தைத்திரீய உபநிஷத்
அத்தியாயம்-01(சீக்ஷாவல்லி)
திருத்தம் செய்யப்பட்டது –
27/04/2022
முகவுரைமனனம்
சிரவணத்தை தொடர்ந்து செய்வது மனனம் என்ற சாதனம். சிரவணம் செய்தவன் ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை நன்கு புரிந்து கொண்டு, ஆத்மாவாகிய நான் பூரணமானவன், ஆனந்த ஸ்வரூபமானவன், ஸத் ஸ்வரூபமானவன், ஞான ஸ்வரூபமானவன் என்ற நிலையில் இருப்பான். இந்த உலகமும் மித்யா என்ற அறிவும் ஏற்பட்டிருக்கும்.
- யுக்திபூர்வமாக சிந்தித்தலே இவ்வாறு அழைக்கப்படுகின்றது. சிரவணத்தில் அடைந்த அறிவில் இருக்கும்
சந்தேகங்களை நீக்கிக் கொள்வதற்காக செய்யப்படும் விசாரமே இதுவாகும்.
- இதை ஏன் செய்ய வேண்டுமென்றால், சிரவணத்தால்
அடைந்திருக்கும் அறிவில் நிச்சயமாக சில சந்தேகங்கள் இருக்கும். இவைகளை நீக்கி அடைந்த அறிவில் உறுதியாக
இருக்க இந்த சாதனம் உதவும். எப்பொழுதும் சந்தேகங்களில்லாத அறிவே
நிலையான, மாறாத, சரியான அறிவாக இருக்கும்.
- சந்தேகம் எப்படி எழுகின்றதென்றால், ஒரு விஷயத்தில்
ஒரு பிரமாணத்தின் மூலமாக அடையும் அறிவும், அதே விஷயத்தில் வேறொரு
பிரமாணம் மூலம் வேறொரு அறிவை அடைவதன் மூலம் சந்தேகம் எழுகின்றன. உபநிஷத் பிரமாணம் நான் பூரணமானவன்,
ஆனந்த ஸ்வரூபமானவன் என்று கூறுகிறது, ஆனால் நம்முடைய
அனுபவ பிரமாணம் மூலமாக துக்க ஸ்வரூபமாகவும், அழிவுக்குட்பட்டவனாகவும்
இருக்கின்ற நிலையை அறிந்திருக்கின்றோம்.
ஜகத் மித்யா என்பது உபநிஷத் ஞானம், நம்முடைய
பிரத்யக்ஷ பிரமாணம் ஜகத் உண்மை என்று உணர்த்துகின்றது. இந்த முரண்பாட்டை தீர்த்துக் கொள்ள
வேண்டும்.
- சங்கராச்சாரியார் ஜீவனும் ஈஸ்வரனும் ஒன்றுதான் என்று உபதேசிக்கின்றார் ஆனால் வேறு சில ஆச்சார்யார்கள் ஜீவனும் ஈஸ்வரனும் வேறு என்று உபதேசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் உபநிஷத்தைத்தான் பிரமாணமாக கொண்டு இவ்வாறு கூறுகின்றார்கள். இந்த முரண்பாட்டை இந்த சாதனத்தின் மூலமாகத்தான் தீர்த்துக் கொண்டு, அடைந்த அறிவில் நிலைப்பட முடியும்
இந்த உலகம் மித்யா, நாம-ரூபமானது. நம்முடைய அனுபவத்தில் எல்லாமே நன்றாக ஸ்தூலமாக தெரிந்து கொண்டிருக்கின்றது. இவைகள் எனக்கு எப்படி நிறைவை கொடுக்க முடியாது? என்னால் அனுபவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது, சுக-துக்கங்களை கொடுத்துக் கொண்டு இருக்கின்றது. அனுபவத்தில் சத்யமாக தெரிகின்றது. இந்த சந்தேகத்தை இரண்டு விதத்தில் நீக்கி கொள்ளலாம். சாஸ்திரம் உலகம் இல்லை என்று சொல்லவில்லை, இருப்பது போல் தோன்றி கொண்டிருக்கின்றது என்று கூறுகின்றது., அதை விசாரம் செய்துதான் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.
நம் இந்திரியங்களை உண்மையை உரைக்கும் பிரமாணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உபநிஷத்தைத்தான் பிரமாணமாக இந்த விஷயத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பிரமாணம் கொடுக்கும் அறிவை வேறொரு பிரமாணத்தால் நிரூபிக்க முடியாது. கண்ணால் பார்ப்பவைகளை காதால் நிரூபிக்க முடியாது. மாற்ற முடியாது. அல்லது கண்ணுக்கு துணை புரியவும் முடியாது. ஒரு பிரமாணத்திற்கு, வேறொரு பிரமாணம் ஆபாஸமாக இருக்கும் போது சந்தேகம் வரும். எனவே விசாரம் செய்து பிரமாண ஆபாஸத்தை கண்டுபிடித்து தெரிந்து கொள்ள வேண்டும். உபநிஷத்தான் உண்மையான பிரமாணம், ஞானேந்திரியங்கள்தான் பிரமாண ஆபாஸம் என்று விசாரம் மூலமாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஞானேந்திரியங்கள் உண்மையான பிரமாணம்தான். கண் ஒரு பொருளை பார்க்கின்றது. அதன் வடிவம் மனதில் பதிவாகின்றது. கண் பொருளின் இருப்பை காட்டுகின்றது. நம் மனம் அதை தீர்மானிக்கின்றது. அது சத்யமா, மித்யாவை என்பதை மனம்தான் தீர்மானிக்கின்றது.. கண் கானல் நீரையும், உண்மையான நீரையும் காட்டுகின்றது. எது உண்மையான நீர், எது பொய்யான நீர் என்பதை மனம்தான் புத்தி துணைக்கொண்டு தீர்மானிக்கிறது. எனவே ஞானேந்திரியங்கள் உலகத்தை வெறும் காட்சியாகத்தான் காட்டுகின்றது. மனம் காண்பது சத்யம் என்று சொல்வதை சாஸ்திரம் பொய் என்று நிரூபித்து அவைகளை நீக்குகின்றது. இதிலிருந்து நாம் நம் அனுபவத்திற்கும் சாஸ்திர உபதேசத்திற்கும் முரண்பாடு எதுவும் இல்லை என்று புரிந்து கொள்ளலாம்.
நிதித்யாஸனம் (விபரீதபாவனா நிவிருத்தி)
இந்த சாதனையை செய்யும்போது மனதை பக்குவப்படுத்தவேண்டும். அடைந்த ஞானத்தில் மனம் இருக்குமாறு பழக்கப்படுத்த வேண்டும். பண்புகளில்லாத ஞானம் மோட்சத்தைக் கொடுக்காது. பண்புகளை நமது சுபாவமாக மாற்ற வேண்டும். ஞானத்திற்கு முரண்பாடாக செயல்படுவது விபரீத பாவனை என்று கூறப்படுகிறது. பிரஹ்மமே எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் ஆத்மாவாக இருக்கின்றது. ஆனால் நாம் இந்த உடல்தான் நான் என்று திடமாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம். சில சூழ்நிலைகளினால் நான் சுகமாக இருக்கின்றேன் என்று வரையறுக்கக்கூடாது. இதிலிருந்து நாம் விடுபட வேண்டும். சூழ்நிலைகள் மாறினாலும் நம் மனம் பாதிக்க கூடாது.
உபநிஷத் என்ற சொல்லின் பொருள் விளக்கம்:
தைத்தரீய உபநிஷத்தின் முகவுரை:
இந்த உபநிஷத் உரைநடையில் இருப்பதால், இதை பத்திகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பத்திகளை அனுவாகம் என்று அழைக்கப்படுகின்றது;
------------------------------------------------------------------------
அத்தியாயம்-01(சீக்ஷாவல்லி)
அனுவாகம்-01 ( சாந்தி பாடம்)
ஶன் நோ ப4வத்வர்யமா |
ஶன் நோ இந்த்3ரோ |
ஶன் நோ விஷ்ணுருக்ரம: நமோ ப்3ரஹ்மணே |
நமஸ்தே வாயோ |
த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்3ரஹ்மாஸி
த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்3ரஹ்ம வதி3ஷ்யாமி ரிதம் வதி3ஷ்யாமி |
ஸத்யம் வதி3ஷ்யாமி தன்மாமவது |
தத்3வக்தாரமவது | அவது மாம் | அவது வக்தாரம் ||
ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:
குரு சிஷ்யர்களான எங்களுக்கு மித்ரன் என்கின்ற தேவதை மங்கலத்தைக் கொடுக்கட்டும், சுகத்தை கொடுக்கட்டும். மித்ரன் என்பவர் வெளியே விடும் காற்றான பிராணனுக்கும், பகல் நேரத்திற்கும் அதிஷ்டான தேவதையாக இருப்பவர். வருண தேவன் இவர் உள்ளே செல்கின்ற பிராணனனுக்கும், இரவு நேரத்திற்கும் அதிஷ்டான தேவதையாக இருப்பவர். இவரும் எங்களுக்கு மங்கலத்தையும், சுகத்தையும் கொடுக்கட்டும். கண்ணுக்கும், சூரியனுக்கும் அதிஷ்டானமான தேவதையாக இருக்கும் அர்யமா என்பவர் எங்களுக்கு நன்மையை தந்தருளட்டும். இந்திரதேவன், கைகளின் பலத்திற்கு அதிஷ்டான தேவதையாக இருப்பவர், ப்ருஹஸ்பதி, வாக்கு, புத்தி இவற்றிற்கு அதிஷ்டான தேவதையாக இருப்பவர், விஷ்ணு, பாதத்திற்கு அதிஷ்டான தேவதையாக இருப்பவர், இவர்களும் எங்களுக்கு நன்மையை கொடுக்கட்டும்.
உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ப்ராண சக்திதான் காரணம். எனவே பிராணனின் அதிஷ்டான தேவதையை துதிக்கின்றார்கள். பிறகு அரியமாவிடமிருந்து எல்லா ஞானேந்திரியங்களும் நலமாக இருக்கட்டும் என்றும், நல்ல புத்திக்கும், நல்வாக்குக்கும் பிருஹஸ்பதியை வேண்டுகின்றார்கள். கர்மேந்திரியங்களின் நலத்திற்கு விஷ்ணுவை வேண்டுகின்றார்கள்.
எல்லா சூக்ஷும பிரபஞ்சத்திற்கும் ஆதாரமாக இருப்பவர், எல்லா தேவதைகளுக்கும் ஆதாரமாகவும் இருப்பவர், முதன்முதலில் ஈஸ்வரனிடமிருந்து தோன்றியவர் ஹிரண்யகர்ப்பன் என்றும், சகுண பிரம்மன் என்றும் அழைக்கபடுகின்றார். இவருக்கும் நமஸ்காரம் செய்கின்றனர். வாயுவாகவும் இருக்கும் ஹிரண்யகர்ப்பனுக்கு நமஸ்காரம் செய்கின்றனர். எல்லா சூட்சும சரீரங்களுக்கும் முக்கியமானதாக கருதப்படுகின்றது வாயு. எனவே அவரை வாயு ஸ்வ்ரூபமாக அழைக்கின்றார்கள்.
ஹிரண்யகர்ப்பர் கர்ம பலனை தந்து கொண்டிருப்பவர்.
சாஸ்திரத்தை படிக்கும் நான் அது போதிக்கின்ற சரியான அறிவை அடைய வேண்டும். அவ்வாறு அடைந்த அறிவு என்னிடத்தில் நிலை பெற வேண்டும். அதை வாக்கினாலே சரியாக சொல்ல வேண்டும். ஹிரண்யகர்ப்பன் அருள் இருந்தால்தான் நம்மால் ஆத்ம ஞானத்தை அடைய முடியும்.
தத் மாம் அவத். தத் வக்தாரம் அவத் – என்னை காப்பாற்று, என் குருவையும் காப்பாற்று என்று ஹிரண்ய கர்ப்பனிடம் வேண்டுகின்றனர். இங்கே என்னை காப்பாற்று என்பது ஞானத்தை அடைவதற்கு இடையூறாக இருப்பவகளை நீக்கி அதை அடைவதற்கும், சாதன சதுஷ்டய சம்பத்தியையும் அடைந்திட அருள் புரிய வேண்டும் என்று வேண்டுவதாக புரிந்து கொள்ள வேண்டும்,. அதேபோன்று குருவுக்கு நீண்ட ஆயுளை கொடுத்தும், அடைந்த அறிவை சரியாக உபதேசிக்கும் திறமையை கொடுத்தும் காப்பாற்று என்று வேண்டுகின்றான்.
அனுவாகம்-02
ஸீக்ஷாம் ஓயாக்யாஸ்யாம: வர்ண: ஸ்வர: மாத்ரா
வேதத்தை படிக்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்று இங்கு சொல்லப்பட்டிருக்கின்றது.
ஸீக்ஷாம் ஓயாக்யாஸ்யாம - எழுத்துக்களை உச்சரிக்கும் முறையை சொல்கின்ற சீக்ஷா சாஸ்திரத்தை நாங்கள் சொல்கின்றோம்.
அனுவாகம்-3.1
இங்கு தியானம் ஒன்று கூறப்படுகின்றது. இதற்கு ஸம்ஹிதா தியானம் என்று பெயர். முதலில் சிஷ்யனின் பிரார்த்தனையுடன் தொடங்குகிறது
ஸஹ நௌ யஸ: ஸஹ நௌ ப்3ரஹ்மவர்சஸம் அதா2த:
உபநிஷத3ம் வ்யாக்2யாஸ்யாம: பஞ்சஸ்வதி4கரணேஷு
அதி4லோகமதி4ஜ்யௌதிஷமதி4வித்3யமதி4ப்ரஜமத்4யாத்மம்
தா மஹாஸம்ஹிதா இத்யாசக்ஷதே ||
இந்த உபாஸனையானது சிஷ்யனால் உபாஸிப்பதால், குருவால் உபதேசிக்கப்படுவதால் வரும் புகழ் எங்களை அடையட்டும், தேஜஸ் இருக்கட்டும். வேதாந்த படிக்க வந்த மாணவன் இங்கு தனக்கு புகழ் என்று குறிப்பிடுவது ஸ்வாத்யாயம்- வேதாந்தத்தை படித்தல், ப்ரவசனம் – கற்றதை சொல்லிக் கொடுத்தல் என்பதையும், குருவினுடைய புகழால் அவரது உபதேசத்தை கேட்டு பயனடைவதற்கு சீடர்கள் வெவ்வேறு பகுதியிலிருந்து வருவார்கள் என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். சீடன் தான் கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும், தான் பெற்ற அறிவை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதனால் அவன் பெற்ற அறிவு மென்மேலும் வளரும், நிதித்யாஸனத்திற்கு பயன்படும். குரு-சிஷ்ய பரம்பரை (சம்பிரதாய ரக்ஷணம்) தொடர்ந்து வரும். ரிஷிகளுக்கு நாம் கடன்பட்டிருக்கின்றோம். அந்த கடனை அடைப்பதற்கு இந்த புகழ் உதவி புரியும்.
ஸம்ஹிதா என்ற பெயருடைய உபாஸனையை ஐந்துவிதமான விஷயங்களுடன் தெளிவாக விளக்கப்படுகின்றது. அவைகளாவது இந்த உலக சம்பந்தப்பட்ட நான்கு தேவதைகளைக் குறித்து தியானித்தல், ஒளி சம்பந்தமான தேவதைகளைப் பற்றியதான உபாஸனை, அறிவு சம்பந்தமான தேவதைகளைப் பற்றியதான உபாஸனை, இனபெருக்கம் சம்பந்தமான தேவதைகளைப்பற்றியதான உபாஸனை , உடல் சம்பந்தமான தேவதைகளைப் பற்றியதான உபாஸனை. இவைகள் யாவும் மேலான ஸம்ஹிதா என்று வேதத்தை அறிந்தவர்கள் கூறுகின்றார்கள்.
விசாரம்:-
உபாஸனை மூன்று பகுதிகளை உடையது.
1.
உபாஸகன் – உபாஸனை செய்பவன்,
2.
உபாஸன தேவதை – எந்த தெய்வத்தை குறித்து தியானிக்கின்றோமோ அதை குறிக்கின்றது,
3.
ஆலம்பனம் – ஏதாவது ஒரு உருவத்தை (அ) குறியை
வைத்துக்கொண்டு அதன் மூலமாக கண்ணுக்கு தெரியாத அந்த தேவதையை தியானித்தல்.
இந்த உபாஸனையில் நான்கு எழுத்துக்களை ஆலம்பனமாக வைத்து நான்கு
தேவதைகளை உபாஸனை செய்யப்படுகின்றது. சந்தி என்பது இரண்டு சொற்களின்
சேர்க்கையாகும். நம்மை, சார்ந்தது என்ற
இந்த இரண்டு வார்த்தைகளை சேர்க்கும்போது “நம்மைச்சார்ந்தது”
என்று ஒரு சொல்லாக வருகின்றது. முதல் சொல்லின் கடைசி எழுத்து பூர்வ
ரூபம், இரண்டாவது சொல்லின் முதல் எழுத்து உத்தர ரூபம். இதற்கிடையில் உள்ள இடைவெளி சந்தி
என்றும், இரண்டையும் சேர்க்கின்ற எழுத்து சந்தானம் என்றும் அழைக்கப்படுகின்றது.
இஷேத்த்வா – இஷே + த்வா
இஷே என்ற சொல்லின் கடைசி எழுத்து ” ஏ
“ – பூர்வ ரூபம்
த்வா என்ற சொல்லின் முதல் எழுத்து “ த்
” - உத்தர ரூபம்
இஷேத்த்வா – இஷே + த்வா
இரண்டிற்குமிடையே உள்ள இடைவெளி சந்தி என்று பெயர்.
த் என்ற எழுத்து இரண்டையும் இணைக்கும் இதுவே சந்தானம்.
ஒவ்வொன்றிலும் ஆலம்பனமாக வைத்து ஒவ்வொரு தேவதைகளை உபாஸிக்க வேண்டும். இதுபோல ஐந்து விதமான உபாஸனைகளைப்
பற்றி விளக்கப்படுகின்றது.
அத2 – பிறகு (வர்ண, ஸ்வர முதலியவற்றை உச்சாடனம் செய்த பிறகு )
அத – ஆகவே
1. உபாஸனை செய்வதால் மனம் ஒருமுகப்படும், 2. மேலே
குறிப்பிட்ட சப்தங்களை பயிற்சி செய்வதற்கு சப்தக்ரகணம்.
ஞானத்தை அடைவதற்கு இரண்டு படிகள் 1. சப்தக்ரகணம், 2. அர்த்தக்ரகணம். முதலில் சொல்லைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும். சப்த ஞானத்தை உபாஸனை செய்த பிறகு அர்த்த ஞானத்திற்கு சென்றால் விரைவாக அர்த்தத்தை தெரிந்து கொள்வோம்.
அத2 – பிறகு (வர்ண, ஸ்வர முதலியவற்றை உச்சாடனம் செய்த பிறகு )
ஞானத்தை அடைவதற்கு இரண்டு படிகள் 1. சப்தக்ரகணம், 2. அர்த்தக்ரகணம். முதலில் சொல்லைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும். சப்த ஞானத்தை உபாஸனை செய்த பிறகு அர்த்த ஞானத்திற்கு சென்றால் விரைவாக அர்த்தத்தை தெரிந்து கொள்வோம்.
அனுவாகம்-3.2
அதா2தி4லோகம் |
ப்ருதி2வீ பூர்வரூபம் |
த்3யௌரூத்தரரூபம் |
ஆகாஶ: ஸந்தி4: :
வாயு: ஸந்தா4னம் |
இத்யாதி4லோகம் ||
அதா2தி4லோகம் |
ப்ருதி2வீ பூர்வரூபம் |
த்3யௌரூத்தரரூபம் |
ஆகாஶ: ஸந்தி4: :
வாயு: ஸந்தா4னம் |
இத்யாதி4லோகம் ||
இப்பொழுது உலக சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது. பூர்வ எழுத்தில் நிலத்தை வைத்து தியானிக்க
வேண்டும். உத்தர எழுத்தில்
சுவர்க்கத்தை தியானிக்க வேண்டும். இடைவெளியில் ஆகாசத்தை தியானிக்க வேண்டும். சேர்க்கும் எழுத்தில் வாயுவை தியானிக்க
வேண்டும். இவ்வாறு உபாஸனை செய்வதால் மனம் ஒருமுகப்படுவதோடு-மட்டுமல்லாமல் விரிவடையவும் செய்கின்றது,
அனுவாகம்-3.3
அதா2தி4ஜ்யௌதிஷம் |
அக்3னி: பூர்வரூபம் |
ஆதி3த்ய உத்தரரூபம் |
அப: ஸந்தி4: வைத்3யுத: ஸந்தா4னம் |
இத்யதி4ஜ்யௌதிஷம் ||
இப்பொழுது ஒளி சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது. பூர்வ எழுத்தில் நெருப்பை தியானிக்க வேண்டும். உத்தர எழுத்தில் சூரியனை தியானிக்க வேண்டும். இடைவெளியில் மழைநீரை தியானிக்க வேண்டும். சேர்க்கும் எழுத்தில் மின்னலை தியானிக்க வேண்டும். இவ்விதம் ஒளி சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது
அனுவாகம்-3.4
அதா2தி4வித்3யம் |
ஆசார்ய: பூர்வரூபம் |
அந்தேவாஸ்யுத்தர்ரூபம் |
வித்3யா ஸந்தி4: ப்ரவசனம் ஸந்தா4னம் |
இத்யாதி4வித்3யம் ||
இப்பொழுது அறிவு சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது. பூர்வ எழுத்தில் குருவை தியானிக்க வேண்டும். உத்தர எழுத்தில் சிஷ்யனை தியானிக்க வேண்டும். இடைவெளியில் அறிவை தியானிக்க வேண்டும். சேர்க்கும் எழுத்தில் உபதேசித்தலை தியானிக்க வேண்டும். இவ்விதம் அறிவு சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது
அனுவாகம்-3.5
அதா2தி4ப்ரஜம் |
மாதா பூர்வரூபம் |
பிதோத்தர்ரூபம் |
ப்ரஜா ஸந்தி4: ப்ரஜனனம் ஸந்தா4னம் |
இத்யதி4ப்ரஜம் ||
இப்பொழுது சந்ததி சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது. பூர்வ எழுத்தில் தாயை தியானிக்க வேண்டும். உத்தர எழுத்தில் தந்தையை தியானிக்க வேண்டும். இடைவெளியில் குழந்தையை தியானிக்க வேண்டும். சேர்க்கும் எழுத்தில் புணர்ச்சியை தியானிக்க வேண்டும். இவ்விதம் சந்ததி சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது
அனுவாகம்-3.3
அதா2தி4ஜ்யௌதிஷம் |
அக்3னி: பூர்வரூபம் |
ஆதி3த்ய உத்தரரூபம் |
அப: ஸந்தி4: வைத்3யுத: ஸந்தா4னம் |
இத்யதி4ஜ்யௌதிஷம் ||
இப்பொழுது ஒளி சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது. பூர்வ எழுத்தில் நெருப்பை தியானிக்க வேண்டும். உத்தர எழுத்தில் சூரியனை தியானிக்க வேண்டும். இடைவெளியில் மழைநீரை தியானிக்க வேண்டும். சேர்க்கும் எழுத்தில் மின்னலை தியானிக்க வேண்டும். இவ்விதம் ஒளி சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது
அனுவாகம்-3.4
அதா2தி4வித்3யம் |
ஆசார்ய: பூர்வரூபம் |
அந்தேவாஸ்யுத்தர்ரூபம் |
வித்3யா ஸந்தி4: ப்ரவசனம் ஸந்தா4னம் |
இத்யாதி4வித்3யம் ||
இப்பொழுது அறிவு சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது. பூர்வ எழுத்தில் குருவை தியானிக்க வேண்டும். உத்தர எழுத்தில் சிஷ்யனை தியானிக்க வேண்டும். இடைவெளியில் அறிவை தியானிக்க வேண்டும். சேர்க்கும் எழுத்தில் உபதேசித்தலை தியானிக்க வேண்டும். இவ்விதம் அறிவு சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது
அனுவாகம்-3.5
அதா2தி4ப்ரஜம் |
மாதா பூர்வரூபம் |
பிதோத்தர்ரூபம் |
ப்ரஜா ஸந்தி4: ப்ரஜனனம் ஸந்தா4னம் |
இத்யதி4ப்ரஜம் ||
இப்பொழுது சந்ததி சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது. பூர்வ எழுத்தில் தாயை தியானிக்க வேண்டும். உத்தர எழுத்தில் தந்தையை தியானிக்க வேண்டும். இடைவெளியில் குழந்தையை தியானிக்க வேண்டும். சேர்க்கும் எழுத்தில் புணர்ச்சியை தியானிக்க வேண்டும். இவ்விதம் சந்ததி சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது
அனுவாகம்-3.6
அதா2த்4யாத்மம் |
அத4ரா ஹனு: பூர்வரூபம் |
உத்தரா ஹனுருத்தர்ரூபம் |
வாக் ஸந்தி4: |
ஜிஹ்வா ஸந்தா4னம் |
இத்யத்4யாத்மம் ||
இப்பொழுது உடல் சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது. பூர்வ எழுத்தில் கீழ்வாய்க்கட்டையை தியானிக்க வேண்டும். உத்தர எழுத்தில் மேல்வாய்க்-கட்டையை தியானிக்க வேண்டும்.
இடைவெளியில் பேசும்திறனை தியானிக்க வேண்டும். சேர்க்கும் எழுத்தில் நாக்கை தியானிக்க
வேண்டும். இவ்விதம் உடல் சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது
அனுவாகம்-3.7
இதீமா மஹாஸம்ஹிதா: |
ய ஏவமேதா மஹாஸம்ஹிதா ஓயாக்2யாதா
வேத3 ஸம்தீயதே ப்ரஜயா பஶுபி4: |
ப்3ரஹ்மவர்சஸேனான்னாத்3யேன ஸுவர்க்3யேண லோகேன ||
இவ்விதம் இந்த மேலான உபாஸனைகள் விளக்கப்பட்டிருக்கின்றது. யாரொருவன்
மேலே விளக்கிய முறைப்படி இந்த மேலான உபாஸனைகளை செய்கின்றானோ அவனுக்கு இந்த உலகில் செல்வங்களையும்,
ஒளிபொருந்திய தேகத்தையும், வயிறார உணவும் கிடைக்கப்பெற்றவனாக
இருப்பான். இறந்தபிறகு சுவர்க்கம் போன்ற உயர்ந்த லோகத்தை அடைந்து
சுகித்து இருப்பான்.
....தொடரும்.........
----oo000oo----
No comments:
Post a Comment