக்கியமானது இந்த இரண்டையுமே வரிசைக்கிரமமாக கொடுக்கக்கூடியது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
வேதாந்தத்தின் உபதேசமான நீயே ஆனந்த ஸ்வரூபம் என்பது பிரத்யக்ஷ பிரமாணத்திற்கு வேறுபடுகிறது. உண்மையில் நான் என்றுமே துக்கத்தில் இருக்கிறேன். எனவே எனது அனுபவத்திற்கு மாறாக வேதாந்த உபதேசம் இருக்கிறது. மேலும் வேதாந்தம் அத்வைதத்தை உபதேசிக்கிறது. ஆனால் மற்ற பிரணமாணங்கள் த்வைதத்தை காட்டுகிறது. இந்த இரண்டு காரணத்தினால் வேதாந்த உபதேசமானது அறிவைக் கொடுக்கும் மற்ற பிரமாணங்களுக்கு எதிராக இருக்கிறது. இதனால் சாதகன் வேதாந்த உபதேசத்தை ஏற்றுக் கொள்ளாமல் தியானம் போன்ற மற்ற சாதனங்களை நாடி ஆனந்தத்தை பெற முயறசிக்கிறான். தியானத்தின் மூலம் ஆனந்தத்தை அடைந்தாலும் அது சம்சாரத்திலிருந்து விடுதலை அடைந்ததாக கூற முடியாது. ஏனென்றால் தியானத்தின் மூலமாக அடைந்த ஆனந்தம் நிலையானதல்ல, தியானம் முடிந்ததும் சென்றுவிடக் கூடியது.
உண்மையில் நான் ஆனந்த ஸ்வரூபம் என்பதற்கும், துக்க அனுபவத்திற்கும் எந்த முரண்பாடும் கிடையாது. என்னுடைய அனுபவம் என்று சொல்லும் போது அனாத்மாவை குறிக்கிறது. சாட்சியாக இருக்கின்ற நான் அனுபவிக்கப்படும் பொருள் அல்ல. மகாவாக்கியம் எந்தவொரு பிரமாணத்தின் மூலமாகவும், எந்தவொரு குறிக்கோளுக்கும் உட்படுத்தப்படாத நான் என்ற ஆத்மாவை கையாளுகிறது.. மகாவாக்கியம் ஆத்மாவை பேசுகிறது, மற்ற பிரமாணங்கள் அனாத்மாவை கையாளுகிறது. மனதில் தோன்றுகின்ற ஆனந்தம் பிரதிபிம்பானந்தமாகும். இந்த உண்மையை விளக்குகின்றது மகாவாக்கியம். மகாவாக்கியம் பிம்பானந்தத்தை பற்றிப் பேசுகிறது. பிறகு நாம் மனதில் தோன்று நிலையற்ற ஆனந்தத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
இதிலிருந்து நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது, ஐக்கிய ஞானம் ஸ்ருதியை விட்டுவிட்டு மற்ற பிரமாணங்கள் மூலம் அடைந்து விடலாம் என்ற கருத்தும், வேதாந்த உபதேசம் அனுபவத்திற்கு எதிராக இருக்கிறது என்ற கருத்தும் தவறானது என்பதாகும்.
ஸ்ருதி தெளிவற்ற, சந்தேகமான கருத்தை சொல்கிறது என்பதும் தவறான கருத்தாகும். ஸ்ருதியின் அடிப்படையில் அத்வைதிகள் ஒருவகையான கருத்தையும், விசிஷ்டாத்வைதிகள் ஒருவகையான கருத்தையும், த்வைதிகள் ஒருவகையான கருத்தையும் சொல்கிறார்கள். தத்துவவாதிகளுக்குள்ளே முரண்பாடான கருத்துக்கள் இருப்பது தெரிகிறது. எனவே மாணவன் உபநிஷத் தெளிவற்ற உபதேசத்தை செய்கிறது என்று முடிவெடுக்கிறான். இந்த முரண்பாட்டை நீக்கிக் கொள்வதற்கு அத்வைதத்தில் மனனம் என்ற சாதனம் பரிந்துரைக்கபட்டிருக்கிறது. இந்த சாதனத்தின் துணைக் கொண்டு உபநிஷத் ஒரேயொரு கருத்தைத்தான் உபதேசிக்கிறது, அதுவே தத் த்வம் அஸி என்பதாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உபநிஷத் பஞ்சகோசத்தை நீக்கிய பிறகுதான் நீ ஆனந்த ஸ்வரூபம் என்று கூறுகிறது. இந்த முக்கியமான உண்மையை புரிந்து கொள்ளாமல் ஒருவன் பஞ்ச கோசத்தை வைத்துக் கொண்டு உபநிஷத் உபதேசம் அனுபவத்திற்கு வேறாக இருக்கிறது என்ற சந்தேகத்தை கெண்டிருக்கிறான். சாதகனுக்கு அன்னமய கோசத்தை நீக்குவதற்கே கடினமாக இருக்கும்போது உபநிஷத்தின் உபதேசம் உதாரணத்துடன் விளக்கப்படுகிறது.
ஸ்ருதி, நீ வயோதிகம், மரணம், தீராத நோய் இவைகளிலிருந்து விடுபட்டவன் என்று சொல்கிறது. இப்படி சொல்லும்போது ஸ்ருதி அன்னமய கோசமான உடலைக் குறித்து இதை சொல்லவில்லை. வயிற்றுவலியால் வேதனை பட்டுக்கொண்டிருக்கின்ற ஒருவனிடம் நீ நோய்களிலிருந்து விடுபட்டவன் என்று சொன்னால் இயல்பாகவே அவனுக்கு ஸ்ருதியின் வாசகத்தில் சந்தேகம் வரும்.
நான் என்ற சொல்லில் இரண்டு நான் உண்டு ஒன்று ஆத்மா-நான், இன்னொன்று உடல்-நான் ஆகும். சாதகன் இரண்டையும் சேர்த்து நான் என்று புரிந்து கொண்டிருந்தால் சந்தேகம் தொடர்ந்து கொண்டிருக்கும். எனவே உபநிஷத் சாதகனுக்கு பஞ்சகோச விவேகத்தை சொல்லி அதை அவன் மனதிலிருந்து அதை நீக்கி பிறகுதான் முக்கிய உபதேசத்தை சொல்கிறது. உண்மையில் ஓரேயொரு சாட்சி சைதன்யம்தான் இருக்கிறது. அதுவே ஆனந்த ஸ்வரூபம், பூரண ஸ்வரூபம் மற்ற அனைத்தும் மித்யா என்று அறிவை போதிக்கிறது. எனவே சாதகன் பஞ்சகோசத்தை நீக்கிவிட்டு மகாவாக்கியத்தை சாட்சி ஸ்வரூபமாக விசாரம் செய்தால் அவன் உடனடியாக மோட்சத்தை, ஆத்மஞானத்தை அடைந்து அதில் நிஷ்டையும் அடைந்து விடுவான்.
சப்த பிரமாணம் இரண்டு வகையாக இருக்கிறது. ஒன்று ஏற்கனவே அனுபவித்த ஒன்றை அறிமுகப்படுத்துவது, மற்றொன்று ஏற்கனவே அனுபவித்த ஒன்றை விவரித்து சொல்வதாகும். உதாரணமாக சீடன் தன்னருகே நின்று கொண்டிருக்கும் சகோதரனை குருவிடம் அறிமுகம் செய்கிறான். இங்கே ஏற்படும் அனுபவம் புலன்கள் மூலமாக நடக்கிறது. எனவே இது அறிமுக சப்த பிரமாணம் என்று கூறப்படுகிறது. அதே சீடன் வெளியூரில் உள்ள தன் சகோதரனைப் பற்றி குருவிடம் சொல்லும்போது மறைமுக அறிவைத்தான் கொடுக்கிறது. எனவே சொற்களை விவரிக்கும்போது மறைமுக அறிவையும், சொற்களை அறிமுகம் செய்வது நேரிடை அறிவையும் கொடுக்கிறது.
மகாவாக்கியம் என்பது விவரிக்கும் சொற்களை உடையதல்ல, அது அறிமுகம் செய்கின்ற வார்த்தைகளாகும். மகாவாக்கியம் எங்கேயோ இருக்கின்ற பிரம்மனைப் பற்றி விவரிக்கவில்லை. எனவே அது விவரிக்கின்ற சொற்களை உடையதல்ல. அது நம்மிடத்திலே இருக்கின்ற பிரம்மனைப் பற்றி சொல்வதால் அறிமுக சொற்களை உடையதாகும்.
ஸ்ருதி சைதன்யத்தை வெளிக்காட்டவில்லை, ஏனெனில் அது ஏற்கனவே அனுபவமாக இருக்கிறது. ஸ்ருதி சைதன்யத்தின் தன்மையை சுட்டிக் காட்டுகிறது. அதாவது பிரம்மன் கால, தேச, வஸ்துவால்; வரையறுக்கப்படாதது என்பதை சுட்டிக் காட்டுகிறது. இந்தப் பிரம்மனையே மகாவாக்கியம் வெளிப்படுத்துகிறது. அது ஏற்கனவே நம் அனுபவத்தில் இருக்கின்ற பிரம்மனைப் பற்றிய நேரிடையான அறிவைக் கொடுக்கிறது.
சாதகன் அவஸ்தா-த்ரய விவேகத்தை அன்வய-வியதிரேக முறையில் தொடர்ந்து தவறாமல் பயிற்சி செய்யும் போது அவஸ்தைகள் மாறினாலும் நான் மட்டும் மாறாமல் தொடர்ந்த மூன்று நிலைகளிலும் இருக்கிறேன் என்ற அறிவை அடைவான். உடலையும், மனதையும் நீக்கி நானே பிரக்ஞான சாட்சியாக இருக்கிறேன் என்ற அறிவை அடைகிறான். மகாவாக்கிய விசாரம் செய்வதற்கு முன்பு சாதகன் சைதன்யத்தை நான் என்றும், பிரக்ஞானத்தை அஹம் என்ற சொல்லுடன் சமப்படுத்தும் பயிற்சியை செய்து முடித்திருப்பான். அதாவது பிரக்ஞானம் அஹம் அஸ்மி என்ற அறிவை அடைந்திருப்பான். பிறகு மகாவாக்கிய விசாரம் செய்யும் போது பிரக்ஞானமே பிரம்மன் என்ற அறிவை அடைவான். இந்த அறிவை அடைந்த உடனேயே அஹம் பிரம்ம அஸ்மி என்ற தன்னை உணர்ந்து கொள்வான்.
அவஸ்தா-த்ரய விவேகத்திற்கு மூன்று படிகள் உண்டு. அவைகள் நிலையான-நான், அகங்கார-நான், நிலையான சாட்சி ஆகும். இந்த மூன்று படிகளை கடந்து சாதகன் நான் சாட்சி என்ற அறிவை அடைகிறான். இத்துடன் அன்வய வியதிரேக முறையை பயன்படுத்துவது முடிகிறது. இதை வெற்றிகரமாக செய்து முடித்தவுடன் அடுத்ததாக மகாவாக்கிய விசாரத்திற்கு சீடன் தயாராக இருக்கிறான். இதன் மூலம் நானே சாட்சி சைதன்யம், நானே பிரம்மன் என்ற அறிகிறான்.
நான் சம்சாரியாக இருப்பதால் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது என்று வேதாந்தம் கூறுகிறது. நான் ஆனந்த ஸ்வரூபமான சாட்சி சைதன்யம் என்றும் கூறுகிறது. என் துன்பங்கள் போக்குவதற்கு எந்த வழியையும் சொல்லவில்லை, அதற்கு மாறாக நீதான் பிரம்மன், சத்யமானவன், ஆனந்த வடிவமானவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. நான் சம்சாரியாக இருந்து கொண்டு சாட்சி சைதன்யத்தை பக்கத்து வீட்டுக்காரனாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று வேதாந்த மாணவர்கள் சிலர் கூறுகிறார்கள். அதற்கு ஆசாரியார் பதிலளிக்கிறார்.
நீ சாட்சியாக இருந்து கொண்டு அகங்காரத்தை பக்கத்துவீட்டுகாரனாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அப்போது அகங்காரத்தால் அனுபவிக்கப்படுகின்ற அனைத்தும் பக்கத்துவீட்டுகாரனுடைய அனுபவமாக பார்த்துக் கொண்டிருக்க முடியும். அதனால் அடுத்தவீட்டுக்காரனுடைய பிரச்சனைகள் உனக்கு பொருட்டாக இருக்காது, துன்பத்தை தராது. கவலையில் வைத்திருக்காது. இதுதான் வேதாந்தத்தின் உபதேசமாகும். அகங்காரத்தை மேம்படுத்துவதோ, சீர்படுத்துவதோ துன்பத்தில் இருந்து உன்னை காப்பாற்றாது. எனவே அகங்காரத்தை தனக்கு அந்நியனாக அன்பய வியதிரேக முறையை பயன்படுத்தி செய்திட வேண்டும். அவஸ்தா த்ரய விவேகத்தை அடைந்தாலும் இந்த அகங்காரத்தை தன்னிடமிருந்து வேறானது என்ற உணர்வை அடைந்திடலாம். நான் என்ற சொல் அகங்காரத்தை அந்நியனாக கொண்ட சாட்சி சைதன்யத்தையே குறிக்கிறது.
வேதாந்தத்தை நெடுநாட்கள் படித்தவன் நான் சுதந்திரமானவன் என்று சொல்ல தயங்குவதற்கு காரணம், அவன் மனதிலுள்ள கவலைகளால் பாதிக்கப்படுகிறேன் என்ற கருதிக்கொண்டிருக்கிறான். ஆனால் நான் மனமல்ல என்று உணர்ந்து விட்டால் உடலுக்கும். மனதுக்கும் வரும் இன்ப-துன்பங்களால் பாதிக்கப்பட மாட்டான். உடலும்-மனமும் அனாத்மாக்கள் அதனால் இவைகளுக்கு வரும் இன்ப-துன்பங்கள் என்னைச் சார்ந்தவையல்ல என்றும், அவைகளை வேடிக்கை பார்க்கின்ற சாட்சியாக நான் இருக்கிறேன், அதனால் நான் என்றும் முக்தன், சுதந்திரனமானவன் என்று உணரலாம். நான் விருப்பு-வெறுப்பிலிருந்து விடுபட்டவன், மாயையிலிருந்தும், ஆணவத்திலிருந்தும், பொறாமையிலிருந்தும் விடுபட்டவன், நான்கு புருஷார்த்தங்களுக்கு கட்டுபட்டவன் அல்ல என்றும் உணர்ந்து கொள்ள முடியும்.
சில சாதகர்கள் நான் காம-க்ரோத உணர்ச்சிகளால் கஷ்டப்படுகிறேன். என்னால் எப்படி முக்தன் என்று கருதமுடியும் என்று புலம்பிக் கொண்டிருப்பார்கள். இந்த காம, க்ரோதம் போன்ற தீய உணர்ச்சிகள் மனதைச் சார்ந்ததாகும். ஆனால் நீயோ சாட்சி ஸ்வரூபமானவன் எனவே அவைகள் உன்னைப் பாதிக்காது என்று யாக்ஞவல்கியர் தன் சீடனான ஜனக மகாராஜாவிடம் கூறுகிறார். இப்படி சொல்லும் போது. மனதில் தீய உணர்ச்சிகள் எழுவதற்கு இடம் கொடுக்கலாம் என்று நினைக்கக்கூடாது. மனதை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். ஆனால் மனத்தூய்மையே எனக்கு விடுதலையைக் கொடுக்காது என்று புரிந்து கொள்ள வேண்டும். மனம் எந்த நிலையில் இருந்தாலும், அவைகள் என்னைப் பாதிக்கவில்லை என்ற நிலையுடன் நான் முக்தனாக இருக்கமுடியும் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.
சீடன் மகாவாக்கிய விசாரத்தை மேற்கொள்ளும்போது, குரு சொல்லித் தந்த தத் த்வம் அஸி என்ற வாக்கியத்தை கேட்கும்போது அகங்காரத்தை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் சிரவணம் செய்வதற்கு சீடன் வெளியுலகத்தை சாட்சியாக இருந்து கொண்டு அனுபவித்தாக வேண்டும். மனதை மட்டும் பொருளாக மாற்றி விடும்போது அதனால் வெளியுலகத்தை அனுபவிக்க முடியாது. மனதை சாட்சியாக பார்க்கக்கூடாது, மனதை பயன்படுத்தி மகாவாக்கியத்தை உன்னிப்பாக கேட்க வேண்டும்.
தத் என்ற வார்த்தையை கேட்கும் போது அதை முதலில் நான் என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் அவன் பிரமாதாவாக இருக்கிறான். முழு வாக்கியத்தை கேட்கும்போது மனதை நீக்கிவிட வேண்டும். இந்த நிலையில் அவன் சாட்சியாகி விடுகிறான். இந்த சாட்சியையே பிரம்மத்துடன் சமப்படுத்த வேண்டும்.
அஹம் பிரம்மாஸ்மி என்பதை யார் சொல்வது? சாட்சி சைதன்யமா அல்லது அகங்காரத்தைச் சேர்ந்த மனமா என்று கேள்வியெழுகிறது. உண்மையில் இரண்டுமே அப்படி சொல்ல முடியாது. சாட்சியால் அகங்காரம் இல்லாமல் எந்த விவகாரமும் செய்ய முடியாது. ஆழ்ந்த உறக்கத்தில் அகங்காரம் ஒடுங்கிய நிலையில் இருப்பதால் நம்மால் எந்த விவகாரமும் செய்ய முடிவதில்லை. இது இரவில் அறைக்கு வெளிச்சம் தருவது மின்சாரமா அல்லது மின்விளக்கா என்று கேட்பதற்கு சமமாகும். இவையிரண்டும் சேர்ந்துதான் வெளிச்சத்தைத் தரமுடியும் என்று தெரிகிறது. இதிலிருந்து சாட்சி, அகங்காரம் இரண்டும் சேர்ந்துதான் மகாவாக்கியத்தின் பொருளை உணர்த்த முடியும். அஹம் பிரம்மாஸ்மி என்று இரண்டும் சேர்ந்தால்தான் உணர்ந்து கொள்ள முடியும். ஸ்ருதி, யுக்தி, அனுபவம் ஆகிய பிரமாணங்களை பயன்படுத்தி சாட்சியை அகங்காரத்திலிருந்து பிரித்து எடுத்து புரிந்து கொள்ள வேண்டும். ஆழ்ந்த உறக்கத்தில் அகங்காரம் ஒடுங்கி இருப்பதால் அதனால் அனுபவத்திற்கு வருகின்ற துன்பங்கள், கவலைகள் எதுவும் இருப்பதில்லை. ஆனால் நிம்மதியாக, ஆனந்தமாக இருக்க முடிகிறது. இதிலிருந்து ஆனந்த ஸ்வரூபமான சாட்சி சைதன்யம் மட்டும் இருப்பதாக யூகிக்க முடிகிறது.
ஆசாரியார் சொல்கிறார், சாதகன் அகங்காரத்தின் உதவியால் மகாவாக்கியத்தை திரும்ப திரும்ப விசாரம் செய்து சாட்சி மட்டும் பிரம்மன் என்று உணர்ந்து கொள்ள வேண்டும். இப்போது அகங்காரத்தை பயன்படுத்தி இதை புரிந்து கொண்டு, பிறகு அகங்காரத்தை நீக்கிவிட்டு சாட்சியை மட்டும் நான் என்று புரிந்து கொள்ள வேண்டும். பிரம்மத்தை தவிர மற்ற அனைத்தும் மித்யா என்ற வேதாந்த உபதேசத்தின்படி அகங்காரமானது நீக்கப்படுகிறது. சாட்சியான சீடன் அகங்காரத்தை ஊடகமாக பயன்படுத்தி வெளியுலகத்துடன் தொடர்பு கொள்கிறான். உதாரணமாக மூக்குக்கண்ணாடியை பயன்படுத்தி வெளியுலகத்தை பார்ப்பது போல இருக்கிறது.
அகங்காரம் தற்காலிகமான கருவி என்று எப்படி நிரூபிக்க முடியும் என்ற கேள்வி மனதில் எழுகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் அகங்காரம் நீக்கப்பட்டிருக்கிறது வெறும் சாட்சி சைதன்யம் மட்டும்தான் இருக்கிறது. இந்த ஒன்றே அகங்காரம் நீக்கக் கூடியது என்பதற்கான பிரமாணம். விழிப்பு நிலையில் அகங்காரமானது மூக்குக் கண்ணாடியைப் போல பயன்படுத்தப்பட்டு பிரம்மனை கிரகிக்க முடிகிறது. ஸத்-சித்-ஆனந்த ஸ்வரூபமான பிரம்மனை அடைந்ததும் மனமானது பொய்யாக்கப்படுகிறது. மனதிற்கு தனக்கென்று எந்த இருப்பும், உணர்வும் இல்லாதது. இவை இரண்டும் உணர்வுமயமான ஆத்மாதான் மனதிற்கு கடனாக கொடுக்கிறது. ஆத்மாவை உணர்ந்தவுடன் மனம் அதனுள் அடங்கிவிடுகிறது, மித்யாவென்ற அறிவு உண்டாகிவிடுகிறது. ஆதலால், அகங்காரம் ஆத்மாவை அத்யாரோப அபவாத நியாயத்தின் மூலமாக உணர்வதற்கு தற்காலிக வழியாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
உதாரணமாக குரு சீடனுக்கு பானையைக் காட்டி அது காரியம் என்று கூறுகிறார். பிறகு அதன் காரணமாகவுள்ள களிமண்ணைக் காட்டுகிறார். பிறகு அவனிடம் களிமண்ணில்லாமல் பானை இருக்கமுடியுமா என்று கேட்கிறார். நீண்ட ஆலோகனைக்குப் பின் சீடன்,. களிமண்ணைத் தவிர பானை என்ற ஒன்று கிடையாது என்கிறான். அவன் பானையைக் கையில் வைத்துக் கொண்டே இவ்வாறு கூறுகிறான். இந்த புரிதலே பானையை பொய்யாக்கி விடுவதாகும். இவ்வாறு செய்வதால் பானையை அழிக்கவில்லை. எனவே ஒன்றை பொய்யாக்குதல் என்பது அதை இல்லையென்று சொல்வதில்லை, அது இருக்கும் போதே இவ்வாறு சொல்லப்படுகிறது.
அகங்காரம் உதாரணத்தில் சொல்லப்பட்ட பானை அகங்காரத்திற்கும், களிமண்ணை ஆத்மாவுக்கும் ஒப்பிட்டு பார்க்கும்போது அகங்காரத்தை பயன்படுத்திக் கொண்டே ஆத்மாவை உணர்கின்றோம். பிறகு அகங்காரத்தை மித்யாவாக பாவிக்கின்றோம். ஆனால் அதை உலக விவகாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருப்போம். ஞானி இந்த உண்மையைப் புரிந்துக் கொண்டிருப்பான். அவனைப் பொறுத்தமட்டில் ஆத்மாவைத் தவிர அகங்காரம் என்பதில்லை. ஆயினும் கூட அவன் மித்யாவான அகங்காரத்தை பயன்படுத்திக் கொண்டிருப்பான்.
மித்யாவான அகங்காரத்தை எப்படி பயன்படுத்த முடியும் என்று கேள்வி எழுகிறது. வேதாந்தம் பொய்யானவைகளே பயனுள்ளதாக இருக்கிறது என்று சுட்டிக் காட்டுகிறது. உதாரணமாக தங்கம் கட்டியாக இருக்கும்போது அதை அணிவதற்கு யாரும் விரும்புவதில்லை. அதிலிருந்து பொய்யாhன ஆபரணங்களை உருவாக்கி அணிவதையே விரும்புவார்கள். எனவே மித்யாவான நாம-ரூபங்களே விவகாரத்திற்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் இவையிரண்டிற்கும் தனக்கென்று எந்த இருப்பும் கிடையாது. எனவே பொய்யான அகங்காரத்தை எப்படி பயனுள்ளதாக இருக்கிறது என்ற கேள்விக்கான விடையை வேதாந்தம் கொடுத்திருக்கிறது. அதுபோலவே பிரம்மனும் பயனற்றது. ஆதலால் பிரம்மனாக இருந்துகொண்டு பொய்யான நாம-ரூபங்களை விவகாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று வேதாந்தம் கூறுகிறது.
இந்த உலகமும் மித்யாவான நாம-ரூபங்களின் தொகுப்பேயாகும். பிரம்மன் பயனற்றது, உலகமே பயன்படுத்தக் கூடியது என்றால் நாம் ஏன் பிரம்மத்தை நாட வேண்டும், அடைய வேண்டும், உணரவேண்டும் என்ற கேள்வியெழுகிறது. நாம-ரூபங்களின் இருப்புக்கே காரணம் பிரம்மனாகும். தங்கம் இல்லாமல் ஆபரணங்கள் கிடையாது. ஆபரணங்களிலிருந்து தங்கத்தை எடுத்துவிட்டால் ஒன்றுமே இருக்காது.
மேற்கண்ட பகுப்பாய்விலிருந்து தெரிந்து கொள்வது, உலக விவகாரங்களுக்கு சாட்சி சைதன்யமும் தேவை, அகங்காரமும் தேவை என்பதாகும். ஆனால் அகங்காரம் மித்யாவென்ற அறிவோடு பயன்படுத்தவேண்டும் என்று வேதாந்தம் அறிவுறுத்துகிறது.
--oo000oo--
No comments:
Post a Comment