Wednesday, July 22, 2015

தைத்திரீய உபநிஷத் - அத்தியாயம்-2 - பகுதி-1

தைத்திரீய உபநிஷத்

அத்தியாயம்-02 - பகுதி-1
ப்ரஹ்மானந்தவல்லி
ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது  27/04/2022 

சங்கரரின் விசாரம்: (பரம புருஷார்த்த ஸாதன விஷய சிந்தா)
பரம புருஷார்த்தமான மோட்சத்தை அடையும் ஸாதனத்தை பற்றிய விசாரம்கர்மம், வித்யா இரண்டைப்பற்றிய விசாரம்.
கர்ம காண்டத்தில் கர்மமே சாதனமாக சொல்லப்படிருக்கின்றது
ஞான காண்டத்தில் ஞானமே சாதனமாக சொல்லப்படிருக்கின்றது
இந்த இரண்டிலும் சாத்தியம் என்ன?
கர்மம் செயலிl ஈடுபட தூண்டுவது, செய்யாதே என்று தடுப்பதுகர்மம் என்ற சாதனத்தின் மூலமாக ஆத்ம ஞானத்தை அடைவதற்கு தகுதிபடுத்தப்படுகிறது. ஞானத்தின் சாத்தியம் நேரடியாக மோட்சத்தையடைவதுஇதுதான் சங்கரர் விளக்க வருகின்ற சித்தாந்தம்.
 
கேள்வி : காம்ய, நிஷித்த கர்மங்கள் செய்யாமல் இருந்தாலே பாவ-புண்ணியங்கள் வராது. விதிக்கப்பட்ட கர்மங்கள் செய்வதனால் பிராரப்த கர்மபலன்களை தீர்த்து விடலாம் அல்லவா?
பதில்     சஞ்சித கர்மபலன்களை எவ்வாறு தீர்க்க முடியும்கர்மங்கள் பாவ-புண்ணியத்தை கொடுக்க கூடியதுஞானத்தில் மட்டும்தான் புண்ணியங்களை சேர்க்காமல் இருக்கலாம், மோட்சத்தை அடையலாம்
கேள்வி   முழு வேதமே கர்மத்திற்காகவே எழுதப்பட்டிருக்கின்றதுமுழு வேதத்தையும் படிக்க வேண்டும் என்ற நியமம் இருக்கின்றதுவித்துவான் யாகம் செய்விக்கின்றான்எனவே முழு வேதத்தையும் படித்தவன் யாகத்தின் மூலமாக மோட்சத்தை அடைய முடியும்உபநிஷத் மூலமாகத்தான் மோட்சத்தை அடையலாம் என்றால், வேதத்தை முழுமையாக படி என்று சொல்லாமல், கர்ம காண்டத்தை மட்டும் படி என்று சொல்லியிருக்கலாமே?
பதில்     வேதம் மேலும் மனனம், நிதித்யாஸனம் என்ற இரண்டு சாதனங்களை சொல்லியிருக்கின்றதுகர்மத்தை மட்டும் செய்து மோட்சத்தை அடையலாம் என்றால் இந்த இரண்டும் பயனற்றதாகி விடும்வேதம் பயனற்ற எதையும் உபதேசிக்காது. மேலும் கர்மம் நிலையற்ற பொருட்களைக் கொண்டு செய்யப்படுவதுஇதனால் எப்படி நிலையான நித்யமான மோட்சத்தை அடைய முடியும்.
கேள்வி   கர்மத்துடன் ஞானத்தையும் சேர்த்துக்கொண்டு மோட்சத்தை அடையலாம்
பதில்     செய்யப்பட்டது என்றால் அது அநித்யம்எது செய்யப்பட்டதோ அது அழியக் கூடியதுவேதாந்தம் இருப்பதைத்தான் சொல்லும் புதியதாக ஒன்றை தோற்றுவிக்காது. ஞானம் எதையும் தோற்றுவிக்காது, இருப்பதைத்தான் காட்டும்.
கேள்வி   விதவிதமான உபாஸனைகள் மூலமாக பிரம்மலோகத்தை அடையலாமே?
பதில்     இதன்மூலம் சகுண பிரம்மனை அடையலாம், நிர்குண பிரம்மத்தை அடைய முடியாது.
கேள்வி   ஞான-கர்ம ஸமுச்சயத்தின் மூலமாக மோட்சத்தை அடையலாமே?
பதில்     ஞான-கர்ம ஸமுச்சயமே நடக்க முடியாது. இந்த இரண்டையும் சேர்க்கவே முடியாதுகர்மத்தின் ஸ்வரூபம் வேறு, ஞானத்தின் ஸ்வரூபம் வேறுஞானத்தின் ஸ்வரூபம் அகர்த்தா, இது பேதத்தை ஏற்படுத்திவிடும். அதனால்தான் கர்மத்தை விட்டுவிட்டுதான் ஞானத்திற்கே செல்ல வேண்டும்எனவே ஞான-கர்ம ஸமுச்சயம் ஒரே நேரத்தில் நடக்க முடியாது. கர்ம காண்டம் அக்ஞானிகளுக்கு பயன்படும், முமுக்ஷுகளுக்கு மனத்தூய்மையை கொடுக்கும்.
கேள்வி   ஞானத்தோடு கர்மத்தையும் துணையாக வைத்துக் கொள்ளலாமே?
பதில்     மோட்சத்திற்கு தடையாக இருப்பது அக்ஞானம்தான்இந்த அக்ஞானத்தை நீக்குவதற்கு ஞானம் மட்டும் போதும்கர்மத்தின் துணை தேவையில்லைஉலகில் அனாத்மாவை பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு ஆசை வரும், அதை நிறைவேற்றுவதற்கு கர்மத்தை செய்வான்ஆத்மாவை பார்ப்பவனுக்கு ஆசையே எழுவதில்லை அதனால் கர்மத்தை செய்ய வேண்டிய தேவையில்லை.

          வேதாந்தத்தை படிக்க வந்து விட்டால், கர்மத்தை விட்டுவிட்டு, சிரவணம், மனனம், நிதித்யாஸனம் மூலம் மோட்சத்தை அடைந்து விடலாம்கர்ம காண்டம் ஒருவனை ஞான காண்டத்திற்கு எடுத்துச் செல்லும் பிறகு அந்த சாதகன் கர்மத்தை விட்டு விட்டு ஆத்ம விசாரம் செய்து மோட்சத்தை அடைய வேண்டும்.

 

முகவுரை:
ஜீவ-ஈஸ்வர ஐக்கியம் ஆனந்தத்தின் அடிப்படையில் விளக்கபடுகின்றது. ஆனந்தமானது விசாரம் செய்யப்படுகின்றது. எனவே இந்த வல்லியில் எல்லா அனுவாகங்களும் முக்கியமானவை. இதில் ஆத்ம விசாரம் செய்யப்படுவதால் இன்னொரு சாந்தி-பாடத்துடன் தொடங்குகிறது
 
சாந்தி பாடம்:
ஸஹ நாவவது |
ஸஹ நௌ பு4னக்து |
ஸஹ வீர்யங் கரவாவஹை |
தேஜஸ்விநாவதீ4தமஸ்து வா வித்3விஷாவஹை |
ஓம்! ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:
 
அந்த ஈஸ்வரன் உறுதியாக குரு-சிஷ்யனான எங்கள் இருவரையும் காப்பாற்றட்டும். இங்கு காப்பாற்று என்பது சிஷ்யனான என்னை அக்ஞானத்திலிருந்து விடுவித்து ஆத்மஞானத்தை கொடு என்றும்குருவுக்கு ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கொடு என்று பொருள் கொள்ள வேண்டும்,
அந்த ஈஸ்வரன் எங்களிருவரையும் காப்பாற்றட்டும். இங்கே காப்பாற்று என்பது ஞானத்தை அடைந்து அதன் பலனை அனுபவிப்பவனாக இருக்க வேண்டும், அதாவது ஞான நிஷ்டை அடைந்திட வேண்டும் என்று பொருள் கொள்ள வேண்டும்.

நாங்கள் இருவரும் சேர்ந்து முயற்சி செய்வோமாகஇங்கே சிஷ்யனின் முயற்சி என்பது வித்யாவை கவனமாக கேட்டல், சிந்தித்தல் பிறகு நன்கு புரிந்து கொள்வது, குருவின் முயற்சி பிரம்ம வித்யாவை சரியாக உபதேசித்தல், சிஷ்யர்கள் நன்றாக புரிந்து கொள்ளும் வகையில் உபதேசித்தல்.
எங்கள் இருவரால் படிக்கப்பட்டது ஒளி பொருந்தியதாக இருக்கட்டும், நினைவில் நன்றாக பதிய வேண்டும்.

நாங்கள் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாகசிஷ்யனின் வெறுப்பு படிப்பில் கவனக்குறைவை கொடுக்கும்குருவின் வெறுப்பு சிஷ்யர்களுக்கு மன அழுத்தம் கொடுக்கும்.
ஓம்! ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:
 
அனுவாகம்-1.1
பிரஹ்மவித்3 ஆப்னோதி பரம் |
ததே3ஷாப்4யுக்தா |
ஸத்யம் ஞானமனந்தம் ப்3ரஹ்ம |
யோ வேத3 நிஹிதம் கு3ஹாயாம் வ்யோமன் |
ஸோஶ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்3ரஹ்மணா விபஶ்சிதேதி ||
 
பிரஹ்மவித்3 ஆப்னோதி பரம்பிரஹ்மத்தை அடைந்தவன் மேலானதை அடைகின்றான்.”, இது இந்த உபநிஷத்தின் மையக்கருத்து. எனவே இதற்கு சூத்ர வாக்கியம் என்று கூறலாம்முழு உபநிஷத்தின் சாரமாக இருக்கின்றது
இதில் மூன்று கருத்துக்கள் இருக்கின்றது. அவைகள்
1. விஷயம்இது எதை குறித்து பேசுகின்றதோ,
2. சாதனம்  – அந்த விஷயத்தை அறிய உதவும் கருவி,
3. பலன்    – விஷயத்தை அறிவதனால அடையும் பலன்
ஆகியவைகளாகும்.
 
இந்த அனுவாகத்தில்
  1. விஷயம்பிரம்மம்பெரியது என்று பொருள், வரையறுக்கப்படாதது. நிரதிஸய வ்ருத்திஎதனோடும் வரையறுக்கபடாத பெரிய ஒன்று.
  2. சாதனம்வித் (வேதனம்) – அறிதல், அந்த பெரிய ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும்.
  3. பலன் -பரம் ஆப்னோதிபிரம்மத்தை அடைகின்றான்
ஒரு இடத்தை அடைவதற்கு அதை அடையும் வழி மட்டும் தெரிவதால் அடைய முடியாது, ஏனென்றால் அது வரையறுக்கப்பட்டதுஆனால் பிரம்மம் வரையறுக்கப்படாததாக இருப்பதால் அதை அறிந்தவுடனே அதை அடைந்து விடுவோம்ஞானத்திற்கும், மோட்சத்திற்கும் சாதன-சாத்தியம் சம்பந்தம் பேசப்படுகின்றது.
 
கேள்வி-1. பிரம்மம் என்பது எது, அதன் லட்சணம் என்ன>
கேள்வி-2. அதை எப்படி அறிந்து கொள்வது?
கேள்வி-3. பலன் என்றால் அது எத்தகையானது?
 
இந்த கேள்விகளுக்கு ஒரு ரிக் மந்திரத்தின் மூலமாக பதிலளிக்கப்படுகின்றது.

பதில்-1 சத்யம், ஞானம், அனந்தம் ப்ரஹ்ம என்ற இந்த வாக்கியம் பிரம்ம லட்சணத்தைக் குறிக்கின்றது. சத்யம் என்றால் என்றும் இருப்பது, ஞானம் என்பது அறிவு ஸ்வரூபம், அனந்தம் என்பது எல்லையற்றது. இந்த லட்சணம் அனாத்மாக்களிலிருந்து பிரம்மத்தை பிரித்துக் காட்டுகின்றது.

 
இரண்டு விதத்தில் ஒரு பொருளை பிரித்துக் காட்ட முடியும்.
1. தடஸ்த லட்சணம்  ஒருபொருளை அறிவதற்கு துணைப்புரியும் வேறொரு பொருளை கொண்டு அறிதல், ஆனால் அது அறியும் பொருளை சார்ந்ததல்ல. உதாரணமாக காகம் அமர்ந்துள்ள வீடுதான் ராமன் வீடு, என்று சொல்லுதல், காகம் பறந்து சென்றாலும், இருந்தாலும் அந்த வீட்டை அடையாளம் கண்டு கொள்வது.
2. ஸ்வரூப லட்சணம் எதாவதொரு பொருளை கூறி அதன் மூலம் மற்றொன்றை விளக்குதல், அந்தப் பொருள் அறியப்படும் பொருளிடத்தே இருக்கின்றதுஅதன் தன்மையாகவே இருக்கின்றது. இங்கு பிரமத்தை விளக்கக்கூறும் லட்சணம் ஸ்வரூப லட்சணம்.
ஸத்யம் பிரம்மஹ:
வாச்யார்த்தம் என்பது ஒரு சொல்லை கேட்டவுடனே மனதில் தோன்றும் அர்த்தம்எல்லா விவகாரங்களும் இதன் அடிப்படையில்தான் இருக்கும். சில சமயம் வாச்யார்த்தம் பயன்படாமல் போகலாம் அந்த நேரத்தில் அதற்கு சம்பந்தபட்ட வேறு ஒன்றை எடுத்துக் கொண்டு புரிந்து  கொள்கின்றோம்இதையையே லட்சியார்த்தம் என்று கூறப்படுகின்றதுஸத்யம் பிரஹ்ம என்ற வாக்கியத்தில் வாச்யார்த்தத்தை எடுத்து கொள்ளக்கூடாது, லட்சியார்த்தத்தை வைத்து புரிந்து கொள்ள வேண்டும்எல்லா பொருட்களிடத்தும் ஸத்+நாமரூபம் என்ற இரண்டு அம்சங்கள் உள்ளதுமாற்றமடையும் பொருட்களின் நாமரூபங்கள் மாறிக் கொண்டிருந்தாலும் இருத்தல் என்ற அம்சம் என்றும் நிலையாக இருக்கும்ஆகவே இந்த வாக்கியத்தின் அர்த்தம் நிலையாக இருத்தல் என்று லட்சியார்தத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்இங்கு ஸத்யம் என்பது ஸத்-இருத்தல் என்பதைக் குறிக்கின்றதுகாரணம் எப்போதும் ஸத்யம், காரியம் மித்யா. களிமண்ணிலிருந்து உருவான பொருட்கள் அனைத்தும் மித்யா, களிமண் ஸத்யமாக, காரணமாக இருக்கின்றதுஅதேபோல இந்த பிரபஞ்சத்திற்கு காரணமாக இருப்பது பிரம்மன், எனவே அது ஸத்யமாக இருக்கின்றது.
 
ஞானம் பிரம்மஹ:-
பிரம்மன் ஸத்யமாகவும் இருக்கின்றது அதே சமயம் அறிவு ஸ்வரூபமாகவும் இருக்கின்றதுவாச்யார்த்தமாக பார்க்கும் போது ஞானம் என்பது மனதில் வரும் ஒன்றைபற்றிய அறிவுஇதற்கு விருத்தி ஞானம் என்று அழைக்கப்படும்மனதில் தோன்றும் ஒரு பொருளைப்பற்றிய எண்ணம்நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் இரண்டு அம்சங்களாக உள்ளது.  1. அறிவு (சித்) 2. நாம-ரூபங்கள்(பொருட்கள்) () எண்ணங்கள்(விஷயங்கள்).  இதில் அறிவானது எல்லா நிலைகளிலும் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கின்றதுஎனவே இதுவே பிரம்மத்தின் ஸ்வரூபமாக லட்சணமாக புரிந்து கொள்ள வேண்டும். எல்லா எண்ணங்களுக்கும் சாட்சியாக இருப்பது, எல்லா அறிவுக்கும் அறிவு ஸ்வரூபமாக இருக்கின்றது.
 
அனந்தம் பிரம்மஹ:-
அனந்தம் என்பது எல்லையற்றது, பூரணமானது, வரையறுக்கப்படாதது என்று பொருட்கொள்ளப்படுகிறதுஇந்த வாச்யார்த்தமே அதன் ஸ்வரூபத்தை உறுதிபடுத்துகிறதுஒரு பொருள் மூன்று விதத்தில் வரையறுக்கப்படலாம். அவைகள் இடம், காலம், மற்றும் வஸ்து.
1.    தேச பரிச்சேதஹ  ஒரு பொருள் தேசத்தினல் வரையறுக்கப்படும். அதாவது ஒரு பொருள் ஒரே நேரத்தில் வெவ்வேறிடத்தில் இருக்க முடியாது
2.    எல்லாப்பொருட்களுக்கும் தோற்றம்-மறைவு இருப்பதால் அவைகள் காலத்தால் வரையறுக்கப்பட்டிருக்கின்றது
3.    ஒரு பொருளுக்கு குணங்கள் கொடுக்க கொடுக்க அதனுடைய வியாபிக்கும் விஸ்திரம் குறைந்து கொண்டே போகும்.  உதாரணமாக வெறும் மனிதர்கள் என்று கூறும்போது உலகிலுள்ள எல்லா மனிதர்களை குறிக்கும்.  இந்தியர்கள் என்று சொல்லும் போது இந்தியாவில் வசிக்கும் மக்களை மட்டும் குறிக்கின்றது. தமிழர்கள் என்று சொல்லும்போது தமிழ்நாட்டில் வசிப்பவர்களை மட்டும் குறிக்கின்றது.  இவ்வாறு எண்ணிக்கை குறைந்து கொண்டே போகின்றது.
பிரம்மத்தை தவிர வேறொரு பொருள் இருந்தால் அது வரையறுக்கப்பட்டதாகி விடும்அது வரையறுக்கப்படாதது என்றால் அதைத் தவிர்த்து வேறொன்றும் இல்லை என்று நிரூபிக்க வேண்டும்ஸத்துக்கு வேறாக இருக்கின்றது என்றாலே அதை அஸத் என்று எடுத்துக் கொண்டால் அது மாதிரி ஒன்றில்லை புரிந்து கொள்ளலாம்ஸத்தும் அல்ல, அஸத்தும் அல்ல என்ற நிலையையே மித்யா என்று கூறப்படுகின்றது. இந்த பிரபஞ்சம் மித்யா அது இருப்பது போல காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. அதனால் இந்த பிரம்மத்தை ஒன்றும் செய்ய முடியாது எப்படி கயிற்றில் தோன்றும் பாம்பினால் கயிற்றுக்கு எந்த பாதிப்பும் இல்லையோ அது போல.
 
இந்த மூன்று குணங்களை உடையதாக இருப்பது இந்த பிரம்மம்அனந்தம் என்பது முடிவற்று இருத்தலையே குறிக்கின்றதுநாம் அடைய வேண்டிய அறிவுதான் இந்த அனந்தம்இதை தெளிவாக உறுதியுடன் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அனந்தம் முழு மன நிறைவு என்றும் புரிந்து கொள்ளலாம்.
 
பிரம்மத்தை எப்படி, எங்கே, எதுவாக அறிய வேண்டும். என்ற வினவினால் அதை ஸத்யம், ஞானம், அனந்தமாக அறிய வேண்டும், தன்னுடைய புத்தியில், மனதில் அறிய வேண்டும், நானாக அறிய வேண்டும் என்று பதிலளிக்கப்படுகின்றது
 
யோ வேத நிஹிதம் கு3ஹாயாம் பரமே வ்யோமன் ஸோஷ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதேத்

எவனொருவன் பிரம்மத்தை மேலான ஹ்ருதய ஆகாசத்திற்குள் இருக்கின்ற அந்தக்கரணத்திற்குள் இருப்பதாக அறிகின்றானோ அவன் ஆசைப்படுகின்ற எல்லா பொருட்களையும் அடைந்தவனாகின்றான்இவன் அறிவு ஸ்வரூபமான பிரம்மனாக இருந்து உடனடியாக எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொண்டவனாகின்றான்பிரம்மத்தை அறிந்தவன் அதுவாகவே இருப்பதால், எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் இருப்பதால் ஒரே சமயத்தில் எல்லா ஆசைகளையும் நிறைவேற பெற்றவனாகின்றான்
 
மனதில் இருப்பிடமாக நம்முடைய ஹ்ருதயத்திலுள்ள ஆகாசம் இருக்கின்றதுபுத்திக்கு குஹா என்று கூறக்காரணம், அந்தக் காலத்தில் மனிதான் புதையலை குகைக்குள் ஒளித்து வைத்திருந்ததை போல, போகமும், மோட்சமும் இந்த புத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதால் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.
 
பிரம்மத்தை அறிபவனாக (பிரமாதாவாக) அறிய வேண்டும் அறியப்படும் பொருளாக (பிரமேயமாக) அறியக்கூடாதுநம் புத்தியில் பிரம்மத்தை தவிர எல்லாவற்றையும் அறியப்படும் பொருளாகத்தான் அறிகின்றோம்பிரம்ம அறியப்படும் பொருளாக இல்லாததற்கு நான்கு காரணங்கள் இருக்கின்றதுஅவைகள்
1. அது எதனாலும் வரையறுக்கப்படாதது
2. அது இருமையற்றதாக இருப்பதால், பிரமேயமாக அறிய முடியாது. இருமை முதலில் அறிபவன், அறியப்படும்பொருள் என்பதிலிருந்துதான் தொடங்குகிறதுநேஹ நானாஸ்தி கிஞ்சன என்ற உபநிஷத் வாக்கியம் இதை புரிய வைக்கின்றது.
3. இதன் ஸ்வரூபம் அறிபவனாக இருப்பதால் அது அறியப்படும் பொருளாக இருக்க முடியாது.
4. சேதனவாத்- அறிவு ஸ்வரூபமாக இருப்பதால் அறியப்படும் பொருளாக இருக்க முடியாதுஎப்பொழுதும் எது அறியப்படுகின்றதோ அது ஜடமாகத்தான் இருக்க முடியும்
 
கேள்வி  பிரம்மன் ஏன் இரண்டாக இருக்க கூடாது? நான் என்னையே (ஸ்தூல உடலை) பார்க்கின்றேனே!!!
பதில்    இந்த உடல் நீயல்ல என்று தெரிந்துக்கொள், பிரம்மன் அவயங்களற்றது எனவே சாத்தியமல்லமேலும் பிரம்மன் அறியப்படும் பொருளல்ல என்ற திடமான அறிவை அடைய வேண்டும்.
 
கேள்வி  பிரம்மன் அறிபவனாக (பிரமாதாவாகஇருக்க முடியாதா?
பதில்    அறிபவன் என்றும் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அதில் குறையுண்டு. அறிபவன் விதவிதமான பொருட்களை அறியும் போது அவனிடத்தில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். எனவே இது மாற்றத்திற்கு உட்பட்டதாக இருக்கின்றது.
 
சாஸ்திரத்தில் இரண்டு வகையான அறிபவன்கள் கூறப்பட்டிருக்கின்றது. அவைகள்
1.   நம்முடைய புத்திஇதுதான் எண்ணங்களினால் மாற்றங்கள் அடைந்து அறிவை அடைகின்றதுசிதாபாசத்தின் உதவியால் இது நடைபெறுகின்றது.
2.   சாஸ்திரத்தின் உபதேசப்படி புத்தியும் ஜடம்தான், ஆனால் அறிவுடன் எப்படி செயல்படுகின்றதுஇந்த புத்தியை அறிந்து கொண்டிருப்பவன் இன்னொரு பிரமாதா. இந்த ஆத்மா என்ற பிரமாதாவிற்கு புத்தியானது அறியப்படும் பொருளாகின்றது. புத்தியானது விகாரமடைந்து பிரமாதாவாக இருக்கின்றதுஆத்மாவானது நிர்விகாரமாக இருந்து கொண்டு பிரமாதவாக இருக்கின்றது. எனவே அறிபவன் நான் என்று சொல்லும்போது புத்தியை புரிந்து கொள்ளாமல் அதை பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஆத்மாதான் அறிபவன் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

விசாரம்:-
கேள்வி  எங்கும் இருக்கின்ற பிரம்மத்தை எப்படி அடைய முடியும்?
பதில்    ஒன்றை அறியாமலிருந்தால் அதை அடையாமல் இருத்தலாகும், அதே சமயம் அதை அறிந்து கொண்டால் அதை அடைந்தவனாகின்றான். உதாரணமாக பத்தாவது மனிதனை தெரிந்தவுடன் அவனை அடைந்தவனாகின்றான்.

 

·   எல்லா பொருட்களையும் அடைந்து விட்டான் என்பதற்கு அவன் முழு மனநிறைவை அடைந்து விட்டான் என்று புரிந்து கொள்ள வேண்டும்நானேதான் எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் இருந்து கொண்டு எல்லா ஆசைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன். நம்மிடத்தே இருக்கும் பொறாமை, கோபம் நமக்கே தெரியாமல் இருக்கும்வெளிப்பட வேண்டிய நேரத்தில் நம்மையும் மீறி வெளியே வந்து நம்மை துயரத்தில் ஆழ்த்தி விடும், மூடனாகி மாற்றி விடும், தகாத செயலுக்கு தூண்டி விடும்.
·   அவனுடைய மனதிலிருக்கும் எல்லா ஆசைகளும் நீக்கப்படுகின்றது. உதாரணமாக கார் வாங்க வேண்டும் என்ற ஆசை அதை வாங்கியவுடன் அதன் மீதுள்ள ஆசை நீங்கி விடுகின்றதுஅதேபோல பணத்தை அடைய வேண்டும் என்ற ஆசை அதை அடைந்ததும் நீங்கிவிடுகின்றதுஇவ்வாறு எல்லா பொருட்களும் அவைகளை அடைந்தவுடன் நீங்கிவிடுகின்றன
·   ஆத்ம ஞானத்தால் எல்லா ஆசைகளும் நீங்கி விடும்.
·   ஆசை எழுவதற்கு காரணம் மனதிலுள்ள நிறைவற்ற நிலைஇந்த மனநிறைவற்ற தன்மைக்கு காரணம் நம் உடல், மனம், புத்தியில் இருக்கின்ற நான் என்ற அபிமானத்தினால்தான்இந்த சரீரத்தின் தேவைகள், மனதின் தேவைகள் என்னுடையதாகின்றதுஇந்த தேவைகள் எப்பொழுதும் இருந்துக் கொண்டுதான் இருக்கும்இதனால்தான் நம் மனம் எப்பொழுதும் நிறைவின்மையுடன் இருக்கின்றதுஆத்மாவை பற்றிய அறியாமை இந்த மனநிறைவற்ற நிலையில் வைத்திருக்கின்றது, மனநிறைவற்ற நிலை ஆசைகளை உருவாக்குகின்றதுஎனவே ஆசைகளின் மூலமான அறியாமை நீங்கிவிட்டால் அவைகளும் நீங்கிவிடும்பசியானது சாப்பிட்டவுடன் நீங்கிவிடுவது போல, ஆசையானது ஆத்ம ஞானம் வந்தவுடன் நீங்கிவிடும்.
·   ஆசைகள் இரண்டு வகை 1. பந்தப்படுத்துகின்ற ஆசைகள், 2. பந்தப்படுத்தாத ஆசைகள். எந்த ஆசைகள் நிறைவேறாவிட்டால் நாம் துயரம் அடைகின்றோமோ அவைகள் பந்தப்படுத்துகின்ற ஆசைகள். எந்த ஆசைகள் நிறைவேறினாலும், நிறைவேறாவிட்டாலும் மனநிறைவுடன் இருக்கின்றோமோ அவைகள் பந்தப்படுத்தாத ஆசைகள்..
·   பிராரப்த கர்மமானது சரீர அபிமானத்தில் வைத்திருக்கும், ஆனால் சரீரத்திற்கு வரும் நலம், கேடு அவனை பாதிப்பதில்லை
·   ஞானியிடத்து வரும் ஆசையானது ஈஸ்வரனின் சங்கல்பமாக இருக்கும்.
 
இவ்விதம் ரிக் மந்திரம் முடிவடைகின்றதுசூத்திரம் என்பது சுருக்கமான வாக்கியம், விருத்தி என்பது சுருக்கமான விளக்கம், வியாக்யானம் என்பது விரிவான விளக்கம்.
 
அனுவாகம்-1.2
தஸ்மாத்3வா ஏதஸ்மதா3த்மன ஆகாஶ: ஸம்பூ4த: |
ஆகாஶத்3வாயு: |
வாயோரக்3னி: |
அக்3னேராப: |
அத்3ப்4ய: ப்ருதி2வீ |
ப்ருதிவ்யா ஔஷத4ய: |
ஔஶதீ4ப்4யோÅன்னம் |
அன்னாத் புருஷ: ||
 
இதில் பிரம்மத்தை பற்றி விரிவாக விளக்கப்படுகின்றதுஅத்யாரோப அபவாத நியாயம் என்ற முறையில் சிஷ்யர்களுக்கு விளக்கப்படுகின்றதுஅத்யாரோபம் என்பது தெரிந்தே ஒன்றின் மீது வேறொன்றை ஏற்றி வைத்தல், அபவாதம் என்பது ஏற்றி வைத்ததை இல்லையென்று நீக்கி விடுதல்அத்யாஸம் என்பது அறியாமையினால் ஒன்றின் மேல் வேறொன்றை பார்த்தல்அத்யாரோபம் ஏன் செய்ய வேண்டும் என்றால், ஒரு பொருள் ஏற்கனவே தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதால் அதை விளக்க வேண்டுமென்றால் முதலில் தவற்றை புரிய வைக்க வேண்டும், பிறகு சரியானதை அறிய வைக்க வேண்டும். உதாரணமாக கயிற்றில் பாம்பை பார்த்து கொண்டிருப்பவனுக்கு முதலில் பார்த்து கொண்டிருக்கும் பாம்பு உண்மையானதல்ல என்று புரிய வைக்க வேண்டும், பிறகு அது கயிறு என்று அறிய வைக்க வேண்டும்அதாவது பாம்பை இருப்பதை ஏற்றுக் கொண்டு பிறகு அது பாம்பு காட்சியளிக்கும் கயிறு என்று என்று உபதேசிக்க வேண்டும்ஒருவனிடத்தில் இருக்கும் விபரீத ஞானத்தை போக்குவதற்கு இந்த முறையை தவிர வேறொன்றும் இல்லை.
 
அதேபோல நாம் அனுபவிக்கும் இந்த பிரபஞ்சத்தை இருக்கின்றது என்று ஒத்துக் கொண்டு அதை பிரம்மத்தில் ஏற்றி வைத்து பிறகு அதை நீக்குகின்றதுபிரம்மம் பிரஞ்சத்திற்கு ஆதாரம் என்று முதலில் ஏற்றி வைக்கின்றது அதாவது முதலில் இவ்வாறு அத்யாரோபம் செய்கின்றதுபிரபஞ்சத்திற்கு காரணமாக பிரம்மத்தை சொல்கின்றதுஅதனால் அடையும் பயன்கள் கீழே கொடுக்கபட்டுள்ளன.
1.   பிரம்மன் சத்யம் என்பது நிலை நாட்டப்படும். சத்யமாக இருப்பது மூன்று காலத்திலும் இருக்கும்களிமண்-காரணம்-ஸத்யம்பானையின் தோற்றத்துக்கு முன்னும், இருக்கும்போதும், உடைந்த பிறகும் களிமண் இருந்து கொண்டு இருக்கும்.
2.   பிரம்மன் அனந்தம் என்று நிலை நாட்டப்படும். தேச, கால, வஸ்துவினால் வரையறுக்கபடாதது.
a.   தேசத்தினால் வரையறுக்கப்படாததுபிரம்மத்திலிருந்து முதலில் தோன்றியது ஆகாசம், இதிலிருந்து பிரம்மன் தேசத்தினால் வரையறுக்கப்பட முடியாதது என்று புரிந்து விடும்.
b.   காலமும் பிரம்மத்திலிருந்து தோன்றியதால், அதனாலும் வரையறுக்கப்பட முடியாதது.
c.    குணங்கள் அதிகமாகும்போது அதன் வியாபிப்பு குறைகின்றதுகுணங்கள் உள்ள பொருட்கள் எல்லாம் வரையறுக்கப்படலாம்.
3.   காரண காரியம் என்று சேரும்போது காரணத்தை மட்டும்தான் இருக்கின்றது என்று கூறமுடியும்பிரம்மன் காரணம், பிரபஞ்சம் காரியம் இரண்டும் ஒன்று புரிந்து கொண்டால் அங்கு பிரம்மன் மட்டும்தான் இருக்கும்அதற்கு வேறாக ஒன்றும் இல்லை. எனவே வஸ்துவால் வரையறுக்க முடியாது.
4.   அத்யாரோப முறையை பயன்படுத்துவதற்கு உதவும்
5.   அத்வைதமானது நிலை நாட்டப்படுகின்றது. உதாரணமாக பானைகள் பலவாக இருந்தாலும் அவைகள் மித்யாவாக இருப்பதால் அதற்கு ஆதாரமான களிமண் மட்டும் இருப்பது போல, ஜகத் மித்யாவாக இருக்கின்றது, பிரம்மன் ஒன்றுதான் இருக்கின்றது.
 
பிரம்மமானது மாற்றமடையாமல் இந்த ஜகத்திற்கு காரணமாக இருப்பது மாயையின் சக்தியால்தான். இந்த மாயை இல்லாத ஒன்றை இருப்பதாக காட்சியளிக்க செய்கிறது. அதன் சக்திஇது பிரம்மத்தின் சக்தியாக இருக்கின்றது. மாயையுடன் கூடிய பிரம்மம்தான் ஈஸ்வரன் என்று அழைக்கப்படுகின்றது.
 
காரணம் இரண்டு வகையாக இருக்கின்றது. அவைகள் 1. உபாதான காரணம், 2. நிமித்தக் காரணம்இங்கே பிரம்மனானது உபாதான காரணமாக அறிமுகப்படுத்தப்படுகின்றது. ஸ்ருஷ்டி முதலில் சூட்சுமமாக வரும் பிறகு அதிலிருந்து ஸ்தூலமான படைப்புக்கள் தோற்றுவிக்கப்படும்இங்கு இரண்டும் சேர்ந்து தோன்றுவதாக கூறப்படுகின்றது.
 
மந்திர விளக்கம்
பிரம்மத்தினிடமிருந்து, ஆத்மாவாக அறியப்படுகின்ற இதனிடமிருந்து ஆகாசம் தோன்றியதுமாயையுடன் சப்த குணத்தை சேர்த்து ஆகாசமாக தோன்றுகிறது. இங்கு ஈஸ்வரனே ஆகாசமாக காட்சியளிக்கின்றார். உபாதான காரணமே காரியமாக காட்சியளித்து கொண்டிருக்கும்ஆகாசத்துடன் ஸ்பர்சம் என்ற குணத்தை சேர்த்தவுடன் வாயு உருவாகின்றது. இப்போது ஈஸ்வரன் வாயுவாகவும் காட்சியளிக்கின்றார்வாயுவிடமிருந்து அக்னியானது தோன்றியது, உருவம் என்ற குணம் இதனுடன் சேர்ந்திருக்கின்றதுஅக்னியிடமிருந்து நீர் தோன்றியது, இதனுடன் சுவை என்ற குணம் இருக்கின்றது. நீரோடு மணம் என்ற குணம் சேர்ந்தவுடன் நிலமாக தோன்றியது. நிலத்திலிருந்து தாவரங்கள் தோன்றியது, தாவரங்களிலிருந்து உணவு தோன்றியது. உணவிலிருந்து ஜீவராசிகளின் ஸ்தூல சரீரம் தோன்றியது. ஈஸ்வரனே ஜீவராசிகளின் ஸ்தூல உடலாக காட்சியளிக்கின்றார்தன்னுடைய ஸ்வரூபத்தை இழக்காமல் மாயையின் சக்தியால் இவ்வாறெல்லாம் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.
 
அனுவாகம்-1.3
ஸ வா ஏஷ புருஷோÅன்னரஸமய: |
தஸ்யேத3மேவ ஶிர: |
அயம் த3க்ஷிண: பக்ஷ: |
அயமுத்தர: பக்ஷ: |
அயமாத்மா |
இத3ம் புச்ச2ம் ப்ரதிஷ்டா |
தத3ப்யேஶ ஸ்லோகோ ப4வதி |
 
இதில் அபவாதம் செய்யப்பட்டுள்ளது. அபவாதம் என்றால் நிராகரித்தல், நீக்குதல், ஒடுக்குதல்அத்யரோபம் : காரணம் + நாமரூபம் = காரியம். சூக்ஷூமத்திலிருந்து ஸ்தூலமாக மாறுதல்அபவாதம் : காரணம் = காரியம்நாமரூபம், ஸ்தூலத்திலிருந்து சூக்ஷூம நிலைக்கு மாற்றுதல். ஸத்தை ஒரிடத்திலிருந்து வேறொன்றிற்கு மாற்றுதல். உதாரணமாக பஞ்சுàநூல்àதுணிàஆடைஆடை இருக்கின்றது என்பதில் உள்ள இருத்தலை துணிக்கு கொடுத்து விட்டால் துணி இருக்கின்றதாகி விடும், நூல் இருக்கின்றதுபஞ்சு இருக்கின்றது.  

அதேபோல பிரம்மன்àஆகாசம்àவாயுàஅக்னிàநீர்àப்ருதிவி, இவைகளிலுள்ள இருத்தல் கடைசியில் பிரம்மத்தை அடைகின்றது. இந்த அபவாதம் மனதில்தான் நடக்கும்காரியம் இருக்கின்றது என்று சொல்வதை விட்டுவிட்டு காரணம் இருக்கின்றது என்று சொல்வதுதான் அபவாதம்காரியமான ஆடையில் இருக்கும் ஸத்தை துணிக்கு கொடுக்கும்போது ஆடையில் இருத்தலை நிஷேதம் செய்யப்படுகின்றதுஇப்படியே அந்த இருத்தல் கடைசியில் மூலக்காரணமான பஞ்சுக்கு சென்று விடும்அதுபோல கிரமமாக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் ஸ்ருஷ்டியை அதே கிரமத்தில் நிஷேதம் செய்துக் கொண்டு சென்றால் பிரம்மத்தை அடைவோம்.
 
இந்த அபவாதம் பஞ்ச கோசங்களை வைத்து செய்யப்படுகின்றது.. ஸ்தூல சரீரம் அன்னமய கோஷம் என்றும், சூட்சும சரீரம் ப்ராணமய, மனோமய, விக்ஞானமய கோஷங்கள் என்றும், காரண சரீரம் ஆனந்தமய கோஷம் என்றும் பிரிக்கப்பட்டு இருக்கிறதுஆத்மாவானது இந்த கோஷங்களால் மறைக்கப்பட்டிருக்கின்றதுஇந்த ஐந்து நிலைகளில் நான் என்று புத்தியானது அபிமானம் கொண்டு ஆத்மாவை அறிய விடாமல் செய்கின்றது.
 
ஏன் பஞ்சபூதங்கள் வழியாக அபவாதம் செய்யாமல் ஐந்து கோஷங்களின் மூலமாக அபவாதம் செய்யபட்டு பிரம்ம ஞானமானது கொடுக்கப்படுகின்றது.?
பஞ்ச பூதங்களை வைத்து அபவாதம் செய்தால் வெளியே உள்ள விஷயமாக அறிந்து கொள்ள நேரிடும்பிரம்மத்தை தன்னிடத்திலுள்ள ஆத்மாவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவதால் இவ்வாறு பஞ்ச கோஷத்தின் வழியாக அபவாதம் செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த இடத்தில் நான் என்ற அபிமானம் இருக்கின்றதோ அவைகளை நீக்கித்தான் நமக்கு அறிவை புகட்ட வேண்டும் என்பதால் இந்த முறையை உபநிஷத் கையாண்டிருக்கின்றதுஇவ்வாறு செய்யும் போது எவ்வளவு ஸ்தூல சரீரங்கள் இருக்கின்றதோ அவ்வளவு ஆத்மாக்கள் இருக்கின்றதா என்ற சந்தேகம் வந்துவிடும்.
 
அன்னமய கோஷமும், அன்னமய பிரபஞ்சமும் ஒன்றுதான் என்ற அறிவை கொடுத்து நம்முடைய ஸ்தூல சரீரத்தை நீக்கும்போது ஸ்தூல பிரபஞ்சத்தை நீக்கி விடுவோம். இவ்வாறு ஒவ்வொரு கோஷத்திற்கும் ஸமஷ்டி கோஷத்திற்கும் உள்ள ஐக்கியத்தை எடுத்துக்காட்டி இந்த சந்தேகமானது நீக்கப்படுகின்றது;.
 
சமஷ்டி-வியஷ்டி ஐக்கிய விசாரம்:
இந்த இரண்டுமே ஒன்றுதான்பலமரங்கள் உள்ள இடத்திற்கு வனம் என்று கூறப்படுகின்றதுஇந்த மரங்கள் அழிந்து விட்டால் வனம் இல்லாது போகும். அதுபோல மரம் போன்ற ஸ்தூல சரீரத்தை நீக்கினால் அதிலுள்ள அபிமான நீங்கி விடும்பிறகு சமஷ்டி பிரபஞ்சம் இல்லாமல் போய்விடும். கனவு நிலையில் இந்த ஸ்தூல சரீரத்தின் மேல் உள்ள அபிமானம் நீங்கி விடுவதால் இந்த பிரபஞ்சமே மறைந்து விடுகின்றதுஆனால் சூட்சும ஸரீர அபிமானம் காரணமாக சூட்சும பிரபஞ்சம் தோன்றி விடுகின்றது. ஒரு விஷயம் புரியவில்லையென்றால், அதையே திரும்ப திரும்ப விசாரம் செய்யும் போது கொஞ்ச கொஞ்சமாக நமக்கு புரிய தொடங்கும். இதற்கு உபாஸனம் என்று பெயர்இந்த முறையையும் உபநிஷத் விளக்குகின்றதுஇந்த உபாஸனைக்கு ஆலம்பனமாக ஸ்தூல சரீரத்தை எடுத்துக் கொண்டு இந்த ஸ்தூல பிரபஞ்சத்தை (விராட் புருஷனை) தியானிக்க வேண்டும்இதேபோல ஒவ்வொரு கோஷமும் ஆலம்பனமாக இருக்கும் அதன் சமஷ்டியை தியானித்து இரண்டுக்குமுள்ள ஐக்கியத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
 
அனுவாக விளக்கம்:
ஸ வா எஷ புருஷோ அன்னரஸமய: இது அன்னமய கோஷத்தை ஆத்மாவாக அறிமுகப்படுத்துகின்றதுஇந்த ஆத்மாதான் அன்னமய கோஷமாக இருக்கின்றது. அன்னத்தை சுவைப்பதினால் அடைகின்ற ஸ்தூல உடல், அன்னமயமான மனித உடல் இதையை ஆத்மாவாக கற்பனை செய்யப்படுகின்றது.
 
ஆலம்பனத்தை தயார் செய்வதற்குதான் இந்த உடலை ஐந்தாக பிரிக்கப்படுகின்றது. அன்னமயமான இவனுக்கு தலையே தலைப்பாகம், வலது கை வலதுபாகம், இடது இடது பாகம், கழுத்திலிருந்து வயிறு வரை உள்ள பாகம் மத்திய பாகம், இடுப்பிலிருந்து பாதம் வரை உள்ள பாகம் இந்த உடலைத் தாங்கும் பாகம் என்று ஐந்தாக பிரிக்கப்படுகின்றது. அன்னமய விஷயத்தில் இனி வரும் ரிக் மந்திரம் விளக்குகின்றது.
----------------------------------------------------------------------------------------
தொடரும்……

No comments:

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...