சர்வ
வேதாந்த சித்தாந்த ஸார ஸங்கிரஹம் –
பகுதி-4
ஸ்வாமி பரமார்த்தானந்தா விளக்கம்
साधनेष्वपि सर्वेषु तितिक्षोत्तमसाधनम् ।
यत्र विघ्नाः पलायन्ते दैविका अपि भौतिका: ॥ 61 ॥
சகிப்புதன்மையில்லாததினால்
மனம் சஞ்சலமடைகிறது,
அமைதியற்று இருக்கும்.
இந்த நிலையே வேதாந்த விசாரத்திற்கு தடையாக இருக்கும்.
யத்ர
விக்னா பலாயந்தே - திதிக்ஷா நமது
இயல்பான குணமாகிவிட்டால் நமது ஆன்மீக லட்சியத்தை அடைவதற்கு எதுவுமே தடையாக இருக்காது.
தைவிக
அபி பௌதிகா
– மூன்று வழிகளில் வரும் தடைகள்
ஸர்வேஷு
ஸாதனேஹி –
மோட்சத்தை அடைய உதவும் சாதனங்களில்
திதிக்ஷா உத்தம
ஸாதனம்
– திதிக்ஷாதான் மேலான சாதனமாக கருதப்படுகிறது.
तस्मान्मुमुक्षोरधिका तितिक्षा संपादनीयेप्सितकार्यसिद्धयै ।
तीव्रा मुमुक्षा च महत्युपेक्षा चोभे तितिक्षासहकारिकारणम् ॥
62 ॥
நம்முடைய
ஆன்மீக முயற்சிக்கு வரும் தடைகளையெல்லாம் திதிக்ஷாவை வளர்த்துக் கொள்வது
மூலம் நீங்கி விடும்.
ஸம்பாதனீயே
அதிகா
– திதிக்ஷாவை அதிக அளவில் வளர்த்து கொள்ள வேண்டும்.
சகிப்புத்தன்மையை
நன்கு வளர்த்துக் கொள்வதினால் நம்முடைய புருஷார்தத்தை அடைவதில் எந்தவித தடையும் இருக்காது.
தீவிர
முமுக்ஷா ச மஹத்யுபேக்ஷா – பிரஹ்ம ஞானத்தை
அடைய வேண்டும் என்ற உறுதியான முயற்சி, தீவிர வைராக்கியம் இவையிரண்டும்
முக்கியமான கருவியாக இருந்து வெற்றிகரமாக திதிக்ஷாவை அடைய வைக்கிறது.
तस्मात्तितिक्षया सोढवा तत्तद्दुःखमुपागतम् ।
कुर्याच्छक्त्यनुरूपेण श्रवणादि शनैः शनैः । 63 ॥
துக்கம் – துயரம்;
உபாகதம்
- பிராரப்த கர்ம பலனாக
நம்முடைய
பிராரப்த கர்ம பலனின் விளைவாகத்தான் நாம் சுக-துக்கங்களை அனுபவிக்கின்றோம்.
இதற்கு யாரும் பொறுப்புக் கிடையாது, கடவுள்கூட
இதற்கு பொறுப்பில்லை. இதை நன்கு புரிந்து கொண்டால் நாம் யாரையும் குறை சொல்ல மாட்டோம். இந்த பலன்களை நாம் அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். இவைகளை அனுபவிக்கும்போது மனம் ஒரே
நிலையில் இருக்க வேண்டும். துன்பம் வரும்போது கஷ்டப்படாமல் அதை பொறுத்துக் கொண்டும், இன்பம் வரும்போது மகிழ்ச்சியடையாமல் அமைதியாகவும் இருக்க வேண்டும். நமக்கு வரும் இன்பம், துன்பங்களுக்கு கிரகங்களும் காரணமில்லை. எனவே துன்பம்
வரும்போது இதை நினைவில் கொண்டு நம் மனநிலையில் மாற்றம் எதுவுமில்லாமல் இருக்க வேண்டும். திதிக்ஷாவினால்
துன்பத்தை தீர்க்க எடுக்கும் பிராயசித்த கர்மத்தை நாட மாட்டோம், அதனால் செலவழிக்கும் காலமும் மிச்சமாகும். இதனால் நம் மனம் வருத்தப்படாமல்,
அமைதியாக இருக்கும்.
இந்த மனநிலையில் நம் சிரவணம் நன்கு செய்ய முடியும். அதன் விளைவாக நம்முடைய மோட்ச லட்சியத்தை அடையும் பயணத்தில் நல்ல முன்னேற்றம்
கிடைக்கும்.
उपरमयति कर्माणीत्य्परतिशब्देन कथ्यते न्यासः ।
न्यासेनहि सर्वेषां श्रुत्या प्रोक्तो विकर्मणां त्यागः ॥ 64 ॥
உபரம – ஸ்வதர்ம
அனுஷ்டானம் – நம்முடைய அன்றாட செயல்கள் ஆன்மீக அடிப்படையில் இருக்க
வேண்டும், அப்போதுதான் மனத்தூய்மை அடைய முடியும். இது சந்நியாஸ ஆசிரமத்திற்கு செல்வதையும்
குறிக்கின்றது.
ஞான-கர்ம ஸமுச்சய
விசாரம்:
இந்த
தத்துவத்தின்படி பிரஹ்ம ஞானம் மட்டும் மோட்சத்தைக் கொடுக்காது. பல கஷ்டங்களின் நடுவே விடாமல் சிரத்தையோடு
கர்ம காண்டத்தில் உபதேசிக்கப்பட்ட கர்மத்தை செய்ததன் பலனாக அடையும் சிறப்பு புண்ணியத்தின்
உதவியோடு இந்த பிரஹ்ம ஞானம் உறுதியடைந்து மோட்சத்தை அடைய முடியும். இந்த புண்ணியமும் வேதாந்த ஞானமும்
இணைந்துதான் மோட்சத்தை கொடுக்கும்.
இதுவே ஞான-கர்ம ஸமுச்சயம் என்று கூறப்படும்.
சங்கரர்
இந்த வாதத்தை ஒப்புக் கொள்ளாமல் வேதாந்த ஞானத்தினால் மட்டும்தான் ஒருவன் மோட்சத்தை
அடைய முடியும் என்று உறுதியுடன் கூறுகிறார். கர்ம காண்டத்தின் மூலம் மனம் தூய்மையை மட்டும்தான் அடைய முடியும். மனத்தூய்மையை அடைந்து விட்டால் வேதாந்த
ஞானத்திற்கு கர்ம காண்டமே தேவையில்லை.
பூர்வபக்ஷி
– கர்ம காண்டத்தை விட்டுவிட்டால் ப்ரத்யஹாரம் என்ற பாவம் வந்து விடாதா?
பதில்: மனத்தூய்மை
அடைந்து விட்டால் இந்த பாவம் நம்மை வந்தடையாது.
உபநயனம் – இனிமேல்
நான் கர்ம காண்ட்த்தில் பரிந்துரைக்கப்பட்ட வைதீக கர்மங்களை விடாமல் செய்வேன் என்று
உறுதி கூறுகின்றோம்.
சந்நியாசம் – இதை மேற்கொள்ளும்போது
அந்த உறுதியிலிருந்து விலகி விடுகின்றோம். இதனால் வைதீக கர்மங்களை
செய்யாவிட்டால் வரும் ப்ரத்யஹாரம் என்கின்ற தோஷம் நம்மை வந்து சேராது.
மந்திர
விளக்கம்
உபரதி
ந்யாஸஹ ஷப்தேன கத்யதே
– உபரதி என்பது வைதீக கர்மங்களை துறப்பதை குறிக்கின்றது.
ஸர்வேஷாம்
கர்மணாம் த்யாகஹ –
அனைத்துவிதமான கர்மங்களையும் விட்டுவிட வேண்டும்.
ஸ்ருத்ய
ப்ரோக்தஹ
– வேதமே
இதை உரைக்கின்றது.
விகர்மணாம்
– இவைகளெல்லாம் வேதாந்தத்தை படிப்பதற்கேற்ற சூழ்நிலையை கொடுக்காது. நற்பண்புகளையும், தியானத்தையும் விட்டுவிடக்கூடாது.
வேதபாராயணத்தை மேற்கொள்வதையும் விட்டு விடக்கூடாது.
कर्मणा साद्धयमानस्यानित्यत्वं श्रूयते यतः ।
कर्मणानेन किं नित्यफलेप्सोः प्रमार्थिनः ॥ 65 ॥
கர்மணா
ஸாத்தயமானஸ்யானித்யத்வம்: எந்தவிதமான செயல்கள் மூலம் பலனை அடைந்தாலும்
அவைகள் நிலையற்றவை.
ஸ்ரூயதே
யதஹ –
இதை வேதமே கூறுகிறது.
நித்யபலேப்ஸோ
- நிலையான மன அமைதியை தேடும் மனிதர்கள்
ப்ரமார்தினஹ
– பரம
புருஷார்த்தமான மோட்சத்தை அடைய
கிம்
கர்மணானேன
– எதற்காக நிலையற்ற பலனை தரும் கர்மத்தை செய்ய வேண்டும்.
வைராக்கியமுள்ள
மனதே அதன் தூய்மையை காட்டுகின்றது.
எப்படி
வைராக்கியத்தை புரிந்து கொள்ள முடியும்?
எப்பொழுது
ஒருவன் வேதாந்தம்தான் நமக்கு தேவையானது, பொருத்தமானது மற்றவைகளெல்லாம் தேவையற்றது,
பொருத்தமற்றது என்று உணர்கின்றானோ அதுவே அவன் வைராக்கியத்தை அடைந்துவிட்டான்
என்று உணர்த்துகின்றது.
·
எந்த ஒரு செயலும் முடிவான பலனைத்தான் கொடுக்க முடியும்
·
கர்ம பலனானது காலத்தாலும், தேசத்தாலும்
வரையறுக்கப்பட்டது
இது
வேதத்தின் உபதேசம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே நிலையற்ற பலனை தரக்கூடிய இந்த வைதீக கர்மங்கள் மோட்சத்தை
அடைய நினைக்கும் சாதகனுக்கு எப்படி பயன்படும். அவன் தேடுவது நிலையான
பலனைத் தரக்கூடிய பிரஹ்ம ஞானம். இந்த வைதீக கர்மங்கL மனத்தூய்மை அடைய மட்டும்தான் பயன்படும்.
उत्पाद्यमाप्यं संस्कार्य विकार्यं परिगण्यते ।
चतुविधं कर्मसाध्यं फलं नान्यदितः परम् ॥ 66 ॥
இந்த
ஸ்லோகத்தில் கர்மத்தால் என்ன கொடுக்க முடியாது என்பதை விளக்குகிறது.
அனைத்து
கர்மங்களும் நான்கு வகையாக பிரிக்கப்படுகின்றது.
அவைகள்,
1.
அடைய வேண்டியதை அடைதல்
2.
உருவாக்க முடிவதை புதியதாக உருவாக்குதல்
3.
மென்மேலும் புதுப்பிக்க முடிகின்றதை புதுப்பித்தல்
4.
மாற்றம் செய்ய முடிவதை மாற்றுதல்
பிரஹ்ம
ஞானத்தை அடைய முயற்சிக்கும் சாதகர்களின் குறிக்கோளான அந்த பிரஹ்ம ஞானம் மேலே கூறப்பட்ட
நான்கு விதங்களில் அடங்காது. எனவே
கர்மத்தால் இந்த ஞானத்தை அடைய முடியாது என்பது உறுதியாகின்றது. பிரஹ்மத்தின் லக்ஷணமே இதை உறுதி செய்யும். அதாவது இதை புதியதாக அடையத்தேவையில்லை
ஏனெனில் இது ஏற்கனவே அடையப்பட்டது.
இது அவயங்கள் அற்றது, நிலையானது,
குணங்களற்றது. இந்த தன்மைகளால் மற்ற மூன்றும் தேவையற்றதாகி
விடுகின்றது
नैतदन्यतरं ब्रह्म कदा भवितुमर्हति ।
स्वतःसिद्धं सर्वदाप्तं शुद्धं निर्मलमक्रियम् ॥ 67 ॥
ஸ்வத
ஸித்தம்
– என்றும் இருப்பது,
எல்லா காலத்திலும் இருப்பது, நித்ய வஸ்து.
இது ஸத்தாகவும் (இருத்தல்), சித்தாகவும் (உணர்வுபூர்வம்), ஆனந்த்தத்துடனும்
இருக்கின்றது. எது எக்காலத்திலும்
தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றதோ அதை புதியதாக உருவாக்க முடியாது.
ஸர்வதாப்தம் - எங்கும் நிறைந்திருப்பதாகவும்,
ஏற்கனவே அடையப்பட்டதுமாக இருக்கின்றது. எனவே அதை அடைய தேவையில்லை.
ஸுத்தம்
நிர்மலம் தூய்மையானது, குறைகளற்றது
எனவே புதுப்பிக்க தேவையில்லை.
அக்ரியம் இது நிலையானது, மாற்றங்களற்றது.
எனவே இதை மாற்றி அமைக்க தேவையில்லை.
न चास्य कश्र्चिज्जनितेत्यागमेन निषिध्यते ।
कारणं ब्रह्म तत्तस्माद्ब्रह्म नोत्पाद्यमिष्यते ॥ 68 ।
ஸ்வஸித்தம்
பற்றி இந்த மந்திரம் விவரிக்கிறது.
ந
சாஸ்ய கஸ்சித் ஜனிதே
– பிரஹ்ம்ம் தோன்றுவதற்கு எதுவும் காரணமாக இல்லை,
காரணம்
ப்ரஹ்ம தத்
- அதே
சமயம் அதுவே இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கே காரணமாக இருப்பதாலும் அது ஒரு தோற்றுவிக்கப்பட்ட
பொருளாக இல்லாமல் இருப்பதாலும்
தஸ்மாத்
ப்ரஹ்ம ந உத்பாத்யமிஷ்யதே - அதை புதியதாக தோற்றுவிக்க முடியாது.
आप्त्रप्ययोस्तु भेदश्र्चेदाप्त्रा चाप्यमवाप्यते ।
आप्तृस्वरूपमेवैतदब्रह्म नाप्यं कदाचन ॥ 69 ॥
ஸர்வதா
ஆப்தம்
– இது
எங்கும் வியாபித்திருப்பதால் இதை அடைய வேண்டியதில்லை
இதை
எங்கு சென்றும் அடையத்தேவையில்லை ஏனெனில் நானே பிரஹ்மமாக இருக்கின்றேன்.
பிரயாணம்
செய்பவன்,
சேர வேண்டிய இடம் என்று தனித்தனியே இருந்தால்தால் அடைய வேண்டிய தேவை
ஏற்படும். ஆனால் இங்கே
இரண்டும் ஒன்றாக இருப்பதால் இந்த தேவையே இல்லாமல் போகின்றது.
நாம்
பிரஹ்மன் என்பது தன்னைத்தவிர வேறொன்று அது எங்கேயோ இருப்பதாக கற்பணை செய்து கொண்டிருக்கின்றோம். உண்மையில்
நானே பிரஹ்மன் என்று உணரும்போது நான் எங்கும் சென்று அடையத் தேவையில்லை. நமது லட்சியமே நம்மை அடைவதுதான்,
நானே பிரஹ்மன் என்று உணர்ந்து கொள்வதுதான்.
मलिनस्यैव संस्कारो दर्पणादेरिहेष्यते ।
ओयोमवन्नित्यशुद्धस्य ब्रह्मणो नैव संस्क्रिया ॥ 70 ॥
ஸுத்தம்
நிர்மலம் - ஒரு பொருளை மெருகேற்றுவதற்கு இரண்டு
நிலைகள் உண்டு.
1.
அந்தப் பொருள் அசுத்தமாக இருக்க வேண்டும் (தோஷ
அபாயனம்).
2.
அந்தப்பொருளுடன் வேறொன்றை சேர்க்க வேண்டும்/ (குண
ஆதானம்)
மலினஸ்ய
ஏவ ஸம்ஸ்கார இஷ்யதே
– அழுக்கான பொருளிலிருந்துதான் அதிலுள்ள அழுக்குகளை நீக்க வேண்டியதாக
இருக்கும்.
தர்பணாதேரி – எப்படி
நிலைக்கண்ணாடியில் அசுத்தமாக இருந்தால் அது சுத்தப்படுத்த தேவையோ
ப்ரஹ்மனோ
நித்ய ஸுத்தமஸ்ய - ப்ரஹ்மன் எப்பொழுதும் தூய்மையாக
இருக்கின்றது.
ஸம்ஸ்க்ரியா
ந ஏவ அஸ்தி
– அதனால் அதை தூய்மை படுத்த தேவையில்லை.
केन दुषटेन युज्जयेत वस्तु निर्मलमाक्रियम् ।
यद्योगादागतं दोषं सम्स्कारो विनिवर्तयेत् ॥ 71 ॥
இயற்கையிலே
பிரஹ்மனானது தூய்மையாக இருக்கின்றது ஆனால் அது தூய்மை அற்ற பொருளோடு சேரும்போது தூய்மையற்றதாகி
விடுமல்லவா என்ற கேள்வி எழலாம்.
பதில் : ஒரு பொருள்
மற்ற பொருளோடு சேர வேண்டுமென்றால் அது
முதலில் தான் இருந்த இடத்திலிருந்து நகர வேண்டும் பின்பு அந்தப்பொருளோடு
சேர்ந்து அசுத்தமாக வேண்டும். ஆனால் பிரஹ்மன் நிலையானது எங்கும்
வியாபித்திருப்பது அதனால் அது எங்கேயும் செல்ல தேவையில்லை அதனால் அசுத்தமடைய வாய்ப்பே
இல்லை என்பது தெளிவாகின்றது.
ஸம்ஸ்கார
வினிர்வத்யேத் - அதனால்
இதை புதுப்பிக்க தேவையில்லை.
புண்ணியாஹாவசனம் – நம் வசிக்கும்
வீட்டில் உள்ள தீய சக்திகளை நீக்கி தூய்மையானதாக வைத்துக்கொள்ளுவதற்கு அதற்குரிய மந்திரங்களை
பாராயணம் செய்ய வேண்டும்.
निर्गुणस्य गुणाधानमपि नैवोपपद्यते ।
केवलो निर्गुणश्र्वेति नैर्गुण्यं श्रूयते यतः ॥ 72 ॥
ப்ரஹ்மன்
நிர்குணமாக இருப்பதால் அதனோடு எதையும் சேர்க்க முடியாது.
கேவலோ
நிர்குண ச
- ப்ரஹ்மன் எந்த குணங்களமற்றது.
நைர்குண்யம்
ஸ்ருயதே. – இவ்வாறு
கைவல்ய உபநிஷத்தில் கூறப்பட்டிருக்கின்றது.
அதனால்
ப்ரஹ்மத்தோடு எதையும் சேர்க்க முடியாது. நம்முடைய அறியாமையே அசுத்தமானது. இந்த அறியாமையோடு சேர்ந்து இருப்பதே
இந்த ஜீவன். அறியாமை
ஆத்மாவை அறியாத நிலையில் இருப்பதால் அது ஆத்மாவை அசுத்தமாக்க முடியாது. மேலும் அறியாமையே மித்யாவாக இருப்பதால்
சத்யமான ஆத்மாவோடு சேர முடியாது அதனால் அதை அசுத்தமாக்க முடியாது.
सावयवस्य क्षीरादेर्वस्तुनः परिणामिन ।
येन केन विकारित्वं स्यान्नॊ निश्कर्मवस्तुनः ॥ 73 ॥
ப்ரஹ்மன்
காலத்தையும் தேசத்தையும் கடந்தது, என்றும் இருப்பது, எதுவும்
அதனோடு சேர முடியாது அதனால் அது எந்த மாற்றத்தையும் அடையாதது. அதில் எந்தவிதமான மாற்றமும் செய்ய
முடியாது.
க்ஷீரம் ஸாவயவஹ
- பாலானது கடைசியாக உருவான ஒரு பொருள்
அதில் பல பொருட்கள் உள்ளது.
வஸ்து
ந பரிணாமின
– இந்த மாதிரியான பொருள் பல மாற்றங்களை அடையலாம்,.
ஏன
கேன விகாரித்வம் ஸ்யாத் - அதாவது பாலிலிருந்து தயிர், வெண்ணெய், நெய் என்று பல பொருட்களை மாற்றமடையலாம்.
நிஷ்கர்ம
வஸ்து நஹ
– ஆனால் என்றும் மாறாத்தும், நிலையாக இருப்பதுமான
பிரஹ்மனிடத்தில் எந்த விதமான மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.
निष्कलं निष्क्रियं शान्तं निरवद्यं निरञ्जनम् ।
इत्येव वस्तुनस्तत्त्वं श्रुतियुक्तिव्यवस्थितम् ॥ 74 ॥
சங்கராச்சாரியார்
ஸ்வேதஸ்வர உபநிஷத்திலிருந்து மேற்கோள் காட்டி இதை மேலும் விளக்குகின்றார்.
நிஷ்கலம் – அவயவங்களற்றது,
பூரணமானது
நிஷ்க்ரியம்
– செயலற்றது, மாற்றமடையாதது. காலத்தை கடந்தது
ஷாந்தம்
– அமைதியானது, கர்ம பலன்கள் எதுவும் இல்லாதது.
நிரவத்யம் – தூய்மையானது,
எதனாலும் அசுத்தமாக்க முடியாதது.
நிரஞ்சனம் – அறிவுடையது,
மாயையினால் பாதிக்கப்படாதது
இத்யேவ
வஸ்து ந தத்வம்
– இவைகள்
பிரஹ்மத்தின் உண்மையான ஸ்வரூபம்.
இது
ஸ்ருதியின் மூலமும்,
யுக்தியின் மூலமும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
तस्मान्न कर्मसाध्यत्वं ब्रह्मणॊऽस्ति कुतश्र्चन ।
कर्मसाध्यं त्वनित्यं हि ब्रह्म नित्यं सनातनम ॥ 75 ॥
மேலே
கூறியுள்ள பிரஹ்மத்தின் தன்மைகள் கர்மத்தின் மூலமாக அடைய முடியாது. இதை கர்ம பலனாக என்றும் இருக்க முடியாது. மோட்சமானது காலத்தால் அடையக் கூடிய
ஒரு நிகழ்ச்சி இல்லை அப்படி இருந்தால் அது அநித்ய வஸ்துவாகி விடும் ஆனால் பிரஹ்மனோ
நித்யமானது எனவே அதை காலத்தால் அடைய முடியாது அது ஸனாதனம் என்றும் இருப்பது.
देहादिः क्षीयते लोके यथैवं कर्मणा चितः ।
तथैवामुष्मिको लोकः संचितः पुण्यकर्मणा ॥ 76 ॥
சில
வைதீக கர்மங்களை செய்வதன் மூலம் சுவர்க்கத்தை அடையலாம். அங்கே இன்பம் மட்டும்தான் இருக்கின்றது. அங்கே செல்வதன் நாம் இன்பத்தை மட்டும்
அடையலாம், துன்பம் என்பதே நம்மிடம் வராது. அங்கே செல்வதன் மூலம் நாம் இறவாத
நிலையை அடையலாம். அதுவே மோட்சம் நாம் அடையத்தக்கது. எனவே இதை கர்மத்தின் மூலமே அடைந்துவிடலாம்,
வேதாந்தம் அவசியமில்லை என்று பூர்வமீமாம்ஸிகள் என்று வாதாடுகின்றனர்.
பதில்: வேதம்
இந்த சுவர்க்கமே அநித்யம்தான் என்று கூறுகிறது.
தேஹாதி
லோகே க்ஷீயதே - அங்கே அனுபவிக்கும் யாவும் நிலையற்றவைகள், அழியக்கூடியவைகள்
என்று எடுத்துக் காட்டுகிறது..
கர்மணா
சித்
– இந்த மனித உடல் பூர்வ ஜன்ம பலனகளை அனுபவித்து தீர்ப்பதற்காக நமக்கு
கிடைத்திருக்கிறது.
த்தைவ
அமுக்ஷ்ய லோக – சுவர்க்க லோகத்தில் உள்ள தேவ சரீரங்கள் எல்லாம்
ஸஞ்சித
புண்ய கர்மணா
– பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அடையப்பட்டது.
அவைகளும்
அழிவுக்குட்பட்டது. எவையெல்லாம் உருவாக்கப்பட்டதோ அவையெல்லாம்
அழிவுக்குட்பட்டது என்ற நியதிப்படி இதை புரிந்து கொள்ளலாம்.
அந்த
உலத்திலும் இன்பமும்,
துன்பமும் கல்ந்துதான் இருக்கின்றது. அங்குள்ள தேவர்களும் வெவ்வேறு வகையான
இன்பத்தை அனுபவிக்கின்றார்கள். இவ்வாறு இன்பத்திலே ஏற்றத்தாழ்வுகள் இருப்பதால் அதிகமான இன்பத்தை அடையும் மற்றவர்களை
பார்த்து பொறாமை அடைகின்றார்கள் அதன் விளைவான் அவர்களும் துன்பத்தை அனுபவிக்கின்றார்கள்.
கேள்வி-2 சுவர்க்கத்தை
பற்றி வேதம் ஒரு இடத்தில் ஒரு வகையாக சொல்கிறது, வேறொரு இடத்தில்
வேறு மாதிரி சொல்கிறதே? வேத வாக்கியத்திலேயே முரண்பாடு இருக்கின்றதே?
பதில்-2 இப்படி முரண்பாடு ஏற்படும் இடத்தில் நாம்
தர்க்கத்தை பயன்படுத்தி எது சரியானது என்று முடிவுக்கு வரலாம். சுவர்க்கத்தை அடைதல் என்பது ஒரு கர்மத்தின்
விளைவாகத்தான் வேதம் கூறியிருக்கின்றது.
कृतकत्वमनित्यत्वे हेतुर्जागर्ति सर्वदा ।
तस्मादनित्ये स्वर्गादौ पण्डितः को नु मुह्यति ॥ 77 ॥
சுவர்க்கம்
ஒரு காலத்தில் அடையப்படக்கூடியது, கர்மத்தை செய்வதன் பலனாக அடையக்கூடியதாக இருக்கின்றது.
இந்த தர்க்கத்தின் மூலம் இது நிலையற்றது, அழியக்கூடியது
என்ற முடிவுக்கு வரலாம். இந்த யுக்தியின் மூலம் அடைந்த உண்மையானது எல்லா காலத்திலும் பொருந்தி வரும்
உண்மையாக இருக்கின்றது.
கேள்வி-1- இவ்வாறு
யுக்தியின் மூலம் சுவர்க்கம் நிலையற்றது என்று நிரூபிப்பதின் மூலம் வேதம் நம்மை தவறான
பாதைக்கு அழைத்து செல்கின்றது போல தோன்றுகின்றது. எப்படி வேதம் தவறாக உரைகின்றது என்று
நீங்கள் சொல்வீர்கள்?
பதில்- வேதம்
சுவர்க்கத்தில் என்றும் இருக்கலாம் என்று சொல்வதை சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ள
வேண்டும். இங்கே என்றும்
இருக்கலாம் என்பதை மிக நீண்ட நாள் இருக்கலாம் என்ற அர்த்தத்தைத்தான் எடுத்துக் கொள்ள
வேண்டும். அதனால் கர்மத்தின்
பலனாக அடையும் சுவர்க்கத்தில் இன்பமாக என்றும் இருக்கலாம் என்பதை மிக நீண்ட காலம் வாழலாம்
என்றும் வேதாந்தத்தில் கூறியுள்ள நிலையான இன்பம் பிரஹ்மத்தை அடைதலை நிலையானது என்று
புரிந்து கொள்ள வேண்டும்.,
கேள்வி-2 – மோட்சத்தை கர்மத்தை
செய்து அடைவது கிடையாது,
ஞானத்தினால் அடைவது என்று எடுத்துக்கொண்டால், ஞானத்தை
அடைவதே ஒரு கர்ம்மாகத்தானே இருக்கின்றது. இதுவும் ஒரு நிகழ்வாகத்தானே
இருக்கிறது. அது எப்பொழுதும்
இருக்கின்றதென்றால் எதற்கு வேதாந்தத்தை படிப்பதன் மூலம் அடைய வேண்டும். எனவே மோட்சத்தை அடைவதும் காலத்தால் அடையக்கூடிய ஒரு நிகழ்ச்சிதான்,
அதிலேயும் மாற்றம் இருக்கின்றதே. இதை வைத்துக்கொண்டு பார்க்கும்போது
ஞானம் அடைதலும் ஒரு நிகழ்வுதானே! எவ்வாறு மோட்சம் அடைதல் ஒரு
நிகழ்வாக இல்லையென்று சொல்ல முடியும்?
பதில்-2 –
1.
ஞானம் என்பது காலத்தால் அடைவது கிடையாது. அது அந்த மாதிரி தோன்றினாலும் இது
ஒரு நிகழ்வு கிடையாது. நாம் ஞானம் அடைவது காலத்தால் நடக்கின்ற
ஒரு நிகழ்வு என்று எடுத்துக்கொள்வோம்.
அந்த நேரத்தில் அறியாமல் இருந்த ஒன்று அறியப்படுகின்றது. ஞானம் தெரியாமல் இருந்த ஒன்றை தெரிய
வைத்தால் என்ன வகையான நிகழ்வு நடைபெற்றது? கண்ணுக்கு தெரியாமல்
இருந்த ஒரு பொருள் நமக்கு தெரிய வருகின்றது. இந்த நிகழ்வில் எந்த மாற்றமும் நடைபெறவில்லை
எனவே ஞானம் என்பது ஒரு காலத்தில் நடைபெறும் நிகழ்வு இல்லை என்று நிரூபணமாகின்றது. இங்கே மாற்றம் பார்த்த பொருளில் ஏற்படவில்லை,
பார்க்கும் என்னிடத்தில்தான் ஏற்பட்டது. பார்ப்பதற்கு முன்பு அறியாதவனாக இருந்தேன்
பார்த்த பிறகு அதை அறிந்தவனாகின்றேன்.
ஆனால் இதை நிரூபிக்க முடியாது. எனவே இந்த மாற்றத்தை ஒரு நிகழ்வாக
கருத முடியாது. அதனால
அறிவை அடைவது என்பது ஒரு நிகழ்வாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
2.
எந்த ஒரு நிகழ்வுக்கும் தொடக்க நிலையும் முடிவு
நிலையும் இருக்கும். ஆனால் இந்த அறிவை அடைதல் என்ற நிகழ்வுக்கு
தொடக்க நிலையும் முடிவு நிலையும் சொல்ல முடியாது. ஏனென்றால் இரண்டும் ஒரே சமயத்தில்
நடைபெறுகின்றது. எந்த
ஒரு அனுபவமும் காலத்தில் நடைபெறும் ஒரு நிகழ்வுதான் ஆனால் அறிவை அடைதலை இவ்வாறு எடுத்துக்
கொள்ள முடியாது. எனென்றால்
ஒருவருடைய அனுபவம் மற்றொருவரால் நீக்க முடியும், ஆனால் அடைந்த
அறிவை யாராலும் நீக்க முடியாது. உதாரணமாக இது வாழைப்பழம் என்ற அறிவை யாராலும் மாற்ற முடியாது ஆனால் அதை சுவைப்பதில்
கிடைக்கும் அனுபவம் மனிதனுக்கு மனிதன் மாறுபடலாம். ஞானம் என்பது அறிவு, அனுபவம் என்பது போகம். ஆத்மஞானம் என்பது அறிவை அடைதல் அந்த அறிவு மோட்சத்தை அடையும் முயற்சிக்கு முற்று
புள்ளி வைக்கிறது.
जगद्धेतोस्तु नित्यत्वं सर्वेषामपि संमतम् ।
जगद्धेतुत्वमस्यैव ववदीति श्रुतिर्मुहुः ॥ 78 ॥
நிலையாக
என்றும் இருப்பது என்று ஒன்றிருந்தால் அது இந்த ஜகத்தை தோற்றுவித்த பிரஹ்மனேயாகும். எது காரணமாக இருக்கின்றதோ அது மட்டும்தான்
நிலையாக இருக்கும் அதிலிருந்து உருவாகிய காரியங்கள் யாவுமே அழியக்கூடியவை. களிமண்ணிலிருந்து உருவாகிய விதவிதமான
பானைகள் அழியக்கூடியவை ஆனால் அவைகள் அழிந்தாலும் களிமண் இருந்துகொண்டிருக்கும். அதுப்போல இந்த ஜகத் தோன்ற காரணமாக
இருக்கும் அந்த பரபிரஹ்மன் என்றும் நிலையாக இருக்கும் இந்த ஜகத் அழியக்கூடியதாக் இருக்கின்றது
என்று வேதாந்தம் படித்து ஞானம் அடைந்த எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது.
அஸ்ய
ஏவ ஜகத்
– பிரஹ்மன் மட்டும்தான் ஜகத் தோற்றதிற்கு காரணம்.
இதை
எல்லா உபநிஷத்துக்களும் திரும்ப திரும்ப உரைக்கின்றது. தைத்திரிய உபநிஷத் 3.3. “யதேகவ இமானி பூதா” என்ற மந்திரம் இதை உறுதிபடுத்துகிறது.
ऐतदात्म्यमिदं सर्वं तत्सत्यमिति च श्रुति: ।
अस्यैव नित्यतां ब्रूते जगद्धेतोः सतः स्फुटम् ॥ 79 ॥
சாந்தோக்ய
உபநிஷத் வாக்கியம்
6.8.7 “ஐததாத்ம்யம் இதம் ஸர்வம்” பிரம்மம்தான்
இந்த ஜகத்திற்கு காரணம் உறுதிபட உரைக்கின்றது. எனவே இந்த வேத வாக்கியத்திலிருந்து
பிரஹ்மத்தின் நித்யத்வத்தை புரிந்து கொள்ள முடியும். நீயே அதுவாக இருக்கின்றாய் என்று
ஸ்ருதி உறுதிபட கூறும்போது எப்படி குழப்பம் வரும், சந்தேகம் வரும்.
न कर्मणा न प्रजया धनेनेति स्वयं श्रुति: ।
कर्मणो मॊक्षहेतुत्वं साक्षादेव निषेधति ॥ 80 ॥
கைவல்ய
உபநிஷத் வாக்கியம்
“ ந கர்மணா” எந்தவிதமான கர்மத்தை செய்வதினால்
யாரும் மோட்சத்தை அடைய முடியாது என்று உறுதிபட உரைக்கிறது.
ந
ப்ரஜயா - வாரிசுகளை பெற்று கொள்வதாலும் இதை
அடைய முடியாது.
ந
தனேன
– செல்வத்தை அடைந்தாலும் அதனால் இதை அடைய முடியாது.
இதி
ஸ்வயம் ஸ்ருதி நிஷேததி – இவ்வாறு ஸ்ருதியானது இவைகளால் ஞானத்தை அடைய
முடியாது என்று உரைக்கின்றது.
No comments:
Post a Comment