Saturday, September 13, 2014

சர்வ வேதாந்த சித்தாந்த ஸார ஸங்கிரஹம் – பகுதி-5

சர்வ வேதாந்த சித்தாந்த ஸார ஸங்கிரஹம் – பகுதி-5

ஸ்வாமி பரமார்த்தானந்தா விளக்கம்

ज्ञानादेव तु कैवल्युमिति श्रुत्या निगद्यते ।
ज्ञानस्य मुक्तिहेतुत्वमन्यव्यावृत्तिपूर्वकम् ॥ 81
உபநிஷத் ஞானத்தை தவிர வேறெதெனாலும் சம்சாரத்திலிருந்து விடுதலை அடைய முடியாது என்று கூறுகிறதுஇதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது ஆத்ம ஞானத்தினால் மட்டுமே மோட்சத்தை அடைய முடியும் வேறு எந்த  வழியிலும் இந்த ஞானத்தை அடைய முடியாது.
ஞானாதேவ து கைவல்யம்ஞானத்தில் மட்டும்தான் மோட்சத்தை அடைய முடியும்.

विवेकिनो विरक्तस्य ब्रह्मनित्यत्ववेदिन:
तद्भावेच्छोरनित्यर्थे तत्सामग्ये कुतो रतिः ॥ 82
இதுவரை சொல்லப்பட்ட கருத்துக்களை யாரொருவன் நன்றாக புரிந்து கொண்டும், அவைகள் மனதில் ஆழ பதிந்து அதன்படி நடக்கின்றானோ அவனே சந்நியாஸி ஆவதற்கு தகுதியானவன்.
யாரொருவன் பிரஹ்மன் நித்யம், ஆனந்த ஸ்வரூபம், அபயத்தை அளிக்கக்கூடியது என்ற அறிவை அடைகின்றானோ அவனே முக்தனாக கருதப்படுகின்றான்எனவே நாம் இந்த அறிவை அடைவதற்கு தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும்இந்த உலகம் கொடுக்கும் சுகத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்இந்த உலகத்தில் உள்ள எந்த பொருள் மீதும் ஆசையோ அல்லது அதை அடைந்தே தீர வேண்டும் என்ற பிடிவாதமோ இருக்க கூடாது. இதை எவனொருவன் முறையாக, தொடர்ந்து கடைபிடிக்கின்றானோ அவன் பூரணமானதும், இறுதி குறிக்கோளுமான அந்த மோட்சத்தை அடையும் வழியை நாடி செல்வான்அநித்ய புருஷார்த்தத்தை அடையும் வழிகளிலிருந்து விலகி நித்ய புருஷார்த்தத்தை நோக்கி பயணம் செய்வான்அவனுக்கு உலகிலுள்ள அனைத்து பொருட்களிடத்தும் வைராக்யம் வந்து விடும்.


तस्मादनित्ये स्वर्गादौ साधनत्वेन चोदितम् ।
नित्यं नैमित्तिकं चापि सर्वं कर्म ससाधनं ।
मुमुक्षुणा परित्याज्यं ब्रह्मभावमभिप्सुना ॥ 83
எப்பொழுது ஒருவனுக்கு மோட்சத்தை அடைய வேண்டும் என்ற வைராக்கியம் வந்து விட்டதோ அப்பொழுதே அவன் வைதீக கர்மங்களை செய்வதை விட்டுவிடலாம்அதற்கு பதிலாம வேதாந்த விசாரம், ஆத்ம விசாரம் செய்வதில் ஈடுபட வேண்டும்.
இல்லறத்தில் (கிரகாஸிரமத்தில்) இருப்பவர்கள் பஞ்சமகா யாகத்தை செய்து கொண்டே வேதாந்த சிரவண, மனனம், நிதித்யாஸனத்தை செய்து கொண்டிருக்க வேண்டும்.
முமுக்ஷூனா மோட்சத்தை அடைய வேண்டும் என்ற உறுதியை அடைந்தவர்கள்
ப்ரஹ்மபாவ அபிப்ஸுனாமோட்சத்தை அடைய வேண்டும் என்ற ஆசையை தவிர அனைத்து ஆசைகளையும் துறந்து
பரித்யாஜம் ஸர்வம் காமாவிரும்பினால் அனைத்து வைதீக கர்மங்களை செய்வதை விட்டு விடலாம்.
நித்ய, நைமித்திகம் நித்ய கர்மங்கள், நைமித்திக மற்றும் காம்ய கர்மங்களையும் துறந்து விடலாம்.
இவையல்லாமல் நிஷித்த, பிராயசித்த கர்மங்களையும் விட்டுவிட வேண்டும்மனைவி, மக்கள் மற்றும் செல்வம் அனைத்தையும் விட்டுவிட வேண்டும். இவைகள் அனைத்தும் நிலையற்றவை, இவைகள் கர்மங்களை செய்வதற்கு சாதனமாக இருக்கின்றன.
சந்நியாஸியின் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய குறைக்கப்பட்ட தகுதிகள்:
·         நான் அனுபவிக்கும் அனைத்தும் இறைவனுக்கு சொந்தமானவை என்ற பாவம் இருக்க வேண்டும்,
·         இவைகள் தற்காலிகமாக நான் அனுபவிக்க இறைவன் அனுக்கிரகம் செய்திருக்கின்றார் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்,
·         ஆன்மீக வளர்ச்சிக்காக இவைகளையும் கடந்து செல்ல வேண்டும்.
·         இறைவன் எப்பொழுது வேண்டுமானாலும் என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளலாம்அந்த நேரத்தில் இதுவரை அனுபவிப்பதற்கு வாய்ப்பு கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

मुमुक्षोरपि कर्मास्तु श्रवणं चापि साधनम् ।
हस्तवद्वयमेतस्य स्वकार्य साधयिष्यति ॥ 84
கர்மத்தினால் சித்தஸுத்தி அடையலாம் ஆனால் மோட்சத்தை அடைய முடியாது.
பூ.பக்ஷி: கர்மத்தினாலும் மோட்சத்தை அடைய முடியாது, ஞானத்தினாலும் மோட்சத்தை அடைய முடியாது. இரண்டும் சேர்ந்து மோட்சத்தை கொடுக்கும்வேத சாஸ்திரத்தின் உள்நோக்கமும் இதுதாகத்தான் இருக்க வேண்டும். எனவே வேதம் இரண்டு பகுதிகளாக உள்ளது, கர்ம காண்டம் மற்றும் ஞான காண்டம்..  இரண்டையும் சேர்த்து செய்வதன் மூலம் மோட்சத்தை அடையலாம்சந்நியாஸம் இதற்கு தேவையில்லை.
         முமுக்ஷோ கர்ம அஸ்து, சிரவண அபி சாதனம்மோட்சத்தை அடைய விரும்புபவன் இரண்டையும் அதாவது கர்மத்தை, சிரவணத்தையும் சேர்த்து செய்யட்டும்எவ்வாறு மனிதனுக்கு இரண்டு கைகள், இரண்டு கால்கள் இருக்கின்றதோ அது போல இந்த இரண்டும் சேர்ந்து மோட்சம் அடைவதற்கு உதவியாக இருக்கட்டும்.

यथा विजृंभते दीपो ऋजुकरणकर्मणा ।
यथा श्रवणजो बोधः पुंसो विहितकर्मणा ॥ 85
தீபத்தில் உள்ள திரியை ஏற்றினால் வெளிச்சம் அதிகமாகும்இதில் திரியை ஏற்றுவது என்பது கர்மம் அதனால் வெளிச்சம் அதிமாகின்றதுஅதுபோல வைதீக கர்மங்கள் சிரவண, மனன சாதனத்தின் மூலம் வரும் மந்தமான அறிவை மேலும் கூட்டி மோட்சத்தை வழி வகுக்கும்

अतः सपेक्षितं ज्ञानमथवापि समुच्चयम् ।
मोक्षस्य साधनमिति वदन्ति ब्रह्मवादिनः ॥ 86८६ ॥
வேறொரு வகையான பூர்வ மீமாம்ஸிகள் இந்த ஞான-கர்ம சேர்க்கையானது இரண்டு வகையாக பிரிக்கின்றார்கள். 1. ஞானம் அதிகமாக இருக்கும்படியான ஒரு இணைப்பு இதற்கு ஸபேக்ஷிதம் என்று பெயர். 2. இந்த சேர்க்கையில் கர்மமும் ஞானமும் சமமானதாக இருக்கும் இதற்கு ஸமுச்சயம் என்று பெயர்.

मुमुक्षोर्युज्यते त्यागः कथं विहितकर्मणः ।
इति शङ्ग न कर्तव्या मुढवत्पण्डितोत्तमैः ॥ 87८७ ॥
இதிலிருந்து அறிவது சந்நியாஸம் சரியான வழியல்ல, தேவையுமில்லாதது.
கதம் விஹிதகர்மண த்யாக இல்லறத்தில் இருக்கும் முமுக்ஷூ விதிக்கபட்ட கர்மத்தை முழுவதுமாக விட்டுவிட வேண்டும் என்று சொல்வது சரியாக இருக்கும்.
மேலே கூறப்பட்டுள்ள தத்துவம் சரியானது அல்லஇந்த சந்தேகம் சம்சாரத்தை துறக்கும் சந்நியாசிக்கு வரக்கூடாதுஞானம் மட்டும்தான் மோட்சத்தைக் கொடுக்கும், கர்மங்கள் அல்ல என்பதை திடமாக இருக்க வேண்டும்.
இதி ஷங்க ந கர்தவ்யாஇந்த தத்துவம் மோட்சத்தை அடைய உதவாது மேலும் ஏற்புடையதாகவும் இல்லை. இவ்வாறு மோட்சத்தை அடைய உதவும் வழியை பற்றிய அறியாதவர்கள்தான் கூறுவார்கள்.



ஞான-கர்ம ஸமுச்சயம் கண்டனம்
कर्मणः फलमन्यत्तु श्रवणस्य फलं पृथक ।
वैलक्षण्यं च सामग्न्योश्र्चोभयत्राधिकारणोः ।
कामी, कर्मण्याधिकृतो निष्कामी श्रवणे मतः ॥ 88८८ ॥
ஞானமும், கர்மமும்  எதிரெதிரான கருத்துக்களைக் கொண்டவை. இவையிரண்டும் வெளிச்சம், இருட்டு போல் இருக்கின்றதுஇவைகளை ஒன்று சேர்க்க முடியாதுஇவைகளிடை ஐந்து முக்கிய வேறுபாடுகள் உள்ளனஅதனால் இரண்டினுடைய சேர்க்க நடக்க இயலாது.
1.   அதிகாரி பேதம்இவைகளை செய்பவர்கள் வெவ்வேறாக இருக்கின்றார்கள்
2.   சாமகிரி பேதம்இவைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், சூழ்நிலைகள் வெவ்வேறாக இருக்கின்றன.
3.   பலபேதம்இவைகள் செய்வதினால் அடையும் பலன்கள் வெவ்வேறாக இருக்கின்றன.
4.   சாஸ்திர பேதம்இவைகளை கூறும் சாஸ்திரங்களை கற்றுக் கொடுக்கும் முறையில் வித்தியாசம் இருக்கின்றது.
5.   ஸ்வரூப பேதம்பிரஹ்ம ஞானத்தின் தன்மை, வைதீக கர்மத்தின் தன்மை இவைகளுக்கிடையே உள்ள வித்தியாசம்.
கர்மணா பலம் அன்யத்துகர்மத்தின் பலன் வேறானது.
ஸ்ரவணஸ்ய பலம் ப்ருதகவேதாந்தம் கொடுக்கும் பலன் மோட்சம் இது கர்ம பலனுக்கும் வேறானது.
வைலக்ஷண்யம் ச ஸாமக்ன்யோ தேவைப்படும் பொருட்களும் வெவ்வேறானது.
உபயத்ர அதிகாரனோஇதை செய்பவர்களும் வேறானவர்கள், அதாவது வெவ்வேறு தகுதியுடையவர்கள்.
1.   அதிகாரி பேதம்
நிஷ்காமி ஸ்ரவணே மதஹஆத்ம ஞானத்தை தேடும் சாதகன் உலகத்திலுள்ள அனைத்து பொருட்களிலும் ஆசையை துறந்தவன், மோட்சத்தை அடைய வேண்டும் என்ற ஆசை மட்டும் அவனிடம் இருக்கும்.
காமி கர்மண்யாதிக்ருதோ உலகத்திலுள்ள பொருட்களை அடைய வேண்டும் என்ற ஆசையை உடையவன் இந்த சாதகன்.

कर्मणाः साधनं भार्यास्रुक्स्रुवादिपरिग्रहः ।
नैवान्यसाधनापेक्षा शुश्रुषोस्तु गुरूं विना ॥ 89८९ ॥
2.   சாமகிரி பேதம்
·         வைதீக கர்மத்தை செய்பவன் கிரகஸ்தாசிரமம், வானப்ரஸ்தாசிரமம் இதில் ஏதாவது ஒன்றில் இருந்தாக வேண்டும்சந்நியாஸியால் எல்லாவித வைதீக கர்மங்களை செய்ய முடியாது.
·         கர்மத்தை செய்ய வேண்டுமானால் அவனுக்கு மனைவி இருக்க வேண்டும்.
·         ஸ்ருக்ஸ்ருவாதி பரிக்ரஹபலவிதமான பொருட்கள் கர்மம் செயவதற்கு தேவை அதனால் அதை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
·         அன்யஸாதனாபேக்ஷா ந அஸ்திவேதாந்த ஞானத்தை அடைவதற்கு எதுவும் தேவையில்லை.
·         ஸுஸ்ருஷோஸ்து குரும் வினா-  வேதாந்தத்தை சிரவணம் செய்ய வேண்டும் என்ற ஆசையுடையவனுக்கு அதை சொல்லி கொடுக்க குரு மட்டும் தேவை.

उपर्युपर्यहंकारो वर्धते कर्मणा भृशम् ।
अहंकारस्य विच्छित्तिः श्रवणेन प्रतिक्षणम् ॥ 90९० ॥
3.   பல பேதம்
கர்மத்தை செய்பவன் கர்த்தா என்று அழைக்கப்படுவான்அவன் ஏதாவது ஒன்றை அடைய வேண்டும் என்று கர்மம் செய்வான்பிறகு அடைந்த பலனை அனுபவிப்பான். இந்த கர்த்தா இப்போது போக்தாவாக இருக்கின்றான்இந்த கர்த்தா-போக்தா சேர்க்கையே அஹங்காரம் என்று கூறப்படும்போக்தாவானது அகங்காரத்தி அதிகரிக்க செய்யும். ஆனால் வேதாந்தத்தில் இந்த அகங்காரமானது நீக்கப்படும்.
கர்மணா அஹங்கார வர்ததேகர்மத்தினால் அகங்காரமானது வளர்கின்றது
உபர்யுபர்ய வர்ததேமேலும் மேலும் வளர்கின்றது.
ஸ்ரவணேன அஹங்காரஸ்ய விச்சித்திவேதாந்த சிரவணம் செய்யும்போது இந்த அகங்காரமானது அழிக்கப்படுகின்றது

प्रवर्तकं कर्मशास्त्रं ज्ञानशास्त्रं निवर्तकं ।
इत्यादिवैपरित्यं तत्सधने चाधिकारिणो ॥ 91९१ ॥
4.   சாஸ்திர பேதம்
கர்ம காண்டம் நம்மை நான் என்ற அகங்காரத்தில் வைத்திருக்கும். அது முடிவை உடையதுஎல்லா நிலைகளிலும் அது குறைபாடுடையதாகவே இருக்கும். இது நம்முடைய அகங்காரத்தை எப்போது திருப்திபடுத்திக் கொண்டே இருக்கும்பணத்தேவை இருந்தால் அதற்காக யாகம் செய்து அதை அடைந்து விடலாம். இவ்வாறு நம் அகங்காரத்தை நாமே வளர்த்து கொண்டிருப்போம்இது செயல்முறை தத்துவத்தை உடையது, அதனால் எப்போதும் நம்மை செயலில் ஈடுபடுத்திக் கொண்டே இருக்கும்.
ஞான காண்டம் நம்மை உயர்த்திக்கொள்ள எந்த செயலிலும் ஈடுபடுத்தாது ஏனென்றால் நீயே அந்த பரம்பொருள் என்று கூறி அகங்காரத்தை அழித்து விடுகின்றது. நாம் அடையப்போவது எப்பொழுதும் நிறைவை தரக்கூடியது. எந்த செயலிலும் ஈடுபடுத்தாது, அவைகள் சொல்வதெல்லாம் உண்மை வாக்கியங்கள்.
ப்ரவர்த்த காண்டம்கர்மகாண்டம் செயலில் ஈடுபடுத்தும்
நிவர்த்த காண்டம்ஞான காண்டம் செயலிலிருந்து நம்மை விடுவிக்கும்.

एककर्त्राश्रयौ हस्तौ कर्मण्यधिकृतावुभौ ।
सहयोकस्तयोर्युक्तो न तथा ज्ञानकर्मणॊ ॥ 92९२ ॥
கைகள் இரண்டும் ஒரே தன்மையான வேலையை செய்யக்கூடியதாக இயற்கையிலே அமைந்திருக்கின்றதுஇரண்டும் ஒரு மனிதனிடத்தில்தான் இருக்கின்றதுஒரு உடலில் இரு கைகள் இருப்பது போல் கர்மமும், ஞானமும் சேர்ந்திருந்தால்தான் மோட்சத்தை அடைய முடியும் என்ற தத்துவம் ஞானம் அடைய உதவாதுஏனென்றால் அது யாரோ ஒருவனுடைய கட்டுப்பாட்டில் இல்லை.

कर्त्रा कर्तुमकर्तुं वाप्यन्यथा कर्म शक्यते ।
न तथा वस्तुनो ज्ञानं कर्तृतन्त्रं कदाचन ॥ 93९३ ॥
ஞானம் என்பது உண்மையை உரைத்திடும் வாக்கியங்களில் தொகுதிஉண்மை எந்த காலத்திலும் மாறாதது, யாராலும் மாற்ற முடியாதது. உண்மையை என்னுடைய விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்க முடியாதுஅது என்ன உரைக்கின்றதோ அதை நான் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கர்ம மானது கர்த்ருதந்திரம் அதாவது இது ஒருவனுடைய விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்க முடியும்.
ஞானமானது வஸ்துதந்திரம் அதாவது இது உண்மையை சார்ந்திருக்கின்றது.
கர்மமானது உண்மைகளின் அடிப்படையில் செயல்படாதுஅது நமது விருப்பங்களின் அடிப்படையிலே செயல்படுகின்றது. இதை அடைய வேண்டும் என்று நினைத்து செய்கின்ற செயல்களின் அடிப்படையிலேதான் செயல்படுகின்றது.
கர்ம ஸ்ஸக்யதேசெயல் செய்ய முடியும் நிலையில் உள்ளது
கர்தும் அகர்தும் அன்யதா கர்தும்கர்மம் செய்யலாம், செய்யாமல் இருக்கலாம் அல்லது வெவ்வேறு வகையாக செய்யலாம்.
வஸ்து ஞானம்  - எந்த அறிவும்
ததா ந கர்த்ருதந்தரம் கதாசினஅறிவானது எக்காலத்திலும், யாராலும் மாற்ற முடியாதது

यथा वस्तु तथा ज्ञानं प्रमाणेन विजायते ।
नापेक्षते च यकिंचित्कर्म वा युक्तिकौशलम् ॥ 94९४ ॥
அறிகின்ற பொருள் எப்படி இருக்கின்றதோ அப்படியே அறிவதுதான் அறிவாகும்.
இந்த அறிவானது ஞானேந்திரியங்களால் அறியப்படுகின்றது. கர்மேந்திரியங்களால் மாற்ற முடியாததுகர்மேந்திரியங்களால் செய்யப்படுவதெல்லாம் மாற்றத்திற்கு உரியது.
·         நான் பூரணமானவன் என்று தெரிந்து கொள்வது அறிவினால் மட்டும் நிகழக்கூடியது.
·         அறிவை அடைய எந்த செயலும் செய்யத்தேவையில்லை. ஆனால் செயலானது அறிவைக் கொடுக்காது, இருக்கின்ற அறிவை மாற்றக்கூடியது.
·         விஞ்ஞானத்தினாலும், யுக்தியினாலும் ஞானேந்திர்யங்களால் அடைந்த அறிவை, உண்மையை மாற்றமுடியாது
இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது, ஞானமும், கர்மமும் சேர்க்க முடியாது. இரண்டும் வெவ்வேறு வகையை சார்ந்தது.

रुपज्ञानं यथा सम्यग्दृष्टौ सत्यां भवेत्तथा ।
श्रुतिप्रमाणे सत्येव ज्ञानं भवति वास्तवम् ॥ 95९५ ॥
ஸம்யக் த்ருஷ்டௌ சத்யம்சரியாக செயல்படுகின்ற ஞானேந்திரியங்கள் சரியான அறிவை அடைய உதவுகின்றது.
ரூபஞானம் ததா பவேத்- ஒரு பொருளின் உருவம் நம் மனதிற்கு வந்தடைகின்றது.
ஸ்ருதி ப்ரமாணெ ஸத்யேவவேத சாஸ்திர வாக்கியங்கள் பிரத்யக்ஷ பிரமானக இருந்து
வாஸ்தவம் ஞானம் பவேத்உண்மையான அறிவை அடைய முடிகின்றது.
இவ்வாறு அடைந்த அறிவை வேறெதை கொண்டும் சரிபார்க்க வேண்டியதில்லை.
வேத வாக்கியங்களை முடிவான கருத்தை கூறுபவை எனவே அதையையே  பிரத்யக்ஷ பிரமானமாக எடுத்துக் கொள்ள வேண்டும்நிதித்யாஸனம் என்பது அடைந்த அறிவின் நிலைத்து நிற்பதற்கு உதவுகின்ற சாதனமாக இருக்கின்றது.

न कर्म यत्किंचिदपेक्षते हि रूपोपलब्धौ पुरुषस्य ।
ज्ञानं तथैव श्रवणादिजन्यं  वस्तुप्रकाशे निरपेक्षमेव ॥ 96९६ ॥
ஞானேந்திரியங்கள் நேரிடையாக அறிவை அடைய உதவும் சாதனங்கள் என்று புரிந்தவுடன் கண்ணால் ஒரு பொருளை பற்றிய அறிவை அடைவதற்கு நான் எந்த செயலும் செய்ய வேண்டியதில்லை என்பது தெளிவாகின்றது.
ஞானேந்திரியங்கள் மூலம் அடையும் அறிவானது ஏற்கனவே இருந்த அறியாமையை நீக்குகின்றது.. விளக்கிலிருந்து ஓளியானது இருளை நீக்குவதற்கு உதவுகின்றது ஆனால் அந்த வெளிச்சம் அந்த விளக்கிலுள்ள திரியையோ, எண்ணையையோ சார்ந்திருக்கவில்லை. ஆகையால் ஆத்ம ஞானத்தை அடைவதற்கு எந்த நிலையிலும் எந்த செயலும் செய்யத்தேவையில்லைவைதீக கர்மங்கள் மனத்தூய்மையை அடைவதற்கு உதவுகின்றன.
ஸ்ரவணாதி ஜன்யம் ஞானம்வேதாந்த வாக்கியங்களை படிப்பதன் மூலம் ஆத்ம அறிவை அடைகின்றோம்.
வஸ்து ப்ரகாஸ்ஸே இந்த அறிவை வெளிப்படுத்துவதற்கு
நிரபேகஷமேவஎந்தவிதமான செயலும் தேவைப்படாது.


कर्तृतन्त्रं भवेत्कर्म कर्मतन्त्रं शुभाशुभम् ।
प्रमाणतन्त्रं विज्ञानं मायतन्त्रमिदं जगत् ॥ 97९७ ॥
·         அனைத்து கர்மங்களும் நான் விரும்பினால்தான் செய்ய முடியும். என்னால் செய்யப்படாத கர்மத்திற்காக யாரையும் குறை சொல்லமுடியாதுசெயலை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை கர்த்தாதான் செய்கின்றான் அதை எப்படி செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை சொல்லித்ததருவது கர்ம காண்டம்.
·         வாழ்க்கையில் வரும் அனுபவங்களை அனுபவிப்பவன் போக்தாகர்மபலன் அடிப்படையில்தான் இந்த சுக-துக்கங்களை அனுபவிக்கின்றான். செயலை தேர்ந்தெடுப்பதில் வாய்ப்பு இருக்கின்றது ஆனால் தேர்ந்தெடுத்த செயல் செய்வதனால் வரும் பலனை அனுபவித்துத்தான் தீர வேண்டும்வேண்டாம் என்று நிராகரிக்க முடியாது.
·         உண்மையை அறிய வேண்டுமானால் அதை அறிய உதவும் முதன்மையான பிரமானத்தைத்தான் சிரத்தையுடன் நாட வேண்டும்மோட்சத்தை அடைய விரும்பினால் அதை அடைய உதவும் முதன்மையான பிரமானமான வேதாந்தத்தைத்தான் நாட வேண்டும்.
·         இந்த அகில உலகமே மாயையை அல்லது அறியாமையை சார்ந்திருக்கின்றதுஅறிவை அடையை வேதாந்தம் உதவும் அதற்கு செயல் எதுவும் செய்ய தேவை இல்லை.


न ज्ञानकर्मणोर्यस्मात्सहयोगस्तु युज्यते ।
तस्मात्त्याज्यं प्रयत्नेन कर्मं ज्ञानेच्छुना ध्रुवम् ॥ 98९८ ॥
உபரம வைதீக கர்ம தியாகம்.
மோட்சத்தை அடைய விரும்பும் சாதகன் வைதீக கர்மங்களை விட்டுவிட வேண்டும்.
லௌகீக கர்மங்கள் தடையாக இருந்தால் அந்த கர்மங்களை எவ்வளவு அளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துக்கொண்டு வேதாந்த படிப்பை தொடர வேண்டும்.

संन्यस्येत्सुविरक्तः सन्नियामुत्रार्थतः सुखात् ।
अविरक्तस्य संन्यासो निष्फलोऽयाज्ययागवत् ॥ 99९९ ॥
விவேகம், வைராக்கியம் இந்த தகுதிகளை அடைந்தவனால்தான் சந்நியாசியாக முடியும்ஒருவன் தெளிவான அறிவினால் இந்த உலகத்தின் நிலையற்ற தன்மையை உணர்ந்து அதனிடத்திலிருந்து தீவிரத்துடன் விலகி இருக்க வேண்டும்இவ்வுலக அவ்வுலக இன்பங்களிலிலிருந்து விலகி இருந்து மன நிறைவுடன் இருப்பான் சந்நியாசி.
இந்த அளவு விவேகமும், வைராக்யமும் இல்லாத சந்நியாசம் வீணாகி போகும். இத்தகைய சந்நியாஸத்தால் அடைய நினைக்கும் குறிக்கோளை அடைய முடியாது.
தகுதியில்லாதவனால் செய்யப்படும் யாகங்களினால் எந்தவிதமான பயனும் ஏற்படாதுஅதேபோல தகுதியில்லாமல் மோட்சத்தை அடைய முயற்சி செய்தாலும் அதை அடைய முடியாது அதேசமயம் அது அவனுக்கு துன்பத்தைத்தான் கொடுக்கும்.
ஸ்வதர்ம அனுஷ்டானமே உபரம என்றும் புரிந்து கொள்ளலாம்.

Shraddha – Verses 100-104.

गुरुवेदान्तवाक्येषु बुद्धिर्या निश्र्चयात्मिका ।
सत्यमित्येव सा श्रद्धा निदानं मुक्तिसिद्धये ॥ 100१०० ॥
குருவேதாந்தவாக்யேஷு புத்திஹி நிஸ்சயாத்மிகா - சிரத்தை என்பது ஆதமா ஞானத்தை அடைய உதவும் முதன்மையான பிரமானமான வேதாந்தத்தின் மீதும் அதை உபதேசிக்கும் குருவிடத்தும் நாம் வைக்கும் நம்பிக்கை.
ஸத்யமித்யேவ  - உண்மையையே உரைக்கின்றது வேத வாக்கியங்கள் என்ற பாவனை
ஸா ஸ்ரத்தாஅவைகள் நம்பிக்கையானது, முடிவானதும் என்ற அணுகுமுறை
நிதானம் முக்தி ஸித்தயே ஆத்ம ஞானத்தை அடைவதற்கு உதவுகின்றது.
எனவே இந்த தகுதியும் கூட முக்கியமானதாக கருதப்படுகின்றது

श्रद्धावतामेव सतां पुमर्थः समीरितः सिद्धयति नेतरेषाम् ।
उक्तं सुसूक्ष्मं परमार्थतत्त्वं  श्रद्धत्स्व सोम्येति च चक्ति वेदः ॥ 101
யாரொருவன் வேத வாக்கியங்களை முக்கிய பிரமானமாக கருதுகின்றானோ அவனால் மட்டும்தான் ஆத்ம ஞானத்தை அடைய முடியும் மற்றவர்களால் முடியாது.
ஸமீரிதஇதை வேதம் உறுதி செய்கின்றது.
இந்த தகுதியை வளர்த்துக் கொள்வது மிகவும் கடினம் ஏனென்றால் வேத வாக்கியங்களை வேறெதைக் கொண்டும் நிரூபிக்க முடியாது.
அந்த பரம்பொருளை பற்றிய அறிவைக் கொடுக்கும் வேதபகுதிக்கு வேதாந்தம் என்று அழைக்கப்படுகின்றதுஅது மிகவும் சூட்சுமமாக இருப்பதாலும் வேறெதினாலும் அறிய முடியாதாக இருப்பதாலும் இதை அறிந்து கொள்வதற்கு சிரத்தையும், மிட சூட்சுமமான புத்தியும் தேவைப்படுகின்றது.





तस्माच्छ्रद्धा सुसम्पाद्या गुरुवेदान्तवक्ययोः ।
मुमुक्षः श्रद्दधानस्य फलं सिद्धयति नान्यथा ॥ 102
அதனால் இந்த தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்குரு-வேதாந்த வாக்கியங்களில் முழு நம்பிக்கை வைக்க வேண்டும்மோட்சத்தை அடைய விரும்பும் சாதகன் இந்த தகுதியை அடைவதால் ஆத்ம ஞானத்தை உடனடியாக அடைகின்றான்ஆத்ம ஞானத்தின் பலனையும் உடனடியாக அடைகின்றான்இதை வேறெதனாலும் இந்த அறிவை அடைய முடியாது.

यथार्थवादिता पुंसां श्रद्धाजननकारणम् ।
वेदस्येश्र्चरवाक्यत्वाद्यथार्थत्वे न संशयः ॥ 103
இந்த வேதாந்த வாக்கியங்கள் நம்பதகுந்தவர்களிடத்திருந்து வந்திருக்கின்றது எனவே இதில் முழு நம்பிக்கை வைக்கலாம்அவைகள் ஈஸ்வரனிடமிருந்தே வந்திருக்கின்றதுஉண்மையே பேசும் ஒருவரிடம் இருந்து வரும் சொற்கள் அனைத்து உண்மையாகத்தான் இருக்கும். வேத வாக்கியங்கள் அந்த ஈஸ்வரனிடம் இருந்து வந்திருப்பதால் அதை வேறெதைக் கொண்டும் நிரூபிக்க தேவையில்லை.

मुक्तस्येश्र्चररूपत्वाद्गुरोर्वागपि तादृशी ।
तस्मात्तद्वाक्ययोः श्रद्धा सतां सिद्धयति धीमताम् ॥ 104
குரு உபதேசத்தில் ஏன் சிரத்தை வைக்க வேண்டும்?
குருவானவர் ஸ்ரோத்திரிய பிரஹ்ம நிஷ்டராக இருப்பதால் அவரை ஈஸ்வரனாகவே இருக்கின்றார். எனவே அவர் வாய்வழியே வரும் உபதேசத்தில் முழு நம்பிக்கை வைக்க வேண்டும்,
·         குருவே ஈஸ்வரனாகவே இருக்கின்றார்
·         குரு வாக்கியத்தை சாஸ்திர வாக்கியமாக கருத வேண்டும்.
·         ஆகவே குரு-வேதாந்த உபதேச வாக்கியத்தில் சிரத்தையுடன் கேட்க வேண்டும்.
·         ஸதாம்பூர்வ ஜன்ம புண்ணியத்தின் பலனாகத்தான் வெகு சிலரே வேத வாக்கியங்கள் உண்மையை உரைக்கின்றது என்று நம்புகின்றனர்.
·         தீமதாம்அறிவுள்ளவர்கள் இந்த முக்கிய பிரமானமான வேத வாக்கியங்களின் முக்கியதுவத்தை புரிந்து கொள்கின்றனர் அதனால சிரத்தை அவர்களிடத்திருக்கின்றது.




சமாதானம்-Samaadhanam – Concentration:
श्रुत्युक्तार्थावगाहाय विदुषा ज्ञेयवस्तुनि ।
चित्तस्य सम्यगाधानं समाधानमितीर्यते ॥ 105
சமாதானத்திற்கு இரண்டு வகையான விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
1.   ஒரு குறிக்கோளை அடைய நீண்ட நாள் ஒதுக்க வேண்டும்நம்முடைய முக்கியமான குறிக்கோள் மோட்சத்தை அடைய வேண்டும், தன்னிடத்திலே நிலை பெற வேண்டும் என்பதேஇதை அடைய உதவும் வேதத்தை பரா வித்யா என்றும் கூறுவர்இந்த பரா வித்யாவை உபநிஷத் மூலம் மட்டுமே அடைய முடியும்.
2.   வேதாந்தத்தை மிகவும் கவனத்துடன் கற்க வேண்டும்குருவின் உபதேசத்தை எந்தவிதமான கவனசிதறல்கள் இல்லாமல் மனஒருமுகப்பாடுடன் கேட்க வேண்டும்இவ்வாறு நூறு சதவிகித கவனத்தோடு கேட்கபட்ட (சிரவணம்) நம்மை மனனத்திற்கு எடுத்து செல்லும்பிறகு அடுத்த நிலையான நிதித்யாஸனத்திற்கு செல்வோம்.
சித்த ஏகாக்ரஹம், மன ஒருமுகப்பாடே சமாதானம் என்று கூறப்படுகின்றதுவாழ்நாள் முழுவதும் இதற்காகவே அர்ப்பணிக்க வேண்டும்.
சித்தஸ்ய ஸம்யக் ஆதானம்நம்முடைய கவனம் முழுவதும் வேதாந்த பாடத்திலே நிலைத்திருக்க வேண்டும்.
ஞேய வஸ்துனிஆத்மா என்கின்ற ஒன்றை, பரம்பொருளை அறிய உதவும் வேத வாக்கியத்தில்
அவகாஹ  - தெளிவாகவும், முழுமையாகவும், மனதால் புரிந்து கொள்வது
அர்த்தா உபதேசம்
ஸ்ருத்யு வக்தாவேத வாக்கியங்கள் எடுத்துரைக்கின்றது அந்த பூரணமான என்றும் இருக்கின்ற பிரஹ்மத்தை நமக்கு புரிய வைத்து அடைய வைக்கின்றது.

सिद्धेश्र्चित्तसमाधानमसाधारणकारणम् ।
यतस्ततो मुमुक्षूणां भवितव्यं सदामुना ॥ 106
மிகவும் கவனமாகவும், உன்னிப்பாகவும் உபநிஷத் உபதேசத்தை கேட்க வேண்டும்அப்போதுதான் பிரஹ்ம ஞானத்தை அடைய முடியும்நம்முடைய கர்ம பலன் நம்மை இந்த வழிக்கு செல்ல விடாது. ஞானபலனாக பிரஹ்மமாகவே தன்னை அறியலாம்.
சித்த சமாதானம்நம்முடைய முழு கவனம் வேத உபதேசத்தை கேட்பதிலே இருக்க வேண்டும்,
அஸாதாரணகாரணம்இதுவே நம்முடைய முதன்மையான காரணாமாகும்.
எப்படி ஒளியானது இருட்டை நீக்குவதற்கு காரணமாக இருக்கின்றதோ அதுபோல  உபநிஷத் வாக்கியத்தை ஆழ்ந்த கவனத்துடன் கேட்பதாலும், சிந்திப்பதாலும் நம் அறியாமையை நீங்கி ஞானம் உண்டாகும்எனவே மோட்சத்தை அடைய முயற்சிக்கும் ஒவ்வொரு சாதகனும் சிரவண நேரத்தில் சமாதானமாக இருக்க வேண்டும், மனமானது முழு கவனத்துடன் உபதேசத்திலே இருக்க வேண்டும்.

अत्यन्ततीव्रवैराग्यं फललिप्सा महत्तरा ।
तदेतदुभयं विद्यात्समाधानस्य कारणम् ॥ 107
எப்படி நம்முடைய இந்த தகுதியை வளர்த்து கொள்வது? எவ்வாறு எந்த தடையுமில்லாமல் தியானத்தில் இருக்க வேண்டும்?
நாம் எதை செய்கின்றோமோ அதில் நமக்கு ஈடுபாடு இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு அதை செய்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வமும், முழு கவனத்துடனும் செய்வோம்அதுபோல தியானம் செய்வதில் முழு ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் செய்தால் அது நமக்கு கைகூடும்.
பிரஹ்ம ஞானத்தை அடைவதுதான் நமது இறுதியான, ஒரே குறிக்கோளாக கொண்டு அந்த முயற்சியில் ஈடுபட்டால் நம் மனமானது தானாகவே ஒருமுகப்பட்டு முழு கவனத்துடன் சிரவணம், மனனம் மேற்கொள்ள உதவும்.
நற்பண்புகள் வளர்த்து விட்டால் அது மோட்ச ஆசையை கொடுக்கும்இந்த ஆசையானது தானாகவே ஆழ்ந்த கவனத்தையும், மன ஒருமுகப்பாட்டையும் கொடுத்து விடும்.
Ø  வேதாந்த உபதேசத்தை உன்னிப்பாகவும், ஆர்வத்துடனும் கேட்பதனால அடையும் பலன் மோட்சமாகும்.
Ø  இதை அடைவது ஒன்றே நமது ஆசையாகவும், குறிக்கோளாகவும் இருக்க வேண்டும்இந்த ஆசையானது மற்ற எல்லா ஆசைகளையும் விழுங்கிவிடும்.
Ø  மற்ற ஆசைகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்மாக குறைந்து பின்பு எதுவுமே இல்லாமல் போய் விடும்.
1.   எல்லா ஜீவன்களும் இயல்பாகவே துயரத்தை அனுபவிக்குமாறு இறைவன் படைத்திருக்கின்றார்யாரும் துயரத்திலிருந்து விடுபட முடியாதுயாரொருவன் பிரம்மத்தை அடைகின்றானோ அவன் மட்டும்தான் எல்லா துயரங்களிலிருந்தும் அதாவது சம்சாரத்திலிருந்து விடுதலையடைகின்றான்இறைவன் மீது நாம் வைக்கும் நிபந்தனையற்ற பக்தியானது நமக்கு இந்த மோட்ச ஆசையை கொடுக்கும்.
2.   எல்லா மனித உறவுகளும் நிபந்தனைகளுக்குட்பட்டதுநிபந்தனைகள் இல்லாத, எதிர்பார்ப்புகள் இல்லாத எந்த உறவும் இல்லை. ஆத்மானஸ்து காமாய ஸர்வம் ப்ரியம் பவதி (பிரு)” இந்த உபநிஷத் வாக்கியமானது தெளிவாக உரைக்கின்றது. ஒவ்வொருவரும் தனக்கு வசதியாகவும், தொல்லைகள் இல்லாத வரைக்கும் எந்த உறவையும் பயன்படுத்துவான்.
3.   வயாதானவரும், நோயில் வீழ்ந்தவர்கள்தான் இந்த வாழ்க்கையில் தற்காலிகமான இந்த வைராக்கியத்தை அடைவார்கள்நான் மற்றவர்களுக்கு பயனுள்ளவனாக இருக்கும் வரையில்தான் என்னை எல்லோரும் மதிக்கின்றார்கள்நான் பயனற்றவனாகவும், பாரமாகவும் இருக்கும் நிலைக்கு வந்துவிட்டால் எல்லோராலும், அலட்சியப்படுத்தப்படுகின்றேன் மேலும் தேவையற்றவனாக ஒதுக்கப்படுகின்றேன்இறைபக்தி இல்லாதவர்களுக்கு இந்த நிலையானது மனதை புண்படுத்தைகூடியதாகவும், வாழ்க்கையை வெறுக்கவும் செய்யும்ஆனால் இறைவன் மீது நிஷ்காம பக்தியுள்ளவர்களுக்கு மோட்ச ஆசையை கொடுக்கும்
a.   சகுண பிரஹ்ம உபாஸனம்எல்லா தியானங்களும், உபாஸனைகளும் சித்த சமாதானத்தை அடைவதற்கான வழிகளாகும்.
b.   பதஞ்சலியின் அஷ்டாங்க யோகம்இதில் சொல்லப்பட்ட பண்புகளை அடைவதன் மூலம் நம் மனதை ஒருமுகப்படுத்த முடியும். மனதை ஒரு இடத்தில் நிலை நிறுத்த முடியும், மனதை நெறிபடுத்த முடியும்.  சித்த வ்ருத்தி நிரோதஹ என்றால் மனதில் எழும் எண்ணங்கள் யாவும் ஒரு விஷயத்தில் நிலை நிறுத்த வேண்டும்அந்த விஷயத்திலே மூழ்கி விடுதல் என்பது சமாதி அல்லது சமாதானம் என்று அழைக்கப்படும்முயற்சி செய்து இந்த நிலையை அடைவதற்கு சவிகல்ப சமாதி என்று பெயர், இதுவே நினைத்தை மாத்திரத்தில் அடைவதற்கு நிர்விகல்வ சமாதி  என்று பெயர்.

बहिरङ्ग श्रुतिः प्राह ब्रह्मचर्यादि मुक्तये ।
शमादिषट्कमेवैतदन्तरङ्गं विदुर्बुधाः ॥ 108
சில வகையான பண்புகள் இதில் கூறப்படுகின்றது.  மேலும் இந்த பண்புகள் எவ்வாறு மோட்சத்தை அடையும் முயற்சியில் நமக்கு உதவுகின்றது என்பதையும் இதில் கூறப்படுகின்றது.  இந்த பண்புகளை தவிர வேறொரு முக்கியமான தகுதியான சமாதி ஷட்க ஸம்பத்தி மோட்சத்தை அடைவதற்கு உதவுகின்றது.
இந்த சமாதி ஷட்க ஸம்பத்தி மோட்சத்தின் மிக அருகே நம்மை கொண்டு சென்று விடும்.  எனவே இதை அந்தரங்க சாதனம் என்று கூறப்படுகின்றது.  மற்ற பண்புகளும் முக்கியமானவைதான் ஆனால் இவைகள் ஒருவனை நல்ல மனிதனாக, கருணை உள்ளம் கொண்டவனாக வைத்திருக்கும் ஆனால் இவைகள் மோட்சத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கின்றது..  எனவே இவைகள் பகிரங்க சாதனம் என்று கூறப்படுகின்றது.  சாஸ்திரமும் இதையே உரைக்கின்றது.

अन्तरङ्गं हि बलवद्बहिरङ्गाद्यातस्ततः ।
शमादिषट्कं जिज्ञासोरवश्यं भाव्यमान्तरम् ॥ 109
சமாதி ஷட்க ஸம்பத்தி மோட்சத்தை அடைவதற்கு உதவும் மிகவும் சக்தி வாய்ந்த தகுதிகளாக கருதப்படுகின்றது. இந்த உண்மையை உணர்ந்து ஒவ்வொருவரும் இந்த தகுதிகள் நம்மிடம் இருக்கின்றதா என்று அகத்தாய்வு செய்ய வேண்டும்.  இதனால் இந்த தகுதிகள் நம்மிடம் எந்த நிலையில் இருக்கின்றது என்று அறிந்து அவற்றை வளர்த்து கொள்வதற்கு தீவிர முயற்சி செய்ய முடியும்.  இந்த தகுதிகள் இல்லாமல் படிக்கும் வேதாந்தம் வெறும் அறிவாகத்தான் இருக்கும் அதனால் பலன் கொடுக்க முடியாது. சித்திகள் எதையும் ஞானப்பலனாக கூறப்படவில்லை, இவைகள் நம்மை வந்தடைந்தாலும் அவற்றை துறக்க வேண்டும்.

अन्तरङ्गविहीनस्य कृतश्रवणकॊटयः ।
न फलन्ति यथा योद्धुरधीरस्यास्त्रसंपदः ॥ 110
ஒருவன் கோடி முறை வேதாந்தம் கேட்டாலும் இந்த சமாதி ஷட்க ஸம்பத்தி என்கின்ற தகுதியை அடையாமல் இருந்தால் வெறும் புத்தக அறிவாகத்தான் அதை அடைய முடியும்.  அடைந்த அறிவினால் எந்த பலனும் கிடைக்காது.  எனவே இந்த தகுதியை வளர்த்து கொண்டே மீண்டும் மீண்டும், வேதாந்த சிரவணம் செய்து கொண்டிருந்தால் வேதாந்த பலனான ஜீவன் முக்தியை அடையலாம்.
உதாரணமாக போர்வீரன் ஒருவனிடத்தில் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் இருந்தாலும் அவனிடத்தில் தைரியம் இல்லையென்றால் எப்படி அந்த ஆயுதங்களால் எந்தவித பயனும் இருக்காது அதேமாதிரிதான் எவ்வளவு முறை வேதாந்தம் படித்தாலும் இந்த தகுதியை அடையாவிட்டால் பலனை அடையமுடியாது.

Mumukshutvam – verses 111-113
ब्रह्मात्मैकत्वविज्ञानाद्यद्विद्वान्मोक्तुमिच्छति ।
संसारपाशबन्धं तन्मुमुक्षुत्वं निगद्यते ॥ 111
முமுக்‌ஷூ என்பது சம்சார பந்தத்திலிருந்து விடுதலை அடைவது. சம்சாரம் என்பது கர்ம பலனை அனுபவித்துக் கொண்டிருப்பது, பிறப்பு-இறப்பு என்ற சக்கரத்திலே சுழன்று கொண்டிருப்பது, காம-க்ரோதாதிகளால் சுக-துக்கத்தை அனுபவித்துக் கொண்டிருப்பது.  அறிவுள்ளவன் தன்னை பந்தப்படுத்திக் கொண்டிருக்கும் விஷயங்களிலிருந்து விலகியிருப்பான்.
அறியாமையே சம்சாரத்திற்கு மூல காரணமாக இருக்கின்றது.
வேதாந்த ஞானம் இந்த அறியாமையை நீக்கிவிடுகின்றது.
வேதாந்த உபதேசம் பிரஹ்ம ஞானத்தை அடைவதற்கு காரணமாக இருக்கின்றது.
எனவே குருமுகமாக இந்த வேதாந்த ஞானத்தை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

साधनानां तु सर्वेषां मुमुक्षा मूलकारणम् ।
अनिच्छोरप्रवृत्तस्य क्व श्रुतिः क्व नु तफलम् ॥ 112
மோட்சத்தை அடைய வேண்டும் என்ற குறிக்கோளோடு முயற்சிக்கும் பலன் சரியான வழியை, செயல்முறையை தேர்ந்தெடுக்காததால் இன்னல்களில் சிக்கி கொள்கின்றார்கள்.  இந்த முமுக்‌ஷூத்வம்தான் ஒருவனை மற்ற தகுதிகளை அடைவதற்கு தூண்டுகோலாகவும், உந்துசக்தியாகவும் இருக்கும்.  உறுதி இல்லாத முமுக்‌ஷூத்வம் சிரவணத்தை சரியாக செய்வதற்கு தடையாக இருக்கும்.  வேத சாஸ்திரத்தை முழு நம்பிக்கையுடனும், சிரத்தையுடனும் கற்காவிட்டால் அதனால் எந்தவித பலனும் அடையமுடியாது.  வேதாந்தத்தை மோட்ச பலனைக் கொடுக்கும் கருவியாக நினைக்காவிட்டால் எப்படி, எவ்வாறு ஒருவனால அந்த பலனை அடைய முடியும்.


नित्यानित्यविवेकश्र्च देहक्षणिकतामतिः ।
मृत्योर्भीतिश्र्च तापश्र्च मुमुक्षावृद्धिकारणम् ॥ 113
சம்சாரத்திலிருந்து அநித்யவஸ்து அறிவையும், பிரஹ்ம வித்யாவான உபநிஷத்திலிருந்து நித்யவஸ்து அறிவையும் பிரித்தறியும் சக்தியை அடைய வேண்டும்.  நம் வாழ்க்கையில் அனுபவிக்கும் ஒவ்வொரு துயரமும் நம்மை வேதாந்தத்தை படிப்பிற்கு எடுத்துச் செல்லும்.  அழியப்போகும் இந்த தேகத்தின் மீது கொண்டிருக்கும் பற்றை நாம் விட்டுவிட வேண்டும். இந்த தேகத்தின் வாழ்நாள் நிச்சயமற்றதாக இருக்கின்றது.  நம்முடைய தேகத்தின் மரணத்தைக் கண்டு பயந்து கொண்டிருக்கின்றோம்.  யமதர்ம ராஜாவும் எப்பொழுதும் நம் அருகே இருந்து கொண்டிருக்கின்றார்.  இந்த தேகத்தின் ஆயுள் முடிந்ததும், அவர் தேகத்தினுள் இருக்கும் உயிரை எடுத்துச் சென்று விடுவார்.  எனவே தாமதிக்காமல் அற்பமான இந்த தேகத்தின் ஆயுள் முடிவதற்குள் வேதாந்தத்தை கற்க வேண்டும்.
தாபஸ்ச – நமக்கு வரும் துன்பம் எல்லாம் நம்மிடமிருந்தும், நம்மை சுற்றியுள்ள சூழிநிலைகளினாலும், இயற்கையின் சீற்றத்தினாலும் வருகின்றது. 
எனவே இவைகளை நன்கு உணர்ந்து, முமுக்‌ஷூத்வத்தை அடைந்து வேதாந்த த்தை குருமுகமாக கற்று மோட்சத்தையடைந்து விட வேண்டும்.

शिरो विवेकस्त्वत्यन्तं वैराग्यं वपुरूच्यते ।
शमादयः षडङ्गानि मोक्षेच्छा प्राण इष्यते ॥  114
இந்த சமாதி ஷட்க ஸம்பத்தியை நம்முடைய இந்த உடலுடன் ஒப்பிட்டு விளக்கப்படுகின்றது
ஸம்பத்தி – இந்த நான்கு தகுதிளை ஒன்றாய் சேர்த்து நம்முடைய முழு உடலுக்கு ஒப்பிடுகின்றார்.
தலை – விவேகம்
நடு உடல் – வைராக்யம் ( சம்சாரத்திலிருந்து விலகி இருத்தல், உலகத்திலுள்ள இன்பம் தரும் பொருட்களிருந்து மனதால் தீவிரமாக விலகி இருத்தல் )
கைகள், கால்கள், பாதங்கள் இவைகளை சமாதானத்தின் ஆறு கிளை தகுதிகளாக உருவகப்படுத்துகின்றது
பிராணன் – முமுக்‌ஷூத்வம்

ईदृशाङ्गसमायुक्तो विज्ञासुर्युक्तिकोविदः ।
शूरो मृत्युं निहन्त्येव सम्यग्ज्ञानासिना ध्रुवम् ॥ 115
இந்த நான்கு வகை தகுதிகளை அடைந்தவன் மோட்சத்தை அடைவதில் நிச்சயமாக வெற்றியை அடைந்திடுவான்.  இந்த வகையான சாதகனை ஜிக்னாஸு என்று அழைக்கப்படுவான். இந்த சாதகன் உபநிஷத் குருமுகமாக படிப்பதற்கு செல்வான்.
யுக்திகோவிதஹ – புத்திசாலித்தனத்துடன் சந்தேகமற இந்த பிரஹ்ம வித்யாவை படிப்பதற்கு தன்னை தயார்படுத்திகொள்வான்.  இதனால் நான் யார்? இந்த உலகம் எப்படிபட்ட தன்மையுடையது, எனக்கும் இந்த உலகத்திற்கும் எந்தவகையான உறவு இருக்கின்றது? எனக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள உறவு இவைகளை நன்கு புரிந்து விடும்.  இத்தகைய சாதகன் சம்சாரத்தை அழித்து விட்டு மோட்சத்தை அடைந்து ஜீவன் முக்தனா

No comments:

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...