ஶ்ரீநாரத ரிஷியின் உபதேசம் – 04-31-08
v மனிதர்களுக்குள் யார் இவ்வுலகில் சர்வஸ்வரூபமான பகவான் ஶ்ரீஹரியை
பூஜிக்கிறானோ அவனது பிறவிதான் நல்ல பிறவி, அவன் செய்யும் செயல்கள் அனைத்தும்
நற்செயல்களாகும். அவனுடைய ஆயுள், வாக்கு இவைகள் நன்றாக இருக்கும்
v வேத தர்மங்களை மட்டும் செய்வதாலும், அதனால் அடையும் பலன்களினாலோ, உடல்
வலிமை, அறிவுத்திறமை, புத்திக்கூர்மை, புலன்களின் வலிமை இவைகளினால் ஒரு பயனும்
கிடையாது. துறவற்த்தை மேற்கொள்வதாலோ, மற்ற
நற்காரியங்களை செய்வதாலோ ஒரு பயனும் கிடையாது.
ஆத்ம ஞானத்தையும், பரமானந்தத்தையும் அளிக்க வல்ல பகவான் ஹரியை
பூஜிக்கவிட்டால் என்ன பயன்>
v எப்படி அடிமரத்தில் ஊற்றும் நீரானது மரத்தின் இலை, கிளை இவைகளின்
வளர்ச்சிக்கு காரணமாகின்றதோ அதுபோல ஹரிசேவை எல்லா தேவர்களையும் பூஜித்ததாகின்றது.
v பகவான் பரமாத்மாவிடமிருந்து சத்துவ, ரஜோ, தமோ என்கின்ற குணங்களே உலக
வடிவமாக தோன்றி மறைகின்றன
v பகவான் ஹரியை ஐக்கிய புத்தியுடன் நன்கு பூஜை செய்யுங்கள், துதியுங்கள்.
v எல்லா பிராணிகளிடமும் கொண்ட கருணையாலும், கிடைத்ததில் திருப்தி
அடையும் மனப்பான்மையாலும், புலனடக்கத்தாலும் பகவான் ஹரியை விரைவில் மகிழ்ச்சி
அடையச் செய்யலாம்
v பகவான் என்ற ஓடமின்றி காமம், கோபம், லோபம், மோஹம், மதம், மாத்ஸர்யம்
என்கின்ற ஆறு பெரும் முதலைகளுடன் கூடிய சம்சாரக் கடலை கடக்க முடியாது.
v பகவான் திருவடிகளை ஓடமாக கொண்டு சம்சாரக் கடலை கடந்துவிடலாம்
No comments:
Post a Comment