அவ்வையாரின் ஆத்திசூடி
1.அறம் செய
விரும்பு
அறம் - ( விதித்தன செய்தல் விலக்கியன ஒழித்தல்- நல்ல செயல்களை செய்வது மற்றும் கெடுதல்
செயல்களைச் செய்யாமல்
இருப்பது ) செய - செய்வதற்கு,
விரும்பு -நீ ஆசைப்படு.
·
தருமம் செய்ய நீ விரும்புவாயாக
·
நல்ல செயல்களைச் செய்வதற்கு மனம் விருப்பம் கொள்ள வேண்டும். மனம் விருப்பம் கொள்ள அந்த நல்ல செயல்களை
மகிழ்வுடன் செய்ய முடியும்.
2.
ஆறுவது சினம்
ஆறுவது- தவிர்க்க
வேண்டியது,
சினம் - கோபம்.
·
கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
·
கோபம் வரும் போது நமது சிந்திக்கும் அறிவு குறைந்து உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவு எடுக்கும் சூழ்நிலை உருவாகும். அது எல்லோருக்கும் நல்லது அல்ல.
3.
இயல்வது கரவேல்
இயல்வது - நம்மால்
முடிந்ததை கொடுப்பதற்கு
கரவேல் - வறுமையினாலே
இரப்பவர்களுக்கு நீ ஒளியாதே ( "கரவல்" கொடாது மறைக்கை, கரப்பு, மறைப்பு, மறைக்காதே)
·
உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.
4.
ஈவது விலக்கேல்
ஈவது - தருமத்தைக்
குறித்து ஒருவருக்கு ஒருவர் கொடுப்பதை
விலக்கேல் - நீ தடுக்காதே
·
ஒருவர்,
மற்றவர்க்கு
கொடுப்பதை,
வேண்டாமென்று
தடுக்காதே
5.உடையது
விளம்பேல்
உடையது - உனக்கு உள்ள பொருளை
விளம்பேல் - நீ பிறர்
அறியும்படி சொல்லாதே
·
உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.
·
உனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகளை பலரும் அறியும்படி பெருமையாக பேசாதே.
·
உன்னுடைய பலவீனத்தையும் பலரும் அறியும்படி சொல்லாதே. அதனால் நல்ல பயன் எதுவும் இல்லை.
6.
ஊக்கமது
கைவிடேல்
ஊக்கமது–
செய்தொழிலில்
மனஞ்சோராமை,
உள்ளக்
கிளர்ச்சியை
கைவிடேல்–
நீ தளர்ந்து போக
விடாதே.
·
எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
7.
எண் எழுத்து
இகழேல்
எண் –
கணித நூலையும்
எழுத்து - அற நூல்களையும், இலக்கண நூலையும்
·
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு
விடாதே.
8.
ஏற்பது இகழ்ச்சி
ஏற்பது –
ஒருவரிடத்திலே
போய் இரப்பது பிறரிடம் சென்று
யாசித்தல்;
இகழ்ச்சி – பழிப்பாகும் (அல்லது) இழிவு தரும்.
·
இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக்
கூடாது.
9.
ஐயம் இட்டு உண்
ஐயமிட்டு –
உன்னிடம் உணவு
கேட்பவற்குக் கொடுத்து
உண் - பிறகே நீ உண்ண
வேண்டும்.
·
யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.
10.
ஒப்புரவு ஒழுகு
ஒப்புரவு –
உலக போக்கிற்கு
எற்றவாறு;
ஒழுகு –
நட
·
உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.
11.
ஓதுவது ஒழியேல்
·
நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
12.
ஔவியம் பேசேல்
·
ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
13.அஃகஞ்
சுருக்கேல்
·
அதிக இலாபத்துக்காக,
தானியங்களை
குறைத்து அளந்து விற்காதே.
உயிர்மெய் வருக்கம்[தொகு]
14.கண்டொன்று
சொல்லேல்.
·
கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.
15.ஙப் போல் வளை.
·
'ங' என்னும்
எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ
அது போல நாமும்
நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.
·
"ங" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது
விளங்கும். அதைப்போல பணிவாக
பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
16.சனி நீராடு.
·
சனி(குளிர்ந்த) நீராடு.
17.ஞயம்பட உரை.
·
கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.
18.இடம்பட வீடு
எடேல்.
·
உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.
19.இணக்கம் அறிந்து
இணங்கு.
·
ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த
பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.
20.தந்தை தாய்ப்
பேண்.
·
உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.
21.நன்றி மறவேல்.
·
ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.
22.பருவத்தே பயிர்
செய்.
·
எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.
23.மண் பறித்து
உண்ணேல்.
·
பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது)
·
நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)
24.இயல்பு அலாதன
செய்யேல்.
·
நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.
25.அரவம் ஆட்டேல்.
·
பாம்புகளை பிடித்து விளையாடாதே.
26.இலவம் பஞ்சில்
துயில்.
·
'இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட
படுக்கையிலே உறங்கு
27.வஞ்சகம் பேசேல்.
·
கபடச்(உண்மைக்கு
புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே
28.அழகு அலாதன
செய்யேல்.
·
இழிவான செயல்களை செய்யாதே
29.இளமையில் கல்.
·
இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை (இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.
30.அறனை மறவேல்.
·
கடவுளை (அறன் = சிவபெருமானை) மனதில் எப்பொழுதும் நினைக்கவேண்டும்
31.அனந்தல் ஆடேல்.
·
மிகுதியாக தூங்காதே
ககர வருக்கம்[தொகு]
32.கடிவது மற
·
யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.
33.காப்பது விரதம்
·
தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது)
·
பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.
34.கிழமை பட வாழ்
·
உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்
35.
கீழ்மை யகற்று
·
இழிவான குணஞ் செயல்களை நீக்கு
36.
குணமது கைவிடேல்
·
நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).
37.
கூடிப் பிரியேல்
·
நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே
38.
கெடுப்ப தொழி
·
பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.
39.
கேள்வி முயல்
·
கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்
40.
கைவினை கரவேல்
·
உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து
கொண்டிருக்கவும்.
41.
கொள்ளை
விரும்பேல்
·
பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.
42.
கோதாட் டொழி
·
குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு)
43.கௌவை அகற்று
·
வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு
சகர வருக்கம்[தொகு]
44.
சக்கர நெறி நில்
·
தர்மசக்கர நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் = ஆள்பவர், தலைவர் )
45.சான்றோ
ரினத்திரு
·
அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.
46.
சித்திரம்
பேசேல்
·
பொய்யான வார்தைகளை மெய் போலப் பேசாதே
47.
சீர்மை மறவேல்
·
புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.
48.
சுளிக்கச்
சொல்லேல்
·
கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்
49.
சூது விரும்பேல்
·
ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.
50.
செய்வன
திருந்தச் செய்
·
செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்
51.சேரிடமறிந்து
சேர்
·
நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு
அவர்களுடன் பழகு.
52.
சையெனத்
திரியேல்
·
பெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே
53.
சொற்சோர்வு
படேல்
·
பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே
54.
சோம்பித்
திரியேல்
·
முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.
தகர வருக்கம்[தொகு]
55.
தக்கோ னெனத்திரி
·
பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்
56.
தானமது விரும்பு
·
யாசிப்பவர்களுக்கு தானம் செய்.
57.
திருமாலுக்கு
அடிமை செய்
·
நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்
58.
தீவினை யகற்று
·
பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.
59.துன்பத்திற்
கிடங்கொடேல்
·
முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு
விடாதே.
60.
தூக்கி வினைசெய்
·
ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு
அச்செயலை செய்யத தொடங்கவும்
61.
தெய்வ மிகழேல்
·
கடவுளை பழிக்காதே.
62.
தேசத்தோ
டொத்துவாழ்
·
உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்
63.
தையல்சொல்
கேளேல்
·
மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.
64.
தொன்மை மறவேல்
·
பழைமையை மறவாதிருக்க வேண்டும் (பழங்கால மற்றும்
பண்டைய முறையிலான நம் தமிழ் கலாச்சாரத்தை விட்டு கொடுக்காமல் இயற்கையோடு ஒத்து வாழ
வேண்டும்)
65.
தோற்பன தொடரேல்
·
ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.
நகர வருக்கம்[தொகு]
66.
நன்மை கடைப்பிடி
·
நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்
67.
நாடொப் பனசெய்
·
நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்
68.
நிலையிற்
பிரியேல்
·
உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.
69.
நீர்விளை யாடேல்
·
வெள்ளபெருக்கில்
நீந்தி
விளையாடாதே
70.
நுண்மை நுகரேல்
·
நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே
71.
நூல்பல கல்
·
அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி
72.நெற்பயிர் விளை
·
நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.
73.
நேர்பட வொழுகு
·
ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட
74.
நைவினை நணுகேல்
·
பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே
75.
நொய்ய வுரையேல்
·
பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.
76.
நோய்க்கிடங்
கொடேல்
·
மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.
பகர வருக்கம்[தொகு]
77.
பழிப்பன பகரேல்
·
பெரியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றைப் பேசாதே.
78.
பாம்பொடு பழகேல்
·
பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.
79.
பிழைபடச்
சொல்லேல்
·
குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.
80.
பீடு பெறநில்
·
பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்
81.
புகழ்ந்தாரைப்
போற்றி வாழ்
·
உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்
82.
பூமி
திருத்தியுண்
·
விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை
வாழ்க்கைத் தொழிலாகக் கொள்
83.
பெரியாரைத்
துணைக்கொள்
·
அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்
84.
பேதைமை யகற்று
·
அறியாமையைப் போக்கு
85.
பையலோ டிணங்கேல்
·
அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.
86.
பொருடனைப்
போற்றிவாழ்
·
பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.
87.
போர்த்தொழில்
புரியேல்
·
யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாகச் செய்யாதே
மகர வருக்கம்[தொகு]
88.
மனந்தடு மாறேல்
·
எதனாலும் மனக்கலக்கம் அடையாதே
89.
மாற்றானுக்
கிடங்கொடேல்
·
பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.
90.
மிகைபடச்
சொல்லேல்
·
சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.
91.
மீதூண்
விரும்பேல்
·
மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.
92.
முனைமுகத்து
நில்லேல்
·
எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே
93.
மூர்க்கரோ
டிணங்கேல்
·
மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே
94.
மெல்லினல்லாள்
தோள்சேர்
·
பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.
95.
மேன்மக்கள்
சொற்கேள்
·
நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.
96.
மைவிழியார்
மனையகல்
·
விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்
97.
மொழிவ தறமொழி
·
சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்
98.மோகத்தை முனி
·
நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு
வகர வருக்கம்[தொகு]
99.
வல்லமை பேசேல்
·
உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே
100.
வாதுமுற் கூறேல்
·
பெரியோர்களிடத்தில் முறன் பட்டு வாதிடாதே
101.
வித்தை விரும்பு
·
கல்வியாகிய நற்பொருளை விரும்பு
102.
வீடு பெறநில்
·
முக்தியை பெறுவதற்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து
103.
உத்தமனாய் இரு
·
உயர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ்.
104.
ஊருடன் கூடிவாழ்
·
ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்
105.
வெட்டெனப்
பேசேல்
·
யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே
106.
வேண்டி
வினைசெயேல்
·
வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே
107.
வைகறை துயிலெழு
·
நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு
108.
ஒன்னாரைத் தேறேல்
·
பகைவர்களை நம்பாதே
109.
ஓரஞ் சொல்லேல்
·
எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.
No comments:
Post a Comment