தைத்திரீய உபநிஷத்
அத்தியாயம்-01 (சீக்ஷாவல்லி)-பகுதி-3
ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது – 27/04/2022
www.poornalayam.org
அனுவாகம்-9
ரிதம் ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
ஸத்யம் ச ஸ்வாத்4யாயப்ரவசனே
ச |
தபஶ்ச ஸ்வாத்4யாயப்ரவசனே
ச |
த3மஶ்ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
ஶமஶ்ச ஸ்வாத்4யாயப்ரவசனே
ச |
அக்னயஶ்ச ஸ்வாத்4யாயப்ரவசனே
ச |
அக்3னிஹோத்ரம் ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
தித2யஶ்ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
மானுஷம் ச ஸ்வாத்4யாயப்ரவசனே
ச |
ப்ரஜா ச ஸ்வாத்4யாயப்ரவசனே
ச |
ப்ரஜனஶ்ச ஸ்வாத்4யாயப்ரவசனே
ச |
ப்ரஜாதி ஸ்வாத்4யாயப்ரவசனே
ச |
ஸத்யமிதி ஸத்யவசா ராதீ2தர”
|
தப இத தபோநித்ய: பௌருஶிஷ்டி:
|
ஸ்வாத்4யாயப்ரவசனே ஏவேதி நாகோ
மௌம்ல்ய: |
தத்3தி4 தபஸ்தத்3தி4 தப: ||
இதில் சில பண்புகளும், கர்மங்களும் சொல்லப்பட்டிருக்கின்றது. மேலே கூறிய உபாஸனைகளனைத்தும் நற்பண்புகளுடனும், செயல்களுடனும் செய்தால்தான் அதன் பலனை அடைய முடியும்.
வேதத்தை கற்றல், பிறருக்கு கற்றுக்கொடுத்தல், கற்றதை சரியாக புரிந்து கொள்ளுதல், உண்மையை பேசுதல், தவம், விரதம், போகத்தை அனுபவிக்காதிருத்தல், உணவில் கட்டுப்பாடு, உடலுக்கும், மனதுக்கும் நன்மையை கொடுக்கக்கூடியதை சாப்பிடவேண்டும். அளவுடன் சாப்பிட வேண்டும். புதியதாக சமைத்து சாப்பிட வேண்டும், புலனடக்கம், மனவடக்கம், யாகத்திற்கு பயன்படுத்தும் அக்னியை பாதுகாத்தல், இல்லறத்தில் இருப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட யாகங்களை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது. அக்னிஹோத்ரம் காலையும், மாலையும் செய்ய வேண்டும். விருந்தினரை உபசரிக்க வேண்டும், மனிதர்களுக்கு சேவை செய்ய வேண்டும், சந்ததியை வளர்த்தல், தன் புத்திரனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாது செய்தல், சந்ததி உற்பத்திக்கு கணவன்-மனைவி சேர்தல், பேரக்-குழந்தைகளை அடைவதற்கு புத்திரர்களுக்கு மணம் செய்வித்தல் போன்ற விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் ராதீதரன் என்ற ரிஷி வாய்மையே மேலானதாக கருதுகின்றார் என்றும், தவத்தில் ஈடுபட்டுள்ள பௌருஷ்டி என்ற ரிஷி தவத்தை மேலானதாக கூறுவதாகவும் இங்கு சொல்லப்பட்டிருக்கின்றது. நாக என்கின்ற ரிஷி வேதத்தை கற்றலும், கற்பித்தலும்தான் மேலான தவமாக கருதுவாக சொல்லப்பட்டிருக்கின்றது.
அனுவாகம்-10
அஹம் வ்ருக்ஷஸ்ய ரேரிவா |
கீர்தி: ப்ருஷ்டம் கி3ரரிவ |
ஊர்த்4வபவித்ரோ வாஜினீவ ஸ்வம்ருதமஸ்மி |
த்3ரவிணம்ஸவர்சஸம் |
ஸுமேதா4 அம்ருதோக்ஷித: இதி த்ரிஶங்கோர்வேதா3னுவசனம் ||
ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு திரிசங்கு என்ற ரிஷி கூறியவைகள் இந்த அனுவாகத்தில் கூறப்பட்டுள்ளது. இதை ஜபம் செய்ய நல்ல ஸம்ஸ்காரங்கள் மனதில் வந்து சேரும். த்வைத வாஸனைகள் மீது அத்வைத வாஸனைகள் எழுதப்படும். நம்மிடத்தே இருக்கின்ற சம்சார பாவனைகள் நீங்கி திரிசங்கு வசனங்கள் நமக்கு ஆத்ம ஞான பாவனைகள் வந்து சேரும். பிறகு இது கண்ணுக்கு தெரியாத பாவங்களையும் நீக்கிவிடும். இந்த பாவங்கள் வேதாந்தம் தொடர்வதற்கு தடையாக வந்து சேர்ந்திருக்கலாம். இதை சிரத்தையுடன் ஜபம் செய்வதால் நமக்கு வரும் தடைகள் நீங்கும். அர்த்தத்தை புரிந்து கொண்டு ஜபம் செய்ய வேண்டும்.
வேத3மனுச்யாசார்யோÅந்தேவாஸினமனுஶாஸ்தி |
ஸத்யம் வத3 |
த4ர்ம சர |
ஸ்வாத்3யாயன்மா ப்ரமத3: |
ஆசார்யாய ப்ரியம் த4னமாஹ்ருத்ய
ப்ரஜாதந்தும் மா வ்யவச்சே2த்ஸீ: |
ஸத்யான்ன ப்ரமதி3தவ்யம்
|
த4ர்மான்ன ப்ரமதி3தவ்யம் |
குஶலாஜ்ஜ ப்ரமதிதவ்யம் |
பூ4த்யை ந ப்ரமதி3தவ்யம் |
ஸ்வாத்4யாயப்ரவசனாப்4யாம் ந ப்ரமதி3தவ்யம் |
தேவாபித்ருகார்யாப்4யாம் ந ப்ரமதி3தவ்யம் |
மாத்ருதே3வோ ப4வ |
பித்ருதேவ ப4வ |
ஆசார்யதே3வோ ப4வ |
அதிதி2தே3வோ ப4வ ||
இதில் சில பண்புகள், கடமைகள் கூறப்பட்டிருக்கின்றன். இந்த பண்புகள் இருந்தால்தான் ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும் என்ற ஆசையே மனதில் எழும். வேதத்தை ஓதும் முறையை புகட்டியபின் மாணவனிடத்தில் கீழ்க்கண்டவாறு உபதேசிக்கின்றார்.
உண்மையை பேசு, தர்மத்தை பின்பற்று, வேதத்தில் கூறப்பட்டுள்ள தர்மத்துடன் வாழ்ந்து கொண்டிரு. அதர்மத்தை செய்யாதே. வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள கர்மங்களை செய், நிஷித்த கர்மங்களை செய்யாதே. சாஸ்திரம் படிக்கும்போது கவனக்குறைவாக இருக்காதே. குருவிடம் கேட்ட சாஸ்திரத்தை கவனக்குறைவாக கூட படிக்காமல் இருந்து விடாதே. குருவுக்கு தேவைப்படும் பொருட்களை கொடுக்க வேண்டும். வம்சத்தொடரை அறுத்துவிடாதே. உண்மை பேசுவதிலும் கவனக்குறைவாக இருந்து விடாதே. வேதத்தில் விதிக்கப்பட்ட கடமைகளிலிருந்து விலகி விடாதே. உன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனக்குறைவாக இருந்து விடாதே. வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிரு. வாழும் வாழ்வின் தரத்தை உயர்த்தி கொண்டிரு. சாஸ்திரத்தை கற்பதிலிருந்தும், கற்றதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்காமலும் இருந்து விடாதே. தேவர்களுக்கும், பித்ருகளுக்கும் செய்ய வேண்டிய காரியங்களை தவறாமல் செய்ய வேண்டும். தாயையும், தந்தையையும், ஆசிரியரையும், விருந்தினரையும் கடவுளாக கருதுபவனாக இரு. இவர்களிடன் என்ன குறைகள் இருந்தாலும் அவைகளை கவனத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் எந்தவித நிபந்தனையின்றி இவர்களை தெய்வமாக வணங்க வேண்டும். இவர்களிடமிருந்துதான் பலவிதமான பலன்களை அடைகின்றோம். சொல்லாமல் வரும் விருந்தினர்களையும் தெய்வமாக கருத வேண்டும்.
அனுவாகம்-11.2
யான்யதவத்3யானி கர்மாணி |
தானி ஸேவிதவ்யானி |
நோ இதராணி |
யான்யஸ்மாகம்ஸுசரிதானி |
தானி த்வயோபாஸ்யானி நோ இதராணி |
யே கே சாஸ்மச்சே2யாம்ஸோ ப்3ரஹ்மணா: |
தேஷாம் த்வயாஸனேன ப்ரஶ்வஸிதவ்யம் ||
எது தர்மம், எது அதர்மம் என்பதை அறிந்து கொள்ள மூன்று வழிகள் உண்டு. அவைகள்,
அனுவாகம்-11.3
ஶ்ரத்3த4யா தேயம் |
அஶ்ரத்3த4யாதே3யம் |
ஶ்ரியா தே3யம் |
ஹ்ரியா தே3யம் |
ஸம்விதா3 தே3யம் ||
இல்லறத்தில் இருப்பவர்கள் எப்படி தானம் செய்ய வேண்டும் என்று இங்கு கூறப்படுகின்றது.
அத2 யதி3 தே கர்மவிசிதித்ஸா வ வ்ருத்தவிசிகித்ஸா வா ஸ்யாத் |
யே தத்ர ப்3ரஹ்மணா: ஸம்மர்ஶின: |யுக்தா ஆயுக்தா: |
அலூக்ஷா த4ர்மகாமா: ஸ்யு: |
யதா2 தே தத்ர வர்கே3ரன் |
ததா2 தத்ர வர்கே3தா2 |
அதா2ப்4யாக்2யாதேஷு |
யே தத்ர ப்3ரஹ்மணா: ஸம்மர்ஶின: |
யுக்தா ஆயுக்தா: அலூக்ஶா த4ர்மகாமா: ஸ்யு: |
யதா2 தே தேஷு வர்தேரன |
ததா2 தேஷு வர்தேதா2: |
ஏஷ ஆதே3ஶ: |
ஏஷ உபதேஶ: |
ஏஷா வேதோ3பநிஷத் |
ஏதத3னுஶாஸனம் |
ஏவமுபாஸிதவ்யம் |
ஏவமுசைத்து3பாஸ்யம் ||
ஒருவேளை கடமையைப் பற்றிய சந்தேகம் வந்தால், வாழ்க்கையில் கையாளும் விஷயத்தில், விவகாரத்தில் சந்தேகம் வந்தால், அந்த நேரத்தில் சான்றோர்கள், சாஸ்திரத்தை நன்கு அறிந்தவர்கள், கற்றதை தமது வாழ்வில் கடைபிடிப்பவர்கள், எப்பொழுதும் நடுநிலைமையோடு வாழ்பவர்கள், தீய பண்புகள் இல்லாதவர்கள், மென்மையான மனதையுடையவர்கள், தர்மத்தில் நிலை பெற்றவர்கள், தர்மத்தை பின்பற்றுபவர்கள், இப்படிப்பட்ட குணங்களையுடையவர்களிடம் அந்த சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்வர்களோ அவ்விதம் நீ நடந்து கொள்ள வேண்டும். மேலும் அதர்மப்படி வாழ்பவர்களிடத்திலும் மேற்கூறிய பண்புகளையுடையவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ அதேமாதிரி நடந்து கொள். உதாரணமாக நம்மை உதாசீனப்படுத்து-பவர்களை நாமும் உதாசீனப்படுத்த நினைப்போம், நமக்கு தீமை செய்பவர்களுக்கு நாமும் தீமை செய்ய நினைப்போம் இந்த நிலையில் நம்முடைய எண்ணத்தை நீக்கி, சான்றோர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்களோ அதேபோல நடந்து கொள்ள வேண்டும். இதுதான் வேதத்தினுடைய கட்டளை (ஆதேஷம்). இதுவே ஸ்மிருதியின் உபதேசம். இதுதான் வேதத்தினுடைய ஸாரம் (சுருக்கமான நீதி). இது (அனுசாஸனம்) இறைவனுடைய கட்டளை. இவ்விதத்தில் நம்முடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு செல்ல வேண்டும்.
அனுவாகம்-12
இது முதலில் கூறப்பட்ட சாந்தி பாடமே கடைசியிலும் சொல்லப்பட்டிருக்கின்றது. இது நம் நன்றியை தெரிவிக்கின்றது போல வந்திருக்கின்றது
ரிதம் ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
இதில் சில பண்புகளும், கர்மங்களும் சொல்லப்பட்டிருக்கின்றது. மேலே கூறிய உபாஸனைகளனைத்தும் நற்பண்புகளுடனும், செயல்களுடனும் செய்தால்தான் அதன் பலனை அடைய முடியும்.
வேதத்தை கற்றல், பிறருக்கு கற்றுக்கொடுத்தல், கற்றதை சரியாக புரிந்து கொள்ளுதல், உண்மையை பேசுதல், தவம், விரதம், போகத்தை அனுபவிக்காதிருத்தல், உணவில் கட்டுப்பாடு, உடலுக்கும், மனதுக்கும் நன்மையை கொடுக்கக்கூடியதை சாப்பிடவேண்டும். அளவுடன் சாப்பிட வேண்டும். புதியதாக சமைத்து சாப்பிட வேண்டும், புலனடக்கம், மனவடக்கம், யாகத்திற்கு பயன்படுத்தும் அக்னியை பாதுகாத்தல், இல்லறத்தில் இருப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட யாகங்களை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது. அக்னிஹோத்ரம் காலையும், மாலையும் செய்ய வேண்டும். விருந்தினரை உபசரிக்க வேண்டும், மனிதர்களுக்கு சேவை செய்ய வேண்டும், சந்ததியை வளர்த்தல், தன் புத்திரனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாது செய்தல், சந்ததி உற்பத்திக்கு கணவன்-மனைவி சேர்தல், பேரக்-குழந்தைகளை அடைவதற்கு புத்திரர்களுக்கு மணம் செய்வித்தல் போன்ற விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் ராதீதரன் என்ற ரிஷி வாய்மையே மேலானதாக கருதுகின்றார் என்றும், தவத்தில் ஈடுபட்டுள்ள பௌருஷ்டி என்ற ரிஷி தவத்தை மேலானதாக கூறுவதாகவும் இங்கு சொல்லப்பட்டிருக்கின்றது. நாக என்கின்ற ரிஷி வேதத்தை கற்றலும், கற்பித்தலும்தான் மேலான தவமாக கருதுவாக சொல்லப்பட்டிருக்கின்றது.
அனுவாகம்-10
அஹம் வ்ருக்ஷஸ்ய ரேரிவா |
கீர்தி: ப்ருஷ்டம் கி3ரரிவ |
ஊர்த்4வபவித்ரோ வாஜினீவ ஸ்வம்ருதமஸ்மி |
த்3ரவிணம்ஸவர்சஸம் |
ஸுமேதா4 அம்ருதோக்ஷித: இதி த்ரிஶங்கோர்வேதா3னுவசனம் ||
ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு திரிசங்கு என்ற ரிஷி கூறியவைகள் இந்த அனுவாகத்தில் கூறப்பட்டுள்ளது. இதை ஜபம் செய்ய நல்ல ஸம்ஸ்காரங்கள் மனதில் வந்து சேரும். த்வைத வாஸனைகள் மீது அத்வைத வாஸனைகள் எழுதப்படும். நம்மிடத்தே இருக்கின்ற சம்சார பாவனைகள் நீங்கி திரிசங்கு வசனங்கள் நமக்கு ஆத்ம ஞான பாவனைகள் வந்து சேரும். பிறகு இது கண்ணுக்கு தெரியாத பாவங்களையும் நீக்கிவிடும். இந்த பாவங்கள் வேதாந்தம் தொடர்வதற்கு தடையாக வந்து சேர்ந்திருக்கலாம். இதை சிரத்தையுடன் ஜபம் செய்வதால் நமக்கு வரும் தடைகள் நீங்கும். அர்த்தத்தை புரிந்து கொண்டு ஜபம் செய்ய வேண்டும்.
- நானே அனைத்து பிரபஞ்சத்திற்கும், சம்சாரத்திற்கும்
ஆதாரமாக இருக்கின்றேன். நான் சம்சாரத்தை நாசம் செய்தவன், வைராக்கியம்,
ஆத்மஞானத்தினால் இதை செய்திருக்கின்றார்.
- என்னுடைய புகழானது மலை உச்சி அளவுக்கு ஓங்கி இருக்கின்றது. தேவலோகம் வரை என்னுடைய புகழ் வளர்ந்த்திருக்கின்றது. இது இவரிடத்தில் உள்ள மனநிறைவை எடுத்துக்
காட்டுகின்றது. எவனொருவன்
தன்னையே நேசிக்கின்றானோ அவனுக்கு மற்றவர்கள் தன்னை புகழ வேண்டும் என்ற எண்ணமே வராது.
உதாரணமாக கர்ணன் தான் சத்திரியன் என்று குந்திதேவி மூலம் அறிந்து கொண்டபின்
மற்றவர்கள் அவனை தேரோட்டி என்று சொல்லும் போது அவனுக்கு வருத்தமேற்படவில்லை.
- நான் முழுமையானவனாகவும், தூய்மையானவனாகவும் இருக்கின்றேன்.
- சூரிய தேவதைபோல நான் அழியாத ஆத்ம தத்துவமாக இருக்கின்றேன்.
- ஒளிப்பொருந்திய பிரம்ம தத்துவமாக இருக்கின்றேன், அதை அடைந்தவனாக
இருக்கின்றேன்.
- நான் பிரம்ம ஸ்வரூபம் என்ற அறிவுடனே செயல்படுகின்றேன். எப்பொழுதும் பிரம்ம ஞானத்தில் நிலைபெற்று
இருக்கின்றேன்.
- மரணமற்றவனாகவும், மாற்றமில்லாதவனாகவும் இருக்கின்றேன்.
- நான் மரணமற்ற நிலையில் ஆழ்ந்திருக்கின்றேன்.
வேத3மனுச்யாசார்யோÅந்தேவாஸினமனுஶாஸ்தி |
பித்ருதேவ ப4வ |
ஆசார்யதே3வோ ப4வ |
அதிதி2தே3வோ ப4வ ||
இதில் சில பண்புகள், கடமைகள் கூறப்பட்டிருக்கின்றன். இந்த பண்புகள் இருந்தால்தான் ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும் என்ற ஆசையே மனதில் எழும். வேதத்தை ஓதும் முறையை புகட்டியபின் மாணவனிடத்தில் கீழ்க்கண்டவாறு உபதேசிக்கின்றார்.
உண்மையை பேசு, தர்மத்தை பின்பற்று, வேதத்தில் கூறப்பட்டுள்ள தர்மத்துடன் வாழ்ந்து கொண்டிரு. அதர்மத்தை செய்யாதே. வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள கர்மங்களை செய், நிஷித்த கர்மங்களை செய்யாதே. சாஸ்திரம் படிக்கும்போது கவனக்குறைவாக இருக்காதே. குருவிடம் கேட்ட சாஸ்திரத்தை கவனக்குறைவாக கூட படிக்காமல் இருந்து விடாதே. குருவுக்கு தேவைப்படும் பொருட்களை கொடுக்க வேண்டும். வம்சத்தொடரை அறுத்துவிடாதே. உண்மை பேசுவதிலும் கவனக்குறைவாக இருந்து விடாதே. வேதத்தில் விதிக்கப்பட்ட கடமைகளிலிருந்து விலகி விடாதே. உன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனக்குறைவாக இருந்து விடாதே. வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிரு. வாழும் வாழ்வின் தரத்தை உயர்த்தி கொண்டிரு. சாஸ்திரத்தை கற்பதிலிருந்தும், கற்றதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்காமலும் இருந்து விடாதே. தேவர்களுக்கும், பித்ருகளுக்கும் செய்ய வேண்டிய காரியங்களை தவறாமல் செய்ய வேண்டும். தாயையும், தந்தையையும், ஆசிரியரையும், விருந்தினரையும் கடவுளாக கருதுபவனாக இரு. இவர்களிடன் என்ன குறைகள் இருந்தாலும் அவைகளை கவனத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் எந்தவித நிபந்தனையின்றி இவர்களை தெய்வமாக வணங்க வேண்டும். இவர்களிடமிருந்துதான் பலவிதமான பலன்களை அடைகின்றோம். சொல்லாமல் வரும் விருந்தினர்களையும் தெய்வமாக கருத வேண்டும்.
அனுவாகம்-11.2
யான்யதவத்3யானி கர்மாணி |
தானி ஸேவிதவ்யானி |
நோ இதராணி |
யான்யஸ்மாகம்ஸுசரிதானி |
தானி த்வயோபாஸ்யானி நோ இதராணி |
யே கே சாஸ்மச்சே2யாம்ஸோ ப்3ரஹ்மணா: |
தேஷாம் த்வயாஸனேன ப்ரஶ்வஸிதவ்யம் ||
எது தர்மம், எது அதர்மம் என்பதை அறிந்து கொள்ள மூன்று வழிகள் உண்டு. அவைகள்,
- வேத சாஸ்திரத்தில்
சொல்லப்பட்டது
- ரிஷிகளால் எழுதப்பட்ட
ஸ்மிருதிகள்,
தர்ம சாஸ்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள், இவைகளில் சொல்லப்பட்டது
- இப்பொழுது உயிருடன்
வாழ்ந்து கொண்டிருக்கும் சான்றோர்களின், மகான்களின் வாழ்க்கை முறை என்ற இந்த மூன்று வழிகளாலும் தர்ம அதர்ம நெறிகளை அறிந்து கொள்ளலாம்.
- எந்தச் செயல்கள்
குற்றமற்றதாக இருக்கின்றதோ,
மேற்கூறிய மூன்று பிரமாணங்களினாலும் நிந்திக்கபடாததாக இருக்கின்றதோ அவைகளை
மட்டும் பின்பற்ற வேண்டும், மற்றவற்றை பின்பற்ற கூடாது.
- பெரியோர்களிடத்தில், சான்றோர்களிடத்தில்
காணப்படும் நல்ல விஷயங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும். மற்றவற்றை
பின்பற்ற கூடாது.
- நம்மை காட்டிலும்
வயதிலும்,
அனுபவத்திலும்,, அறிவிலும் பெரியோர்கள்,
பண்பாளர்கள் வந்தால், அவர்களுக்கு அமர இருக்கை
கொடுத்து, அவர்கள் களைப்பை போக்க வேண்டும்.
- அவர்களோடு அதிகம் பேசாமல், அவர்கள் கூறும் நல்ல விஷயங்களினால் அறிவை அடைய வேண்டும்.
ஶ்ரத்3த4யா தேயம் |
அஶ்ரத்3த4யாதே3யம் |
ஶ்ரியா தே3யம் |
ஹ்ரியா தே3யம் |
ஸம்விதா3 தே3யம் ||
இல்லறத்தில் இருப்பவர்கள் எப்படி தானம் செய்ய வேண்டும் என்று இங்கு கூறப்படுகின்றது.
- சிரத்தையுடன் தானம் செய்ய வேண்டும், மனமுவந்து
கொடுக்க வேண்டும்.
- சிரத்தையில்லாமல் தானம் செய்யக்கூடாது.
- அதிகமாக கொடுக்க வேண்டும்.
- வெட்கத்துடன் கொடுக்க வேண்டும், இவ்வளவுதான்
கொடுக்க முடிகின்றது என்ற சங்கோஸத்துடன் கொடுக்க வேண்டும்,
- அக்கறையுடன், பயந்து கொண்டு கொடுக்க வேண்டும்.
- சரியான அறிவுடன் தானம் செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில், காலத்தில், தகுதியுடையவருக்கு தானம் செய்ய வேண்டும்.,
அத2 யதி3 தே கர்மவிசிதித்ஸா வ வ்ருத்தவிசிகித்ஸா வா ஸ்யாத் |
யே தத்ர ப்3ரஹ்மணா: ஸம்மர்ஶின: |யுக்தா ஆயுக்தா: |
அலூக்ஷா த4ர்மகாமா: ஸ்யு: |
யதா2 தே தத்ர வர்கே3ரன் |
ததா2 தத்ர வர்கே3தா2 |
அதா2ப்4யாக்2யாதேஷு |
யே தத்ர ப்3ரஹ்மணா: ஸம்மர்ஶின: |
யுக்தா ஆயுக்தா: அலூக்ஶா த4ர்மகாமா: ஸ்யு: |
யதா2 தே தேஷு வர்தேரன |
ததா2 தேஷு வர்தேதா2: |
ஏஷ ஆதே3ஶ: |
ஏஷ உபதேஶ: |
ஏஷா வேதோ3பநிஷத் |
ஏதத3னுஶாஸனம் |
ஏவமுபாஸிதவ்யம் |
ஏவமுசைத்து3பாஸ்யம் ||
ஒருவேளை கடமையைப் பற்றிய சந்தேகம் வந்தால், வாழ்க்கையில் கையாளும் விஷயத்தில், விவகாரத்தில் சந்தேகம் வந்தால், அந்த நேரத்தில் சான்றோர்கள், சாஸ்திரத்தை நன்கு அறிந்தவர்கள், கற்றதை தமது வாழ்வில் கடைபிடிப்பவர்கள், எப்பொழுதும் நடுநிலைமையோடு வாழ்பவர்கள், தீய பண்புகள் இல்லாதவர்கள், மென்மையான மனதையுடையவர்கள், தர்மத்தில் நிலை பெற்றவர்கள், தர்மத்தை பின்பற்றுபவர்கள், இப்படிப்பட்ட குணங்களையுடையவர்களிடம் அந்த சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்வர்களோ அவ்விதம் நீ நடந்து கொள்ள வேண்டும். மேலும் அதர்மப்படி வாழ்பவர்களிடத்திலும் மேற்கூறிய பண்புகளையுடையவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ அதேமாதிரி நடந்து கொள். உதாரணமாக நம்மை உதாசீனப்படுத்து-பவர்களை நாமும் உதாசீனப்படுத்த நினைப்போம், நமக்கு தீமை செய்பவர்களுக்கு நாமும் தீமை செய்ய நினைப்போம் இந்த நிலையில் நம்முடைய எண்ணத்தை நீக்கி, சான்றோர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்களோ அதேபோல நடந்து கொள்ள வேண்டும். இதுதான் வேதத்தினுடைய கட்டளை (ஆதேஷம்). இதுவே ஸ்மிருதியின் உபதேசம். இதுதான் வேதத்தினுடைய ஸாரம் (சுருக்கமான நீதி). இது (அனுசாஸனம்) இறைவனுடைய கட்டளை. இவ்விதத்தில் நம்முடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு செல்ல வேண்டும்.
அனுவாகம்-12
இது முதலில் கூறப்பட்ட சாந்தி பாடமே கடைசியிலும் சொல்லப்பட்டிருக்கின்றது. இது நம் நன்றியை தெரிவிக்கின்றது போல வந்திருக்கின்றது
------------------------------------------------------------------------
சீக்ஷாவல்லி முடிவுற்றது.
No comments:
Post a Comment