Saturday, September 13, 2014

சர்வ வேதாந்த சித்தாந்த ஸார ஸங்கிரஹம் – பகுதி-3

சர்வ வேதாந்த சித்தாந்த ஸார ஸங்கிரஹம் – பகுதி-3

ஸ்வாமி பரமார்த்தானந்தா விளக்கம்

ब्रह्मादिस्थावरान्तेषु वैराग्यं विषयेष्वनु ।
यथैव काकविष्टायां वैराग्यं तद्धि निर्मलम् ॥ 41
எவ்வளவுக்கெவ்வளவு வைராக்கியத்தோடு இருக்கின்றோமோ அவ்வளவுக்குவ்வளவு ஆனந்தமாகவும், மன அமைதியோடும் இருப்போம்வைராக்கியம் என்பது தீயபண்புகளான ஆசை-கோபம் போன்றவைகள் நம்மிடம் இல்லாமல் இருக்குமாறு மனதை நெறிபடுத்தி வைத்தல்எதனோடும் ஒட்டாமல் இருத்தல்
ப்ரஹ்மாதி ஸ்தாவர அந்தேஷூ வைராக்யம்
அதிக சுகம் தரும் பிரம்மலோகத்திலிருந்து சிறு தாவரம் வரை எதிலும் அடைய வேண்டும் என்ற ஆசை கொள்ளாமல் மனதை விலக்கி வைத்திருத்தலே வைராக்கியம். இந்த நிலை இயல்பாக வர வேண்டும்எந்தவித நிர்பந்தத்தாலோ அடையக்கூடாது.
யதைவ க்கவிஷ்டாயாம்எப்படி காகத்தின் எச்சிலை மிக சுலபமாக தூக்கி எறிகின்றோமோ அதுபோல இவ்வுலக சுகம் தரும் பொருட்களையும் துறக்க வேண்டும், அதை அடைய வேண்டும் என்ற ஆசை இல்லாமலிருக்க வேண்டும்யத்தி நிர்மலம் - ஆனால் இதை யாரிடமும் வெளிப்படுத்தக் கூடாது.

बाह्यमाभ्यन्तरं चेति द्विविधं शौचमुच्यते
मृज्जलाभ्यां कृतं शौचं बाह्यं शारीरिकं स्मृतम् ॥ 42
உடலுக்குள்ளும் வெளியேயும் சுத்தமாக இருக்க வேண்டும். இவ்வாறு இரண்டு வகையிலும் சுத்தமாக இருக்க வேண்டும்வெளியே என்பது நம் உடல், வாழும் இடம், சுற்றுப்புறம், சமுதாயம் போன்ற எல்லாவற்றையும் குறிக்கின்றதுஉடலை மண் கொண்டு தேய்த்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். உள்ளத்தை நற்பண்புகளால் சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும்.

अज्ञानदूरीकरणं मानसं शौचमान्तरम् ।
अन्तःशौचे स्थिते सम्यग्बाह्यं नावश्यकं नृणाम् ॥ 43
இந்த ஸ்லோகத்தில் மன தூய்மையை பற்றி கூறப்பட்டிருக்கிறது. மனதானது மேலே சொல்லப்பட்ட நற்பண்புகளை கடைபிடித்து தீய பண்புகளை நீக்கினாலே தூய்மை அடைந்து விடும்மனதில் எழும் எண்ணங்களும் தூய்மையானதாகவே இருக்கும்நாம் பேசும்போதும் அது பிறர்க்கு இதமாகவும், நாகரீகமாகவும், துன்புறுத்தாதவாறும் இருக்க வேண்டும்நம்முடைய பேச்சுக்கள் நல்ல சொற்கள்கூடியதாக இருக்க வேண்டும்.
மானஸ ஷௌசம்நாம் மனத்தூய்மையுடன் இருக்கின்றோம் என்பது வெளிப்படையாக யாருக்கும் தெரியாதுமனத்தூய்மை என்பது தீய குணங்களை நீக்கி நற்குணங்களுடன் இருத்தல் என்பதை குறிக்கிறது.
காம, க்ரோத, லோபம் என்ற இந்த மூன்று குணங்களும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு மிகப்பெரும் தடையாக இருக்கின்றதுஎனவே மனத்தூயமையுடன் இருத்தலே மிக முக்கியமானது. உடல் தூய்மை அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க தேவை இல்லை.

ध्यानपूजादिकं लॊके द्रष्टर्येव करोति य:
पारमार्थिकधीहीनः स दम्भाचार उच्यते  ।
पुंसस्तथानाचरणमदंभित्वं विदुर्बुधा44
தம்ப விவர்ஜனம் தன்னைப்பற்றி உயர்வாக நினைத்து கொண்டிருத்தல்
தம்பாசாரம்தன்னை அனைவரும் கவனிக்க வேண்டும் என்று எண்ணத்தில் தியானம், பூஜை போன்றவற்றை செய்தல்தன் பெருமையை அனைவரிடத்திலும் தானே சொல்லிக் கொண்டிருத்தல், தன்னைப் பற்றியே எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருத்தல், தன் புகழை தானே சொல்லிக் கொண்டிருப்பவனுக்கு தம்பாசாரி என்று பெயர்.
பாரமார்திக ந தீஹிமேலான ஆத்மாவை பற்றி அவனுக்கு எதுவுமே தெரியாதுஆனால் உடல், மனம், புத்தி இவைகளைப் பற்றிய அறிவுடன் தான் இருக்கின்றான்.
பும்ஸஹ த்தா நஹ அதிகமான அகத்தாய்வு மூலம்தான் நம்மால் இந்த தம்பத்தை விட முடியும்.
அதம்பித்வம் விது புத்தாஹாஇவ்வாறு செய்வதனால் அதம்பித்வத்தை அடைவோம் என்று மகான்கள் கூறுகின்ரார்கள்.
यस्त्वेन दृष्टं सम्यक्च श्रुतं तस्यैव भाषणम्
सत्यमित्युच्यते ब्रह्म सत्यमित्यभिभाषणम्  45
வ்யாவஹாரிக சத்யம்தர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்ட நீதி நெறிகள்
பாரமார்த்திக சத்யம்அனைத்து ஜீவராசிகளுக்குள் இருக்கின்ற சுத்த சைதன்யம்
நாம் உண்மையையே பேச வேண்டும் ஆனால் அது மற்றவர்களை புண்படுத்தி விடும் என்றால் பேசாமல் இருந்திட வேண்டும் அல்லது பொய் சொல்வதில் தவறில்லை.
நம்மால் உறுதி செய்யப்பட்ட உண்மையைத்தான் பேச வேண்டும். மற்றவர்கள் சொல்வதை வைத்து அது உண்மை என்று நம்பி சொல்லக்கூடாதுநம் கண்களால் பார்த்தையும், காதால் கேட்டதையும், நம்பத்தகுந்தவர்களின் வார்த்தைகளால் அறிந்த உண்மையைத்தான் சொல்ல வேண்டும்
தஸ்ய ஏவ பாஷணம்இந்த உண்மைகளை மட்டும்தான் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
ப்ரஹ்ம ஸத்யம்பிரஹ்மத்தை ஸத்யம் என்று
அவி பாஷணம்கூட மற்றவர்களிடம் எடுத்துரைக்கலாம்.

देहादिषु स्वकीयत्वदृढबुद्धिविसर्जनम् ।
निर्ममत्वं स्मृतं येन कैवल्यं लभते बुधः ॥ 46
இது என்னுடையது என்பதிலிருந்து விடுதலையடைதல், உலகத்திலுள்ள எதையும் தனக்கு சொந்தமாக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ கூடாதுஇந்த உண்மையை என்றென்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்இறைவன் மட்டுமே அனைத்துக்கும் சொந்தக்காரன்அவைகள் எல்லாம் இறைவனுடையது என்ற எண்ணத்துடன நாம் எதையும் அனுபவிக்கலாம். இந்த எண்ணம் நமது ஆழ்மனதில் நன்றாக பதிய வேண்டும்நிர்ம்மத்வம் என்றால் சரணாகதி என்று பொருள், இந்த குணமே நம்மை மன அமைதிக்கு அழைத்து செல்லும் என்று மகான்கள் கூறுகிறார்கள்இந்த குணம் இல்லாமல் மோக்ஷத்தை அடைய முடியாதுஇறைவனை குறித்து இந்த எண்ணத்தோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

गुरुवेदान्तवचनैर्निश्र्चितार्थे दृढस्थिति ।
तदेकवृत्त्या तत्स्थैर्यं नैश्र्चल्यं न तु वर्ष्मण: 47
ஸ்தைர்யம்உறுதி,
எடுத்துக் கொண்ட லட்சியத்தை அடைய வேண்டும் என்ற உறுதி. இது உடலுறுதியை முழுவதுமாக குறிக்கவில்லைசூட்சும சரீரமான மனதின் உறுதியை குறிக்கின்றதுவேதாந்தத்தை கற்றுக் கொள்ளும் போது மன உறுதியோடு இருக்க வேண்டும்உபநிஷத்தை குருமுகமாக கேட்கும்போது மனமானது அதையையே நினைத்து விசாரம் செய்து கேட்ட கருத்தில் மனதில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
குருவின் வேதாந்த வார்த்தைகள் மனதில் இருந்து கொண்டு நம்முடைய எல்லா விவகாரத்திலும், செயல்களிலும் பிரதிபலிக்க வேண்டும்நம்முடைய வாழ்க்கை முறையானது இந்த குரு உபதேச வழிப்படி அமைந்திட வேண்டும்மோட்சத்தை அடைய வேண்டும் என்ற ஒரு இலட்சியத்தில் மனம் இருந்திட வேண்டும்உடலும் உறுதியாக இருக்க வேண்டும் ஆனால் அதுதான் நம்முடைய முக்கிய செயலாக இருக்கக்கூடாது.
ந து வர்ஷ்மணஹ உடல் உறுதியை பிரதானமாக குறிக்கவில்லை.

विद्यैश्र्वर्यतपोरूपकुलवर्णाश्रमादिभि:
संजाताहङ्कृतित्यागस्त्वभिमानविसर्जनम् ॥ 48
அபிமான விஸர்ஜனம்பணிவு, எளிமை, விநயம்நம்மிடத்தில் எந்த உயர்வான பொருளோ, அறிவோ, பதவியோ இருந்தாலும் அந்த பெருமையை பறை சாற்றிக் கொள்ளாமல் பணிவுடன் இருக்க வேண்டும்.
வித்யாஉயர்நிலை படிப்பு படித்து முடித்தவிட்டதால் வரும் கர்வம்.
ஐஸ்வர்யம்உயர்பதவி, தலைமை பதவி, சக்தி, அதிக பணம் உடையவன்
தபஸ்பலவிதமான வைதீக விரதங்களை மேற்கொண்டவன்
ரூபம் அழகான லட்சணங்களைக் கொண்ட உடலை அடைந்தவன்.
குலம்உயர்ந்த குலத்தில், குடும்பத்தில் பிறந்தவன்
வர்ணம்உயர்ந்த வர்ணத்தில் இருப்பவன்
ஆஸ்ரம்உயர்ந்த ஆசிரம தர்மத்தில் இருப்பவன்
சஞ்ஜாத அஹங்க்ருதி த்யாக -  மேலே கூறப்பட்ட லட்சணங்களில் உள்ள அபிமானத்தை விட்டுவிட வேண்டும்.
மேற்கூறியதில் எதை அடைந்தாலும் அதனால் கர்வம் அடையக்கூடாதுஎல்லாம் இறைவனுடையது அவர் கருணையான் நான் இப்போது அனுபவிக்கின்றேன் என்ற மனப்பான்மையோடு இருக்க வேண்டும்இறைவன் மீது பக்தி இருந்தால் இந்த மனநிலையோ நாம் இருப்போம்.

त्रिभिश्र्च करणैः सम्यग्धित्वा वैषयिकीम् क्रियाम् ।
स्वात्मैकचिन्तनं यत्तदीश्र्चरध्यानभिरितम् ।
छायेव सर्वदा वासो ब्रह्मविद्धिः सहस्थितिः ॥ 49
நாள்தோறும் இறைவனைக் குறித்து தியானம் செய்வதாலும், நல்லவர்களின் நட்பும், ஆன்மீகத்தில் உண்மையான நாட்டம் உடையவர்களோடு இருத்தலும், மகான்கள் எழுதிய புத்தகங்களை படித்துக் கொண்டிருத்தலும் நம்மை எப்பொழுதும் நம் லட்சியத்தில் வைத்திருக்கும்.
ஈஸ்வர தியானம் பல்வேறு நிலைகளில் இருக்கிறதுஏகரூப ஈஸ்வர தியானம் முதல் நிலையாக கருதப்படுகின்றதுவிஸ்வரூப தியானம் என்பது உயர்நிலையாக கருதப்படுகின்றது. இந்த நிலையில் சாதன சதுஷ்டயத்தை அடைந்தவன் நான ஈஸ்வரன் என்று தியானிக்க வேண்டும். இதுவே ஆத்மதியானம் அல்லது நிதித்யாஸனம்.
ஸமயக் தித்வாஉலக விவகாரங்களிலிருந்து விலகி இருத்தல்
வைஷயிகிம் க்ரியாம்மூன்று நிலைகளிலும் உள்ள விவகாரங்கள்
த்ரிபிஷ்டகரணைமூன்று விதமான கரணங்கள்
ஸ்வாத்மைகசிந்தனம்ஆத்ம ஞானம் ( சிரவண, மனன, நிதித்யாஸனம் )
தத் ஈஸ்வரதியாகம்இதுவே ஈஸ்வர தியானம்
ஸத்சங்கம்நிழலைப்போல சான்றோர்களை தொடர்ந்து சார்ந்திருக்க வேண்டும்.

यद्यदुक्तं ज्ञानशास्त्रे श्रवणादिकमेषु यः ।
निरतः कर्मधीहीनो ज्ञाननिष्टः स एव हि ॥ 50
வேதாந்த சாஸ்திரம் படிக்கத் தொடங்கினால் முழு மனதோடு படித்தால்தான் ஞானத்தை அடைய முடியும்.
வேதாந்தத்தை முழுமனதோடு படிப்பதற்கு சிரவணம், மனனம், நிதித்யாஸனம்சாதன சதுஷ்டயத்தை தொடர்ந்து கடைப்பிடித்து அதுவே நிரந்தரமான குணமாகிவிட வேண்டும்
ஞானசாஸ்திர ஸ்ரவணாதிக உக்தம்ஞான சாஸ்திரத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும், முறையாக தகுதி வாய்ந்த குருவிடம் கற்க வேண்டும்இதற்கு சிரவணம் என்று பெயர், குருவிடம் கற்றதை திரும்ப திரும்ப நினைத்துப்பார்த்து, ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை குருவின் துணைக் கொண்டு நீக்கிக் கொள்ள வேண்டும் இதற்கு மனனம் என்று பெயர்அடைந்த ஞானத்தில் நிலைபெற எடுக்கும் முயற்சிக்கு நிதித்யாஸனம்அடைந்த ஞானத்தில் வாழ்க்கை வாழ வேண்டும்.
ஏஷி யஹ நிரதவேதாந்தத்தில் கூறப்பட்ட நெறிபடி வாழ்க்கையை வாழ வேண்டும், எடுத்துக் கொண்ட லட்சியத்திலிருந்து விலகாமல் இருக்க வேண்டும்.
கர்மதீஹி நஹகர்ம காண்டத்தை சிறிது சிறிதாக விட்டுவிட வேண்டும்முக்கியமாக பிராயசித்த கர்மத்தை விட்டுவிட வேண்டும்கர்ம பலனால் நாம் அனுபவிக்கும் துன்பத்தை அனுபவித்து தீர்த்து விட வேண்டும்இவ்வாறு உள்ளவனே ஞான நிஷ்டன், ஞான சாதகன்.

धनकान्ताजवरादीनां प्राप्तकाले सुखादिभि:
विकारहीनतैव स्यात्सुखदुःखसमानता ॥ 51
சுக துக்க சமானதாசுக-துக்கங்களை சமமாக பாவித்தல்எல்லா நிலைகளிலும் மனதை ஒரே பாவத்துடன் வைத்திருக்க வேண்டும். பொறுமையுடன் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் நம் மனது சோர்வடையக் கூடாது, காயப்படக்கூடாதுஎந்த சூழ்நிலையாலும் மனம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் நிறைவுடன், அமைதியுடன் இருக்க வேண்டும். கோபத்துடன் விளைவு நிலைமையை ஆராய்ந்தறியும் சக்தியை பறித்துவிடும்மனம் கோபத்தில் இருக்கும்போதோ, குழப்பபத்தில் இருக்கும்போதோ எந்த முடிவும் எடுக்கக்கூடாதுமுடிவு எடுப்பதை தள்ளி போட வேண்டும்எப்பொழுது மனம் அமைதியுடன் இருக்கின்றதோ அதுவே முடிவு எடுக்க தகுந்த நேரமாகும்.
தன காந்தாசெல்வமும், வாழ்க்கைத்துணையும் இன்பத்தை கொடுக்கும் ஆதாரங்கள்,
ஜ்வரம்உடல் காய்ச்சலும்
ஆதினா ப்ராப்த காலே இவைகளை அனுபவிக்கும்போது
விகாரஹீன தஹ ஏவ  - இந்த இன்ப-துன்பங்களால் நாம் துவண்டு விடாமல் இருக்க வேண்டும்.
நம்மால் எந்த சூழ்நிலைகளையும் சமாளிக்க முடியும், கட்டுபடுத்த முடியும்.



श्रेष्टं पूज्यं विदित्वा मां मनयन्तु जका भुवि ।
इत्यास्क्त्या विहीनत्वं मानानासक्तिरूच्यते ॥ 52
மான அனாசக்திமற்றவர்கள் தன்னை புகழ வேண்டும், நல்ல வார்த்தைகளால் பாராட்ட வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும் குணம்
எல்லாரு என்னை பாராட்ட வேண்டும், நான் மிகப்பெரிய மனிதன் என்று புக்ழ வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும் குணம்அனைவருடைய பாராட்டுதலுக்கும் மரியாதைக்கும் உரியவன் நான் என்று தன்னை பற்றி உயர்வாக நினைத்துக் கொள்ளும் குணம். இப்படிவட்ட குணத்திற்கு அதம்பத்வம் என்று பெயர்இந்த மாதிரியான எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் இருக்கும் குணத்திற்கு அமானித்வம் அல்லது பணிவு, என்று பெயர்.   மானித்வம் என்பது தான் உயர்ந்தவன் என்று எண்ண அளவில் இருத்தல்அதை செயலளவில் கடைப்பிடிப்பதற்கு தம்பித்வம் அல்லது பணிவுடன் கூடிய அறிவு.

सच्चिन्तनस्य सम्बाधो विघ्नोऽयं निर्जने ततः ।
स्थेयमित्येक एवास्ति चेत्सैवैकान्तशीलता ॥ 53
ஏகாந்தஷீலதாதொடர்ச்சியாக தனிமையில் இருந்து பழக வேண்டும்
அயம் விக்னஹஆன்மிக வளர்ச்சிக்கு தடையாக இருப்பது அதிக அளவு மனிதர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்வதால் வருவதுஇந்த நிலையானது நம்முடைய ஆன்மீக வளர்ச்சிக்கு தடையாகவும், பின்னடையவும் செய்து விடும்.
எனவே அவ்வப்போது தனிமையில் இருந்து குருவிடம் இருந்து கற்ற வேதாந்த கருத்துக்களை சிந்தித்து பார்த்து, ஏதேனும் சந்தேகங்கள் வந்தால் அதை குருவின் துணைக்கொண்டோ, சாஸ்திரத்தின் துணைக் கொண்டொ நீக்கி விட வேண்டும்தன்னிடமுள்ள தீயபண்புகளை நீக்கி, நற்பண்புகளை வளர்ந்துள்ளதான் என்று சுய சோதனை செய்து அதனை வளர்த்திட வேண்டும்மௌனமாக இருப்பதும் தனிமையில் இருப்பதற்கு சமமானதாக கருதப்படும்.

संसारबन्थनिर्मुक्तिः कदा झटिति मे भवेत् ।
इति या सुदृढा बुद्धिरीरिता सा मुमुक्षुता ॥ 54
முமுக்ஷூத்வம்இந்த இடத்தில் இதற்கு பொருள் சம குணத்தை அடைதலை குறிக்கிறது
மோக்ஷத்தை அடைய வேண்டும் தீவிர ஆசை, நம்மை சம்சார பந்தத்திலிருந்து விடுதலை அடைய உதவும்என்னுடைய மனமானது வெளியே உள்ள சூழ்நிலைகளாலும், பொருட்களாலும், மனிதர்களாலும் கட்டுபடுத்தப்படுகின்றது. அது இந்த உலகத்திலுள்ள பொருட்களுக்கு அடிமைப் போல் செயல்படுகின்றதுமனம் என் வசத்தில் இல்லைஅது என்னிடத்தில் இருந்தாலும் என் கட்டுப்பாட்டில் இல்லை. இவ்வாறு மற்றவர்களுக்கு அடிமையாக இருக்கும் மனம் நமக்கு சுமை போல்தான் இருக்கும்அது நம் கட்டுப்பாட்டிற்குள் இருந்தால் அது இறைவனில் அருள்தான்முதலில் நாம் இந்த அடிமைத்தனத்தை புரிந்து கொள்ள வேண்டும்பிறகு அதிலிருந்து விடுதலையடைந்திட வேண்டும்இதுதான் நம்முடைய முதல் கடமையாக இருக்க வேண்டும், ஏனென்றால் அதுதான் ஒவ்வொரு கணமும் நம்முடைய வாழ்க்கையை பாதிக்கிறது.
கதா ஜடிதி நிர்முக்தி பவேத் சம்சார பந்த நிர்முக்தி- அடிமைப்பட்டு கொண்டிருக்கும் மனதை விடுவித்து விட்டால் உடனே சம்சார பந்தத்தில்ருந்து விடுவிக்கப்படுகிறோம்.
இதி ஸ த்ருஷ்டா புத்தி இதுவே முமுக்ஷூத்வம் என்று கூறப்படுகின்றது. இங்கே முமுக்ஷூத்வம் என்பது சம குணத்தை அடைதலை குறிக்கிறது
இந்த தகுதியானது நற்பண்புகளை நம்மிடைய வளர்வதற்கு உதவி புரிகின்றது.
இத்துடன் சம தகுதியை அடையும் வழியை கூறும் பகுதி முடிவடைகிறது

தமத்தை அடையும் உபாயம் ஆரம்பிக்கிறது.
ब्रह्मचर्यादिभिर्धर्मैर्बुद्धर्दोशनिवृत्तये ।
दण्डनं दम इत्याहुर्दमशब्दार्थकोविदा॥ ५५ 55 ebook page no १२८
எந்த செயல்முறையானது மன அமைதியை அடைவதற்கும், நற்பண்புகளை அடைவதற்கும் உதவுகின்றதோ அதற்கு தம என்று கூறலாம்.
·         தண்டனம்ஒழுக்கம்தீய பழக்கத்திற்கு வேண்டாம் என்று சொல்வது
·         நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல்
·         புத்தியிலுள்ள குறைகளை நீக்கி கொள்வதற்கும், மனச்சோர்வு, மன இறுக்கம் இவைகள் வராமலிருக்கவும் நற்பண்புகள் ஆயுதமாக உதவும்.
இவைகளை அடைவதே தமம் என்று கூறப்படுகின்றது.

तत्तद्वृत्तिनिरोधेन बाह्येन्द्रियविनिग्रहः ।
योगेनो दम इत्याहुर्मनसः शान्तिसाधनम् ॥ 56
ஞானேந்திரியங்கள்தான் மனக்குழப்பத்திற்கும், மன உளைச்சலுக்கும் முக்கிய காரணமாக விளங்குகின்றது. அதே சமயத்தில் பல நல்ல விஷயங்களை அறிவதற்கும் இவைகளே காரணமாக அமைகின்றன. அதனால் இவைகளை நல்ல விஷயங்களை கிரகிக்க மட்டும் உபயோகித்தோமானால் நம் மனம் அமைதியாக இருக்கும். புலன்களை நுகர விரும்பும் விஷயங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும்நல்ல விஷயங்களை மட்டும் கிரகிக்க அவைகளை பழக்க படுத்த வேண்டும்வேண்டாத விஷயங்களை அனுபவிக்க விரும்பும் அவைகளின் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்இந்த செயல்முறையை தமஹ என்று கூறப்படுகிறதுஇவ்வாறு செய்யும் போது மனமானது தீய எண்ணங்களை உருவாக்கி அதனால் குழப்பத்தை அடையாதுமனதிற்கு துயரத்தை கொடுக்கும் வழிகளிலிருந்து காப்பற்றபடுகிறது.
·         இயற்கையாக வெளியே செல்லும்படி இருக்கும் புலன்களை தடுத்தி நிறுத்தி உட்புறமாக செல்லும்படி ஒழுங்குபடுத்த வேண்டும்.
·         இதை நாமாகவே விரும்பி, முழுமுயற்சியுடன் செயல்படுத்த வேண்டும்.
·         தீய பழக்கத்திலிருந்தும், தீய எண்ணங்களையும் மனதில் தோன்றாமல் இருப்பதற்கு முழுமுயற்சி எடுக்க வேண்டும்.
·         மனதை தீய வழிகளுக்கு கொண்டு செல்லும் போது உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும். சிறிதும்கூட யோசிக்ககூடாது.
·         யோக சாஸ்திரத்தில் கூறியுள்ள பிரத்யாஹாரம் என்ற சொல்லுக்கு மன அமைதியை கொடுக்கும் வழிகள் என்று பொருள்.
·         நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்முதலில் வலுக்கட்டாயமாக இதை செய்திட்டால் பின்னால் இவைகளே நமது இயலபான குணங்களாகி விடும்.
·         புலனடக்கம், புலனொழுக்கம் என்ற இந்த இரண்டும் தமத்தை அடைவதற்கு உரிய செயல்முறையாகும்.
·         எல்லா புலன்களும் குழந்தையை போல அடிக்கடி வெளியே செல்லவே முயற்சிக்கும், நாம்தான் அதை தடுத்து நிறுத்தி நம் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.
தத் தத்3 வ்ருத்தி நிரோதஹஅந்தந்த புலன்களை ஒழுங்குபடுத்துதல், நெறிபடுத்துதல்
பா3ஹ்ய இந்திரிய வினிக்ரஹ வெளியே செல்லத்துடிக்கும் புலனகளை கட்டுப்படுத்த வேண்டும், நெறிப்படுத்த வேண்டும்.
மனஸஹ சாந்தி ஸாதனம்புலனடக்கம் உடனடியாக மன அமைதியைக் கொடுக்கும்.

इन्द्रियेष्विन्द्रियार्थेषु प्रवृत्तेषु यदृच्छया ।
अनुधावति तान्येव मनो वायुमिवानलः ॥ 57
புலன்களை அவை விருப்படி செயல்பட விட்டோமானால் மனமும் அதனுடன் சென்று விடும்இதனால் மனம் தன்னிச்சையாக செயல்பட முடியாமல் புலனகளின் செயல் விளைவுகளை அனுபவிக்க நேரிடும்மனம் புலன்களின் அடிமையாக இருந்து புலன்கள் அனுபவிக்கும் விஷயங்களை அனுபவித்து அதனால் துயரத்தைத் தான் அடையும்.
இந்திரியேஷ்வி இந்திரியார்தேஷு ப்ரவ்ருத்தேஷுபுலன்களை அதன் விருப்பத்திற்கு விட்டு விட்டால்
வேதாந்தத்தை படிக்கும் மாணவர்கள் மனம் நல்ல நிலையில் இருக்க வேண்டும், அதாவது அமைதியுடன் இருக்க வேண்டும்அலைபாய்ந்து கொண்டு இருக்கக் கூடாதுஅப்போதுதான் வேதம் உரைக்கும் கருத்துக்கள் மனதில் பதியும்.  மேலும் புலனடக்கம் இல்லையென்றால் சாதன சதுஷ்டயம் என்கின்ற தகுதியை அடையவே முடியாது.
புலன்கள் காற்றாகவும், மனதை தீயாகவும் கற்பணை செய்து பார்த்தால், காற்று வேகமாக வீசினால் தீயானது அதிகமாகி பொருட்களை நாசம் செய்வது போல புலன்கள் மனதை அடக்கியாண்டு நம் ஆன்மீக லட்சியத்தை அழித்து விடும்.

इन्द्रियेषु निरुद्धेषु त्यक्त्वा वेगं मनः स्वयम् ।
सत्त्वभावमुपादत्ते प्रसादस्तेन जायते ।
प्रसन्ने सति चित्तेऽस्य मुक्तिः सिद्धयति नान्यथा ॥ 58
புலன்களும் மனமும் இணைந்தே செயலபடுகின்றனபுலன்கள் நல்ல வழியில் சென்றால் மனமும் நன்றாக செயல்படும், ஆரோக்கியமாக இருக்கும்இதனால் நம்மிடையே நல்ல குணங்கள் வளரும் பின்பு திடமாகும்.
இந்திரியேஷு நிருத்தேஷுபுலனகளை முறையாக நல்வழியில் செல்லுமாறு பழக்கிவிட்டால் மனதிற்கு புலன்கள் உதவி இல்லாததால் தவறான வழிக்கு செல்லாதுஅது வலிமை இழந்துவிடுவதால் அதனை கட்டுபடுத்துவது, நெறி படுத்துவதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இது ஆன்மீக வழியில் நாம் செல்வதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
ஸ்வயம் மனஹ வேகம் த்யக்த்வாமனம் புலனகளின் உதவியில்லாமல் சக்தி இழந்து விட்ட நிலையில் அதனால் தன்னிஷ்டத்திற்கு செயல்பட முடியாதுஇதனால் ரஜஸ் குணமானது சென்று விடும், சத்துவ குணம் மேலோங்கும்இந்த நிலையை மன அமைதி, சாந்தி என்று கூறப்படும்இவ்வாறு மனமானது மயக்கத்திலிருந்தும், சோர்விலிருந்தும், இறுக்கத்திலிருந்தும் விடுவிக்கப்படுகிறது
தேன ப்ரஸாத ஜாயதேமனம் அமைதி நிலைக்கு செல்லும்.
ஆயாஸம்மன சோர்வு, மனதளர்ச்சி à சிடுசிடுப்பை ஏற்படுத்தும், அது கோபத்தில் சென்று முடியும்.
ஆன்மீக பாதையில் செல்வதனால் நாம் அனாயாஸமாக் இருக்கலாம்.
ஸித்தே ப்ரசன்னே ஸதிமன அமைதியே அறிவை அடையும் நிலையில் இருக்கும்.
ரஜோ குணம் அதிகமானால் செயல் அதிகமாகும், சத்துவ குணம் அதிகமானால் அறிவு வளரும்.
முக்தி ஸித்யதிவேதாந்த சிரவணத்திற்கேற்ற மனநிலையை கொடுக்கும்.
ந அன்யதாஇதைத் தவிர வேறு வழியில்லைதமத்தை தவிர வேறு வழி கிடையாது.

இனி திதிக்ஷாவை பற்றிய விளக்கம்.
आध्यात्मिकादि यद्दुःखं प्राप्तं प्रारब्धवेगत्त
अचिन्त्या तत्सहनं तितिक्षेति निगद्यते ॥ 59
திதிக்ஷா என்பது மன உறுதியை குறிக்கின்றதுமனமானது எல்லா நிலைகளிலும் ஒரே மாதிரியாக இருப்பது. நம்முடைய பிராரப்த பலனை அனுபவிப்பதற்கு மனம் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும்சில கர்மபலனை தடுப்பதற்கு பிராயசித்த கர்மம் செய்யலாம்ஆனால் எல்லா பிராரப்த கர்ம பலனகளையும் இவ்வாறாக நீக்கி கொள்ள முடியாது. அதனால் இந்த பலன்களை அனுபவித்துதான் தீர்க்க வேண்டும்இதனால வரும் இன்ப-துன்பங்களை பொருட்படுத்தாமல் நம்முடைய வேதாந்த விசாரத்தில் தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டும்துன்பத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும் அது யாரிடமிருந்து வந்தாலும் நாம் நிந்தனை செய்யாமல் அனுபவித்து தீர்க்க வேண்டும்.
அத்யாத்மகாதி -  நம்மிடமிருந்தே வரும் துன்பம்.
வெளி சூழ்நிலைகளிடமிருந்து வரும் துன்பம், இயற்கையிலிருந்து வரும் துன்பம்
இவைகளை எந்தவித நிந்தனையுமின்றி பொறுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் வர வேண்டும்.
இவ்விதம் உடலுக்கும், உள்ளத்தும் வரும் துன்பத்தை தாங்கும் சக்தியை அடைந்து விட்டால் அது வேதாந்த சிரவணத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
வன்முறை  சகிப்புத்தன்மை, இல்லாத இடத்தில்தான், பொறுமின்மையால்தான் வெளி வருகின்றது. இது வேதாந்த சிரவணத்திற்கு தடையாக இருக்கின்றது. விவேகத்தினால் வரும் வன்முறையை வேதாந்தம் அனுமதிக்கின்றது.

ब्रह्मचर्यमहिंसा च साधूनामप्यगर्हणम् ।
पराक्षेपादिसहनं तितिक्षोरेव सिद्धयति ॥ 60
பிரம்மசர்யம் மற்ற பண்புகளை, தகுதிகளை வளர்த்துக் கொள்வதற்கு உதவி புரிகின்றது.
பிரம்மசர்யம் என்பது எளிமையாக வாழ்வது, வசதிகளை தியாக செய்துவிட்டு வாழ்வது, குருகுலத்தில் இருந்து சாஸ்திரம் படிப்பது போன்ற நியதிகளை உடைய ஆசிரமம்
அஹிம்ஸாஎந்த உயிரையும் துன்புறுத்தாமல் இருப்பது
சகிப்புதன்மை இல்லாதவர்கள்தான் அறிவிலும், ஒழுக்கத்திலும் மேலான சான்றோர்களை மதிப்பதில்ல, அவமரியாதையுடன் நடந்து கொள்கிறார்கள்.
ஸாது நிந்தாசாதுக்களை அவமதிப்பதுதான் மிகப்பெரிய பாவமாக சாஸ்திரம் கருதுகின்றது.
திதிக்ஷா இருந்தால் இந்த மிகப்பெரிய பாவத்தை செய்யும் நிலை ஏற்படாது.
பரா ஆக்ஷெபாதி ஸஹனம்மற்றவர்கள் கூறும் குறைகளை பொருட்படுத்தாமல் இருத்தல்.
யாரை பற்றியும் குறைக் கூறக்கூடாது, மற்றவர்கள் நம்மை பற்றி குறை கூறினாலும் அதை பொறுத்துக் கொள்ள வேண்டும்அப்படி கூறும் குறையானது உண்மையாக் இருந்தால் அதை திருத்திக் கொள்ள வேண்டும்இத்தகைய குணங்கள் திதிக்ஷா என்ற தகுதியை அடைவதினால்தான் சாத்தியமாகும்.

No comments:

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...