சர்வ
வேதாந்த சித்தாந்த ஸார ஸங்கிரஹம் –
பகுதி-2
ஸ்வாமி பரமார்த்தானந்தா விளக்கம்
ஸ்லோகம்-21
अनित्यत्वं च नित्यत्वमेवं यच्छृतियुक्तिभिः ।
विवेचनं नित्यानित्यविवेक इति कथ्यते ॥ 21 ॥
இவ்வாறு
அடையும் அறிவே நித்ய-அநித்ய விவேகம் என்று கூறப்படுகின்றது. வேதத்தின் உபதேசம் மூலமாகவும்,
வேதம் சொல்லிய யுக்தியின் மூலமாக அடையும் இந்த தகுதிதான் விவேகம்
(அநித்ய-நித்ய அறிவு). எனவே வேதத்தின் உபதேசத்தில் நம்பிக்கை
இருக்க வேண்டும்.
Verses 22-47 – Desirelessness
ऐहिकामुष्मिकार्थेषु ह्यनित्यत्वेन निश्र्चयात् ।
नैःस्पॄह्यं तुच्छबुद्धया यत्तद्वैराग्यमितीर्यते ॥ 22 ॥
வைராக்யமற்ற
விவேகம் பயனற்றது. நாம் அனுபவிக்கும் ஆனந்தம் நிலையற்றது
என்று புரிந்து கொள்ள வேண்டும். நித்ய வஸ்துவான பிரம்மத்தின்
மூலமாக அடையும் ஆனந்தம் நித்யானந்தம்.
இந்த உலகத்திலிருந்து கிடைக்கும் பாதுகாப்பும், ஆனந்தமும் அநித்யம்தான் என்று உணர்ந்து கொள்ள வேண்டும். இவையிரண்டும் ஈஸ்வரனிடத்திலிருந்தது
கிடைப்பதுதான் நிரந்தரமானது. எனவே நாம் அடைய நினைப்பது நிலையான சுகத்தையும், பாதுகாப்பையும்
கொடுப்பதாக இருக்க வேண்டும். இப்படிபட்ட மனநிலையடைவதுதான் வைராக்யம், அதாவது நித்ய
சுகத்தை நாடுவது.
ப்ரேயஸ் - அநித்ய சுகம்,
ஸ்ரேயஸ் – நித்ய
சுகம்.
அநித்யத்வேத்
நிஸ்யத்
– நிலையின்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுதல்
ஐஹிகாமுஷ்மிகார்த்தேஷூ – இவ்வுலகத்திலும்,
அவ்வுலகத்திலுமுள்ள அனைத்தும்
துச்ச – இதில்
நாட்டம் கொள்ளாதிருத்தல், துச்சமென மதித்து
நைஸ்ப்ருஹ்யம் – இந்த
உலகம் கொடுக்கும் சுகத்தை அடைவதில் தீவிரம் காட்டாமல் இருத்தல், உலக இன்பங்களை அடைவதில் ஆர்வம் காட்டாதிருத்தல்
தத் – விவேத்தினால்
அடையும் இந்த மனநிலையானது
வைராக்யமித்யதே – வைராக்யம்
என்றழைக்கப்படுகின்றது.
कामस्य विजयोपायं सूक्ष्मं वक्ष्यमहं सताम् ।
संकल्पस्य परित्याग उपायः सुलभो मतः ॥ 23 ॥
இந்த
ஸ்லோகம் வைராக்யத்தை எப்படி அடைவது என்பதை உரைக்கிறது.
மனதில்
உருவாகும் ஆசைகளை முளையிலே கிள்ளியெறிந்து விட வேண்டும். அதை விட்டு விட்டு ஆசைகளை நன்கு வளர
விட்டு பின்பு நீக்க முயற்சிப்பது இயலாத காரியமாகும். ஆசையானது சங்கல்பத்திலிருந்து உருவாகுகிறது.
காமாஸ்ய
விஜயோபாயம் வக்ஷ்யாமி – ஆசையை வெல்லும் வழியை சொல்கிறேன்.
ஸூக்ஷூமம்
– இதை புரிந்து கொள்வது மிகவும் கடினம் ஏனென்றால் இது மிக மிக சூட்சுமமானது.
சாதரணமாக இந்த முறையை யாரும் பயன்படுத்துவதில்லை.
ஸதாம் – யாருக்கு
ஆசையை முளையிலே கிள்ளியெறிய வேண்டும் என்ற புத்தி
இல்லாததால், இந்த சங்கல்பமானது
பின்னால் பேராசையாக உருவாகின்றது.
சங்கல்ப
பரித்யாக உபாய:
- மனதில் ஆசையெழும் போது அதை வெட்டியெறிந்து விடுவதுதான்
ஸுலபோ
மத: - இது சுலபமானது, தெளிவானது, உறுதியானது.
சங்கல்பம்
என்பதென்ன?
அதை எப்படி தொடக்கத்திலேயே அழிப்பது?
कामस्य बीजं संकल्पः संकल्पादेव जायते ।
बीजे नष्टेऽङ्कुर इव तस्मिन्नष्टे विनश्यति ॥ 24 ॥
சங்கல்பம்தான்
ஆசையின் விதை.
இதிலிருந்துதான் ஆசை உருவாகி பின்னர் பேராசையாக மாறுகிறது. சங்கல்பம் என்றால் என்ன?
சங்கல்பம் – நேரடி
பொருள் – Resolve by agreed contract.
இந்த
ஸ்லோகத்தின் பொருள்
– ஸம்யக் பாவனா – சரியான பாவனை.
விளக்கம்: மனதில்
எழும் கற்பணையான காட்சி, ஆனந்தம், நாம்
காணுகின்றவற்றின் மீது கற்பணையான வேறொரு பொருளையோ, எண்ணத்தையோ
ஏற்றி வைத்துப் பார்த்தல், நாம் பார்த்த பொருளோ, உயிரினமோ, இடமோ நம் மனதில் நீங்காத இடம் பெற்றிருத்தல்,
அதையே அடிக்கடி சிந்தித்து அதனால் அடையும் ஆனந்த்த்தை கற்பணை பண்ணிக்
கொண்டு அதை அடைந்தே தீர வேண்டும் என்ற உறுதியை உண்டாக்கி கொள்ளுதல்.
எதை
பார்க்கின்றோமோ,
கேட்கின்றோமோ, சுவைக்கின்றோமோ அதை அந்தந்த புலன்கள்
முதன் முதலில் அனுபவிக்கும்போது மனதில் பதிகின்றது. அந்த விஷயத்தை
திரும்ப திரும்ப நாம் நினைத்து பார்க்கும்போது அதுவே உறுதியான ஆசையாக உருவெடுக்கின்றது. இதற்கு விஷய தியானம் என்று பெயர். இவ்வாறு தொடர்ந்து அதையே நினைத்துக்
கொண்டிருக்கும் போது இதை அடைந்தால் என் வாழ்க்கையானது மிக மிக ஆனந்தமாகவும்,
வசதியுடனும் இருக்கும், மன நிறைவுடன் இருப்பேன்
என்ற பொய்யான மன உறுதியை கொடுக்கின்றது.
எனவே அதை அடைவது சரியானதுதான், விலைமதிப்பில்லாத
ஒன்றுதான் என்ற மன உறுதி திடமாகின்றது.
இந்த நிலையில் நான் அது எனக்கு நிச்சயமான தேவை, அதை அடைந்தே தீர வேண்டும் என்ற மன நிலைக்கு செல்கின்றோம். இந்த நிலையை அடையும் எண்ணத்திற்கு
ஷோபன அத்யாஸம் ( கற்பணை காட்சி உறுதிபடும் நிலை)
என்று
அழைப்பர். நாம் முதன் முதலில் பார்த்த விஷயத்தின்
மீது நம் கற்பணையான ஆனந்தத்தை திணித்து, அதை அடைவதால் நான் மிகவும்
மகிழ்ச்சியாக இருப்பேன் என் வாழ்க்கையும் மிக மிக வளமுடனும், வசதியுடனும் இருக்கும் என்று நாமே திடமாக நம்பும் வகையில் மனம் கற்பணை செய்யும். இதனால் அதை அடையா விட்டால் என்னால்
அந்தளவு மகிழ்ச்சியாக இருக்க முடியாது, அது இல்லாமல் என்னால்
நிம்மதியாக் வாழ முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுவோம். அதை அடையும்
வரையில் மனம் அதைப்பற்றியே நினைத்து அலைபாய்ந்து கொண்டிருக்கும், நிம்மதியின்றி வாழ்ந்து கொண்டிருப்போம்.
எனவே
இந்த உலகத்தில் நாம் ஐந்து புலனகள் வழியே அடையும் எதன் மீதும் பற்றுக் கொள்ளாமல் இருக்க
வேண்டும்.
பீஜ
நஷ்டே அங்கிர நஷ்டே
- சங்கல்ப விதை அழிவதினால்தான்,
ஆசைகளும் மனதில் இருக்காது.
ஆனால் அதே சமயத்தில் மோட்சத்தை அடைய வேண்டும் என்ற நல்ல ஆசையை
மட்டும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
संकल्पानुदये हेतुर्यथाभूतार्थदर्शनम ।
अनर्थविन्तनं चाभ्यां नावकाशोऽस्य विद्यते ॥ 25 ॥
மனதில்
முதலில் எழும் எண்ணமானது வலிவற்றதாக இருக்கும். அதையே திரும்ப திரும்ப நினைக்கும்போதுதான் அது வலிவடைந்து திடமான ஆசையாக உருவாகின்றது. அதை முழுவதுமாக ஒரே நேரத்தில் அழிக்க
முடியாது சிறிது சிறிதாகத்தான் அதை அழிக்க முடியும். அவ்வாறு
உறுதியடைந்திருக்கும் ஆசையை எப்படி அழிப்பது? எப்படி அதை வலுவிழக்க செய்ய முடியும்?
என்பதை இந்த ஸ்லோகம் உபாயம் கூறுகிறது.
சங்கல்ப
அனுதயே ஹேது
– மனதில் எழும் எண்ணத்தை தவிர்ப்பதற்கான வழி
யதா
பூதார்த்த தர்ஷனம் –
நம்முடைய புத்தியை சரியாக உபயோகிக்க வேண்டும். எப்படி யானையில் மதத்தை அடக்குவதற்கு
அங்குசத்தை பயன்படுத்துகின்றோமோ அவ்வாறு புத்தியை பயன்படுத்த வேண்டும். பார்க்கும் பொருளையோ, விஷயத்தையோ உள்ளது உள்ளவாறு நோக்க வேண்டும். அவ்வாறில்லாமல்
அதன் மீது நம் கற்பணையை ஏற்றி பார்க்கக் கூடாது. எந்த ஒரு பொருளையும் பார்ப்பதற்கு
முன் நாம் சௌகரியமாகத்தான் இருக்கிறோம். அந்த பொருளை அடைந்தால்தான்
என் வாழ்வு மிக வசதியாக இருக்கும் என்ற கற்பணை நம்மை மேலும் துன்பத்தில் ஆழ்த்துமே
தவிர இன்பத்தையோ, வசதியையோ கொடுக்காது.
இந்த
அறிவுடன் தான் உலக விவகாரத்தில் ஈடுபட வேண்டும்.
எனவே மனதில் முதன் முதலில் எழும் எண்ணத்தை அப்படியே விட்டுவிட்டால்
அது அப்படியே நீரில் தோன்றி மறையும் குமிழ் போன்று மறைந்து விடும். இந்த உலகத்திலுள்ள எந்த பொருளும்
எனக்கு முழு மன நிறைவை கொடுக்கும் சக்தி கிடையாது என்ற உண்மையானது நன்றாக மனதில்,
புத்தியில் பதிய வேண்டும்.
எனவே செயலை தூண்டுவதற்கான கார்ணமாக இருப்பதை நீக்க வேண்டும்,
சங்கல்பமே ஆசையின் ஆணிவேர் என்பதை உறுதியாக மனதில் பதிந்திருக்க வேண்டும்.
ஸோபானாத்யாஸம் – அந்தப்
பொருள்தான் எனக்கு முழு மனநிறைவையும், பாதுகாப்பையும் கொடுக்கும்
என்று நினைப்பதுதான் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இது நம்முடைய
அறிவற்ற புத்தியானது பார்த்த பொருளின் மீது கற்பணையானவற்றை ஏற்றி வைத்து இவ்வாறு நினைக்க
வைக்கிறது. எந்தப் பொருளுக்கும் சுகத்தைக் கொடுக்கும் சக்தி கிடையாது. அது ஆனந்தத்தைக் கொடுக்கும் என்ற
எண்ணத்தை கொடுப்பதற்கு காரணம் அதில் பிரதிபலிக்கும் ஆத்மாவினால்தான். நம்முடைய விவேகத்தினால் இந்த பிரதிபிம்ப ஆனந்தத்தை புரிந்து கொள்ள முடியும்
அதனால இதில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க முடியும். ஆத்மாவை சரியாக புரிந்து கொண்டால்
அதுவே நிலையான ஆனந்தத்தை கொடுக்கக்கூடியது, தவறாக புரிந்து கொண்டால
அதுவே துன்பத்திற்கு காரணமாக அமைந்து விடும்.
அனர்த்த
சிந்தனம்
- எனவே இயற்கையில் எந்தப் பொருளுக்கும் இன்பத்தையோ, துன்பத்தையோ கொடுக்கும் சக்தி கிடையாது. பார்த்த பொருளை
அடைய வேண்டும் அல்லது அதை சார்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் நம்முடைய துன்பத்திற்கு
காரணமாக அமைந்து விடும்.
ஆப்யாம் – இந்த
இரண்டு விதமான குணங்களும்
அஸ்ய
அனவாகஹே வித்யதே
– மேலே கூறிய உண்மையை புத்தியில் நிலை பெற்றால் சங்கல்பமானது அழிக்கப்பட்டு
விடும்.
विवेकजां तीव्रविरक्तिमेव मुक्तेर्निदानं निगदन्ति सन्तः ।
तस्माद्विवेकि विरतिं मुमुक्षुः सम्पादयेत्ताम् प्रथमं प्रयत्नात्
॥ 26 ॥ ९१
தீவிர
வைராக்யமே மோட்சத்தை அடைய உதவும் முக்கியமான தகுதியாக சங்கரர் கூறுகிறார். இதனால்தான் மனதை ஒருமுகப்படுத்தி
செயல்பட முடியும், ஆத்ம விசாரத்தில் ஈடுபடமுடியும்.
விவேக
ஜாம் தீவ்ரவிராக்திமேவ - வைராக்கியமானது
யாராலும் திணிக்கப்படாததாக இருக்க வேண்டும். மனதை அடக்கி அதன்மூலம் வைராக்யத்தை
அடையக்கூடாது, இது இயற்கையாக மெல்ல மெல்ல வரவேண்டும்.
முமுக்ஷூ நிதானம் – இதுவே
ஜீவன் முக்திக்கு காரணமாக இருக்கும்.
தஸ்மாத்
விவேகி முமுக்ஷாத்
– இதனால் விவேகி முமுக்ஷூவாக மாற முடியும்.
தாம்
விராத்திம் சம்பாதயேத்
– அடைந்த வைராக்கியத்தை போற்றி பாதுகாக்க வேண்டும்.
பிரதமம்
ப்ரயத்னாத்
– முதலில் முயற்சி செய்து அடைய வேண்டும்.
அநித்ய
சுகமானது நம் அனுபவத்தில் இருக்கிறது. அதை அடையும் வழிகளும் தெரிகிறது.
அதை எவ்வாறோ அடைந்து இன்பமாக இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருத்தல்,
மற்றவர்களும் அவ்வாறேதான் இருக்கிறார்கள் என்று நினைக்கின்றோம். அவித்யாவினால் சுகம் போன்று தெரிவதை
அடைவதில் எந்த வித கஷ்டமும் இல்லை.
ஆனால் பிரஹ்ம ஞானத்தினால் நிலையான சுகத்தை அடையலாம் என்று தெரிகிறது
ஆனால் அதை அடைவது மிக கடினம் என்று விட்டு விடுகின்றோம்.
அனைவரும்
துன்பத்தை தீர்ப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். அதற்கு இரண்டு வழிகளை அறிந்திருக்கின்றோம்.
1. ஆத்ம ஞானத்தை அடைதல், 2. பரிகாரங்கள் மூலம்
துன்பத்தை தீர்த்து கொள்வது. இரண்டாவது வழியினால அடையும் பலன் அநித்யமானது என்று புரிந்து கொள்வதில்லை. நிலையான வழியில் துன்பத்தை நீக்கி
கொள்ள உதவும் ஆத்ம ஞானத்தை யாரும் நாடுவதில்லை.
விவேகத்தினால்
உலகத்தின் அநித்யத்வத்தை நன்றாக புரிந்து கொண்டு ஆத்ம ஞானத்தை தவிர வேறெதற்கும் ஆசைப்படாமலிருத்தல். இது தீவிர வைராக்யத்தின் மூலம்தான்
முடியும்.
शमो दमस्तितिक्षोपरतिः श्रद्धा ततः परम् ।
समाधानमिति प्रोक्तं षडेवैते शमादयः ॥ 27 ॥
இந்த
மந்திரம் சமாதி ஷட்க ஸம்பத்தியை பற்றி உரைக்கிறது
சம, தம,
திதிக்ஷா, உபரதி,
ஸ்ரத்தா மற்றும் சமாதானம் என்ற இந்த ஆறு வகையான பண்புகள்தான் சமாதி என்று
கூறப்படுகிறது.
சம : மன ஒழுக்கம்,
நெறிப்படுத்துதல்
தம : அனைத்து
இந்திரியங்களையும் அமைதிப்படுத்தி வைத்தல் அல்லது நெறிபடுத்தி வைத்தல்
திதிக்ஷ
– சகிப்புத்தன்மை, இருமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்.
Forbearance,
physical and mental immunity to withstand any tough condition.
உபரதி
– freedom
from stress, relaxed mind, inner withdrawal
சிரத்தை - faith in the validity of teaching Guru and
Shastra
சமாதானம் - Focusing capacity
– மன ஒருமுகப்படுத்துதல்
Shama definition (verses 28 – 54 )
एकवृत्त्यैव मनसः स्वलक्ष्ये नियतस्थितिः ।
शम इद्युच्यते सद्भिः शमलक्षनवेदिभिः ॥ 28 ॥
சமஹ – எப்பொழுதும் மன அமைதியாக வைத்திருக்கும் நிலை, நெறிபடுத்தி வைத்திருத்தல். எப்பொழுதும் அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதை ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும் என்ற ஒரே லட்சியத்தில் வைத்திருத்தல் அதிலேயே நிலைத்திருத்தல்.
அனைத்து மனிதர்களும் நிலையான சுகத்தையும், பாதுகாப்பையும் தெரிந்தோ தெரியாமலோ தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.
ஸ்வலக்ஷயே – இறுதியான லட்சியம் ( மோக்ஷம்)
ஏகவ்ருத்தி – எல்லா எண்ணங்களும் மோக்ஷத்தை அடைய வேண்டும் என்ற லட்சியத்திலேயே இருக்க வேண்டும்.
சமலக்ஷனவேதிபி: - இவ்வாறு சான்றோர்கள் கூறுகிறார்கள்.
Explaining how to achieve shama, method of achieving
shama
Method-1
प्राच्योदीच्याङ्गसद्भावे शमः सिद्धयति नानयथा ।
तीव्रा विरक्तिः प्राच्याङ्गमुदीच्याङ्गं दमादयः ॥ 29 ॥
ஞானத்தை
அடைவதற்கு தேவையான தகுதிகளான சம, தம போன்றவைகள் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. உடல் நலமும் மனமும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. விவேகம், வைராக்கியத்தின்
உதவிக் கொண்டுதான் இந்த தகுதிகளை அடைய முடியும்.
ப்ராச்யா – விவேக,
வைராக்கியம்
உதிச்யாங்கம் – தம,
திதிக்ஷா, உபரம,
சிரத்தை, சமாதானம் மற்றும் முமுக்ஷூ
ஸத்
பாவே – எல்லா தகுதிகளையும் அடைந்தால்தான்.
சமஹ
ஸித்தியதி
– சமம் என்ற தகுதியை அடைந்திடலாம்
ந
அன்யதா –
வேறெந்த வகையிலும் அடைந்திட முடியாது.
தீவ்ரா
விரக்திஹி ப்ராச்யாங்கம்
– தீவிர வைராக்கியம், விவேகத்தை அடைந்தாக வேண்டும்.
தமாயத
உதிச்யாங்கம்
– தம போன்ற தகுதிகளும் தேவை.
Method-2
कामः क्रोधश्र्च लॊभशच मदॊ मॊहश्र्च मत्सरः ।
न जिताः षडिभे येन तस्य शान्तिर्न सिद्धयति ॥ 30 ॥
அனைவரும்
நற்பண்புகளை கொண்டிருக்க வேண்டும். அறவழியில் வாழ்ந்திட வேண்டும்.
அதர்மமான முறையில் வாழ்ந்தால் என்றென்றும் மன அமைதி கிடைக்காது. தர்ம வழியில் வாழும் போது செல்வம்,
வசதிகள் அனைத்தும் சென்றாலும் மன அமைதி அப்படியே இருக்கும். எனவே நற்பண்புகள் முழு மன அமைதிக்கு
உத்தரவாதம் அளிக்கிறது. ஒவ்வொருவரும் ஆறுவகையான தீய குணங்களை
விட்டுவிட வேண்டும். இவைகளை ஆறுவகையான எதிரிகள் அவைகள் நமக்குள்ளே இருந்து கொண்டு நம்மை துயரத்தில்
ஆழ்த்திவிடும். அவைகள் காம, குரோதம்,
லோபம், மதம், மோகம்,
மாச்சர்யம்.
1.
காமம் என்பது ஆசையைக் குறிக்கிறது. உலகில்
நாம் காண்கின்ற பொருட்கள் சுகம் கொடுக்கும் என்று நினைத்து அதனை அடைய வேண்டும் என்று
எண்ணமே ஆசை.
2.
க்ரோதம் – கோபம்.
3.
லோபம் – பிறர்க்கு பகிர்ந்து கொடுக்கும்
பண்பு இல்லாமை,
4.
மதம் – செருக்கு
5.
மோகம் – நாம் அடைய ஆசை கொண்ட பொருட்கள்,
விஷயங்கள் சுகத்தை கொடுக்கும் என்று மனம் மயங்கி இருத்தல்
6.
மாச்சர்யம் – மற்றவர்களை விட எல்லா விஷயத்டதிலும்
நான்தான் உயர்ந்திருக்க வேண்டும் என்று நினைத்தல்
இந்த
ஆறு வகையான தீய குணங்கள் நம்மை நெருங்காமல் இருக்குமாறு நாம் எப்பொழுதும் விழிப்புடன்
இருக்க வேண்டும்.
இவைகள் முழுவதுமாக நீக்கிவிட முடியாது ஆனால் அவைகளினால் பாதிக்கப்படாமல்
இருக்க வேண்டும். மோகத்தை
முழுமையாக நீக்கிவிட முடியும். மற்ற தீய குணங்களை நம்மை பாதிக்காதவாறு பாதுகாத்து கொள்ளலாம். இதை மூன்று வழிகளினால் செயல்படுத்தலாம்.
1.
இவைகள் நீதிக்கு புறம்பானவை, அதர்ம
வழியில் நம்மை ஈடுபடுத்தும் என்ற எச்சரிக்கையை மனதிற்கு அளித்தல்
2.
குறுகிய மனப்பான்மையையுடையவனாக நம்மை மாற்றி விடும்
என்ற எச்சரிக்கை.
3.
ஒவ்வொரு தீய குணமும் என் மனதை துயரத்தில் ஆழ்த்திவிடும்
சக்தியை உடையது என்ற அறிவு.
இக்குணங்களினால் தூண்டப்பட்டு எடுக்கும் முடிவுகள், செய்யும் செயல்கள் தோல்வியடைந்தால் அது நம் மனதை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி
விடும். அந்த தோல்வியை அலட்சியபடுத்தி விட வேண்டும் அல்லது தவிர்த்து
விட வேண்டும்.
இந்த
மூன்று வகையான பாதுகாப்பு முறையை வளர்த்து கொள்வதற்கு ஐந்து வகையான வழிகள் உள்ளது. அவைகள்
1.
விவேகம் – தர்க்கத்தின் உதவி கொண்டு இந்த
நற்பண்புகள் இருப்பதனால் உள்ள விளைவும், இல்லாததினால் உள்ள விளைவும்
எண்ணிப்பார்த்து தெளிவடைதல்
2.
சத்சங்கம் – நற்பண்புகள் உடையவர்களுடைய நட்பு
நம்மையறியாமலே நம்மிடமும் வந்து விடும்.
3.
சங்கல்பம் : நமக்கு நாமே இந்த பண்புகளை வளர்த்து
கொள்ள வேண்டும் என்ற உறுதியான முடிவை மனதுக்குள் திரும்ப திரும்ப செலுத்த வேண்டும். இந்த நேரத்தில் வரும் எதிர்மறையான
எண்ணத்தை தவிர்த்து விட வேண்டும்.
4.
பிரார்த்தனை – இறைவனிடம் வேண்டுதல்
5.
பிரதிபக்ஷபாவனா – எப்பொழுது
தீய எண்ணங்கள் வந்தாலும் அதற்கு எதிர்மறையான நல்ல எண்ணங்களை நினைக்க வேண்டும்.
येन नारधितो देवो यस्य नो कुर्वनुग्रहः ।
न वश्यं हृदयं यस्य तस्य शान्तिर्न सिद्धयति ॥ 31 ॥
பல
எதிர்பாராததும்,
கட்டுப்படுத்த முடியாததுமான விஷயங்கல் நம் மனதை துயரப்படுத்திவிடும்.
இவைகளில் சிலவற்றைதான் நம் முயற்சி கொண்டு மாற்றி அமைக்க முடியும் அல்லது
தவிர்க்க முடியும். மற்றவற்றை
இறைவனருளால்தான் தடுக்க முடியும்
யேன
தேவா ந ஆரதிஹி
: இறைவன் அருளில்லாமல் ஒருவனால் முழுமையான மன அமைதியை பெற முடியாது.
யஸ்ய
ந குரு அனுக்ரஹ
– குருவின் ஆசிர்வாதமும், குரு ஆராதனையும் மனதை
நிம்மதியாக வைத்திருக்கும்.
யஸ்ய
ந ஹ்ருதயம் வஷ்யம்
– இவ்வாறு மனதை வசியம் செய்யாமலிருந்தால்
தஸ்ய
ந ஷாந்தி ஸித்தயதி
– மனதிற்கு அமைதி கிடைக்காது.
मनःप्रसादसिद्धयर्थ साधनं श्रूयतां बुधौः ।
मनःप्रसादो यत्सत्त्वे यदभावे न सिद्धयति ॥ 32॥
ஸாதனம்
ஸ்ருயதாம்
– நற்பண்புகள் சிலவற்றை கொடுக்கப்படுகிறது
மன
ப்ரஸாத ஸித்தயர்த
– மனம் நிம்மதியை அடைவதற்கு
புதௌ – அறிவுள்ளவர்கள்
இதை கேட்டு பயனடைவார்கள்.
யத்ஸத்வே
மன ப்ரஸாதஹ
– இந்த நற்பண்புகள் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும்.
யத்
அபாவேத் ந ஸித்தயதி
; இந்த நற்பண்புகள் இல்லாத இடத்தில் மன அமைதி இருக்காது
ब्रह्मचर्यमहिंसा च दया भूतेष्ववक्रुता ।
विषयेष्वतिवैतृष्णयं शौचं दम्भविवर्जनं ॥ 33 ॥ १०५
நற்பண்புகள்
1.
ப்ரம்மச்சர்யம் – வேதவழியில் வாழ்க்கைமுறையில்
வாழ்தல்
2.
அஹிம்சா – எந்த உயிரையும் துன்புறுத்தாமல்
இருத்தல்
3.
தயா பூதஹ – எல்லா உயிர்களிடத்திலும் கருணைக்
காட்டுதல்
4.
அவக்ருதா – நேர்மையாக இருத்தல்
5.
விஷயேஷூ அதி வைத்ருஷ்ணம் – யாரையும்
மனதாலும் உடலாலும் சார்ந்து இல்லாதிருத்தல். சுதந்திரமாக வாழ்தல்
6.
ஸௌசம் – தூய்மையாக இருத்தல்
7.
தம்ப விவர்ஜனம் – தற்பெருமையுடன் இல்லாதிருத்தல்,
புகழ், செல்வம், அறிவு,
திறமை இவைகளை பெரிது படுத்தி தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளுதல்
सत्यं निर्ममता श्तैर्यमभिमानविसर्जनम् ।
ईश्र्वरध्यानपरता ब्रह्मविद्भिः सहस्थितिः ॥ 34 ॥
மேலும்
சில நற்பண்புகள் சொல்லப்படுகிறது.
8.
ஸத்யம் – உண்மை பேசுதல்
9.
நிர்மமதா – எதையும் என்னுடையது என்று உரிமை
கொண்டாமலிருத்தல்
10.
ஸ்தைர்யம் – ஸ்திர பாவஹ – அடைந்த அறிவில் நிலையாக இருத்தல், விடாமுயற்சி
11.
அபிமான விஸர்ஜனம் – அமானித்வம்,
எளிமையாக இருத்தல், நான் அகங்காரமற்ற நிலை
12.
ஈஸ்வர த்யானபரத – சகுண ஈஸ்வர பக்தி,
உபாஸனம்
13.
ப்ரஹ்மவித்தி சஹஸ்திதி – ஸத்ஸங்கம்,
ப்ரஹ்மத்தை நாடுபவர்களின் இடையே இருத்தல்
ज्ञानशास्त्रैकपरता समता सुखदुःखयोः ।
मानानासक्तिरेकान्तशीलता च मुमुक्षुता ॥ 35 ॥
நற்பண்புகளின்
வரிசை தொடர்கிறது.
14.
ஞான சாஸ்த்ரகபரதா – கொஞ்ச
கொஞ்சமாக வேதாந்த சாஸ்திரத்தை படிக்க ஆரம்பிக்க வேண்டும். அதற்கு தேவையான அடிப்படை தகுதிகள்
இருந்தாலும் இல்லாவிட்டாலும் படிப்பதை நிறுத்தக்கூடாது. காலப்போக்கில் அவைகளை அடைந்துவிடலாம்.
15.
ஸமதா – சுக-துக்கங்களில்
ஒரே நிலையில் இருத்தல் – இஷ்ட-அநிஷ்ட உபபத்திஹி
16.
மான அனாசக்தி – புகழுக்கு மயங்காதிருத்தல்,
அதை நினைத்து மனதில் பெருமிதமாக நினைத்தல், மனதுக்குள்
மகிழ்ந்திருத்தல்
17.
ஏகாந்த ஷீலதா – தனிமையிலிருக்க பழக வேண்டும்.
18.
முமுக்ஷூதா – மோக்ஷத்தை அடைய வேண்டும் என்று உறுதியான குறிக்கோள் கொண்டிருக்க வேண்டும்.
यस्यैतद्विद्यते सर्वं तस्य चित्तं प्रसीदति ।
न त्वेतद्धर्मशून्यस्य प्रकारन्तरकोटिभिः ॥ 36 ॥
யஸ்யைதத்வித்யதே
ஸர்வம்: மேலே சொல்லப்பட்ட நற்பண்புகள் எல்லாமும் உடையவன்
தஸ்ய
சித்தம் ப்ரஸீததி
: அவனுடைய மனமானது ஒழுங்குபடுத்தப்பட்டதாகும், மனதில் என்றும் அமைதி இருக்கும்.
ந
த்வேதத்தர்மஷூன்யஸ்ய – நற்பண்புகளில்லாதவனின் மனமானது அமைதியை அடையாது.
ப்ரகாரந்தரகோடிபி: கோடி வகையான
வழிகளில் முயற்சித்தாலும் மன அமைதியை அடைய முடியாது.
स्मरणं दर्शनं स्त्रीणां गुणकर्मानुकीतनम् ।
समीचीनत्वधीस्तासु प्रीतिः संभाषणं मिथः ॥ 37 ॥
सहवासश्र्च संसर्गोऽष्टधा मैथुनं विदुः ।
एतद्विलक्षणं ब्रह्मचर्यं चित्तप्रसादकम् ॥ 38 ॥
மைதுன
விலக்ஷணத்தையே பிரம்மச்சர்யம் என்று அழைக்கப்படுகிறது.
மிதுனம் – ஜோடி,
இரண்டு பொருள் ஒன்று சேர்ந்தது. ஒன்றுகொன்று சேர்ந்தால்தான்
இரண்டும் முழுமையாக இருக்கும். தனித் தனியே இவை முழுமையானதாக
இருக்காது. இந்த உலகில்
எதையோ ஒன்று நம்மை முழுமையானதாக மாற்றிவிடும் என்று நினைக்கும் போது நாமும் அந்தப்
பொருளும் ஜோடியாகி விடுவோம். எனவே அது கிடைக்காமல் என் வாழ்க்கை
முழுமையானதாக இருக்காது என்று மனம் எண்ணி விடுகின்றது. அந்தப்பொருள்
என் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகி விடுகின்றது. அதை அடையும் வரையில் மனம் அமைதியடையாது.
இப்பொழுது அந்த பொருளுக்கு நம்
மன அமைதியை கெடுக்கும் சக்தி இருக்கின்றது ஏனென்றால் அது நமக்கு ஜோடியாக நாம் உறுதியாக்
நினைத்து விட்டோம். உண்மையில்
இப்படி நினைக்காத வரையில் அந்த பொருளுக்கு நம் மன அமைதியை குலைக்கும் சக்தி கிடையாது.
நாம் அதன் மீது கொண்டிருக்கும் ஆசைதான் அதற்கு சக்தியை கொடுக்கின்றது. ஒரு பொருளின் மீது நாம் வைக்கும்
ஆசையானது நம்மை அதனுடன் பந்தப்படுத்தி விடுகிறது. இவ்வாறு அந்தப் பொருளும் நாமும் இணையாவதற்கு
காரணமாக இருக்கும் இடைவிடாமல் அதனால் கிடைக்கும் சுகத்தையே நினைத்துக் கொண்டிருக்கும்
எண்ணமே மைதுனம் என்று அழைக்கப்படுகின்றது. பார்த்த ஒரு பொருளின்
மீது எற்படுகின்ற இந்த எண்ணங்களின் தொடர்ச்சியான மாறுபாடே மைதுனம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த
மைதுனத்தை நீக்கி வாழும் வாழ்க்கை முறையையே பிரம்மச்சர்யம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த
மைதுனம் எந்தெந்த வழிகளில் நம்மை செய்ய வைக்கின்றது என்பதை பார்ப்போம். எந்த ஒன்றும் அதை பார்த்த உடனேயே
ஆசையை ஏற்படுத்துவதில்லை
சிறிது
சிறிதாகத்தான் நம்மை மைதுன நிலைக்கு கொண்டு செல்லும் அதுவும் நம்முடைய ஆதரவோடுத்தான்
இது நடக்கும். இது முதலில் ஞான இந்திரியங்களின்
செயல்களிலிருந்து ஆரம்பிக்கும். முதன்முறையாக அனுபவம் சம்பவிக்கும்போது ஒன்றும் நடப்பதில்லை.
1.
தர்ஷணம் - ஞானேந்திரியங்கள் விஷயங்களோடு
அபிமானிக்கும் போது மனம் அதனோடு இருந்து அந்த விஷயத்தை கிரகிக்கின்றது.
2. ஸ்மரணம் – மனதிலிருந்து
அந்த விஷயம் மறைந்து விட்டால் ஒன்றும் நடக்காது. ஆனால் பூர்வஜன்ம கர்ம பலனாக அது மனதை கவர்ந்து இழுத்து விட்டால் அது
தொடர்ந்து மனதில் தங்கி விடுகின்றது.
3. குணகர்ம அனுகீர்த்தனம்
– அந்த விஷயத்தை பற்றி திரும்ப திரும்ப பேசுதல்,
4. ஸோபனாத்யாஸம் - அதாவது
அதனுடைய உயர்வையும், அதில் கிடைக்கும் சுகத்தையும், அதனால் தன்னுடைய வாழ்க்கையில் அடையப்போகும் உயர்வைப் பற்றியும் பேசிக் கொண்டிருத்தல்
5. ப்ரீதிஹி – அந்த
விஷயத்தில் ஆசை கொள்ளுதல், தீவிரமான உறவு வைத்துக் கொள்ளுதல்
6. ஸ்ம்பாஷனம் - அதுவே மனிதர்களாக இருக்கும்போது உரையாடல்
ஆரம்பிக்கும். இது அவர்களிடத்தில்
உள்ள நட்பை வளர்த்துக் கொள்ளவும், நெருங்கிய உறவை வளர்த்துக்
கொள்ளவும் இந்த உரையாடல் பயன்படுகிறது.
இது வெறும் பேச்சாகத்தான் இருக்கும், நேரம்
போவதும் தெரியாது, போனாலும் கவலையில்லை, பொதுவாக தனிமையில்தான் இருக்கும்.
7. சகவாஸஸ்ய – அதனை
பார்க்க முடியாவிட்டால் மனம் பரபரப்பாகி விடும், வேதனை அடையும்,
அதனோடு இல்லாமை வருத்தத்தை கொடுக்க ஆரம்பித்து விடும். அது வாழ்க்கைக்கு மிக அவசியமானதாகி
விடும். என்னுடன் எப்போதும்
இருக்க வேண்டும் என்ற ஆசை அதிகரித்து விடும்.
8. ஸம்ஸர்க – அந்த
பொருளானது எப்போதும் என்னுடனேயே இருக்க வேண்டும், என்ற உறுதியான
திடமான ஆசை புத்தியிலும் தோன்றிவிடும்.
அது எனக்கு மட்டுமே சொந்தமானதாக இருக்க வேண்டும். இந்த உறுதியான ஆசையானது பல வழிகளில்
வெளிப்படும். அதை விலைக் கொடுத்து வாங்கி அதற்கு உரிமையாளனாக
ஆகுதல், அதனை புதிய உறவு மூலம் தனக்கு சொந்தமாக்கி கொள்ளுதல்
போன்ற வழிகளில் வெளிப்படும்
பிரம்மச்சாரிகள் மிகவும் கவனமாக இருந்து இந்த மைதுனத்தை விட்டு விலகி வாழ வேண்டும். சாஸ்திரம் நல்ல சகவாசத்தை இதற்கு உபாயமாக கூறுகிறது. மேலும் எந்தப் பொருளோடும், மனிதர்களோடும் உறவை வளர்க்க கூடாது என்றும் எச்சரிக்கிறது.
ஏதத் விலக்ஷணம் பிரம்மச்சர்யம் – இந்த எட்டு வகையான மைதுனங்களிலிருந்து விலகி வாழ வேண்டும். ( குரு, சாஸ்திரம், ஈஸ்வரன் இவர்களைத் தவிர வேறெவரிடமும் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது)
சித்த ப்ரசாதகம் – மனதில் எதிலும் பற்று குறைய அமைதி நிலைக்கும்
சங்க சம்சார பந்தம் – பற்று, உறவு இருக்குமிடத்தில் அமைதி இருக்காது, நம்மை என்றென்றும் சுக-துக்கத்தில் (சம்சாரத்தில்) வைத்திருக்கும்.,
अहिंसा वङ्मनः कायैः प्राणिमात्राप्रपीडनम् ।
स्वात्मवत्सर्वभूतेषु कायेन मनसा गिरा ॥ 39 ॥ १११
அஹிம்ஸா
ப்ராணிமாத்ர அப்ரபீடனம் – எந்த ஒரு உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருத்தல். உடலாலும், சொல்லாலும்,
மனதாலும் யாரையும் துன்புறுத்தாமல் இருக்க வேண்டும். அப்ரபீடனம் என்ற சொல்லுக்கு பொருள் செய்யாதிருத்தல். வன்முறையை கடைசி ஆயுதமாகத்தான் எடுக்க
வேண்டும்.
ஸ்வாத்மவத்
ஸர்வேபூதேஷூ
– அனைத்து உயிர்களையும் தன்னைப்போல் பாவிக்க வேண்டும்.
மற்றவர்களை
துன்புறுத்தும் வகையில் இருக்கும் எந்த தண்டனையையும் பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே எந்த தண்டனையையும் கொடுப்பதற்கு
முன் அதன் பக்க விளைவுகளை சிந்தித்து பார்த்து பிறகுதான் கொடுக்க வேண்டும்.
अनुकंपा दया सैव प्रोक्ता वेदन्तवेदिभि: ।
करणत्रितयष्वेकरूपताऽवक्रता मता ॥ 40 ॥
அனுகம்பா
தயா
– மற்ற ஜீவராசிகளிடம் கருணை காட்டுதல், மற்ற உயிர்களிடத்திலும்
பரிவுடன் இருத்தல், எந்த ஒரு விஷயத்தையும் சம்பந்த-பட்டவர்களின் நிலையிலிருந்து பார்த்தல்.
நம்மை
எப்படி கவனித்துக் கொள்கிறோமோ அதேபோன்று மற்றவர்களையும் கவனிக்க வேண்டும். சொல்லாலும்,
மனதாலும், உடலாலும் எல்லா உயிர்களிடத்தும் மென்மையாக,
கனிவாக, கருணையாக இருக்க வேண்டும். யாரையும் காயப்படுத்த கூடாது என்பதுதான்
முதன்மையான குறிக்கோள். மற்றவர்களிடம் கருணையோடு நடந்து கொள்ளும்போது அவர்கள் மனம் அமைதியடையும். சாது, சந்நியாசிகளிடம்
இருக்க வேண்டிய முக்கியமாண குணம் இது.
வேதாந்த மாணவனிடத்தில் இருக்க வேண்டிய மிக முக்கியமான குணம்.
அவக்ருதா – நேர்மையாக
இருத்தல், மூன்று கரணங்களாலும் இவ்வாறு இருக்க வேண்டும்.
அனைத்து இந்திரியங்களும் ஒன்றோடொன்று இணைந்து அமைதியாக செயல்பட வேண்டும்.
அப்படி இல்லாமல் முரண்பாடாக செயல்பட்டால் துயரத்தில் நம்மை ஆழ்த்திவிடும். அது நம்முடைய நடத்தையையே மாற்றிவிடும். நாம் நேர்மையாகவும், நற்பண்புகளும் இல்லாமலிருந்தால் அது நம்மை எல்லா நிலையிலும் துன்பத்தை கொடுக்கும்,
நம்மை கீழான நிலைக்கு தள்ளி விடும்.
ஆகையால்
மனம் மிகவும் மென்மையாகவும், கவனத்துடனும் வைத்திருக்க வேண்டும் அப்போதுதான்
அது நம்மை இந்த நற்பண்புகளுடன் வைத்திருக்கும்.
No comments:
Post a Comment