ப்ருஹதாரண்யக உபநிஷத்-பகுதி-4
பகுதி-4 : மைத்ரேயி ப்4ராமனம் தொடர்ச்சி
திருத்தம் செய்யப்பட்டது – 07-03-2022
ஸ்லோகம்:5
இந்த
மந்திரத்தில் நான்கு கருத்துக்கள் கூறப்பட்டிருக்கிறது.
1. ஆபாஸ சாத்திய தரிசனம் – வாழ்க்கையில் அடைய வேண்டிய லட்சியங்கள் என்று நாம் நினைப்பதெல்லாம் உண்மையில் லட்சியமல்ல என்று எடுத்துக் காட்டுவது2. சாத்திய தரிசனம்: எது நம்முடைய உண்மையான, பரம லட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டியது.3. சாத்திய பிராப்தி உபாயம்: அந்த சாத்தியத்தை அடையும் வழியை கூறுதல்4. சாத்தியத்தின் தன்மை - மோட்ச ஸ்வரூபம், சாத்திய ஸ்வரூபம். அதனால் அடையும் பலன்.
ஆபாஸ
சாத்திய தரிசனம்
நம்மையறியாமலே
நாம் வேண்டாததைதான் உண்மையான லட்சியம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இது பொய்யான லட்சியம் என்று நீக்கி உண்மையான லட்சியமானது
விளக்கப்படுகிறது.
நாம்
ஏதோ ஒன்றை எதிர்ப்பார்த்து ஏதோ ஒன்றை லட்சியமாக கொண்டு செயல்படுகிறோம். நாம் நிச்சயமாக அடைவோம் என்று கருதும்
நினைப்பானது லட்சியமாக தோற்றமளிக்கிறது என்று இங்கு விளக்கப்படுகிறது. எல்லோரும் செல்வத்தைத்தான் லட்சியமாகக்
கொண்டு செயல்படுகிறார்கள்.. பிறகு இன்பம் தரக் கூடியதும், வசதியை தரக்கூடியதுமான
பொருளை அடைவதற்கும், செல்வத்தை அடைவதற்கும் செயல்படுகிறோம்.
இந்த பணத்தை அடைவது லட்சியமாக கொண்டிருப்பதற்கு காரணம், இது எனக்கு மகிழ்ச்சியையும், சுகத்தையும் கொடுக்கும்
என்ற எதிர்ப்பார்ப்பினால்தான். பணம் அதிகம் வந்ததும் உறவினர்களின்
அன்பை இழந்து விடுவார்கள். தாம் சேர்த்து வைத்த பணத்தை இவர்களும் அனுபவிப்பார்களே என்ற பொறாமை வந்து விடும்.
அதனால் அவர்களின் உறவை துண்டித்துக் கொள்வார்கள்.
எவ்வளவுதான்
பணம் சம்பாதித்தாலும்,
நாம் எதிர்ப்பார்ப்பது அன்புதான். தன் மீது எப்போதும் அன்பு செலுத்துபவர்கள்
இருக்க வேண்டும். தான் அன்பு செலுத்தக்கூடிய மற்றவர்கள் அருகில்
இருக்க வேண்டும். பணத்தை
சம்பாதிப்பதையே லட்சியமாக கொண்டிருப்பதே நாம் வாழ்க்கையில் செய்யும்
மிகப்பெரிய தவறாகும். இதனால் எதிர்ப்பார்க்கும் அன்பை இழக்கிறார்கள். அன்பு செலுத்த ஆட்கள் இல்லாமல் நிம்மதியில்லாமல்
இருக்கிறார்கள். அன்புதான்
லட்சியமாக கொள்ள வேண்டும் ஆனால் பணத்தை லட்சியமாக கொண்டு வாழ்க்கையை வீணடிக்கிறார்கள். இன்பத்தை பணத்தால் அடையலாம் என்ற
நினைப்பை ஒழித்து நம் மீது அன்பு செலுத்தி, நாம் அன்பு செலுத்தக்கூடிய
உறவினர்கள், நண்பர்கள் வேண்டும் என்ற லட்சியத்தை உடையவர்களாக
இருப்பவர்களுக்குத்தான் யாக்ஞவல்கியரின் உபதேசம் ஆரம்பமாகிறது. ஆனாலும் இது நம்மை ஒரு நிலைவரைதான்
பக்குவப்படுத்தும்.
இந்த
அன்பு என்ற உணர்விலும்,
ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. இதுவும் லட்சியமாக கொள்ளக் கூடாது. நாம் நேசிக்கும் எந்த உயிரும் அநித்தியமானதுதான்,
நாமும் நித்தியமானவர்கள் இல்லை. நாம் செலுத்தும் அன்பும் சில நிபந்தனைகளோடுதான்
இருக்கிறது. நல்ல குணம்,
நமக்கு நெருங்கியவர்கள் போன்ற நிபந்தனைகளோடுதான் நாம் அன்பு செலுத்திக்
கொண்டிருப்போம். இந்த
அன்பும் நிலையற்றது, முடிவுள்ளது இறுதியில் துயரத்தைக் கொடுக்கும்,
எனவே இதுவும் ஆபாஸ சாத்தியமாக இருக்கிறது, சாதனமாக
வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் உண்மையான சாத்தியம்
கிடையாது.
இந்த
உண்மையை புரிந்து கொண்டால்,
அந்த அன்பில் நமக்கு வைராக்கியம் ஏற்படும். அதாவது அதைச் சார்ந்து இல்லாதவனாக
இருப்போம். அன்புக்கு
அடிமையாக மாட்டோம். ஆகவே
நாம் கொடுக்கும் அன்பானாது, வாங்கும் அன்பானது முழுமையானதாக இருக்காது,
அப்படி இருக்கவும் முடியாது. இந்த அறிவினுடைய பலனால் இந்த அன்பானது
நமது சாத்தியமாக இருக்க முடியாது என்று அடையும் அறிவுதான்.
உண்மையில்
யாரும் யாரையும்,
எதையும் முழுமையாக நேசிக்க முடியாது. நாம் யாரையாவது நேசிக்கிறோமென்றால்
அவர்களிடமிருந்து நாம் அனுபவிக்கும் அன்பு, மகிழ்ச்சி,
மனநிறைவு போன்றவைகளால்தான்.
இவைகள் கிடைக்கவில்லை என்றால் நாம் அவரை நேசிக்க மாட்டோம். ஆகவே நாம் நமக்காகத்தான்
பிறரை நேசிக்கிறோம். நம்முடைய நட்பில், உறவில் மற்றவர்கள் மகிழ்ச்சி அடைவதால்தான்
அவர்களும் நம்மை நேசிக்கிறார்கள். யாரும் யாரையும் நிபந்தனையின்றி நேசிக்க முடியாது. இந்த அறிவினால்தான் நமக்கு வருவது
வைராக்கியமல்ல. நான்
யாரையும் நிபந்தனையின்றி நேசிக்க முடியாது, அதே மாதிரி மற்றவர்களாலும்
என்னை நிபந்தனையின்றி நேசிக்க முடியாது என்ற அறிவைத்தான் நாம் அடைய முடியும். இந்த வைராக்கியத்தின் விளைவு அனாத்மாவிலிருந்து
நிவிருத்தியாகும். அனாத்மாவிலிருந்து
கிடைக்கும் சிறிய இன்பங்களைத்தான் அடைகிறோம். முழுமையான இன்பத்தை அடைவதில்லை இதுவே
நம்முடைய லட்சியமாக, சாத்தியமாக இருக்க வேண்டும். எனவே ஆத்மாதான் நாம் அடைய வேண்டிய முடிவான சாத்தியமாக இருக்கிறது என்று புரிந்து
கொள்ளலாம்.
விசாரம்: [யாரும் நம்மை நேசிக்க முடியாது;
நாமும் யாரையும் நேசிக்க முடியாது.]
1. எது என்னுடைய விருப்பத்திற்குப்பட்டதோ அதுதான் என் லட்சியமாக இருக்கும். உதாரணம்: உணவு.2. எதை நாம் உண்மையிலே விரும்புகிறோம்? நாம் விரும்புவது ஆனந்தம், சுகம். இதை இரண்டும் சேர்த்து பார்த்தால் ஆனந்தத்தை அடைவதுதான் நம் லட்சியமாக, சாத்தியமாகிறது.3. இந்த ஆனந்தம் எங்கேயிருக்கிறது? அது இருக்குமிடம் ஆத்மா. அதுதான் ஆனந்த ஸ்வரூபம், நாமே ஆனந்த ஸ்வரூபம்.4. இப்போது நான்தான் அதாவது ஆத்மாதான் சாத்தியமாகிறது.
நான்
என்னைத்தான் நேசிக்கிறேன். இது எல்லோரிடத்திலும் இயற்கையாக இருக்கிறது
மற்றதெல்லாம் காலத்தால் என்னால் நேசிக்கப்படுகிறது. எல்லா மனிதர்களும் விதிவிலக்கில்லாமல்
தன்னைத்தான் நேசிக்கிறார்கள். இது சாமான்யமாக, இயற்கையாக, நிபந்தனையற்றதாக
இருக்கிறது. நான் என்னைத்தான்
விரும்புகிறேன் எனவே நானும் ஆனந்தமும் ஒன்றேதான். அதாவது நான் ஆனந்த ஸ்வரூபம் நான்
என்பது என்னுள்ளே இருக்கும் ஆத்மாதான்.
சில
சமயங்களில் தன் மீது வெறுப்பும் வருகிறது, சிலர் தாங்க முடியாத துயரத்தால்
புத்தியின் தவறான முடிவால் துயரத்திலிருந்தோ, அவமானத்திலிருந்து
விடுவித்துக் கொள்வதற்காக தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்கிறார்கள். அதுபோல நம் மீதுள்ள வெறுப்பானது நம் மீதுள்ள பற்றைத்தான் நிலை நாட்டுகிறது. நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்வதும்
நம் மீதுள்ள அதீத பற்றுதான் காரணம்.
நாம்
உண்மையில் இன்பம் தரும் பொருட்களை விரும்புவதில்லை, அது கொடுக்கும் இன்பத்தைத்தான்
விரும்புகிறோம், அதுவே நமது சாத்தியமாக இருக்கிறது.
மந்திர
விளக்கம்:
பர்த்யூ
காமாய:
கணவனின் பொருட்டு, கணவனின் விருப்பத்திற்குரியவளாக
இருப்பதில்லை. தனக்கு
பயன் தருவதாக இருப்பதால் கணவன் விருப்பத்துக்குரியவனாகிறான். கணவன் மனைவிக்காக அவளை விரும்புவதில்லை. தனக்கு இன்பம் தருவதால் மனைவி விருப்பத்திற்குரியவளாக
இருக்கிறாள். அதேபோல
நம்முடைய குழந்தைகளையும், சொத்துக்களையும், நற்பண்புகளுடைய சான்றோர்களையும், நாட்டை ஆள்பவர்களையும்,
அழகிய இடங்களையும், நாட்டையும், வழிபடும் தேவர்களையும், மற்ற உயிர்களையும், மற்ற அனைத்தும் நாம் விரும்பும் நோக்கம், அவைகளிடத்திலிருந்து
அடையும் இன்பத்திற்காகவும், பயனுக்காகவும்தான். பலன் இல்லையென்றால் அவைகளே நமக்கு
துயரத்தைக் கொடுப்பதாக இருக்கும். இதிலிருந்து நமது சாத்தியம் அனாத்மா அல்ல என்று நன்கு விளங்குகிறது.
ஆத்மாதான்
நாம் அடையத்தக்கது,
த்ருஷ்டவ்ய – பார்க்கபடவேண்டியது;
அபரோக்ஷா ஏதவ்யஹ
–
ஆத்மாவை அனுபவப்பூர்வமாக அறியப்பட வேண்டும்.
அதை
ஒரு பொருளாக இல்லாமல் அறிய வேண்டும். நானே ஆத்மா என்று அறிய வேண்டும்.
ஆத்மாதான் நாம் அறிவதற்கு யோக்தையான ஒன்று. இதுதான் நாம் அடைய வேண்டிய உண்மையான
சாத்தியம் என்று குறிப்பிடப்படுகிறது.
இந்த
சாத்தியத்தை அடைவதற்கு ஸ்ரோத்ரம் (கேட்டல்), மந்தம் (மனனம்), நிதித்யாஸனம்
(சிந்தித்தல்) ஆகியவைகள் சாதனங்களாக சொல்லப்பட்டு
இருக்கின்றது.
आत्मनस्य श्रोतव्यो- சிரவணம்
ஆத்மாவை
கேட்க வேண்டும் என்றால் அதை அடையும் அறிவை உபதேசிக்கின்ற வேதாந்தத்தை குருமுகமாக கேட்டறிய
வேண்டும். உன்னுடைய முகத்தைப் பார் என்றால்,
முகத்தை நிலைக்கண்ணாடியில் சென்று பார்ப்பார். அவர் முகத்தை பார்ப்பதற்கு நிலைக்கண்ணாடி
என்ற கருவி தேவைப்படுவதைப் போல ஆத்மாவை அறிய வேதாந்தத்தை குருமுகமாக கேட்டறிய வேண்டும். ஆத்மாவை அடைதல் பரமானந்தத்தை அடைந்ததைப்
போன்றதாகும். இதுவே நம்
லட்சியமாக இருக்க வேண்டும். மகாவாக்கியத்தை புரிந்துக் கொள்ளும் வரை வேதாந்தத்தை கேட்க வேண்டும். இதனால் அடையும் பலனான அபரோக்ஷ ஞானம் (தெளிவான ஞானம்) கிடைத்து
விடும்.
आत्मनस्य मन्तव्यो – மனனம்
வேதாந்தத்தை
கேட்ட பின்னர் அதை மீண்டும் மீண்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆத்ம ஞானத்தை அடைவதற்கு இரண்டு தடைகள்
(பிரதிபந்தம்) உண்டு. அவைகள் சந்தேகம் (சம்ஷயம்), தப்பாக புரிந்து கொள்ளுதல் (விபர்யயம்) என்று கூறுவர். அடைந்த அறிவில் சந்தேகம் வந்தால் அது அறிவுக்குரிய தகுதியை இழந்து விடும். இந்த சந்தேகத்தை யுக்தியை பயன்படுத்தி
நம்முடைய அறிவை பிரதானமாக வைத்து உபநிஷத்தின் உதவியைக் கொண்டு நிவர்த்தி செய்ய வேண்டும். சந்தேகம் வரக் காரணம் நம்முடைய அனுபவமேயாகும். நாம் அனுபவிக்கும் இன்ப-துன்பங்கள் அனாத்மாவுக்குத்தானேயன்றி ஆத்மாவுக்கல்ல என்று உறுதி செய்து கொள்ள
வேண்டும். மற்ற மதத்தின்
கருத்துக்களால் அடையும் சந்தேகங்களையும் நீக்கி நம்முடைய அறிவே சரியானது என்று உறுதியக
இருக்க வேண்டும்.
आत्मनस्य निदिध्यासितव्यॊ – நிதித்யாஸனம்
நாம்
அடைந்த அறிவில் நிலையாக நிற்க முடியாத நிலை ஏற்படும். இந்த அறிவே சுபாவமாக வேண்டும். இதற்கு நிதித்யாஸனம் செய்ய வேண்டும்.
அதாவது அடைந்த அறிவிலே நிலையாக நிற்க பழக வேண்டும். இந்த ஞானத்தின் பலனானது பயம்,
வெறுப்பு, விருப்பு, பொறாமை
போன்ற தீய குணங்களெல்லாம் நீங்கி புதியதாக ஞானத்தை அடைந்ததைப் போல் உணர்வோம். அடைந்த ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு
நம்மிடையே உள்ள தீய எண்ணங்களையெல்லாம் நீக்கிட வேண்டும்.
விசாரம்: तव्य - வேண்டும்
ஞான
காண்டத்தில் இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை எதுவும் கிடையாது. ஆனால் கர்ம காண்டத்தில் சொல்லப்பட்டிருப்பதை
சொல்லியபடி செய்ய வேண்டும். விதி வாக்கியங்கள் பொதுவாக கிடையாது. அப்படியிருந்தால் அதை எப்படி எடுத்துக்
கொள்ள வேண்டும் அல்லது எப்படி புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இது அறியப்பட வேண்டியதை
அழுத்தம் கொடுத்து சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
आत्मा द्रुष्टव्य : இது விதி வாக்கியம் என்று
சொல்ல முடியாது.
இங்கு செயல்படு என்று ஆணையிடவில்லை. ஆத்மாதன் உனது லட்சியம், அறியப்படவேண்டியது என்று சொல்வது விதி வாக்கியமாகாது. கர்ம விவகாரம் என்பது வேறு,
ஞான விவகாரம் என்பது வேறு.
ஞான விவகாரத்தில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பே கிடையாது. கர்மம் என்று வந்துவிட்டால் கர்த்தாவுக்கு
தேர்ந்தெடுக்கும் வாய்ப்புண்டு. விதி எங்கே பிரயோகிக்க முடியுமென்றால், எந்த இடத்தில்
நமக்கு தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லையோ அந்த இடத்தில் பிரயோகிக்கலாம். எனவே ஞான காண்டத்தில் திருஷ்டவ்யா என்ற சொல் விதி வாக்கியம் இல்லை,
விதி சாயா என்று கூறலாம்.
ஞானத்தால் அடையும் பலன் அறியாமை விலகல் (அவித்யா நிவிருத்தி). இந்த ஒரே ஒரு பலன்தான் அடைய முடியும். கர்ம காண்டத்தில் விளையும் பலனில்
வேற்றுமைகள் (தாரதம்யம்) இருக்கலாம்.
அதை செய்பவனின் திறமையை பொறுத்து பலனின் அளவும் இருக்கும்.
கேள்வி
: உபநிஷத் ஆத்மாவை அறிவதற்கு சில சாதனங்களை கூறுகின்றது அவைகள் விதி வாக்கியமாக
தோன்றுகிறதே?
பதில்: பசியெடுக்கும்
குழந்தை உணவு கேட்டால் அப்போது சாப்பிடு என்ற கட்டளையிட அவசியமில்லை. அது போல மோட்சமடைய வேண்டும் என்ற
ஆவலுடன் வருபவர்களுக்கு சாதனங்களை சொல்வது கட்டளையாகாது.
பூர்வ
மீமாம்ஸிகளின் மூன்று விதமான விதி வாக்கியங்கள்:-
அபூர்வ
விதி: நமக்கு தெரியாத ஒன்றை கட்டளையிட்டு
சொல்வது. வேறெதிலும்
சொல்லாதது. இந்த வாக்கியங்களை
வேறெந்த வழியாகவும் அறிந்து கொள்ள முடியாது உதாரணமாக யாகத்துக்கு பயன்படுத்தும் நெல்லை
முதலில் சுத்திகரணம் (ப்ரோக்ஷனம்)
செய்து, தூய்மைபடுத்தி உபயோகிப்பார்கள். இந்த கட்டளை
வேறெங்கும் அறிய முடியாது.
நியம
விதி: சூழ்நிலைக்கேற்ப ஒரு செயலை பலவிதமாக
செய்யலாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொல்லும் வாக்கியம் நியம விதி.
(உ-ம்) யாகத்திற்கு வைத்திருக்கும்
நெல்லிருந்து உமியை பிரித்து அரிசியை எடுக்க வேண்டும். அதை உலக்கைக் கொண்டு இடித்துத்தான்
பிரித்தெடுக்க வேண்டும் வேறெந்த முறையிலும் பிரித்தெடுக்கக்கூடாது. இது நியும விதி வாக்கியம்.
பரிஸங்க்யா: ஏகாதசி அன்றைக்கு சாப்பிடக்கூடாது என்ற
விதி இருக்கிறது. சில
பேருக்கு முழுநாள் உணவு உண்ணாமல் இருக்க முடியாது. இந்த நேரத்தில்
பழத்தை சாப்பிடலாம். பழத்தை தவிர வேறெதையும் உட்கொள்ளக்கூடாது என்று உரைப்பது இந்த விதி. உண்மை பேசு என்ற வாக்கியம் பொய் பேசாதே
என்று உணர்த்துகிறது இதுதான் பரிஸங்க்யா விதி.
சிரவணம், மனனம்,
நிதித்யாஸனம் இவைகள் என்ன விதி?
v இந்த சாதனங்களை பற்றி தெரியாதவர்களுக்கு இது அபூர்வ விதியாக எடுத்துக் கொள்ளலாம்.v மோட்சத்தையடைய வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டவர்களுக்கு இந்த சாதனங்களை பற்றி தெரிந்திருக்கலாம். இதைத் தவிர வேறு முறையிலும் அடைய முயற்சி செய்வார்கள். அதனால் இவைகளை நியம விதிகளாக எடுத்துக் கொள்ளலாம்.v பரிஸங்க்யா விதி இதற்கு பொருந்தாது.
आत्मा वा
अरे द्र्ष्ट्व्यः श्रोतव्यो,
मन्तव्यो, निदिध्यासितव्यो मैत्रेयि वा अरे
दर्शनेन श्र्वणेन मत्या
विग्ज्नानेनदम सर्वँ
विदितम्.
பிரம்ம ஞானத்தின் பலன்:
ஆத்மனஹ தர்ஷணஹ: ஆத்மாவை லட்சியமாக கொண்டு சிரவணம்
செய்து முடித்து பிறகு மனனத்தையும், நிதித்யாஸனத்தையும் முடித்து
விட்டவுடன் அடையும் ஆத்ம ஞானத்தின் பலன் நம்மால் அனைத்தையும்
அறியப்பட்டதாகிறது. இது ஆத்மாவே அனைத்துமாக இருக்கிறது என்பதை
உணர்த்துகிறது. எப்படி களிமண்ணை அறிந்தால் அதிலிருந்து உருவான
அனைத்து பொருட்களையும் அறிவது போலாகுமோ அது போல ஆத்மாவே அனைத்துக்கும் காரணமாக இருப்பதால்,
அதை அறிவது அனைத்தையும் அறிந்ததற்கு சமமாகின்றது. ஆத்ம ஞானம் அடைவது என்பது ஆத்மாவை
அடைந்ததற்கு சமமாகும். ஆத்ம ஞானம் என்பது ஏற்கனவே அடைந்த ஒன்றை
பற்றிய அறிவுதான்.
ஸ்லோகம்:6
இது
சிரவண பயிற்சியாக இருக்கிறது. சிரவணம்
என்றால் உபநிஷத் எந்த கருத்தை நிச்சயப்படுத்தி சொல்கிறதோ அதை நாம் நிச்சயம் செய்ய வேண்டும். பேத த்ருஷ்டி நிந்தனை, அத்வைதத்தினுடைய ஸித்தி. இந்த மந்திரத்தின் சாரம் ஆத்மாதான்
அனைத்துமாக இருத்தல். இந்த கருத்து எதிர்மறையாக
இங்கு விளக்கப்படுகிறது.
எதை
நாம் நமக்கு வேறாக பார்க்கிறோமோ அது நம்மை ஒதுக்கி விடுவதற்கு சமமாகிறது. பிராமணர்கள்
எனக்கு வேறானவர்கள் என்று நினைப்பவர்கள், அவர்களால் நீக்கப்படுகிறார்கள். சத்திரியர்கள் எனக்கு வேறானவர்கள்
என்று நினைப்பவர்கள், அவர்களால் நீக்கப்படுகிறார்கள். இதன் மூலம் அறிவது எதையும் எனக்கு
வேறானது என்று நினைத்தால் அவைகளால் நாம் நீக்கப்படுவோம். இதனால் நாம் அறிந்து கொள்ள வேண்டியது
பார்க்கும் பொருட்கள் அனைத்தும் நானாக இருக்கிறேன் என்ற மனநிலைய அடைய வேண்டும். இதுவே மோட்சமாகும்.
மந்திர விளக்கம்:
யார்
தனக்கு வேறாக பிராமணனை நினைக்கிறானோ அவனை பிராமணன் நீக்கி விடுகிறான். யார் தனக்கு வேறாக சத்திரியனை நினைக்கிறானோ
அவனை சத்திரியன் நீக்கி விடுகிறான்.
இந்த உலகத்தை நீக்கினால், உலகம் நம்மை நீக்கி
விடும். தேவர்களை வேறாக நினைத்தால் அவர்கள் நம்மை நீக்கி விடுகிறார்கள்,
மற்ற உயிர்களை வேறாக நினைத்தால் அவைகள் நம்மை நீக்கி விடும்,
மற்ற அனைத்தையும் நீக்கினால், நாம் அவைகளால் நீக்கப்படுவோம். இதிலிருந்து அறிவது பிராமணர்கள்,
சத்திரியர்கள், தேவர்கள், மற்ற அனைத்து உயிரினங்கள் இவையனைத்திலும் ஆத்மாவே இருக்கின்றது. ஆத்மாவே இவைகளுக்கு ஆதாரமாக இருக்கிறது.
இந்த உலகமே நான் என்ற விசாரம்
ஆத்மா-ஜகத் இவற்றின்
ஐக்கியத்தைப் பற்றிய விசாரம்:
1.
விசேஷன-விசேஷ்ய பா4வம்
– Adjective
& Noun
-
(உ-ம்)
வீரனான ராமன், வெண்ணிற ஆடை
இந்த வாக்கியத்திலுள்ள
இரண்டு சொற்களும் ஒரே பொருளை குறிக்கிறது. ஆனால் ராமன் எப்படிபட்டவன் என்று விவரிக்கிறது. இந்த உலகம் ஆத்மாவுக்கு அங்கமாக இருக்கலாம்
என்ற கருத்து தவறானது. ஆத்மா சைதன்ய ஸ்வரூபம், அனாத்மா மித்யா. ஆகவே இரண்டும் ஒன்று சேர முடியாது. நமது லட்சியமான ஆத்மாவை அடைதல் என்பது
தேவையில்லாததாகிவிடும். ஏனெனில் அதை அடைந்தாலும் உலகமும், சம்சாரமும்
அங்கும் இருக்கும். த்வைதம் இருக்கும் வரை நிறைவின்மை
இருக்கும், துயரமும் இருக்கும்.
2.
உபாஸனை ஸாமானதி கரண்யம்:
(உ-ம்)
மனோ பிரம்மம் – மனதை பிரம்மமாக உபாஸிக்க வேண்டும்.
சிவலிங்கத்தை கல் என்று தெரிந்தே ஈஸ்வரனை தியானித்து வணங்குகிறோம்.
இதையே உபாஸனம் என்று கூறுவர். அதே மாதிரி இந்த உலகத்தை ஆத்மாவென்று
தியானிக்க வேண்டும் என்று கருத்துப்பற்றி விசாரம். இது ஏற்றுக்
கொள்ள முடியாதது. இங்கு
நாம் பேசிக் கொண்டிருப்பது ஆத்மாவை பற்றிய அறிவை அடைவது பற்றியதாகும். ஞான பிரகணமாக இருப்பதால் இது உபாஸனையாக எடுத்துக்
கொள்ளக்கூடாது. உபாஸனை மூலம் மனம் ஒருமுகப்படும், சித்தஸுத்திதான் அடைய முடியுமே தவிர ஞானத்தை அடையமுடியாது.
3.
கௌனம்: மாணவனை சிங்கம் என்று ஆசிரியர்
புகழ்கிறார். இதில் இரண்டு
சொற்களையும் ஐக்கியபடுத்தப்பட்டிருக்கிறது. சிங்கத்தினுடைய கம்பீர குணம் இவனிடத்தில் இருக்கிறது என்று சொல்ல விரும்புகின்ற வாக்கியம் இது. ஆத்மாவுக்கும், அனாத்மாவுக்கும் உள்ள குணங்கள் வெவ்வேறானவை. எனவே இரண்டையும்
ஐக்கியபடுத்த முடியாது.
4.
ஸ்துதௌ சாமானாதி கரணம்:
நீ இந்திரன் போன்று
இருக்கிறாய் என்ற வாக்கியத்தில் உள்ளது போல ஒருவனை புகழ வேண்டுமென்பதற்காக அவனை வேறொரு
உயர்ந்த ஒருவனோடு சேர்த்து சொல்லுவது போல ஆத்மாவோடு உலகத்தை சேர்த்து பேசுவது இவ்வகையில்
எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?
இவ்வாறு பொருட்கொள்வது
ஆத்மாவையே நிந்தனை செய்வது போன்றது. நித்யமான ஒரு வஸ்துவுடன் அநித்தியமான
வஸ்துவை சேர்த்துப் பார்க்கக்கூடாது.
5.
உபசார ஸாமாதிகரண்யம்:
”நீ ராஜா”
என்று ஒருவரை பார்த்து சொல்லுவது, அவர் நமக்கு
நன்மை தரும்படி ஏதாவது உதவி செய்தால் அவ்வாறு கூறுவது மாதிரி இதை எடுத்துக் கொள்ளலாம?
ஆத்மா செய்வதெல்லாம்
அனாத்மா செய்வதில்லை எனவே இதுவும் தவறு.
6.
ஐக்கிய படுத்துதல் – ஆத்மாவும்,
அனாத்மாவும் இரண்டும் ஒன்றுதான் என்று சொல்லாமே/
அப்படியும் சொல்ல
முடியாது,
ஏனெனில் இரண்டும் வெவ்வேறு குணங்களை உடையது.
7.
பாதாய ஸாமானாதி கரண்யம்:
ஒருவன் பொழுது சாயும்
நேரத்தில் வழிகாட்டி மரத்தை திருடன் நிற்பதாக நினைக்கிறான். இன்னொருவன் நீ பார்ப்பது திருடன்
அல்ல, வழிகாட்டி மரம் என்று சொன்னதும், திருடன் நீக்கப்பட்டு வழிகாட்டி மரம் மட்டும் அப்படியே இருக்கிறது. அது போல உலகத்திலுள்ள அனைத்தும்(இதம் ஸர்வம்) நித்ய வஸ்து(அயம் ஆத்மா) என்று சொல்லும்போது திருடன் என்று நினைத்த
எண்ணம் அகற்றப்படுவது போல இந்த உலகம் இருக்கிறது என்ற எண்ணமானது நீக்கப்படுகிறது. எது ஸத்தாவாகவும் இல்லை, அஸத்தாகவும் இல்லை
என்றிருக்கிறதோ அதற்கு மித்யா என்று பெயர். இதைத்தான் நீக்க முடியும்.
நாம-ரூப ஸ்வரூபமாக இருப்பது உலகம். ஸத்தானது சித்தாக இருக்கின்ற
ஆத்மா. இப்படி பிரித்துவிட வேண்டும்.
கம்பம் இல்லையென்றால் திருடன் தோன்ற மாட்டான். ஆத்மாவை சார்ந்துதான் இந்த உலகம்
இருக்கிறது.
· ஆத்ம ஞானத்தால்தான் எல்லா உயிரினங்களையும் நேசிக்க முடியும். ஏனென்றால் நாம் நம்மைத்தான் நேசிக்கிறோம். நாம் என்பது அனைத்துமாகிவிட்டால் இது தெளிவாகும்.· இந்த மந்திரத்தின் மூலமாக சம்சாரம் எது என்னவென்று மறைமுகமாக விளக்கப்படுகிறது. நம்மை எல்லோரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், யாரும் என்னை நிராகரிக்கக்கூடாது என்றுதான் நினைக்கிறோம். அனாத்மாவில் இது கிடைக்காது. ஆனால் ஆத்மாவில் இதை அடைய முடியும். இந்த நினைப்பை ஆத்மா ஞானத்தால் நீக்கப்படும்.· இந்த ஜகத் மித்யா என்று நன்றாக விளக்கப்படுகிறது· ஆத்ம ஞானத்தை அடைவதன் பலன் எல்லாமுமாக நானே இருக்கிறேன் என்பதாகும்.· அத்வைதம் நிலை நாட்டப்படுகிறது
மனனத்தின் விளக்கம்
ஸ்லோகம்-7,
8, 9 – ஆத்மா
ஸ்திதி காரணம்
ஆத்மாதான்
உபாதான காரணம் என்று சில உதாரணங்களுடன் விளக்கப்படுகிறது. இதன் மூலம்தான் அனைத்தும் வெளிவந்திருக்கிறது. எனவே அனைத்துக்கும் உபாதான காரணமாக
இருக்கிறது. ஸர்வாத்மா
தரிசனம் அல்லது பாவம் – எல்லாவற்றிலும் நான் என்ற பாவம்,
ஆத்மா என்ற பாவம்.
எதை
கிரகிக்காமல் இதை கிரகிக்க முடியாதோ அதுதான் ஆத்மா.
தங்கத்தைப் பார்க்காமல் அதில் செய்யப்பட்ட ஆபரணங்களை பார்க்க
முடியாது. எனவே ஆபரணங்களுக்கு
தங்கம்தான் ஆத்மா அது போல எல்லா அனாத்மாக்களுக்கும் ஆதாரமாக இருப்பது ஆத்மாதான்.
சப்த சாமான்ய ஞானம்: இந்த சப்தம் எந்த இசைக்கருவியிலிருந்து
வருகின்றது என்று கண்டு கொள்வது சாமான்ய ஞானம். பிறகு இது இப்படிபட்ட ராகம் என்று
கண்டு பிடிப்பது விசேஷ ஞானம். ஒருவனால் வீணையினுடைய சாமான்ய சப்தத்தையே கிரகிக்க முடியாதபோது எப்படி விசேஷ
சப்தத்தைப் பற்றி கூற முடியும். இங்கு சாமான்ய சப்தங்கள் எல்லாம் காரணம், விசேஷ சப்தங்களெல்லாம்
காரியங்கள். இதன் மூலம்
நாம் அனாத்மாவை பார்த்துக் கொண்டிருக்கும்போது அதற்கு காரணமாக இருக்கின்ற ஆத்மாவைதான்
பார்த்து கொண்டிருக்கின்றோம் என்று விளக்கப்படுகிறது.
மந்திர விளக்கம்:
ஸ்லோகம்-7
அடித்துக்
கொண்டிருக்கிற துந்துபியின் சாமான்ய சப்தத்தை கேட்காமல் அதன் விசேஷ சப்தத்தை கிரகிக்க
முடியாது. துந்துபிலிருந்து வரும் சாமான்ய சப்தத்தை
கேட்கும்போதுதான் அதனுடைய விசேஷ சப்தத்தையும் கேட்க முடியும்.
ஸ்லோகம்-8
ஒலித்துக்
கொண்டிருக்கிற சங்கின் சாமான்ய சப்தத்தை கேட்காமல் அதன் விசேஷ சப்தத்தை கிரகிக்க முடியாது. சங்கிலிருந்து வரும் சாமான்ய சப்தத்தை
கேட்கும்போதுதான் அதனுடைய விசேஷ சப்தத்தையும் கேட்க முடியும்.
ஸ்லோகம்-9
இசைக்கப்பட்டு
கொண்டிருக்கிற வீணையின் சாமான்ய சப்தத்தை கேட்காமல் அதன் விசேஷ சப்தத்தை கிரகிக்க முடியாது. வீணையிலிருந்து வரும் சாமான்ய சப்தத்தை
கேட்கும் போதுதான் அதனுடைய விசேஷ சப்தத்தையும் கேட்க முடியும்.
மேலே
கூறப்பட்ட உதாரணத்தின் மூலம் நமக்கு தெரிந்து கொள்வது, நாம் எல்லா
நேரத்திலும் ஆத்மாவைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆத்மாவின் ஸ்வரூபம் – ஸத் ஸ்வரூபம். எவையெல்லாம் இருக்கிறது என்று சொல்கிறோமோ அங்கேயெல்லாம் ஆத்மா இருக்கிறது என்று
அர்த்தம். மனனம் என்பது
சிரவணத்தில் கேட்டதை தர்க்க மூலம் சிந்தித்து தெளிவாக புரிந்து கொள்ளுதலாகும், சந்தேகமின்றி திடமாக புரிந்து கொள்ளுதலாகும்
ஆத்மா
உபாதான காரணமென்றால் நாம் ஆத்மாவைத்தானே பார்க்க வேண்டும். அதன் ஸ்வரூபம்
ஸத் ஸ்வரூபம், எல்லா பொருட்களும் இருத்தல் என்பதை அனுபவித்தாக
வேண்டும். அது இருக்கிறது
என்றுதான் எல்லாவற்றையும் அனுபவத்தில் உணர்கிறோம். இந்த இருத்தல்தான் ஆத்மா. இதை கிரகிக்க முடிந்தால்தான்,
விசேஷத்தை புரிந்து கொள்வோம். இருத்தலை உறுதி செய்தபின்தான் அதன்
விசேஷ குணங்களை அறிய முடியும். இந்த இருத்தல்தான் ஆத்மா, இந்த இருத்தலை கவனிக்காமல்
நாம-ரூபத்தில் கவனம் சென்று விடுகின்றது.
மரத்தாலான
யானை பொம்மையில்,
மரத்தின் கவனத்தை விட்டுவிட்டு யானை என்ற உருவத்தைப் பார்க்கிறோம். நாம்-ரூபங்கள்
இல்லாமல் இருக்கும் ஆத்மாவை அனுபவிக்க முடியாது, விளக்க முடியாது
ஏனென்றால் நாம் அதுவாகத்தான் இருக்கிறோம்.
ஆனந்த ஸ்வரூபம் – இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டுமென்றால்,
எந்த பொருளை பார்க்கிறோமோ அதை பற்றிய ஞானம் நம்மிடத்தில் இருக்கிறது. விருத்தியில் (எண்ண அலைகள்) மாறாமல் இருந்துக் கொண்டேயிருக்கிறது. பத்து விருத்திகள் வந்து சென்றாலும்,
அதற்கு ஆதாரமாக ஞானம் இருப்பதால், வந்து சென்ற
எண்ணங்களை திரும்பவும் நினைவு கூர்ந்து சொல்ல முடிகிறது. சித் ஸ்வரூபத்தை பிரதிபிம்பிப்பது
சூட்சும சரீரத்தால்தான் முடியும். ஆத்மா சைதன்ய ஸ்வரூபம் என்பது அந்தக்கரணத்துடன் புரிந்துக் கொள்ள வேண்டும். நித்தியமான ஸத்தையும், சித்தையும் அனுபவிக்க முடியாது, காரணம் நாம் அதுவாகவே
இருப்பதால்தான். ஆழ்ந்த
உறக்கத்தில் அந்தக்கரணம் பிரம்மத்தில் ஒடுங்கி விடுவதால் நித்தியமான ஸத்தையும் அனுபவிக்க
முடியாது. ஞான நிஷ்டையில்
உள்ள ஞானிகளின் அந்தக்கரணத்தில் பிரதிபிம்பத்தில் காணலாம். இதுவும் பூரணமாக இருக்கும். எப்பொழுதும் ஆத்மாவைத்தான் பார்த்துக்
கொண்டிருக்கிறோம், ஞானம் வந்தவுடன் நமக்கு நன்றாக புரிந்து விடும். எல்லாமே ஆத்மாவாகத்தான் இருக்கிறது
என்று உணர்ந்து கொள்வோம். அப்படித்தான் நாம் விவகாரம் செய்வோம்.
ஸ்லோகம்-10
எவையெல்லாம்
தோன்றியுள்ளதோ அவைகளின் தோற்றத்திற்குக் காரணம் ஆத்மாதான். ஈஸ்வரன் எல்லா பூதங்களையும்,
பிரபஞ்சத்தையும் தோற்றுவித்தார். நாம் பதார்த்தங்களை சேர்த்து புரிந்து
கொள்ள வேண்டும். வேதம்
என்பது அனைத்து பத பிரபஞ்சத்தைக் குறிக்கிறது. எனவே வேதத்தின் ஸ்ருஷ்டி என்பது பத
ஸ்ருஷ்டி என்று புரிந்து கொள்ளலாம்.
எப்படி நாம் மூச்சு விடுவதைப்போல் ஈஸ்வரனிடமிருந்து வெளிவந்ததுதான்
வேதம். இதுவே சப்த பிரபஞ்சம்,
அர்த்த பிரபஞ்சம். இதிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள். இந்த வேதமானது அநாயசமாக வெளிவந்தது. அவர் தன்னுடைய சங்கல்பத்தினாலே எல்லாவற்றையும்
படைத்தார். எனவே இந்த
உலகமும் மித்யா. எந்தவித
உதவியும் இல்லாமல் இதைச் செய்தார்.
சுதந்திரமாக படைக்கிறார். நாம் சுவாசிக்கும்
போது காற்றை உள்ளே இழுக்கிறோம், வெளியே விடுகிறோம், பிறகு உள்ளே இழுக்கிறோம் என்ற சுழற்சி
போல இந்த ஸ்ருஷ்டியானது பகவானிடமிருந்து வருகிறது. பிறகு மீண்டும் அவரிடமே சென்று பிறகு
மீண்டும் வெளிவரும். இந்த சுழற்சி இருந்துக் கொண்டேயிருக்கும். வேதம் அநாதியாக இருக்கிறது என்பதும்
இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
மந்திர விளக்கம்:
சாரம் – ஈஸ்வரனிடமிருந்து நான்கு வேதங்களும் தோன்றின.
ஆர்த்ர – நனைந்து,
ஏதம் – கட்டை
ஈரமான
கட்டையை நெருப்பில் போட்டால் புகை வருவது போல ஈஸ்வரனின் மூச்சுக் காற்றிலிருந்து ரிக், யஜூர்,
சாம, அதர்வன வேதங்கள் தோன்றின.
இதிகாசம் – வேதத்தில் வருகின்ற கதைப்பகுதி
புராணம் – வேதத்தில் உள்ள ஸ்ருஷ்டி விசாரம்
வித்யா – வேதத்தில்
சொல்லப்பட்டுள்ள தேவர்களிட்த்தில் உள்ள கலை ஞானங்கள்
உபநிஷத் – ரகசியமான வார்த்தைகளில் உள்ள ஆத்ம விஷயங்கள்
ஸ்லோகம் - வேதத்தில் குறிக்கப்படும் வேறிடத்தில்
உள்ள பகுதி
சூத்ராணி - மிக மிக சுருக்கமான விஷயம்
அனுவியாக்யானானி – சூத்ர வாக்கியத்தை விளக்குகின்ற
வாக்கியங்கள்
வியாக்யானானி – விருத்தி வாக்கியத்தை விவரித்தல்
அவரிடமிருந்துதான்
இவைகள் எல்லாமே மூச்சுக்காற்றுப் போல் வெளிவந்தன.
விசாரம்:
* இருக்கின்ற வேதம்தான் வெளி வந்தது.* எனவே வேதத்தில் சொல்லப்பட்ட வாக்கியங்கள் எல்லாம் ஸ்வ பிரமானம்* வேதக் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு அதன் மீது சிரத்தை வேண்டும். இதன் உபதேசத்தை வேறெங்கும் சரிபார்க்க முடியாது.* எனக்கு வேறொன்றாக பார்த்தால் அதையெல்லாம் என்னை நீக்கி விடும். வேதத்தை வேறாக நினைத்தால் அது என்னை என்னை நிராகரிக்கும். அப்படியென்றால் வேதமும் மித்யாதான் என்றால் மித்யாதான் என்று சங்கரர் கூறுகிறார். உதாரணமாக நிலைக் கண்ணாடியில் காட்டும் பிம்பம் பொய்யாக இருந்தாலும் அது நம்முடைய உண்மையான முகத்தைத்தான் காட்டுகிறது. அதுபோல் வேதம் மித்யாவாக இருந்து நமக்கு உண்மையை எடுத்துக் காட்டுகிறது.
ஈஸ்வரன் எவ்வாறு லய காரணமாக இருக்கிறார் என்று விளக்கப்படுகிறது.
ஸ்லோகம்-11
ஏகாயனம் – லய, ஸ்தானம் – ஒடுங்குகின்ற இடம்.
எவ்வாறு
ஆறுகள் எல்லாம் கடலை நோக்கி சென்று அதில் கலந்து விடுகின்றனவோ அதுபோல ஆழ்ந்த உறக்கத்தில்
எல்லா வேற்றுமைகளும் இழந்து ஒன்று சேருகின்றன. இந்த பிரபஞ்சமானது 12விதமாக பிரிக்கப்பட்டுள்ளது அவைகள் ஐந்து
ஞானேந்திரிய விஷயங்கள்,
ஐந்து கர்மேந்திரிய விஷயங்கள், மனதினால் கிரகிக்கப்படும்
விஷயங்கள், புத்தியினால் கிரகிக்கப்படும் விஷயங்கள். லயமானது கிரமமாகத்தான் நடைபெறும்
ஆனால் இங்கு வேறுவிதமாக விளக்கப்படுகிறது. விசேஷங்கள் சாமான்யத்தில்
ஒடுங்குதல், விதவிதமான சப்தங்கள் பொதுவான (சாமான்ய) சப்தத்தில் ஒடுங்குகின்றன. விசேஷமான நீர் சாமான்யமான நீரில்
ஒடுங்கும். இந்த சாமான்யத்தை
சங்கல்பத்தில் ஒடுக்குதல். ஒருவர் பேச்சை சாமான்யமாக மாற்றுதல்,
பிறகு சங்கல்பத்தில் ஒடுக்க வேண்டும். அதாவது மனதை அந்த பேச்சிலிருந்து
எடுத்து விட வேண்டும். பிறகு சங்கல்பத்தை காரணத்தில் ஒடுக்க வேண்டும். மனித உடல் சாமான்யமாக பார்த்தால்
பஞ்சபூதங்களின் சேர்க்கையாகும் பிறகு சூட்சும பூதங்களாக மாறுகிறது அதன் பிறகு காரண
ஸ்வரூபத்திற்கு சென்று விடுகிறது.
மந்திர விளக்கம்:
விதவிதமான
குணங்களை உடைய நீர் நிலைகளில் இருக்கும் நீர் கடலில் ஒன்று சேர்ந்து விசேஷ தன்மைகளை
இழந்து ஒன்றாகி விடுகிறது. விதவிதமான வேற்றுமைகளுடன் வெளியே
இருந்து வரும் விஷயங்கள் நமக்குள் வரும் போது ஒன்றாகி விடுகிறது என்று உணர வேண்டும்.
விதவிதமான உணர்ச்சிகளை தொடுவதன் மூலம் உணர்கிறோம். இந்த எல்லா உணர்ச்சிகளும் தொடுதல் என்ற சாமான்ய ஞானத்தில் ஒடுக்க வேண்டும். இதேப்போன்று மூக்கின் வழியே செல்லும்
விசேஷ வாசனைகளும் சாமான்ய வாசனைக்கு ஒடுங்க வேண்டும். விசேஷமான காட்சிகள், சாமான்ய காட்சிகளாகவும் ஒடுங்க வேண்டும். இவ்வாறு ஞானேந்திரியங்களின் விசேஷமான
விஷயங்கள் அதன் சாமான்யத்-துடனும், கர்மேந்திரியங்களின்
விசேஷமான விஷயங்கள் அதன் சாமான்யத்துடனும் ஒடுங்கும். மனம், புத்தியால்
கிரகிக்கப்படும் விசேஷ விஷயங்கள் அதன் சாமான்யத்துடனும் ஒடுங்கும்
ஸ்லோகம்-12
இந்த
மந்திரத்தில் சிதாபாசம் என்றால் என்ன என்பதை தெளிவாக விளக்கப்படுகிறது.
இங்கு
விதேஹ முக்தியின் லயத்தைப் பற்றி பேசப்படுகிறது. நைமித்திக பிரளயம்,
ஸ்வாபாவிக பிரளயம், ஆத்யந்திக பிரளயம் என்று மூன்று
விதமான பிரளயங்கள் உண்டு.
நைமித்திக
பிரளயம்:
ஈஸ்வரன் இந்த உலகத்தை படைத்து
பிறகு அதை தன்னுள் ஒடுக்கிக் கொள்வது
ஸ்வாபாவிக
பிரளயம்:
இதை பிராக்ருதிக பிரளயம் என்றும்
அழைக்கப்படும். கரணங்கள் எல்லாம் காரணத்தில் ஒடுங்குதல்,
நம்முடைய ஆழ்ந்த உறக்கத்தில் இந்திரியங்களெல்லாம் காரணத்தில் ஒடுங்கி
இருத்தல்
ஆத்யந்திக
பிரளயம்: முழுமையான பிரளயம். விதேஹ முக்தியடைந்தவர்களுக்கு வருகின்ற
பிரளயம். இப்படி ஒடுங்கினால்
திரும்பவும் வருவதில்லை. ஜீவன் அடையும் விதேஹ முக்தி இந்த வகையை சார்ந்தது.
ஆத்மா, சைதன்யம்
உப்பு நீருக்கு உதாரணமாக எடுத்துக் கொண்டால், இந்த நீரானது சூடாக்கும்
போது நீர் ஆவியாகி, உப்புகட்டி மட்டும் தங்கி விடும். உப்பானது நீரோடு கலந்து இருக்கும்
போது வேற்றுமைகள் எதுவும் இன்றி இருக்கின்றது ஆனால் அதுவே தனியாக இருக்கும்போது வேற்றுமைகள்
வந்து விடுகின்றது. இதில்
வெப்பம்தான் உபாதி என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல வேற்றுமைகளற்ற ஆத்மாவில் சூட்சும
சரீரம் வந்தவுடன் சைதன்யத்தின் பிரதிபிம்பம் வந்து விடுகிறது. இதுவே சிதாபாசம் என்று கூறப்படுகிறது. எப்படி உப்புகட்டியை மீண்டும் நீரில்
போட்டால் அது கரைந்து வேற்றுமைகளெல்லாம் நீங்கி ஒரே தன்மையாகி விடுகின்றதோ அது போல
இந்த சரீரம் அழிந்ததும் சிதாபாசமும் இல்லாமல் போய் விடுகிறது.
கடல்நீர்
ஆத்மாவுக்கு உதாரணமாக சொல்லப்படுகிறது. இந்த கடல் நீரை சூடுபடுத்தினால் உப்புகட்டி உருவாகும். அதுவே சிதாபாசமாகும். கடல் நீரில் உள்ள உப்பில் எந்த வேற்றுமையும்
இல்லை ஆனால் உப்பானது வெவ்வேறு குணங்களைக் கொண்டுள்ளது. உப்பு கட்டியை திரும்பவும் கடல் நீரில்
போட்டால் அது கரைந்து விடுகிறது நீரோடு ஐக்கியமாகி விடுகிறது. அது போல இந்த ஸ்தூல உடம்பு அழிந்து
விட்டால் பிரம்மத்தில் கலந்து விடுகிறது. சரீரத்தின் உபாதியும்
உஷ்ணம்தான், எப்படி உஷ்ணமானது கடல்நீரை உப்புக்கட்டியாக்கியதோ
அது போல நமது உபாதியான உஷ்ணமும் உண்மையான சைதன்யத்தை பொய்யான சிதாபாசனாக தோற்றுவிக்கிறது. உபாதி நாசத்தை அடைந்ததும் ஜீவன் பிரம்மத்துடன்
கலந்து விடுகிறது.
மந்திர
விளக்கம்:
ஆத்ம
சைதன்யம் உபாதியால் பிரதிபிம்பமாக இருப்பதால் அதற்கொன்றும் குறை கிடையாது. எனவே எவ்வளவு சிதாபாசங்கள் தோன்றி
அழிந்தாலும் அதனால் சுத்த சைதன்யத்திற்கு எந்த குறையும் ஏற்படாது.
அனந்தம் – காரணமற்றது;
அபாரம் – காரியமற்றது (ரஹிதம்)
நமது
முகம் நிலை கண்ணாடியில் முழுவதுமாக பிரதிபலிக்கும், இதனிடமிருந்து எதுவும் வெளிவரவில்லை,
இந்த பிரதிபிம்பம் அழிந்தாலும் நம் முகத்திற்கு எந்த குறையும் ஏற்படாது. சைதன்யத்திற்கு இணையாக ஒன்றும் வெளிவரவில்லை.
விக்ஞான
கணம்
– சுத்த சைதன்யம். கணம் – கலப்படமற்றது.
இந்த
ஸ்தூல, சூட்சும காரணங்களினால் சிதாபாசம் தோன்றி பிறகு அந்தகரணங்களுடன் சேர்ந்து அழிவடைகிறது.
ந
ப்ரேத்ய ஸம்ஞா அஸ்தி
– ஞானியின் ஸ்தூல, சூட்சும சரீரம் அழிவடைந்ததும்
சிதாபாசம் இருப்பதில்லை. ஸ்தூல சரீரம் பஞ்ச பூதங்களுடன் சேர்ந்து விடுகிறது. சூட்சும சரீரம் அந்தந்த தன்மாத்திரைகளுடன்
கலந்து விடுகிறது. சிதாபாஸமும்
மறைந்து விடுகிறது.
ஸ்லோகம்-13
மைத்ரேயின்
சந்தேகம்:
சைதன்யத்தின் நித்தியத்தையும், அதன் அழிவையும்
சொல்கிறீர்கள்.
அத்ர
ஏவ : இந்த விஷயத்தில் (சைதன்ய விஷயத்தில்)
மா
அமுமுஹத்
– நீங்கள் என்னை குழப்புகிறீர்கள்
ந
பிரேத்ய சம்ஞா அஸ்தி
– இறந்த பிறகும் சைதன்யம் இல்லை என்று கூறுகிறீர்களா?
ந
மோஹம் பிரேவி
– நான் உன்னை குழப்பவில்லை
அலம்
வா அரே இதம் விக்ஞாதாய
– நான் உபதேசித்ததை சரியாக புரிந்து கொண்டால் போதும்.
ஸ்லோகம்-14
இதில்
இரண்டு அவஸ்தைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
அவைகள் அவித்யா அவஸ்தை, வித்யா அவஸ்தை.
அவித்யா
அவஸ்தை
– அறியாமையுடன் வாழ்ந்து வருதல்
வித்யா
அவஸ்தை
– அறிவுடன், ஆத்ம ஞானத்துடன் வாழ்ந்து வருதல்.
அவித்யா (அக்ஞான)
அவஸ்தையில் நாம் அனுபவிப்பது த்வைதம். இந்நிலையில் எல்லாம் சத்யமாக தோன்றும். அதே மனதில் அத்வைத ஞானம் வந்தவுடன்
அந்த நிலை எப்படி இருக்கும் என்பதை இங்கு விளக்கப்படுகிறது. முதல் த்வைதம் கர்த்தா-கர்மம் ஆகும். அதாவது நான் கர்த்தா, எனக்கு ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டும்.
அதை செய்வதற்கு கருவி தேவை. அதனை பயன்படுத்தி கர்மம் செய்து கொண்டிருக்கிறான் இந்த ஜீவன்.
அவித்யா
அவஸ்தையில் சம்சாரியாக வாழ்கிறோம். நம்மை சரியாக அறியாமல் வாழ்ந்து கொண்டிருப்பது. இந்த மந்திரத்தில் குறிக்கப்பட்ட
த்வைதம் நாம் பார்த்து அனுபவிக்கும் இந்த உலகமேதான். சிதாபாசம், சூட்சும சரீரம், அஹங்காரம் என்று புரிந்து கொள்ள வேண்டும். இதுவே கர்த்தா என்று அழைக்கப்படுகிறது. கர்த்தா அனுபவிக்கிற விஷயம் இந்த
உலகம்தான் அதுவே அனுபவிக்கப்படுகின்ற பொருளாக இருக்கிறது. இது உண்மையா என்று விசாரம் செய்ய
வேண்டும். இந்த த்வைதமே
உண்மையில்லை என்று அறிய வேண்டும். நான் கர்த்தாவாகி விஷயங்களை அனுபவிக்கும் போது நாமே அனுபவிக்கப்படும் பொருளாக
மாறுகிறேன். இந்த த்வைதம்
சத்யமாகவும் இருக்கிறது. நம்மிடத்தில் உள்ள கருவிகளை உபயோகித்து கிரியைகளை உற்பத்தி செய்கிறோம். இந்த கருவிகளை “காரகம்” என்ற அழைப்பர். கிரியையால் விளைவது பலன். அதை அனுபவித்துக் கொண்டிருப்பது சம்சாரம். நமக்கு அவித்யா இருப்பதால் இந்த உலகத்தில்
த்வைதத்தை ஏற்படுத்திக்கொண்டு செயல்களை செய்துக்கொண்டு சுக-துக்கங்களை
அனுபவிக்கிறோம்.
மந்திர
விளக்கம்:
அவித்யா
அவஸ்தை:
அவித்யா
அவஸ்தையில் இருமையானது வந்து விடுகிறது. அந்த சமயத்தில் கர்த்தா அறிபவன், செயல்படுபவன் என்ற எண்ணத்தோடு
இருந்து கொண்டு இந்திரியங்களை கருவியாக பயன்படுத்தி வாசனையை நுகர்கின்றான்.,
பார்த்துக் கொண்டிருக்கின்றான், கேட்டுக் கொண்டிருக்கின்றான்,
பேசிக் கொண்டிருக்கின்றான், சிந்தித்துக் கொண்டிருக்கின்றான். இதுதான் அவித்யாவின் அவஸ்தை. இங்கு சிதாபாசம் என்ற ஒன்று இருப்பதனால்
சம்சாரியாக இருந்து கொண்டிருக்கிறான்.
வித்யா
அவஸ்தை:
அஸ்ய – இவனுக்கு (ஞானிக்கு)
ஸர்வம் - அனைத்தும்
ஆத்மா ஏவ அபு4த் – ஆத்மாவாகவே ஆகி விட்டாதோ
இந்த
நிலையில் இவனிடத்தில் அனைத்தும் நான் என்று மாறும் போது சம்சாரம் என்பதே கிடையாது. இந்த நிலையில் நாம் அனுபவிக்கும்
வேண்டியது ஒன்றுமேயில்லை. இந்த நிலையில் எல்லாமே நானாக மாறி விட்டதால். கர்த்தா,
கரணம், கிரியை, பலன் எதுவுமே
இருக்காது.
தத்ர
யஸ்ய – எந்த அவஸ்தையில்
எல்லாமே நானாக,
ஆத்மாவாகி விட்டால்
தத3 கேன கம் பஶ்யத்2 – எந்த கருவியைக் கொண்டு எதை
கேட்பான்,
எதை பார்ப்பான், நுகர்வான், பேசுவான், சிந்திப்பான் இவ்வாறு எதையுமே அனுபவிக்க முடியாத
நிலை உண்டாகும்.
விசாரம்-1 (மைத்ரேயின்
கேள்விக்கு பதில்:
வித்யா
அவஸ்தையில்,
விதேஹ முக்தியின் போது சிதாபாசம் அழிந்து போகிறது. ஞானியின் மரணத்தின் போது ஸ்தூல, சூட்சும சரீரங்கள் சேர்ந்து
அழிகிறது. சூட்சும சரீரத்தில்
உள்ள சிதாபாசமும் இல்லாமல் போய் விடும். இந்த சிதாபாசனைத்தான்
ஜீவன் என்று அழைக்கிறோம். த்வைத அவஸ்தையில் சிதாபாசத்துடன் சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். வித்யா அவஸ்தையில் சிதாபாசம் நாசமடைவதால்
சம்சாரமும் நாசமடைந்து பூரணமாகி விடுவான்.
விசாரம்-2
எல்லாமும்
ஆத்மாவாகி விட்டால் ஒருவன் எதைத்தான் பார்ப்பான், கேட்பான் என்ற கருத்தில். ஜீவன் முக்தனுக்கு இந்த நிலை எப்படி
இருக்கும். ஒன்றை தவறாக இரு வகையில் பார்ப்போம். அவைகள் ஸோபாதிக பிரமா, நிருபாதிக பிரமா.
நிருபாதிக
பிரமா
– தோன்றிக் கொண்டிருக்கும் காட்சியானது அது பொய் என்ற அறிவு வந்ததும்
மறைந்து விடும். கயிற்றில்
தோன்றும் பாம்பு இதற்கு உதாரணம்.
ஸோபாதிக
பிரமா
– தோன்றுகின்ற காட்சி வெறும் தோற்றம் என்ற அறிவு வந்தாலும் அது தெரிந்து
கொண்டேயிருக்கும். கானல் நீர் போல, இது
பொய்யான தோற்றம் என்ற அறிவு இருக்கிறது ஆனால் காட்சியளித்துக் கொண்டிருக்கும்.
நமக்கு
வரும் துயரங்கள் எல்லாம் நாம் உண்மையென்று ஒன்றை நினைக்கும் போதுதான் துயரத்தை அனுபவிப்போம்.
மித்யா என்ற அறிவில் இருக்கும்போது எதுவும் நமக்கு துயரத்தைக் கொடுக்காது, சம்சாரத்தைக்
கொடுக்காது. வித்யா அவஸ்தையில்
ஸோபாதிக பிரமையில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
நித்ய
சைதன்யத்தை பற்றி விளக்கம்:
நித்ய
சைதன்யத்தால் ஒருவன் அனைத்தையும் அறிந்துக் கொண்டிருக்கிறான் ஆனால் அதை எதன் மூலமும்
அறிய முடியாது. எனவே இது அறியப்படாதது.
ஸர்வம் ஆத்மா ஏவ அபூ4தி - எல்லாமே ஆத்மாவாகி விடுகிறது. அதாவது அனாத்மாக்கள் எல்லாம் ஆத்மாவில்
ஒடுங்கி விடுகிறது.
தம் கேன விஜானீயாத் – எல்லாவற்றையும் அறிந்துக்
கொண்டிருக்கும் சைதன்யத்தை யாரறிவான் என்றால் யாரும் அறிய முடியாது என்பதுதான் பதில்.
விக்ஞானாதாரம் – சாட்சி சைதன்யம்
கேன விஜானீயாத் – யாரறிய முடியும்?
ஆத்மாவை
குரு முகமாகத்தான் உபதேசம் பெற வேண்டும். அவ்வாறு கேட்டதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிந்திக்கும் போதுதான் கேட்டவற்றில்
எழும் சந்தேகங்களை போக்கி சரியாக புரிந்து கொள்ள முடியும். அடைந்த
ஞானத்தில் நிலைபெறுவதற்கு நிதித்யாஸனம் என்ற சாதனத்தை பயத்படுத்தி அதன் மூலம் ஞான நிஷ்டை
அடைவதினால் அதன் பலனை அடைந்ததாகும்
இந்த பலனானது நாம் அனைத்தையும் அடைந்து விட்டதாகி விடும் இனி
அடைவதற்கு ஒன்றுமில்லை என்ற மனநிறைவை அடைவோம். இதுதான் ஜீவன் முக்தி நிலையாகும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முகவுரை:
1. ஜகத் மித்யா என்ற விளக்கம்2. ஸர்வாத்மா பாவம் – எல்லா உயிர்களிடத்திலும் நம்மையே பார்த்தல், அதாவது எல்லா உயிர்களிடத்திலும் நான் என்கின்ற அபிமானத்தோடு இருத்தல்3. சத்ய வஸ்துவாக இருக்கிற பிரம்மன் அத்வைதம் (இரண்டற்றது)4. மகாவாக்கியம் – அயம் ஆத்ம பிரம்ம
சங்கரருடைய
பொது அறிமுக விசாரம்
கர்ம நிரபே4ஷம் – கர்மத்தை
சாராத சாதனம்.
பிரம்மத்தை, மோட்சத்தை,
அம்ருதத்துவத்தை அடைய உதவும் சாதனத்தைத்தான் மைத்ரேயி ப்4ராமனத்தில்
(பகுதி-4) விளக்கப்பட்டது.
முக்கியமாக சிரவணம், மனனம், நிதித்யாஸனம் இவைகளின் முக்கியத்வம் விளக்கப்படுகிறது. இந்த ஞானத்திற்கும் சந்நியாசத்திற்கும் சம்பந்தம் உண்டு. சந்நியாசம் வெறும் ஆசிரமத்தை மட்டும்
குறிப்பிடவில்லை, காலத்தை நம் கையில் எடுத்துக் கொள்வதற்கும்,
ஆத்ம விசாரத்திற்கு பயன்படுத்துவதற்கும், ஞானத்தை
அடைய உதவும் சாதனங்களான சிரவணம், மனனம், நிதித்யாஸனம் ஆகியவற்றை நாம் மேற்கொள்வதற்கும் சேர்த்து குறிப்பிடப்படுகிறது. கர்ம நிரபேக்ஷம்தான் ஆத்ம ஞானம் அதன் மூலம்தான் மோட்சத்தை நேரிடையாக அடைய முடியும்.
ஆத்மஞானம்
ஏன் அடைய வேண்டும்?
உண்மையில்
நாம் இதை அடையத்தான் ஆசைப்படுகிறோம். பார்க்கும் போது அனுபவத்தில் நாம் அடைய விரும்பும் சம்சார விஷயங்கள் எல்லாம்
மாறக்கூடியது. ஆத்மா
ஞானம் மூலம் ஆத்மாவை அடையலாம்(பிராப்தி). அதற்காக எந்த செயலின்
துணை இல்லாமல் நேரிடையாக அடைந்திடலாம்.
ஆத்மாவை அடைதல் என்பதும் ஆத்மாவை அறிதல் என்பதும் ஒன்றுதான். இது அனைத்தையும் அடைதல் என்றும் குறிப்பிடலாம்.
மனனம்
1. சுய அறிவை உபயோகித்து தர்க்க மூலம் கேட்டதை நன்றாக, உறுதியாக புரிந்து கொள்ளுதல். ஆத்மாவின் சத்யத்தையும், ஜகத் மித்யா என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஜகத் மித்யா என்பதை ஏதாவது ஒரு ஹேதுவை கொடுத்து நிரூபிக்க வேண்டும். இந்த பிராமனத்தில் புதிய ஹேதுவை (காரணத்தை) சொல்லி ஜகத் மித்யா என்று நிரூபிக்கப்படுகிறது. எனவே மது பிராமனத்தை மனனத்திற்கு உதவியாக இருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்,2. முடிவுரையாகவும் எடுத்துக் கொள்ளலாம், மைத்ரேயி பிராமனத்தில் எல்லாம் புரிந்து விட்டால் நிகமனமாக எடுத்துக் கொள்ளலாம். பக்ஷம் என்பதற்கு பொருள் எந்த இடத்தில் ஒரு சாத்தியத்தை சொல்லி நிரூப்பது. இங்கே ஜகத் பக்ஷம்; இதில் மித்யா என்பது சாத்தியம். எல்லா அனுமானங்களின் மூலம் இந்த சாத்தியம் நீக்கப்படவில்லை என்று மீண்டும் கூறுதல்3. நிதித்யாஸனத்திற்கு உதவியாக இருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்
விசாரம் - ஜகத் மித்யா
ஜகத்
மித்யா என்பதற்கு என்ன ஹேது உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்றால் எது பரஸ்பர உபகாரிய
உபகாரகமாக இருக்கிறதோ அது மித்யா என்பதாகும்.
பரஸ்பரம் – ஒன்றையொன்று;
உபகாரியம் – உதவியை
வாங்குபவர்;
உபகாரகம்- உதவி செய்பவர்
ஒருவருக்கொருவர்
உதவிக் கொள்வது என்பது இருவரும் இரண்டு நிலைகளாக இருக்கிறார்கள். இந்நிலை வேறொன்றை சார்ந்திருக்க வேண்டும்
அல்லது மித்யாவாக இருக்க வேண்டும்.
தைஜஸனை
சார்ந்துதான் ஸ்வப்ன பதார்த்தங்கள் இருக்கின்றது அதே போன்று கனவில் வரும் பொருட்கள்
இல்லையென்றால் தைஜஸனாக இருக்க மாட்டான். எனவே இரண்டும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால் இரண்டுமே மித்யா.
தைஜஸனும், கனவில்
காணும் உலகமும் மித்யா என்று நிரூபிக்கப்படுகிறது.
விழிப்பு
நிலை பிரபஞ்சம் விஸ்வனை சார்ந்திருக்கிறது. விஸ்வன் ஜாக்ரத் பிரபஞ்சத்தை அனுபவிக்கும் பிரமாதாவாக இருக்கிறான். ஒரே மனிதனுக்கு விதவிதமான குணங்கள்
இருக்கிறது. உதாரணமாக
தந்தை, மகன், சகோதரன், என்ற பெயர்கள். தான் பிதாவாக இருக்க தனக்கு குழந்தை பிறந்திருக்க வேண்டும், அதேப்போன்று தந்தையாக தன் பிள்ளைக்கு உதவி செய்கிறார். இந்த உதாரணத்தில் பிதா, மகன் சம்பந்தம் உபகாரிய, உபகாரமாக இருப்பதால் இருவருமே
மித்யாத்வத்தை அடைகிறார்கள். பிதாவாக இருந்து செய்ய வேண்டிய கர்மங்கள், மகனாக இருந்து
செய்ய வேண்டிய கர்மங்கள் இவைகளிலிருந்து துயரங்கள் நம்மை வந்து அடைகிறது. நம்மைச் சார்ந்திருக்கும் உறவுகளை
நீக்கிவிட்டு நம் நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும். நாம் மனிதன் என்ற நிலையில் பார்த்தால்,
இந்த உறவுகளிலிருந்து வரும் துயரத்திலிருந்து விடுபட்டு விடுவோம். இப்படி எல்லா சம்பந்தத்தையும் நீக்கிவிட்டால்
வெறும் அறிபவன் என்ற முடிவுக்குத்தான் வருவோம்.
பிரமாதா
என்று சொல்வதற்கு விஷயமான பிரமேயமே காரணமாகும் ஒரு பொருளானது அறிபவனுக்கு விஷயமாக இருந்தால்தான்
அது பிரமேயமாகும். என்னால்தான் அறியப்படும் பொருளுக்கு
பிரமேயம் என்று சொல்வதற்கு தகுதியாகிறது.
எனவே பிரமாதாவும் பிரமேயமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால் இரண்டுமே
மித்யா. நான் மற்றவர்களின்
உடலையும் மனதையும் அனுபவிக்கிறென் அது போல மற்றவர்களும் என்னை அனுபவிப்பதால்,
நான் பிரமேயமாகவும் இருக்கிறேன். ஆனால் உண்மையில்
நான் பிரமாதவும் அல்ல, பிரமேயமும் அல்ல. இதிலிருந்து அறிந்துக் கொள்வது அனுபவிப்பனும்,
அனுபவிக்கப்படும் பொருளும் மித்யாவாகிறது. இப்பொழுது நான் இந்த இரண்டுக்கும்
ஆதாரமாக இருக்கிறேன். இப்படி புரிந்துக் கொண்டால் ஜகத் மித்யாவாகி
விடும். பிரம்மனாகிய
நான் ஸத்யமாகி விடுவேன், இந்த உலகமே உபகாரியமாக, உபகாரமாக இருக்கிறது என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஜாக்ரத் பிரபஞ்சம் இவ்விதமாக நிஷேதம்
செய்யப்படுகிறது
மது
என்ற சொல் பல பொருளைக் குறிக்கும் அவைகள் காரியம், கர்மபலம், போக்யம் (அனுபவிக்கபடுவது) ஜீவர்கள் எல்லாம் அனுபவிப்பவர்கள்,
ஜகத்தானது அனுபவிக்கப்படுவது அதாவது போக்யமாக இருக்கிறது. இது ஜீவனுக்கு மதுவாகிறது. உதாரணமாக நான் கர்மம் செய்வதற்கு
உதவி செய்கிறேன், கர்மம்தான் என்னுடைய பிறப்பு-இறப்புக்கு காரணமாகிறது. அனைத்து ஸ்ருஷ்டிகளும் நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது.
1. எல்லா ஜீவர்கள் ஸர்வ பூதானி2. அதிபூதம் ஜடப்பிரபஞ்சம் (சூரியன்)3. அதிதெய்வம் தேவதைகள் (ஆதித்ய தேவன்)4. அத்யாத்மம் வியஷ்டி கரணம் (கண் போன்ற இந்திரியங்கள்)5. உபகாரகம் உதவி செய்பவர்6. உபகாரியம் உதவியை பெறுபவர்
முதலில்
ஜீவர்களையும்,
அதிபூதத்தையும் எடுத்துக் கொண்டு உபகாரிய, உபகாரக்
தத்துவத்தை பயன்படுத்தி மித்யாத்வம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஜீவர்களையும், அதிதெய்வத்தையும் எடுத்துக் கொண்டு உபகாரிய, உபகாரக்
தத்துவத்தை பயன்படுத்தி மித்யாத்வம் நிரூபிக்கப்படுகிறது. கடைசியில்
ஜீவர்களையும் வியஷ்டி கரணத்தை எடுத்துக் கொண்டு உபகாரிய, உபகாரக்
தத்துவத்தை பயன்படுத்தி மித்யாத்வம் நிரூபிக்கப்படுகிறது
மந்திர
விசாரம்:
ப்ருத்வி – இது மது;
இந்த உலமானது போக்யமாக இருக்கிறது. இது ஜீவர்களுக்கு அனுபவிக்கப்படும்
பொருளாக, மதுவாக இருக்கிறது. ஜீவர்கள் – போக்தா, உலகம் –போக்யம் பூமியானது
– போக்தா; உலகம் – போக்யம்
அதிதெய்வம் – தேவதைகள்,
மது; ஜீவர்கள்
– போக்தா
ஜீவர்கள் – மது;
தேவதைகள் – போக்தா
ஜீவர்கள் – போக்தா;
வியஷ்டி கரணம் – அதியாத்மம் – மது
ஜீவர்கள் – மது;
வியஷ்டி கரணம் – போக்தா
உதாரணம்: நான் கண்ணை
அனுபவிக்கிறேன், காதை அனுபவிக்கிறேன். அதே மாதிரி கண்ணும், காதும் என்னை (ஜீவனை) அனுபவிக்கிறது,
கண் காட்டும் பாதையில் நான் செல்கிறேன்.
விஸ்வன் + தைஜஸன்
+ பிராக்ஞன் = ஜீவன்
மேலேயுள்ள
சம்பந்தத்திலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால், இவை நான்கும் ஒன்றையொன்று
சார்ந்திருக்கிறது ஆகவே
இவை நான்கும் மித்யா. மேலும் இவை நான்கும் எதை சார்ந்திருக்கிறதோ அதுதான் பிரம்மம், ஆத்மா.
ஸ்லோகம்-1
இயம் ப்ருதி2வீ – இந்த பூமியானது
ஸர்வேஷாம் பூ4தானாம் மது4 – எல்லா உயிரினங்களுக்கும்
மதுவாக இருக்கிறது
அஸ்யை ப்ருதி2வ்யை ஸர்வானி
பூ4தானி மது4
- எல்லா உயிரினங்களும் ப்ருதிவிக்கு மதுவாக
இருக்கிறது.
எந்த
ஒரு தேவன் இந்த பூமிக்குள் சைதன்ய ஸ்வரூபமாக (தேஜோமய), நீண்ட நாள் வாழக்கூடியவனாக (அம்ருதமய) இருக்கிறானோ அவன் எல்லா ஜீவராசிகளுக்கும் மதுவாக இருக்கின்றான். அதே மாதிரி எல்லா ஜீவராசிகளும் இந்த
தேவனுக்கு மதுவாக இருக்கின்றன. ஸ்தூல சரீரத்திலுள்ள பிருத்வியை மட்டும் அனுபவிப்பவன் ஜீவனுக்கு மதுவாக இருக்கின்றான்,
அதே மாதிரி ஜீவன் மதுவாக இருக்கின்றான் இந்த ஸ்தூல சரீரத்திற்கு. அத்யாத்மம் சரீரம் – வியஷ்டி சரீர தத்துவத்தை மட்டும் அனுபவிக்கின்றவன்.
அயம் ஏவ ஸ: -
இந்த
பிரபஞ்சமே ஆத்மா à இந்த உலகம்
ஆத்மாவைத்தான் சார்ந்திருக்கிறது, அதனிடமிருந்து வெளிப்பட்டு
காட்சியளிக்கிறது
ய: அயம் ஆத்மா – எந்த நிர்குணம் மைத்ரேயி
பிராமனத்தில் கூறப்பட்டுள்ளதோ, அவைகளுக்கு அதிஷ்டானமாக, ஆதாரமாக இருப்பது ஆத்மா.
இத3ம் அம்ருதம் - ஆத்ம ஞானம் அம்ருதத்வ சாதனமாக
இருக்கிறது. இந்த ஆத்ம ஞானம்தான் அம்ருதத்வ நிலையை
அடைவதற்கு சாதனம்.
இதம் ப்3ரஹ்மம் – அதிஷ்டான தத்துவம்
பிரம்மமாக இருக்கின்றது. இந்த ஸ்ருஷ்டிக்கு அதிஷ்டானமாக இருக்கின்றது.
இத3ம் ஸர்வம்– பிரம்ம ஞானம் அனைத்துமாக
மாறுவதற்கு சாதனமாக இருக்கிறது.
ஸ்லோகம்
ஒன்றிலிருந்து பதினான்கு வரை ஒரே கருத்தை வெவ்வேறு தத்துவங்களை உபயோகித்து விளக்கபட்டிருக்கிறது.
இதில்
ஜீவன் அனைத்தும்
(விராட்+ஹிரண்யகர்ப்பன்) அனுபவிக்கின்றான். அதே மாதிரி அனைத்தும் ஜீவனை அனுபவிக்கின்றன.
அயம் ஆத்மா ஸர்வேஷாம் ஆத்மானாம் மது4: – விராட்+ஹிரண்யகர்ப்பன்
– ஸ்தூல, சூட்சும தத்துவங்கள் ஜீவர்களுக்கு மதுவாக
இருக்கின்றது.
ஸ்லோகம்-15
ஸர்வாத்ம பா4வம் – எல்லாமும் நானாக இருக்கின்றேன்
என்ற அறிவு.
அனாத்மாவில்
அபிமானம் ஏற்பட்டால்,
நாம் அதுவாகவே மாறி விடுகிறோம். பார்க்கும் போது பார்ப்பவன் என்றும்,
கேட்கும்போது கேட்பவன் என்றும் இருக்கிறோம். ஞானியானவன் எதில் நான் என்ற அபிமானத்தை
பிரம்மத்தில்தான் வைத்திருக்கிறான். எனவே அவனை பிரம்மன் என்றுதானே கூற வேண்டும்.
அஹம் பிரம்ம அஸ்மி என்ற ஞானத்துடன் இருக்கும்
போது அவன் பிரம்மமாகவே இருக்கிறான்.
எனவே பிரம்மத்தினுடைய லட்சணங்கள் எல்லாம் ஞானியின் லட்சணமாகி விடுகிறது. இந்த மந்திரத்தில் இதுதான் விளக்கப்படுகிறது.
மந்திர
விளக்கம்:
ஸஹ - அந்த ஞானி
அயம் ஆத்மா – நான் ஆத்மாவாக
இருக்கிறேன்
ஸர்வேஷாம் பூ4தானாம் அதி4பதி – எல்லா ஜீவராசிகளுக்கும்
அதிபதியாக இருக்கின்றேன்
ஸர்வேஷாம் பூ4தானாம் ராஜா– எல்லா ஜீவராசிகளுக்கும்
ராஜாவாக இருக்கின்றேன்
தத்3யதா3 - எவ்விதம்
ரத2னாபா4ம் -
ரதத்திலுள்ள
சக்கரத்தின் மையப்பகுதியையும்
ரத2னேமௌ – அதன் வெளிசுற்றிலுள்ள வளையத்தையும்
ச ஆரா -
வண்டி
சக்கர கம்பிகளால் இந்த இணைக்கப்பட்டிருக்கிறதோ
ஸர்வே ஸ்மர்பிதா -
எல்லாம்
என்னைச் சுற்றி சார்ந்திருக்கிறது
ஏவம் ஏவ அஸ்மின் ஆத்மனி -
இந்த
ஞானியிடத்தில்
ஸர்வானி பூ4தானி – எல்லா உலகங்களும் ஞானியை
சார்ந்திருக்கின்றன.
ஸ்லோகம்-16
மது
வித்யாவின் ஸ்துதி கூறப்படுகிறது.
விசாரம்:
தத்யங்க்
ஆதர்வன என்ற ரிஷியானவர் இந்த மது வித்யாவை உபதேசித்தவர் ஆவார். சிஷ்யர்களாக இருப்பவர்கள் அஸ்வினி
குமாரர்கள் இவர்கள் சொர்க்கலோக வைத்தியர்கள். வேறொரு ரிஷி இந்த மது வித்யாவை நான்
அறிவேன், அதை நான் மற்றவர்களுக்கு உபதேசிக்க போகிறேன் என்று கூறுகிறார்.
சங்கரரின்
விளக்கம்:-
1. இந்திரனால் காப்பாற்றப்பட்டது இந்த வித்யா. இதை தகுதியானவர்களுக்குத்தான் உபதேசிக்கப்பட
வேண்டும் என்று ஆவலால்தான் இந்திரன் இதை பாதுகாத்துக் கொண்டிருக்கிறான். ஏனென்றால் தகுதியற்றவர்களால் இது
விபரீதமாக புரிந்து கொண்டு மேலும் துயரத்திற்குள்ளாவார்கள்.
2. மிக கஷ்டப்பட்டுத்தான் இந்த ஞானத்தை அடைய முடியும்.
3. கர்ம நிரபேக்ஷா வித்யா – இந்த ஞானம் அடைவதற்கு பொருள் எதுவும் தேவையில்லை வைராக்யம், முமுக்ஷூத்வம் வைத்துத்தான் அடைய வேண்டும்.
4. ஆத்ம ரதி ஹேது வித்யா – இது நம்மிடத்திலேயே நம்மை திருப்தியுடன்
இருக்க வைக்கிறது. எவ்வளவு
சுகமான சூழ்நிலையாலும் ஒருவன் திருப்தியடைய மாட்டான். தன்னிடத்திலே சுகம் காண்பதுதான் நம்மை
திருப்தியுடன் இருக்க வைக்கும். இது ஞானத்தின் ஒன்றினால்தான் முடியும்.
மந்திர
விளக்கம்:
இத3ம் வை தன்மது4 – இந்த மது வித்யா
த3த்4யங் ஆத2ர்வண: அஶ்வின்ப்4யாம் – தத்யங் அதர்வன ரிஷியானவர், அஸ்வின்
குமாரர்களுக்கு உபதேசித்தார்
ததே3தத்3 ரிஷி பஶ்யன்
அவோசத் –
இதையறிந்த
ஒரு ரிஷி,
இந்த வித்யாவை மற்றவர்களுக்கு சொல்லப்போகிறேன் என்று கூறினார்.
எப்படி
மழை மேகங்கள் மழை பெய்யப்போகிறது என்று உணர்த்துகிறதோ அதேபோல உங்களுக்கு சொல்லப்போகிறேன். தத்யங் அதர்வன ரிஷியானவர் மதுவித்யாவை
குதிரையின் தலைமூலமாக உபதேசம் செய்தார்.
அதையும் நான் உங்களுக்கு சொல்லப்போகிறேன்.
ஸ்லோகம்-17
அஸ்வின்
குமாரர்களே நீங்கள் குருவான தத்யங் ரிஷி அவர்களுக்கு குதிரையின் தலையை வைத்து அதன்
மூலம் மதுவித்யா உபதேசம் பெற்றீர்கள். இரண்டுவித மதுவித்யாவை உபதேசம்
செய்தார். சூரியனை மையமாக
வைத்தும் ஒன்றும், ஜகத் சம்பந்தபட்ட மது வித்யா என்ற மற்றொன்றுமாகும்.
ஸ்லோகம்-18
ஈஸ்வரன்
எல்லா சரீரங்களையும் தோற்றுவித்தார். இரண்டு கால்கள் உடைய சரீரங்கள், நான்கு கால்களையுடைய
சரீரங்கள் படைத்தார். உடலில் நுழைவதற்கு முன்பு சூட்சும சரீரமாக மாறி ஸ்தூல சரீரத்திற்குள் நுழைந்தார். பரமாத்வான அந்த புருஷன் எல்லா சரீரத்திற்குள்ளும்
இருப்பதால் அவரு புருஷன் என்று அழைக்கப்படுகிறார். இவரால் வியாபிக்கப்படாதது(அனாவிருதம்) எதுவும் இல்லை.
ஸ்லோகம்-19
இந்த
பரமாத்மா எல்லா சரீரங்களுக்கும் நுழைந்து அந்த சரீரமாகவே காட்சியளிக்கிறார். சிதாபாசமாக ஈஸ்வரன் மனதில் பிரதிபிம்பிப்பதால்
நம்மால் சைதன்யத்தை, சித்தை புரிந்து கொள்ள உதவுகிறது. ஆத்மாவை அறிவதற்கு சிதாபாஸம் துணை
புரிகிறது. பரமாத்மா
மாயையின் மூலமாக பலவிதமான ரூபங்களாக காட்சியளித்து கொண்டிருக்கிறார். அந்த பரமாத்விடம் நம்முடைய எண்ணிக்கையற்ற
இந்திரியங்கள் எல்லாம் ஏற்றி வைக்கப்பட்டு உள்ளது.
அந்த
பரமாத்வேதான் இந்திரியங்கள் à இந்திரியங்கள்
என்பது கிடையாது அவையெல்லாம் நாம ரூபங்களேதான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த
பிரம்மமானது அபூர்வம்,
அனந்தம், அனபரம், அபாஹயம்
என்பதாக காட்சியளிக்கிறது
அபூர்வம்: காரண ரஹிதம் - காரணமற்றது
அனந்தம்: காரிய ரஹிதம் - இந்த பிரம்மத்திற்கு இணையான வேறொன்று
இல்லை
அனபரம்: இதிலிருந்து
எதுவும் வரவில்லை
அபாஹயம்: இதற்கு உள்ளே, வெளியே என்பதெல்லாம் கிடையாது.
அயம் ஆத்மா பிரம்மன் – இந்த ஆத்மாதான் இப்படி சொல்லப்பட்ட
பிரம்மம்
ஸர்வானுபூஹி – அனைத்தையும் சாட்சியாக பார்த்துக்
கொண்டு இருப்பது
இவையனைத்துமாகவும்
இருந்து கொண்டு அனைத்தையும் சாட்சியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி-6: வம்ஸ பிராமனம்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதில்
குரு-சிஷ்ய பரம்பரையினுடைய பெயர்கள் கூறப்பட்டுள்ளது. இந்தப்பெயர்களை பாராயணம் செய்யவும்,
ஜபம் செய்யவும்
வீத-ராக விஷயம் வா சித்தம் – நாம் பற்றற்று
ஞானமடைந்தவர்களை மனதில் தியானித்தால் அவர்களது குணங்கள் நம்மை வந்தடையும். அதனால் சித்தஸுத்தி அடையலாம்,
மனத்தூய்மையடையலாம்.
வித்யா ஸ்துதியாந்தம் – இந்த வித்யாவின் பெருமையை
எடுத்துச் சொல்வது
இவ்வளவு
பெரிய மகான்கள் உபதேசித்த கருத்துக்கள் என்ற பெருமை. இந்த ஞான உபதேசக் கருத்துக்கள்,
வேதாந்த கருத்துக்கள், இறைவனிடமிருந்து பரம்பரையாக
வந்தவைகள் என்ற அறிந்து கொள்ளலாம்.
----0000----
No comments:
Post a Comment